Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -5

தட்டாதே திறக்கிறேன் -5

“ஷில்ஃபா வேண்டாம் சரி அவ உன்ன அப்ரோச் பண்ண விதம் சரியில்லை…

ஏதோ த்ரட்டன் பண்ணி லவ் ப்ரோபசல் கொடுத்த மாதிரி உன்ன டீல் பண்ணியிருக்கா ஓகே…

பட் இந்த ஒன் சைட் லவ் எதுக்கு டா?…..

அதுவும் உன் அழகுக்கும், உன்னோட ஸ்டைலுக்கும் நீ பேச கூட வேண்டாம் பாத்தாலே போதுமே டா வருண்…..”
என்ற குமாரை நன்றாக முறைத்த வருண் அந்த அச்சக அலுவலகத்தின் கேண்டீன் முன் நின்றான்.

“டேய் நான் என்ன ஒரு பொண்ண கவுக்கவா இதெல்லாம் பண்றேன்…

சும்மா பாத்தாலே போதும்ங்கிற.

ஐயம் லவ்விங் ஹெர் டா..

ஃப்ரம் மை சைல்ட் ஹூட்…”
என்ற படி,
“ப்ரோ மீல்ஸ் இருக்கா?. என்று உணவை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்த அவன் வயதை ஒத்த இளைஞனிடம் கேட்டான் வருண்.

“சாரி ப்ரோ இங்க மீல்ஸ் அவெல்யபிள் இல்ல….

ஓன்லி ரைஸஸ்…..
உங்களுக்கு என்ன ரைஸ் வேணும்?….”
என்று அவ்விளைஞன் கேட்டிட,
   “என்னென்ன இருக்கு?….”
என்று கேட்டான் குமார்.

சாம்பார் ரைஸ்,
கர்ட் ரைஸ்,
டொமேட்டோ ரைஸ்,
வெஜ் ரைஸ்,
சிக்கன் ரைஸ்,
எக் ரைஸ்,
பொடேட்டோ ரைஸ்,
பப்பட் ரைஸ்…..”
என அந்த இளைஞன் அடுக்கி கொண்டே செல்ல,
பப்பட் ரைஸா  அப்படியெல்லாம் ரைஸ் இருக்கா என்ன?….”
என கேட்டான் வருண்…

“ஆமா டா அப்பளத்த க்ரஸ் பண்ணி சுடுசோத்துல போட்டு வெங்காயம் தக்காளி எல்லாம் போட்டு ஏதேதோ சாட் ஐடம் போட்டு கிண்டுவாங்களே நீ பாத்தது இல்ல..

எங்க வீட்டுல இருக்குற என் தங்கச்சி பயித்தியம் பண்ணும்

இப்படி எல்லாம் கண்ட மசாலா சாப்பிடாத கேன்சர் வந்திடும்ன்னா கேட்க மாட்டா…..”
என்று குமார் பதில் நீண்ட விளக்கத்தை தந்திட,  இவர்கள் இருவரின் பேச்சும் ஏனோ அந்த இளைஞனுக்கு அவ்வளவு ஒப்பாக இல்லை.

ஏனெனில் இங்கு வேலை செய்யும் பாதிக்கு மேல உள்ள நவ யுவதி இளைஞிகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவை தரைக்குறைவாக பேசியதோடு நோய் வேறு வரும் என விளம்பரப்படுத்தி கொண்டிருக்க,
  “சார் எதாவது வாங்குனீங்களா இல்லையா?….”
என்று எரிந்து விழுந்தான் அவன்.

ஆனால் வருணோ அலட்டிக் கொள்ளாமல்,
  “வேற வழி வாங்கித்தானே ஆகனும்…..

புது இடம் போற இடத்துல எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாம பாதுகாக்குறேன்னு அம்மா கொடுத்தத வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்…

சோ இங்க தானே சாப்பிடனும்…..”
என்று புலம்பியவனாக,
  “ரெண்டு சாம்பார், ரெண்டு தயிர்….”
என்று விட்டு குமாரை காண, அவன் ம்ம் என சம்மதமாக தலையசைக்க,
“ரெண்டு ரெண்டு தந்திடுங்க….”
என்றிட, அவ்விளைஞனும் அவர்களை முதலில் அனுப்ப எண்ணி நான்கு டப்பாவை எடுத்து அவர்களிடம் நீட்டிட, இருவரும் சென்று ஒர் இடத்தில் அமர்ந்தனர்.

“ஆமா நம்ம கூட ரெண்டு பொண்ணுங்க வந்தாங்களே அவங்க ரெண்டு பேரும் எங்க போயிருக்காங்க டா?….

ஏதோ ஹோட்டல் ன்னு உன் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க….”
என்று குமார் சாம்பாரை திறக்க,
  “ஏதாவது மல்டி கசின் ரெஸ்ட்ராண்ட்டா இருக்கும் டா‌‌…..”
என்றான் வருண்.

அவ்வளவு தான் குமார்,
  “எது மல்டி கசின் ரெஸ்ட்ராண்ட்டா?…

என்னடா சொல்ற?..

அவ்ளோ பெரிய ஹோட்டலுக்கு போறவங்க நம்மல ஏன்டா கூப்டல….”
என்று குமார் கோபமாக வினவ,
  “இல்ல டா அனிதா நம்மலையும் தான் கூப்ட்டா…

ட்ரீட் சார் வாங்கன்னு…..

ஆனா நான் தான் மதி கேண்டீன் பக்கம் தான் சாப்பிட வருவா..

அவள மீட் பண்ணலாம்னு உன்ன கம்பெனிக்கு வச்சுக்கிட்டேன்…..”
என்று கண்கள் அலைபாய குறும்பாக பேசியவனை கண்ட குமார்,
  “பாவி பாவி ஏன்டா இப்படி அநியாயம் பண்ற?…

இந்நேரம் நல்ல ஹோட்டல்ல நான் – வெஜ் சாப்பிட இருந்தவன இப்படி சாம்பார் சோறு சாப்பிட விட்டியே டா….

உன்ன எல்லாம்….”
என்று குமார் எழுந்து அவனை மொத்த செல்லும் முன் அது சாம்பார் சாத டப்பாவுடன் ஆனால் ஒரே ஒரு டப்பாவுடன் மதி நடந்து வந்து கொண்டிருக்க,
   “டேய் டேய் மதி டா….

அமைதியா உட்காரு டா…..”
என்று அவனை சமாதானப்படுத்தினான் வருண்.

என்ன தான் தன் நண்பன் உணவில் மண்ணள்ளி போட்டிருந்தாலும் அவனின் காதலில் மண்ணள்ளி போட விரும்பாத குமார் ம்ஹூம் என்று சலித்து கொண்டு அமர,
  “ஹேய் மதி!… 
கம் கம்….”
என காலி இருக்கை ஒன்றிற்க்கு செல்லவிருந்த மதியை சப்தமிட்டு வருண் அழைக்க, ஒட்டு மொத்த கேண்டீனும் அவர்கள் இருவரையும் கவனித்தது.

ஏன் குமாரும் கூட….

“டேய் மெதுவா கூப்டு டா….

அப்புறம் எல்லாரும் அந்த பொண்ண தான் தப்பா பேசுவாங்க…..”
என்று அடக்கினான்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக சிரிப்புடன் நடந்து வந்தாள் மதி.

வந்ததை விட,
  “நீங்க இன்னும் மாறவே இல்ல வருண்….

ஏரியா ல நின்னுட்டு கூப்டுற மாதிரி இப்படி சத்தமா கூப்டுறீங்க….

இது கேண்டீன்….”
என புன்னகையுடன் செல்லமாக கண்டித்தாள்.

அதே போல வருணும்,
   “அதுவா நீ அப்படியே அங்க போய் உட்கார்ந்துடுவேன்னு பதட்டத்துல கொஞ்சம் சத்தமா கூப்ட்டேன்…

சாரி..

இந்த இடம் எங்களுக்கு புதுசா இருந்தாலும் உன்ன மாதிரி ஒரு ஆஃபிஸ் ஆளே எங்களுக்கு தெரிஞ்சவங்களா இருந்தா எங்களுக்கும் இங்க கம்ஃபர்ட்டபிளா இருக்கும்ல.

அதான்….”
என்றபடி சாதத்தை வாயில் திணித்து கொள்ள இருவரும் இப்போதைய நிலவரங்கள், செய்து கொண்டிருக்கும் வேலைகள், என டப்பாவில் உள்ள உணவு முடியும் வரை பேசிட,  குமாரும் வருண் தன்னை விரட்டி விடாமல் தன்னிடம் வைத்துக் கொண்ட மகிழ்வில் உண்டு முடித்தான்.

“ஆமா நீ தினமும் கேண்டீன்ல தான் சாப்டுவியா…

சமச்செல்லாம் எடுத்து வர மாட்டியா?….”
என்று நீரை அருந்தி விட்டு வருண் கேட்க கேள்விக்கு,
  “இல்ல வருண் நானும் ரெண்டு மூனு தடவ ட்ரை பண்ணி பாத்தேன்..

என்னால சீக்கிரமா எழுந்து சமச்சு ஆஃபிஸ் கிளம்ப முடியல…..

நிறைய வேல இருக்குற மாதிரி இருக்கு.

கட் பண்றது குக் பண்றது, வெசல்ஸ் க்ளீன் பண்றது அப்புறமா நான் ரெடி ஆக…

ஸப்பா இதுக்காகவே ஆறு மணிக்கு எழுந்திருக்கிற மாதிரி இருந்தது….”
என்றிட, குமாருக்கு வருணின் எதிர் கால நிலையை நினைத்து பகீர் என்றானது.

ஆனால் வருணோ அப்படி எதுவும் தோன்றாமல்,
  “கூட இருக்காளே ப்ரியா…

அந்த பொண்ணு கூட ஹெல்ப் க்கு வச்சுக்க வேண்டியது தானே…

யாராவது ஹெல்ப் பண்ணா வேல சீக்கிரமா முடியும் தானே…..”
என்று ஆலோசனை தந்திட,
  “ம்ம் கரெக்ட் தான்..‌

ஆனா அந்த பொண்ணுக்கு சமச்சு சாப்டுறதுல இன்ட்ரெஷ்ட் இல்ல போல…

அன்ட் அவளுக்கு அவளுக்கான லஞ்ச வீட்டு சமையல் ஆப்ல வாங்கிக்குறா…

என்ன இதுல எல்லாம் இழுக்காதீங்க..

உங்களுக்கு வேணும்னா சமச்சுக்கோங்கன்னு சொல்லிட்டா….”
என்று கூறவும் வருண் ஏதோ சிந்திக்கலானான்…

ஆனால் மதிக்கு அவனை போல சிந்திக்க ஏதும் இல்லாமல் போகவும்,
  “ஓகே வருண் நான் கிளம்புறேன்.

வொர்க் எல்லாம் பெண்டிங்க் ல இருக்கு….”
என்று கிளம்பி விட,
  “டேய் நல்ல சேன்ஸ்….

இப்பவே ஒதுங்கிக்கோ…..

சமைக்கிறதுக்கு ஆறு மணிக்கு எழுந்திருக்கிற மாதிரி இருக்குன்னு தினமும் கேண்டீன்ல வாங்கி சாப்பிடுறா…

வேண்டாம் டா வேண்டாம்….

உங்க அம்மா கையில நல்லா ருசியா சாப்ட்டு பழகுனவன் நீ…..”
என்று குமார் வருணுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருக்கும் போதே வருண் தன் நண்பனிடம்,
  “என் அம்மாவ எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உனக்கு தெரியும்?….”
என்று கேட்டான் ஆடவன்.

குமாருக்கு ஒரு நொடி அவன் கேட்க வருவது புரியவில்லை…

சற்று யோசித்தான்..

“எவ்ளோ பிடிக்கும்னா?…..

என்ன கேள்வி இது?….

அம்மான்னா உனக்கு பிடிக்கும்…

உனக்கு உன் அம்மா தான் எல்லாம்னு நீ அடிக்கடி அம்மாவ பத்தி பேசுறதுல தெரியும்…..

அதர்வைஸ்?…”
என்று குமார் புரியாமல் முழிக்க,
  “இல்ல எனக்கு எங்க அம்மாவ கண்டாளே பிடிக்காது ஒன்ஸ் அபான் ஏ டைம்….

அப்பா தான் பிடிக்கும்……

காரணம் எங்க அப்பா எங்க அம்மாவுக்கு செகண்ட் ஹஸ்பண்ட்…..”
என்றிட, குமார் வித்தியாசமாக முழித்தான்.

இதுக்காக தான்..

தோ நீ இப்ப பாக்குற பார்வைக்காக நான் இதுவரைக்கும் யார் கிட்டயும் சொன்னது இல்ல…”
என்றிட, குமார் சுதாரித்து கொண்டான்.

“டேய் இல்லடா நான் அப்படி எல்லாம் நினக்கல டா….

ஜஸ்ட் ஒரு ஜெர்க் தான்…

தப்பா எல்லாம் நினக்கல…..”
என்று குமார் அவனை சமாதானப்படுத்தினான்.

“பரவாயில்ல டா நீ மட்டும் இல்ல பெத்த பையன் நானே அவங்கள அப்படித்தான் நினச்சேன்….

எங்க பாட்டிக்கும் அம்மாவுக்கும் சின்னதா சண்ட வந்தா கூட என் அப்பாவோட அம்மா உடனே அம்மாவ ரெண்டு புருஷன கட்டுனவ தானே நீ…. அப்படின்னு தப்பா பேசுவாங்க…

அதுவும் கௌரி அக்காவ அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

பிகாஸ் அவங்க ஃப்ர்ஸ்ட் ஹஸ்பண்ட் ஓட பொண்ணுன்னு…

அப்பா ஒருத்தருக்காக மட்டும் தான் அம்மா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க..

பட் இதெல்லாம் எனக்கு சின்ன வயசுல புரியாது…

என் பாட்டி எங்க அம்மாவ தப்பா பேசறத வச்சு, அம்மா ரெண்டு மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க…..

கௌரி அக்கா என் சிஸ்டர் இல்ல…

அப்படின்னு ஒரு தப்பான தாட்டோட எங்க அம்மா கிட்ட பேசவே மாட்டேன்.

பாட்டிட்ட மட்டும் தான் பேசுவேன், சாப்பிடவேன், ட்ரஸ் மாத்திப்பேன்….

அம்மாவ கண்டாலே பிடிக்காது….

அந்த டைம்ல தான் எங்க அம்மா எடுக்குற டியூசன் க்ளாஸுக்கு ஸ்டூடண்ட்டா வந்தா மதி….

யாருக்கிட்டையும் பேச மாட்டா…

ஏன் அம்மா கிட்ட கூட ஹோம் வொர்க் முடிச்சிட்டாயா ன்னு கேட்டா எழுதுன நோட் தான் காட்டுவாளே தவிர அமைதியா இருப்பா….

பட் நல்லா படிப்பா….

எனக்கு அப்பவே அவளோட க்யூட்டான கண்ணு ரொம்பவும் பிடிக்கும்.

அதனால எப்படா டியூஷன் டைம் வரும்னு இருப்பேன்.

ஆனா அன்னிக்கி அம்மாவுக்கு முடியலன்னு டியூசன் லீவுன்னு கௌரி அக்கா கிட்ட சொன்னதும் நான் ரொம்ப கோபமாகிட்டேன்…


கௌரி கிட்ட சண்ட போட்டுட்டு பக்கத்த வீடு தான் மதியா அவள பாக்க போயிட்டேன்.

அங்கேயும் மதி அமைதியா அவ பாட்டி பக்கத்துல உட்கார்ந்து ஹோம் வொர்க் எழுதிட்டு இருந்தா……. (ஃப்ளாஷ் பேக்)
  

“வாடா வருண்…


என்ன உங்க அம்மாவுக்கு முடியலயா?..

அதான் விளையாட இங்க வந்துட்டியா?….”
என்று பாட்டி வினவ,
  “ம்ம் ஆமா பாட்டி……”
என்று சலிப்புடனும் கூறினான்.

அவனின் அந்த சலிப்பை கண்ட மதி,
  “ஏன் இப்படி ஏதோ மாதிரி சொல்ற?..உனக்கு உங்க அம்மாவ பிடிக்காதா?…..”
என்று கேட்டிட, முதல் முறையாக தன்னிடம் மதி பேசி விட்ட மகிழ்வில் ஆடவன்,
  “ம்ம் ஆமா எனக்கு எங்க அம்மாவ பிடிக்காது…

அப்பா மட்டும் தான் பிடிக்கும்….”
என்று உண்மையை கூறி விட,
  “அப்படி எல்லாம் சொல்லாத வருண்….

அம்மா கிட்ட எல்லாம் சண்ட போடக்கூடாது.

அன்னக்கி நானும் அப்படித்தான்.

என்னோட காட்பரிய தரலன்னு எங்க அம்மா கூட கார்ல சண்ட போட்டு பேசாம இருந்த போது தான் எங்க கார ஒரு லாரி மோதிடுச்சு….

அப்பா கண்ண மூடி தூங்கிட்டாரு…

ஆனா அம்மா முழிச்சிருந்தாங்க…

எனக்கு கையில அடிப்பட்டு வலியா இருக்கு எழுந்திரும்மா ன்னு அம்மாவ கூப்டா அம்மா பேசவே இல்ல….

அம்மா உடம்பு முழுக்க ப்ளட்…

சரிம்மா சாரிம்மா இனிமே பேசுறேன் எழுந்திரும்மா ன்னு சொன்னா அம்மா அப்படியே கண்ண மூடிட்டாங்க….

அப்புறம் எல்லாரும் அம்மாவ, அப்பாவ ஹாஸ்ப்பிட்டல்க்கு கூப்டு போனாங்க..

நான் அழுதேன்….”
என்றிட ஐந்தாம் வகுப்பு படிக்கும் வருணுக்கு அவள் கூறும் கதை புரிந்தது.

இதயமும் ஏதோ போல வலித்தது.

“அம்மா வாம்மா பேசும்மான்னு கூப்ட்டேன்..

ஆனா பாட்டி எல்லாரும் அம்மா சாமி கிட்ட போயிட்டா ன்னு சொன்னாங்க.

சாமி கிட்ட போனா அம்மா மறுபடியும் வர மாட்டாங்களாமே….

அதனால நீ உன் அம்மா கிட்ட சண்ட போடாத…

அப்புறம் உன் அம்மாவும் சாமிக்கிட்ட போயிடுவாங்க.

உன் கிட்ட பேசாமாட்டாங்க…..”
என்று அவள் கூறி முடித்தது தான் தாமதம் வருண் ஓடிச் சென்றான் தன் அன்னையின் முகத்தை காண….

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *