காலை பொழுது நன்றாக புலர்ந்தது. எப்பொழுதும் போல் எழுந்து தியா குளித்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் அறையில் வந்து நின்றாள்.
அவளது கையில் மலர் எதுவும் பேசாமல் டீ காப்பை கொடுத்தார்.
தியா தன் தாயை முறைத்து விட்டு டீ குடித்துவிட்டு , சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
தியா கிளம்பும் போது கண்ணன் அந்த நந்தா விடம் எதுவும் பேச வேண்டாம் என்றார் .
தியா கண்ணனை ஒரு நிமிடம் நின்று முறைத்து விட்டு நான் யாரிடம் பேச வேண்டும், பேச வேண்டாம் என்று முடிவு பண்ண வேண்டியது நான் தான் நீங்கள் இல்லை.
நீங்க யார்கிட்ட பேசுறீங்க, எப்படி பேசுறீங்க என்று நான் முடிவு பண்ணல இல்ல ..
நான் உன்னோட அப்பா என்றார். அப்படியா என்று விட்டு தனது கல்லூரி பையை எடுத்து மாட்டிக் கொண்டு வேகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.
கண்ணன் மலரை அடிபட்ட பார்வை பார்த்தார் .ஆனால் மலர் தனது மாமாவை பார்த்தும் ,பார்க்காதது போல் அமைதியாக இருந்து விட்டார் .
கண்ணன் சாப்பிடாமல் கூட வேலைக்கு சென்று விட்டார் .மலர் இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு செய்த சாப்பாட்டை மூடி வைத்துவிட்டு அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து யோசிக்க செய்தார் .
இதில் நான் என்ன தவறு செய்தேன். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் .இதில் நான் எங்கிருந்து வந்தேன் என்று பலவாறு யோசிக்க செய்தார் .
ஆனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
நந்தா கல்லூரிக்கு செல்லும் வழியில் தியாவை பற்றி யோசித்தான். இவள் கல்லூரியில் எப்படி இருப்பாள் என்று யோசித்தான் .
ஆனால் ,தியா எப்பொழுதும் போல் இருந்தாள். ஆனால் அவளிடம் ஒன்று குறைந்திருந்தது .
அவளது துள்ளல் தனம் .பெரிதாக யாரிடமும் பேசவில்லை . கிளாஸ் எடுக்கும் பொழுது கவனிக்க செய்தாள்.
கல்லூரி முடிந்து கிளம்பும் பொழுது கூட நந்தா அவளை பார்க்க தான் செய்தான். எப்பொழுதும் போல் இருந்தாள்.
அப்படியே கிட்டத்தட்ட ஒரு வாரம் சென்று இருக்கும் .இந்த ஒரு வாரத்தில் பெரிதாக அப்பா, மகள் ,மனைவி மூவருக்கும் பெரிதாக பேச்சுவார்த்தை கூட இல்லை.
இங்கு தேவி தான் நந்தா விடம் தியா எப்படி இருக்கிறாள். காலேஜ் வருகிறாளா?என்று கேட்க .
நந்தா அவள் பழைய மாதிரி இல்ல கா .நானும் காலேஜ் வரேன் என்ற மாதிரி வந்துட்டு போயிட்டு இருக்கா .
கொஸ்டின் கேட்டா பதில் சொல்ற படிப்பில ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா பழையபடி இல்ல .
ஏதோ ஒன்னு குறையுது என்று விட்டு நகர்ந்து விட்டான். தேவிக்குமே சிறிது கஷ்டமாக இருந்தது .
ஒரு வாரம் சென்று இருக்கும் .தேவி நந்தா கல்லூரிக்கு முன்பு அதாவது தியா பஸ் ஏற வரும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.
காலேஜ் முடிந்து பஸ் ஏற வந்த தியா தேவியை அங்கு பார்த்துவிட்டு அமைதியாக நின்றாள் .
தேவி தியாவின் அருகில் வந்து நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு செல்லலாமா ?என்றார் .
தியா ஒரு சில நொடி யோசனைக்கு பிறகு, சரி என்று விட்டு அவர் பின்னாடி வந்தாள் .
தேவி தன்னுடைய ஸ்கூட்டியை வெளியவே நிறுத்தி விட்டு உள்ள சென்று நின்றார் .
தியா வந்தவள் சொல்லுங்க ஆன்ட்டி என்று விட்டு நான் உங்களை ஆண்டி என்று சொல்லலாம் தானே என்று கேட்டாள்.
சொல்லலாம் என்று தேவி சிரித்து முகமாக சொல்லிவிட்டு அவளது தலையை கோதினார்.
தியாவிற்கு கண்கள் கலங்கியது .அவளை அமைதியாக பார்த்தார்.
தன் கண்ணீரை உள்ளே இழுத்து விட்டு ஏதோ பேசணும்னு சொன்னீங்க என்றாள்.
பேசணும் தான் தியா .ஆனா நீ அதை பொறுமையா கேட்கணும் என்ற உடன் நீங்கள் அவரை பற்றி பேசுற மாதிரி இருந்த அத என்னால கேட்க முடியாது என்றாள்.
அவர் இல்ல தியா . உன்னுடைய அப்பா என்பதை உன் மனசுல பஸ்ட் பதிய வச்சிக்கோ.
அவர் தப்பு செஞ்சாருன்னு நீ நினைச்சாலும் சரி .இல்ல எப்படி நினைத்தாலும் சரி என்று தேவி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ..
அது தப்பு இல்ல துரோகம் .பச்சை துரோகம் ,நம்பிக்கை துரோகம் என்றாள் . அவளது கோபத்தை பார்த்தவர்.
அவளை அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருக்கும் வாட்டர் பாட்டில் எடுத்து நீட்டினார் .
அவளும் குடித்துவிட்டு அமைதியாக பார்த்தாள். நான் உன்னோட அப்பாவ பத்தி பேச வரல.
உன்னோட அம்மாவ பத்தி. அவங்கள பத்தி பேச என்ன இருக்கு .நீங்க எப்போ அவரை விட்டு போவீங்க உங்க இடத்தை பிடிக்கலாம் என்று நினைச்சுட்டு இருக்காங்க என்றவுடன் தேவி தியாவை அடிக்க கை ஓங்கினார் .
பிறகு ,கீழே இறக்கிவிட்டு அவ்வளவு தான் நீ உன்னோட அம்மாவ புரிஞ்சி கிட்ட லட்சணம் .
தேவியே அதன் பிறகு உன் அம்மா மேல உனக்கு கோவம் இருக்கலாம் தப்பில்லை.
ஆனா உன் அம்மாவை வெறுத்திடாத . உன் அம்மாவுக்கு நீ என்றாள் அவ்ளோ உயிர்.
நான் உன் அப்பாவோட லைஃப் ல இல்லனு தெரிஞ்ச அப்ரம் தான் உன் அப்பா அம்மாக்கு கல்யாணம் ஆச்சு.
எந்த சூழ்நிலையில கல்யாணம் ஆச்சுனு உனக்கு தெரியுமா? தெரியாதா ?என்று எனக்கு தெரியாது .
எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் உங்க அம்மா உங்க அப்பாக்கு கழுத்த நீட்டனா. சரியா ?
உங்க அம்மா எங்களோட கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க அப்பாவ விரும்பினா.
இருக்கட்டுமே.. அதுக்காக..
நான் சொல்றத முழுசா கேளு தியா. நீ ஒன்னும் சின்ன புள்ள இல்லையே.
உனக்கு எல்லாம் புரியிற வயசு வந்துருச்சுனு நினைக்கிறேன் .
உனக்கு வெளியுலகம் தெரியிற வயசு வந்துருச்சுன்னு நான் நினைக்கிறேன் என்றார்.
தியா அமைதியாக தேவியை பார்க்க செய்தாள் .யாரவது உன் அம்மா பத்தி தப்பா சொன்னா கூட தன்னோட அம்மா நல்லவனு நீ நினைக்கணும் .
ஆனா நீயே ..உன் அம்மாவ தப்பான கோணத்துல பாத்துட்டு இருக்கு என்றார் .
அவரை பார்த்து ஏளானமாக சிரித்தவள். நான் யாரிடமும் என்னுடைய அம்மாவை விட்டு தரவில்லையே ..
அதுக்காக என் அம்மா பண்ணும் எல்லாமே சரின்னு சொல்லி ..அவங்க கூட எல்லா இடங்களிலும் நின்னுட்டு இருக்க முடியாது.
அவங்க கிட்ட தான் அவங்க பண்ணது தப்புன்னு சொல்லி எடுத்து சொல்லிட்டு இருக்கேன்.
கேள்வி கேட்டுட்டு இருக்கேன். அதுக்காக உங்க கிட்ட வந்து ,எங்க அம்மா பண்ணது தப்பு ,இந்த மாதிரி பண்ணி இருக்க கூடாது அப்படின்னு வந்து நான் சொல்லலையே என்றாள்.
தேவி கூட தியாவை பார்த்து சிரிக்க தான் செய்தார் .அப்போது மலரிடம் இருந்து போன் வர செய்தது தியாவிற்கு, போனை எடுத்து பார்த்துவிட்டு எரிச்சலுடனே என்ன இப்போ உனக்கு என்றாள் .
அந்த பக்கம் மலர் அழுகையுடனே எங்கடி இருக்க. நீ எப்பயும் வர பஸுக்கு வரல .எனக்கு ஒரு மாதிரி இருக்கு ..
பயமா இருக்கு கண்ணம்மா .உனக்கு என் மேல தான கோவம். எவ்வளவு கோவமா இருந்தாலும் திட்டுன்னு சொல்லிட்டேன் டி.
இப்படி என்னை பயமுறுத்தாதீங்க. அப்பாவும் பிள்ளையும் ..
ஒரு வாரமா பேசாம இருக்கீங்க .எனக்கு எவ்வளவு வலிக்கும் எல்லாம் யோசிக்கவே மாட்டீங்க இல்ல..
நான் தாண்டி தப்பு பண்ண ஒத்துக்கிறேன். எல்லா தப்பும் நான் தான் .என் மேல தான் சரியா ?
உன் அப்பாவோட வாழ்க்கையில புகுந்ததும் நான் தான் . அவங்களோட வாழ்க்கையை கெடுத்ததும் நான் தான்.
நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியும் நீதான் போதுமா ?நான் பண்ணதெல்லாம் தப்புதான் ..
வீட்டுக்கு வந்து சேரு டி சீக்கிரம். எனக்கு பயமா இருக்கு தியா. உங்க அப்பாவையும் இன்னும் காணம் என்றார் .
ஓவரா சீன் போடத மலரு நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் பஸ் விட்டுட்டேன் அவ்ளோ தான் என்று விட்டு வைத்தாள்.
இந்த பக்கம் தேவியிடம் சிரிக்க செய்தாள் .தேவியுமே சிரித்துவிட்டு உன் மேல உயிரையே வச்சு இருக்கா தியா உன் அம்மா.
உனக்கு உன் அம்மா மேல வருத்தம் இருக்கலாம். ஆனா உன் அம்மா எந்த தப்பும் செய்யல என்று உனக்கு காலம் உணர்த்தும் .
நான் சொல்லி எல்லாம் இப்போ நீ இருக்க சூழ்நிலையில் புரிய வைக்கவும் முடியாது.
நான் என்ன எடுத்து சொன்னாலும் உனக்கு புரியவும் புரியாது. எல்லாமே உனக்கு தப்பா தான் தெரியும்.
நீயா புரிஞ்சுக்கிற காலம் வரும். ஆனா ,உன் அம்மாவை அதை வரை வெறுத்திடாத .அத மட்டும் தான் சொல்லுவேன் .
நீ வெறுக்கிற அளவுக்கு உங்க அம்மா அவ்வளவு பெரிய தப்பு எல்லாம் ஒன்னும் பண்ணல.
அது உனக்கு காலம் பதில் சொல்லும் சரியா ?ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க..
மலரு போன் பண்ணிட்டே இருக்கு. அங்க மலர் பயத்துல இருக்கு என்று விட்டு தனக்கு அடுத்த பஸ்ஸுக்கு டைம் ஆகிறது என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் .
இரண்டு அடி எடுத்து வைத்தாள். நந்தா வந்து நின்றான்.
தியா நந்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள். என்னடா இந்த பக்கம் என்றார் தேவி .
இல்லை க்கா இந்த பக்கம் போயிட்டு இருந்தேன். உன்னோட பைக் நின்னுச்சு அதான் உள்ள வந்தேன்.
நீ எதுக்காக இங்க வந்த என்று கேட்டான் .அவனது பேச்சு என்னவோ தேவியிடம் இருந்தாலும், பார்வை முழுவதும் தியாவிடம் இருந்தது.
அவள் எதுவும் பேசாமல் நகர்ந்தாள். அவள் செல்லும் பாதையை கை காமித்து வழிமறித்து நின்றான் .
என்ன சார் வேணும் உங்களுக்கு, இப்ப என்று கேட்டாள் .எனக்கு எதுவும் வேணாம்.
அன்னைக்கு நான் பேசுனது சரின்னு சொல்லிட மாட்டேன் .நான் பேசின விஷயம் எல்லாம் சரியா ?இருக்கலாம் .
ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை தப்பு .அந்த நேரத்துல நான் அந்த வார்த்தையை பேசி இருக்கவும் கூடாது .
என் மேல தப்பு இருக்கு ஃபர்ஸ்ட் அதுக்கு சாரி கேட்டுகிறேன். இன்னொரு விஷயம் உன்னோட அம்மாவ வெறுத்துறாத..
அப்புறம் இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்லணும் . உன்னோட பழைய துள்ளலும் ,சுட்டித்தனமும் குறைஞ்சு போயிடுச்சு .
இதை நான் எந்த எண்ணத்துலையும் சொல்லல .இவ்வளவு நாளா பாத்துட்டு இருந்த ஒரு பொண்ணு ..
இவ்வளவு நாளாக இருந்தா குணத்துக்கும், இப்ப இருக்க வித்தியாசத்தை மட்டும் தான் இங்க சொன்னேன்.
நீயா ,எதையாவது கற்பனை பண்ணிக்காத ,என்று விட்டு கையை எடுத்தான்.
தியா ஒரு நிமிடம் நின்று நந்தாவின் கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல், சரி ஆன்ட்டி நான் வரேன் என்று விட்டு வேகமாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி நகர்ந்தாள் .
போகும் தியாவையே அக்கா ,தம்பி இருவரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.