அத்தியாயம்-9
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அச்சோ… சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க. அதுல.. அதுல என்னயிருந்தது?” என்று உலுக்க, “அம்மா… என் கை” என்று முகம் சுணங்கினான்.
“சாரி சாரி… மலையே முழுங்கி ஏப்பமிடுவிங்க. வலியெல்லாம் உங்களுக்கு தூசு.
எனக்கு இப்ப அந்த பேப்பர்ல என்னயிருந்ததுனு சொல்லுங்களேன்?” என்று தவித்து கேட்டாள்.
அர்னவோ இனி பாவனாவிடமிருந்து கையை பாதுகாப்பது என்ற முடிவில் சற்று தள்ளி அமர்ந்தபடி, “அந்த பேப்பர்ல என்னோட போட்டோ இருந்தது. அர்னவ் உன்னை தொலைத்துட்டு அம்மா அப்பா துன்பப்படறோம். நாங்க உன்னை தேடி அலைகின்றோம்” என்ற டீட்டெயில் அதோட அந்தவூர்ல ஒரு பள்ளிக்கூடம், போலீஸ் ஸ்டேஷன் அரசாங்க இடங்கள் சிலதை மென்ஷன் பண்ணி, பெயரை போட்டு, பையனை பத்தி தெரிந்தா, பார்த்தா, அந்த இடத்துல இன்பார்ம் பண்ண சொல்லியிருந்தாங்க.
வானத்துல பறந்தது குண்டு போடுற விமானம் இல்லை. அது சாதாரணமான தனியார் விமானம்.
அப்பா-அம்மா குழந்தை இல்லாம போகமாட்டோம்னு போலீஸ் கஷ்டடில இருந்திருக்காங்க.
முதல்ல சில நாள் அக்கம் பக்கத்துல தேடி களைச்சிட்டாங்க. அப்பறம் தான் இனி இங்க தங்கற காலம் முடியுதுனு பேப்பர்ல விளம்பரமா, என் முகத்தை போட்டு வந்துச்சு. அப்பா ஓரளவு பணமும் வசதியும் படைச்சவர். அதனால இதெல்லாம் சாத்தியமா இருந்தது.
அப்பறம் அக்கம் பக்கத்துல இருந்தவங்க என்னை கூட்டிட்டு போய், என் அப்பாவோட விட்டாங்க.” என்றதும், பாவனாவோ ஆர்வம் அடங்காமல், ”ஓ ஓஹோ… அதான் வானத்தை பார்த்தா க்ரஷா? ஆமா அப்பறம் ஊருக்கு வந்துட்டிங்களா? படிப்பு முடியவும் வேலைக்கு இந்த தொழிலை தேர்ந்தெடுத்திங்க தானே?” என்றாள்.
“ம்ம்ம் உண்மை தான். ஆனா… இந்த இன்பிட்வின் கேப்ல… எங்கம்மா தான் பைத்தியமா மாறிட்டாங்க. தப்பு அப்படி சொல்லக்கூடாது. என்னை தவற விட்டு தொலைத்ததில் புத்தி பேதலிச்சிடுச்சு. உண்மையில் ஒரு குழந்தையை அந்த மாதிரி வெடிகுண்டு, உயிர் சேதம் இருக்கற இடத்தில் தொலைச்சிட்டு, தேடுவது சாத்தியமா?” என்றவன் குரல் கரகரப்பாக மாறியிருந்தது.
பாவனா அதிர்ந்திட, தொடர்ந்தவனோ “பெத்த குழந்தை காணோம் என்றதை அவங்களால் ஏற்றுக்க முடியலை. அதுவும் இலங்கையில் அடிக்கடி அப்ப சிட்சுவேஷன் சரியில்லாம, சில குழந்தைகள் கன்னி வெடில, இறந்திருந்தாங்க. அதெல்லாம் நேர்ல பார்த்ததில் அம்மாவுக்கு புத்தி பேதலிச்சிடுச்சு.
நான் திரும்பி வந்தப் பிறகும் அவங்களால் நார்மலாக முடியலை. ஏதோ விபத்துல தொலைந்து, இறந்துட்டதாவே முடிவுக்கட்டிட்டாங்க.
அந்த வயசுல என்னால அம்மாவோட மாற்றத்தை உணரமுடியலை.
அப்பா தான் அம்மாவை ரொம்ப மெனக்கெட்டு, தமிழகம் திரும்பியப் பிறகு மருத்துவம் எல்லாம் பார்த்தாங்க. என்ன பார்த்தும் யூஸாகலை.
மருத்துவத்தால் புத்தி பேதலிச்சதை மாற்ற முடியலை. அதோட பையன் காணோம் இறந்துட்டான் என்று சதா புலம்பினவங்க, ஒரு வருசத்துல, மாடில இருந்து விழுந்து… தவறி இறந்துட்டாங்க.” என்று கூற, பாவனாவோ அழுகையில் தேம்பினாள். அர்னவ் அழுபவளை உற்று போக்கினான்.
“உங்க அப்பா பாவம்ல. நீங்க அம்மா இல்லாம எப்படி கஷ்டப்பட்டு வளர்ந்திங்க. சே… வாழ்க்கையில் அம்மா இல்லைன்னா அனாதைக்கு சமமாச்சே” என்று, உதடு தந்தியடிக்க கேட்டாள்.
அர்னவோ நெற்றி சுருக்கி, “அப்படியெல்லாம் இல்லையே. அப்பா அம்மாவையே நினைச்சி வாழலை. அவருக்கு லைப்ல ஒரு பிடிப்பு வேண்டுமென்று நினைத்தவர், கரோலின் கூட தான் வாழறார். அப்பா ஒரளவு பணவசதி உண்டு. அடுத்தடுத்து தொழிலை கவனிக்கணுமே.!” என்று வெகு சாதாரணமாய் உரைத்தான். அதை கேட்ட பாவனாவிற்கு தான், “என்ன இப்படி ஆகிடுச்சு. அப்ப உங்க அப்பா உங்கம்மா மேல உண்மையான காதலை வைக்கலை அப்படி தானே?” என்று சிலிர்த்து சண்டைக்கு வந்தாள்.
அர்னவோ “வாட்… நோ நோ… அதெல்லாம் அப்ப எனக்கு தெரியாது. அப்பா கரோலின் கூட வாழறார். ஏன் மனைவி இறந்துட்டா இன்னொரு பெண்ணை ஏறெடுத்து பார்க்க கூடாதா என்ன?
என்னோட சின்ன வயசுல, என் சிந்தனை அப்பா வேறொத்தங்களோட வாழ்வதை பார்த்தப்ப தப்பா தெரியலை. பிகாஸ்… அம்மா உயிரோட இருந்தப்ப, நான் பார்த்தா வரை, அம்மா பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ணுவாங்க. நான் சின்ன பையன் என்பதால் பயமா தான் இருந்தது. அதோட இறந்துட்டப் பிறகு என்ன செய்ய முடியும்? அம்மா இல்லாம நான் மட்டும் என்பதால் அப்பா என்னையும் தொழிலையும் பார்க்கணுமே.
என்னை பார்த்துக்க ஒரு ஆன்ட்டி நியமித்தார். தொழிலை கவனிச்சிக்கிட்டார்.
கரோலின் அவங்க தான் அப்பாவை விரும்பியதா சொன்னாங்க. அப்பா யோசித்தார்… ஆனா அக்சப்ட் பண்ணிட்டார்.
வளரவளர எனக்கு அதுல தப்பா தோன்றலை. பிகாஸ் நான் படிச்சது, வெளிநாட்ல.
அங்க ஒரு அப்பா ஒரு அம்மா ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்சப்ட் கிடையாதே. ஸ்டெப் பாதர், ஸ்டெப் மதர், ஸ்டெப் சைல்ட், லிவ் இன் லைஃப், ஜஸ்ட் ஒன் நைட், இதெல்லாம் நிறைய பார்த்திருக்கேன்.” என்றான்.
பாவனாவிற்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.
“உங்களுக்காக தான் உங்கம்மா இறந்தாங்க. அப்படியிருக்க இப்படி கேஸூவலா பேசறிங்க?” என்று குமைய ஆரம்பித்தாள். கிட்டதட்ட பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து நியாயம் கேட்பது போன்று.
“ஏ லூசு… அப்ப எனக்கு சின்ன வயசு. எங்கம்மாவிடம் நான் தான் பையன்னு முன்ன போனா, என்னை பிடிச்சி தள்ளி விட்டுட்டு, என் பையன் செத்துட்டான்னு ஆக்ரோஷமா கத்துவாங்க.
அந்த வயசுல எங்கம்மாவை பார்த்து நான் மனநலம் பாதிக்காப்படாம இருந்ததே அதிசயம்.
அதோட வைத்தியம் பார்த்தும் பாதில இறந்துட்டாங்க. விவரம் தெரியவும் ஃபீல் பண்ணினேன். அதுக்கு பிறகு வளர வளர ரியாலிட்டியை அக்சப்ட் பண்ணிட்டேன்.
ஒரு விஷயத்தை மனசுல ஏத்துக்காத வரை தான் அதோட வலி வேதனை வாட்டும். அதை அக்சப்ட் பண்ணிட்டு கடந்துட்டா எல்லாமே எளிதா எடுத்துப்போம். என்ன… அதுக்கு கொஞ்சம் ஸ்டோன் ஹார்ட்டா இருக்கணும். இல்லைன்னா…. வலியை சின்ன வயசுலயிருந்து அனுபவிச்சி தெளிந்திருக்கணும்.
நான் இரண்டு ரகமும் கலந்தவன்.” என்று தோளைக்குலுக்கினான்.
பாவனாவின் நெஞ்சு அடைத்தது. அவள் அர்னவை கண்டு கொதித்திருந்தாள். இவனால் இவன் அன்னை உயிர் பிரிந்துவிட்டது. அப்படியிருக்க, காலம் கடந்தாலும் வலி வேதனையை முகத்தில் காட்டலாமே. இப்படியா ஒருவன் இருப்பான்.’ என்ற ஆதங்கம். ஆனால் வலி வேதனையை தாண்டி புன்னகை பூத்து, இருக்குமிடம், பழகும் மனிதரிடம் தன்னால் நேர்மறை எண்ணம் மட்டுமே வரவேண்டுமென்று சிந்தித்து, அதன்படி கடந்து வாழும் நிலைக்கு ஒருவன் தன்னை தானே தயார்படுத்திக் கொண்டு வாழ்வது வலிகளை தாண்டிய பயணமென்றால்
எத்தகைய வலி வேதனையால் பண்படுத்தி கொண்டிருக்க வேண்டுமென்று அவன் தெளிவாக கூறியும் எண்ண தவறினாள். “என்னயிருந்தாலும் அவங்க பாவம். உங்களுக்காக புத்தி பேதலிச்சு, புருஷனை மறந்து, இறந்துட்டாங்க. ஆனா நீங்க அவங்களை மறந்துட்டிங்க. உங்கப்பா கரோலினோட கல்யாணம் குடும்பம்னு வாழறாங்க. பச்.. கடைசில பெண்கள் தான் தியாக செம்மலா இருந்து வாழாம போயாச்சு. அவங்க வாழ்ந்திருந்தா உங்களை இப்படி பேச விட்டிருக்க மாட்டாங்க. செண்டிமெண்ட் இருந்திருக்கும்..” என்று முடித்தாள்.
சிறிது நேரம் மௌனமாய் நகர, பாவனா அர்னவின் அன்னைக்காக யோசித்தபடி இருந்தாள்.
அர்னவோ பாவனாவை பார்த்து, ‘எங்கம்மா இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்? என்ற விபரீத கற்பனையில் சென்றான் அர்னவ்.
சந்தோஷ் திருமணத்திற்கு மறுத்திருந்த சமயம், அவனை காண வந்த அவனது அன்னை, தலையில் தட்டி, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி சென்ற நிகழ்வு வந்தது. அதே போல தன் அன்னை தன்னிடம் கல்யாணம் செய்ய முடிவெடுத்து பொண்ணை பார்த்திருப்பார்.
யார் கண்டது அன்னை பாவனா போல ஒரு பெண்ணை கண்முன் நிறுத்தி, கல்யாணம் செய்ய கூறி அழுத்தம் தந்திருக்கலாம்.
இல்லையா…. இதோ இப்ப பாவனாவுக்காக தான் ஜீவனை அடிச்சது. விமானம் பழுதாகி தன் கையில் குண்டு உரசி சென்றது, அவளை தன்னுடலோடு கட்டிக்கொண்டு பாரசூட்டில் குதித்தது. இங்க வந்ததும் அவளை தனியாக உறங்க, வழிவகை செய்து காவல் காத்தது.
இதெல்லாம் எண்ணி வியந்தவன், இப்பொழுதும் இவளோடு தான் மட்டும், ஒரு நாள் இரவை கழித்து இருக்கின்றோம். அதோடு அவளுக்கு பசி தாங்குமா என்று குண்டு உரசிய கையோடு, கடல் நீரோடு பாவனாவோடு உருண்டு பிரண்டு, தனியாக மீனை வேறு பிடித்து, இதோ நெருப்பை உருவாக்கி அதில் வாட்டி, அவளிடம் தன் கதையை வேறு கதைத்திருக்க, ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் சந்தோஷிடம் ஆறு வருட நட்பு உண்டு. அப்படியிருந்தும் இரண்டு வருடம் முன்பு தான் அவனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் கூறியதே. அது கூட தன் தாய் சிறுவயதில் இப்படி இறந்துவிட்டார், தந்தை-கரோலின் விவகாரம், தொழில் விவரம், எங்கே தங்கியிருப்பது இப்படி விவரித்து இருந்தான்.
பாவனாவிடம் ஏன் அன்னை பற்றி விரிவாக பேசினோமென்று புரியாது தன்னை தானே மீட்டுக் கொண்டிருந்தான்.
அர்னவிற்கு இந்த பாவனாவை பிடித்திருக்கின்றது. ஒரு எதிர்பாலின பெண்ணாக ரசிக்கின்றான். ரசிப்பை தாண்டி ஏதோவொன்று அவனை இழுப்பதை, முதல் முறை புரிய துவங்கியது.
இதெல்லாம் எவ்விதமான அர்த்தத்தில் சேருமென்று குழம்பினான்.
பாவனாவோ, “பச்… உங்கப்பா இப்ப உங்க ஸ்டெப் மதரோட, வாழறாங்க. நீங்க தனியா இப்படி ஜாலியா உங்க காதலியோட பறக்கறிங்க அப்படி தானே?” என்று வந்து சேர்ந்தாள்.
அர்னவ் நெற்றி சுருக்கி, “காதலியா?” என்று கேட்டான்.
“ஆமா… பறக்கறது தான் பிடிக்கும்னு சொன்னிங்களே. கைல குண்டு உரசியும், விமானம் மலையில் மோதியப் பிறகும் பாரசூட்ல இறங்கினப்ப, உங்க கண்களில் ஜாலியா இறங்கியது தான் கவனிச்சேன். அப்ப என்னடா இது இந்த மனுஷன் இயற்கையை ரசி, இந்த மௌமெண்ட் திரும்ப கிடைக்காதுன்னு சொல்லறார்னு வினோதமா நினைச்சேன்.
ஆனா இப்ப பேசி புரிஞ்சிக்கிட்டப் பிறகு, உங்களுக்கு பறக்கறது தானே காதல் கூடுது. அதை தான் கேட்கறேன்” என்று நின்றவளை கண்டு ஆமோதிப்பாய் புன்னகை விரிந்தது.
“எஸ்… விமான பயணியா மாறுவதற்கு, அப்பாவிடம் படிக்க கேட்டப்ப, முதல்ல மறுத்துட்டார். அவரோட தொழிலை, ஐ மீன் பிசினஸை பார்க்க சொன்னார். பட் எனக்கு அதுல உடன்பாடு இல்லைனு மறுத்துட்டேன்.
விமானம் ஓட்டறதுக்குன்னு, படிக்க சம்மதிச்சதுக்கு எல்லாம் தலைகீழே நின்று அடம் பிடிச்சது.
அவரோட இருக்க மாட்டேன்னு புலம்பி தள்ளிட்டார்.
இப்பகூட கால் பண்ணினா, ‘என்னை விட்டு மொத்தமா விலகிட்டடா. இப்ப எந்த நாட்ல பறந்துட்டு இருக்கன்னு கேட்பார்.’ மற்றபடி அப்பாவோட பிசினஸ் அப்பாவோட இருந்த நாட்கள் கூட மெமரிஸா தான் இருக்கு” என்றான்.
பாவனாவோ, “உங்கப்பா யாரு? என்ன பிசினஸ் பண்ணறார்? நீங்க மொத்தமா விலகிட்டதா சொல்லறிங்க, அப்படின்னா… உங்கப்பாவுக்கு கரோலினால… சாரி உங்க சித்தியால இரண்டாவது குழந்தை குட்டினு பேமிலியா இருக்காரா?” என்று கேட்க, அர்னவோ கடலை வெறித்து பார்த்தவன் நிதானமாக திரும்பி, “ஏய்.. யாரு சித்தி? அப்பா அவங்களை மேரேஜ் பண்ணிக்கலையே.” என்றான்.
பாவனாவோ மேரேஜ் பண்ணலையா?” என்று கேட்டு வாய் பிளந்தாள்.
அர்னவோ “நான் இதுக்கு முன்னவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதா எங்கயும் சொல்லலையே. கரோலினோட வாழறாங்கன்னு தான் மென்ஷன் பண்ணியது.” என்று இலகுவாக கூறி நடக்க, பாவனாவோ ஒன்னும் புரியாமல், சங்கடமாக, அவனை பின் தொடர்ந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Super sis nice epi 👍👌😍 evan soldra kadhaiyala eva adhirchiku mela adhirchi aguraley🙄 adei renduperum mudhalla thapikka vazhiya paarunga da awww😂
Wow sema twist. Intresting
Kadhai pesura interest la rendu perum inga yae settle aagida poraga ethachum help kedaikuthu ah nu parunga first
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 9)
அடப்பாவி…! இப்படி அம்மா பாசமும் கிடையாது, அப்படி அப்பா பாசமும் இல்லாம
தான் தோன்றித்தனமா வாழறானோ இந்த அர்ணவ்ன்னு தோணுது.
அதெல்லாம் பெண் பிள்ளைகளுக்குத்தான்
இந்த பாசம், நேசம், அக்கறை எல்லாம் இருக்குமோ…?
இப்படி இருக்கிறவனுக்கு லவ் மட்டும் எப்படி வரும் ? அப்படி வந்தாலுமே, அது உயிர் காதலா இருக்கும்ன்னு என்ன நிச்சயம் ?
இவனும் அவனோட அப்பா மாதிரியே இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting😍
💓💗 interesting ah iruku
Interesting epi. Crt tha amma eranthutanga ninacha varutham irukum illama la irukathu but atha mathavanga kitta katta pidikala avanuku atha athu Puriyala . Appa carolin kuda valraru sonna apo mrg panikalaya ena da solla vara
அருமையான பதிவு
Nice epi 👌