Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-30

90’s பையன் 2k பொண்ணு-30

ரிஷிவா-30

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      “நேத்து வந்திங்க இன்னிக்கே போகணுமா?” என்று வேதாச்சலம் கவலையாய் கேட்டார்.

    “நாளைக்கு ஆபிஸ் இருக்கு தாத்தா. கண்டிப்பா போகணும்” என்று ரிஷி கூறிவிட்டு கடைசி மிடறாய் காபி விழுங்கினான்.

     “ஆபிஸ் போவீங்கனா… ஷிவா குட்டி இங்க இருக்கட்டுமே. வீட்ல சம்பந்தியும் இல்லைனு சொன்னிங்க” என்று மனோகரி கேட்டதும் ஷிவாலியோ ரிஷியிடம் பார்வையால் மறுக்க கூறினாள்.

     “அவயிஷ்டம் பாட்டி” என்றவன் கள்ளச்சிரிப்பு சிரிக்க, ராமமூர்த்தியோ “அதெல்லாம் சின்ன மாப்பிள்ளை கூடவே ஷிவாலி போகட்டும் அம்மா. மாப்பிள்ளைக்கு கூடமாட சமைச்சி கொடுக்கட்டும்” என்று கணீர் குரலில் ஆணையிட்டார்.

     “அவன் மகளுக்கு சட்னி கூட அரைக்க தெரியாது” என்று வேதாச்சலம் கூற ரிஷி சிரிக்க என்று பொழுது போனாலும் இரவு உணவாக இட்லியை அவித்து சிச்சன் குழம்பையும் ஊற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

     அனைவரிடமும் விடைப்பெற்று பைக்கில் பயணம் செய்யும் போது, “அடேய்.. அதென்ன அவயிஷ்டம்னு ஆன்சரை என்னிடம் திருப்பி விடற” என்று இறுக அணைக்கவும் ரிஷிக்கு அவளின் அணைப்பு சிறகுகள் பூட்டி பறக்கும் பரவசத்தை கொடுத்தது.

    “எப்படியும் அப்படில்லாம் பிரிக்க மாட்டாங்க மா. அவங்க அனுபவம் நம்ம வயசு. ஷிவ்… என்னை விட நீ ஒன்பது வயசு சின்னவடி” என்று வருத்தமாய் கூறினான்.

    “அதுக்கு என்ன… நோ பிராப்ளம்” என்றதும் தான் ரிஷி மீண்டும் அகமகிழ்ந்தான்.

     வீடு வந்ததும் தங்கள் வீட்டுக்கு சென்று இட்லி குழம்பு ஊற்றி சாப்பிட்டனர்.

     “நாளைக்கு ஆபிஸ் போகணும்.” என்று இன்றே உடையை எடுத்து வைக்க சென்றவனை வழிமறைத்தாள்.

     “கண்டிப்பா போகணுமா… ஏதோ லீவு நிறைய இருக்குனு சீனை போட்ட” என்று கேட்டாள்.

   ரிஷிக்கும் இதே ஆசை உள்ளுக்குள் இருந்தது. ஆனால் அவனாய் கேட்டு மறுத்துவிட்டால் என்று தவிர்த்தான்.

      “லீவு… இருக்கு… ஹனிமூன் போகலாமா?” என்று பக்கம் வந்து கேட்டான்.

“ம்ம்… போகலாம்.. நான் ஆல்ரெடி ஊட்டில படிச்சதால இந்த ஊட்டி வேண்டாம்.  வேற பிளேஸ் போகலாம்” என்றாள்.

      “தேனி போகலாமா?” என்று தன்மையாய் கேட்டான்.

     “ம்ம்.. போகலாமே.” என்றவள் “ஏய்.. அது உங்க அக்கா ஊர்ல… அங்க எதுக்கு டா.” என்றாள் சுதாரித்து.

    ஆஹா மாட்டிக்கிட்ட டா ரிஷி நீ பொடிடப்பி எல்லாத்திலும் உஷாரு’ என்றவன் “அதுவொன்னுமில்லை ஷிவ் அக்கா விருந்து வைக்கிறாளாம். உன்னையும் என்னையும் எப்ப வர்றனு நேத்து மதியம் கேட்டா வர்றேன்னு சொல்லிருந்தேன். நாம அங்கயே இருக்க வேண்டாம். அங்க விருந்து முடிச்சிட்டு கொடைக்கானல் போகலாம். இல்லை மூனாறு போகலாம். சாய்ஸ் இஸ் யுவர்” என்று கூறவும் ஷிவாலி அங்கும் இங்கும் நடந்தாள்.

பத்துநிமிடத்திற்கு மேலாக நேரமெடுத்து “ஓகே போகலாம் ஏதாவது என்னை நோண்டிட்டே இருந்தாங்க அப்பறம் ஷிவாலி யாருனு காட்டிடுவா சொல்லிட்டேன்” என்று கூறவும் ரிஷியோ சம்மதமாய் தலையாட்டினான்.

       “நாளைக்கு ஈவினிங் பஸ்ல ஸ்லீப்பர் கோச் டிக்கெட் எடுக்கவா” என்று பதமாய் கேட்க, “ஹம்ம்” என்றவள் ரிஷியை கண்டு “நீ என்னிடம் நடிக்கிறியா ரிஷி” என்றாள்.

       “வேண்டாம்னா சொல்லு எதுவும் டிக்கெட் எடுக்கலை. எங்கயும் போகலை. ஏன் இங்கயே டிஸ்டன்ஸுல இருந்துப்போம். என்னை இப்படி கேட்டு காயப்படுத்தாதே.” என்றவன் கோபமாக நாளைக்கு அலுவலகம் செல்ல உடையை ஐயர்ன் செய்து எடுத்து வைத்து விட்டு படுக்க சென்றான்.

      “சந்தியா அம்மாகிட்டிருந்து வாங்கி போட்டுட்டு போன நகையை தொலைச்சிட்டா. அம்மா செம கோபமா இருக்காங்க. அப்பாவுக்கு தெரியாது.” என்று தேவையற்றதை பேசினாள்.

      “எனக்கு தேவையில்லாத விஷயம்” என்று முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

     “உன் வானதி அழகா இருக்கா. நாட் பேட்…” என்றாள்.

     “அவ எனக்கு சொந்தமானவள் இல்லை. எவனோ ஒருத்தனோட ஓய்ப் மட்டும் தான். ஜஸ்ட் எக்ஸ் லவ்வர். நீ தான் எனக்கு சொந்தமானவள். நீ தான் என் மனசை பொருத்தவரை  உலகத்துலயே அழகாயிருக்க ” என்றான் காட்டதுடன்.

    “உன்னோட ஷிவ்வா? நான்” என்றதும் தலையை ஆமென அசைத்தான்.

   முதுகிலே படுத்து கொண்டு, “ஆபிஸ் லீவுனு மெயில் பண்ணலை. எத்தனை நாள் லீவ் எடுக்க போற” என்று கேட்டாள்.

     தெரியலை… நாளைக்கு மெயில் பண்ணிக்கறேன்” என்று திரும்பி படுத்து அவளை கட்டி பிடிக்கவும், அவன் வெற்று மார்பில் கோலமிட்டபடி, “ரிஷி… எனக்கு இப்ப பாப்பா எல்லாம் வேண்டாம். மினிமம் இரண்டு வருஷம் தள்ளி வைப்போமே” என்றாள்.

     ரிஷி அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாய் தளர்த்தினான்.

    “நான் டிஸ்டன்ஸ்ல இருந்துக்கறேன்” என்று திரும்ப, “ரிஷி ரிஷி… அதுக்கு எதுக்கு திரும்புற. வேறயேதாவது… அதுக்கு வேற இருக்கானா யோசி. அதுவரை ஓகே” என்று பார்வை தழத்தி அவளாகவே தீர்வை கூறினாள்

“ஷிவ்…” என்று இழுத்தவன் ‘இப்ப டயர்டா இருக்கு’ என்று கூறவந்தவன் அவளின் ‘ஒன்ஸ் நான் கேட்டு கிடைக்கலைனா அது ரிஜெக்டட் தான்’ என்ற வார்த்தை அசரிரீயாக கேட்டதும் வார்த்தை விடவில்லை.

     “ஓகே ஷிவ். நாளுக்கு அதுக்கான யூஸேஜ் வாங்கிடறேன்.” என்று கூறினான்.

    ஷிவாலி கழுத்தை கட்டி முத்தம் வைக்க, உடல் அசதி கூட பறந்தோட அவளை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான்.

     அடுத்த நாள் எழுந்ததும் எட்டு மணி, அதுவும் சரண்யா போன் போட்டு ஆபிஸ் கிளம்பிட்டியா வேந்தா. என்ன சாப்பிட்ட? என்ன லஞ்ச்?” என்றதும் தான் படுக்கையில் இருந்தே எழுந்தான்.

    “அம்மா… அக்கா விருந்துக்கு கூப்பிட்டா சொல்ல மறந்துட்டேன். அதனால டிக்கெட் எடுக்க, துணிமணி எடுத்து வைக்கனு இன்னிக்கு சரியா இருக்கும்னு ஆபிஸ் போகலை. லீவை எக்ஸ்டெய்ன் பண்ணிட்டேன்.” என்று பிரஷில் பேஸ்ட்டை வைத்து பேசிமுடித்தான்.

      “சரிதான்.. உங்கக்கா கூப்பிட்டு போகலை அப்பறம் இதுக்கு ஒரு ஒன்ற முழத்துக்கு எட்டு கட்டு பாடுவா. என் தம்பி விருந்துக்கு கூப்பிட்டா வரலை. அதுயிதுனு என்னையும் போன்ல கடுப்படிப்பா. போயிட்டு வர்றது நல்லது தான் ஆனா ரிஷி மருமகளை ஏதாவது சொல்லிட போறா டா.

     டிரஸை மட்டும் பார்த்து போட்டுட்டு கூட்டிட்டு போ. கல்யாண பட்டு எடுக்கறப்பவே கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டானு ஒரு மார்க்கமா பேசி பேசியே என் காதுல ஓட்டை போட்டுட்டா.
இப்பவும் ஏதாவது சொல்லப்போய் உங்களுக்குள் மனஸ்தாபம் வந்திடக்கூடாது. ரிஷி.. ரிஷி.. ” என்று கத்த, “கேட்குது மா” என்று சமாளித்தான்.
  
    எதிரே பேஸ்ட் பிரஷ் என்று ஷிவாலி வந்ததிலிருந்து தாய் பேசுவதை கேட்டாலும் அது வெளியே அவள் காதுவரை கேட்டிடுமோ என்று பயந்தான். அவள் நகர்ந்ததும் தான் நிம்மதியடைந்தான்.
 
       “அப்பறம் அந்தப்பிள்ளை நல்லப்படியா பேசறாளா டா.” என்று கேட்டார்.

      “ம்மா… அவ என்னை ஹஸ்பெண்டா பார்க்க ஆரம்பிச்சிட்டா மா. நீ சொன்ன மாதிரி அன்பா பொறுமையா இருந்ததுக்கு பலன் இருக்குமா. அவளும் நானும் தேனிக்கு அக்கா வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஹனிமூன் போகலாம்னு இருக்கோம் மா” என்று வார்த்தைக்கு வலிக்குமோ என்பதாக மெதுவாய் தயங்கி நாணப்பட்டு பேசி முடித்தான்.

      “சந்தோஷம் டா… இப்ப தான் மனசு குளிர்ந்திருக்கு. நல்லபடியா போயிட்டு வாங்க டா.” என்று போனிலே ஆசிர்வாதித்தார்.

     கண்ணபிரான் என்ன என்று செய்கையில் பேசிமுடித்து சொல்வதாக கூறிவிட்டார்.

      “சரிகாவை பார்க்க வந்துட்டு அப்படியே சாவி கொடுத்துட்டு போடா. சட்டுனு உங்கப்பா அங்க போகணும்னு சொன்னாலும் சொல்லுவாரு.” என்று கூறி பேசி அணைத்தார்.

     போன் பேசி முகமலம்பி ஷிவாலியை தேடினான். கீழே இரண்டு ரோஸ் மில்க் எடுத்து வந்து நீட்டினாள்.

     “ரிஷி… பால் சில்லுனு இருக்கு. ரோஸ் மில்க் நல்லாயிருக்கும். எதுக்கு கேஸ் வேஸ்ட் பண்ணற இதை குடி” என்று திணிக்க, காபி அல்லது டீ குடித்து பழகியவனுக்கு அதிகாலை ரோஸ் மில்க் குடிக்க பிடிக்கவில்லை இருந்தும் அவளாக கொடுக்க மறுக்க மனமின்றி வாங்கிக் கொண்டான்.

     “ரிஷி… இந்த டிபார்ட்மெண்ட் கடையில சட்னி எல்லாம் பேக்கிங் இருக்காதா.” என்றதும் ரோஸ்மில்கை பருகி கொடுத்தபடி, “வத்தகுழம்பு, புளிக்குழம்பு, தக்காளி தொக்கு, பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி தான் இருக்கும். சட்னி இருக்காது ஷிவ். ரொம்ப நாள் பேக்கேஜ் இருக்காது கெட்டுடும். உடம்புக்கு நல்லதும் கிடையாது.” என்றான்.

      அவன் சொன்ன உணவு குழம்பு பட்டியலை மட்டும் மண்டையில் ஏற்றி அதெல்லாம் வாங்கி ப்ரிட்ஜில் ஏற்றிட வேண்டும். சமைக்கும் நேரத்திற்கு இது எளிதாக கைக்கொடுக்கும் என்று கணக்கிட்டாள்.

    நேரமாக லாப்டாபிலேயே சர்வேஷ் டிராவல்ஸிற்கு போன் போட்டு தேனிக்கு இரண்டு ஸ்லீப்பர் கோச் பஸ் டிக்கேட் எடுத்தான்.

   கையோடு ஆபிஸிற்கு மெயிலில் லீவை அதிகப்படுத்தினான்.

    தோசை இட்லி பொடி என்று அவள் தட்டை நீட்டவும் மறுக்காமல் வாங்கி கொண்டான்.

   அட்லிஸ்ட் தோசையாவது சுட்டு தந்தாலே என்ற பாஸிடிவ் தான் காரணம்.

       மதியம் சமைத்தால் அதுக்கு வேறு நேரமெடுக்கும் பாத்திரம் கழுவ வேண்டும் என்று சாம்பார் சாதம் தயிர்சாதமென அருகேயிருக்கும் ஹோட்டலில் ஆர்டர் கொடுக்க, அவன் கைகளோ ‘அடிக்கடி வெளி உணவா?’ என்று கேட்டது.

     ஷிவாலியை பார்க்க அவளோ ஆசையாய் ஆசை ஆசையாய் துணி மணி எடுத்து வைக்கவும், உதடு தானாய் முறுவலிட்டு ஆர்டரை கொடுத்துவிட்டான்.

     “ஷிவ் ஒரே ஒரு சேரி எடுத்து வைக்கிறியா? அவங்க ஊர்ல கட்டிட்டு அப்பறம் கழட்டிடு” என்றதும்,  “ரிஷி எனக்கும் ஆசை தான் ஆனா பாரு கட்ட தெரியாது.” என்று பொய்யுரைத்தாள்.

      “ஓ… கட்ட தெரியாதா..” என்றவன் யோசித்து “சுடிதாராவது எடுத்து வச்சிக்கோ” என்றதும் ஜீன் டாப் ஸ்கர்ட், ஜெக்கின்ஸ் ஷார்ட் டவுசர் என்று எடுத்து வைத்தவள் சொன்னதால் இரண்டு சுடிதாரை எடுத்து வைத்தாள்.

      இதுவே திருப்தி அடைந்தவன் அவனின் போன் சார்ஜர் மடிக்கணினி என்று எடுத்து வைத்தான்.

     அடுத்து அவனுக்கு டீஷர்ட் என்று எடுத்து வைக்க நேரம் போனது.

   சாப்பிட்டு வீட்டை சேர்ந்து பெருக்கி முடித்து ஜன்னலை சாற்றினார்கள்.

      “நான் கடைக்கு போயிட்டு வந்துடறேன்” என்று செல்ல, “ரிஷி நானும் வர்றேன்” என்று பறந்தாள்.

     “ஏ… டிபார்ட்மெண்ட் கடையில்லை. மெடிக்கல் ஷாப்புக்கு நீ வேண்டாம்” என்று வண்டி கீயை எடுக்க “என்னாச்சு ரிஷி? என்ன வாங்கணும்?” என்று தண்ணிர் பாட்டிலை நிரப்ப எடுத்தாள்.

     “நீ தானே பேபி பார்ம் ஆகிடுமோனு பயந்த. அதனால… அது வாங்கணும்” என்றதும் தண்ணிரை வழிய விட்டவள் “சீக்கிரம் வந்துடு. வேறயேதாவது விட்டு போயிருக்கா?” என்றாள்.

    “ஏய் உனக்கு பேட் இருக்கா. வாங்கணுமா?” என்று கேட்டான்.

     “இங்க வந்தப்ப தானே பீரியட்ஸ் டா. அதனால பதினைந்து நாள் கிட்ட தான் ஆகுது தேவைப்படாது. ஊருக்கு போயிட்டு வந்து வாங்கிக்கறேன்.” என்று கூறினாள்.

   “ஓகே ஓகே… ஏய்.. உனக்கு பிளேஸ் மாறினா கோல்ட் தலைவலி ஏதாவது வருமா? டிராவல்ல வாமிட் அதுமாதிரி..? சொன்னா அதுக்கும் மருந்து கேட்டு வாங்கிட்டு வந்துடுவேன்” என்றான்.

     “அதெல்லாம் வராது.” என்றாள் ஷிவாலி.

     ” சரி வந்துடறேன்” என்று மெடிக்கல் ஷாப் வந்து ‘அதனை’ கேட்டு வாங்கினான்.

    தெரிந்த கடை என்றதும் கடை ஆளும் தெரிந்தவன் என்றதால், “என்ன ரிஷி… இப்ப குழந்தை வேண்டாம்னு இருக்கியா?” என்றதும் “ஆமா லோகு” என்று வெட்கப்பட்டான்.

        ஆசையாய் ஆசையாய் தன் இல்வாழ்க்கையின் ஆரம்பித்தில் அடிவைக்கும் ஆடவனுக்கு ஷிவாலி கொடுக்க காத்திருக்கும் வலிகள் என்னவோ என்பது பின்வரும் நாட்களில் புரிபடும். இன்றே அவனிடம் எடுத்துரைக்க பிரம்மனுக்கு மனமில்லை.

-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
    

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!