Skip to content
Home » பிரியமானவளின் நேசன் 4

பிரியமானவளின் நேசன் 4

நேசன் 4

மறுவீடு சடங்கிற்கு வந்தவர்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்றனர் தமிழினி சேந்தன் தம்பதியர். புதுமண தம்பதியருக்கு சிற்றுண்டி உபசரித்து நன்கு கவனித்தனர்.


“இஷா மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போடாமா. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” சேந்தன்.


முதல் முறையாக அவனவளின் அறைக்குள் நுழைந்தவன் விசாலமான அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும் புத்தகங்கள் தாங்கிய நூலகம் பார்த்து அவள் புத்தகப் பிரியை என்பதை உணர்ந்தான்.

சாளரத்தின் அருகில் ஒரு மேஜை இருக்க அதில் ஒரு ஓரமாக சின்ன சின்ன பச்சை செடிகளும் பூச்செடிகளும் குட்டையும் குட்டியுமாக வைத்திருந்தாள்.

அவள் தீட்டிய ஓவியங்கள் சுவற்றை அழகு படுத்தி தழுவியிருந்தன. இயற்கை காட்சிகளும் அவள் செல்லமாக வளர்க்கும் அஃறிணைகளையும் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

படுக்கையை ஒட்டி துணிகளை வைக்கும் அலமாரியும் மறுபக்கம் ஒப்பனை செய்ய பெரிய கண்ணாடியும் இருந்தது. சுற்றி பார்த்தவன் படுக்கையில் அமர்ந்த படி


“ம்ம்ம் ரூம் நல்லா இருக்கு. பட் செட்டிங்ஸ் தான் செட்டே ஆகல”


“என்ன செட்டிங்ஸ்?”


“ஒரு பக்கம் புக்ஸ் வச்சிருக்க அது கூட ஓகே. இது என்ன? ரூம் உள்ள யாராவது செடி நட்டு வைப்பாங்களா? ஆங் ஆ..ஆ.. ஏய் சூசூ என்னதிது”

அவன் பேசிக்கொண்டிருக்கும் போது நைஸாக உள் நுழைந்த ரோஜா அவன் கால்களை நாவால் வருடி விட்டாள். திடிரென்று கணுக்காலில் ஏதோ ஈரப்பதம் உணரவே குனிந்து பார்த்தவன் அலறியபடி மெத்தையில் எம்பி குதித்து கால்களை மேலே தூக்கிக் கொண்டான்.


“ஏன் கத்துரீங்க நேசன்? ரோஜா இங்க வா. அப்புறம் உன்னையும் ஏதாவது பண்ணிட போறார்”

என்று அவளை தூக்கி மேஜையில் உட்கார வைத்தவள் எலும்பு வடிவ கால்சியம் பிஸ்கட் எடுத்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டு மெத்தையில் ஏறியவள் சாப்பிட்டு நடையைக்கட்டினாள். நேசன் தான் வழியின்றி இறங்கி நின்றிருந்தான்.


“நான் ஒன்னு சொல்லவா பிரியா? யூ ஆர் அன்பிலிவபுள் டிஸ்கஸ்டிங் யூ னோ” என்று அவளது செய்கைகளை வெறுத்தபடி பேசினான்.


புருவங்களை உயர்த்தியவள் “ஓ ரியலி… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு பிரியா. உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?னு நீங்க கேட்டீங்களா இல்லை வைல்ட் கோஸ்ட் உங்களுக்குள்ள புகுந்து பேசிச்சானு தெரிலயே?” என்று அன்று நேசன் அவள் கைப்பற்றி சொன்னதை நயனித்து காட்டினாள்.


“ஆங்.. அது அன்னைக்கு உன்னை ரொம்ப பிடிச்சது”


“அப்ப இப்ப பிடிக்கலயா?”


“இப்பவும் உன்னை பிடிச்சிருக்குடி. பட் நீ செய்ரது தான் பிடிக்கல”


“அப்படி என்ன நா..”


“இஷா.. இஷாம்மா.. இந்தா ப்ரெஷ் ஜூஸ்” என்றபடி தமிழினி உள்நுழைந்தார்.


“நீங்க ஏன்மா எடுத்துட்டு வரீங்க? கூப்பிட்டா நான் வரமாட்டேனா?” என்றபடி நேசனுக்கு ஒன்று எடுத்துக் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டாள்.


“தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் சுத்திப்பாத்துட்டே காத்தாட பேசுங்கமா”


‘ம்க்கும் ரூம்ல இருக்க ரெண்டு செடிக்கே தாம் தூம்னு குதிக்கிறாரு. இதுல தோட்டத்துக்கா?’ என்று மனக்குரலில் பேசியவள்


“சரிங்கம்மா”


“சாஷா உன்னை பாக்கனும்னு அடம் பண்றா…”


“நான் வந்து பாக்ரேன்மா”

என்றவள் நேசனை தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் இருக்குமாறு சொல்லி விட்டு சாஷாவைத் தேடி வந்தாள்.


“சாஷா.. என்னடி நான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது. என்னை வந்து பாக்க வரவே இல்லை”


அவளோ முகம் திருப்பிக்கொண்டு ஓர விழிகள் கொண்டு பார்த்தாள். கோவமாக இருக்கிறாளாம். எதுக்குனு தானே கேக்ரீங்க?

இந்த பொடுசு குட்டி ரோஜா உள்ளே வந்தாலே ஞாபகம் இருக்கா? பிரியா கூட பிஸ்கட் கொடுத்தாளே, அதுல ஒன்றை சாப்பிட்டவ இன்னொன்றை சாஷா கிட்டே காண்பித்து பழிப்பு காட்டி சாப்பிட சாஷா பிடிச்சிகிட்டா கோவத்தை.

ரோஜாவோ ‘ய்யாவ் ய்யாவ்’ என்று இசைத்தபடி பிரியவாகினியின் கால்களை கட்டிக் கொண்டு நின்றாள்.


“பொடுசு குட்டி உன் வேலை தானா இது?” என்றவள் சாஷாவுக்கு பெடிக்ரீ பிஸ்கட் எடுத்து வந்து தந்தாள். மீசையை ரொம்ப நேரம் முறுக்கினால் இதுவும் கிடைக்காமல் போய்விடும் என்றெண்ணிய சாஷா வாங்கி உண்டு விட்டு அவள் மேல் தாவி அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இணையாக ஓடி ஆடி என்று விளையாடி களைத்தவள் அவளது மடியிலே அமர்ந்துக் கொண்டாள். அறையில் இருந்த பந்தை எடுத்துக் கொடுத்து விளையாட சொல்லியவள் சமையலறையில் அன்னையை தேடி வந்தாள்.

அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த நேசன் தோட்டத்திற்கு வந்து அங்கு கண்ட காட்சியில் மெய்மறந்து போய் தான் நின்றான். தோட்டம் முழுவதும் வகை வகையான செடிகொடிகளும் வாசனை நிறைந்த செடிகளும் வண்ண வண்ண பூஞ்செடிகளும் பூத்துக் குலுங்கி பூஞ்சோலை தேசத்தின் தனித்தீவாக காட்சியளித்தது.

எல்லாம் ஓர் நொடி தான். விழிகளில் வெறுப்பை ஏற்றியவன் வேண்டாவெறுப்பாக ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.


‘இந்த பசுமையை பாக்க பாக்க என்னவெல்லாமோ ஞாபகம் வந்து கொல்லுது. ஏன் இவளும் என்னை கொல்லாமல் கொல்லுறா ச்ச’ மனதினோரம் பேசியவன் மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

அலைபேசியில் நூதனா அழைத்திருந்தாள்.


“ஹாய் தனா”


“என்னடா மச்சி கல்யாணம் ஆனதும் மறந்துட்ட எங்களை”

மகிழனின் குரல் கேட்க அலைபேசியை உற்றுப்பார்த்து


“ஹலோ” என்றான்.


“என்னடா உன் ஒய்ப் பக்கத்தில் இருகாங்களா” இனியன்


“இருக்கும்டா அதான் பேச கூச்சப்படுரான்” மகிழன்


“பஸ்ட் நைட் கனவுல இருந்தே இன்னும் மீண்டுருக்க மாட்டான் இல்ல மச்சான்” இனியன்


“அடங்குடா அவன பேச விடுங்க” நூதனா


கலந்தழைப்பு (Conference) முறையில் நண்பர்கள் பேசப்பேச நேசனின் வதனம் செந்தாழம்பூவாய் மலர்ந்தது.


“ப்ச் என்னடா உனக்கு” நேசன்


“எனக்கு ஏண்டா கிஸ் கொடுக்கிற?” இனியன்


“டேய் வேணாம் வச்சிரு நானே கடுப்புல இருக்கேன்” நேசன்


“சும்மா இருங்கடா. நேசா அங்கு எதுவும் பிரச்சினை இல்லையே? உங்க லைப் ஸ்மூத்தா போகுதுதானே?” நூதனா


“என்ன சொல்ல தனா. பிரியா ஒரு நாய் வளக்கிறா அது கூடவே விளையாடிட்டு ஆடிட்டு கிஸ்லாம் பண்றா. அது கொஞ்சுறதும் இவ மிஞ்சுவதுமா பாக்க சகிக்கல”


“உனக்கு கிஸ் தரலனு பொறாமையாடா? போயும் போயும் நாய் கூட போய் போட்டி போடுர?” இனியன்


“ஸ்டாப்பிட் இனியா. என்ன பேசுர? நேசா அவங்க இத்தனை வருஷம் அதுகூடவே இருந்து பழகிருபாங்க. சடர்னா விட்டுட முடியாது அது டாக்-க்கும் நல்லது இல்லைடா. முதல்ல ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க ஹனிமூன் பிளான் பண்ணுங்க எல்லாம் சரியாகிடும்” என்று ஆறுதலளித்து அழைப்பைத் துண்டித்தாள் நூதனா.


தோட்டத்தை வலம் வந்தவனை பலவாறு சிந்தனை ஆட்கொள்ள கைகளோ தன்னிச்சையாக செம்பருத்தி செடியின் இலைகளை பிய்த்து பிய்த்து போட்டிருந்தன.


“என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க நேசன்?”

அன்னையிடம் பேசிவிட்டு வந்தவள் கண்ட காட்சி நேசன் இலைகளை பிய்த்து போடுவதை தான்.

அவனோ செவிகளிரண்டும் செவிடானது போல் தன்னுலகில் சிந்தனையின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்க அவனது தோள்களை பிடித்து உலுக்கினாள் பிரியவாகினி.


“உங்களை தான் கேட்கிறேன் என்ன பண்றீங்க? செடியில் இருந்து பஸ்ட் கையை எடுங்க”


அவள் கத்தவும் தான் நடப்புலகுக்கு வந்தவன் பெரிதாக மூச்சை இழுத்து விட்டு தடுமாற ‘இவருக்கு என்ன ஆச்சு’ என்று நினைத்தபடியே ஊஞ்சலில் அமர வைத்தவள் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவன் நிதானமானதும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவள்

“இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? நிஜமாவே நீங்க இப்படி தானா? இல்லை இப்பதான் இதுமாதிரி நடந்துகிறீங்களா?”


“ப்ச் என்ன பண்ணேன் நான் இப்ப?”


“எதுக்கு செடியெல்லாம் இப்படி பிச்சி போட்ருகீங்க?”


‘என்ன சொல்கிறாள் இவள். நான் ஏன் செடியை பிய்த்து போடனும்’ என்று யோசனையுடன் அவள் காட்டிய திசையை பார்க்க அவன் பறித்து போட்ட இலைகள் எல்லாம் மரணத்தை தழுவி காற்றோடு கலந்து பறந்தது.


“இது… நான்.. இல்லை.. தெரியாம தான்”


“பொய் சொல்லாதீங்க. உயிர் மேலே கொஞ்சம் கூட அக்கறை இல்லாத மனுஷன் நீங்க. அன்னைக்கு சாஷாவ எட்டி உதைச்சீங்க. இன்னைக்கு செடியை பிச்சி போடுறீங்க. உயிரோட வேல்யூ தெரியுமா உங்களுக்கு?”


“ஒரு உயிரோட வேல்யூ என்னனு உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும் பிரியா. ஆப்டரால் ஒரு இலையை பிச்சி போட்டதுக்கு இந்த குதி குதிக்கிற. அது என்ன வந்து போராட்டம் பண்ண போகுதா? இல்லை கண்ணீர் வடிச்சிட்டு வந்து உன்கிட்ட ஆவலாதி சொல்லிச்சா?”


“ஓ அப்படியா உயிரோட வேல்யூ தெரிஞ்சவர் தான் அன்னைக்கு அப்படியும் இன்னைக்கு இப்படியுமா நடந்துகிறீங்களா? எக்ஸாட்லி அழலனு உங்களுக்கு தெரியுமா?”

என்றவள் செடியிலிருந்து இலையை பிய்த்து போட்ட இடத்தை அவனுக்கு காண்பித்து


“இங்க பாத்தீங்களா? உங்க உடம்புல இருந்து கையை தனியே பிச்சி எடுத்தா எப்படி ரத்தம் வருமோ அதேபோல் தான் செடிகளுக்கும் ரத்தம் வரும் அதுக்கும் உயிர் இருக்குங்க. இங்க பாருங்க கண்ணீர் விடுது”

என்றவள் காண்பித்த இடத்தில் செடியின் தண்டிலிருந்து நீர் வெளியேறியிருந்தது. அவன் பிய்த்து போட்டதில் கீழே விழுந்திருந்த பூக்களை எடுத்து ஓரமாக வைத்தவள் செடியிலிருந்து புதிய மலர்களை கொய்து அதனை கடவுளின் சந்நிதியில் கொண்டு வந்து வைத்து தியானத்தில் அமர்ந்தாள்.


அவள் பேசியவைகளும் செய்கைகளும் அவனுக்குள் கோவத்தை உண்டு செய்ய தோட்டத்தின் உள் வேகமாக நடந்தவன் வேலிக்காக போட்டிருந்த கம்பியை மறைத்தவாறு வளந்திருந்த பூச்செடியை வெறும் செடி என்று எண்ணி ஓங்கி மிதித்தான்.

பாதத்தை பதம் பார்த்த வேலிக்கம்பி அவனின் கோவத்தின் அளவை செங்குருதி வெளியேறிய அளவில் பறைசாற்றியது.


திடீரென தன் பாதத்தை ஊடுருவிய வலியில் ‘ஆஆ’ என்று அலறினான். அவனின் அலறல் கேட்டு ஓடிவந்தாள் பிரியவாகினி.


காலினை பிடித்த படி தரையில் அமர்ந்திருந்தான். முகத்தில் வலியின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.


“என்ன ஆச்சு?”


“சும்மா காலை அது மேல வச்சேன் குத்திட்டுடி ஆஆ வலிக்குது”


‘நம்புற மாதிரி இல்லையே’ என்று நினைத்தவள் அவனை கைத்தாங்கலாக நடத்தி கூட்டி வந்து ஊஞ்சலில் அமர வைத்து அறைக்கு சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவள் காயத்தை சுத்தப்படுத்தி மருந்து வைத்து கட்டினாள்.


“உங்களுக்கு என்ன ஆச்சுனே புரில. ஏன் இப்படி நடந்துகிறீங்க?”


நேசன் ஒன்றும் பேசாமல் கண்மூடி அமர்ந்திருந்தான். சேந்தனும் தமிழினியும் மருத்துவமனைக்கு அழைத்தும் வேண்டாம் என்று மறுத்து விட்டான்.


மதிய விருந்து தயாராக இருக்க இருவரும் உண்டு விட்டு அறைக்குச் சென்றனர்.


“பிரியா நான் வேணும்னு எதுவுமே பண்ணல”


“அப்ப வேண்டாம்னு தான் பண்ணீங்களா?”


” ———— “


“கணவன் மனைவிக்குள்ள ஒளிவு மறைவு இருக்கக்கூடாதுங்க இருந்தா அது தனித்தனி உறவு தான். நீங்க என்னவோ நினைச்சி மருகுறீங்கனு புரியுது ஆனால் என்னனு தான் தெரியல. கேட்டாலும் சொல்ல மாட்ரீங்க. டூ யூ லைக் மீ ஆர் நாட்?”


“அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன். உன்னை எனக்கு பிடிக்கும் பிரியா”

அவளது நேத்திரங்களை நேசம் நிறைந்த நேயத்தோடு நோக்கியவனின் நேத்திரங்களில் இதழ்களை ஒற்றினாள் பிரியவாகினி.


“ச்சரக் சர்ர்ரக் சர்ர் ச்சரக்”


எங்கிருந்து சத்தம் வருகிறது என்று நேசன் சுற்றி முற்றி பார்க்க பிரியவாகினி நேரே சென்று கதவினை திறந்தாள். அடுத்த நொடி அவள் மீது தாவி பாய்ந்தாள் சாஷா.


“ஹேய்ய் நோ நோ பிரியாஆஆஆ”

என்று கத்திகொண்டே பாத வலியையும் பொருட்படுத்தாது மெத்தையில் இருந்து எழுந்து ஓடி வந்தான். எதற்காக இப்படி கத்துகிறான் என்று பிரியவாகினி திரும்ப, நேசனின் விழிகளில் பயத்தின் சாயல் தெரிய


“ஏய் சூ.. சூ.. போ நாயே அங்க.. என் பிரியாவை விடு போ நாயே.. சூ சூ இங்க வா பிரியா கடிச்சிடும்” என்று விரட்டினான்.


“ஐயோ சாஷா எதுவும் பண்ண மாட்டாங்க”


“இல்லை உனக்கு தெரியாது கடிச்சிடும் கடிச்சிட்டா அப்புறம் நீயும் என்கூட இருக்க மாட்டா நான் மறுபடியும் தனியா இருக்கனுமா?”


“என்ன உளர்ரீங்க?”


“நிஜமாதான் சொல்றேன்” என்றவன் அவளின் தோளில் மயங்கி சரிந்திருந்தான்.


மறுவீடு விருந்து முடிந்து நேசனின் வீடு திரும்பிய பின் வழக்கத்துக்கு மாறாக அவர்களது அறைக்கு பக்கவாட்டில் இருந்து நேசன் வருவதை பலமுறை கண்ட பிரியவாகினி அன்று அது வெறும் சுவரல்ல தங்கள் அறையை போலான இன்னொரு அறை என்று தெரிந்துக் கொண்டாள்.


பிரியமானவள் வருவாள்…

3 thoughts on “பிரியமானவளின் நேசன் 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *