Skip to content
Home » காவலனே என் கணவனே 2

காவலனே என் கணவனே 2

அத்தியாயம்-2

மறுநாள் காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்.. அலுவலகத்திற்கு முன்பு சிலர் கூட்டம் போட்டு கைகளில் பதாகை ஏந்தியபடி நீதி வேண்டும் நீதி வேண்டும்..  வானதிக்கு நீதி வேண்டும்.. அப்பாவி பெண்ணுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி வேண்டும் என கோஷம் போட்டு கொண்டு இருந்தனர்..

பதாகைகளிலோ காவல் துறை ஒழிக.. அமைச்சருக்கு அடிமையாக இருக்கும் காவல் துறை ஒழிக, எளியோரை ஏய்க்கும் காவல் துறை ஒழிக என ஏக வசனத்திற்கு எழுதி ஏந்தி இருந்தார்கள்… 

எக்ஸ் க்யூஸ் மீ சார் என்று அனுமதி கேட்டுவிட்டு கமிஷ்னர் அறைக்குள் சென்றான் ஜீவா.. 

அங்கு கோவை மாநகர காவல் ஆணையர்(கமிஷ்னர்) கங்காதரன் அமர்ந்து இருக்க, சல்யூட் அடித்து விட்டு நின்றான்  ஜீவானந்தம்..

வாங்க ஜீவா நா உன்னை எதுக்கு வர சொன்னேன்னா, மினிஸ்டர் மருமகள் வானதி கேஸ் என்று அவர் ஆரம்பிக்க,

அந்த கேஸ் தான் ஆல்ரெடி முடிஞ்சுதே சார்,

ம்.. எஸ் வானதி தற்கொலை தான் பண்ணிட்டாங்கன்னு நீங்க விசாரிச்சு ரிப்போர்ட் சப்மிட் பண்ணி இருந்தீங்க.. அதை வானதி சம்பந்தபட்டவங்க யாரும்  ஒத்துக்கலை..

உனக்கே தெரியும் ஜீவா எதிர்கட்சி ஆளுங்க இதை சட்டசபை வரை கொண்டு போய் இருக்காங்க.. சிட்டிக்குள்ள நிறைய இடத்தில் இந்த விஷயம் சம்பந்தமா கூட்டம் போட்டு போராட்டம் பண்றாங்க.. நம்ம ஆபிஸ் முன்னாடி வரும் போது நீயே பார்த்து இருப்பியே,

நீங்க செய்த விசாரணையில் நம்பிக்கை இல்லை.. மறுவிசாரணை செய்யனும்னு வானதி அம்மா முதலைமைச்சர்க்கு மனு அனுப்பி இருக்காங்க.. அதனால் மினிஸ்டர் மருமகள் வானதி கேஸ் மறுவிசாரணை செய்ய சொல்லி முதலைமைச்சர் ஆபிஸில் இருந்து  உத்தரவு வந்து இருக்க.. இந்த கேஸ் வேற ஏ.சி.பி கைக்கு போகுது ஜீவா…  அதனால் வானதி கேஸ் சம்பந்தமான எல்லா பைல்ஸையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏ.சி.பி ஆதித்யன் இங்க வந்து ஜார்ஜ் எடுத்துப்பார்.. அவர் டீம்க்கிட்ட கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிருங்க என்றார்.. ஏன்னா இந்த கேஸை மறுவிசாரணை பண்ண போறது அவர் தான் என்றார்..

ஜீவாவுக்கு அவமானமாக இருந்தது.. இதுவரை சிக்கலனா முடிக்க முடியாததை நிறை கேஸ்களை ஜீவா வால் மட்டுமே முடிக்க முடியும் என அவன் கையில் கொடுத்து இருக்கிறார்கள்.. அந்த நம்பிக்கையை அவன் திறமையால் பெற்று இருக்கின்றான்.. அந்த நம்பிக்கையை பொய்க்காமல் அதை திறம்பட முடித்தும் இருக்கின்றான்… முதன்முறை அவன் விசாரித்த கேஸ் அவன் மேல் அவன் விசாரணை மீது நம்பிக்கை இல்லாது மறுவிசாரணைக்கு செல்கிறது.. இது அவன் திறமைக்கும் நேர்மைக்கும் எவ்வளவு பெரிய அவமானம்.. அதுவும் விசாரிக்க போகிறவன் பெயரை கேட்கும் போது பயங்கர கோவம் எழுந்தது..

கமிஷனர் முன்பு காட்ட முடியுமா.. அடக்கி கொண்டு ஓகே சார் என்றவன் சல்யூட் அடித்து விட்டு அறையிலிருந்து வெளி வந்தான்..

ச்சே கால்லை தரையில் உதைத்தான் கோவத்தில், டென்ஷன் ஆகாத ஜீவா விடு பார்த்துக்கலாம் என்ற குரல் கேட்டது..

பின்னால் திரும்பி ஜீவா பார்க்க அவனுடைய நண்பன் கௌதம் நின்று இருந்தான்…

உனக்கு எப்புடி டா தெரியும்

டேய் இப்ப தான் நியூஸ்ல பார்த்தேன்டா.. இது கண்டிப்பா உன்னை டென்ஷன் ஆக்கும் தெரியும்.. அதான் உடனே உன்னை பார்க்க வந்தேன்..

ம்பச் வேற யார்க்கிட்டையாவது கொடுத்து இருந்தா கூட பரவாயில்லை..  போயும் போயும் அவன்கிட்ட கொடுத்தது தான் ஆ.. என்று எழுந்த கோவத்தை இருக்கும் இடத்தை கருதி விரல்களை மடக்கி கட்டுப்படுத்தினான் ஜீவா..

ஃப்ரியா விடு மச்சி அவன் ஓவரா சீன் போடுறான்.. அதையும் இந்த நியூஸ் சேனல்களும் ஒன்றுக்கும் உதவாது நாலு யூட்யூப்பும் பெரிசு பண்ணி ஆஹா ஓஹோன்னு காட்டுறானுங்க.. அதில் மக்கள் மயங்கிறது போல கவர்மென்ட் மயங்கி அவன் கையில் கேஸை கொடுத்து இருக்காங்க.. உன்னை விடவா அவன் திறமைசாலி, பார்க்கலாம் அவன் வந்து அப்புடி என்ன கிழிக்கிறான்னு என்றான் கௌதம் ஆதியின் மீது இருந்த வெறுப்பில்,

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது.. தன்னிச்சையாக இருவரும் திரும்பி பார்த்தனர்.. ஆதித்யன் தான் வந்து கொண்டு இருந்தான்.. காக்கி உடையில் ஆதி கம்பீரமாக தான் தெரிந்தான் கௌதம் கண்ணுக்கு, அவனின் நடையும் அப்புடி தான் இருந்தது..

ச்சே என்ன இது மானசீகமாக தன் தலையில் தட்டி கொண்டான் கௌதம்.. ஜீவா கௌதம் இருவரின் பார்வையும் ஆதித்யன் மீது தான்.. 

அவனோ இவர்களை கண்டுகொள்ளவில்லை.. அவனுக்கு சல்யூட் அடித்த காவலர்களுக்கு பதிலுக்கு சின்ன தலை அசைப்பை அளித்தபடி வந்து கொண்டு இருந்தான்.. இருவரையும் கடக்கும் வேளையில் முகத்தில் பொறுக்கி களை தாண்டவம் ஆடுது.. இவன் எல்லாம் போலீசாம் கண்றாவி கௌதம் தான் இவ்வாறு கூறியது..

ஆதித்யன் நடை நின்றது.. திரும்பி கௌதமை பார்த்து விட்டு ஜீவாவை பார்த்தவன், கரெக்ட் நீ சொன்னது போல பொறுக்கி களையே தான் பார்க்க கண்றாவியும் கூட என ஜீவாவை பார்த்து சொல்லி கௌதமை டென்ஷனாக்கி விட்டு கமிஷனர் அறைக்குள் சென்று விட்டான்..

இவனை என்று பொங்கிய கௌதமை ஜீவா தான் டேய் பொறுமை அவன் இப்ப ஏ.சி.பி என்று அடக்கியவன்,வா என்று அவனை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்..

கமிஷனர் கங்காதரன் முன்பு நின்று இருந்தான் ஆதி..‌ அவருக்கும் அவன் மீது கோவம் இருந்தது.. ஜீவா, கௌதம் போன்று வன்மம் இல்லை.. கோவம் மட்டுமே அந்த கோவம் நியாயமானதும் கூட, ஆதிக்கும் அது புரிந்தது.. அதனால் தான் அவரை நேராக பார்க்க அவனால் முடியவில்லை.. குற்ற உணர்வு என்று சொல்லி விட முடியாது.. ஒருவித சங்கடம் என்று வைத்து கொள்ளலாம்..

கங்காதரன் ஆதியை ஆழ்ந்து பார்த்தார்.. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இருக்க உங்க பையனை நம்பி எப்புடி அன்று ஆதி தந்தையிடம் சொன்னது நினைவு வந்தது அவருக்கு, யாரை பார்த்து பொறுப்பு இல்லாதவன்னு சொன்னீங்க.. இந்த பொறுப்பு போதுமா கேட்பது போன்று இருந்தது அவனின் தோற்றம் இப்போது அவருக்கு… பொறுப்பானவன் நல்லவன் திறமையானவன் ஏகப்பட்ட பட்டம் அவனுக்கு, இருக்கட்டுமே அது எல்லாம் இப்போது தானே, ஆனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் செய்தது என பழைய நினைவுகளில் சுழன்றவர், தலையை உலுக்கி அதை விரட்டி விட்டு, அமர்ந்திருக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு நடக்க வேண்டுமென,

வெல்கம் மிஸ்டர் ஆதித்யன்.. உங்களை நம்பி கொடுத்துருக்க கேஸ்.. நல்லபடியா சீக்கிரம் முடிப்பீங்கன்னு நானும் நம்புறேன்.. கேஸ் சம்பந்தபட்ட டீடைல் எல்லாம் ஏ.சி.பி ஜீவா உங்ககிட்ட ஒப்படைப்பாங்க.. இந்த கேஸ் சம்பந்தமா உங்களுக்கு எந்த உதவி வேணாலும் என்ன கேளுங்க.. உங்களுக்கு செய்து தரோம்.. சீக்கிரமா கேஸை முடிங்க ஆல் த பெஸ்ட் என்றார்..

ஸ்யூர் சார், தாங்க யூ சார் என்று சல்யூட் அடித்து விட்டு வெளி வந்து  தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்தவன்  உஃப் என பெருமூச்சு ஒன்றை விட்டான்.. 

எக்ஸ் க்யூஸ் மீ சார் என்ற குரல் வாசலில் கேட்டது.. ஆதிக்கு அதிகம்  பழக்கப்பட்ட குரல் தான்.. மகாலிங்கம் சார் (சென்னை கமிஷனர்) வேணும்னே என்னை பழிவாங்கவே இவனை இங்க அனுப்பி வச்சு இருக்கார் கோவம் வந்தது அவர் மீது, உள்ள வந்து தொலை என்றான் கடுப்புடன்

உள்ளே வந்தான் இன்ஸ்பெக்டர் விக்னேஷ்… போலீஸ் வேலைக்கு உன்ன தப்பா எடுத்துருக்காங்க என்று ஒரு வசனம் வருமே அது விக்னேஷ்க்கு செமையாக பொருந்தும்.. வேலையில் சொதப்பல் கேஸ் என நினைக்க வேண்டாம்.. வேலை என்று வந்து விட்டால் திறமைக்காரன் தான்.. எள் என்றால் எண்ணையாக நிற்பான்.. ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்… பேசுவான் பேசுவான் பேசி கொண்டே இருப்பான்.. அதனால்லே ஆதரிக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.. இருந்தும் ஒரு கண்ணுக்கு தெரியாத சிறு நட்பும் இன்ஸ்பெக்டர் ஏ.சி.பி என்பதை தாண்டிய இருக்கும்.. அதை பெரிதாக காட்டி கொள்ள மாட்டான் ஆதி…

உள்ளே வந்தவன் சல்யூட் அடித்து விட்டு நிற்க.. தலையைத்து அதை ஏற்ற ஆதி அவன் கையில் ஃபைல்ஸ் இருந்த ஃபைல்ஸை பார்த்து, இந்த கேஸ் சம்பந்தப்பட்டதா என கேட்க

எஸ் சார் என்றான்.. உடனே ஆதி அதை வாங்கி கேஸ் டீடைல்களை படிக்க ஆரம்பித்தான்..

விக்னேஷ்க்கு ஏமாற்றம் ஆதி முகத்தை உற்று உற்று பார்த்தான்.. 

யோவ் என்ன எரிச்சல் பட்டான் ஆதி..

இல்ல சார் என்னை இங்க தீடிர்னு  பார்தததும் நீங்க ஷாக் சர்ப்ரைஸ் இப்புடி ஏதும் ஆகுவீங்கன்னு நினைச்சேன்.. அதான் முகத்தில் ஏதும் தெரியுதான்னு பார்த்தேன் சார் என்றான்..

ஆமா நீ என் முன்னாள் காதலி  பார்த்து பத்து வருஷமாச்சு பாரு, பார்த்த உடனே ஷாக்காகி கட்டி பிடிக்க, 

என் கூட டீமிலிருந்த எல்லாருக்கும் ட்ரான்ஸ்பர்ன்னு எனக்கு தெரியும்.. உள்ள வரும் போதே சார்ங்கிற உன் குரல் வச்சே நீ தான்னு தெரிஞ்சிருச்சு, நேற்று காலையில் உன்னை சென்னையில் பார்த்தேன்.. இன்னைக்கு கோயம்புத்தூரில் பார்க்கிறேன்.. இதில் ஷாக் ஆக என்னய்யா இருக்கு, என்றதும்

விக்னேஷ் அசடு வழிய சிரிக்க விளையாடமா வேலையை பார்ப்போம்மா ஆதி கேட்கவும் எஸ் சார் என்றான் விக்னேஷ் விறைப்பாக,

இந்த கேஸ் பத்தி உனக்கு தெரிஞ்ச தை நீ தெரிஞ்சிக்கிட்டதை சொல்லு என ஆதி கேட்கவும்,

சார் மினிஸ்டர்( இது கதைக்கா கற்பனை மட்டும் தான் எதுவும் நிஜம் இல்ல)  கந்தசாமிக்கு ஒரே பையன் பேர் கார்த்திக்.. சொந்தமா ஃப்ரெண்ட் கூட சேர்ந்து பிசினஸ் பண்றார்.. அவரோட ஆபிஸ்க்கு அக்கவுன்ட் வேலைக்கு வந்தவங்க தான் வானதி.. இரண்டும் பேருக்கும் காதல் சார்.. ஒன்னரை வருஷத்திற்கு முன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. மினிஸ்டருக்கும் அவர் மனைவிக்கும் சாதாரணமான குடும்பத்து பொண்ணை கல்யாணம் பண்றதில் கொஞ்சம் வருத்தமாம் சார்..

இருந்தாலும் வேறு வழியில்லாம முன்ன நின்று கல்யாணத்தை நடத்தி வச்சதா பேசிக்கிறாங்க.. கார்த்தி வானதி இரண்டே பேரும் எந்தவித பிரச்சினையும் இல்லாம சந்தோஷமா தான் அவங்க வாழ்க்கையை லீட் பண்ணி இருக்காங்க.. இந்த நிலையில் தான் போன மாதம் 15ம் தேதி மாலை மூன்று மணிக்கு மேல் வானதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை பண்ணி இருக்காங்க.. தற்கொலை பண்றதுக்கு முன்னாடி அவங்க கணவர் அம்மா தம்பி மூணு பேர் நம்பருக்கும் தான் இனி தனக்கு வாழ விருப்பமில்லை.. தற்கொலை பண்ணிக்க போறேன்னு வாட்ஸ் அப் மெசேஜ் போட்டுட்டு தான் சார் தற்கொலை பண்ணி இருக்காங்க.. இதில் துர்தர்ஷ்டம் என்னா அவங்க மூணு பேருமே அந்த மெசேஜ்ஜை ரொம்ப தாமதாமா தான் பார்த்து இருக்காங்க.. அதை பார்த்து அதிர்ச்சியாகி அவங்க அம்மா தம்பி வானதி வீட்டுக்கு வரதுக்குள்ள வானதி இறந்து போய் இருக்காங்க சார்.. அவங்க தான் முதல் வானதி பாடியை பார்த்தது அவங்க தான் வானதி கணவர் கார்த்திக் அப்புறம் போலீஸ்ன்னு எல்லாருக்கும் தகவல் கொடுத்து இருக்காங்க சார்.. இது தான் சார் இந்த ஃபைல் படிச்சு நான் தெரிஞ்சுக்கிட்டது  என்றான் விக்னேஷ்..

ம்.. தற்கொலையா என யோசித்தபடி  ஆதித்யன் பின்னங்கழுத்தை நீவ, 

ஆமா சார் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட அப்புடி தான் சார் இருக்கு.. தற்கொலைக்கு வானதி பயன்படுத்திய புடவை அது கழுத்தில் தந்த அழுத்தம் அது தான் வானதி இறப்புக்கு காரணம்ன்னு போட்டு இருக்குது சார்.. அது மட்டும் இல்லை தூக்கு போட்டால் எப்புடி நாக்கு வெளிய தள்ளி, கண்விழி பிதுங்குமோ, அப்புடி தான் சார் இருக்கு.. இதோ இங்க பாருங்க என வானதி இறந்த இடத்தில் அவள் பாடியை கீழே இறங்கும் முன்பு போலிசாரால் எடுக்கப்பட்ட போட்டோக்களை விக்னேஷ் காட்டினான்.. 

அந்த போட்டோக்களை ஆழ்ந்து பார்த்த ஆதி.. தற்கொலைக்கான காரணமா என்ன சொல்லப்பட்டது விக்னேஷ் என கேட்டான்..

சார் வானதி அவங்களுக்கு மைக்ரேன்னு சொல்லபடுற ஒற்றை தலைவலி அடிக்கடி வருமாம்.. அதுக்கா அவங்க தொடர்ந்து  டீரிட்மெண்ட் எடுக்கிறதாவும், அந்த தலைவலி வர டைம் அவங்க ரொம்பவும் வலி பொறுக்க முடியாம அவதி படுவாங்களாம்.. அதை வானதி  ஹஸ்பெண்ட் கார்த்திக் அவங்க அம்மா ராதிகா இரண்டு பேருமே சொல்லி இருக்காங்க சார்.. ஒருவேளை அன்னைக்கு தலைவலி அவங்களுக்கு தாங்க முடியாததாக இருந்து இருக்கலாம்.. அந்த வலியில் பொறுக்க முடியாம அதிலிருந்து தப்பிக்க அவசரத்தில் வானதி இப்புடி ஒரு தப்பான முடிவு எடுத்து இருக்கலாம்னு போலீஸ் தரப்பில் அறிக்கை கொடுத்து இருக்காங்க சார்.. ஏன் போலீஸ் அப்புடி சொல்றாங்கன்னா வானதி  இறந்து போன இரண்டு மூணு மணி நேரத்திற்கு முன்ன அவங்க ஏதோ பெயின் கில்லர் எடுத்துக்கிறாங்கன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல போட்டு இருக்கு சார்.  வானதி இறந்து கிடந்த அறையின் மெத்தை மேல்ல இருந்து அவங்க எப்பவும் எடுத்துக்கிற ஒற்றை தலைவலி டேப்ளட் ஸ்டீரிப் ஒன்னு கண்டுபிடிச்சு எடுத்து இருக்காங்க சார்.. 

 இது மட்டுமில்ல வானதி அவங்க திருமணத்திற்கு முன்னாடியே ஒரு தடவை கூட இந்த தலைவலியால் தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருக்கிறதாவும், அவங்க அம்மா தம்பி அக்கம்பக்கம் இருக்கவங்கள் எல்லாம் சேர்ந்து அவங்களை காப்பாற்றி ஹாஸ்பிடல் சேர்த்தும் இருக்காங்களாம் சார்.. வானதி அம்மா வீட்டு தெரு மளிகை கடைக்காரர் இஸ்திரி கடைக்காரங்ககிட்ட விசாரிச்சதில்  அவங்க கொடுத்த வாக்குமூலம் அந்த ஃபைல்ல இருக்கு சார்.. இது தான் சார் வானதி கேஸை விசாரிச்ச ஜீவா சார் அண்ட் அவங்க டீம் கொடுத்து இருக்க விசாரணை அறிக்கையில் இருக்கு என  மூச்சு விடாமல் சொல்லி முடித்தான் விக்னேஷ்..

ம்.. சபாஷ் என அவனுக்கு சொல்லிய ஆதித்யனும் அந்த பைல்களை புரட்ட ஆரம்பித்தான்.. முழுவதும் அதை பார்த்து முடித்தவன்.. மூடி வைத்து விட்டு கண்ணை மூடி டேபிளில் விரல்களால் தட்டியபடி எதையோ யோசித்தவன், 

இந்த கேஸில் உன்னோட பாய்ண்ட் ஆஃப் யூ என்ன விக்னேஷ் இது தற்கொலையா இல்ல..

தற்கொலை தான் சார் என்றான் விக்னேஷ்.. கண்ணை திறந்து எப்புடி சொல்கிறாய் எனும் விதமாக பார்க்க

பர்ஸ்ட் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சார்.. அதில் தெளிவா இருக்கு.. இது கழுத்தில்  புடவை இறுக்கியதால் அதில் தந்த அழுத்தம் தான் இறப்புக்கு காரணம்னு.. அடுத்து வானதியே அனுப்பிய தற்கொலை நோட்.. அதை அவங்க தான் அனுப்பி இருக்காங்க.. ஏன்னா அவங்க மொபைல் அவங்க ப்ளிங்க் பண்ணுனா மட்டுமே ஓபன் பண்ணுற போல செட்டிங் பண்ணி வச்சு இருக்காங்க.. சோ அதை அவங்க தவிர வேறு யாரும் ஓபன் பண்ண முடியாது.. அதோட க்ரைம் ஸ்பாட் வானதியோட அறை அங்க அவங்க அவங்க கணவரோட கைரேகை தவிர வேறு எதுவும் கிடைக்கலை இது ஃப்ரான்ஸ்சிக் ரிப்போர்ட்ல சொல்லி இருக்கிறது சார்.‌ வானதி தற்கொலை பண்ணிக்கிட்ட டைம் வுனதி மட்டும் தான் வீட்டில் இருந்து இருக்காங்க.. அவங்க கணவர் கார்த்திக் ஆபிஸ்ல தான் இருந்து இருக்காங்க.. அதுக்கு அவங்க ஆபிஸ் ஸ்டாப்ஸ் அண்ட் ஆபிஸ் சி.சி.டி.வி கேமரா புட்டேஜ் சாட்சி இருக்கு சார்.. இதை எல்லாத்தையும் விட தற்கொலை பண்ண அவங்க பயன்படுத்திய புடவை அதில் அவங்க கைரேகை மட்டும் தான் இருக்கு சார்.. இதை எல்லாம் வச்சு தான் சார் சொல்றேன் இது தற்கொலையா இருக்க தான் வாய்ப்பு அதிகம்.. 

மினிஸ்டர் மகன் மருமகள் அப்புடிங்காறதால் தான் இந்த கேமை எதிர்க்கட்சிக்காரங்க தூண்டிவிட்டு பெருசு பண்றாங்களோன்னு தோணுது சார் விக்னேஷ் தன் கண்ணோட்டத்தை சொல்லி முடித்தவன், உங்களுக்கு என்ன தோணுது சார் என கேட்டான்..

நீ  சொல்றது போல் இந்த ஃபைலில் இருக்கிறதை பார்த்தா தற்கொலை போல தான் தோணுது.. ஆனா எடுத்த உடனே தற்கொலை தான் அப்புடின்னு முடிவு பண்ணிட்டு விசாரணையை தொடங்குனால் அதோடு முடிவும் அப்புடியே தான் வரும் விக்னேஷ்.. அதனால் இப்போதைக்கு நான் எந்த முடிவுக்கு வரலை.. இந்த ஜீவா கொடுத்த விசாரணை அறிக்கையை ஓரமா வச்சிட்டு நாமா கேஸை ஃப்ரெஷ்ஷா பர்ஸ்ட்லிருந்து விசாரிப்போம்.. அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்.. இப்ப ஜீப்பை ரெடி பண்ண சொல்லு.. க்ரைம் ஸ்பாட்டுக்கு போய் பார்க்கலாம் என்றான் ஆதித்யன்..

எஸ் சார் என்றான் விக்னேஷ்..

குமார் என்ற ட்ரைவர் ஜீப்பை ஓட்ட மற்றோரு இருக்கையில் ஆதித்யனும் பின்னிருந்த இருக்கையில் விக்னேஷ் அமர்ந்து இருக்க, ஜீப் வானதி கார்த்திக் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது..

Tags:

5 thoughts on “காவலனே என் கணவனே 2”

  1. Priyarajan

    Yes ellarukkum oru konam irukkum 1st eh ithu thaan judge pana athuketha answer than kidaikkum…. Spr going 👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *