Skip to content
Home » ப்ரியமானவளின் நேசன்-8

ப்ரியமானவளின் நேசன்-8

நேசன் 8

“அம்மா”

என்று பதறியபடி மருத்துவமனைப் படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்தமர்ந்தான் ருத்ரநேசன்.

“என்னாச்சுப்பா? அம்மா இங்க தான் இருக்கேன்”

என்றவாறு அலர்விழி ருத்ராவின் அருகில் வந்து நின்றார்.

“ம்மா.. ம்மா க்ரேஸ் எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு? எங்கே இருக்கா? நான் பாக்கனும் உடனே”

“ருத்து நீ நல்லா இருக்கியா? இப்ப நீ எங்கேயும் போக வேணாம் ருத்துண்ணா. பஸ்ட் ரெஸ்ட் எடு. இப்ப உனக்கு எப்படி இருக்கு?”

படபடப்புடன் வினவினான் நேசன்.

“நீ எப்படா பெரிய மனுஷனான? கொஞ்சம் நாளா எல்லாம் மறந்து போய் இருந்தேன் தான் ஒரேயேடியா மறந்திடல. நீ இப்ப உன் ஒய்போட தானே இருந்திருக்கனும். இங்க என்ன பண்ற?”

முறைத்தவாறு அழுத்தமாய் வினவியவனிடம் என்ன பதில் சொல்வது என்று நேசன் முழிக்க அலர்விழி உணர்ச்சிகளின் பிடியில் கண்ணீர் மல்க,

“என் தங்கம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா? எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா? அம்மாவ தெரியுதா? இங்க பாருப்பா அப்பா உன்னை நினைச்சி நினைச்சி தேய்ஞ்சி போய் நிக்றாரு பாரு தெரியுதா?”

என்று மொழிந்தபின்னே நேசனும் உணர்ந்தான் ருத்ரன் சொன்னதன் அர்த்தத்தை.

பூங்காவில் நேசனும் பிரியவாகினியும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அந்நேரத்தில் நனியினிக்கு அலைபேசி அழைப்பு வரவே எடுத்து பேசியபடி முன்னே செல்ல, ருத்ரனும் சாஷாவுமாக பேசி விளையாடிய படியே நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்குப் பறந்து வந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை பார்த்ததும் ஆவல் துளிர்த்திட அதனை பிடித்திட முனைந்து அதன் பின்னே ஓடினான் ருத்ரா.

அவனோடு சாஷாவும் ஓடினாள். சாலையருகே வரவும் வாகனங்களைக் கவனிக்காது கடந்து மறுபக்கம் சென்றவன் வணணத்துப்பூச்சியைக் காணாது மீண்டும் பூங்காவை நோக்கி திரும்பி வரும் போது கவனமின்றி நிற்க, ஓர் வாகனம் விரைவாக வருவதைப் பார்த்த சாஷா பெருங்குரலெடுத்து குரைத்து ஒலியெலுப்பி நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி வருவதைக் கண்ட ருத்ராவை பயமும் பதற்றமும் கடந்து போன எண்ண அலைகளும் மாறி மாறித் தாக்க அதிர்ந்து செய்வதறியாது நின்றிருந்தான்.

சாஷா குரல் கேட்கவும் நேசனும் பிரியவாகினியும் நனியினியும் திரும்பிப் பார்த்து வருவதற்குள் சாஷா ருத்ராவின் மேல் பாய்ந்து அவனைத் தள்ளிக் கீழே விழ வைத்தது.

வேகமாக வந்த வாகனமோ சாஷாவின் மீது மோதித் தள்ளி வேகமாக சென்று மறைந்தது.

செங்குருதி ஓட சாஷாவின் விழிகள் கண்ணீருடன் ருத்ராவை ஒரு முறைப் பார்த்து பிரியவாகினியையும் பார்த்து விழிகளை மெல்ல மூடினாள்.

அவளின் செய்கைகளை செய்வதறியாதுப் பார்த்திருந்த ருத்ராவிற்கு ஞாபகங்கள் அடுக்கடுக்காக வந்து மூளையைச் சூடாக்க தலையைப் பிடித்தபடி மயங்கிச் சரிந்தான்.

நேசனும் நனியினியும் ருத்ராவையும், பிரியவாகினி சாஷாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

நனியினி வேலைப் பார்க்கும் மருத்துவமனையிலேயே ருத்ராவை அனுமதித்திருந்தனர்.
அவனுக்கு அடி ஏதும் இல்லாதபோதும் மயங்கி விழுந்ததில் மறுபடியும் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கும் என்று பயந்திருக்க ருத்ராவோ பழைய ஞாபகங்களோடு மீண்டு கிடைத்ததும் அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.

“நீ முதல்ல கிளம்பி போடா இங்க எல்லாரும் இருக்கீங்க எனக்கு ஒன்னும் இல்ல ஆனால் அவங்க தனியா இருப்பாங்க அவங்களுக்கு ஆறுதல் சொல்லவாது நீ இருக்க வேண்டாமா?”

என்று ருத்ரா மறுபடியும் கேட்க அங்கிருந்து கிளம்பியிருந்தான் நேசன்.

சாஷாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் பயணித்த வாகினி மருத்துவர் மீராவிற்கு அழைத்துச் சொல்லியிருந்தாள்.

கண்ணணின் மீது தீராத காதல் கொண்ட மீரா தன் வாழ்நாள் முழுவதும் இசைத்துப் பாடி கண்ணனின் மீதான தன் காதலை வெளிப்படுத்தினார்.

இந்த மீராவும் அனைத்து அஃறிணை உயிர்களின் மீதான காதலை தன் நேசக்கண்ணிலே நேசிக்கும் பாங்கினையும் மருத்துவச் சேவைச் செய்து வாழ்வதே தன் வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டு அன்பொழுக மருத்துவம் செய்திடுவார்.

மருத்துவமனைக்கு விரைந்த பிரியவாகினி பயணிக்கும் போதே தகவல்கள் தெரிவித்திருந்ததால் இறங்கும் போதே செவிலியர் அதற்கான ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் பிரியவாகினி. மருத்துவர் மீரா கார்த்திக் சாஷாவிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த நேசன் அவளின் அருகில் வந்தமர்ந்தான். இருவரின் விழிகளும் சந்தித்தும் இதழ்கள் மொழிந்திடவில்லை.

தேவ் அழைப்பு விடுக்க அலைபேசியை ஆன் செய்து பேசினாள்.

“ஹேய் இந்த பிராஜெக்ட் இன்னும் சரியா சக்ஸஸ் ஆகலடி”

“சரிடா பராவல இன்னும் முயற்சி செய்து பாரு சரியா வரும். நாம திறப்பு விழா வைக்க இன்னும் நேரம் இருக்கே”

” ம்ம்ம் சரி உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு? “

“என் வாய்ஸ்க்கு என்ன நல்லா தான் இருக்கு”

” எங்கே இருக்க நீ? “

“ஹாஸ்பிடல்ல… சாஷாக்கு ஆக்ஸிடென்ட்” என்றவள் தேம்பி அழுதாள்.

மறுபக்கம் ஆறுதல் மொழிந்தவன் அலைபேசியை அணைத்திருக்க நனியினி அழைத்திருந்தாள்.

“சொல்லு நனி ருத்ரா எப்படி இருக்கார்? அகைன் ரொம்ப பயபடுராரா?”

“நோ நோ இப்ப அவருக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்துடுச்சு. எழுந்ததும் சாஷாவை தான் கேட்டார். சாஷா எப்படி இருக்கா?”

“ரியலி. கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும். அத்தை ரொம்ப சந்தோஷபடுவாங்க.”

“அப்புறம் உன்கூட வரலனு ஏதும் நினைச்சிக்காதடி என் பேஷண்ட் ருத்துவை பாத்துக்க வேண்டிய பொறுப்பில் வந்துட்டேன்”

“அதலாம் எதுவும் நினைக்கலைடி”

“சாஷாக்கு?”

“தெரிலடி இன்னும் டாக்டர் வெளியே வரல” கரகரத்த குரலில் அவள் பேசுவதை கேட்டிருந்த நேசன் ஆறுதலாக அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

“நல்லதே நடக்கும் சாஷாக்கு எதுவும் ஆகாது தைரியமா இரு. நான் அப்புறம் கூப்பிடுரேன்” என்றவளிடம் சரியென்று அழைப்பை துண்டிக்கவும் மருத்துவர் மீரா வெளியே வரவும் சரியாக இருந்தது. பதற்றத்துடன் எழுந்தவள்

“டாக்டர் சாஷாக்கு ஒன்னும் இல்ல தானே?” என்றிட

“ஹேய் ரிலாக்ஸ் வாகினி. சாஷா நல்லா இருக்கா. ஹெட் அண்ட் ப்ரெண்ட் லெக்ல இன்ஜூய்ர் ஆகிருக்கு. கொஞ்சம் பிளட் லாஸ்தான் பட் நௌ பீல் பெட்டர்”

“ஓகே தேங்க்யூ டாக்டர். நாங்க இப்ப பாக்கலாமா?”

“பெயினுக்கு இன்ஜெக்ட் பண்ணதால தூங்குறா. டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க. இவர் தான் உன் ஹஸ்பெண்டா? சாஷாவை பாக்க எப்படி வந்தார்?” புன்னகையுடனேக் கேட்டிருந்தார்.

“எஸ் மை ஹஸ்பண்ட் ப்ரியநேசன்”

“ஹலோ ப்ரியநேசன். ஜென்ரலா நான் யார் கிட்டேயும் எதுவும் ஷேர் பண்றதுல்லை பட் வாகினி நல்ல மனசை நீங்க புரிஞ்சிக்கனும்னு நான் ஆசைப்படுரேன். வாகினி எல்லா உயிர்களையும் நேசிக்கிறவ. அவளால் யாரையும் ஹர்ட் பண்ண முடியாது”

சிறு தலையசைப்புடன் வாகினியுடனே சென்று சாஷாவைப் பார்த்தார்கள்.

அவளின் ஹேசல் விழிகள் நீரில் பளபளத்தது.

“ஒரு நாய்க்கு எப்படி காப்பாற்றனும்னு தாட் வரும்? நிஜமாவே மிராக்கிள் மாதிரி இருக்கு” நேசனே பொன்னிதழ் திறந்தான்.

“ருத்ராக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் போது சாஷாவும் கூட இருந்தா சீக்கிரமே ரெகவர் பண்ணலாம்னு நனி சொல்லவும் தான் நான் வீட்டுக்கு கூப்பிட்டு வந்தேன். அப்ப நான் அவகிட்ட சொன்னது உன்னால எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். யாரையும் பயபடுத்த கூடாது. இவருக்கு இந்த பயம் இருக்குனு எல்லாம் ஷேர் பண்ணேன். எப்படி புரிஞ்சிட்டோளோ தெரில ஆனால் கரெக்டா நான் சொன்னதை நல்லா அப்செர்வ் பண்ணிருக்கா”

“தேங்க்ஸ் அண்ட் சாரி”

“சாரி?”

“நான் உன்னை தனியா விட்ருக்கக் கூடாது அண்ணா கூட நீ அவங்களோடு தான் இருக்கனும் இங்கு என்ன பண்றனு கேட்டாரு. எனக்கு என்ன பண்ணணே தெரில ரியலி சாரி பிரியா”

“இட்ஸ் ஓகே வாங்க வெளியே உட்காரலாம்”

என்றவளாய் வெளியே வந்தவர்கள் மருத்துவமனை சிற்றுண்டியகத்தில் தேநீர் அருந்தினார்கள்.

இரண்டு நாட்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த ருத்ராவை இனிப் பயப்பட தேவையில்லை சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார் என்று வீட்டுக்கு அனுப்பினர்.

சாஷாவை கூடவே இருந்து பார்த்த பிரியவாகினி நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு சாஷோவோடு வந்து இறங்கினாள். வாசலில் நிற்க வைத்து அலர்விழி ஆலம் சுற்றினார்.
குழந்தையைப் போல தோளில் படுக்க வைத்திருந்தாள் சாஷாவை. இவர்கள் வீட்டிற்கு வரும் முன்னே சேந்தனும் தமிழினியும் வந்திருந்தனர்.

“ஹேய் சாஷூ குட்டி மை கிரேஸ் வந்திட்டியா”

என்றவாறு ருத்ரா அவளைத் தூக்கிட அவனைப் பார்வையிட்டபடியே அவனிடம் சாய்ந்துக் கொண்டாள்.

சாஷா வந்தது தெரிந்தும் கண்டுக் கொள்ளாமல் மெத்திருக்கையில் ரோஜா அமர்ந்து அவள் உண்ணும் சிற்றுண்டி உணவை உண்டுக் கொண்டிருந்தாள். ருத்துவிடம் இருந்து இறங்கியவள் அவள் அருகில் சென்று அமர ரோஜா வாஞ்சையுடன் அவளை அணைத்துக் கொண்டாள். பின் முகத்தை திருப்பி அமர்ந்தாள்.

இத்தனை நாட்கள் தன்னை காணாமல் இருந்ததற்கான செல்ல கோவமாம். இப்ப சாஷா அவள் முகத்தைத் திருப்பி ஊட்டி விட்டாள்.

அஃறிணை தோழிகளின் அன்பில் அனைவரும் மெய்மறந்து அவர்களைப் பார்த்திருந்தனர்.

அதன் பின்னனா நாட்களில் ருத்துவின் மேற்படிப்புக்கான வேலையில் ஈடுபட்டிருந்தாள் பிரியவாகினி. நேசன் அவனது வேலையிலே மூழ்கிப் போயிருந்தான்.

பின் இரவுகளில் வீட்டிற்கு வருவபவன் காலையிலே கிளம்பி சென்று விடுவான்.
பேசினால் தீர்க்க முடியாத விஷயம் இல்லை ஆனால் இவன் பேசவே சந்தர்ப்பம் தராமல் குற்றவுணர்வில் அலைந்துத் திரிந்தான்.

அவனாகவே பேசட்டும் என்று பிரியவாகினியும் அவளது தொழில் தொடங்கும் வேலையில் மனதை செலுத்தியிருந்தாள்.
மேலும் ஒரு மாதம் கடந்த வேளையில் பிரியவாகினியின் நண்பர்கள் அவளை பார்க்கவென வந்திருந்தனர்.

நீரன் தேவ், நனியினி, துகிரா, முகிலிசை, அதழினி ஆகிய ஐவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றினாலும் சிறுவயது முதலே பிரியவாகினியின் நெருங்கிய நண்பர்கள். ஆறு பேர் இணைந்து ஒரு தொழிற்கூடம் அமைப்பது தான் வாழ்நாள் லட்சியம். அதற்கான விதை சிறுவயதிலேயே போட்டு இப்போது விருட்சமாக வளர காத்திருக்கிறது.

அனைவரையும் நீள் மெத்திருக்கையில் அமர சொல்லியவள் பழச்சாறு எடுத்து வந்து தந்தாள்.

“அக்மார்க் ஹவுஸ் ஒய்ப்னு நிரூபிக்ற பாரு. ஜூஸ் சூப்பர்” தேவ்

“ஏண்டா நீ கல்யாணமே பண்ண மாட்டியா?” நனி

“அவள சொன்ன உனக்கு மூக்கு வேர்த்திடுமே”

“ஹே கைய்ஸ் கைய்ஸ் காம்டவுன் இப்ப நாம பேச வந்தது எந்த டேட்ல ஓபன் பண்ணலாம் தானே. அதைப்பற்றி பேசலாம்” பிரியவாகினி.

அவர்கள் திட்டப்படி நேசனின் பிறந்த நாளன்று திறப்பு விழாவை வைக்கலாம் என்று முடிவுச் செய்திருந்தனர்.

நாட்கள் கடந்த நிலையில் பிரியவாகினியின் தொழிற்கூடத் திறப்பு விழா அனைவரையும் ஆச்சரியத்தையும் மகிழ்வையும் தந்தது. அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதற்கான அவளின் மெனக்கெடல்களும் திட்டங்களும் தொழிற்கூடத்திற்கு வைத்த பெயரும் அவளின் நேர்த்தியான திறமையையும் உழைப்பையும் பறைசாற்றின. ரிப்பன் கட் செய்து உள்நுழைந்தவர்களுக்கு இன்னட்டுகளையும் இனிப்புகளையும் வழங்கியவளை வைத்த கண் வாங்காது பார்த்திருந்தான் நேசன்.

பிரியமானவள் வருவாள்…

3 thoughts on “ப்ரியமானவளின் நேசன்-8”

  1. Kalidevi

    nice epi oruthar ethanala bayam vanthathunu therinji crt ah treat pana atha sari panidalam atha vit intha nesan rudra va room laye adachi vachitan ippadi ipo vagini tha atha sari pani iruka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *