புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

வெண்மேகமாய் கலைந்ததே-4

அத்தியாயம்-4

சர்வானந்தன் ஒரு உணவகத்தில் இரவிள்கு தேவையான உணவை வாங்கிவிட்டு பைக்கில் வைத்தான். பிருந்தாவோடு கணவன் மனைவியாக தங்கப்போகும் முதல் நாள் என்றதால் இனிப்பும் வாங்க மீண்டும் ஹோட்டலுக்குள் நுழைந்தான்‌.

கருப்பட்டி அல்வா என்றால் பிருந்தாவுக்கு கொள்ளை பிரியம் என்று வாங்கி வர, அங்கே ஒரு சிறுவன் உணவு பொட்டலத்தை எடுத்து கொண்டு ஓடியிருந்தான்.

 "ஏய்.. டேய்" என்ற சர்வானந்தன் குரலை கேட்டு அந்த பையன் திரும்பினான். 

போலீஸ் உடை என்றதும் கண்கள் மிரண்டு ஓடினான் அச்சிறுவன் நிரஞ்சன்.

சிலர் ஓடவும், “விடுங்க சாப்பாடு பொட்டலம் தானே” என்று சர்வானந்தன் கூறவும் விரட்ட சென்றவர்கள் நடை நின்றது.

என் கல்யாண நாளுக்கு ஊருக்கே விருந்து போட வேண்டியது. யாருக்கும் ஒரு வாய் சாப்பாடு போடலை. அட்லிஸ்ட் இந்த பையனாவது சாப்பிடட்டும்’ என்று மனநிலையில் சர்வானந்த் இந்த உணவு திருட்டை பெரிதுப்படுத்தவில்லை.

ஒருவேளை இன்று உணவை கூட திருடாமல் தானமாக பெற வேண்டும் என்ற அறிவுறுத்த அவனை தேடி சர்வானந்தன் கண்டுபிடித்து இருந்தால், நிரஞ்சன் பிற்காலத்தில் கயவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டான்.

அதேபோல சர்வானந்தன் நிலை கவலைக்கிடமாகக இல்லாமல் இருந்திருக்கும்.

விதிக்கு இவர்கள் சேர்த்து பார்க்க ஆசை கொண்டதல்லவா அதனால் விட்டு தான் பிடித்தது.

சர்வானந்த் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று உணவை வாங்கிக் கொண்டு திரும்பினான்.

வீட்டுக்கு வந்து சேரும் நேரம், கான்ஸ்டேபிள் உபயத்தால் வீட்டிற்கு தேவையான சில கிச்சன் பொருட்கள் வந்திறங்கியது.

  இன்டெக்ஸ் ஸ்டவ், பால் சிறிதளவு மளிகை சாமான் என்று வீட்டை நிரப்பியிருந்தார்.

"பரவாயில்லையே கான்ஸ்டபிள் குமார் அண்ணா இந்த அளவுக்கு வாங்கி வைப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை நாளைக்கு அந்த பர்னிச்சர் கடைக்கு போயிட்டு காசு கொடுக்கணும். அவன் பிருந்தா நைட் சாப்பிட உனக்கு வெஜ் பிரைடு ரைஸ் எனக்கு பிரியாணி" என்று நீட்டினான். 

“அதோட கருப்பட்டி அல்வா.” என்று பேசி மேற்படி சில வார்த்தையை கிசுகிசுத்தான்.

அவன் கிசுகிசுப்பாய் கூறிய மற்ற வார்த்தைகளுக்கு “சீ போங்க. முதல்ல குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று தள்ளினாள்.

சர்வானந்தன் குளித்து முடித்து கிச்சனில் சாப்பிட தட்டில் எடுத்து வைத்த பிருந்தாவை பின்பக்கமாக அணைத்தான்.

“பிருந்தா.” என்று கிறக்கமாய் கூற, “சர்வா.” என்று துள்ளினாள்.

அவன் வெறும் வைக்கிங் பனியனை ஷார்ட்ஸ் அணிந்து வந்திருக்க, லேசான ஈரம் அவளது தோளில் படவும் கிளர்ச்சியுண்டாக துள்ளினாள்.

“நேத்து வரை நமக்கு இன்னிக்கு கல்யாணம் நடக்கும்னு கனவு கூட கண்டதில்லை. இன்னிக்கு நாம கணவன்-மனைவி, தனிக்குடித்தனம், முதலிரவு.” என்று கூற பெண்ணவள் நாணத்தாலும் பயத்திலும் தலை தாழ்த்தினாள்.

“ஏய் பிருந்தா… நான் எதையும் யோசிக்காம உன்னை ஆசையா நெருங்கறேன். நீ என்ன தயங்கற?
எங்கப்பா அம்மாவை சமாதானம் செய்யறது அவங்க கையில் பேரன் பேத்தியை கொடுத்தா தான் மசிவாங்க. உங்க வீட்ல எப்படி?” என்று இடையை வளைக்க, “அவங்க மசியறாங்களோ இல்லையோ என்னை வசியப்படுத்திட்டு இருக்கிங்க.” என்றதும் கிச்சனில் மேஜையில் தூக்கி அவளை அமர்த்தி அவனும் அருகே இருந்தவாறே பேசியபடி சாப்பிட்டார்கள்.

அடுத்து பிருந்தா போர்வையை விரித்து படுக்க, “கிச்சனுக்கு என்னென்னவோ வாங்கியது. படுக்க ஒரு பெட் வாங்கலையே. பிந்து இன்னிக்கு நீ தான் எனக்கு மெத்தை.” என்று அவளை இழுக்க, ‘மெத்தை இருந்தா மட்டும் என்னை சீம்மா விடுவிங்களா?’ என்று அவளும் சிரிக்க, சர்வானந்தன் போன் ஒலித்தது.

“விஹான்” என்று போனை எடுத்து காதில் வைக்க, “மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே சர்வா அண்ணா. திருமணம் முடிந்ததுனு கேள்விப்பட்டேன்‌. இப்ப எங்க இருக்க?” என்றான் விஹான்.

“அதையேன்டா கேட்கிற. அம்மா சொன்னாங்களா?

நான் போலீஸ் என்பதால் வீடு சட்டுனு கிடைச்சிடுச்சு. இங்க தான் ஸ்டேஷன் பக்கமா வீடு பார்த்திருக்கேன். கான்ஸ்டேபிள் குமார் தான் சிலதை பர்னிச்சர் கடையில் இருந்து வாங்கி தந்தார். மீதியெல்லாம் இனி தான் வாங்கணும்.” என்று பிருந்தா வை கை வளைவில் வைத்து பேசினான்.

“பிருந்தா இருக்காளா? நான் விஷ் பண்ணலாமா?” என்று கேட்டான்.

“ஆஹ் பக்கத்துல இருக்கா” என்று கூறினான் சர்வானந்தன்.‌

“பக்கத்துலயா? ஓ… சாரி சாரி நான் பாரு இன்னமும் பெயர் சொல்லிட்டு இருக்கேன். பிருந்தா அண்ணிக்கிட்ட கொடு” என்றதும் சர்வாவோ போனை ஸ்பீக்கரில் போட்டு கொடுத்தான்.

“வாழ்த்துகள் அண்ணியரே. எப்படியோ எங்கண்ணாவையே கல்யாணம் பண்ணிட்ட. ஆமா அத்தை மாமாவிடம் சண்டை போட்டு வந்தியா” என்று கேட்டான்.

“நான் எங்க சண்டை போட்டேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்கவும் மறுத்தேன். அடிச்சி பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு அதட்டகனாங்க. நான் உங்கண்ணாவுக்கு போன் போட்டேன். இப்ப மிஸ்ஸஸ் சர்வானந்தனா இருக்கேன்.” என்று கூறினாள்.

அதுசரி பீலிங் கா கண்ணை கசக்கிட்டு பேசுவன்னு பார்த்தா விவரமா தான் பேசற‌. ” என்றதும் “டேய் அவ ஏன்டா கண்ணை கசக்கணும். நான் உயிரோட இருக்கற வரை என் பிருந்தா எதுக்கும் அழக்கூடாது டா.” என்று கூற, “பஸ்ட் நைட் அப்ப என்ன பேசறிங்க” என்று பிருந்தா கத்தவும், “ஏய் பஸ்ட் நைட் டிஸ்டர்ப் பண்ணறேனோ சரி சரி நாளைக்கு பேசறேன் பை” என்றான் விஹான்.

“நன்றிடா போனை வை” என்று சர்வானந்தன் சிரிக்க, “ஏன் இப்படி அலம்பல் பண்ணறிங்க” என்று கூற போன் துண்டிக்க காதல் பாடமாக, கல்மிஷ பேச்சும், புதுமண தம்பதிகள் சிரிப்பும் நானமும் போட்டி போட்டு அன்றிரவு தித்திப்பாய் கழிந்தது.


இங்கே நிரஞ்சன் இரண்டு பொட்டலம் இருக்க ஒன்றில் ப்ரியாமணி மற்றொன்றில் ப்ரைடு ரைஸ் என்றதும் பசி வயிற்றை கிள்ள ப்ரியாணியை ருசித்தான்.‌

ப்ரைடு ரைஸை அப்படியே கைப்படாமல் மூடி அடுத்த நாள் சாப்பிட எடுத்து வைத்தான்.

காலையிலிருந்து கண்ணுக்கு எதிரே வரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து அவன் பாட்டிற்கு பயணம் செய்தான்.

கூட்டமாய் இருக்கும் அரசு பேருந்தில் அவன் ஒருவன் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது கண்டெக்டர் கருத்தில் பதியவில்லை.

அவன் ஏறிய பேருந்து பிராட்வே வந்து இறக்கி விட்டு டிப்போவில் நின்றது.

அங்கிருந்து நடந்து வந்த பொழுது தான் ஒரு கடையின் முன் பைக்கில் உணவு பொட்டலங்கள் இருக்க கண்டு எடுத்து ஓடி வந்து வயிற்றை நிறைத்தான்.‌

பூக்கடை பேருந்து நிலையம் அருகே பாதையோரம், யார்‌ யாரோ தரையில் படுத்து உருள இருட்டுவதால் நிரஞ்சனும் பேருந்து நிறுத்தம் இருக்கும் ஓரிடத்தில் வந்து பெஞ்சில் படுத்தான்.

உணவு பொட்டலத்தை தன் உறங்கும் இடத்தில் பொந்து போன்ற இடத்தில் கவரோடு ஒளித்து வைத்தான். 

தன்னை எண்ணி தாய் தந்தை எண்ண நிலையில் இருப்பார்களென்ற எண்ணம் கூடயின்றி‌ வயிற்று பசி நீங்கவும் படுத்துக் கொண்டான்.

அவன் நினைப்பு இன்று போல எல்லா இடமும் பணமின்றி பயமாகலாம். உணவு திருடி திண்றிடலாம். தினமும் எளிதாக கிடைக்குமென்ற மிதப்பு.

இளம்கன்று பயம் அறியாதே. சிறுவன் பயமின்றி நித்திரையில் கிடந்தான்‌. அவனுக்கு தான் ஓடிவந்து தவறென இன்னமும் காலம் பாடம் புகட்ட வில்லையே. காலம் பாடம் புகட்டும் போது அவன் ஜெபிப்பது அப்பா அம்மா என்று வாழும் தெய்வங்களை தான் அழைப்பான் நாடுவான்.

இன்று அவனை பெற்றவர்கள் தான், சொட்டு தண்ணீரும் பருகிடாமல், உயிரற்ற ஜடமாய் பினமாய் இருந்தார்கள்.

ஜெய்சங்கரோ அலைந்து திரிந்து அசதியில் தவிக்க, இதில் சிவகாமி வேறு அழுதழுது உடலை வருத்திக் கொள்ள மருத்துவமனைக்கு சேர்த்திருந்தார்கள். 

இப்படி இரண்டே நாளில் ஒடுங்குவாளென யார் கண்டது.

அரசு மருத்துவமனையில் ஜெய்சங்கர் கவிநிலாவை வைத்து கொண்டு இருக்க, சிவகாமியின் அன்னை மாரியம்மா வந்து சேர்ந்தார். 

மகள் பிள்ளையை தொலைத்து மருத்துவமனையில் கிடக்க அந்த தள்ளாத வயதிலும் வந்தார்.

மாரியம்மாவிற்கு பார்வை சிறிதளவே மங்கியிருக்கும். வயது கூடுதலென்றும், மருத்துவமனையில் கண் பரிசோதிக்க மாட்டேனென்றும் பிடிவாதம் செய்து உடலை கெடுத்துக் கொண்டவர். தற்போது மகளை காண வந்தார். ஜெய்சங்கரோ கவிநிலாவை மாமியாரிடம் கொடுத்தார்.

‌ “சிவகாமியை நான் பார்த்துப்பேன் அத்தை. கவி தான் பயப்படறா. அவளை கூட்டிட்டு போங்க” என்றதற்கு “என் மகளும் எனக்கு முக்கியம்” என்று அரசாங்க மருத்துவமனை அரசமரத்தடியில் பேத்தியை வைத்து படுத்தார். மகளை அடிக்கடி வந்து பார்த்தார்.

பேரனை காணவில்லை என்று வில்லுப்பாட்டாய் பாடி ஒப்பாரி வைத்தார்.
ஆண் வாரிசு என்ற கூடுதல் காயம் மாரியம்மாவிற்கு‌.

அவர் ஒப்பாரி வைக்க ஜெய்சங்கர் தான் பொட்டு உறக்கமின்றி மகனை கடிந்தது தவறோயென யோசித்தார்.

தாங்கள் சிறுவராக இருந்த காலத்தில் இதை விட ஜெய்சங்கரின் தந்தை பெல்ட் அடி, பிரம்படி, கண்ட மேனிக்கு செருப்படி எல்லாம் வாங்கியதுண்டு. ஆனால் அப்பொழுது எல்லாம் தாய் தந்தையரை விடுத்து செல்ல எண்ணியதில்லை. இன்று இந்த காலத்து பிள்ளைகள் இம்மென்று கூறவும் இப்படி வீட்டை விட்டு செல்கின்றனரே. எப்படி தான் வளர்ப்பதோ? இனி எப்படி வளர்ப்பேன்? என்‌மகன் இங்கே இல்லையே?! எங்கே என்‌ மகன்? என்று துடித்தார். அவன் சாப்பிட்டானா தூங்கினானா? எங்கிருக்கின்றானோ?

அன்றைய நாள் இப்படி தான் மனபாரத்தோடு கழிந்தது.

-தொடரும்.

8 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-4”

  1. அச்சோ..! என் தான் இந்த காலத்து புள்ளைங்களுக்கு
    இத்தனை அவசரமோ….???

  2. பெத்தவங்களுக்கு தான் தெரியும் வலியும் வருத்தமும். அந்த பிள்ளை சாப்பிட்டு இருப்பானோ எங்க தூங்கி இருப்பான் என்ன பண்ணிக்கிட்டு இருப்பான் என்று நினைத்து நினைத்து கரைந்து போவாங்க சிறு பிள்ளைகளுக்கு அது எங்கிருநது தெரிய போகுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!