Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் – 10

தட்டாதே திறக்கிறேன் – 10

தான் யார் என்பதை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்வதே காதல் மோகம்….

அப்படிப்பட்ட மோகத்தை மறக்க தெரியவில்லையா இல்லை மறந்தால் தன் வாழ்வு முடிந்து விடும் என்று பயத்தில் இருந்தாளா?….

இல்லை மறப்பது தனக்கு தானே செய்து கொள்ளும் துரோகம் என இத்தனை நாட்கள் அவள் நினைத்தாளா?…

இல்லை அவனை நினைப்பதே அவளின் சுவாசம் என்று இருந்தாளா தெரியவில்லை.

ஆனால் அவனை வெறுத்துக் கொண்டே அவன் நினைவில் வாழ்ந்தவள் தினம் தினம் நரக வேதனையை தான் அனுபவித்துக் கொண்டு இருந்தாள்….

ஆனால் இனியும் அந்த வேதனை வேண்டாம் என்று அவளின் மூளை முழித்துக் கொள்ள முதலில் வசந்த் என்ற பெயரில் அவள் உருவாக்கிய தன் அடையாளத்தை அழிக்க நினைத்தாள் மதி.

அதற்காகவே அதிகாலை எழுந்து வேக வேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, பெண்ணவள் இல்லத்தின் கதவு தட்டப்பட்டது.

ப்ரியா உள்ளே குளியலறையில்  இருந்தாள்.

வேறு வழியில்லை. தான் தான் சென்றாக வேண்டும் என இடது கையில் கடிகாரத்தை கட்டிக் கொண்டே திறக்கச் சென்றாள்.

மனதின் ஒரு ஓரத்தில் வருணாகத்தான் இருக்கும்…

தன் உடல் நிலையை பற்றிக் கேட்க வந்திருப்பான்….. என நினைத்தபடி கதவை திறக்க, வருணின் அன்னை ரேணு நின்றிருந்தார், கையில் ஒரு சுமாரான அளவிலான சில்வர் பாக்ஸுடன்…..

மூத்தவரை கண்டதும்

  “வாங்க ஆன்டி உள்ள….”

என்று மரியாதை நிமித்தமாக அழைத்தாள் மதி.

“இருக்கட்டும் மதி. ஏர்போர்ட்க்கு கிளம்பிட்டோம்.

“கௌரிக்கு ஆண் குழந்த பிறந்திருக்கு….”

என்று மகிழ்வுடன் கூறினார் ரேணு.

“ஓஹ் காட்..

சூப்பர் ஆன்டி….

எப்ப?….”

என்று வாசலை விட்டு இறங்கிய படி ரேணுவிடம் கதைத்தாலும் கண்களானது காரில் உடைமைகளை ஏற்றிடும் வருணின் பக்கம் சென்றது.

அன்னையும் மகனும் செல்கிறார்களோ…

அப்படியெனில் வருண் அலுவலகத்திற்கு வர மாட்டானா?… என தான் எடுத்த முடிவு வருணுக்கும் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

ஆனால் அவன் செல்வதை போல தெரியவும் அவளை அறியாமல் அவள் மனம் சுணங்கியது.

ஆனால் ரேணுவோ,

“இன்னக்கி நைட்டு மூனு மணிக்காம்…

வருண் உடனே டிக்கெட் போட்டுட்டான்…

வர மூனு மாசம் ஆகும்.

அதான் உன் கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு வந்தேன்….

என்று அவள் கேட்ட கேள்விக்கு அதிகமாகவே பதில் அளித்தவர், அவளின் கைகளில் டப்பாவை அளித்து,

  “எங்க ரெண்டு பேருக்கும் காலையில டிஃபன் கேசரியும் பொங்கலும் செஞ்சேன்….

அதான் உனக்கும் ஸ்வீட் கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்….”

என்று அளிக்க,

“அம்மா டைம் ஆச்சு…

இன்னும் ஆஃப் அன் அவர்ல ஏர்போர்ட்ல இருக்கனும்…

சீக்கிரம் வா…..”

என்று அழைத்தான் வருண்.

மதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது…

இந்த இரண்டு வார காலமாக தெரிந்த முகங்கள் என்று அவள் அருகில் இருந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்…

இப்போதும் அவர்களும் செல்வதை கண்டவளுக்கு…

அதுவும் மூன்று மாதம்..

நேற்று தான் தன் மனக்குமுறலை பகிர்ந்து கொள்ள பழைய நண்பன் ஒருவன் கிடைத்தான்.

இப்போது அவனும் செல்லப்போகிறானா என நினைத்தவளின் மூளையில் சொந்த குடும்பமே இல்லாமல் போய் விட்டது, இவர்களை நினைத்து என்ன ஆகப்போகிறது விடு என்ற விரக்தி உண்டானது.

அதே நேரம் வருணும் நேற்று நட்பாகவும் நண்பனாகவும் உதவியும் செய்தவன், அப்படி ஒரு விஷயம் நடவாததை போல போல இருக்கவும் மதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“எப்படி இருக்கிறாய்?…

இப்போது உடல் நிலை சரியாகி விட்டதா என்று கேட்காமல் கூட செல்கிறானே….. என யோசித்தாள்.

மறு நொடியே, அவன் ஏன் உன்ன கேக்கனும்.

நீ நல்லா தானே இருக்க…..”

என்று நினைத்தாலும் எதையோ தேடும் குழந்தையை போல வருணை கண்டாள்.

அவளுக்கே புரியவில்லை….

வருணும் அவன் அன்னையும் செல்வது தனக்கு ஏன் இவ்வளவு சோகத்தை தருகிறது என….

இருந்தாலும் அவர்கள் சென்றாக வேண்டும் அல்லவா..

ஆகவே ரேணு, வர்றேன் ம்மா உடம்ப பாத்துக்கோ என்று விடைபெற்றவராக காரில் ஏறி அமர, வருணும் உடைமைகளை வைத்து விட்டு டிக்ககியை மூடினான், அவர்களின் க்ரில் கேட்டை இழுத்து பூட்டு போட்டான்….

மதிக்கு உள்ளே சென்று அலுவலகம் கிளம்ப மனமில்லை.

மாறாக அவர்களின் வாகனம் செல்லும் வரை நிற்க கூறியது..

ரேணுவை போல வருணும் தன் நலனை பார்த்துக் கொள்ள சொல்லி ஏதாவது கூற வேண்டும் என அடம்பிடித்தது..

ஆனால் அவன் பரப்பரப்பாக காரில் ஏறி அமர செல்வதற்கு ஓட்டுநர் இருக்கைக்கு சுற்றி வந்தான்.

கதவை திறந்தான்….

மதிக்கு அவ்வளவு தான் இனி பேசமாட்டான்.

நேற்றோடு அவ்விஷயத்தை மறந்து விட்டான்.

வா உள்ள போவோம் என அவள் வீட்டின் பக்கம் செல்லும் நேரத்தில்,

“இப்ப உடம்பு எப்படி இருக்கு மதி ஓகே வா?…..”

என்று  கேட்டான் வருண்.

மதியின் கால்கள் சட்டென நின்றது…

தலையானது சப்தம் வந்த திசையை நோக்கியது.

வருண் உள்ளே அமர வில்லை.

தனக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்றிருக்கிறான் என உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டவள்,

  “ம்ம் நவ பெட்டர்….” என்று புன்முறுவலுடன்

பதிலளித்தாள் மங்கையவள்.

 “சரி சேஃபா இரு…

ஈர்க்கையால எந்த ஸ்விட்டைசுயும் தொடாத…

பை….”

என காரில் அமர்ந்தவன் பறந்து விட, மதிக்கு அவன் நலன் விசாரித்து விட்டு சென்ற பிறகும் கூட ஏதோ மனக்குறைவாக இருந்தது.

இனி மூன்று மாதம் கழித்து தான் இவனை பார்க்க முடியும்… என நினைத்தவள்

சரி நடப்பது நடக்கட்டும்…..

அலுவலகம் கிளம்புவோம்…

அங்கே என்ன நடக்க இருக்கிறது என பார்க்க வேண்டும் என இதுநாள் வரை தினம் தினம் தன் மனதுக்கு பயந்து பயந்து வாழ்ந்தவள் இன்று தான் வெளி உலகத்தை புதிதாக சந்திக்கச் செல்ல,

  “நோ மதி முடியாது…..

நான் ஸ்டார்டிங்கலையே சொல்லிட்டேன்..

ஐ கான்ட் சேஞ்ச் தி நேம்.

இந்த நேம் ல கன்டினியூ பண்றதா இருந்தா எழுது…

அதர்வைஸ்…..”

என்று அவளுக்கு வேறு வாய்ப்பு கிடையாது என்பதை‌ போல கோப்புகளில் தலையை கவிழ்த்திக் கொண்டு அவளின் தோல்வியை முதல் முறையாக துவங்கி வைத்தார் அகல்யா.

மதி தளரவில்லை…..


ஓகே மேம்….

நீங்க அந்த நேம சேஞ்ச் பண்ண வேண்டாம்…

என்ன சேஞ்ச் பண்ணிக்கோங்க..

நான் என் வேலைய ரிசைன் பண்ணிக்குறேன்…..”

என்று தான் நினைத்து வைத்ததை கூறிவிட, மரகதம் மதி என்ன பண்ற என்று கிசுகிசுத்தாள்.

ஆனால் மதி கிசுகிசுக்க வில்லை…

“இல்ல டி. போதும்..

என்னால இதுக்கு மேல இத கன்டினியூ பண்ண தோணல……

கொஞ்சம் கூட இன்ட்ரெஷ்டே இல்லாம தான் இந்த வேலைய பாத்துட்டு இருந்தேன்…..

நான் ரிசைன் பண்ணிக்குறேன்…..”

என்று கூறிட, அகல்யாவிற்கு அவளை தடுத்து நிறுத்திட பிடிக்கவில்லை.

“ஓகே தாராளமா ரிசைன் பண்ணிக்கோ…..

இவ சொன்னத கேட்கலன்னா நான் இருக்க மாட்டேன்னு மிரட்டுற இவள பிடிச்சு வைக்க வேண்டாம் மரகதம்.

அவ போகட்டும்…..”

என்று அனுப்பிட, அவளைத் தொடர்ந்து வந்தாள் மரகதம்.

“ஏய் என்னடி பேசிட்டு போற?….

இந்த ஜாப எவ்ளோ இன்டரெஷ்டோட செஞ்ச..

இப்ப?…”

என்று கேட்ட தோழியிடம்,

  “இல்ல டி உனக்கே தெரியும் நான் எந்த சிட்யூவேஷன் ல இத ஸ்டார்ட் பண்ணேன்னு….

பட் இது இப்படியே தொடர்ந்தா என்ன பழி வாங்கி வீட்ட விட்டு தொறத்துன ஒருத்தன காலம் முழுக்க நினச்சு நினச்சு நான் ஃபீல் பண்ணி எழுதுற மாதிரி ஆகிடும்.

அவன் நினைவிலேயே நான் இருக்க வேண்டியது வரும்…

ஐ வாண்டு டூ குவைட் திஸ் ஜாப்….

அன்ட் ஐ வாண்ட் டூ கம் அவுட் ஃப்ரம் திஸ்…..”

என்று தைரியத்துடன் பேசிட, மரகதம் அவளை கண்டாள்.

ஒரு வருடத்திற்கு முன் இருந்த மதி போன்ற இந்த மதி இல்லை.

என்னை நீ நிராகரித்து கொண்டே இரு..,

உன்னை நான் நினைத்து கொண்டே இருக்க!……

என்னை விட்டு நீ விலகியே இரு….,

உன்னை விட்டு நான் விலகாமல் இருக்க!……

என்னை தினம் தினம் சாகடித்துக் கொண்டே இரு…,

உனக்காக நான் வாழ்ந்து கொண்டே இருக்க!…..

என்று அவள் காதல் தோல்வி அடைந்ததிற்கான ஒரு கவிதையை கண்ட மரகதம்,

“அவன நீ இன்னும் மறக்கலயா?….”

என கேட்டதற்கு,

“எதுக்கு மறக்கணும் ? என கேட்டாள் மதி.

“எதுக்காகன்னா புரியல.

அவன் உனக்கு சொந்தமானவன் இல்ல அவனுக்குத்தான் நீ வேணாம்னு சொல்லிட்டான்…

என மரகதம் கூறியதற்கு,

“ஆமா அவனுக்குத் தானே… 

அவனுக்கு என்ன பிடிக்கல. 

அது அவனோட தனிப்பட்ட விருப்பம். ஆனா எனக்கு அவன பிடிச்சிருக்கு   இங்க யாருமே  அவன நீ நேசிக்காதன்னு சொல்ல எல்லாம் முடியாது ஏன் அவன் கூட சொல்ல முடியாது…

அவன நான் சின்ன வயசுல காயப்படுத்தினத அவனால மறக்க முடியல.

அதுக்கு பழி வாங்கினான்.

ஆனா நான் லவ் பண்ணது உண்ம தானே…

என் காதல் என்னோட தனிப்பட்ட விருப்பம்.

நீ சொல்றது  கரெக்ட் தான்  எனக்கு சொந்தமில்லாதவன் தான் அவன் . ஆனா என் காதல் எனக்கு சொந்தம் தானே……”

என்றவள் இப்போது இந்த பெயர் வேண்டாம் என்று கூறிட,

“ஏன் என்ன ஆச்சு மதி?…

அவனையே வெறுக்காத நீ அவன் பேர வெறுக்குற அளவுக்கு என்ன நடந்தது?…”

என்று கேட்கவும்,

    “அடுத்த வாரம் என் அம்மா அப்பாவோட நினைவு நாள் வருது டி…..”

என்று அழுதுகொண்டே கூறினாள் மதி.

போன மாசமே தாத்தா ஈமெயில் பண்ணியிருந்தாரு….

எங்க இருக்கன்னு கேட்டாரு.

என்னால அவன் செஞ்சத சொல்லவும் முடியல…..

என் அம்மா அப்பா சமாதிய போய் பார்க்கவும் முடியல…..

ஏதோ நான் குற்றம் பண்ண மாதிரி என்ன இப்படி கட்டிப் போட்டவனையா விரும்புனேன்னு எனக்கே கேவலமா இருக்கு.

அந்த செகண்ட் ல இருந்து அவன வெறுக்க ஆரம்பிச்சேன்….

அவன மறக்க துடிக்கிறேன்.

ஆனா அவன நினச்சிட்டு அவன் பேர்ல கத, கவித எழுதிட்டு என்னால இத பண்ண முடியாது….

நான் நல்லவளா, கடைசி வர நல்ல மனிசியா இருக்கனும்னு நினைக்கிறேன்….

இவன நான் இன்னும் நினச்சிட்டு இருந்தா என்ன அறியாம நானே என் மாமா குடும்பம் பிரிய காரணம் ஆகிடுவேன்.

அதுக்கு பதிலா இவன நான் மறந்துட்டு என்னோட அடையாளத்த அழிச்சிட்டு மதிங்கிற பாதையில பயணிக்க ஆசப்படுறேன்.

நிச்சயமா இப்ப நான் எழுத போற என் வாழ்க்கை பக்கத்த கவனமா எழுதுவேன்……”

என்று ஐ‌டி கார்டை அவளிடம் கொடுத்து விட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு புது பாதையை நோக்கி கிளம்பியவள் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது வருண் காரை நிறுத்துவதை கண்டு இன்பமாக அதிர்ந்தாள்

தன்னை கண்டுக் கொள்ளாமல் வேக வேகமாக உள்ளே நுழைவதை கண்டு திகைத்தாள்.

5 thoughts on “தட்டாதே திறக்கிறேன் – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *