தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இப்பொழுது சீனியர் ஒருவரை கூப்பிட்டு வைத்து சார் யாரை நினைத்து இந்த பாட்டை பாடினார் என்று கேட்டவுடன் சீனியர்கள் சிரித்துவிட்டு சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலமா ? என்றவுடன் அது எனக்கும் தெரிகிறது அண்ணா.
சாருக்கு இந்த பாட்டு பிடிக்கும் அவ்வளவுதான் .அவர் நன்றாக பாடுவார். அவர் இந்த பாட்டை பாடும் போது கல்லூரியில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் சாருக்கும் அந்த பாட்டு ஃபேவரிட் என்றாகிவிட்டது.
சார் குரலில் இந்த பாட்டு எங்களுக்கும் ஃபேவரிட் ஆகிறது .இந்த பாட்டை பாட சொல்லி சொல்லுவோம் .
அவ்வளவுதான், மற்றபடி சார் யாருக்காகவும் அந்த பாட்டை பாடவில்லை என்று விட்டு நகர்ந்தார்கள்.
அப்பொழுது தியாவுடன் இருந்த அவளுடைய தோழி தனா அதான் சொல்கிறார்களே அப்புறம் என்னடி என்றவுடன் இல்லையே ..
எனக்கு யாரையோ நினைத்துக் கொண்டு படுகிறது போல் தெரிகிறது.
அவர் யாரையோ நினைத்துக் கொண்டு கூட பாடட்டும் .அது அவருடைய பர்சனல் நமக்கு எதற்கு வாடி என்று தியாவை அழைத்துக்கொண்டு சென்றாள் .
வெல்கம் பார்ட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் பப்ஸ் , டீ பிரியாணி என்று கொடுக்க செய்தார்கள்.
அனைவரும் சாப்பிட்டு கொண்டு எழுந்தார்கள். சாப்பிட்டுவிட்டு ஒரு பெண் தன்னுடைய கையை கழுவ செய்தாள் .
அப்பொழுது அந்த பெண் கை கழுவி கொண்டு தன்னுடைய கையை உதறும் போது நந்தாவின் மேல் பட்டது.
அவனது சட்டையில் ஆங்காங்கே கை கழுவிய தண்ணீர் துளிகள் இருந்தது .அப்பொழுது நந்தா ஏய் என்று கத்த வந்தான் .
அந்தப் பெண் தன்னை பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் சாரி சார் என்றஉடன் சுற்றியுள்ள மாணவர்களும் என்னம்மா இது இப்படி என்று கேட்டவுடன் நந்தா தான் ஒன்றுமில்லை .
கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் .
என்று மற்ற மாணவர்களிடம் சொல்லிவிட்டு அந்த பெண்ணுக்கு முதலில் தண்ணீர் அருகில் உள்ள மாணவனிடம் இருந்து வாங்கி கொடுத்துவிட்டு இது போல் செய்யலாமா ? என்று கேட்டான் .
சார் அது என்று மென்று முழுங்கினாள் ஒன்றுமில்லை மா நீ நியூ கம்மர் என்று தெரிகிறது. இருந்தாலும் இது நல்ல பழக்கமா ?
நீ இப்போதுதான் பள்ளி முடித்து வந்திருக்கிறாய் .இனி நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
“பாட சம்மந்தமாக மட்டும் இல்லை. வெளி உலகத்தைப் பற்றியும் தான் சரியா ?”இந்த மாதிரி கை கழுவிக்கொண்டு கையை உதரும் பழக்கம் இருக்க கூடாது .
உன் வீட்டில் உள்ள பெரியவர்கள் உன்னிடம் சொல்லி இருப்பார்களே ?என்ற உடன் சொல்லி இருக்கிறார்கள் என்று மண்டை ஆட்டினாள்.
அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் உன்னை அதை செய்யாதே ?இதை செய்யாதே ?என்று வேண்டுமென்று சொல்ல மாட்டார்கள் .
ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டும்தான் சொல்வார்கள். அதை நினைவில் வைத்துக்கொள் .
நம்முடைய நன்மைக்காக மட்டும் தான் நம்முடைய பெற்றோர்களோ ,பெரியவர்களோ சொல்வார்கள் .
அதை இனியாவது எதற்காக சொல்கிறார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ள பழகு சரியா ?
இனிமேல் இதே மாதிரி செய்யக்கூடாது . கை கழுவிக்கொண்டு கையை துடைக்க பழக வேண்டும். கர்சிப் எடுத்துக் கொண்டு வந்து கை துடைக்க பழகிக்கொள்.
கர்சீப் எடுத்துக்கொண்டு வரவில்லை என்றால் உன்னுடைய துப்பட்டாவில் கூட துடைத்துக் கொள் என்றவுடன் சுற்றியுள்ள மாணவர்கள் சிரிக்க செய்தார்கள்.
ஏன் துப்பட்டாவில் துடைத்தால் என்ன என்று கேட்டான். சார் இல்லை என்று பேசினார்கள். அது அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் இல்லை .
நம் வீட்டில் அம்மாவோ ,பாட்டியோ இல்லை வீட்டில் இருக்கும் பெண்களோ சமைத்து முடித்துவிட்டு தன்னுடைய முந்தானைகளிலும் நைட்டி போட்டிருந்தால் அதிலும் தான் துடைத்துக் கொள்கிறார்கள்.
அதற்காக அவர்கள் செய்வது தவறு என்று ஆகிவிடுமா ?இது சாதாரண விஷயம் சரியா ?காலங்காலமாக நாம் பின்பற்றக்கூடிய விஷயம் .
வகுப்பு எடுக்கும் ஆசிரியராக இருந்து கொண்டு நீங்களே இப்படி சொல்லலாமா ?என்றவுடன் நான் பாடம் சொல்லி தரும் ஆசிரியர் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு சராசரி மனிதன் என்பது உண்மைதானே.
நம் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றுவது சரியா ?தவறா ?என்பதை யோசிக்க வேண்டும் .
அடுத்தவர்களின் மீது தண்ணீர் படாத அளவிற்கு நம் உடலில் துடைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லையே .
நாம் அன்றன்று உடுத்தும் உடைகளை துவைத்து தானே போட்டு கொள்கிறோம் என்று விட்டு அந்த பெண்ணிடம் சரிமா ஒன்றும் இல்லை .
இனிமேல் இது போல் நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள் என்று விட்டு நகர்ந்தான் .
இவ்வளவு நேரம் நடந்த கொண்டிருந்த அனைத்தையும் சுற்றியுள்ள மாணவர்கள் ,பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
அதேபோல் தியவும் பார்த்து விட்டு என்ன மனுஷன் டா இவரு புது டிசைன் டா சாமி என்று எண்ணினாள்.
அப்படியே அன்றைய பொழுது முடிந்தது.அனைவரும் கல்லூரி முடிந்து அவர்களது வீடு நோக்கி சென்றார்கள் .
அப்போது தியாவிடம் தனா நீ எப்படி கல்லூரிக்கு வந்தாய் ?
பஸ்ஸிலா? வண்டியா? என்றவுடன் வண்டி எல்லாம் கிடையாது. இப்பொழுது தானே கல்லூரி வர ஆரம்பித்திருக்கிறேன்.
பஸ்ஸில் தான் வந்தேன் .என்றதற்கு நான் உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடட்டா? என்று கேட்டதற்கு இல்ல இல்ல அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.
நான் பஸ்ஸில் சென்று கொள்வேன் என்றாள். சரி வா உன்னை பஸ் ஸ்டாப்பில் கொண்டு வந்து விடுகிறேன் என்று விட்டு உடன் நடந்து வந்தாள்.
அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு அவள் தன்னுடைய வீடு நோக்கி சென்று விட்டாள் தனா.
அப்போது தான் நந்தா கல்லூரி முடிந்து தனது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
தியா ரொம்ப நேரமாக பஸ் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டு நின்றாள்.
தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .அவனைப் பார்த்த மாந்திரத்திலே அவளுக்கு அவன் மீது லேசான கிரஷ் உண்டாகியது என்று கூட சொல்லலாம் .
அது அவளது வயதின் கோளராக கூட இருக்கச் செய்யலாம் . அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஓரிடத்தில் நின்று தனது போனை எடுத்துப் பேசினான். ஃபோன் வந்ததால் வண்டியை நிறுத்திவிட்டு பேசுகிறார் என்று எண்ணி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் .
பேசிவிட்டு போனை வைத்தவன். தியாவிற்கு அருகில் உள்ள பூக்கடையில் வண்டியை நிறுத்தினான்.
ஒரு வேளை தான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாரோ ?என்று எண்ணி சிறிது பயந்தாள் .
ஆனால் ,அவன் தியாவிற்கு அருகில் உள்ள பூக்கடையில் நின்று கொஞ்சம் உதிரி பூவும், 2மொழம் மல்லி ,சாமந்தி உதிரிப்பூக்கள் கொஞ்சமும் வாங்கிக் கொண்டான்.
அவன் பூ வாங்கி கொண்டு கிளம்பும் போது சார் என்றாள். தன்னை ஒரு பெண் அழைப்பதை எண்ணி திரும்பி பார்த்தான்.
எதுக்கு பூ என்று கேட்டாள் . நந்தா ஒரு சில நிமிடம் அவளையே அமைதியாக பார்த்தான். என்னை யார்? என்று தெரியவில்லையா? என்று கேட்டாள் .
அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த உடன் நான் நீங்கள் காலையில் என்று ஆரம்பித்தாள் .தெரிகிறது என்னமா என்ன வேண்டும் எதற்காக கூப்பிட்டாய் என்றான்.
“பூ யாருக்காக என்றாள். அவளை அமைதியாக பார்த்தவன் வீட்டிற்கு “என்றான்.
“இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னார்களே ?”என்ற உடன் அவளை குறுகுறுவென ஒரு சில நொடி பார்த்தான் .
அவன் பார்த்த பார்வையில் தியாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.
“திருமணமாகவில்லை என்றாள் வீட்டிற்கு பூ வாங்கி கொண்டு செல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?” என்றான்.
தியா இல்லை என்றவுடன் வீட்டில் இருப்பவர்களுக்கு என்றான்.
சாரி சார் என்றாள். இங்கே என்ன இவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறாய் ? என்றான்.
பஸ்க்கு சார். ஓ எந்த ஏரியா என்றான். அவளும் சொன்னவுடன் பூ கடைக்கார அக்காவை பார்த்தான். இன்னும் 20 நிமிஷம் ஆகும் தம்பி என்றார்.
இன்னும் இருபது நிமிடம் கழித்து தான் பஸ் வரும் அங்கு போய் உட்காரு .இந்த அக்காவிடம் எந்த நேரத்திற்கு பஸ் வரும் என்று கேட்டுக் கொள்.
என்று விட்டு தன் வீடு நோக்கி கிளம்பினான்.
அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்ணாடி வழியாக பார்க்க செய்தான்.
என்ன பொண்ணுடா சாமி ?என்று அவளை எண்ணி ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தான் .