கண்ணுக்குள் கடல்-டீஸர்
சர்வானந்தன் இறுதி மூச்சை இழுத்து பிடித்து "உனக்கு தைரியமிருந்தா, அட்லீஸ்ட் மானத்தோடு உயிர் பிழைக்க ஆசையிருந்தா, இங்கிருந்து நீயும் உன் காதலனும் வந்த போட்ல தனியா திரும்பி போயிடு. இல்லைனா அவனுங்க உன்னை சின்னாபின்னமா மாற்றிடுவாங்க.
நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கடலில் செத்து மிதிப்பேன். நீ இங்கிருந்து உயிர் பிழைச்சா நான் சொன்ன பையனை காப்பாத்து." என்றதும் கப்பலில் சாய்திருந்த காவலதிகாரி சர்வானந்தன் தரையில் சரிந்தார்.
சர்வானந்தன் பேசியதை கேட்டவளுக்கு திகிலானதென்றால், அவர் சரியவும் பயந்துவிட்டாள்.
”சார் சார்… சார் எழுந்துடுங்க. எனக்கு பயமாயிருக்கு” என்று அழ, சற்று தள்ளியிருந்த காதலன் வினோத் அவனுமே மயங்கியிருக்க, அவனை பிடித்து உலுக்கினாள்.
"வினோத் வினோத்" என்று கத்த, அவனோ தள்ளாடி இமை திறக்க முயன்றான்.
கண்ணில் துளி சுறுசுறுப்பும் இல்லை, இன்னமும் இங்கே இருந்தால் காவலதிகாரி சர்வானந்தன் கூறியது போல தன் பெண்மைக்கு சோதனை வந்து, சிதைந்து கடலில் சின்னாபின்னமாக போவது தெளிவாய் புரிய, காதலித்தவனோடு வந்த படகில் குதிக்க முடிவெடுத்தாள்.
சர்வானந்தன் கூறிய போது ‘என்ன இவர் இப்படி கூறுகின்றார். இந்த கப்பலில் இருந்து எப்படி தப்பிபோம். தானும் காதலன் வினோத்தும் வந்த படகு சிறியது. அதில் இந்த கப்பலிலிருந்து அதில் இறங்கவே முடியாது. அதற்குள் மதுவை நாடி சென்றவர்கள் வந்துவிட்டால்?
ஆனால் சர்வானந்தன் கூறியதை கேட்டவளுக்கு உயிர் பிழைப்போமோ என்னவோ முடிந்தளவு மானத்தையாவது காப்பாற்ற எண்ணி முயற்சியெடுக்க நினைத்தாள். கையில் அங்கிருந்த சிறு கத்தியை எடுத்து கொண்டாள்.
நிதானமாக மூச்சை விடுத்து கப்பலிலிருந்து தங்கள் வந்த போட் இருக்கும் பக்கம் கயிற்றால் கட்டியிருக்க அதனை பிடித்து கண்மூடித்தனமாக குதிக்க தயாராகவில்லை கண் மூடி குதித்துவிட்டாள்.
சுற்றிலும் கடல், அப்படியிருக்க தண்ணீரில் போட்டின் மீது நங்கென்று மோதினாள். அவள் நல்ல நேரம் கடலில் விழாமல் போட்டில் விழுந்தாள். கையில் இருந்த கத்தியாயை வைத்து மடமடவென கப்பலோடு கட்டிய கயிற்றை அறுத்தாள்.
கையிற்றை அறுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் வேகமாய் அறுக்க போராட, டேய் அந்த பொண்ணு போட்ல குதிச்சு தப்பிக்க பார்க்கறா, பிடிங்க" என்ற குரலில் கத்தியை கீழே நழுவவிட்டாள்.
தன்னை மீண்டும் கப்பலில் கடத்தி சென்றிடுவாரோயென பயந்து வேகத்தை கூட்டி, கத்தியை எடுத்து அறுக்க முயன்றாள்.
ஆபத்து தன்னை நெருங்க, கயிற்றை அறுத்து விட்டாள்.
கப்பலில் கட்டியிருந்த கயிறு விடுபடவும், போட் தள்ளாட்டம் கண்டது.
அந்த போட்டில் உள்ள மோட்டாரில் கைக்கு அகப்பட்ட விசையை அழுத்தினாள்.
அந்த போட் வட்டமிட்டு சுற்றி ஒரு பக்கமாக கடலில் காற்றை கிழித்து மிதந்தது.
கப்பலை திருப்பவே நேரமெடுக்க போட் திசைக்கு ஒருமூலையில் சென்றிருந்தது.
ஆனால் என்ன தான் தப்பித்தும், ஒருபோட்டை ஓட்டதெரியாமல் கவிழ்ந்தது.
அதிலிருந்த பெண்ணவளோ கடலில் மூழ்கினாள்.
கப்பலிலிருந்து பைனாக்குலர் வழியாக பார்த்தவனோ ‘மச்சி போட் எக்குதப்பா போய் சாயறப்ப, அந்த பொண்ணு கடல்ல விழுந்துடுச்சு. கடல்ல இனி ஜலசமாதியாகிடுவா, இந்த சர்வானந்தனை தூக்கி போடுங்கடா.” என்று அங்கிருந்த கைத்தடியின் தலைவன் முடிவெடுத்தவனாக கூறவும் கப்பலில் இருந்த உருப்படிகள் ஏராளம் என்பதால் ஒரு பெண்ணின் உயிர் கடலில் அமிழ்வதில் பெரிதாக கவலையின்றி கடலை கிழித்து கப்பல் அந்த தீவுயிருக்கும் திசைக்கு புறப்பட்டது.
கண்ணுக்குள் கடல் கடல் மட்டுமே. நெஞ்சுக்கு காற்று தேவைப்பட, அது கிடைக்காமல் மூச்சுக்கு போராடினாள் அவள் மானஸ்வி.
*சர்வானந்தன் காப்பாத்த சொன்ன பையன் யாரு?
*மானஸ்வி அவள் காதலன் வினோத்தை தேடி வருவாளா?
விரைவில் கதைக்களத்தோடு சந்திக்க வருகின்றேன்.
-Mark 19

டீஸரே பயங்கரமா இருக்கு!!… வாழ்த்துகள்!!..
Thank u 🙏🏻
வாவ்….! டீஸரே ரொம்ப அருமையா இருக்கே. வீ ஆர் ஈகர்லி வெயிட்டிங்.
Teaser super . Waiting for next epi . Congrats
Thank you 😊
வாழ்த்துக்கள் சகி
இந்த வாட்டி வித்தியாசமா கதை கடல்ல இருந்து ஆரம்பிச்சிருக்கு
Good teaser👍
Intresting waiting😍😍😍
fantastic start…………………..