Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-14

ராஜாளியின் ராட்சசி-14

அத்தியாயம்-14

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தினமும் பிள்ளையாரை வணங்குவது போல பாவனா அன்றும் இறைவனை வேண்டினாள்.

“கடவுளே அம்மாவுக்கு முன்ன விட உடல்நிலை நல்ல முற்னேற்றமா இருக்குன்னு டாக்டர் சொல்லறாங்க. மருந்துமாத்திரை சிகிச்சை தடையில்லாம கிடைக்க அர்னவ் மட்டும் தான் காரணம்.
கடவுளா உங்களுக்கு நிகரா தான், நான் அர்னவை நினைக்கறேன். இப்ப இருக்கற வேலையும் இடையூறு இல்லாம சுமுகமா போகுது.

இப்ப உன்னை தேடி வந்ததுக்கு காரணம். என் அர்னவ் உடலுக்கு இனி எந்த காயமும் வரக்கூடாது. மனதுக்கு எந்த கவலையும் நெருங்க கூடாது. அவர்… அவர் சந்தோஷமா இருக்கணும்.
இது மட்டும் தான் இனி எப்பவும் கேட்பேன்” என்று இமைமூடி மனதில் உள்ளதை வேண்டிட, தீபாராதனை காட்டப்பட்டது. பொதுவாக இறைவனுக்கு தீபம் காட்டும் போது இமைமூடி வேண்டக்கூடாது. இறைவனை தீபாராதனை ஒளியோடு பிரகாசமாக காட்சியளிக்கும் போது தான்‌ மனதில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
அதனால் இறைவனை கண்குளிர பார்த்தாள்.
தட்டில் பத்து ரூபாய் தாளை வைத்துவிட்டு, பிள்ளையாருக்கு பிளையிங் கிஸ் கொடுத்து நடந்தாள்.

ஷேர் ஆட்டோ பிடித்து வேலை செய்யும் இடம் வந்து சேர்ந்தாள். இந்த இரண்டு மாதம் இப்படி தான் தினசரி பயணம் பாவனாவிற்கு…
பெரும்பாலும் மருத்துவமனையில் காலையில் டாக்டர் வருவதற்கு பத்து பதினொன்று ஆகும்.
ரிஸப்ஷன் பெண்ணாக அந்த நேரம் விடுபட்ட வேலையும் பார்வையிட்டு கணினியை உயிர்பித்தாள்.

அங்கே மருத்துவர் வர தாமதமானாலும், நோயாளி எட்டு மணிக்கே வந்து நிரம்புவார்களே. பாவனா ஏழுநாற்பது வந்து சேர்ந்ததால், டோக்கன் போட ஆரம்பித்தாள்.

 இரண்டு நோயாளிகள் தான் இருந்தனர். பெயர் விவரம் கேட்டு குறித்து கணினியில் பதிவேற்றம் செய்ய, செவிலியர் வந்து பீபியும் மற்ற விவரம் பார்த்தனர். 

அந்த நேரத்தில் சற்று உடல் மெலிந்து தோய்ந்த நடையில், “பாவனா..” என்று கேட்க, “ஆமா.. நீங்ககககக” என்று இழுத்தவள், “சந்.. சந்திரா… அடிபாவி நீயா?” என்று கோபமாய் ஆரம்பித்த வார்த்தை, “ஏய்.. என்னாச்சு உனக்கு?” என்று பதட்டமாய் கேட்டாள்.

சந்திரா கண்ணீரை உகுத்தியபடி, “பாவம் செய்ததுக்கு பலன் பாவனா.” என்று அழுதாள்.
அங்கிருந்த நர்ஸும் மற்ற பேஷண்டும் கண்டு பாவனாவோ, “என்னாச்சு? என்ன பேசற?” என்று மற்றொரு தோழியை பார்த்து, “தெரிந்தவங்க பேசிட்டு வர்றேன். பார்த்துக்கறியா?” என்று கேடடு, சந்திராவை அங்கிருந்த தனிமை பகுதிக்கு அழைத்து வந்தாள் பாவனா.

தனிமை கிடைத்த அடுத்த நொடி சந்திரா அழுத்துவங்கினாள்.

பாவனா பல்லை கடித்து சந்திராவை கண்டால், ஏகத்துக்கு திட்ட வேண்டுமென்று நினைத்திருக்க, இங்கே சந்திராவை பார்த்து பரிதாபமே வந்து தொலைக்கும் விதமாக, நிற்கின்றாள்‌. இதில் கூடுதலாக அழுகை வேறு. அன்னை காவேரி வேறு இவளிடம் இனி பேசாத, நட்பை முறிந்திடு என்றெல்லாம் கூறியிருக்க, பாவனாவோ தன் எண்ணத்திற்கு மாறாக தண்ணீரை புகட்டி முதுகை நீவிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்னாச்சு?” என்று கேட்க, சந்திராவோ “கர்மாவிலருந்து யாரும் தப்ப முடியாது பாவனா. தப்பு செய்தா தண்டனை உண்டு.
வீட்ல பணக்கஷ்டத்துல இருந்தப்ப, வேலைக்கு சேர்ந்தேன். முதலாளிக்கு என் வேலையோட சேர்த்து என்னையும் பிடிச்சிருச்சு. அட்வான்டேஜ் எடுத்துக்க பார்த்தான்.
அவன் கையை தீண்டி, தோளை தடவி, கன்னத்துல தட்டி, பேசிட்டு போறப்ப, இதுல என்ன குறைஞ்சிடப் போறேன்னு இருந்தேன். அதோட பலன் எனக்கு அவன் நிறைய சலுகை தந்தான்.
வேலை ஏனோ தானோனு பார்த்தாலும் திட்டலை, கோபிக்கலை, ஏன் சம்பளத்தை அதிகப்படுத்தினான்.
சும்மாவே ஜம்முனு பணம் கிடைச்சா கசக்குமா என்ன?
ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்போம்னு அவன் தீண்டலை அக்சப்ட் பண்ணினேன்.

ஒரு கட்டத்துல, தீண்டல் தடவல், தேவையை தாண்டி, என்னை அடைய நினைச்சி பிராங்கா கேட்டப்ப, மறுக்கலை. ஏஜ் குறைவான முதலாளி, கிழவனோடவா இருக்க போறோம்னு அப்பவும் சந்தோஷமா கம்பெனி தந்தேன்.

உடல்சுகம், அப்படியொன்னும் கஷ்டமா தெரியலை. சேர்ந்து அனுபவித்தப்ப இன்பமா தெரிந்தது.
ஒரு கட்டத்துல காதலிச்சா லைப் செட்டில்னு கூட நினைச்சேன். ஆனா அவன் மனைவிக்கு தெரிந்து என்னை துண்டிச்சிட்டான்.
ரொம்ப ஒழுக்கமானவனா மாறிட்டான்.
அவன் ஓய்ஃப் வேலை விட்டு தூக்கவும் ஏஜீ கம்பெனில வேலை கிடைச்சது. ஒரு வேலை இல்லைன்னா என்னை மாதிரி அழகான பெண்ணுக்கு வேலையா இல்லை என்று மிதப்புல இருந்தேன்.
அந்த ஜீவன், என்னை பயன்படுத்தினான். பெரிய பெரிய பணக்காரர்களோட வேலை விஷயமா சந்திக்கறப்ப பி.ஏவா போனேன்.
வணிகரீதியான ஒப்பந்தம் முடிந்ததும் தனியா ஹனிமூன் வந்தவங்களா இருந்தோம்.
ஜீவனுக்கு ஒரு கட்டத்தில் ஒரு மாசத்தில் நான் சலிப்பு தட்டினேன். பணம் தந்து மொத்தமா அனுப்பிட்டான்.
ஆனா ஜீவனால் பெரும் புள்ளிகளோட நட்பை நான் மறைமுகமா பெற்றதால் அவர்களோட கம்பெனி கொடுக்க பார்ட்டி செய்ய, இப்படியே என்‌ வாழ்க்கை போச்சு.
அப்படி சந்தோஷமா கஷ்டப்படாம சம்பாதிச்சேன். ஆனா கடைசியா ஒரு சாடிஸ்ட் கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்று அழுதாள்.

சந்திரா இருக்கும் நிலையில் அவளுக்கு ஏதேனும் வரக்கூடாத வியாதி வந்துவிட்டதா என்று பயந்து அவளது கையில் இருந்த வேறொரு மருத்துவமனையின் முந்தைய ரிப்போர்ட் வாங்கி படித்தாள்.

அதில் சந்திராவின் பிரைவேட் பார்டில் பாட்டில் குத்தப்பட்டு, உடைந்து உள்ளுறுப்பு சேதமடைந்து, கர்ப்பபை பாதிக்கப்பட்டதாக மெடிக்கல் முறையில் எழுதியிருந்தது.

சந்திராவை கண்டு அதிர்ச்சியாக பாவனா நின்றாள்.

சந்திராவோ, “பாவனா… நீ ஜீவன் கூட வேலை பார்த்தியே… அவன் உன்னை… சும்மா விட்டானா? அச்சோ… சாரி பாவனா… ஏதாவது.. அசம்பாவிதம் நடந்திருந்தா என்னை சபிக்காத” என்று கதறினாள்.

பாவனாவை போல சிலரிடம் இதே போல அனுப்பி வைத்து, காசு பார்த்தாவளாயிற்றே.

“ஜீவன் கூட வேலை விஷயமா போனேன். ஆனா என்னை அர்னவ் காப்பாத்திட்டார். நான் ஜீவனோட ஆசைக்கு சம்மதிக்கலை.” என்று நடந்தவை விவரிக்க, ”உனக்கிருக்கற அறிவும் நல்ல பண்பும் எனகில்லை.
உனக்கு பணத்தோட இக்கட்டு இருந்தும் நீ தப்பு பண்ணலை. ஆனா என்னை பாரு. கஷ்டப்படாம பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி இருக்கேன்.‌

உன்னை அந்த கடவுள் தான் காப்பாற்றியிருப்பார். என்னை மன்னிச்சிடு பாவனா. உன்‌ நிலைக்கு நானும் ஒரு காரணம்” என்று மன்னிப்பு வேண்ட, பாவனா கைகள் சந்திரா கண்ணீர் வழிந்தது.

“பாவனா… இங்க வாயேன். இந்த பேஷண்டோட சம்மரி டீட்டெயில் இன்சூரன்ஸ் இதெல்லாம், இதுல அப்டேட் ஆகலை. கொஞ்சம் வந்து சம்மரி மட்டும் எடுத்து கொடு.” என்று பாவனாவுக்கு ஆல்டராக போட்டப் பெண் அழைக்க, பாவனாவோ சங்கடமாய் சந்திராவை பார்வையிட்டாள்.

“நீ போ பாவனா. உன்னை பார்த்து பேசியதே எனக்கு சந்தோஷம். இதுல உன் வேலையை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம். நீ போற பாதையில் சரியா போ. உனக்கு நல்லது நடக்கும்.” என்று வாழ்த்தி, பேஷண்டோடு, பேஷண்ட் அமர இருக்கும் இருக்கைக்கு சென்றாள்.

பாவனா சந்திராவை பார்த்தவாறு எதிரேயிருந்த பேஷன்டின் இன்சூரஸ் க்ளைம் செய்த சம்மரியை எடுத்து கொடுத்தாள்.

சந்திராவை ‘அடிப்பாவி உன்னால் என் வாழக்கை எப்படி பாதிக்கப்பட்டதென்று கத்தி சண்டை பிடிக்க நினைத்திருந்தாள் பாவனா. இன்றோ அபச்சோ பாவம் என்று உச்சு கொட்டும் நிலைமையில் சந்திரா இருக்க, அவளால் சாதாரணமாய் தனக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு திட்டவும் மனமில்லாது நின்றாள்.

வாழ்க்கை நமக்கு தான் கடினமான வாழ்வை தந்திருக்கும் என்று நல்லவர்கள் பெரும்பாலும் புலம்புவார்கள். ஆனால் நன்றாக வாழும் கெட்டவர்கள் பலருக்கும் வெளியே சொல்லிக்காத கேவலமான வாழ்வும், வலியும், கடவுள் தராமல் இருக்க மாட்டார்.
இந்த உலகத்தையே படைத்த இறைனுக்கு, நல்லது கெட்டது அறிந்து நேர்மையாக வாழ்பவரை கைவிடுவானா என்ன?

தனக்கிந்த நிலை ஏன் என்று இறைவனை வேண்டி உருகிய பாவனாவிற்கு அர்னவ் போன்றவனால் எத்தகைய மாற்றத்தை விதைத்துவிட்டார்.

என்ன காதலென்னும் விதையை விதைக்காமல் காத்திருக்கலாம். ஆனால் அர்னவை நெஞ்சில் சுமக்கவே பிறப்பெடுத்தவளாக மகிழ்ந்தாள்.

மனதோடு அவனை நினைத்து பூஜித்து வாழ்வது எல்லாம் மற்றவருக்கு மடத்தனமாக இருக்கலாம். பாவனாவுக்கு அந்த கற்பனை புனைவு தான் உயிரோட்டமாக எண்ணுகின்றாள்.

அர்னவ் பாவனா இதயத்தை அபகரித்து, காற்றில் பறக்க வைக்கும் ராஜாளி.’ என்று நினைத்து பார்த்தாள்.

இங்கே அர்னவிற்கு புரையேறியது. வானத்தில் மேகத்தோடு மோதி, புகை மண்டலமாக இருந்த மேகத்தோடு பயணித்தவன், சந்தோஷிடம் தண்ணீர் என்று செய்கையில் கேட்டான்.

சந்தோஷோ தண்ணீர் பாட்டிலை தந்திட, அர்னவ் நீரை அருந்தியும் புரையேறியது.

“அர்னவ் ஆர் யூ ஒகே.” என்று சந்தோஷ் விமானத்தை இயக்க, “பைன்” என்று விமானத்தை இயக்கும் விதத்தில் அர்னவ் குறிப்பாக கவனித்தான்.
முன்பு போலவா?! இப்பொழுது கை குணமாகி வந்துள்ளான். ஆனாலும் சந்தோஷிற்கு கொஞ்சம் பயம்.
என்ன தான் உயிர் பிழைத்தாலும், எல்லா நேரமும் கடவுள் அனுகிரகம் இருக்காதே.
அர்னவிற்கு விமானம் தடுமாறவும் பாவனா நினைவு வந்து தொலைத்தது.

‘ராட்சசி… என்ன தேடி வருவானு நினைச்சேன் இரண்டு மாதமாகியும் என்னை வந்து பார்க்கலை. என் இதயத்தை துண்டு துண்டா நறுக்கி எடுத்துட்டு போயிட்டா. உடம்பில் இதயமில்லாத ஜெல்லிமீனா அல்லாடுறேன்.’ என்று மனதுக்குள் தான் கருவினான்.

அர்னவ் சந்தோஷிடம் பகிர்வதற்கு ஈகோ இடம் கொடுக்கவில்லை. இத்தனை காலம் அர்னவ் செண்டிமெண்டாக எதையும் ஆராய்ந்து பார்த்து பேசி துவண்டது இல்லை.
இந்த இரு மாதத்தில் முற்றிலும் பாவனாவை மறந்தவனாக காட்டிக்கொண்டு, திடீரென அவளை தவிர நினைப்பே செல்வதில்லை என்று உரைத்தாள் சந்தோஷ் நகைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அர்னவிற்கே ‘ஏன் அவளாக என்னை காதலிக்க மாட்டாளா? அவளுக்கு என்‌ மீது எவ்விதமான விருப்பம் இல்லையா? தனக்கு தோன்றியது போல ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றாளா?’ என்று அடிக்கடி பாவனாவை உள்ளுக்குள்ளே திட்டி தீர்ப்பான்.

காதலை பகிராது காதல் வெல்ல வேண்டுமென்று நினைத்தால் தகுமா? அர்னவிற்கு அந்த கடுகடுப்பு அதிகமாகவே இருந்தது.
பாவனா அவள் அம்மாவுக்கு சிகிச்சைக்கு தன் உதவியை ஏற்றவள், வேலை தேடி தந்தையிடம் வருவாள்.

ஏற்கனவே தன்னிடம் பொறுப்பு கல்யாணம் கடமை என்று பேசும் தந்தையிடம் அடிக்கடி பாவனாவை பற்றி அறியும் ஆவலோடு சென்று தரிசிக்க, தந்தையாக அவளை மணக்க ஆசையா என்று கேட்பார். ஆமென்று ஒப்புதல் அளித்திட நினைத்தான்.‌

ஆனால் பாவனா வேலையை வேண்டாமென்று தந்தையை கூட காண வராமல் பழகியது நெருஞ்சிமூள்ளாக இப்பவரை இதயத்தை சிதைக்கின்றாளே. இதில் தன்னிடமாவது தன் நலத்தை கேட்டு அடிக்கடி அலைப்பேசி அழைப்பையாவது நாடியிருக்கலாம்.

ஏதோ தான் அவளிடம் அத்துமீறிய ஜீவன் போல இருந்ததாக அலைப்பேசி வாய்ப்பு கூட இல்லையே.

இதையே நினைந்து பார்ந்தான்.‌ தவறியும் அவள் தன்னை விட வசதி வாய்ப்பில் குறைந்தவள், அதன் காரணமாக உதவியை வாங்கி உள்ளத்தையும் அடைந்திடும் நாடகக்காரி’ என்று யாரேனும் பேசிவிட்டால்? என்ற அச்சம் அவள் முகத்தில் வழிவதை அவன் கவனிக்க தவறினான்.

வானத்தை பார்த்து ரசித்து மேற்பார்வைக்கு பழக்கப்பட்டவன், இதயமெனும் பள்ளத்தாக்கில் பெண்ணின் மனதை ஆராய மறந்தான். மண்ணுக்குள் புதைந்திடும் வைரம் போல அல்லவா அவள் அவன் காதலை பூஜிப்பது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.‌

10 thoughts on “ராஜாளியின் ராட்சசி-14”

  1. Kalidevi

    S bhavana ellathaium ullaukullavr vachi poojikira athu eppadi avanuku theriuma sonna thane solama oruthar ku oruthar inum ethanai naal tha manasu kullave marugitu irupinga veli paduthunga apo than unga love veliya varum

  2. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 14)

    பின்னே..? அப்படி சுத்தி, இப்படி சுத்தி, எப்படி ஜகா வாங்குனாலும், பெண்களை ஏதாவது ஒரு கட்டத்துல கேவலமா பேசறதோ, இல்லை மிஸ்யூஸ் பண்றதோ தானே காலம் காலமா நடந்திட்டு வருது. அதுக்கு பயந்தே, அவ தன் மனசை வெளியே காட்டாம இருக்கிறா. இது ஏற்கனவே, அர்னவ் தப்பா நினைச்சு கேவலப்படுத்திட்டாத்தானே ?

    ஸோ.. அவளும் மனசை திறக்க மாட்டா, இவனும் வெளிப்படையா சொல்ல போறதில்லை. அப்ப இதுக்கு என்ன தான் வழி ? என்ன தான் முடிவு ?

    சந்திராவுக்கு இந்த தண்டனை வேணும் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Aarnav already ava pana thevai ku jeevan ku velai poi thevai illama mattikitu avasapattava ah ithula ne than aval ah kapathi ava amma treatment ellam.ready panni vera kuduthu iruku ithula unkitta love vandhu ninna neyo illa unna serndhavaga ethachum sollita enna panrathu na ra bayam avaluku irukirathu niyam than ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *