அத்தியாயம்-7
நிரஞ்சன் இனியும் தன்னால் இந்த சென்னையில் தனியாளாக வாழ்வது கடினமென உணர்ந்தான்.
சாப்பிடாமல் கண்ணை கட்ட தள்ளாடினான்.
தாய் தந்தை நினைவு தாக்கவும் கண்ணீர் துளிகள் வழிந்தது.
யாரிடமாவது போன் வாங்கி அப்பாவின் எண்ணிற்கு அழைத்தாள். அவரே வந்து அழைத்து செல்வாரென நம்பினான்.
அதன் பொருட்டு யாரிடமாவது கேட்டிட கையேந்தி நின்றான்.
சார்… சார், அண்ணா…அண்ணா என்று கேட்க, நிரஞ்சனின் அழுக்கு சட்டையும் தோற்றமும் மற்றவர்களை எட்டி நிறுத்தியது.
அருவருப்பாய் கடக்க தள்ளி நடந்தார்கள்.
பிச்சை எடுக்கும் சிறுவனாக தோற்றம் மாறியிருந்தது. பாவம் பார்த்து சில்லறையை அவனிடம் வழங்கிவிட்டு நின்று நிதானமாக கேட்டிடாமல் தள்ளி சென்றார்கள்.
இங்கு வந்தப்புதிதில் யாரிடமாவது வீட்டை விட்டு ஓடி வந்ததாக கூறி போன் கேட்டியிருந்தால் கொடுத்திருப்பார்கள்.
இன்றோ திருடனை போல மற்றவர் பார்வைக்கு முற்றிலும் மாறி இருந்தான்.
இதில் கூடுதலாக அருவருப்பான தோற்றம் இருப்பதால் யாருமே தங்கள் அலைப்பேசியை தரமுன்லரவில்லை.
கோவில் மணியடிக்கும் சப்தம் கேட்க திபுதபுவென அங்கே ஓடினான்.
முண்டியடித்து வந்தவனின் நலுங்கிய தோற்றத்தில் கோவில் பிரசாதம் கிடைக்கும் பாக்கியம் அமைந்தது.
அழுக்கு கைகளோடு பிரசாதத்தை விழுங்கி விட்டு சட்டையிலேயே கையை துடைத்தான் நிரஞ்சன்.
அப்பொழுது எதிரே வந்த பிருந்தாவிடம் வழி மறைத்து போன் கேட்க, தயங்கி தரமறுத்தாள்.
அப்படியே தரையில் விழுந்து காலை பிடித்து கொண்டான்.
“அக்கா அக்கா வீட்டை வீட்டு ஓடி வந்துட்டேன் அக்கா. எங்கப்பா அம்மா என்னை தேடுவாங்க. நான் எங்கப்பாவிடம் இங்க தான் இருக்கேன்னு சொல்லிட்டு போனை திருப்பி கொடுத்திடுவேன்” என்றுரைக்க ஆதுரமாய் அருகே அழைத்து எழ வைத்தாள்.
கையில் சர்வானந்தனிற்காக எடுதாது வந்த பழச்சாற்றை பருக கொடுத்தாள். மறுக்காமல் வாங்கி குடித்துவிட்டான்.
முன்பெல்லாம் முகமறிமாதவர்கள் ஏதேனும் கொடுத்தால் வாங்க கூடாதென்ற அன்னை சிவகாமி மொழிகள் இங்கு வந்ததிலிருந்தே மறந்துவிட்டான். இதில் பிச்சை திருட்டு என்று இந்த வயதில் பார்த்துவிட்டான். தற்சமயம் பசியால் யார் எது உணவென்று நீட்டினாலும் யோசிக்காமல் வாங்கினான்.
நல்லவேளை பழச்சாறை நீட்டியது பிருந்தா.
நிரஞ்சனும் தன் தாய் தந்தைக்கு போனை போட்டான். ஆனால் அந்தப்பக்கம் போன் நிசப்தமாக இருந்தது.
யாரும் எடுக்கவில்லை என்றதும் நிரஞ்சனின் பயம் அதிகரித்தது.
“அக்கா போன் எடுக்கலை” என்று தேம்பி அழுதவன், பிருந்தாவோ “ஏதாவது முக்கியமான வேலையா இருக்கலாம். கவலைப்படாத மறுபடியும் போடு. நான் கூடவேயிருக்கேன்.” என்று நம்பிக்கை தந்தாள்.
தற்போது அவனுக்கு தெம்பு தந்து “வீட்டை விட்டு வரலாமா தம்பி தப்பில்லை? ஆமா உன் ஊர் அப்பா அம்மா பெயர் என்ன? எத்தனை நாளா பிரிந்திருக்க? என்னாச்சு? இத்தனை நாளாக சாப்பிட என்ன செய்த? என்று கேட்டாள்.
நம்பரை மீண்டும் அழுத்திவிட்டு காதில் வைத்து, “என் பெயரு நிரஞ்சன் அக்கா. ஊர் மதுரைக்கா, அம்மா சிவகாமி, அப்பா ஜெய்சங்கர், எனக்கு ஒரு தங்கச்சி கவிநிலா இருக்கா.
வீட்ல படிக்கலைனு திட்டி அடிக்கவும் ஓடி வந்தேன். ஓடி வர்றப்ப ஜாலியா இருந்தது. த்ரிலிங்கா… ஆனா இப்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு. அடிச்சாலும் திட்டினாலும் நம்ம அப்பா அம்மா இருந்தா எனக்கு இந்த நிலைமை இல்லை. எனக்கு அப்பாவை பார்க்கணும்னு போல ஆசையாயிருக்கு.
அம்மாவுக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் இல்லைனா அது சாப்பிட்டிருக்குமோ என்னவோ?” என்று அழுதபடி கூறவும் பிருந்தாவுக்கு அவள் தாய் தந்தை நினைவு மனதிற்குள் தோன்றினர்.
நாமும் காதலித்து வீட்டை எதிர்த்து வந்துவிட்டோம். அப்பா அம்மா விரட்டி விட்டார்கள். ஆனாலும் உள்ளுக்குள் தேடுவார்களோ? மாமா மகன் என்றாலும் அவர்களை மீறி மணந்தது கவலை தருமல்லவா? ஒன்றாக அமர வைத்து தன்மையாக பேசி பார்த்திருக்க வேண்டுமோ? இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்னை பற்றி நினைப்பார்களா?’ என்ற சிந்தனையில் இருந்தவள் தன்னருகே இருந்த நிரஞ்சன், “அய்யோ போலீஸ், ஏன் அக்கா போலீஸை கூப்பிட்ட? நான் தான் திருடலைனு சொன்னேனே. அச்சோ ஜெயிலில் போட்டுடுவாங்களே” என்று கூறி போனை கீழே போட்டு விட்டு ஓடவும், பிருந்தா நினைவு கலைந்தது. இவளிடம் தன்னை பற்றி கூறும் நேரம் அங்கே கவிநிலா போனை அட்டன் செய்திருந்தாள். ஆனால் பதில் பேசும் முன் அவள் ஆச்சி, “இங்க என்ன பண்ணற, போனை வச்சிட்டு வா. அங்க உன் அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்யணும்” என்று இழுத்து சென்றார்கள்.
நிச்சயம் தான் இல்லாமல் தன் தாய் உண்ணாமல் உறங்காமல் பித்து பிடித்து இறந்திருக்கலாம் என்பது நிரஞ்சன் தாமதமாக அறிவானோ? அல்லது அறியாமல் போவானோ?
“தம்பி நிரஞ்சன். டேய்… அவர் என் புருஷன் டா” என்று பிருந்தா கத்தியும் ஓடி செல்வதில் குறியாக இருந்தான் நிரஞ்சன்.
இந்த ஓட்டம் இன்னமும் நிரஞ்சன் வாழ்வில் நின்றதாக இல்லை.
“ஏய் யாரிடம் என்னை அறிமுகப்படுத்தற?” என்று ஓடும் சிறுவனை கவனித்தான் சர்வானந்தன்.
“இவனா… இவன் என்னை பார்த்து பார்த்து ஓடறான். ஏய் ஏதாவது அவன் கொடுத்ததை சாப்பிட்டியா” என்று பயந்தான். காரணம் சிறுவன் சிறுமியர் கடத்தல் பற்றிய கேஸ் பைல்லை இவன் கையிலெடுத்ததிலிருந்து இந்த சிறுவன் தன் கண்ணில் தோன்றி தோன்றி மறைகின்றான்.
யாராவது சிறுவனை வைத்தே மனைவியிடம் நெருங்கி அவளை வைத்து என்னை பணயம் செய்வார்களோ என்று போலீஸ்காரன் மூளை அவ்விதமாக சிந்தித்தது.
தன்னை நம்பி வந்தவள் பிருந்தா. புதிதாக திருமணமாகி தன்னால் அவள் நலன் பாதிக்க கூடாதென்ற பாதுகாப்பிற்கு அவன் கேட்டான்.
“இல்லைங்க… அவன் அப்பா அம்மா அவனை திட்டியதால் வீட்டை விட்டு ஓடிவந்துட்டானாங்க. இப்ப அப்பா அம்மா பார்க்கணும், சாரி கேட்கணும்னு நினைக்கறான். அவனால் எப்படி திரும்பி போறதுன்னு தெரியலைனு அழுதான். போன் கொடுத்தேன் அவங்க பேரண்ட்ஸிடம் பேச ட்ரை பண்ணினான். ஆனா அவங்க எடுக்கலை. உங்களை பார்த்ததும் ஓடிட்டான்.
என்ன முகறகட்டையோ? சின்ன குழந்தைகளை கூட பயமுறுத்தற முகம் உங்களோடது” என்று சலிப்படைந்தாக சிரித்தாள்.
”அவன் என்னிடம் சாப்பிடு பொட்டலத்தை திருடியதால் நான் அவனை ஜெயில்ல போடுவதா நினைச்சிருக்கலாம்.
என் முகறகட்டை எல்லாம் கன்னிப்பெண்கள் உள்ளத்தை களவு கொள்ளும் விதமா தான் இருக்கு” என்று கூறினான்.
கீழே போட்டு சென்ற போனை நிதானமாக எடுத்தான்.
பச் கீழே விழுந்ததில் போன் உடைந்திடுச்சு” என்று பார்வையிட, போன் கால் அட்டன் செய்ததை பார்த்தான்.
“ஏய் பிருந்தா போன் அட்டன் பண்ணிருக்காங்க.” என்று கூற, பேசுங்க” என்று ஊக்கினாள்.
“என்னத்த பேச” என்று காதில் வைக்க, தூரத்தில் ஒப்பாரி சப்தம் கேட்டது.
“சம்திங் அழுதுட்டு இருக்கற மாதிரி இருக்கு.” என்று கூறவும் போனை கொடுங்க” என்று வாங்க தெரியாமல் கை பட்டு போன் துண்டிப்பானது.
“அச்சோ கட் பண்ணிட்டேனே” என்று கூறி மீண்டும் முயற்சிக்க சைலண்டில் இருந்த போன் ஒளிர்ந்து ஒளிர்ந்து அடங்கியது.
யாரும் எடுக்கலை” என்று பிருந்தா உதடு பிதுங்க, “மிஸ்ட் கால் பார்த்து கால் பண்ணுவாங்க” என்று கூறினான்.
“பாவம்ங்க வீட்டை விட்டு ஓடிவந்து இத்தனை நாள் கிடைப்பதை திருடி சாப்பிட்டு பிச்சை எடுத்து இருந்திருக்கான். இப்ப அம்மா அப்பாவை பார்க்கணும்னு அழுதான்.
நீங்க இப்படி போலீஸ் டிரஸ்ல வராம இருந்தகருந்தா அவன் ஓடியிருக்க மாட்டான். என் கூட வர்றப்ப காக்கி டிரஸை அவாய்ட் பண்ணுங்கன்னு சொன்னா எங்க கேட்கறிங்க?
தன்மையாக பேசி அவனை அவன் அப்பா அம்மாவிடம் சேர்த்திருப்போம்.” என்று கவலை கொண்டாள்.
பிருந்தாவிடம் போனை கொடுத்து, “உன் புருஷன் போலீஸ் பிருந்தா. இந்த யூனிபார்ம் தான் போட முடியும். உனக்கென்ன அந்த பையனை அவங்க அப்பா அம்மாவிடம் சேர்க்கணும் அவ்ளோ தானே? என்உயிரை போனாலும் அவனை தேடி கண்டுபிடிச்சி அவங்க அப்பாவிடம் சேர்க்கறேன் இது என் பிருந்தா மேல பிராமிஸ்” என்றான்.
“கோவில்ல வந்து என்ன பேச்சு பேசறீங்க? உயிரே போனாலும் அதுயிதுன்னு கேட்க கஷ்டமாயிருக்கு. அவனை கண்டுபிடிச்சி சேர்த்துடுவிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு. இனி இப்படி பேசாதிங்க” என்று அதட்டினாள்.
சர்வானந்தனும் சரி என்பதாக முறுவலித்தான்.
பிருந்தாவோ தன் போனில் கால் அழைப்பு கொடுத்து பேசுவதை பதிவாக மாற்றும் படியாக போனில் செட்டிங்க்ஸ் வைத்திருக்க, அதனை எடுத்து, சர்வானந்தனை கேட்க வைத்தாள்.
சர்வானந்தன் கேட்டு முடித்து, ”சீரியஸ்லி அவன் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் தானானு செக் பண்ணிடறேன். அவன் இந்த நம்பருக்கு தானே அழைச்சான். எனக்கு அந்த நம்பரை செண்ட் பண்ணிடு. அதோட அந்த கால் ரெக்கார் வாய்ஸையும் அனுப்பு. அவங்க பேரண்ட்ஸிடம் போன் பண்ணி விசாரிச்சிட்டு கன்பார்ம் பண்ணிக்கறேன்.” என்று போலீஸ் அதிகாரியாக தன் கடமையை ஆற்ற கூறினான்.
அதன்படி அந்த எண்ணிற்கு அழைப்பை போட யாரும் எடுக்கவில்லை. எப்படி எடுப்பார்கள்? இழவு விழுந்த வீட்டில், இறந்து சடலமாக கொண்டு சென்ற சிவகாமி போன் சைலண்டில் கிடக்க, கவிநிலா முதலில் அட்டன் செய்து அன்னையிடம் கொடுக்க முடியாது விழித்து தந்தையை தேட, தந்தை நீர்குடம் எடுக்க சென்றியிருக்க, கையில் வைத்து முழித்தாள். காதும் கேட்கும் செவித்திறனின்று, பேசும் திறனற்ற ஊமையவள் எவ்வாறு விவரிப்பாள். ஆச்சியிடம் ஏதோ கூற வர அன்னைக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென ஊமை மொழியை உதாசினம் செய்துவிட்டாரே. இனி சிவகாமியின் போனை யாராவது எடுத்து பார்த்து அழைத்தாள் உண்டு.
-தொடரும்.

Pavam avana ninachi avanga amma poitanga ithu therinja ivan ena pana porano
அச்சோ பாவம்..! இப்படி நிரஞ்சன் செய்த தப்பால ஒரு குடும்பமே சிதைஞ்சு போச்சே.
Enna nu sollurathu pavam.sivagami pillai illa nu erandhu yae poitaga
Sentimental epi
🥺
நிரஞ்சன் செய்த வேலையில் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த நிரஞ்சனால அவனோட அம்மா உயிர் போய்டுச்சே