அத்தியாயம் – 13
இஷானுக்கு ஆபரேஷன் துவங்கியது.. அடுத்து அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் முற்றும் பேச முடியாதவளாய் தொய்ந்து அமர்ந்த நேரத்தில் அவசரமாய் வந்தார் ஸ்டீவ்..
வந்தவர் இனியனை பார்த்ததும் அப்படியே நின்றார்..அவர் வாய் மட்டும் ‘இனியன்’ என்று அசைந்தது.. அவரை கண்டதும் எழுந்து நின்றவள் கண்கள் கண்ணீரை துடைக்ககூட முடியாமல் நின்றாள்..
“அப்பா” என்று அழைத்தபடி அவர் அருகில் வந்தான் ஜோனஸ்..வந்தவனை தன்னோடு அணைத்துக்கொள்ள குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோனஸ்..அவனது தோளை தடவி கொடுத்தவர்..
“காம் மை சைல்ட்..ஹி வில் பி ஆல்ரைட்..” என்று கூறினார்
அத்தனை நேரம் தனி ஆளாய் ஆளுமையாய் சமாளித்தவனால் தாங்கமுடியாமல் அழுதான்..
“எ..என் கண்ணு முன்னாடியே அவன்..த..தலையில ஆபரேஷன்னு சொல்றாங்கப்பா..எ..என்னை நம்பி நீங்க அவனை இங்க அனுப்பினீங்க..அம்மா மாதிரி அவனும் நம்மளவிட்டு போய்டுவானாப்பா?” என்று அழ அனைவருக்கும் அடுத்த அதிர்ச்சி..
“இல்லடா..மீராவைதான் இழந்தேன் அவ சாகும்போது வாங்கின சத்தியத்தை காப்பாத்தவே உன் ப்ரண்ட் பிழைச்சு வருவான்டா” என்று அவர் கூறிக்கொண்டு இருக்க அவர் அருகில் வந்த இனியன்..
“மீராக்காக்கு என்ன ஆச்சு? அவ அவ உயிரோட இல்லையா? எப்படி? அப்போ அப்பா?” என்று அதிர்ச்சியோடே கேட்க
‘இல்லை’ என்பதை போல தலையசைத்தவர்..
“ரீசன்ட்டா நடந்த ஆக்சிடெண்ட்ல அவளுக்கு பேக் ஃஹெட்ல அடிபட்டு” மேலே போய்ட்டா என்பதை போல கையை காட்டியவர்..
“அவ சாகும்போது தான் நீங்க உயிரோட இருக்குறதே மீராக்கு தெரியும்..அதனால தான் அவ இஷான்கிட்ட ப்ராமிஸ் வாங்கிட்டு ஷி டைட்.. லண்டன்ல லையன் மாதிரி இருந்தவன் அவனோட அம்மாக்கு பண்ண ப்ராமிஸ்காகவும் அவளோட கடைசி ஆசைக்காகவும்தான் இண்டியா வந்தான்..ஹி டோட்டலி சேன்ஜ்ட்டு ஹிம்ஃசெல்ப்.. அவன் இவ்ளோ சாஃப்ட்டா இருந்தது உங்ககிட்ட மட்டும்தான்..” என்றவர் தொடர்ந்து..
“உங்க அப்பா பண்ண பாவத்துக்கு அவ ப்ராயசித்தம் தேடணும்னு எங்க சன்னையே உங்க குடும்பம்ல பொண்ணு எடுக்கனும்னு சொன்னா..
எல்லோரும் உறைந்து போய் நின்றனர்..
அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாமா..
முற்போக்குவாதியான சங்கராச்சாரியாருக்கு
ஆச்சாராமும் பாரம்பரியமும் கலந்து பிறந்தவர் மீரா.. பிறந்து மூன்று வருடத்திலேயே தாயை இழந்த மீராவிற்கு தந்தையிடம் எதையும் மனம் விட்டு கேட்கும் பழக்கமும் இல்லை.. மனம் திறந்து பேசும் பழக்கமும் இல்லை.. அதனால் அவரது தந்தையின் அவசரகுடுக்கை குணத்தால் செய்யும் தவறுகள் பல அவருக்கு தெரியாமலே இருந்தது அதில் ஒன்றுதான் மீராவிற்கு ஆறு வயது இருக்கும் போது ஒரு தீர்ப்புக்காக அயல்நாட்டுகாரர்களுடன் வெளியூர் சென்ற சங்கராச்சாரியாருக்கு வற்புறுத்தி குடிக்கவைத்தவர்கள் அவருக்கு என ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து இருந்தனர்.. அந்நேரம் அந்த பெண் வராமல் போகவே போதையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த தாசிகளின் குடிலில் ஒன்றில் உறங்கி கொண்டிருந்த வாய்பேசா மடந்தையான மீனாட்சி இவரது போதைக்கு பழியானார் ஆனால் அவரும் பிராமண குலப்பெண்தான் அவரது தாய் தந்தை அவரது கெட்டநேரம் தற்கொலை செய்து கொள்ள அதற்கு காரணம் இவரது ராசிதான் என உறவினர்கள் ஊர்மக்கள் என அவரை அடித்து விரட்டி விட ஊர் எல்லையில் இருந்த தாசிகள் அவரை காப்பாற்றி வளர்த்து வருகின்றனர்.. அழகே வடிவான மீனாட்சியும் தாசிகளின் மகளாகவே கருதப்பட்டார் ஆனாலும் யாரும் அவரை நெருங்குவதில்லை நெருங்க தாசிகள் விட்டதில்லை அப்படிப்பட்ட அவரைத்தான் நாசம் செய்தார் போதையில் தன் ஊர் பெயர் உளறியபடி அவரது கற்பை சூறையாடிய சங்கராச்சாரியார்..
மறுநாள் அதிகாலையில் விழிப்பு வர தான் இருந்த நிலையை கண்டவர் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தார்.. தான் எங்கு இருக்கிறோம் என சுற்றி முற்றி பார்த்தவர் தன் அருகில் கலைந்த கோலத்தில் அழுதுகொண்டு இருக்கும் பெண்ணை பார்த்தார்..தூக்கிவாரி போட்டது அவருக்கு.. தானா இப்படி பழக்கமில்லாத குடிபோதை தன்னை இப்படி ஒரு இழிநிலையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டதே என எண்ணியவர்..அந்த பெண் யாரென விசாரிக்க அவரோ சைகையில் பேசியபடி மயக்கம் அடைய..தன் நல்ல நேரம் அவரது தவறு வெளியே தெரியாதவாறு ஊமைபெண்ணாய் இருந்தாள்.. யார் கேட்டாலும் தன்னைபற்றி தான் ஏதும் கூறவில்லை அதனால் அவள் தன்னை தேடிவரும் எண்ணமில்லை என எண்ணி இருட்டிலேயே மீனாட்சியை மயக்கநிலையில் விட்டு ஓடிவந்துவிட்டார்..இந்த தவறு வெளியே யாருக்கும் தெரியாது என்பது போல நடந்துகொண்டார்.. அப்படி இப்படி என பத்து வருடம் ஓடிவிட்டது..பண்ணிரன்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மீராவை காண ஒரு அம்மாவும் பத்து வயது சிறுவன் ஒருவனும் வந்தார்கள்..
அந்த பையனை எங்கோ பார்த்ததுபோல இருக்கவும் யார் என்று கேட்ட மீராவிடம் வாய்பேச முடியாத அவர் தன்னை பற்றி கூற முனைய..அதை அவளிடம் விளக்கி கூறினான் கூட இருந்த சிறுவன்..
தன் தாயின் பெயர் மீனாட்சி தந்தையின் பெயர் சங்கராச்சாரியார்.. தனது பெயர் இனியன் என கூற அதிர்ந்து பார்த்தார் மீரா.. அவர்களை அமரவைத்து உண்ண கொடுத்துவிட்டு அவனை பார்த்த மீராவிற்கு அப்போதான் அவன் தன் தந்தையின் சாயலில் இருப்பதும் புரிந்தது தனது தந்தையின் அதே இடது காதில் மாறுதல் இருப்பதையும் பார்த்தவள் தனது தந்தையா இப்படி என்று வருத்தப்பட்டாள்..இருப்பினும் அது தனது தந்தையின் தனிப்பட்ட உரிமை என்பதால் அவள் எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள்.. அங்கு செய்த சிறு தவறு அவர்கள் வாழ்க்கையையே ஆட்டி படைக்கும் என்பதை அப்போதைய சிறியபெண் மீரா அறியவில்லையே..
இரண்டு நாட்கள் அவர்களை அங்கேயே தங்கவைத்து பாசமாக பார்த்துக்கொண்ட மீராவின் பால் இருவருக்கும் நேசம் துளிர்த்தது..மீராவிற்கும் தனக்கென இரு சொந்தங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்களோடு நேசமாய் உறவாடினாள்..
வீட்டுக்கு திரும்பிய சங்கராச்சாரியாருக்கு முதலில் அந்த பெண் யாரென தெரியவில்லை அவரது சைகை மொழியே அவரை காட்டிக்கொடுக்க உடனிருந்த சிறுவன் தன்னை அச்சில் வார்த்து இருக்க ஒரு வேசி தன் இனத்திற்கு நிகராக வருவதா என மீராவிற்கு தெரியாமல் இரவோடு இரவாக அவர்கள் இருவரையும் அடித்து ஊரைவிட்டு துரத்தினார்.. தந்தையின் உதவியாள் மூலம் விஷயம் கேள்விப்பட்ட மீரா துடித்து போனாள்.. அவர் மூலமாகவே அவர்களை தேடி பிடித்தவர் அவர்களுக்கு தக்க சமயம் வரும்போது தனது தந்தையையை உண்மையை ஒத்துக்கொள்ள வைக்கிறேன் என்று கூறி அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தாள்.. தன் தந்தையிடம் அவர்களை பற்றி எதுவும் கேளாமலே இருந்தார்..இயற்கையிலேயே அமைதியான மீரா இன்னும் அமைதியாகி போனார் ஆச்சாரம் கடைப்பிடிக்கும் மீரா எல்லாவற்றையும் விட்டு பழகியது இவர்களிடம் மட்டும்தான் அதை அறியாத சங்கராச்சாரியார் மீராவிற்கு தெரிந்தால் இவர்களை விட்டுவிட்டு ஆச்சாரம் என கூறி அவள் தள்கொலையே செய்து கொள்வாள் என எண்ணி அவர்களை துரத்திவிட்டார்..தான் படித்து முன்னேறினால்தான் அவர்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று படிப்பில் தீவிரமானாள்..தன்னுடன் கூடப்பயிலும் பெண்ணான மதுமிதாவை இனியனுக்கு மிகவும் பிடிக்கும்..தான் யார் என்று அறிந்தும் எந்தவித முகத்திருப்பலும் இல்லாமல் பழகும் மதுமிதாவுடனான நட்பு வளர வளர காதலாய் மாறியது மதுமிதாவின் தாயும் தந்தையும் மீனாட்சிக்கு ஆதரவாக இருக்க அதுவரை எங்கோ சென்று விட்டனர் என்று எண்ணிய சங்கராச்சாரியார் கண்ணில் பட்டது அந்த குடும்பம்..அப்போது தான் ஸ்டீவ்வும் பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சிக்கு வந்தவர் மீராவின் குணம் பிடித்து பெண்கேட்க அவர் யோசிக்க
“எனக்கு மீராக்கிட்ட பிடிச்சதே அவங்க உங்க கல்ச்சர் அண்ட் ஆச்சாரம்க்கு கொடுக்குற இம்ப்பார்ட்ண்ட் தான்.. அதுலதான் அவங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு..சோ அவங்க என் லைஃப் பாட்னராக வந்தால் நல்லா இருக்கும்.. யோசிச்சு ஒரு வாரம்ல பதில் சொல்லுங்க” என்று ஸ்டீவ் கூற முற்போக்கு வாதி என பெயர்பெற்ற சங்கராச்சாரியார் மனதளவில் இன்னும் ஆச்சாரம் அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்..
மகள் ஆச்சாரமாய் இருப்பது அறிந்தாலும் இருவரும் மனம்விட்டு பேசாததால் இருவரின் கருத்தும் என்ன என்பதை அறியாமலே சென்றது காலம் செய்த சதியா? மகளது நல்ல வாழ்வும் தனது கெளரவமும் இவர்களால் கெட்டு போக வாய்ப்பு உள்ளது என உணர்ந்தவர்..தனக்கு தெரிந்த ஊர் பெரியவர்கள் மூலம் காய் நகர்த்தினார்..
அதன்படி முதலில் மீனாட்சி மற்றும் இனியன் இருவரும் தாசி குடும்பத்தார் என முத்திரை குத்தப்பட்டு ஊரைவிட்டு அனுப்ப முயல அவர்களை தடுக்க வந்த மதுமிதாவின் குடும்பத்தை அடித்து உதைத்து அவர்களையும் தாசி குடும்பத்தார் என கதை கட்டி அதில் மதுமிதாவின் தந்தை அவமானம் தாங்காமல் அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தார்..உண்மை தெரிந்துவிட்டதால் மரணித்தார் என பொய்கூறி அவரது உடலைக்கூட தொட மாட்டோம் நீங்களும் இங்கு இருக்கக்கூடாது என அவமானப்படுத்த.. தன் கணவன் மீதே உயிரை விட்டார் மதுமிதாவின் தாய் தங்களால் அநாதரவாய் நின்ற மதுமிதாவை ஊர் பெரியவர்கள் அவதூறாய் பேச கோபம் கொண்ட இனியன் அங்கிருந்த ஊர் எல்லைச்சாமியின் கையில் இருந்த தாலியை எடுத்து மதுமிதாவின் கழுத்தில் கட்டி தனது மனையாளாய் மாற்றிக்கொண்டு அவரது பெற்றோர்களின் சடலத்தை அருகில் இருந்த சுடுகாட்டில் புதைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டு ஊரைவிட்டு கிளம்பினர்..
கிளம்பும்போது அவர்கள் முன் வந்து நின்றார் சங்கராச்சாரியார்..விதியின் அகோர தாண்டவத்தை நிறைவேற்ற..
அட படுபாவி…! அத்தனை ஆச்சாரம் பார்க்கிறவருக்கு, குடிச்சிட்டு இருட்டுல தொட்ட பொண்ணு கிட்ட மட்டும் ஆச்சாரம் பார்க்க தோணலையா… இல்லை மறந்துட்டாரா…?
Kudikaran pechu vidinja pochu na madhiri avaroda mindset 🏃🏃 mikka nandri sago❤️🥰
Nee thapu panitu avanga mela pali potutu pora athuvum intha nilamaiyavum pathutu summave iruka paru nee kam manushana
Ipo ellam ipdi than nadandhukuranga ennatha solla..Mikka nandri sago❤️🥰
அடபாவிகளா ஆச்சாரம் சொல்லி பெண் பாவத்துக்கு ஆளக்கிட்டிகளா
மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi