அத்தியாயம்-9
சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது.
”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான்.
”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும் பார்க்க கூடாது என்பதாலா தான்… அப்படி செய்தும் போனில் கொஞ்சி பேசறிங்களா?” என கடுகடுக்க போன் மீண்டும் மணி அடித்தது ரித்தீஷ் ஐஸூவை பார்த்தபடி அட்டேன் செய்தவன்
”சாரி மஸ்தான் இங்க போன் கை தவறி விழுந்துடுச்சு” என்றதும் ஐஸ்வர்யா அவனின் போனை பிடுங்கி ஸ்பீக்கர் மோடில் போட்டு நின்றாள்.
”ஓகே ஈஸ்வர்… என்னால கல்யாணத்துக்கு வர முடியல அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததுடா… நீ எதுவும் தப்பா நினைக்கலைல எனக்கு அது போதும்” என்றான் அந்த பக்கம் மஸ்தான்.
”பரவாயில்ல மஸ்தான் நீ உடம்பை பார்த்துகோங்க வைக்கறேன்” என அணைத்தான்.
”உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இப்படி லூசு மாதிரி பண்ற?” என்றதும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் விறுவிறுவென்று அவளின் அறைக்கு சென்று கதவை சாற்றி கொண்டாள்.
‘எனக்கு என்ன அச்சு? இது நாள் வரை மாமாவிடம் நான் இப்படி நடந்து கொண்டதே இல்லை ஆனா இப்போ… எனக்கு நிஜமா என்னாச்சு?’ என்று யோசிக்க அவளின் கழுத்தில் அகப்படும் செயினுக்கு பதிலாக இன்று தாலி செயின் கையில் அகப்பட்டது.
தாலி கட்டியதால் மட்டுமா? என அவளுக்குள் மனசாட்சி கேட்க ‘சே எனக்கு தாலி கட்டி என்னை அவர் பேருக்கு மனைவி சொல்லிட்டு என் சொத்தை அடைய நினைக்கின்றவர். அப்படி இருக்க என்னை கட்டிக்கிட்டு வேற ஒருத்தி கிட்ட பேசினா சும்மா இருப்பேனா? அவரை அவரோட நிஜ முகத்தை அப்பா அம்மாவிடம் காட்டனும் அதுக்கு அவரின் இந்த மாதிரி நடந்தா என் போனில் ரெகார்ட் பண்ணனும்’ என்றே முட்டாள் தானமாக எண்ணி கொண்டாள்.
ஆனாலும் ஏதோ ஒன்று அவளை வெளியே வர விடாமல் செய்ய அறையிலே கிடந்தாள்.
மதியம் மூன்றை தாண்டி உணவு உண்ண வராதவள் வைதேகி கதவை தட்டிய பின்னே
”எதுக்கா மணி ஒன்றுக்கு சாப்பாடு திண்ற ஆளாச்சே என்ன திடீர் என்று மணி மூணாகுது அப்படி இருக்க இன்னும் வராம இருக்கியே அதான் என்னனு கேட்க வந்தேன்”
”ஹ்ம் மணி மூனாகுதா?” என வைதேகி தள்ளி கொண்டு டேபிளில் அமர அங்கே ஏற்கனவே ரித்தீஷ் உண்டு கொண்டு இருந்தான்.
”அதானே பார்த்தேன் மனகஷ்டம் வந்தாலும் சரி… என்ன கோவமானாலும் சரி நீ தான் டைமுக்கு கொட்டிப்பியே… வரலை என்றதும் ரோஷம் எதுவும் வந்துடுச்சனு பயந்துட்டேன்” என வைதேகி சிரிப்புடன் பரிமாற ஐஸூவும் இலகுவாக சாப்பிட்டு முடித்தாள். ஆனாலும் எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட குறைவாக உண்ண செய்தாள்.
”என்னடி வந்த வேகத்துக்கு எனக்கு எல்லாம் மிச்சம் வைக்க மாட்டேனு இருந்தேன்… என்ன அப்படியே இருக்கு” என ஒவ்வொரு பாத்திரமாக பார்த்து கேட்டார்.
”ஐயோ அம்மா அது என்னவோ தெரிலை… நல்லா பசிக்குது ஆனா சாப்பிட முடியலை” என்ற வருத்தமா சொல்லி முடித்தாள்.
வைதேகி அவளையும் ரித்திஷையும் பார்த்து நிற்க அவனோ ‘ஐயோ எனக்கு தெரியாது’ என்பது போல எழுந்துக்கொண்டான்.
எதற்கு என்றால் கொஞ்ச நேரம் முன் இதே போல வைதேகி உணவு எடுத்து வைக்க ரித்தீஷ் பேசிய அதே வசனம் என்றதும் மட்டுமில்லை வைதேகி ஈஸ்வரனிடம் ”என் மகள் கொஞ்சம் கொஞ்சமா உன் மனைவியா மாறறா டா” என்றதற்கு
”போக்கா அவளுக்கு இருக்கற கோவத்துக்கு என்னை கொதிக்கிற எண்ணெயில் தூக்கி போட்டுடுவா” என்றான்.
”உனக்காவது அவளை பிடித்து கல்யாணம் செய்தியா? இல்லை இதுவும் உங்க மாமா சொல்லிட்டார்னு தாலி கட்டினியா?” என்று கேட்க அவனோ பதில் சொல்ல வழியின்றி உணவை விழுங்கினான்.
”சரி சரி எதுவும் கேட்கலை… சாப்பிடு” என்று எடுத்து வைக்க
”இல்லை அக்கா போதும்” என எழவும்,
”உட்காரு டா இது எல்லாம் அப்படியே இருக்கு சாப்பிடு”
”ஐயோ அக்கா போதும்” என்றான்.
”பசிக்குது சொன்ன?” என வைதேகி கேட்க
”பசிக்குது ஆனா சாப்பிட முடியலை… அக்கா” என வைத்த உணவை உண்டான்.
அதே போல தற்பொழுது மகள் சொல்லியதும் இதுலயாவது ஒரே மாதிரி இருக்கிங்க பார்போமென பூரிக்க செய்ய அங்கே ரித்தீஷ் மனமோ
‘இப்போ இங்க இருந்து போனதும் தனியாக அவளிடம் அவளின் தேவைகள் எல்லாம் வாங்க வேண்டும் என்பதிலே சுழன்றது.
அன்று மாலையிலே வைதேகி அழத்துவங்கினர்.
”ஏன் டா இங்கயே இருக்க மாட்டியமே? மாமா சொல்றார்… அப்படி என்னடா தனியா போகணும்?” என்று தம்பியிடம் சண்டை பிடித்தார்.
”அக்கா ப்ளீஸ் என்னை ஏதாவது பேசி மாற்றணும் நினைக்காதே.. கல்யாணம் பேச்சை ஆரம்பித்தப்பவே மாமாகிட்ட சொல்ல தான் செய்தேன்… அவர் ஒப்பு கொண்டார்” என்றார் அழுத்தமாக.
”ஒப்பு கொண்டாரா? இல்லை சம்மதிக்க வச்சியா?” என வைதேகி அவனை நேராக பார்த்து கேட்க ”சொல்லு டா அவர் என்ன தான் இப்போ ஐஸூ மேல கோபமா பேசினாலும், அவருக்கு பரத் மேல இருக்கற பாசத்தை விட ஐஸூ மேல அதிகமாகவே இருக்கு…. அவர் பொண்ணை விட்டு இருக்க மாட்டார்”
”அப்போ என்கூட அங்க இருந்தா கஷ்டபடுவாளா அக்கா?”
”நான் அப்படி சொல்லலை டா இருந்தாலும் அவள் இங்கே எல்லாம் பழகி இப்போ.. மாமா கொடுக்கற எதையும் வேண்டாம் என்று சொல்லி இருக்கியாமே?”
”எல்லா பேச்சுக்கும் மாமாவே சம்மதம் சொல்லிட்டார் அக்கா. நீ வேற ஆரம்பிக்காதே… விடு…” என்றதும்

”என்னவோ முன்ன இந்த அக்கா சொல்றதை கேட்க தம்பி இருந்தான். ஆனா இப்போமாப்பிள்ளையாய் மாறிட்ட, இனி நீயும் கேட்க மாட்ட” என்று கண்களில் இறைஞ்சுவது போல கேட்க ரித்திஷோ அப்படி தான் என்பது போல நின்றான்.
அவனின் தன்மானம் ஏற்கனவே விழித்து விட்டது அவனின் மாமாவிடம் என்று, அக்காவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை தான்
சேர்த்துவைத்த பணத்தொகை எல்லாம் எடுத்து வாங்கிட முயன்றினாலும் ஐஸ்வர்யாவின் தேவைகள் இங்கு போல பூர்த்தி செய்வது முடியாத காரியம் தான் என ரித்தீஷ் நொந்தான். இவளிடம் எத்தனை முறை என் தன் மானம் இழக்க நேருமோ என்றே யோசிக்காமல் இல்லை…
மாலையே செல்வதாக புறப்பட்டான்.
அவனவன் காரில், வேனில் என்று நியூமேரிட் போவாங்க ஆனா நான் ஒருத்தி தான் ஆட்டோவில் வர்றேன்’ என்ற முனங்கள் ரித்திஷ் காதில் விழ அவனோ சாலையில் தான் கவனம் செலுத்தினான்.

ஐஸூவிற்கு ‘சே இந்த அப்பா கூட என் துணைக்கு வந்து இருக்க கூடாது… அம்மாவையும் அனுப்பலை.’ என்ற எண்ணம் உதிக்க கண்ணீர் சுரந்தது.
‘ஐ… இறங்கு…” என்றான் பொதுவாக சொல்ல கண்ணீர் துடைத்தவள் இறங்கினாள்.
ரித்தீஷ்-ரியா இருவரும் வந்து சேர இலக்கியா ”அம்மா அம்மா அவங்க வந்துட்டாங்க” என கததினாள்.
”கத்தாத டி வந்துட்டே இருக்கேன்..” என மகாலட்சுமி கையில் ஆரத்தி தட்டோடு வர இலக்கியா கூட நின்றாள்.
”வாம்மா.. ரித்தீஷ்.. பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா” என திருஷ்டி சுற்றி கழிக்க புன்னகைத்து கொண்டான்.
நம்மளை வரவேற்க கூட இங்க ஆளு இருக்கு யாரா இருக்கும்..? என்று வர
”இலக்கியா அவர்களை முதலில் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ சாப்பிட வச்சி அனுப்புவோம்” என்றதிலே ஐஸூ முகம் கடுகடுக்க செய்தது.
‘அப்போ இதான் இலக்கியா வா? கடைசியில் யாரு என்ன பார்த்தா இங்க தான் இருக்காளா?’ என இருக்கும் மொத்த கோவமும் கண்களில் நிறுத்தி கத்த துவங்க, கையில் கொண்டு வந்த நீரை மொத்தமும் கீழே கொட்டி தடுக்கி விழ போனாள் இலக்கியா. அதே நேரம் ரித்தீஷ் தான் காப்பாற்ற போனான்.
”என்ன இலா பார்த்து வர தெரியாது?” என கடிந்து கொள்ள
”இல்லைடா கண் தெரியாம…” என்றே சொல்ல வர அவளின் இடது கண்ணில் வீங்கி இருக்க கண்டான்.
”யாரு அடித்தது?’ என்று கேட்க
”எல்லாம் அவ அப்பா தான்.. ரித்தீஷ் அது இப்போ வேண்டாம் முதலில் இந்த பாலை குடிங்க” என்று கொடுக்க ஐஸூவோ ”எனக்கு பால் பிடிக்காது வேண்டாம்” என்று சொல்ல ரித்தீஷ் ரியாவை பார்த்து
”அக்கா அவளுக்கு நிஜமாவே பால் பிடிக்காது.. வேண்டாம்… ” என மறுத்து அவன் மட்டும் வாங்கி பருகினான். ஐஸூவோ என்னது அக்காவா ‘டேய் உன் அக்கா பொண்ணு நான் இருக்கேன் இங்க யாருடா இன்னொரு அக்கா இரு டா உனக்கு இந்த ஐஸூ யாருனு காட்டுறேன்… என்னிடம் மட்டும் இரட்டை வேஷம் போட்டுபாரு அப்போ இருக்கு..’ என் மனதில் கருவினாள்.
”சரி அக்கா நான் கிளம்பறேன்” என்று எழுந்து கிளம்ப ஐஸூ இவன் எங்க போறான் என பின் தொடர்ந்தாள்.
இலா வீட்டில் மாடியில் படிக்கட்டில் தாவினான்.
ஐஸூ அவள் அம்மா வைதேகி பிடிவாதத்தால் அணிந்த சேலை கால்களில் தடுக்க மெல்ல நடந்து மாடி ஏறினாள்.
அங்கேயிருக்கும் ஒரு கதவை சாவிக்கொண்டு திறந்தவன் உள்ளே நுழைந்து அவளை வர சொல்ல வாயை எடுக்க அவளோ அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அளந்தாள்..
மடக்கும் கட்டில் ஒரு டேபிள் என்றிருக்க அங்கே இருக்கும் செல்ஃபில் ரித்தீஷ் உடைகள் இருந்தன. ஹாங்காரில் அவனின் ஆட்டோ உடையான காக்கி உடையும் இருந்தன.
ஹால் அதற்கு ஓரத்தில் இருக்கும் செல்ஃப் இன்டெக்ஸ் ஸ்டவ் மற்றும் கொஞ்சமாக சில பாத்திரம் இருக்க அறையில் உள்ளே கொஞ்சம் தள்ளி பாத்ரூம் இருந்தது.
”நான் ஒரு ஆள் அதனால தனியா ஹால் கிச்சன் மட்டும் போதும்னு நினைச்சேன்” என்று சொல்ல ஐஸூவிற்கு கண்ணை சுழற்றியது. அவள் அறை இதை விட பெரியது.
”நான் இப்போ எங்க உட்காற?” என்று அவள் கோபமாக கேட்க அதே நேரம் போன் மணி அடித்தது
அட்டேன் செய்தவன் அவர்களிடம் ஒரு நிமிஷம் என்று சொல்லியதும் மடக்கு கட்டிலை எடுத்து வெளியே போட்டு உட்கார வைத்தான்.
அவளோ அமர்ந்து தலையை பிடித்தபடி சோர்ந்தாள். ”சே ஒரு சேர் இல்லை கட்டில் இல்லை… டிரஸ் வைக்க பீரோ இல்லை இவர என்ன தான் செய்ய?” எனறு புலம்பினாள்.

ரித்தீஷ் போனில் ”ஆஹ் அண்ணா வீட்டுக்கு வந்துட்டோம்… கொண்டு வாங்க” என மகிழ்சியாக சொன்னான்.
ஐந்து நிமிடத்தில் ஒரு மினிலாரி வந்து சேர்ந்தது. அதில் கட்டில் ஒரு ரைட்டிங் டேபிள், பீரோ. டிவி மற்றும் சில பாத்திரம் மிக்சி இருக்க மேலே கொண்டு வந்து வைத்தார்கள்.
அதனை அதன் அதன் இடம் வைத்து முடிக்க நடுவில் சன்ரைஸ் போட்டு காபி கலந்தவன் அவளிடம் கொடுக்க வாங்கினாள். அப்பொழுது ஒரு திமிரான பார்வையில் அவள் மிதந்தாள். இது எல்லாம் அவள் தந்தை அவளுக்காக கொடுத்தது உன் வீடு எப்படி இருந்தது? இப்போ எப்படி இருக்கு பார்.. எல்லாம் என் அப்பாவால் என்ற மிதப்பு இருக்க காபி பருகி முடித்தாள்.
”தம்பி இது போதுமா இல்லை உங்களுக்கு வேணும் என்பதை வாங்கிக்க சொன்னார் பாய்.. உங்க கையில் பணம் வந்த பிறகு கூட கொடுக்க சொன்னார்” என்று பணியாள் சொல்ல
”பரவாயில்லை அண்ணா பணம் சேர்த்து வைத்தே திரும்ப என்ன வேணுமோ அதை வாங்கிக்கறேன்” என்றவனின் பேச்சில் தான் ‘இது தந்தை தனக்காக கொடுத்தது இல்லை இவன் வாங்கி இருக்கின்றான்’ என்பதே புரிந்தது.
”அப்பாவிடம் சொன்னா உடனே எல்லாம் வாங்கி தருவார்.. எதுக்கு இப்படி?” என்றாள் ஐஸ்வர்யா.

”அவரிடம் வாங்கறதா இருந்தா நான் உங்க வீட்டிலே இருந்து இருப்பேனே… எதுக்கு தனியா வந்தேன் ரியா? எனக்கு உங்க சொத்து பணம் எதுவும் வேண்டாம்.. இங்க இப்போ இருக்கற என்னோட உடைமைகள் இதுவே போதும்” என நகர்ந்தான்.
‘இப்போ இவன் என்ன பேசிட்டு போறான்…. அப்போ எஅப்பாவிடம் எதுவும் வாங்கலையா? அப்பறம் என்ன சொன்னான் ரியாவா? ஐஸ்வர்யா இப்போ ரியா வா? என்றதும் சந்தோஷம் அவளுள் பரவியது