Skip to content
Home » காதலை கண்ட நொடி -2

காதலை கண்ட நொடி -2

அத்தியாயம் 2

அதற்குள்..
அவள் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள்..
‘ப்ரோகிராம்க்கு டைம் ஆச்சுனு சொன்னாங்களே இந்த வாட்ச்மேன்.. என்னவா இருக்கானு கேட்கலாம்னு பார்த்தா இந்த வாட்ச்மேனையும் அனுப்பிட்டேனே..இப்போ அவள எந்த ப்ளோர்ல தேட..சரி விடு பார்த்துக்கலாம்’ என்று எண்ணியவன் எல்லா வேலைகளையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வந்தவன்.. அந்நேரம் நேரலை நடக்கும் தளத்திற்கு வந்தவன் மணியை பார்த்தான்..
‘இது..இது.. அவ ப்ரோகிராம் நடக்குற டைம் ஆச்சே’ என்று எண்ணியவன்
‘ஒருவேளை அவதான் இவளா?’ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்..

‘ச்சே ச்சே இருக்காது.. அவ வேறயா இருக்கும் அந்த சண்டக்காரி இவளா இருக்காது..அந்த மிர்ச்சி வேற கண்ணை மட்டும்தானே காட்டிட்டு போனா? மாஸ்க் போட்டு மறைச்சு இருந்தாளே..(எதே அவ்ளோ நேரம் கண்ணதான் பார்த்தியா ராசா)
(ஈஈஈ கோவிட்ல அதான் மாஸ்க் போட்டுட்டு இருந்தா..)ஏன்டா இவ்ளோ யோசனை போய் பார்த்தா தெரியப்போகுது’ என்று எண்ணியவன் முகம் சட்டென அவளது சிந்தனைக்கு தாவியது அவளது காந்தக்குரலில் மனம் குளிர அந்த காரமிளகாயை மறந்தான்..தனது ஃகோட்டை கழட்டியவன் தான் அணிந்திருந்த மாஸ்க்கையும் கழட்டாமல் உள்ளே சென்று லைவ் ப்ரோகிராம் எடிட்டர் அருகில் சென்று நின்றான்..எடிட்டர் அவனை பார்த்து எழப்போக அவனை அமருமாறு சைகை செய்தவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.. அவன் காண வந்தவளோ அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தாள் அதனால் அவன் வந்ததை அவள் கவனிக்கவில்லை.. ஆனால் கெளதம் பார்த்துவிட்டான்..
அதனால் யோசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தான்..கவனிக்க வேண்டிய மிர்ச்சி யோ.. தனது ரெகுலர் நேயர் ஒருவரின் விருப்பத்திற்காக ஒரு பாடலை பாடிக்கொண்டு இருந்தாள்..

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ..

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…

என்ற குரலில் உருகி கண்மூடியவன் மீண்டும் மீண்டும் அவளது குரலில் அவளிடம் விழுந்தான்(அச்சோ..பாவம்)
பாடி முடித்தவள்..
“இப்போ திருப்தியா சகோதரா.. இதோ நீங்கள் கேட்ட பாடல்” என்றுவிட்டு அவளது ட்யூனை மியூட் செய்தவள் கெளதமிடம் பேச..

அவளை எப்படியாவது காணவேண்டும் என்று எண்ணினான் இஷான்.. ஆனால் எப்படி என்று யோசித்தவன்..எடிட்டரிடம் கேட்டான் “ஈஸ் ஷீ இசை” என்று கேட்க, அவன்”ஆம்” என்றதும்..
“ஓகே அவங்க ப்ரோகிராம் முடிஞ்சதும் வந்து என்னை மீட் பன்ன சொல்லுங்க.. டெல் ஹர்.. டோன்ட் திங்க் ட்டூ ஸ்கிப் திஸ் மீட்” என்று கூறிக்கொண்டு இருக்கையில் அவன் தந்தையிடமிருந்து அழைப்பு வர அவன் வெளியே சென்று விட்டான்..

வெளியே சென்றவன் அழைப்பை ஏற்று தன் தந்தையிடம் பேசத்துவங்கிவிட்டான்..
“ஹாய் டேட்..ஹவ் ஆர் யூ?” என்று கேட்க..
“நாட் வெல் மை சன்.. பிகாஸ் ஆஃப் யூ” என்று அவர் கூற..
“டாட்..யூ க்நோ வெரி வெல் வைய் ஐ கேம் ஹியர்(dad you know very well why I came here)” என்று கூற..
“எனக்கு தெரியுது மை சன்.. பட், நீ இல்லாம இங்க i felt empty” என்றார் ஸ்டீவ்..
தாயும் தந்தையும் பற்றி யோசித்தவன்.. தாயின் நிலை தந்தையை வருத்துவதை அறிந்தவன் இப்போது தானும் அருகில் இல்லாததால் அவர் கஷ்டப்படுகிறார் என்பதை உணர்ந்தவன்..
தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையை எண்ணி கவலையானான்..
அதை அவரிடம் காட்டிக்கொள்ளாமல்..
“டாட் ஐயம் கோயிங் ட்டூ சீ ஹர்” என்றான் தந்தைக்கு புரியும் வகையில்..

“மை டியர் சன் நீ செய்யுறது சரியா வரும்னு எனக்கு தோணலை..யோசிச்சு முடிவு பண்ணு இஷான்.. சப்போஸ் அந்த குடும்பத்துக்கு உண்மை தெரிஞ்சா நம்மள ஏதாவது தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு..”என்று ஸ்டீவ் கூற அவரை தடுத்தவன்..

“இல்லப்பா..நான் ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. இதுல நல்லது நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம்.. கெட்டது நடந்தாலும் மத்த எல்லாருக்கும் சந்தோஷம்தான்” என்றான் வருத்தமாய்..
“ஆனா உன் சந்தோஷம்.. if she blame ur love is fake.. u will get so much hurt son.. எ..எனக்கு மத்தவங்க சந்தோஷத்தை விட என் சன்னோட லைஃப் ஈஸ் இம்பார்டண்ட்பா..” என்றார் வருத்தமாக.

“இது அம்மாக்காக பா..அதனால நான் இந்த ரிஸ்க் எடுத்து தான் ஆகனும்.. i trust my love dad.. அம்மா மேல நீங்க வெச்ச லவ்வ கூட இருந்து பார்த்து இருக்கேன்.. if my love is true, it will stay with me..Please believe me dad..I can manage it..I know it’s painful moment but I will handle it(என் காதல் உண்மைனா அது என்னை விட்டு போகாது..என்னை நம்புங்கப்பா..என்னால இதை சரி செய்ய முடியும்.. எனக்கு தெரியும் இது ரொம்ப வலி தரக்கூடிய தருணம் ஆனாலும் நான் சமாளிப்பேன்)” என்று வருத்தமாய் கூறிவிட.. அதற்கு மேல் அவனிடம் என்ன பேசவென்று தெரியவில்லை அவருக்கு.. அவனது எண்ணம் எந்த அளவிற்கு சாத்தியம் என்றும் புரியாமல் தவித்தவர்.. தன் மகன் தனக்காக காத்து இருப்பது புரிந்து..

“ஓகே..மை சன் ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் நியூ ஜாப்..சீ யூ லேட்டர்” என்று வைத்து விட அவனும் ஒரு பெருமூச்சோடு தனது இருக்கைக்கு போனான்..
இதயம் வலிக்க வலிக்க தன்னவள் தன்னை சுழட்டி அடிக்கப்போவதை எதிர்பார்த்தே ஏமாற கிளம்பினான்..

கானல் தேசத்தில்
தூறும் மழையாய்..
என் மனமென்னும் பாலைவனத்தில்..
பூஞ்சாரலாய்..
உன் புன்னகை தூறுமோ..
டைரியில்..

தனது கேபினுக்கு வந்தவனை பார்க்க வந்தார் அந்த வாட்ச்மேன்.. அவரை பார்த்தவன் எழுந்து அவரிடம் வந்து
“சொல்லுங்க வாட்ச்மேன்” என்றான் பணிவாக..
அவனது பணிவும் அவன் அவரை மதிக்கும் பண்பிலேயே தெரிந்தது அவனது உயரம்..
“சா..சார் வ..வண்டி ரெடி சார்..க்..கீ உங்ககிட்ட கொடுக்க சொன்னீங்க சார்” என்று திக்கி திணறி அவர் வந்த விஷயத்தை கூறிவிட..அவரது பதட்டத்தை கண்டு..
“ஏன் இப்படி பதட்டப்படுறீங்க?” என்று கேட்க..
“இல்ல..இல்ல சார்..நீங்க நான் வந்ததும் எழுந்து வரவும் பதட்டமாகிட்டேன் சார்” என்று கூற அவரை கண்டு வசீகரமாக சிரித்தவன்..
“இந்த கம்பெனியில நீங்க ஒரு labour ஐ மீன் தொலிலாளி..Am i correct?” என்று கூற..(ம்ம்..நாம கொல்லுவோம் யார் கேட்பா)
“தொழிலாளி சார்” என்று திருத்தினார் அவர்..
“ஓஓ. ஐயம் சாரி.. நான் கொஞ்சம் கொஞ்சமா தான் தமிழ் பேசுவேன்.. முழுசா இன்னும் கத்துக்கலை..அதான் தப்பா எடுத்துக்காதீங்க” என்று கூற..
“சார் நீங்க போய் என்கிட்ட” என்று அவர் பதற.. அவரை கையமர்த்தியவன்..
“இப்போ சொன்னேன்ல தொழி..தொழிலாளி.. நீங்களும் அதான் நானும் அதான் அதனால் உங்க வேலைய நீங்க சரியா செஞ்சா யாரை பார்த்தும் எதுக்கும் நீங்க பதட்டப்பட வேண்டாம்..புரியுதா?” என்று கேட்டான் அவரை பார்த்து..
“புரியுது சார்” என்று கீயையும் பில்லையும் நீட்ட வாங்கியவன்..
“அவங்க உங்ககிட்ட கேட்டா என்னை வந்து பார்த்துட்டு வாங்கிக்க சொல்லுங்க..எவ்வளவு ஆச்சுனு அவங்க கேட்டா.. ஒரு நிமிஷம்” என்றபடி பில்லை பிடித்து பார்த்தவன்..
“இது 10k..நீங்க 5k சொல்லிடுங்க” எனக்கூற அவரோ திருதிருவென முழித்தார்..
“வாட்” என்றான்..
“இல்ல சார் என்னமோ கே..கே னு சொன்னீங்களே அப்படினா என்ன சார்?” என்றார் அவர் தலைய சொரிந்தபடி..
“ஓஓ..சாரி கே மீன்ஸ் thousand.. அது வந்து..எப்படி சொல்ல எனக்கு தெரியலையே” என்றான் அவன் கையை சிறு பிள்ளை போல விரித்து..(உன் தமிழுக்கு நீ அவகிட்ட எப்படி முழிக்கப்போறியோ)
“தெளசன்னா தெரியும் சார் ஆயிரம் ரூபாய் சார்.. அப்போ ஐயாயிரம் ரூபாய் சொன்னீங்களா?” என்று கேட்க..
“எக்ஸாட்லி.. அதேதான் வாட்ச்மேன்.. ப்ளீஸ் எனக்கு தமிழ் இன்னும் க்ளீயரா சொல்லிக்கொடுங்க?” என்று கூற..
“சார் நானா.. எனக்கு இங்கிலீஷு வராது சார்” என்றார் அவர்..
“ஐ வில் டீச் யூ இங்கிலிஷ் யூ டீச் மீ தமிழ்..நான் இங்கிலிஷ் சொல்லித்தரேன்..நீங்க தமிழ் சொல்லி தாங்க ஓகே” என்று கூற.. அவரோ நெளிந்தார்..
“சியர் அப் மை மேன்.. யூ வில் டூ.. ஐ நோ” என்றான்..
“நீங்க பேசுற இங்கிலிஷ் எனக்கு சுத்தமா புரியல சார்.. இதுல நான் எப்படி சார்?” என்று தயங்க
“அதெல்லாம் ஈஸி வாட்ச்மேன்.. கவலையை விடுங்க..” என்று அவரிடம் டீல் பேசி முடித்தான்.. வெளியே வந்தவர் அனைவரிடமும் அவனது நடத்தையை பற்றியும் அவன் மற்றவர்களை மதிப்பது பற்றியும் விரிவாக சொல்லிவிட்டே சென்றார்..
இதனால் வேலையாட்கள் மத்தியில் மேலும் உயர்ந்துவிட்டான் ஒரே நாளில்..
மாலை ஏழு மணி..
தனது ப்ரோகிராம் முடிந்ததும் அரக்க பரக்க கிளம்பியவளுக்கு அப்போது தான் அவளது வண்டி நினைவு வந்தது.. அவள் கெளதம்மை இழுத்துக்கொண்டு ஓட பார்க்க தடுத்த எடிட்டர்..
“மேனேஜர் சார் உன்னை அவரை வந்து பார்க்க சொன்னாரு..காரணம்லாம் எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு போனார்.. அவரே” என்று கூற கெளதம்மிற்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.. ‘அப்போ அந்த ஃபாரின்காரு தான் மோனேஜரா.. போச்சு எல்லாம் போச்சு..சீட்டை கிழிச்சு அனுப்ப போறார்’ என்று எண்ணியவன்..அவளிடம் கூறுவதற்கு திரும்ப.. அவளோ..
“கெள மா..நீ போய் வாட்ச்மேன் கிட்ட கீ வாங்கிட்டு எவ்ளோனு விசாரிச்சுட்டு சொல்லு நான் வர்றேன்” என்றவள் அவன் கூற வருவதை கேட்காமல் போக அவள் பின்னாடியே போனான் கெளதம்..

7 thoughts on “காதலை கண்ட நொடி -2”

  1. இவ… சரியான அவசரத்துக்கு பிறந்த லூசு தான்.
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *