கஷ்டப்பட்டு கதை எழுதி நம்ம வச்சியிருந்தா. சிலர் அவங்க செனல்ல நம்ம கதையை ஆடியோ நாவலாக போட்டு வைத்து சம்பாதிப்பார்கள். என் ஆடியோ நாவல் ஆரம்பித்ததே, என் கதை அவ்வாறு மற்றவர்கள் செய்யவும், இதுக்கு நம்மளே நம்ம கதையை ஆடியோ நாவலாக போடலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே.
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பெரும்பாலும் நம்ம கதையை மற்றவர்கள் ஆடியோ நாவலாக போட்டுக் கொண்டால் என்ன செய்யணும்?
இரண்டு விதமான முறை இருக்கு
1.) YouTube post la like, dislike, comments, share, download, clip, save, report, option இருக்கும் அதுல particular report option click பண்ணினா 6 காரணங்கள் அதில் இருக்கும். உங்களுக்கு என்ன காரணத்தால் அது ரிப்போர்ட் அடிக்க வேண்டுமென்று பாருங்கள்.
நம்ம கதை அந்த சேனல்ல இருந்தா நீங்க ரிப்போர்ட் அடித்ததும் உடனே டிராப்ல போட்டுடுவாங்க. இது தெரியாம செய்தாங்கன்னா விட்டுடலாம்.
ஆனா தெரிந்தே நிறைய ஆத்தர்ஸோட கதையை அவங்க சம்பாதிக்க திருடி போட்டால்… ரிப்போர்ட் அடிப்பதை தவிர்த்து காபிரைட் ஸ்ட்ரைக் கொடுக்கணும்.
2.coprightstrike கொடுப்பது பெரிய கஷ்டமில்லை. தெரிந்துக்கொண்டால் மிகவும் எளிதே. Youtube studio போகணும். அதுல last இடத்தில் copyright tools இருக்கும். அதுல click பண்ணி போங்க. உங்க கதைக்கான ஆதாரம் உங்க சேனல் வீடியோ link அல்லது அமேசான் link அல்லது புத்தகத்தின் ISBN no ஏதாவது அதுல கொடுத்துவிட்டு, என்னுடையது இந்த சேனலில் இந்த கதை பதிவிட்டதாக அந்த சேனலின் லிங்கும் நீங்க அவங்க குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க வேண்டும்.
With in 24 hours உங்க கதை சேனல்ல இருந்து எடுத்துடுவாங்க. பத்து கிட்ட இவ்வாறு லிங்க் போனால் அந்த சேனலையே இழுத்து மூட வைக்கலாம். அப்ப மத்த ரைட்டர் கதையும் இவங்களால் போட்டு சம்பாதிக்க முடியாது.
எல்லாமே வேஸ்டா போகும். அதனால். எதிர்தரப்பு (திருடர்களை) ஆட்களை முற்றிலும் ஒழிக்க, தூக்க காபிரைட் ஸ்ட்ரைக் பெஸ்ட்.
இவங்க அதன் பின் mail வந்து கெஞ்சுவாங்க. குழத்தை குட்டி, வறுமை காரணம் காட்டி நம்ம மனதை மாற்ற முயலலாம். நம்ம கதையை திருடி ஆடியோ நாவலாக போடுபவர்களுக்கு இரக்கம் காட்ட கூடாது. தப்புக்கு தண்டனை தான் சரியானது என்பது என் கருத்து.
என்னோட இரண்டு கதையை இவ்வாறு பதிவிட்ட YouTube channelஐ நீக்கி விட்டுள்ளேன்.
🙏மீண்டும் சந்திப்போம்.