Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 8

மீண்டும் மலரும் உறவுகள் 8

“கண்ணன் வேலை விட்டு வீட்டுக்குள் வந்தவர் நந்தன் மட்டும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கிச்சனை எட்டிப் பார்த்தார் “.

“அங்கும் தன் மனைவி தேவி இல்லை என்று  முகம் ,கை ,கால் கழுவிக்கொண்டு வந்து நந்தா அக்கா எங்கடா என்று கேட்டார்”..

” நந்தனும் தனக்கு தெரிந்த வகையில் அசோக்கின் பாப்பா பெரிய பெண்ணாகி விட்டது மாமா அதனால அக்கா அங்க சென்று இருக்கிறார். “

” இந்த நேரத்திலா தண்ணி ஊத்துகிறார்கள் என்று கேட்டதற்கு இல்ல மாமா தண்ணி நாளை காலை தான் ஊத்த போகிறார்கள்”.

” பாப்பாவிற்கு தேவையான ஒரு சில பொருட்கள் வாங்குவதற்கு அக்காவை அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்ன இந்த நேரத்திலா என்று கேட்டார்”

” முத்து மாமா கேட்டுக் கொண்டதால் அக்கா சென்று இருக்கிறார் என்ற உடன் அவர் மாசமாக இருக்கும் பெண்ணிடம் இந்த நேரத்திலா கேட்டார் என்று விட்டு சரி நீ படி என்று விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தார் “

“கண்ணன் அவர்கள் வீடு நோக்கி செல்லலாம் என்று தான் எண்ணினார். வயதுக்கு வந்து இருக்கும் பெண் வீட்டிற்கு இந்த நேரத்தில் செல்வது சரியில்லை என்று எண்ணிவிட்டு தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்தார்”.

” ஒரு அரை மணி நேரம் கழிந்து இருக்கும் தன் மனைவி வரவில்லை என்ற உடன் தெரு முனையே பார்த்துக் கொண்டிருந்தார் “.

அப்பொழுதுதான் ,”முத்து தேவி இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் தன் மனைவி இந்த நேரத்தில் இவருடன் ஏன் வரவேண்டும் “.

“அதுவும் சிரித்து பேசிக்கொண்டு என்று எண்ணிவிட்டு இதற்கு முன்பு நடந்த ஒவ்வொன்றையும் யோசித்தார்”

” தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் கூறியதையும் யோசிக்க செய்தார் “

“இப்பொழுதும் இருக்கும் பொம்பளைங்க எல்லாம் நம்ப முடியலடா மச்சான் என்று இன்று தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் கூறியதை யோசித்துப் பார்த்தார் “.

“இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை. அவனுடைய அண்ணன் மனைவி திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது .”

“கணவன் தினமும் தன்னுடன் ஒன்றாக இணையவில்லை என்றவுடன் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டதை கூறிக் கொண்டிருந்தான்”

” தனது நண்பனிடம் மனnதாங்கல் தாங்காமல் அதை யோசித்துப் பார்த்தார்”

” ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி தன்னிடம் கேட்டதையும் யோசிக்க செய்து என்னுடைய தேவி அப்படி எல்லாம் செய்ய மாட்டாள் என்று யோசிக்க செய்தார் “

“அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முத்து ,தேவி இருவரும் அருகில் வந்திருந்தார்கள் “

“கண்ணா வந்துட்டியாப்பா பாப்பா பெரிய பொண்ணு ஆயிடுச்சு காலையில தண்ணி ஊத்துது வந்துரு”

” தேவி தான் பாப்பாவுக்கு இப்ப இந்த நேரத்தில என்ன தேவைனு எங்களுக்கு தெரியல”

” அதான் தேவி பிள்ளையை கூட்டிட்டு போனோம் என்றார் “.

“சரிப்பா சரிப்பா நாளைக்கு காலைல 9 மணிக்கு தான் தண்ணி ஊத்துது. “

“நீ வேலைக்கு போறதுக்கு முன்னாடி வந்துட்டு போ கண்ணா என்று விட்டு நந்தனிடமும் நந்தா நாளைக்கு அசோக் வரமாட்டான் பாப்பாவுக்கு தண்ணி ஊத்துது இல்ல உங்க மிஸ் கிட்ட சொல்லிடு என்று விட்டு தன் வீடு நோக்கி சென்றார் முத்து “

“ஒரு சில நொடி முத்து போகும் திசையை பார்க்க செய்தார் கண்ணன் “

“தேவி  வாங்க சாப்பிடலாம் என்று கணவனை அழைத்து விட்டு வீட்டுக்குள் சென்றார்”.

” இந்த நேரத்தில எதுக்கு அங்க போன என்று வீட்டிற்குள் நுழைந்தவுடன் கேட்டார்”

“அங்க அவங்க ரெண்டு பேத்துக்குமே வயசுக்கு வந்த புள்ளைக்கு என்ன செய்யணும் தெரியல “

“அது மட்டும் இல்ல  அந்த பிள்ளைக்கு நாப்கின் வாங்குறது எப்படி வைக்கணும்னு தெரியல அதான் சொல்லிக் கொடுக்கப் போனேன்
என்று விட்டு சமையல் அறைக்குள் புகுந்தார் “..

“அதற்கு தான் தன் மனைவி சென்றால என்று ஒரு சில நொடி யோசிக்க செய்தார்”

” அந்த அக்கா இல்லையா என்று கேட்டார் கண்ணன் “

“அந்த அக்கா இருக்காங்க ,இருந்தாலும் அந்த அக்காவுக்கு நாப்கின் வாங்கிட்டு வர தெரியும் .எப்படி வைக்கணும் புள்ளைக்கு சொல்லி தர தெரியலன்னு கூப்பிட்டாங்க”

” அந்த அக்கா என்ன பண்றாங்க இந்த அண்ணன் கூட வந்திருக்க என்றார் “

“இது என்ன கேள்வி . வயசுக்கு வந்த  பிள்ளையை தனியாவ விட்டுட்டு வர முடியும்.அதான் அந்த அக்கா கூட இருக்காங்க “

“நான் வயித்து புள்ள தாச்சியா இருக்கனு அந்த அக்கா தான் எனக்கு துணைக்கு முத்து அண்ணா நா அனுப்பிவிட்டாங்க”

” என்ன இன்னைக்கு நீங்க இப்படி கேள்வி மேல கேள்வி கேக்குறீங்க என்று கேட்டார் தேவி”.

“ஒன்னும் இல்ல சும்மா தான் தேவி  என்று விட்டு சாப்பிட உட்கார்ந்தார் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் “

“நந்தன் தன்னுடைய இடத்தில் சென்று படுத்துக்கொண்டான் “

பிறகு “கண்ணனும் எதையோ யோசித்து விட்டு தன்னுடைய அறையில் சென்று படுத்து விட்டார் “

“தேவி அறைக்கு வந்தவுடன் தேவியின் அருகில் நெருங்கி படுத்து  தேவியின் மீது கை போட்டார்”

“என்ன இன்னைக்கு நீங்களாவே வரீங்க, ஆனா எனக்கு அசதியா இருக்கு “

“என்ன தேவி அசதி நீதான சொன்ன இல்லங்க இப்ப அந்த பாப்பா வீட்டுக்கு போயிட்டு வந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒரு மாதிரி இருக்கு “

“பாப்பா கூட துணைக்கு வேற இருந்தேன் . ரொம்ப நேரமா உட்கார்ந்தே  இருந்தேனா அதான் எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு நாளைக்கு பாத்துக்கலாமே என்று விட்டு தேவி நகர்ந்து படுத்தார்”.

” என்றும் தானாக தேடி சொல்லாமலே தன்னைத் தேடி வருபவள். இன்று தானாக தேடிச் சென்றும் தன்னை ஒதுக்குகிறாளே என்று யோசித்தார் கண்ணன்”

” சரி என்று விட்டு அமைதியாக படுத்து விட்டார் தேவி. ஆனால் ,கண்ணனுக்கு உறக்கம் எட்டக்கணியாக இருந்தது “

” விடியற்காலை போல் தூங்கி இருந்தார் கண்ணன்.அப்படியே மாதங்கள் சென்று ஒன்பதாவது மாதம் தொடக்கத்தில் இருந்தார் தேவி “

“அப்பொழுது, கண்ணன் வேலைக்கு போயிருந்த நேரத்தில் மதியம் மூன்று மணி போல் தேவிக்கு லேசாக வலி எடுப்பது போல் இருந்தது “

“அப்பொழுதுதான், கரும்பு வெட்டிவிட்டு வீட்டிற்கு அசதியில் வந்திருந்தார் முத்து”

” அவர் தன் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் பொழுதே தேவியின் சத்தம் கேட்டவுடன் தன்னுடைய வீட்டிற்கு சென்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு வரலாம் என்று எண்ணினார் “

“ஆனால் ,தன் மனைவி வீட்டில் இல்லை என்றவுடன் இவ இந்த நேரத்தில் எங்கு சென்றாலோ என்று யோசித்து விட்டு  மூணு மணி ஆச்சு சாயங்கால பில்லு  புடுங்க போயிருப்பாலோ என்று எண்ணி விட்டு சரி மாசமா இருக்க புள்ள என்னன்னு தெரியலையே “

“வலி  வந்துருச்சோ முன்ன பின்ன வலி வருமே என்று எண்ணிவிட்டு வேகமாக தேவி விட்டு கதவை தட்டினார் “

“யாரு என்று தேவி கேட்டதற்கு நா தான் மா முத்து அண்ணன் வந்திருக்கேன் என்றவுடன் கதவு தாழ்ப்பாள் போடவில்லை என்றவுடன் வேகமாக ஓடி வந்தார் “

“என்னம்மா ஆச்சு என்றவுடன் வலிக்குது அண்ணா இது குழந்தை பிறக்கிற வலியா என்று தெரியல பயமா இருக்கு என்றவுடன் இருமா என்று கண்ணனுக்கு போன் செய்தியா என்றதற்கு ஃபோன் போட்டே அண்ணா அவருக்கு போன் போகல “

“அவர் நண்பனுடைய நம்பருக்கு போன் போட்டு இருக்கிறேன். சொல்கிறேன் என்று சொன்னார்கள் என்று மூச்சு திணறலாக இருந்தவுடன் சரி வா வா உன்னை நான் மருத்துவமனை அழைத்து செல்கிறேன் என்றார் “

“அண்ணா ரூம்ல எனக்கு தேவையானது எடுத்து வச்சிருக்கேன் .கொஞ்சம் அதையும் எடுத்துட்டு வரீங்களா ?”

“முன்ன பின்ன இருக்கலாம். சரிமா இரு என்று விட்டு எடுத்துக் கொண்டு வந்தார்”

” அவர் எடுத்துக் கொண்டு வரும் பொழுது வேகமாக தேவி காத்த செய்தார் “

“தேவிக்கு குழந்தை வலி தான் எடுக்க ஆரம்பித்து இருந்தது அவர் கத்திய கத்தலிலே அவருக்கு இது சூட்டு வலியில்லை என்பதை உணர்ந்து ஒன்னும் இல்லமா என்று விட்டு கைதாங்கலாக எழுப்பி நிக்க வைத்தார்”

” என்னால முடியல என்ற உடன் இருமா என்று விட்டு ஆட்டோவையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டு தேவியை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் வந்து ஏறினார்”

“அங்கு அக்கம் பக்கும் இருப்பவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள் “

“ஒரு சிலர் உடல் வருவதாக சொன்னார்கள். என் பொண்டாட்டியை மட்டும் வர சொல்லுங்க என்று விட்டு வேகமாக முத்து ஆட்டோ டிரைவர் இடம் எடுங்க அண்ணா என்று விட்டு தேவியை மருத்துவமனை அழைத்துக் கொண்டு சென்றார் “

“மருத்துவமனை செல்லும் வழியில் தன்னுடைய பட்டன் போனிலிருந்து கண்ணனுக்கு போன் செய்தார் “

“கண்ணன் தான் உடனடியாக மருத்துவமனை வந்து விடுவதாக சொல்லிவிட்டு ஃபோன் வைத்தார் “

“கண்ணன் மருத்துவமனைக்கு வேகமாக  ஓடி வந்தான் .அவன் மருத்துவமனைக்கு வரும் பொழுது கண்ணன் தேவி இருவரது பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு முத்து கொஞ்சி கொண்டு இருந்தார்”

” அவன் மருத்துவமனையில் நுழைந்தவுடன் பார்த்த காட்சி தன் குழந்தையை வேறு ஒருவன் வைத்துக் கொண்டு இருப்பதால் அப்பொழுது இது தன்னுடைய குழந்தையா? இல்லை அவனுடைய குழந்தையா ?”

“இவனுக்கும் என்னுடைய மனைவி தேவிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தார்”

” கண்ணனின் மனது இந்த அளவிற்கு கேவலமாக செல்வதற்கு காரணமாக அமைந்தது எது?”

” அவருடைய சந்தேகம் எந்த அளவிற்கு அவரைக் கொண்டு வந்து விட்டு இருக்கிறது” என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *