அத்தியாயம்-9
“அவனை எழுப்ப முயற்சிப்பது சுத்த வேஸ்ட். ஏன்னா அவன் எழுந்துக்க மாட்டான்.” என்று சர்வானந்தன் கூற, “சார் எப்படி சார் தப்பிக்கறது? யாரிடமாவது சொல்லி வச்சிட்டு வந்திங்களா? உங்களை தேடி எந்த போலீஸாவது வருவாங்களா?” என்று பதபதப்பாய் கேட்டாள்.
“என்னை தேடி யாரும் வர வாய்ப்பில்லைமா. அதுவும் இந்த கடலில்.
நான் ஒரு சின்ன பையனை தேடி தான் வந்தேன். பெயர் நிரஞ்சன். ஊர் மதுரை. இங்க சிறுவன் சிறுமியரை கடத்தி விக்க முயற்சி பண்ணுறாங்க.” என்று நிரஞ்சனை சந்தித்தது மற்றும் அவனை காப்பாற்றும் பொருட்டு ஒருயிடத்தில் மறைத்து மற்ற சிறுவர் சிறுமியரை காப்பாற்ற வந்து மாட்டிக்கொண்ட கதையை ரத்தின சுருக்கமாக விவரித்தார்.
சர்வானந்தன் இறுதி மூச்சை இழுத்து பிடித்து “உனக்கு தைரியமிருந்தா, அட்லீஸ்ட் மானத்தோடு உயிர் பிழைக்க ஆசையிருந்தா, இங்கிருந்து நீயும் உன் காதலனும் வந்த போட்ல தனியா திரும்பி போயிடு.
இல்லைனா குடிக்க போன அவனுங்க திரும்ப வந்தா உன்னை சின்னாபின்னமா மாற்றிடுவாங்க.
என்னாலயும் உன்னை காப்பாற்ற முடியாது.
நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கடலில் செத்து மிதிப்பேன்.
நீ இங்கிருந்து உயிர் பிழைச்சா நான் சொன்ன பையனை காப்பாத்து. இல்லைனா அவன் தலையெழுத்தும் என்னவோ அது படி நடக்கட்டும்” என்றதும் கப்பலில் சாய்திருந்த காவலதிகாரி சர்வானந்தன் தரையில் சரிந்தார்.
சர்வானந்தன் பேசியதை கேட்டவளுக்கு திகிலானதென்றால், அவர் சரியவும் சர்வமும் பயந்துவிட்டாள்.
”சார் சார்… சார் எழுந்துடுங்க. எனக்கு பயமாயிருக்கு” என்று அழ, சற்று தள்ளியிருந்த காதலன் வினோத் அவனுமே மயங்கியிருக்க, அவனை பிடித்து உலுக்கினாள்.
“வினோத் வினோத்” என்று அவன் கன்னத்தில் அடித்து கத்த, அவனோ தள்ளாடி இமை திறக்க முயன்றான்.
கண்ணில் துளி சுறுசுறுப்பும் இல்லை, இன்னமும் இங்கே இருந்தால் காவலதிகாரி சர்வானந்தன் கூறியது போல தன் பெண்மைக்கு சோதனை வந்து, சிதைந்து கடலில் சின்னாபின்னமாக போவது தெளிவாய் புரிய, காதலித்தவனோடு வந்த படகில் குதிக்க முடிவெடுத்தாள். ஆம் வினோத்தை விடுத்து குதிக்க தயாரானாள்.
சர்வானந்தன் கூறிய போது ‘என்ன இவர் இப்படி கூறுகின்றார். இந்த கப்பலில் இருந்து எப்படி தப்பிபோம். தானும் காதலன் வினோத்தும் வந்த படகு சிறியது. அதில் இந்த கப்பலிலிருந்து அதில் இறங்கவே முடியாது. அதற்குள் மதுவை நாடி சென்றவர்கள் வந்துவிட்டால்?
ஆனால் சர்வானந்தன் கூறியதை கேட்டவளுக்கு உயிர் பிழைப்போமோ என்னவோ முடிந்தளவு மானத்தையாவது காப்பாற்ற எண்ணி முயற்சியெடுக்க நினைத்தாள். கையில் அங்கிருந்த சிறு கத்தியை எடுத்து கொண்டாள்.
நிதானமாக மூச்சை விடுத்து கப்பலிலிருந்து தங்கள் வந்த போட் இருக்கும் பக்கம் கயிற்றால் கட்டியிருக்க அதனை பிடித்து கண்மூடித்தனமாக குதிக்க தயாராகவில்லை கண் மூடி குதித்துவிட்டாள்.
சுற்றிலும் கடல், அப்படியிருக்க தண்ணீரில் போட்டின் மீது நங்கென்று மோதினாள். அவள் நல்ல நேரம் கடலில் விழாமல் போட்டில் விழுந்தாள். தலையை தாங்கி, கையில் இருந்த கத்தியை வைத்து மடமடவென கப்பலோடு கட்டிய கயிற்றை அறுத்தாள்.
கையிற்றை அறுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் வேகமாய் அறுக்க போராட, “டேய் அந்த பொண்ணு போட்ல குதிச்சு தப்பிக்க பார்க்கறா, பிடிங்க” என்ற குரலில் கத்தியை கீழே நழுவவிட்டாள்.
தன்னை மீண்டும் கப்பலில் கடத்தி சென்றிடுவாரோயென பயந்து வேகத்தை கூட்டி, கத்தியை எடுத்து அறுக்க முயன்றாள்.
ஆபத்து தன்னை நெருங்க, கயிற்றை அறுத்து விட்டாள்.
கப்பலில் கட்டியிருந்த கயிறு விடுபடவும், போட் தள்ளாட்டம் கண்டது.
அந்த போட்டில் உள்ள மோட்டாரில் கைக்கு அகப்பட்ட விசையை அழுத்தினாள்.
அந்த போட் வட்டமிட்டு சுற்றி ஒரு பக்கமாக கடலில் காற்றை கிழித்து மிதந்தது.
கப்பலை திருப்பவே நேரமெடுக்க போட் திசைக்கு ஒருமூலையில் சென்றிருந்தது.
ஆனால் என்ன தான் மானஸ்வி தப்பித்தும், ஒரு போட்டை ஓட்ட தெரியாமல் போட் கடலில் கவிழ்ந்தது.
அதிலிருந்த பெண்ணவளோ கடலில் மூழ்கினாள்.
கப்பலிலிருந்து பைனாக்குலர் வழியாக பார்த்தவனோ ‘மச்சி போட் எக்குதப்பா போய் சாயறப்ப, அந்த பொண்ணு கடல்ல விழுந்துடுச்சு டா. கடல்ல இனி ஜல சமாதியாகிடுவா, கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டலைடா. என்ன அழகாயிருந்தா அனுபவிக்க முடியாம மீனுக்கு இரையாகிட்டாளே.” என்றான் ஒருவன்.
“நாம உபயோகித்தப் பிறகு குதிச்சிருக்கலாம். நமக்கு கொடுப்பினை கம்மிடா. நமக்கு மாணிக்கம் பொண்டாட்டி குப்பத்து சரோஜா தான் கேங்கா செய்ய வசதி” என்றான் மற்றொருவன்.
“சரி பொட்டச்சி பத்தியே பேசாதிங்க. காசு கொடுத்தா எவளாவது வருவா. இப்ப இந்த சர்வானந்தனை தூக்கி கடல்ல போடுங்கடா.” என்று அங்கிருந்த கைத்தடியின் தலைவன் முடிவெடுத்தவனாக கூறவும் கப்பலில் இருந்த உருப்படிகள் ஏராளம் என்பதால் ஒரு பெண்ணின் உயிர் கடலில் அமிழ்வதில் பெரிதாக கவலையின்றி சர்வானந்தனையும் கடலில் தூக்கி போட்டு, கடலை கிழித்து கப்பல் வேறு பக்கமிருக்கும் தீவின் திசைக்கு புறப்பட்டது.
கண்ணுக்குள் கடல்.. கடல்… மட்டுமே. நெஞ்சுக்கு காற்று தேவைப்பட, அது கிடைக்காமல் மூச்சுக்கு போராடினாள் அவள் மானஸ்வி.
இதுவரை கழுத்து வரை தண்ணீரில் கூட மூழ்கி குளித்து பழக்கமில்லாதவளுக்கு மூச்சு திணறியது.
கண்கள் சொருக ஆரம்பித்து உயிர் போனதென்ற முடிவோடு கண்ணீரை உகுத்தினாள்.
கடலில் உப்பு நீருக்கு பஞ்சமா. அவளது விழிநீர் அதில் தனியாக தெரிய? அதுவும் கலந்து அவளது உயிரை உருவ முடிவெடுத்தது.
தந்தை ஜெய்சங்கர் கண்ணீரோடு விரக்தியாக சோகமே உருவாக வீற்றிருக்க, அன்னையின் போனை எடுத்து சார்ஜரில் போட்டாள் கவிநிலா.
தந்தை மடியை தேடி வந்து படித்து கொண்டாள்.
மகனும் காணவில்லை, மனைவியும் மகனை காணாது உண்ணாமல் உறாங்காமல் இறப்பை நாடிவிட்டாள். இந்த குழந்தை கவிநிலாவோ, காது கேட்காமல் பேசும் திறனுமின்றி தன்னை நம்பி இருக்க, தற்கொலை செய்து இறப்பதற்கும் முட்டுக்கல்லாக மாறியிருந்தாள்.
இவளையும் சேர்த்தே தற்கொலை செய்து கொண்டால் என்ன? என்ற விபரீத எண்ணம் உருவானது.
அக்கணம் போன் மணியடிக்க, விரக்தியாக சிரித்து ‘செத்துடுனு கடவுளே சொல்லறாரோ’ என்று எண்ண, கவிநிலா போனை எடுத்து தந்தையிடம் கொடுத்தாள்.
எல்லாம் இழந்த வலியோடு காதில் வைத்து “ஹலோ” என்றான்.
மறுபக்கம் பிருந்தா, “சார் நீங்க நிரஞ்சன் பேரண்ட்ஸா?” என்றதும் இறந்து போன மனதிற்கு உயிர் கொண்டதாக, “ஆமாம்மா நீங்க?” என்று கைநடுக்க கேட்டார்.
பிருந்தாவோ “சார் என் பெயர் பிருந்தா. கணவர் போலீஸ்ல வேலையில் இருக்கார்.
உங்க பையன் நிரஞ்சனை இங்கவொரு கோவிலில் சந்திச்சேன்.
வீட்டை விட்டு ஓடிவந்ததாகவும், திருடி பிச்சை எடுத்து சாப்பிட்டு, இப்ப கஷ்டப்பட்டு உங்களிடமே திரும்ப சேரணும்னு என்னிடம் போன் வாங்கி உங்களிடம் பேச முயன்றான்.
ஆனா உங்க ஊர், உங்க பெயர் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கறப்ப, என் கணவர் போலீஸ் டிரஸ்ல வரவும் திருடியதுக்கு பிடிக்க வர்றதா தப்பா நினைச்சி ஓடிட்டான்.
என் கணவர் போலீஸ்ல இருப்பதாலும், இந்த ஏரியாவுல உங்கப் பையனை அடிக்கடி பார்த்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்னு சொன்னார்.
எதுக்கும் நீங்க இங்க வந்து உங்க பையனோட போட்டோ கொடுத்தா அதை பெரிசு பண்ணி விரைவில் கண்டுபிடிச்சிடலாம்.” என்று கூற, “எ..என் பையன் இருக்கான்னா அம்மா. அங்க இருக்கானா? உயிரோட இருக்கானாம்மா. எந்த ஊர்ல மா.? எந்த ஊர்னு சொல்லுங்க உடனே வர்றேன். போட்டோ எடுத்துட்டு வர்றேன்” என்று துடித்தார்.
"சென்னையில பட்டினப்பாக்கம் சார்." என்று கூற அதனை குறித்து கொண்டு நன்றி நவில்ந்தார்.
“உங்க மனைவியிடம் கொடுங்க சார். பையனை பத்தி சொன்னா கவலையில்லாம இருப்பாங்க” என்று கூற, வாய்விட்டு கதறி அழுதார் ஜெய்சங்கர்.
“அம்மா என் பொஞ்சாதி பையன் காணாது இந்த உலகத்துல இருந்தே போயிட்டாமா… செத்து போயிட்டாம்மா… நேத்து தான் இறுதிகாரியம் செய்தோம்” என்று குரலொடிந்த தோணியே அவரின் தற்போது நிலையை எடுத்துரைத்து.
அக்கம் பக்கம் எல்லாம் ஜெய்சங்கர் கதறி அழவும் குழுமிவிட, என்னயேதென கேட்டனர்.
மகன் இருப்பதை உரைத்து மனைவி பறிப்போனதை புலம்பினான்.
“முதல்ல அந்தம்மாவோட அட்ரஸ் கேளு. அங்க போய் பையன் போட்டோவை கொடு.” என்று நின்று இருந்த வேடிக்கையாளர் ஒருவர் திட்டவும் தான் “அட்ரஸ் சொல்லுங்கம்மா நான் அங்க வர்றேன்” என்று தழுதழுத்தார்.
பிருந்தாவும் விலாசத்தை உரைத்து விட்டு அணைத்தாள். இதை கணவரிடம் கூறுவதற்காக சர்வானந்தன் எண்ணிற்கு அழைத்தாள்.
சர்வானந்தன் போன் கயவரிடம் சண்டையிட்டு கைகளப்பு ஆனபோதே கடலில் விழுந்து அவனுக்கு முன் ஜலசமாதியானதே.
அவன் எடுக்கவில்லை ஏதோ பணியில் இருக்கலாமென்று நினைத்து பின்னர் முயற்சிப்போம் அல்லது இரவு சர்வானந்தன் வரும் போது சொல்வோமென முடிவெடுத்தாள்.
மாலை காலார நடந்து அடுத்த நாளுக்கு தேவையான பொருட்களோடு அவளுக்கு தேவையான சிலதும், டிபார்ட்மெண்ட் கடைக்கு சென்று வாங்கி பில் போட்டாள்.
வெளியே வரும் நேரம் பூவிற்கும் இடத்தில் மல்லிப்பூ விற்க, அதில் மூன்று முழம் வாங்கி முகம் விகாசிக்க பணத்தை கொடுத்தாள்.
வீட்டிற்கு வந்து தன்னை கூடுதலாக அலங்கரித்து, மல்லியை வைத்து கையில் இருந்த பிரகனென்ட் கிட்டில், இருகோடிட்டதை கண்டு நாணத்தோடு வாசலை வாசலை ஏறிட்டாள்.
கண்கள் காதல் கணவன் சர்வானந்தனை தேடி துடித்தது.
-தொடரும்.

அச்சோ… ! அவனைத் தான் கடல்ல தூக்கி போட்டுட்டாங்களே..! ஆனா, நிச்சயமா உசிரோடத்தான் இருப்பான்.
Antha niranjan kaga poi ipo sarva ippadi matikirtan rowdy kitta avana kadal la vera potanga thirumbi varuvana ena therilaye
Sivagami erandhu ah piragu niranjan ah pathi theriya vanthathu pola inga sarva ah kadal yae thooki pota piragu anga manasvi theditu iruku ah happy news solla
Nice epi
Intresting
கடவுளே நேர்மையா உழைச்சதுக்கு சர்வாவுக்கு இப்படியா ஆகணும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அச்சோ சர்வானநந்தனை உயிரோட இருக்கனும்
எனக்கு பயமா. இருக்கு சர்வா உயிரோடு இருக்கனும் பாவம் பிருந்தா