தன் கரங்களை விண்ணுக்குள் விரித்து ஒளித்து விட்டு ஆதவன் ஒரு புறம் மறைந்திருக்க, மறுபுறம் வானென்னும் கடலில் ஆதவனை கண்டிட வேகமாக நீச்சல் அடித்து கொண்டு வந்து சேர்ந்திருந்தாள் நிலவுப்பெண்…
நட்சத்திரங்கள் யாவும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூமிக் காதலனை கண்டு கண் சிமிட்டி கிறங்கடித்து வைத்துக் கொண்டிருக்க, வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் இனிமையான அந்தி மாலை பொழுது அது….
வசந்தி என்னும் புனைப்பெயரை புத்தகத்தில் கண்ட நொடியிலே அது மதியின் மாமன் மகன் வசந்த் தான் ஓரளவிற்கு கணித்து விட்டிருந்தான் வருண்.
மேலும் எஜமானியின் மகன், ஆகுஜபாவனை உடல், சடங்கு, புடவை என்று இருக்கவும் அப்படி என்ன அவளுக்கு கடந்த காலத்தில் நிகழ்ந்தது?… என நினைத்தவன் ஜெயா குடும்பத்தில் பாத்திரம் நகன்றாலும் தெரிந்து வைத்திருக்கும் தன் அன்னையை தேடி வந்தான் ஆடவன்.
ஏனெனில் அவனுக்கு மதி என்பவள் காதலி மட்டும் அல்ல…
அவனின் அன்னையை அவனுக்கே உன் அன்னை இனியாவது பத்திரமாக வைத்துக் கொள் என கூறிய சிறிய அன்னை….
அவனின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள உதவிய குட்டித் தோழி…
வாலிப வயதில் தான் வேறு ஒரு பெண்ணிடம் செல்லாமல், ஏன் அவளை வைத்த இடத்தில் வேறு ஒரு பெண்ணை வைத்து பார்க்கவும் நினைக்க கூட முடியாத அளவிற்கு அவனின் இதயத்தை சிறு கீரல் இன்றி அவளிடம் இடம் பெயர்த்து கொண்ட செல்ல ராட்சசி…..
இன்னும் சொல்லப்போனால் வசந்திற்கும் அவளுக்கும் நிச்சயம் நின்றதிலிருந்து தன் வாரிசுகளை சுமக்க போகும் அவனின் மனையாள் என்று வரை அவன் நினைத்து வைத்திருக்க, அவளை பற்றி தெரிந்துக் கொள்ளாமல் விட்டால் தான் அதிசயம்.
ஆனால் அவன் உள்ளே நுழையும் போதே மதிக்கு எதிராக ஏதோ நிகழ்ந்திருப்பதை காதால் கேட்டவன்,
“உங்க ஃப்ரண்டுக்கும், மதிக்கும் என்ன ம்மா அப்படி ப்ராப்ளம்?…
நீங்க ஏன் நான் சொல்லக் கூடாதுன்னு சொல்லியும் அவங்க கிட்ட மதிய பத்தி பேசியிருக்கீங்க?…
என்று தேநீர் அளித்த தன் அன்னையிடம் கோபம் அடையாமல் கேட்டான் வருண்.
“இல்ல வருண் மதி இங்க இருக்குறது நான் சொல்லி தான் ஜெயாக்கு தெரிய வேண்டியது இல்ல..
நீ சொல்றதுக்கு முன்னாடியே, அன்ட் நாம ரெண்டு பேரும் மதிய பாக்குறதுக்கு முன்னாடியே ஜெயாவுக்கு மதி அவ இந்த ஊருல இருக்குறது தெரியும்…
ஆனா நம்ம பக்க்ததுல இருக்குறது தெரியாது….”
என்றிட, உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்த வருணின் கோபம் ஓரளவிற்கு மட்டுப்பட்டது.
ஆனால் பல கேள்விக்கு விடை தெரிந்திட வேண்டி,
“என்ன சொல்றீங்க…..
எனக்கு எதுவும் புரியல…..”
என்று அவன் கேட்டிட, ரேணுகா தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் வருணிடம் கூறினார்.
வசந்தும், மதியும் நல்ல பழகிட்டு வர்றது தெரிஞ்சதும் கல்யாணத்துக்கு அரேஞ்ச் பண்ணி, நிச்சயத்துக்கு புடவ எல்லாம் எடுத்த பிறகு ஒரு நாள் வந்து மதி அவ மாமா கிட்ட வசந்த் வேண்டாம்னு சொன்னாளாம்….
பாட்டி, தாத்தா, மாமா எல்லாம் எவ்ளவோ கன்வைன்ஸ் பண்ணாங்களாம்….
உன் சம்மதம் கேட்டு தானே கல்யாணத்துக்கு ரெடி பண்ணோம்னு…
ஆனா இவ வேண்டவே வேண்டாம்னு பிடிவாதமா இருந்துட்டாளாம்…..
வசந்த் கூட கெஞ்சி பார்த்தானாம்…..
ஜெயா தான் வேண்டாம் டா இவன்னு சொன்னதுக்கு, இது நாடக்ததோட ஒரு பார்ட் ம்மா….
இவள விரட்ட நான் பண்ற கடைசி ட்ராமா…
நீ வேடிக்க மட்டும் பாருன்னு சொன்னானாம்….
ஜெயாக்கு அதுக்கு பிறகு தான் வசந்த் கல்யாணத்த நிறுத்த ஏதோ பண்ணியிருக்கான்னு தெரிஞ்சிருக்கு…
ஆனா அவ வீட்டுக்காரர் கிட்ட
சொல்ல ல….
மதியும் நடந்தத சொல்ல ல….
அவ அம்மா அப்பாவோட ஷேர்ஸ வாங்கிட்டு கிளம்பிட்டாளாம்…..
ஆனா வசந்த் என்ன பண்ணான்னு ஜெயாவுக்கே இன்னும் தெரியல…
ஒரு ஒரு மாசம் கழிச்சு யாரோ ஒரு டாக்டர்…
அவக் கூட மிலிட்டரி கேம்ப்ல படிச்சவன்னு கூப்டு வந்தானாம்…
அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணமாம்.
சின்ன வயசுல அவன வீட்டுல இருந்து விரட்டுனதுக்காக மொத்தமா அவள உள்ளேயே விடக்கூடாதுன்னு வசந்த் சொல்றானாம்…
இவ்ளோ தான் எனக்கு தெரியும்…..”
என்று தன் பக்கம் தவறில்லை என்று கூறியவறாக தன் வேலைகளை கவனிக்க சென்று விட, வருண் சிந்தனையில் ஆழ்ந்தான்.
சிறு வயதில் நிகழ்ந்த அந்த ஒரு சம்பவத்திற்காக வசந்த் பழி வாங்கியிருக்கியிருக்கிறான்…
ஆனால் மதியை காணுகையில்….
அப்படி ஒன்றும் பழி வாங்கப்பட்ட பெண்ணைப் போல இல்லையே என்று நினைக்கையில்,
குறிப்பா தாத்தா பாட்டிக்கு நான் இங்க இருக்குற விஷயம் தெரிய வேண்டாம்…..”
என்று மதி கூறியது நினைவு வர, அப்படி என்ன பழி வாங்கியிருப்பான்…..
ஆனால் அவளோ அவனின் பெயரை புனைப்பெயராக வைத்திருக்காறாளே?…..
இதில் ஏதோ இருக்கிறது…..
என்று அவர்களின் இல்லத்திற்குள் அமைந்துள்ள தோட்டத்தில் அமர்ந்தவாறு சிந்தித்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் சடசடவென நீர் விழும் சப்தம் கேட்க, என்ன மழ பெய்யுதா என்று திடுக்கிட்டு எழுந்தான் வருண்.
ஆனால் அது மழை இல்லை.
சின்டக்ஸில் நீர் நிறைந்து விட்டது என தெரிந்துக் கொள்ள வைக்கப்பட்ட பைப்பில் இருந்து சடசடவென நிரம்பிய நீர் வெளியானது…
அதுவும் அவன் இல்லத்தில் இல்லை.
பக்கத்து இல்லத்தில் இருக்கும் தேவிப்பிரியா அதான் மதி தங்கியிருக்கும் இல்லத்தின் சின்டக்ஸ்….
என்ன இது தண்ணீ நிரம்பினது கூட தெரியாம என்ன பண்றாங்க…… என நினைத்தவன் திறந்திருந்த மதியின் வீட்டிற்குள் நுழைய, அடுப்பங்கறையின் வாயிலில் மயங்கி கிடந்தாள் மதி……
பயந்து விதிர்த்து போனான் ஆடவன்.
ஏய் மதி…
ஹேய்! ஹேய்! எழுந்திரு எழுந்திரு ம்மா….”
என்று கன்னத்தை தட்டிட வருணின் முரட்டு கைகள் அவளின் கன்னத்தில் அடியாக விழவும் ஒரிரு நொடிகளில் கண் விழித்தாள் மதி….
ஆனால் வலது கையை மணிக்கட்டுடன் பிடித்துக் கொண்டு எழுந்தவள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட,
“என்ன ஆச்சு மதி?…..”
என்று கேட்டான் வருண்.
“மோட்டார் ஃபில் ஆகிடுச்சுன்னு… ஈரக்கையோட ஸ்விட்ச்ச…
ஆஃப்….
பண்ண வந்தேன்…..
ஷாக் அடிச்சிடுச்சு…..
என்று கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு பிச்சு பெண்ணவள் கூறிட, வருண் வேகமாக எழுந்து ஸ்விட்சை தட்டிட அவனுக்கு ஏதும் ஆகவில்லை.
வருண் அணைத்ததும் தண்ணீரின் சப்தம் நின்று விட, எழுந்திரு மதி என்று அவளை எழுப்பி அக்கம் பக்கம் ஏதாவது இருக்கை இருக்கிறதா என தேடினான்.
ஆனால் ஹால் காலியாக காட்சி அளிக்க, ரூம் எங்கே என வினவவும், மதி எதிரே கை காட்டிட, வருண் அவளை அள்ளிக் கொள்ள, மதி அந்த சோர்விலும் அதிர்ந்தாள்.
ஆனால் அவனிடம் இறக்கி விடு என வாதிடவோ இறங்கிக் கொள்ளவோ உடல் ஒத்துழைக்காததால் அவனின் கைகளில் இருந்துக் கொண்டவள் அவன் மெத்தையில் இட்டதும் தயக்கத்தை மறைத்துக் கொண்டு தேங்க்ஸ் என்றிட,
“படிச்ச பொண்ணு தானே நீ?…
ஈரக்கையோட ஸ்விட்ச்ச தொடலாமா?….”
என்று கேட்க,
“இல்ல வருண்….
சமைக்க வெஜிடெபிள்ஸ்…
எடுத்து வாஸ் பண்ணிட்டு இருந்தேன்…
அந்த டைம்ல…
டேங்க் ஃபில் ஆகிடுச்சு……
சோ யோசன இல்ல….”
என்றிட, வருண் அவளை லேசாக முறைத்து விட்டு தன் அலைபேசியை எடுத்தான்.
அன்னைக்கு அழைத்தான்.
“அம்மா சமச்சுட்டியா?…. என்று கேட்டான்.
உடனே மதி,
“இல்ல வருண் நான் மேனேஜ் பண்ணிக்குறேன்….”
என்று கூறிட, நன்றாக முறைத்தான் அவளை.
ஆனால் அன்னையிடம் பேசிக்கொண்டே….
“நான் அங்க இல்ல ம்மா…
இங்க மதி வீட்டுல இருக்கேன்…
ம்ம் ஆமா.
மதிக்கு முடியல….
கொஞ்சம் அவளுக்கு ஒரு பவுல்ல போட்டு எடுத்துட்டு இங்க வா…..”
என்று மட்டும் கூறியவன் அழைப்பை துண்டித்தான்.
“எதுக்கு வீணா உங்களுக்கு சிரமம்….
நான் ஆர்டர் பண்ணிக்கு….”
என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே,
“இப்படி ஹோட்டல் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டு தான் லேசான ஸாக்கா கூட தாங்க முடியாம சுருண்டு படுத்திருக்க…
கொஞ்சமாவது ஹைஜீனிக்கா வீட்டு சாப்பாடு சாப்பிடனும்….
இரு அம்மா கொண்டு வருவாங்க…
எங்க உன் கூட இருக்குற பொண்ணு?…”
என்று அடுத்த பேச்சிற்கு தாவிட,
“அவ டாக்டர் வருண்..
சம் டைம்ஸ் சீக்கிரமா வருவா சம் டைம்ஸ் ஏதாவது சீரியஸ் கேஸ் ன்னா லெவன் ஓ க்ளாக் கூட ஆகும்…”
என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே உணவுடன் ஓடி வந்தார் ரேணுகா….
வந்தவர் என்ன ஆனது என்று வினவ, வருண் நடந்ததை விவரிக்க,
“என்ன ம்மா நீ படிச்ச பொண்ணு பார்த்து கேர்ஃபுல்லா இருக்க மாட்டியா?….”
என்று கேட்க, மதிக்கு தாய் மற்றும் தனையனின் ஒரு சேர கேள்வியில் சிரிப்பே வந்தது…
ஆனால் சோர்ந்து போய் இது போன்ற அக்கறையான குடும்பம் தனக்கு வாய்க்க வில்லையே என நினைத்தவள் தாத்தா பாட்டியை நினைவு கூறிட, ரேணுகா,
“கதவ பூட்டாம வந்துட்டேன் டா…..
கொஞ்சம் இருங்க நான் வந்துடுறேன்….”
என விடைபெற நினைக்க,
“அம்மா நீ வரவேண்டாம்…
ப்ரியா வந்ததும் நானே வந்துடுறேன்…
நீ வேலைய முடி……”
என்று அன்னையை அனுப்பி வைக்க, ரேணுகா தடுக்க வில்லை.
உண்மையை கூறிய பிறகும் தன் மகனுக்கு அவள் மேல் உள்ள விருப்பம் செல்லவில்லை என்றால், அவங்க அப்பாவ போல இருக்கான் வருண்…..
புருஷன் இறந்து குழந்தையோட ஆதரவு இல்லாம நின்ன என்ன முன்னாடி காதலிச்சதுக்காக குடும்பத்த எதிர்த்து கல்யாணம் பண்ணி வாழ்க்க கொடுத்தாரு…
அவர மாதிரி தான் இவனும் இருக்கான்.
இனிமே இந்த விஷயத்துல நாம நுழைய வேண்டாம்……”
என நினைத்துக் கொண்டு இல்லத்தை அடைய, மதி அவர் தந்து விட்டு சென்ற கேப்பை புட்டை மெதுவாக உண்டாள்.
வருண் அவளுக்கு சுடுதண்ணீர் செய்து அளித்தவன், அவள் உண்ணும் வரை அவளுக்கு முன் அமர்ந்து சங்கடப்படுத்தாமல் அவ்வறையிலே நடை பயில, ஏதோ ஒரு புத்தகத்தை கண்டான் வருண்.
பார்ப்பதற்கு பழைய புத்தமாக இருந்தது.
அதுவும் அவனுக்கு விருப்பமான ஆண் நடிகர் ஒருவரின் பழைய புகைப்படம் தெரிய,
“என்ன தலைவரோட பழைய போஸ்ட்டா இருக்கு…
பழைய புக்கா இது?…
என்று வருண் அந்த புத்தகத்தை எடுத்துக் கொள்ளவா?…
என்று அதை தொட்டுக் கொண்டே கேட்க,
“ம்ம் ஆமா பழைய புக் தான் எடுத்துப் பாருங்க…..
அது என்னோட முத கவித வந்த புக்….
அதான் பத்திரமா வச்சுருக்கேன்…..”
என்று பெண்ணவள் கூறவும், அப்படியா என ஆடவன் புத்தகத்தை திறந்து அவன் கூறிய கவிதையை தேடிட,
கடிகாரமே உனை சபிக்கிறேன்…..
உன் முட்களை சிறையிட நினைக்கிறேன்….
அவன் அருகில் இருக்கும் நேரங்களில் அசுரவேகத்திலும்..,
அவன் இல்லாத நொடிகளை ஆமை வேகத்திலும் கடக்க செய்கிறாய்…
ஏன் என் காதலில் மட்டும் இத்தனை பாரபட்சம் காட்டுகிறாய்……
வசந்தி.……
என முடிவடைந்திருக்க ம்ம் நல்ல கவிதை…
காதலோட தேடலை குறிக்கும் கவிதை…
அது சரி யார் இந்த வசந்தி….
எதுக்கு இவங்க பேர்ல் எழுதுற……
அதுவும் டேட்ட பாத்தா நீ உன் ஃபேமலியோட இருந்த நேரம் மாதிரி இருக்கே…..”
என்று புத்தகத்தில் இருந்த தேதியை கண்டு விட்டு வருண் வினவ……
Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️