அத்தியாயம் 4
கயல்விழியின் தாய் மதுமிதா..தன் கணவன் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்து இருந்தார்.. ஆனால் தன் கணவனது இந்த நிலைக்கு அவரது தந்தையே காரணம் என எண்ணி அவரது மேல் தீராத கோபம் அதனாலேயே மாமனாரின் இசையை அறவே வெறுத்தார்.. அதனால் தங்களது அடையாளம் மாற்றி இங்கு அஷ்டலட்சுமி கோவிலில் சமைக்க கேட்க அவர் ப்ராமண பெண் இல்லை என்பதால் அவருக்கு மடப்பள்ளியில் அனுமதி மறுக்கப்பட அந்த கோவமும் அவரது மாமனாரின் மேல்தான் திரும்பியது.. அதனால் அவரது இல்லம் அருகிலேயே ஒரு சிறிய மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.. தங்களது குடும்ப செலவுக்கு என ஓரளவு வருமானம் வர பிள்ளைகளின் படிப்பு அது இது என செலவுகள் நீண்டுகொண்டே போவதால் கயல் கூறிய பார்ட் டைம் ஜாப் என்ன என்று கேட்டவரிடம் ஒரு கம்பெனியில் கம்ப்யூட்டர் வேலை என சொன்னவள் கூடவே கெளதமும் செல்வதால் நம்பி அவளை அனுப்ப ஒத்துக்கொண்டார்..
கயல்விழியின் தந்தை இனியன்.. இனிய குரலுக்கு சொந்தக்காரர் ஆனால் தனது தந்தையாலேயே அவமதிக்கப்பட்டு இசை வாழ்வை துறந்தவர்..
தந்தையை அப்பா என்று அழைக்கும் தகுதி இல்லாமல் பிறந்தவர் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டு இப்படி ஒடுங்கி போனவர்.. எதன்மீதும் பற்று இல்லாது போனதால் கிடைத்த வேலையை செய்துகொண்டு தன் மனைவிக்கு உதவியாக இருப்பவர்..
அவரது விரக்தியை பேசி பேசியே கரைப்பவள் அவர் மகள் கயல்விழி தான்..
கோவமும் குணமும் ஒன்றாய் இருந்தது கயல்விழிக்கு.. மான்விழி மையழகி.. தேன்குழல் தேகமழகினு சொல்ல ஆசைதான் ஆனா மேடம் அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க.. ஆனால் பார்க்கிறவங்களை அவளுக்காகவே திரும்ப பார்க்கவைக்கும் ரகம்.. வெள்ளையா இருந்தா வியாதிங்க.. அதனால நம்ம ஹீரோயின் சென்னை வெயிலில அலைஞ்சு வெள்ளைகலர மகாபலிபுரம் போய் உடம்பு பூரா எண்ணெய்ய தேய்ச்சுகிட்டு எருமைமாடு கணக்கா வெயில்ல உருளாம.. கொஞ்சம் உளுத்தம்பருப்பு கலரா மாத்தி வெச்சு இருக்கா..( எவ்ளோநாள்தான் கோதுமை மைதானு சொல்றது அதான்..உளுத்தம்பருப்புக்கு மாறிட்டேன்..நல்லா இருந்தா அப்படியே பிக்ஸ் ஆகிக்கவும்)
தன் உடலுக்கோ அழகுக்கோ முக்கியத்துவம் கொடுக்காத கேரக்டர்.. ஆனா குரலுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் கேர் எடுத்துப்பா.. ஏன்னா நம்மாளு பொழப்பே குரலாலதானே ஓடுது..
தினமும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணிவரை “இசையோடு உங்கள் இசை” என்னும் நிகழ்ச்சியில் தேவதையாய் வலம் வருபவள்.. ஆறே மாதங்களில் இவளது குரலுக்கு உலகமே அடிமை.. தங்களது எண்ணங்களை மனம் திறந்து அவளுடன் பகிர்வர்.. அதற்கு அவள் கூறும் சிறு வார்த்தை கூட அவர்களுக்கு மோட்டிவேட்டாக இருக்கும்..அதற்காகவே பலரின் ரகசியம் பகிரும் உறைவிடமாக மாறிப்போனாள் இசை என்கிற கயல்..
இதுவரை அவள் யாரென்று யாருக்குமே தெரியாததுதான் விந்தை.. கூட வேலை பார்க்கும் ஒருசிலரை தவிர அவள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டாள்..
“கூவுகின்ற குயிலை
கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா..
சோலைமயில் தன்னை
சிறைவைத்து பூட்டி ஆடென்று
சொன்னால் ஆடாதம்மா..
நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்..
காவல்கள் எனக்கில்லையே..
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே..
துக்கம் சில நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம் போலே பாடுவேன் கண்ணே..
என் சோகம் என்னோடுதான்..”
என்ற பாடலை பாடி முடிக்கவும் மதுமிதா கையில் இருந்த பாத்திரத்தை கீழே தூக்கி போடவும் சரியாக இருந்தது..
“ம்மா” “மது” என்று தந்தையும் மகளும் அவரை பரிதாபமாக பார்க்க..
“யாரும் எதுவும் பேசவேணாம்.. நான் ரொம்ப சுயநலமா யோசிக்கிறதா கூட நினைச்சுக்கோங்க..ஆனா நான் இருக்கும்போது தயவுசெஞ்சு ரெண்டு பேரும் பாடாதீங்க.. போதும் இன்னமும் எல்லா அவமானமும் அசிங்கமும் கண்ணு முன்னாடியே நிக்குது.. அந்த வலி என்னை விட்டு போக மாட்டேங்குது.. இசையால இந்த வாழ்க்கையை நீங்க பாழ் படுத்திக்கிட்டது போதும் அதும் சொந்த அப்பாவாலேயே நீங்க அசிங்கப்பட்டு நின்னது பார்த்தும் என்னால எப்படிங்க உங்கள மாதிரி யோசிக்க முடியலையேங்க.. விட்டுடுங்க இனியா எதுவும் நமக்கு வேணாம்..” என்று அவர் கலங்க.. தன்னைவிட தன்னவள் எவ்வளவு துன்பம் கொள்கிறாள் என்பதை உணர்ந்த இனியன் அவரை ஆதரவாய் தோளோடு சாய்த்து..
“இனி நீ வருந்துற மாதிரி நடந்துக்கமாட்டேன் மது.. மன்னிச்சிடு” என்றார் வருத்தமாக..
கணவனின் காயத்தை நாமே கீறி பெரிதாக்குகிறோமே என வருந்தியவர்..
“சாரி இனியா.. எ..என்னால அந்த நிகழ்ச்சியில இருந்து வெளியே வரமுடியலை.. உ..உங்களை போய் அவரு..” என்று கூற அவரது வாயில் விரலைவைத்து
“ஷ்ஷ்.. நான் நல்லாதான் இருக்கேன் மது.. விடு நாங்க பன்னது தப்புதான்.. அழக்கூடாது சின்னபிள்ள மாதிரி.. சரியா..பசங்க முன்னாடி என்ன மது இது?” என்று கேட்க.. அப்போது தான் நியாபகம் வந்தவராக மதுமிதா நிமிர்ந்து பார்க்க..
கோவமாய் நின்றிருந்தாள் கயல்விழி பக்கத்தில் அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் திருதிருவென முழித்துக்கொண்டு இருந்தான் ஆத்ரேயன்..
“கயல்மா” என்று மதுமிதா அழைக்க.. அவரை கோவமாய் பார்த்தவள்..
“நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் இந்த குடும்பம்னா நாங்க ரெண்டு பேர் எதுக்கு? எல்லா ரகசியமும் உங்களுக்குள்ளேயே வெச்சுட்டு இருக்க நாங்க எதுக்குனே தெரியலமா எங்களுக்கு? உங்களுக்கு பாட்டு புடிக்கலை மியூசிக் பிடிக்கலைனா நாங்களும் அதை செய்யக்கூடாது அப்படித்தானே.. நாங்க ஜெயில் கைதியா இந்த வீட்ல?” என்று கத்தினாள் கயல்..
“அப்படி இல்ல கயல்மா” என்று அவர் ஏதோ கூற வர.. அவரை தடுத்தவள்..
“போதும்மா.. நான் ஒன்னும் இன்னும்கூட குழந்தை இல்ல.. நீங்க சொல்ற பொய்யை நம்புறதுக்கு.. எங்ககிட்ட இதையே மறைக்கறீங்கனா இன்னும் என்னவெல்லாம் மறைச்சு வெச்சு இருக்கீங்களோ? ஏதாவது ஒரு சுதந்திரம் இருக்கா இந்த வீட்ல? எதுக்கெடுத்தாலும் ஏதாவது ஒரு திட்டு விருப்பப்படி ஒரு பாட்டு கேட்கவும் கூடாது பாடவும் கூடாது.. அப்படி என்னதான் சிதம்பர ரகசியம் இருக்கோ தெரியல?” என்று அவள் பேச பளாரென ஒரு அறை விழுந்தது அவள் கன்னத்தில்..
“அ…அப்பா” என்று கன்னத்தை தாங்கியபடி அவளது தந்தையை பார்க்க..
“யார்கிட்ட எப்படி பேசுறதுனு வேணாம் அவ உன் அம்மா.. அவளுக்கான மரியாதையை நீ கொடுத்துதான் ஆகனும்..பெத்துட்டா எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் பெத்தவங்களுக்கு இல்ல.. அம்மா நம்ம நல்லதுக்குத்தான் சொல்லுவான்னு எண்ணம் இருந்திருந்தா இப்படியா பேசுவ நீ?” என்று கத்தினார் கோவமாக..
“இனி..இனி நான் பேசிக்கிறேன் இனியா.. நீங்க கோவப்படாதீங்க அது உங்களுக்கு ஹெல்த்க்கு நல்லது இல்ல..அவதான் சின்ன பொண்ணு தெரியாம பேசுறானா நீங்களும் கோவப்படாதீங்க.. பொறுமையா சொன்னா புரிஞ்சுப்பா” என்று அவரை மதுமிதா சமாதானம் செய்ய
“ஜாக்கிரதை” என்றுவிட்டு சென்றுவிட்டார் அங்கிருந்து.. தன் தந்தை தன்னை அடித்ததையே நம்பாமல் இருந்தவள் அவர் பேசிய பேச்சில் இன்னும் அதிர்ந்து போனாள்.. மனம் ரணமாக அவள்அருகில் வந்தார் மதுமிதா..
“அம்மு” என்று அழைக்க அவரை சட்டைசெய்யாமல் ஓடிச்சென்று ரூமிற்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டாள்..
அதன்பின் யார் கதவை தட்டியும் திறக்கவில்லை.. அழவும் இல்லை இதுதான் கயல் தன் கோவத்தை வெளியே காட்டுபவள் சோகத்தை காட்டமாட்டாள்.. கதறி அழவும் மாட்டாள்..காலையில் எழுந்தவள் யாரிடமும் பேசாமல் உணவும் உண்ணாமல் காலேஜ் கிளம்பி சென்றுவிட்டாள்..
கெளதமும் எவ்வளவு முயன்றும் அவளிடம் ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை.. துருதுருவென்று பரப்பரப்பாக இருப்பவள் அதெல்லாம் ஒரே நாளில் மறப்பாள் என்று கனவா கண்டாள்..
மாலை கல்லூரி முடியும் முன் அவளுக்கு பிரின்சிபாலிடம் இருந்து அழைப்பு வந்தது.. கூடவே கெளதமிற்கும்.. என்னவென்று போனவளுக்கு இடியே தலையில் இறங்கியது தன் தந்தைக்கு நெஞ்சுவலி என்னும் செய்தி..
அடித்துபிடித்துஓடினாள் ஹாஸ்பிடலுக்கு.. அங்கே அவரது தாய் ஒரு புறம் அழுதுகொண்டு இருக்க தம்பியும் அவரை அணைத்தபடி அழுதுகொண்டு இருக்க அவளுக்கு இதயமே வலித்தது..
அவள் வந்ததும் அவளை காணவேண்டும் என்று இனியன் கூறியதால் அவள் உள்ளே செல்ல தன் தந்தையை கண்டவள் துடித்துபோனாள்..
அப்போது தான் கண் விழித்து இருந்தவர்..
அவர் அவளிடம் எல்லாம் கூறிவிடுவார் என்று எண்ணி தடுக்க ஆத்ரேயனை கெளதமிடம் விட்டுவிட்டு பின்னாலேயே சென்ற மதுமிதாவை பார்த்தவர்..
“அவகிட்ட சொல்ல வேண்டிய கட்டாயத்தில இருக்கோம்டா.. சொல்லிடலாம்..அவளும் பெரியவள் ஆகிட்டாளே” என்றுவிட்டு தங்களைபற்றிய அனைத்து விவரத்தையும் அவளுக்கு கூறினார்..
கேட்டவள் கண்களில் நிற்காமல் தண்ணீர் ஊற்றியது.. தன் தந்தை பட்ட அவமானங்களும் தாய் அனுபவித்த கஷ்டங்களும் புரிய இருவரையும் அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள் அவள்.. அவளுக்கு ஆறுதல் சொன்ன மதுமிதா..
“இதெல்லாம் தெரிஞ்சா நீ தாங்கமாட்டனுதான் சொல்லாம இருந்தோமே தவிர மறைக்கனும்னு எண்ணம் இல்லமா” என்று கூற..
“அம்மா..சா..சாரிமா.. ரொம்ப ரொ..ரொம்ப சாரிமா..நா..நான் நீங்க ஏதோ ம..மனசுல வெ..வெச்சுட்டு கஷ்டப்..படுறீங்கனு தா..தான் கோவத்தில..ஏதோ தெ..தெரியாம உளறிட்டேன்மா..மன்னிச்சிடுங்கப்பா..மன்னிச்சிடுங்கம்மா..நி..நிச்சயமா நீ..நீங்க கஷ்டப்படுற மாதிரி ந..நடந்துக்கமாட்டேன்மா சத்தியாமா மா” என்று அழுதாள் தேம்பி தேம்பி..
தன் சத்தியத்தை மீறி அவர்களை இன்னும் கஷ்டப்படுத்துவாளா?
இரவு குயிலின்
கானத்தில்
இழையோடும்
சோககீதமாய்..
என் நெஞ்சத்து
எரிமலையில்
பனிச்சாரலாய்..
நீ வரும்வழி
பார்த்து..
பூத்துபோன
இதயத்திற்கு
முத்தம் என்னும்
நாதம் கொண்டு
உயிரூட்டவா..
என் மன்னவா..!😊
இந்த சம்பவம் நடந்து முடிந்து அவள் தந்தைக்கு முதலாவது அட்டாக் என்பதால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டார் என்று அவரை டிஸ்சார்ஜ் செய்ய அன்றுமுதல் தனது தேடுதல் வேட்டையை தன் தோழனின் உதவியோடு செய்தாள்.. விஷயம் தெரியாவிட்டாலும் அவளது செயலில் ஏதோ நியாயம் இருக்கும் என எண்ணிய கெளதம் அவளுக்கு எல்லா உதவியும் செய்தான்..
அதன்படி தனது தாத்தா பற்றிய விவரங்களை ஈஸியாக எடுக்க முடிந்தது அவளால்.. சேகரித்த விஷயங்கள் அவ்வளவு உவப்பாய் இல்லாமல் இருந்தது.. இருந்தாலும் தன் தாய் தகப்பனின் வலியை அவர்களும் அறிந்து அனுபவிக்க வேண்டும் இல்லையேல் தங்களுக்கு நியாயம் வேண்டும் என எண்ணியவள் அதன்படி செய்லபட ஆரம்பித்தாள்..
தனக்குள்ளேயே ஒரு வட்டம் அமைத்து கோவமானவளாய் தன்னை மாற்றிக்கொண்டாள்.. தனது சுற்றுப்புறம் தவிர்த்து யாருடனும் முகம் மலர்ந்து பேசாமல் இருந்தாள்..தன் தந்தையை கலகலப்பாகவும் தாயின் பேச்சை தட்டாமல் நடப்பவளாகவும் இருந்தவளுக்கு அப்போது தான் ஆர்.ஜே வாக மாற வாய்ப்பு கிடைத்தது.. தந்தையின் உடல்நலம் தாயின் நிலையை எண்ணி வாடியவள் நம்மாள முடிஞ்சது ஒரு பத்து ரூபாயா இருந்தாலும் அம்மாக்கு உதவுமே என்று எண்ணியவள் ஆர் ஜே என்பதை மறைத்து கம்ப்யூட்டர் வேலை என பொய் சொல்லி வேலையில் சேர்ந்தாள்.. பின்ன அவளும் பார்த்துட்டுதானே இருக்கா அவங்க அம்மா படும் கஷ்டத்தையெல்லாம்.. அப்பாவின் மருந்து செலவு தன்னோட படிப்பு தம்பியோட படிப்பு டியூஷன் செலவுனு எவ்வளவு செலவாகுது.. ஏழையா பிறந்தா இதெல்லாம் தாண்டித்தான் வரணும் என்ற வெறியே அவளை ஆர் ஜேவாக மாற்றியது.. ஆறு மாதங்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அவளது வேலை சென்று கொண்டு இருக்கிறது..
தன் படிப்பிலும் கவனம் செலுத்தி ஃபைனல் இயரில் அடியெடுத்து வைத்தாள்..
லண்டனில்.. இரவு பதினோறு மணி..
நித்திரையில்லாமல் மொட்டைமாடியில் நடந்துகொண்டு இருந்தான் இஷான்..
“Such a wonderful voice how it is possible..” என்று எண்ணியபடி தூக்கத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறான் நான்கு மாதமாக..
தன் தாயின் குரலே அமிர்தம் என்று எண்ணியவனுக்கு சோதனையாய் வந்தது.. தன் தந்தை நடத்தும் ஸ்பைசி எஃப் எம்மின் தமிழ்நாட்டின் சென்னை கிளையில் இருந்து வந்த இசை என்னும் பெண்ணின் குரல்..
அன்று தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று டாக்டர் அவரை ரெஸ்ட் எடுக்கும்படி கூற அவரது அனைத்து வேலைகளும் அவன் பொறுப்பானது சென்னையில் உள்ள எஃப் எம் நிறுவனத்தின் பொறுப்பும் சேர்த்து.. அன்றைக்கு முந்தைய தினம் ப்ரோகிராமில் எக்கசக்க சொதப்பல் செய்தாள் இசை.. அதற்கு தகுந்த விளக்கம் தரும் வகையில் அவளது ஹெட் க்கு ரிப்போர்ட் பன்ன வேண்டிய சூழ்நிலையில் மாட்டினாள் இசை.. நடந்த தவறு முற்றிலும் தனதே.. குடும்பத்தை பற்றிய சிந்தனையில் லைவ்வில் இருப்பவள் பல டேக் வாங்கும் மொழி தெரியாத நடிகைபோல சொதப்ப.. அன்று அவர்களது எஃப் எம்மின் வருமானம் எக்கசக்க லாஸ் ஆனது.. அவளது ப்ரோக்ராம்காக ஸ்பான்சர் செய்யும் ஸ்பான்சர்கள் சண்டையிட்டதால் ஏற்பட்ட குளறுபடியில் அவளது முந்தைய ப்ரோகிராமின் பதிவுகளை பார்வையிட ஸ்டீவ்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இது ஸ்டீவின் நேரடி பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட கம்பெனி.. எனவே அதிகாரம் முழுவதும் ஸ்டீவ்க்குத்தான்..தகுதி இல்லாதவர்களால் வரும் இழப்பு அதளபாதாளம் என்று அறிந்த ஸ்டீவ் அவளது தகுதியை வைத்தே இனி அவளை தக்கவைப்பதா இல்லை ஏற்பட்ட நஷ்டத்திற்கு அவளை என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும் அதுவும் உடனே.. ஏனெனில் அவளது ப்ரோகிராம் வர இன்னும் மூன்று மணி நேரமே இருக்கிறது..
அதனால் தான் அவசர ஃபைலாக அவனது டேபிளுக்கு வந்தது இசை பற்றிய குறிப்பும் அவளது ப்ரோகிராம் கிளப்புகளும்(clips) அவளது ஃபைலை பார்த்து முடித்தவன் அவள் புனைப்பெயரையே அவளது சொந்த பெயர் என்று எண்ணினான்..
“படிக்கிற பொண்ணு அதான் அவ்வளவு பொறுப்பு இல்லாத தன்மை.. இப்படி இர்ரெஸ்பான்ஸிபில் பர்சனை எப்படி தான் வேலைக்கு எடுத்தாங்களோ? இதுல அவ ப்ரோகிராம் கிளிப் கேட்டு என்னத்த ஆகப்போகுது.. இப்படி பட்ட ஆளுக்கு போய் இவ்ளோ பெரிய ப்ரோகிராம் கொடுத்து இருக்காங்க பாரு.. அவங்கள சொல்லனும்.. ridiculous.. Irritating employees” என்று அவளை வாட்டியவன் “நேர்ல சிக்கி இருக்கனும் சுடுதண்ணிய ஊத்தி இருப்பேன்.. இதுல மட்டும் என்னத்த பேசி இருக்கப்போறா..அதே ஒதவாத யூஸ்லெஸ் டாக்ஸ்தான் சொதப்பல்தான் இத நான் கேட்டே ஆகனுமா?” என்று எண்ணியபடி இங்கி பிங்கி பாங்கி போட்டு ஒரு கிளிப்பை செலெக்ட் செய்து ஓடவிட்டான்..
ஓடவிட்டவன்.. எங்கேயோ ஓடிட்டான்.. கனவுலோகத்துக்கு தாங்க..
அதில் நேயர் விருப்பமாக ஒருவர் அவளிடம் ஒரு பாடலை பாட சொல்லி கேட்க..நாசூக்காக அதை தவிர்த்தவள் அந்த நேயரையே பாடவைத்து அவருக்கு பிடித்த பாடலை ஒலிக்க வைத்தவள் ரெக்கார்ட் ஆஃப் செய்யாமல் லைவ் மட்டும் கட் செய்துவிட்டு அந்த பாடலை பாடினாள்..
“என்னைத்தான் அன்பே
மறந்தாயோ..
மறப்பேன் என்றே நினைத்தாயோ..
என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
நான் உனை நீங்கமாட்டேன்..
நீங்கினால் தூங்கமாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே..” என்று பாட அவளது லைவ் ஸ்டார்ட் ஆகிவிட அவள் ரெக்கார்ட் ஆஃப்ஷன் ஆன்ல இருப்பதை கவனிக்காமல் லைவ்வில் பேச ஆரம்பித்து விட்டாள்..
இதை கேட்டவனோ.. உடனடியாக அவளது விவரங்களை ஆராய்ந்தான்..
அவள் இசை.. என்றே அங்கு அழைக்கப்படுவதால் நிறையபேருக்கு அவளது உண்மையான பெயர் தெரியாது ஆனால் அவளது விண்ணப்ப படிவத்தில் அவளது விவரம் பார்த்தவன்.. அவளது குரலில் தன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு இதுவரை எந்த பெண்ணிலும் தோன்றாத ஓர் உணர்வு.. ஆனால் அவளது குரல் அவனை என்னவோ செய்தது.. தன் அன்னையை நியாபகம் படுத்த அந்த உணர்வில் உடனே ஸ்பான்ஸரின் நஷ்டத்தை ஈடு செய்ய சொன்னவன் அவளுக்கு ஒரு வார்னிங் மட்டும் கொடுத்துவிட்டு ப்ரோகிராம் தொடரும்படி ஆணையிட்டவன் அவளது ப்ரோகிராம் ரெக்கார்ட் தினமும் தனக்கு வரவேண்டும் என்ற கட்டளையோடு அவளது ப்ரோகிராம்க்கு அனுமதி அளித்தான்..
அதன்பின் நான்கு மாதங்களாக அவளது ப்ரோகிராம் அவளது குரல் என்று அவனது காலம் சென்று கொண்டு இருக்கிறது..
இந்த விவரங்கள் தனக்கு வந்ததும் ஸ்டீவ்க்கு சிரிப்புதான் வந்தது.. ‘தன் மகன் தன்னை போலவே தமிழ்நாட்டில் தடுக்கி விழப்போகிறான்’ என்று எண்ணியவர்.. அதை தன் மனைவியிடம் பகிர நினைத்தவர்
‘வேண்டாம் அவ அவனை அப்புறம் அந்த ஃபீலிங்க அனுபவிக்க விடமாட்டா’ என்று எண்ணி அதை தவிர்த்து விட்டார்.. ஒரு வேளை அதை சொல்லி இருந்தால் தன் மகனின் எதிர்காலம் பற்றிய பயமும் தன் தந்தையின் துரோகமும் தெரியாமலே இருந்து இருப்பார் மீரா..
கல்லாய் இருந்தேன்..
கவிஞனாய் எனை
பிறப்பெடுக்க வைத்தாய்..
கானம் இசைக்கும்..
கார்குழலி..உன் விழியசைவில்
எனை கட்டி இழுத்தாயே..
மீள்வது எப்போதடி..
-டைரியில்..
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
👍👍👍
மிக்க நன்றி சகோ🥰😍
Superb kural ku mayakura sakthi iruku than la songs nala mattum illa namaku pidicha avanga pesura kural laum avlo sugam irukum
கண்டிப்பாக இருக்கு..ஒருவர் பார்க்க எப்படி இருப்பாங்கனு கூட தெரியாம அவங்க குரலுக்கு நிறைய பேர் அடிமையாகி இருப்பாங்க..
மிக்க நன்றி சகோ🥰😍
அப்படி என்ன பண்ணாரு அவரு
யாருனு தெரியலையே..மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi👍