அத்தியாயம்-22
“என்னோட மேரேஜ்னால நான் பேஷண்ட் கவுன்சிலிங் டைமை க்ளேஸ் பண்ணிட்டேன்…”
சார்லஸ் சொன்னதும்… அறை முழுக்க அமைதி விழுந்தது.
சாரா அங்கேயே நின்றாள்.
அவளது உள்ளம்… மெதுவாக சுருண்டது. ‘நம்மட விவாகம் உங்க கெரியருக்கு இடைஞ்சலா சாரே?’
அந்த எண்ணம் அவளை உள்ளிருந்து திண்றது.
சார்லஸ் தண்ணீர் குடித்து விட்டு சுவரை பார்த்தபடி நின்றான்.
அவன் இன்னும் ஜோஸப்பிலிருந்து வெளியே வரவில்லை. சாரா மெதுவாக அருகே வந்தாள்.
“டாக்டர் சாரே…” என்றவளின் குரல்… மெதுவா… ஒரு நடுக்கக்துடன் அழைத்தது.
சார்லஸ் அவளை பார்த்தான்.
“நான்… நிங்களிடம் ஒரு விஷயம் சம்சாரிக்கலாமா…?” என்றதும் அமைதியாக தலையசைத்தான்.
“நம்மட விவாகம்… உங்களுக்கு ஜோஸப் விஷயத்தில் டிஸ்டர்ப் ஆயிடுச்சோ…?” என்றவளது கேள்வி சார்லஸை நேராக குத்தியது.
அவளே இப்பொழுது தான் தட்டுதடுமாறி மனதில் பல உளைச்சலை, அழுத்தத்தை சந்தித்து மீண்டுயிருக்க, தங்கள் திருமணம், அதனால் இடையூறென கூறி மனதை நோகடிப்பானேன் என உடனைடியாக மறுத்தான்.
“ஏ சாரா… நான் சொல்ல வந்ததை தப்பா புரிந்துக்காத. சில பேஷண்ட் கேஸ் சம்மரில இப்படி அப்போஸிட்டா நடக்கும். நானே பார்த்திருக்கேன். என்ன அதுபோல நடக்கறப்ப அவங்க வேற டாக்டர்ஸிடம் கருத்து கேட்க மாறியிருப்பாங்க. இல்லைன்னா யாரோ ஒருத்தரா தான் எனக்கு தெரிந்திருப்பாங்க. இவன் ஜோஸப் நம்ம சர்ச்ல ரெகுலரா பார்க்கறவன் ஆச்சே” என்று அவள் கையை பிடித்தான்.
“இல்லா… நிங்கள் நம்ம விவாகம் நடந்ததும் பேஷண்டை கவனிக்கில்லானு பறைஞ்சது” என்று கூறவும், “நீ என்ன பேசறேன்னு உனக்கு தெரியுமா…?” என்றான். அவள் கண்களில் கண்ணீர் நின்றது.
“லிசன் ஒரு டாக்டர் லைப்ல, எல்லா பேஷண்டையும் காப்பாற்ற முடியாது. அது இயல்பு. ஒரு பேஷண்ட் உயிர் பிழைக்கலைன்னா அதுக்கான காரணம் டாக்டர் மட்டும் இல்ல.” என்றவன் அவளது முகத்தை கை கொண்டு உயர்த்தினான்.
“ஜோஸப் கேஸ்ல… அவன் தான் கிவ் அப் பண்ணிட்டான். வில்லியம்ஸ் ஹாஸ்பிடல்ல வச்சி பார்த்தா, ஊர் உலகம் இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு பயந்து, கன்சல்டிங் கூட ரெகுலரா வாரம தவிர்ததவர். “நான் இல்லா.” என்று சாரா மெதுவா பார்த்தாள். அவள் இன்னும் முழுசா நம்பவில்லை என்றதும், சார்லஸ் சிரிக்க முயன்றான். ஆனா சிரிப்பு வரவில்லை.
“நீ என்ன நினைக்கறேன்னு எனக்கு தெரியும்… நம்ம கல்யாணம்… நடக்காம நான் பேஷண்ட் க்ளினிக்னு இருந்தா அவன் உயிர்பிழைத்திருப்பான்னு. நினைக்கற. ஆனா உண்மை என்னன்னா… எல்லா டாக்டர் லைப்லயும் பெர்சனல் உண்டு. பெர்சனலை தாண்டி சமூகத்துக்கு பார்க்கற டாக்டர்ஸ் நேரம் குறைவு.
நான் துகிராவை மறக்க நினைச்ச காலம் அப்ப இந்த ஜோஸப் கேஸ் வந்துச்சு. ஆக்சுவலி அவனுக்கு சொல்லற முறையில நானே எனக்கு செல்ஃப் கவுன்சிலிங் பண்ணியது போல சிலது இருந்தது. ‘காதல் இல்லைன்னா வேற வாழ்க்கை இல்லையா? அப்பா அம்மாவுக்காக பாரு, உனக்குன்னு ஒருத்தி ஏஞ்சல் போல வெள்ளை உடையில் மணக்க வருவா. அவ உன் வாழ்க்கையை மாத்துவானு’ நிறைய அவனிடம் பேசினேன். அதென்னவோ கண்ணாடியில பேசிப்பது போல இருக்கும்.
அந்த நேரத்துல ‘உங்களுக்கு காதல் தோல்வி இருந்து, ஒரு பொண்ணை, உங்க வீட்ல மணக்க புஷ் பண்ணினா கல்யாணம் செய்விங்களா’னு ஜோசப் கேட்டான். அதுக்கு நான் ‘செய்வேன்.. என் அப்பா அம்மாவுக்காக கல்யாணம் செய்துப்பேன்னு சொன்னேன்.
அப்ப அதே நேரம் மெர்ஸி, எங்கம்மா அப்பா, சர்ச்ல உன்னை மணக்க கேட்டாங்க. ஏன் காதல் தோல்வி இருந்தா இன்னொரு பொண்ணை மணக்க முடியாதா… மூவ் ஆன் பண்ணறது தானே வாழ்க்கை. அதை நாம கடைப்பிடிக்க முடியாதா? ஜோசப்புக்கு அட்வைஸ் பண்ணியது ஈஸியா இருந்ததேனு சம்மதிச்சேன். அதனால தான் மூவ் ஆன் ஆக முயன்றேன்.” அவன் அவளது நெற்றியில் மெதுவா முத்தமிட்டான்.
“நீ இல்லனா… நான் இப்போ இந்த மாதிரி ஸ்ட்ராங்கா நிக்கவே முடியாது சாரா. கிட்டதட்ட ஜோஸப் ஸ்டேட்மண்ட்ல இருந்து ரெக்கவர் ஆனவன் நான்” என்றதும் சாரா உடம்பே உறைந்து போன மாதிரி நின்றாள்.
சார்லஸ் அவளது மார்பில் தலையை சாய்த்தான்.
“நான் மனுஷன் தான் சாரா… மனோதத்துவ டாக்டருக்கு படிச்சா, என் மனதை நானே திடப்படுத்திப்பான்னு அர்த்தமில்லை. நிறைய… எனக்கு நானே தைரியம் சொல்லி, இந்த பிரபஞ்சத்தில், துகிராவுக்கு இஷான் தான் பொருத்தம்னு முடிவுக்கட்டி, எனக்குனு ஒருத்தி வருவா, அவளை உயிருக்கு உயிரா காதலிக்கணும்னு தேற்றிக் கொண்டதுக்கு ஜோஸப்பும் ஒரு காரணம்.” என்று சாரா முழுக்க மாறினாள். அவள் மெதுவாக சார்லஸ் தலைமுடியை வருடினாள்.
“டாக்டர் சாரே… நிங்கள் தோற்றே இல்லா.. நிங்கள் தியாகத்திற்கு உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாய் அமையும். ஒரு உயிரை காப்பாத்த முடியலன்னா… அது தோல்வி இல்லா.. அவனோட காலம் முடிஞ்சு போயிருக்கும். நிங்கள் என்னிடம் பறைஞ்சது போல…
கிரேஸ் உயிருக்கு நான் காரணமில்லானு பறைஞ்சது போல… இது விதியாக்கும். ஆண்டவருக்கு ஜோஸப்பை அதிகமாக விருப்பம் கொள்ளவும், ஆண்டவன் அந்த ஆன்மாவை ஏற்றுக்கொண்டார். ஈ..பிரபஞ்சத்தில் அவ்-உயிர் இருந்து சாதித்தது பேதும்னு கடவுள் நினைத்திருக்கார்” சார்லஸ் மெதுவாக அவளை பார்த்தான்.
அவள் கண்களில் இருந்தது,
பயம் இல்லாமல், இம்முறை நம்பிக்கை கூடியது.
“நீங்க… எத்தனை பேரை வாழ வச்சீங்க அது தான் உங்க வெற்றி. அது தான் கர்த்தர் பலனா நமக்கு நல்லது தருவார்.” என்று அவள் போசவும், சார்லஸ் அந்த வார்த்தையை கேட்டு சில விநாடிகள் பேசவே இல்லை.
அவன் மெதுவாக அவளை தன்னிடம் இழுத்தான்.
“நீ என்ன… இவ்வளவு மெட்சூர்டா ஆயிட்டே” என்று ஆச்சரியப்பட்டான்.
“நான்… உங்க பொண்டாட்டி தானே… ஒரு போலீஸ்காரன் பொண்டாட்டி தைரியமா இருக்கணும். டாக்டர் சார் பொண்டாட்டி நான். மனதிடமா இருக்க வேண்டாமா. அதே.. நான் மாறியது” என்று அவள் மெதுவா சிரித்தாள்.
அந்த சிரிப்பு, அவன் இதயத்தை மென்மையாக மாற்றியது.
சாராவை பார்த்து அணைத்து நின்றவன் “இன்னிக்கு ஹாஸ்பிடல் க்ளினிக் இரண்டு இடத்துக்கு நான் போவேனா… இல்ல லீவ் எடுக்கலாமா?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்.
“ஹாப் டேவில் ஹாஸ்பிடல் போங்க” என்றவள் உடனே சொன்னாள். சார்லஸ் ஆச்சரியமா பார்த்தான்.
“ஜோஸப் போல இன்னொருத்தன்… மனதைரியம் பெற, குழப்பமான மனநிலையை உங்களிடம் சொல்லி, மனம் தெளிய காத்திருக்கலாம்.” என்றதும் சாதாரண மனிதன் என்றதிலிருந்து டாக்டர் என்ற கண்ணோட்டத்தில் அவளும் விசாலமாக பார்வையிடுவதில் நிம்மதி பிறந்தது.
“சாரா… ஜோஸப்போட கல்லறைத்தோட்டம் போகணும். தயாராகு” என்றதும் மாலை மந்தமான ஒளியுடன், மேகம் மூடிய வானத்துடன் மழை வரப்போற மாதிரி காற்றை வீசி, மெதுவாக ஒலித்தது.
ஜோஸப்பின் உற்றார் உறவினார் நண்பர்கள் என்று வில்லியம்ஸ் வரவழைத்து, பாதர் வீட்டுக்கு வந்து ஜெபங்கள் நடைப்பெற்றது.
பெரும்பாலும் ஜோஸப்பின் நல்லவைகளை பகிர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் புகழுரைத்தனர்.
தபித்தாள் மகன் ஜோஸப்பின் உடலை மூடிய கண்ணாடி சட்டத்தின் மேல் தழுவியபடி வெறித்து நின்றார்.
வில்லியம்ஸ் தான் வந்தவர்களிடம் மகனுக்கு வைத்தியம் பார்த்ததில் ஏற்கவில்லை என்று மழுப்பினார்.
மகன் டிரக் யூஸ் செய்து, அது மருத்துவ சிகிச்சைக்கு உண்டான கெமிக்கலோடு கலந்து இறப்பை நிகழ்த்தியதை, மறைக்க முயன்றார். ஆனாலும் ஐய்யப்பனிடம் பணிப்புரிந்த சில நர்ஸ் மூலமாக ஜோஸப் விஷயம் கசிந்தது.
காதல் தோல்வியும் அதை தொடர்ந்த, சூசைட் அட்டம்ட், போதை சூழ்ந்த பாதை, இதெல்லாம் ஜோஸப் இறப்பில் பேசும் பொருளாக மாறி ஐயப்பனின் சிகிச்சை முறையை காப்பாற்றியது.
வெள்ளை பெட்டியில்
ஜோஸப்பின் உடல் மூடப்பட்டிருக்க, சார்லஸ் முன்னால் நின்றிருந்தான். அவன் மட்டுமல்ல நிர்மலா, மோஸஸ் கூட வந்திருந்தனர்.
அத்துடன் சர்ச் நண்பர்களும் வந்திருந்தனர். ரிச்சர்ட் ஸ்டெல்லாவும் கூட வந்திருந்து ஓரமாய் இருந்தனர்
சார்லஸ் முகம் அமைதியாக இருந்தாலும் அந்த அமைதிக்குள் இவர்களை கண்டதும் லேசான புயல் உருவானது.
சாரா… தூரத்திலேயே நின்றாள். அவள் வரவே தயங்கினாள்.
ஜோஸப் முகத்தை பார்த்து, ‘காதலை தாண்டி அப்பா அம்மாவிற்காக வாழு ஜோஸப். போதைப்பொருள்கள் எதையும் எடுத்துக்காதே என்று கூறி, தானும் உன்னை போல ஒரு இறப்பை தன்னால் நிகழ்ந்ததாக கூறி தடுமாறிய பெண் சிகிச்சை எடுத்தவள் என தெரிவித்து ஜோஸப் குணமாவதை காண எண்ணியவளுக்கு ஜோஸப் சவமாக படுத்திருக்க தாங்க முடியாது நின்றாள்.
பாதார் கூட்டு பிரார்த்தனை தொடங்கினார்.
“மண்ணில் இருந்து வந்தவன்…
மண்ணிலே திரும்புகிறான். கர்த்தரை இனி என் மகனை அணைத்துக் கொண்டார். ஜோஸப் கர்த்தரின் நாமத்தில் மோட்சம் அடையட்டும்” என்று ஜெபிக்க ஒவ்வொரு வார்த்தையும்
அங்கே இருந்தவர்களின் நெஞ்சை குத்தியது. ஒரு சில மணி நேரம் ஜோஸப்பிற்கான பிரார்த்தனை தொடர்ந்தது.
வில்லியம்ஸ் மண்ணில் விழுந்து அழுதார். “என்ட மொனே…
ஒரு தடவை மட்டும் கண் திறந்து பாருடா.” என்றார் தபித்தாள்…
தபித்தாளின் கண்ணீரே ஓசை இல்லாத அலறலாக அவ்விடத்தில் ஒலித்தது.
பெட்டி திறக்கப்பட்டதும், ஜோஸப்பின் முகம், உயிரில்லாத அமைதியில் மற்றவர்களையும் அமைதியாக்கியது.
சாரா தூரத்திலிருந்து பார்த்தாள்.
அவளது விரல்கள் நடுங்கின.
‘ஜோஸப்பிற்கு வாழணும் னு ஆசை வந்திருக்கலாம். அவசரப்பட்டு போதையின் பிடியிலயும் கால் பதிச்சிட்டான்’ என்று
அவள் கண்களும் கலங்கின.
சார்லஸ் மெதுவாக முன்னே சென்றான். ஒரு நொடிக்கு குறைவாக ஜோஸப்பை பார்த்தான்.
அந்த பார்வையில் கோபமும், வேதனையும் இருந்தது.
நேசம் கலந்த பார்வையாக, ‘இடியட் வாழ்ந்து பார்த்திருக்கலாம்லடா. எனக்கு சாரா கிடைத்தது மாதிரி ஒருத்தி வந்து உன்னை நேசித்திருப்பா.’ என்றவன் உதடுகள் மட்டும் உச்சரித்து நகர்ந்தது.
மண்ணில் குழி தயாராகவும்,
பெட்டி மெதுவாக கீழே இறக்கப்பட்டது.
கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டார் பாதர். தூசி தூசியாக மண் விழுந்தது. லேசான அந்த ஒலி அங்கே இருந்த ஒவ்வொருத்தரின் இதயத்தில் விழுந்தது. வில்லியம்ஸ் கட்டுப்பாட்டை இழந்தார்.
“என்னை விட்டுட்டு போகாதடா” என்று கூற சார்லஸ் உடனே அவரை தாங்கினான்.
அந்த நேரம் அவன் டாக்டர் இல்லையே. ஒரு மனிதனாக மாறியிருந்தான். சாரா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
அவள் மெதுவாக கண்களை மூடினாள்.
“கர்த்தரே… ஜோஸப்புக்கு அமைதியை தாரும்…” என்று முதன்முறையாக
ஜோஸப்புக்காக பிரார்த்தித்தாள்.
மண் முழுக்க உறவுகளால், சர்ச் நண்பர்களால் மூடப்பட்டது.
ஒரு சிலுவை வைக்கப்பட்டது.
‘ஜோஸப் வில்லியம்ஸ்’ என்ற அந்த பெயர், இனி ஒரு கல்லில் எழுதி வைக்க மட்டும். முழு உடலும் ஆன்மாவும் கர்த்தரின் பாதம் பணிந்துவிட்டதே.
சார்லஸ் அங்கிருந்து திரும்பும்போது, மற்றவரிடம் பேசிக்கொண்டிருக்க, நிர்மலாவிடம் ஸ்டெல்லா பேசும் போது, சார்லஸ் சாரா தனி வீட்டிலிருப்பதை கேட்டு வருத்தமுற்றார்.
“என்ன செய்யறது ஸ்டெல்லா.. கல்யாணம் ஆனவங்க தனி வீட்டில் வாழறதும் நல்லது தானே” என்று மோஸஸ் பேசவும் நிர்மலா கணவரை கண்டு முகம் திருப்பிக் கொண்டார்.
ரிச்சர்ட் கூட போனா முறை ஸ்டெல்லா பேசியதை வீட்டுக்கு சென்று அறிந்தவர் சற்று கடுமையாக திட்டினார் எனலாம்.
‘காத்தேலிக் கிறிஸ்தவன் ஒருவன், பாதரியரிடம் பாவமன்னிப்பு கூண்டில் தனது தவறை கூறி மன்னிப்பு கேட்டால், அந்த தவறை அந்த பாதர் வேறு யாரிடமும் கலந்து பேச மாட்டார். மன்னிப்பை மட்டுமே வழங்குவார். அது போல டாக்டரிடம் வரும் பேஷண்டின் ஹிஸ்ட்ரி எல்லாம் அடுத்தவரிடம் கூறக்கூடாது. ஸ்டெல்லா மூலமாக சாரா மெடிக்கல் ஹிஸ்ட்ரி தெரியவும் முதலில் ஸ்டெல்லாவை கண்டித்துவிட்டார்.
வயதானவர் என்பதால் ஸ்டெல்லா அவசரப்பட்டு பேச்சை விடுவித்து விட்டேன் என்று தான் ரிச்சர்டிடம் மன்னிப்பு கேட்டார்.
நிர்மலாவாகவே ‘தனித்து சென்ற கதையை விவரிக்க, ஸ்டெல்லாவோ எதையும் கூறயியலாது, “விடுங்க நிர்மலா.. கர்த்தர் ஆசியுடன் சார்லஸுக்கு ஒரு குழந்தை வந்துட்டா, அது போதும். நமக்கு அடுத்த தலைமுறையை தரும் வாரிசை பெற்று தர்றவ தான் மருமகள்.
அதை தவிர்த்து அவளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். சார்லஸ் சாரா சந்தோஷமா இருந்தா போதும் தானே” என்று கூற, நிர்மலாவும் அதை உள்வாங்கியவராக, சார்லஸுக்கு பிடித்தால் போச்சு. அவனுக்கென ஒரு வாழக்கை இனிதாக அமையட்டும்.’ என்றெண்ணினார்.
சாரா நிர்மலாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
அவள் சார்லஸ் கையை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டாள்.
-தொடரும்.
