Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-24

90’s பையன் 2k பொண்ணு-24

ரிஷிவா-24

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    கதவை திறந்து பார்த்து மணியை பார்த்தான். 12:45 க்கே புட் டெலிவரி கொடுக்க வந்திருந்தனர்.

    அடப்பாவிகளா… ஒரு முத்தம் கொடுத்து முடிக்கலை. மற்ற நேரமா இருந்தா போன் போட்டு போட்டு வெயிட் பண்ணணும்.

    வாசல்ல வந்துட்டானுங்களானு லோகேஷன் பார்த்து ஏன் லேட் என்ன ஏதுனு இருக்கும் நிலவரம். இப்ப எனக்கு காரியம் ஆகற நேரமா பார்த்து கால் ஹவர் முன்னவே வந்து தடங்கல் பண்ணறிங்களே’ என்று மனதில் புலம்பிக் கொண்டே உணவை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தான்.

    கீழே வீட்டை பூட்டிவிட்டு, மேலே வரவும் புல்ஸ்கர்ட் அணிந்து ஷிவாலி தலையை உலுக்கி கண்ணாடியில் மறுத்து கொண்டிருந்தாள்.

     “புட் தான் பிரியாணி வந்துடுச்சு. பசிக்குதுனா சாப்பிடலாம். இல்லைனா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்.” என்று அவள் பதிலுக்கு காத்திருந்தான்.

     “கொஞ்ச நேரம் போகட்டும். எனக்கு பசிக்கலை” என்று போனில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள். தற்போது அவளுக்கு அவளின் மனதை எதிலாவது மாற்றி ரிஷியின் எண்ணங்களுக்கு எதிராய் நடக்க முயன்றாள்.

    அவளின் மனம் இதழ் முற்றுகைக்கு எதிர்பார்க்கவும் ஏங்கவும் செய்தது. அவளுக்கு அது பிடிக்கவில்லை ரிஷி தன்னை இந்த உணர்வின் ஆட்பிடியில் தள்ளிவிட்டு ரசிப்பதாய் எண்ணினாள்.

      “எனக்கு பிரியாணி சூடா சாப்பிடணும். சோ நான் சாப்பிட போறேன்” என்று ரிஷி ஒவ்வொரு பாக்ஸை ஒபன் செய்து வைத்து தட்டை எடுத்து வந்தான்.

   பிரியாணி தயிர்பச்சடி கத்திரிக்காய் கொத்சு மற்றும் வறுவல் சின்ன டப்பாவில் அல்வா அதோடு பீடா என்று ஆர்டர் செய்து வந்திருக்க, தட்டில் வைத்து உண்ண ஆரம்பித்தான்.

     பிரியாணி தூரத்தில் இருக்கும் போது மனதை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதன் வாசம் முகர்ந்து விட்டால்?

    ஷிவாலியோ தட்டை எடுத்து அவளும் சாப்பிட ஆரம்பிக்கவும் மென்னகை புரிந்த மன்னனாக சாப்பிட்டான்.

      ஷிவாலி வேகமாக சாப்பிட்டு அல்வா டப்பாவை எடுத்துக் கொண்டு தனியாக வைத்து விட்டாள். ரிஷி பங்கையும் எடுத்து வைத்தவளை கண்டவன்,

”என் பங்கு இங்க தள்ளு டி” என்றதும் “வருணிடம் பிஸ்கேட் இப்படி தான் கேட்டு வாங்கி திண்பியா பிடி” என்று கொடுத்துவிட்டு மௌனமானாள்.

     அவளுக்கு தானே தள்ளி சென்று தானே அவனிடம் நெருங்குவது போல இந்த நிகழ்வில் புரிபடவும் அவள் மீதே கோபம் அதிகரித்தது.

கோபமாய் எழுந்து செல்பவளின்  கையை பிடித்தான் ரிஷி.

    “என்ன பிரட் அல்வா பிடிக்குமா நீயே வச்சிக்கோ” என்று மீண்டும் கொடுக்க, “எனக்கு வேண்டாம். எனக்கு ஒன்ஸ் என்னிடமிருந்து பிடுங்கிட்டு திரும்ப கொடுத்தா வாங்கிக்க மாட்டேன்” என்று தட்டி விட்டு சென்றாள். அவள் பேச்சில் இருந்த அழுத்தம் அவனிடம் மீண்டும் என்னிடம் நீட்டாதே என்று சொல்லாமல் சொல்லியது.

     அந்த சின்ன பிரட் அல்வா பாக்ஸ் திறந்து உருண்டது.

    ரிஷிக்கு அதனை எடுத்து ஸெல்பில் வைத்து விட்டு தூரத்திலிருந்து அவளை கவனித்தான்.

     ஒரு குழந்தை கண்டிப்பாய் பேசிய தந்தையிடமிருந்து தள்ளி சென்று வீம்பு செய்யும் பாவனையில் இருந்தாள்.

     ஆனால் அவள் மூக்கு சிவக்க நின்ற தோரணையில் நிச்சயம் இனி பிடுங்கினா அப்படி தான் வாங்க மாட்டேன் என்ற கோபம் தெரிந்தது.

   ஷிவாலியோ இனி இந்த கோபத்தை வைத்து அவனை தூர துரத்த வேண்டும். என்னையே பணிய வைக்கின்றான் என்ற ஈகோ முளைத்தது ஷிவாலிக்கு.

     தற்போது காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று யோசிக்க அவளை கெஞ்ச பின்னால் சென்றான் ரிஷிவேந்தன்.

    “ஷிவ்… ஷிவ்… கீழே போய் படம் பார்க்கலாமா?” என்று கேட்டான்.
 
     “எனக்கு பிடிக்கலை. நான் சாங்க் கேட்க போறேன்” என்று போனை எடுத்து பாடலை தேடினாள்.

     “நான் சிஸ்டம்ல ஆன் பண்ணவா. மியூசிக் பிளேயரில் போட்டு ஸ்பீக்கர்ல கேட்கலாமா.” என்றதும் ஷிவாலி மெதுவாய் முறைத்து  தலையா திருப்பி கொண்டாள்.

     90’s சாங்கை இசைக்க விட்டு மெதுவாய் இசையை கூட்டினான்.

        காதல் மன்னன், ரோஜாகூட்டம், சிட்டிசன், ஜேஜே, மின்னலே என்று பாடல்கள் வரிசையாய் வர வாலி பட பாடல் வந்தது.

    நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டி வை என்று பாடல் வரி ஹோர்மோன் அளவை கூட்டிக் கொண்டிருக்க, ரிஷி ஷிவ் அருகே அமர, தள்ளி அமர்ந்தாள்.

     “நெருங்கி வராதே. எனக்கு உன் கிஸ் பிடிக்கலை.” என்றதும் ரிஷி மொத்த சத்தும் இழந்தவனாய் தன் எண்ணத்தை ஒத்தி வைக்க பணியை கவனிக்கலாமென கணினியை இயக்கினான்.

   அவனுக்கு தெரியும் அவள் சிறிதாய் தன்னை நேசிக்கின்றாளென ஆனால் ஒப்புதலாய் கூற மறுக்கின்றாள். அதனால் அவள் பேச்சை புறம் தள்ளி கொண்டான்.

    சிறிது நேரத்திலேயே சரிகா சரண்யா வந்தனர்.

     ஆட்டோவிலிருந்தே மெதுவாய் இறங்கிய சரிகாவை கண்டு பால்கனியிலிருந்து எட்டி பார்த்து வேகமாய் இறங்க சென்றவளை, “ஷிவ்… ஷார்ட்ஸ் போட்டுட்டு போனா நல்லாயிருக்காது.” என்ற குரல் தடுக்க அவனை முறைத்து கொண்டு  முழு ஸ்கர்ட் அணிந்து இறங்கினாள்.

       ரிஷிக்கு சரிகாவின் நலம் தேடி ஓடுவதே சிறு ஆனந்தம் தந்தது.

     ரிஷியும் படிகளில் இறங்க, “ரிஷி… மருமக வந்த நேரம் நம்ம சரிகாவுக்கு நல்லது நடக்குது டா. சரிகா உண்டாயிருக்கா… ஜாக்கிரதையா பார்த்துக்க சொல்லியிருக்காங்க” என்று அழைத்து வர, ஷிவாலி ‘ஏன் இப்படி அவசரம், கல்யாணம் ஆனதும் குழந்தையா உங்க லைப்பை நீங்க வாழுங்க’ என்று கத்த போனவள் நற்செய்தி என்றதும் “கங்கிராட்ஸ்” என்று கைக்கொடுத்து வரவேற்றாள்.

     ரிஷி பேன் சுவிட்ச் தட்ட, சரிகா ஷிவாலிக்க நன்றி கூறி சோபாவில் அமர்ந்தாள்.

       “அம்மா அவரிடம் சொன்னியா?” என்று கேட்ட அடுத்த நொடி, “சொல்லிட்டேன் டி. உங்கப்பாவுக்கு உன் கணவருக்கு, கவிதா வீட்ல எல்லாம் சொல்லியாச்சு. சம்பந்தி வீட்ல சொல்லணும்” என்று ஆசையாய் போனை போட்டு பேசியபடி கடந்தார்.

     சரிகாவோ அமைதியாய் தட்டை வயிற்றை பிடித்து பெருமூச்சை வெளியிட்டு போனை வெறித்தாள்.

   அவளுக்கு ஹரிஷ் போன் செய்வான் என்ற ஆவலில் பார்த்தாள்.

       அவன் போன் செய்வதற்கு பதிலாக வீட்டுக்கு வந்து மூச்சிரைக்க நின்றான்.

    “சாரி மா… நானே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கணும். உனக்கு கஷ்டமாயில்லையே.” என்றதும் சரிகா நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

     ஹரிஷ் வீட்டின் ஒரே பிள்ளை அம்மாவும் பழைய காலத்து ஆள். கைம்பெண் என்று எங்கும் வெளியே செல்ல மாட்டார். அவர்கள் காலம் போல ஒரு வாரிசை மட்டும் எதிர்பார்க்கும் சராசரி மனம் கொண்டவர்.
 
    ஹரிஷ் தாமதமாய் பிறந்ததால் அவனுக்கு அப்படி அமைய வேண்டாமென சரிகாவிடம் திருமண ஆன நாள் முதல் எப்பொழுதும் குழந்தை வாரிசு என்ற பேச்சு தான்.

   ஹரிஷுக்குமே அன்னை விருப்பம் முக்கியத்துவம் கொண்டு தன் உயிர் வரவை எதிர்பார்க்க ஆரம்பித்து நாலு மாதம் ஏமாந்து போனான்.

  டாக்டரை பார்க்க அழுத்தம் கொடுக்க சரண்யா கண்ணபிரான் ஏன் இந்த அவசரம் இரண்டு வருடம் போகட்டுமே என்ற சொல்லியதில் இருந்து இங்கு வர தவிர்த்தான்.

   இன்று சரிகா கருத்தரித்து ஆனந்தமாய் பேசி மகிழ, ஷிவாலிக்கு இதென்ன கொஞ்சம் கூட அவளுக்கான ஸ்பேஸ் தரலை. அவளோட நிலையை கேட்கலை என்று சினம் இருந்தது. ஆனால் அது அவர்கள் வாழ்க்கை என்று வேடிக்கையாளராய் நின்றாள்.

    ஆனாலும் பார்வை ரிஷியை தழுவியது. இவன் என்ன எதிர்பார்ப்பான். எனக்கு எல்லாம் இவனிடம் பேசவே நேரம் வேண்டும். பழகணும் சின்ன சின்ன சண்டை போடணும் புரிதல் வேண்டும். அதுக்கு பிறகு என் கேரக்டருக்கு மேட்ச் ஆகணும். பிடிக்கணும் இதெல்லாம் தெரியாம நான் அவனை நெருங்க விடமாட்டேன்’ என்று மனதிலேயே சத்திய பிரமானம் செய்து கொண்டாள்.

    அதற்கு முன் குழந்தை அதுயிது என்று ஆரம்பித்தால் ஹாஸ்டல் சென்றிட வேண்டும்.’ என்று முடிவாய் இருந்தாள்.

    ரிஷியோ “மேல வா” என்று பேசி அழைக்க ஹரிஷ் சரிகாவை கண்டு தனிமை தந்து மாடிக்கு சென்றாள்.

    அதையே ரிஷி “இந்த நேரம் அவங்களுக்கு தனிமை தேவை நாம நந்தியா இருக்க வேண்டாம்.” என்று பேசி விட்டு பாடலை இசைக்க ஆரம்பித்தான்.

    நானும் அதை தான் நினைச்சேன்.’ என்றவள் அவனிடம் பகிராது மெத்தையில் போனை எடுத்து முடித்தாள்.

      “ஷிவ் நாளையிலருந்து நான் ஆபிஸ் கிளம்பிடுவேன். நீ தனியா இருந்துப்ப தானே. இல்ல போரடிக்குனா… உங்க வீட்டுக்கு போயிட்டு வா. பட் அம்மாவிடம் தகவல் சொல்லிட்டு போ. உன்னை காணோம்னு தேட கூடாது பாரு.” என்றதும் ஷிவாலியோ தலையை உலுக்கினாள்.

      “ஷிவ்… நான் ஆபிஸ் போறது பிடிக்கலை எங்கயாவது போகலாம்னா சொல்லு… ஹனிமூன் ஸ்பாட் பார்க்கறேன். ஆல்ரெடி அம்மா அப்பா எங்க டா போக போறிங்கனு கேட்டாங்க. நான் லீவு கிடைக்கலைனு பொய் சொல்லி ஏமாத்திட்டு வர்றேன். பட் இந்த ஆண்டு இன்னமும் லீவ் எடுக்கலை. சோ எனக்கான லீவ் அப்படியே தான் இருக்கு” என்றான்.

  “ஹனிமூன் மண்ணாங்கட்டிக்கு  வரலை. யார் நீ… இரண்டு மாசம் முன்ன பார்த்திருக்கேன். அவ்ளோ தான். என்னால உன்னிடம் பேசவே யோசிக்கறப்ப, செக்ஸ்… ஒ மை காட்.. ஐ காண்ட்.

     என்னையும் சரிகா மாதிரி நினைக்காதே. ஐ ஹேட் தீஸ் டைப் ஆப் கேர்ஸ். உனக்கும் எனக்கும் தாட்ஸ் செட்டாகாது ரிஷி.

    இல்லை… உன் காதலி வானதிக்கு நீ திருமணம் ஆகிடுச்சுனு சீன் போட்டு பத்தலைனு என்னை கூட்டிட்டு ஹனிமூன் பிளேஸ்ல போட்டோ எடுத்து காட்டணுமா? இதுக்கு அவளை பெட்ரூம்கே உட்கார வச்சிடலாம்.” என்று வெடித்தாள்.

    “ஷிவாலி… மைண்ட் யுவர் வோர்ட்ஸ். நான் அந்த அர்த்தத்துல கேட்கலை. நீ என்னை என்னனு நினைச்சிட்டு இருக்க? பழகணும்னா எப்படி பழகணும். உன்னிடம் பேசி எக்ஸ்பிளைன் பண்ணி ப்ளூ பிரிண்ட் போட முடியாது டி.

    நீ என்னை பற்றி ஒரு தியரி எழுதி வச்சிட்டு அதோடவே கம்பேர் பண்ணற. இட்ஸ் நாட் பேர்.

   இந்த நேரம் உன்னிடம் சண்டை போட என் மனசு தயாராயில்லை. வேண்டுமின்னா… உன்னிடம் சண்டை போட ஒரு நேரம் ஒதுக்கறேன் அப்போ சேர்த்து வச்சி போடு. நாளைக்கு ஆபிஸ் வேற போகணும். நைட்டு திண்ணுட்டு தூங்கு.” என்று கத்திவிட்டு போனை எடுத்து ஆபிஸுக்கு நாளை வருவதாக நண்பனிடம் அறிவித்து முடித்தான்.

   “தியரி வேற இந்த மூச்சுக்கு. அதான் பார்த்தாலே தெரியுதே. முகறகட்டையில திருட்டு பார்வையும் சூழ்நிலையை சாதகமா மாற்றிக்கிற தந்திரமும்.

   இந்த தாத்தா எப்படி தான் இவனை போய் எனக்கு மேட்ச்னு முடிச்சாரோ” என்று முனங்கினாள்.

     ரிஷியோ சாப்பிட்டு முடித்து தாய் தந்தையிடம் பேசி தங்கைக்கு ஏதேனும் வாங்க வேண்டுமா என்ன ஏதென கேட்டு கொண்டான்.

   இரண்டு நாள் தங்கி செல்ல, ஹரிஷூம் முடிவெடுத்தான்.

     ஷிவாலியோ தனியாக ஒரு வீட்டில் மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்து இருக்கும் நெட்கார்டை காலி செய்து பொழுது போக்கி கீழே ஒரு குடும்பம் உள்ளதென்றோ அல்லது தனக்கு திருமணம் ஆனதென்ற எண்ணமோ இல்லாது தாலி செயினின் டாலரை பல்லில் கடித்து போனுக்குள் மூழ்கியிருந்தாள்.

-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
    

கீழே இருப்பது என்னோட ரீடர் பேசறதுக்கான வாட்சப் குரூப். யாருக்காவது இணைய விருப்பம்னா இணைந்துக்கொள்ளுங்கள். ஆனா community group இல்லை.

https://chat.whatsapp.com/FeFdc77FzFEDAbq29nA4Ak?mode=hqrt1

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!