Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 26

மீண்டும் மலரும் உறவுகள் 26

மலர் நந்தாவிடம் தம்பி என்று பேச வருகையில் நந்தா போதும் இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கையெடுத்து கும்பிட்டான்.

சரி என்று விட்டு நந்தா தனது அக்காவையும் ,மச்சானையும் அழைத்து கொண்டு நகர்ந்தான்.

அப்போது தியா வேகமாக கோவிலை விட்டு வெளியே ஓட செய்தாள்.  மலர் தியா தியா என்று கூப்பிட  கூப்பிட நிற்காமல் ஓடினாள்.

நந்தா தான்  உங்க பொண்ண போய் பாருங்க என்று சொல்லிவிட்டு இந்த நேரத்தில் தனியாக விடாதீர்கள் என்றான்.

  மலர் தனது மகளின் பின்னோடு   சென்றார். நந்தா தனது அக்கா மற்றும் மச்சான் இருவரின் தோள் மீதும் ஆளுக்கு ஒரு பக்கம் கையை போட்டு இருவரையும் அழைத்துக்கொண்டு கோவிலை விட்டு வெளியில் வந்தான்.

தியா வேகமாக ஓடியவள். வெளியில் இருக்கும் ஆட்டோவில் ஏற செய்தாள் .

அவளின் பின்னோடு வேகமாக வந்த மலர் அவள் ஏறிய ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்.

தியா தன் தாயை முறைத்துவிட்டு நகர்ந்து உட்கார்ந்தாள் .பிறகு இருவரும் வீட்டிற்கு வந்து இறங்கியவுடன் மலர் தன் கையில் காசு இல்லை என்பதை உணர்ந்து விட்டு இருங்கள் உள்ள போய் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றார் .

அப்போது தியா  தனது தாயை முறைத்துவிட்டு தன்னிடம்  இருக்கும் ரூபாயை எடுத்து நீட்டினாள்.

ஆட்டோ டிரைவரும் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று எண்ணி அமைதியாக தியா  கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டார் .

தியா வீட்டிற்குள் வேகமாக செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்தவுடன் மலர் ஒரு நிமிடம் நின்று விட்டு வீட்டிற்குள் சென்றார்.

தன்மகள் கோவமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு கண்ணம்மா என்று தோளில் கை வைத்தார்.

தியா மலரை முறைத்துவிட்டு தன் மேல் இருக்கும் மலரின் கையை தள்ளிவிட்டாள் .

நான் சொல்றது கொஞ்சம் கேளு என்றார் .எதுவும் பேசாத அமைதியா இரு என்று விட்டு உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாள்.

இங்கு நந்தா மூவரும் கோயிலுக்கு வரும் பொழுது ஒரே வண்டியில் வந்திருந்ததால் தனது அக்கா மச்சான் இருவரையும் வண்டியில் உட்கார வைத்துக் கொண்டு தங்கள் வீடு நோக்கிச் சென்றான்.

மூவரும் போகும் வழியில் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு சென்றவுடன் நந்தா அக்கா என்று தேவியின் கையை தொடும் போது ஏண்டா இப்படி பண்ண என்றார்.

  மாமா என்னம்மா பண்ணினார் என்று உதயா வந்து நின்றான்.
உன்கிட்ட நான் எதையும் மறைக்கணும்னு நினைக்கலையே டா.

அம்மா மாமாவும் மறைக்கணும்னு நினைக்கல .எனக்கு விவரம் தெரியனும் அதுக்காக வெயிட் பண்ணினார்.

நானா உன்கிட்ட எல்லாம் சொல்ற நாள் வரும் காத்துட்டு இருனு தான் சொல்லிட்டு இருந்தாரு.

இப்ப மாமாவா என்கிட்ட சொல்லல .அதை ஞாபகத்துல வச்சுக்கோ .அவர் பேசினதுக்கு மாமா எதுவும் பண்ண முடியாது.

அவர் பேசினா  பேசிட்டு போகட்டுமுனு விட வேண்டியதுதானே.

பேசினா பேசிட்டு போகட்டுமா . என்னக்கா சொல்ற அவரு அப்போ பேசும்போது தான் நான் ஒன்னும் தெரியாம இருந்தேன்.

அப்போ அதுவும் உன் வாழ்க்கை எனக்கு முக்கியமாக பட்டுச்சு .இப்போ தேவையில்லை சரியா ?

உனக்கு தேவை என்றால் சொல்லு இப்ப என்ன நான் ஒதுங்கிக்கிறேன் என்றான் .

டேய் நந்தா என்னடா பேச்சு பேசுற .என்ன வேற என்ன பண்ண சொல்ற.

எப்படி பேசணும்னு சொல்ற .”உனக்கு அந்த மனுஷன் வேணும்னு சொல்றியா ?”

டேய் நான் அப்படி பேசல டா.  ஆனா போதும் நிறுத்துக்கா .ஒரு அளவுக்கு மேல நீ அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க .

அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய் இருக்க இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க வீட்டுக்கு போனத என்கிட்ட நீ சொல்லல.

இல்லடா அன்னைக்கு நான் தெரியாம தான் போனேன். நான் உன்னை தெரிஞ்சு போனேன்னு சொல்லல அக்கா .

சரியா ?தெரியாம தான் போன. ஆனா போயிட்டு வந்த பிறகு சொன்னியா .

இல்ல நந்தா அது என்று விட்டு அமைதியாக இருந்தார் .அக்கா நான் இப்ப அதை பத்தி பேசவும் விரும்பல .

முடிஞ்சது முடிஞ்சு போச்சு சரியா. எப்படி ?என்ன மாமா முடிஞ்சது என்று உதயா கேட்டான்.

இருவரும் உதயாவை  பார்க்க செய்தார்கள் . அந்த ஆளு அவ்ளோ பேச்சு பேசுறாரு.

நீ அமைதியா விட்டுட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்க மாமா என்று கண்ணீர் மல்க கேட்டான்.

டேய் என்று இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் கையை பிடித்தார்கள். வேண்டாம் விடுங்க என்று விட்டு அமைதியாக உட்க்கார்ந்தான் .

டேய் நான் வேண்டுமென்று எதுவும் செய்யலடா .அப்போ என்னோட சூழ்நிலையை கொஞ்சம் யோசி என்றான்.

  என் அக்கா வாழ்க்கைல அந்த ஆள் இல்லைன்னு தெரிந்ததுக்கு அப்புறம் நான் ஏண்டா அந்த ஆள் கிட்ட போய் பேச போறேன் கேக்க போறேன் .

உங்க அம்மா இப்பயும் அந்த ஆள் வேணும்னு கேட்டா .அது உங்க அம்மாவோட முடிவு .அதுல நான் தலையிட மாட்டேன்.

எனக்கு தலையிடுற உரிமை இல்லை. உனக்கு அந்த ஆள் வேணுமா ?வேணாமா? நீதான் முடிவு பண்ணனும் என்றவுடன்  உதயா சிரித்துக் கொண்டே என்ன மாமா பேசுற .

என்னோட வாழ்க்கையில அந்த ஆளு எங்கிருந்த மாமா  வந்தாரு.

என் வாழ்க்கையில எந்த இடத்திலும் அந்த ஆள் கிடையாது. நம்ம மூணு பேரு தான் ஒரு குடும்பம். அதை மறந்துடாத.

உதயா உனக்கு வேணும் வேணாம்னு முடிவு பண்ற உரிமை உனக்கு எப்படி இருக்கோ .

அதே மாதிரி உங்க அம்மா தான் முடிவு பண்ணனும். நம்ப கிடையாது.

நான் வேணும்னு எதுவும் செய்யலடா. இத பத்தி இதுக்கு மேல பேச விரும்பல .

இத பேசி பேசி உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் என்று விட்டு உட்கார்ந்தான்.

தேவி தன் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

அவருக்கு கஷ்டமாக இருந்தது.நந்தா விற்கும் வருத்தம்,வலி இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இதை சந்திப்போம் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

தன் அக்கா அப்படி உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் நந்தா தான் தாங்க முடியாமல் சமையலறைக்குச் சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

அமைதியாக வாங்கிக் கொண்டார். தன் தம்பியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அப்பொழுது அவருக்கு அது தேவைப்பட்டது .

தன் அக்காவை மடியிலும் தன் மச்சானை தோளிலும் தாங்கிக் கொண்டான் நந்தா.

உதயா இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான். மாமா நீ சொன்ன மாதிரி அம்மா எந்த முடிவு எடுத்தாலும் அது அவங்களோட இஷ்டம் மாமா .

என்னோட வாழ்க்கையில அந்த ஆளுக்கு இடம் இல்லை .இதை பத்தி நான் இதுக்கு மேல பேசவும் விரும்பல.

ஆனா இந்த வீட்ல இனிமே அந்த ஆள் பத்தி நாம பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.

நம்மளோட நிம்மதியை  நாம ஏன் அந்த ஆளுக்காக கெடுத்துக்கொள்ள  வேண்டும் .

அந்த ஆள் சரியோ ,தப்போ ,சூழ்நிலையோ எனக்கு தெரியாது.அது  எனக்கு தேவையும் இல்லை என்று தீர்க்கமாக உதயா சொல்ல.

நந்தா சிரித்துக் கொண்டான். தன் அக்காவை பார்த்தான்.

அவர் அமைதியாக இருந்தவுடன் உன்னை  எதையும் யோசிக்க சொல்லல அக்கா.

மனசு போட்டு குழப்பிக்காத  என்றவுடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு உன் மச்சானுக்கு பக்குவம் இருக்குன்னு வச்சுக்கோ .

ஆனா அந்த பொண்ணுக்கு தியாவுக்கு என்றார்.

அக்கா எனக்கு சத்தியமா அவரோட பொண்ணு தான் தெரியாது.

இன்னைக்கு காலைல நான் கோவிலில் பார்க்கிற வரை என்றான்.

தேவி அமைதியாக தன் தம்பியை பார்த்தவுடன் நம்பலையா ?என்றான்.

டேய் உன்ன நம்பாம இல்ல ஆனா தியான்னு   இல்லாம அந்த இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் அந்த பொண்ணுக்குன்னு ஒரு வயசு இருக்குல்ல .

இந்த வயசுல இந்த பொண்ணு எப்படி எல்லாம் யோசிக்கும்.

இப்படி ஒரு விஷயம் தன்னுடைய லைஃப்ல இருக்குன்னு தெரிஞ்சா.

அதை யோசிக்கவே மாட்டியா ?நம்ம வேணாம்னு முடிவு பண்ணி வெளியே வந்துட்டோம்.

அதுக்கப்புறம் அந்த ஆள் வாழ்க்கையில் எப்படி நடந்தா நமக்கு என்னடா வந்துச்சு.

அத தான க்கா நானும் சொல்றேன். வேணாம்னு வெளிய வந்த பிறகு நம்ம வாழ்க்கையை  ஏன் அந்த ஆளு நோண்டிட்டு இருக்கணும்.

நான போய் அந்த ஆளு கிட்ட சண்டை போடவில்லை தானே. நீயும் தான பார்த்துட்டு இருந்த நான் எதுவும் பேசலையே .

அந்த ஆளு பேசுறதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.இருந்தாலும் உதயா பத்தி உன்னை யாரு சொல்ல சொன்னது.

அக்கா அங்க எனக்கு உதயா பத்தி நான் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது .நல்ல நியாபகம் வச்சுக்கோ .

நானா அந்த ஆள  போய் பார்த்து உதயா யாரு என்னனு விவரம் சொல்ல வேண்டிய அவசியமோ,தேவையோ எனக்கு கிடையாது .

அவனுக்கு எல்லாமுமா நீயும் நானும் இருக்கோம். அப்படி தானடா என்றான்.

உதயா தன் மாமாவை கட்டிக் கொண்டான் .அந்த மனுஷன் தான் திரும்பத் திரும்ப பேசினாரு .

அவர் பேச போக தான் நான் பேசினேன் .சரிடா நீ கோவத்துல வார்த்தையை விட்டுட.

ஆனால் இப்போ மொத்தமாக கலங்கினது யாரு யோசிக்கவே மாட்டியா?

மலர விற்று எல்லாத்தையும் ஏத்துக்கிட்டா. ஆனா அந்த பொண்ண பத்தி யோசிச்சியா .என்றவுடன் நந்தா அமைதியாக இருந்தான் .

இப்பொழுது இந்த சூழ்நிலையில் கூட தேவி தியாவை பற்றி யோசிக்க செய்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *