ஏற்கனவே இரண்டு வழி முறை உண்டு என்று எழுதியிருந்தேன்.
ஒன்று நம்மளே கை காசு போட்டு ஒரு புத்தகம் பதிப்பிக்கலாம். அதற்கு லைசன்ஸ் பெற்ற பதிப்பகத்தில் நீங்கள் அணுகலாம். லைசன்ஸ் இல்லாத இடத்தில் கூட புத்தகம் பதிப்பிப்பார்கள். ஆனால் பின்னாலில் பிரச்சனை வரும்.
குறைவான புத்தகங்களை நீங்கள் பிரிண்ட் செய்தால் விலை அதிகமாகும். அதிகமாக புத்தகங்களை பிரிண்ட் செய்தால் விலை குறையும். ஆனால் புத்தகங்களை நீங்கள் விற்கும் யுக்தியை அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது அதற்கும் சிலர் விற்று தரும் வியாபாரத்தை துவங்கியாயிற்று. டிஸ்ட்ரிபியுஷன் உண்டு. அங்கே நீங்களாக அணுகலாம். சிலர் அதற்கு கமிஷன் வாங்குவார்கள். இலவசமாக செய்வாரா என்பது தெரியவில்லை. இங்கே எதுவும் இலவசம் கிடையாது.
உங்களுக்காக புத்தகம் வாங்கும் வாசகர்கள் நிறைய பேர் உண்டு என்றால் நீங்களாகவே பதிப்பித்து விற்றுக்கொள்ளலாம். தற்போது சைட் ஆரம்பிக்கும் ஆட்கள் பெரும்பாலும் அவர்களாகவே பதிப்பகமும் ஆரம்பித்து கொள்கின்றார்கள். பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே.
இரண்டாவது முறை: பெயர் பெற்ற பதிப்பகங்களை கூகுளில் தேடி அதில் குறிப்பிட்ட அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் கதையை பதிவிட முடியுமா என கேட்டு கொடுக்கலாம். அவர்கள் ஒப்புதல் அளித்தால் இதற்கு தங்கள் பணம் தரவேண்டியது இருக்காது. புத்தகம் விற்பனை செய்ய மெனக்கெட வேண்டாம். ஆனால் உங்கள் புக் தொடர்ச்சியாக வாங்கும் நபர் இருக்க வேண்டும். ஓரளவு உங்களாக்கான பெயரை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் கண்ட காம கதையும் எழுதிய நபராக நீங்கள் இருந்தால் அவர்கள் ஏற்க மாட்டார்கள். 18+ காட்சியை வைத்து ஒப்பேற்றி மாபெரும் வாசகர்கள் கூட்டத்தை பெற்றாலும் அது வீண். அதற்கு அமேசான் பிரதிலிபி வேண்டுமென்றால் பணம் தருவார்கள். மதிப்பு என்பது நம் எழுத்துக்காக வழங்கப்படுவது. 18+ என்றால் வாசித்து குப்பைக்கு சென்றுவிடும். எழுத்துபிழையும் வகை தொகையில்லாமல் இருக்க கூடாது. பதிப்பகத்தின் பெயன் கெட்டுவிடும் என்ற காரணத்திற்காக எப்பேற்பட்ட தூண் எழுத்தாளராக இருந்தாலும் ஏற்க மாட்டார்கள்.
நடுவில் சில ஆப்பில் இலவசமாக புத்தகம் பதிப்பிக்கும் ஆப்ஷன் இருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் பணம் கட்டி பதிவிடும் முறையாக மாற்றிவிட்டார்கள்.
இன்னும் சில பதிப்பகம் நீங்கள் கொடுக்கும் கதையை கண் மூடிக்கொண்டு வாங்கி பதிப்பிப்பார்கள். ஆனால் அதில் உரிமை என்ற இடத்தில் ஆசிரியர் என்று முன்னுரிமை தரமாட்டார்கள். பதிப்பகத்தாருக்கு என்று போட்டுக்கொள்வார்கள். இதனால் உங்கள் கதை உங்களுக்கே சொந்தமாக இருப்பது குறைவு. புத்தகம் மட்டும் போதும் என்பவர் சில பதிப்பகம் இதை அணுகி ஏற்க தான் செய்கின்றார்கள். ஆராய்ந்து பாருங்கள். கதைக்கான உரிமை யாருக்கு? எத்தனை வருடம் யாருக்கு சொந்தம் என்றெல்லாம் கூட தெரியாமல் பார்மில் கையெழுதாது போட்டு சில ஆப்பில் ஏமாந்த மேதாவிகள் இங்கே உண்டு. நம்ம கதைக்கு யாரோ ஒருவரிடம் கெஞ்ச கூடாது இல்லையா?!
பதிப்பகம் ஆரம்பிப்பது மிக எளிது. ஆனா கைகாசு போடணும். ரெடினா புத்தகம் பதிப்பிக்கலாம். மாதம் மாதம் கூட உங்க கதையை நீங்களாகவே புத்தகம் பதிவிட்டு விற்கலாம். சிலர் எல்லாம் டெம்பிளேட் மட்டும் எழுதி கூட பெரியாளாக மாறிய வரலாறு இருக்கு. ஆனா புக் வாங்கி புரட்டினா எழுத்துபிழை அங்கே அளவில்லாம இருக்கும்.
முடிந்தளவு வாசகர் வட்டத்தை பெற்றுக்கொண்டு புத்தகம் பதிப்பது சிறந்தது. இல்லையேல் புத்தகம் விற்பனையில்லாமல் உங்கள் நாவல் நீங்களே மற்றவருக்கு இலவசமாக தர நேரிடும்.
புத்தகம் பதிப்பிக்க நிறைய பதிப்பகம் உள்ளது. கூகுளில் தேடிப்பாருங்க. இந்த எழுத்தாளர் தான் இங்கே புத்தகம் போடறாங்க. அப்ப நம்பர் கிடைக்கும்னு நினைக்காதிங்க. உங்க போன் நம்பரை எப்படி உங்க அனுமதி இல்லாம மற்றவருக்கு தர கூடாதோ. ஆதே போல தான் பதிப்பகத்தார் எண் எல்லாருக்கும் எல்லாரும் தர கூடாது. சம்மந்தப்பட்டவர்களுக்கு இன்னார் மூலமாக இந்த எண் பகிரப்பட்டது என்றால் அவப்பெயரே எஞ்சி நிற்கும்.
அவரவரது பசிக்கு அவரவர் தான் உணவை தேடி செல்ல வேண்டும். அது போல அவரவர் முயற்சி மட்டுமே வெற்றியை தரும். மீன் பிடிக்க தான் கற்றுக்கொடுக்கப்படும். மீனையே தரமாட்டார்கள்.
-🙏