Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 32

மீண்டும் மலரும் உறவுகள் 32

உதயாவிடம் அண்ணா இனிமே இது ஒத்து வராது .

“ஏன்,தியா ஒத்து வராது” .

எல்லாம் தெரிந்திருந்தும் நீங்கள் கேள்வி கேட்பது சரியா?

“அண்ணா ஒத்துக்குறேன். நான் அவரை விரும்பினது உண்மைதான்.

இப்பவும் விரும்பிட்டு இருக்கிறது உண்மைதான்”.

ஆனால் , இப்பேர்பட்ட சூழ்நிலையில் இது நடக்காத காரியம்.

“எப்பேர்பட்ட சூழ்நிலை “.

தெரியாத மாதிரியே கேட்காதீங்க .

தெரிஞ்சதினால் தான் கேட்கிறேன் .

“உன்னோட மனசுல இது ஆயுசுக்கும் அழுத்திட்டு தான் இருக்கும்”.

“இந்த சூழ்நிலை வராமல் இருந்தால் நீ வேற எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அவரை விட்டு விலகனும்னு நினைச்சு இருப்பியா”.

உன்னோட காதல் உண்மை என்பது நான் அன்னைக்கு நீ அவர்கிட்ட உன்னுடைய விருப்பத்தை சொன்ன அன்னைக்கே  பார்த்தேன் .

அன்னிக்கு கோவில்லையும் பார்த்தேன்.

அந்த ஒரே காரணத்துக்காக தான் இப்ப இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்.

இது என்னோட சுயநலம்னு கூட வச்சுக்கோ .

என்னோட மாமா வாழ்க்கைக்காக தான் வந்து நிக்கிறேன் .

ஆனா, நீ தான் முடிவு பண்ணணும் .

என்ன அண்ணா முடிவு பண்ணணும்னு நினைக்கிறீங்க .

“உனக்கு அவர் வேணுமா? வேணாமா ?உன்னோட வாழ்க்கையில அவர் இருக்கணுமா ?வேணாமா ?”நீ தான் முடிவு பண்ணனும் .

எனக்கு அவர் வேணும் .

என்னோட வாழ்க்கையிலும் வேணும் தான்.

நான் இல்லைன்னு சொல்லல .ஆனா ,

தியா ஒன்னு சொல்லட்டா .

சரி உன்னோட அப்பா அம்மா பற்றிய பேச்சு இங்க வேணாம்.

உன்னோட மனசுல அவரு இருந்தா முழுசா உன்னால அவரை ஏத்துக்க முடியும் .

“நீ நெனச்சனா உன்னோட விருப்பத்தை சொல்லு” .உனக்கு லாஸ்ட் வரைக்கும் நான் உறுதுணையா இருப்பேன் சரியா?.

எப்படி அண்ணா அவரு ஒத்துக்குவாருனு நினைக்கிறீங்க .

மாமா வை ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட கடமை அதை பத்திய கவலை உனக்கு வேண்டாம் .

உன்னால இதுல லாஸ்ட் வரைக்கும் ஸ்ட்ராங்கா இருக்க முடியும்னு சொல்லு .

உன்னால உங்க வீட்ல பேச முடியும்னா சொல்லு .

நான் இதுல ஸ்ட்ராங்கா இருப்பேன் .எங்க வீட்ல என்னால பேச முடியும்.

நந்தா சார் ..

நான் இன்னைக்கு போயிட்டு அம்மா கிட்ட பேசுறேன்.

நான் இவ்வளவு தூரம் வந்து பேசுறதுக்கு காரணமும் இருக்கு மா.

மாமா உன்னை விரும்புகிறார் என்று நான் சொல்ல மாட்டேன் .

ஆனா, மாமா எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்திருக்காரு.

அப்பலாம் அவர் மனசுல தோன்றாத ஒன்னு உன் கிட்ட தோன்றுகிறது என்று சொல்ல மாட்டேன் .”உன்ன மாதிரி ஒரு பொண்ணு அவரோட லைஃப் பார்ட்னர் வந்தா நல்லா இருக்கும்” என்ற மாதிரி யோசனை அவருக்கு இருக்கு .

அவர் தினமும் நடக்கிற விஷயத்தை சொல்லுவாரு தான்.

மாமாவை இந்த அளவுக்கு எந்த ஒரு பொண்ணும் துரத்தி காதலிச்சதும் இல்லை தான்.

“அவர் மனச ஏதோ ஒரு மூலையில  நீ பாதிச்சு இருக்க”.

அந்த ஒரே காரணத்துக்காக தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் .

உங்க அம்மா பஸ்ட் ஒத்துப்பாங்களா ண்ணா .

அம்மா ஒத்துப்பாங்க.  அம்மாவை ஒத்துக்க வைக்க வேண்டியது என் கடமை .

அம்மாவே மாமா கிட்ட பேசி ஒத்துக்க வைப்பாங்க .

“ஆனா ஒன்னு இப்பவே சொல்லிடுறேன் மாமா முழு மனசோட உன் கழுத்துல தாலி கட்டுவாருன்னு யோசிக்காத “என்றவுடன் ..

சிரித்துக் கொண்டே அது எனக்கே தெரியுமே .

என்ன இப்போ “எங்க வீட்ல நான் பேசினாலும் என்ன முழு மனசோட அவருக்கு கட்டி கொடுத்துடுவாங்கன்னு நினைக்கிறீங்களா? கிடையாது தானே”.

நார்மல் சிட்டுவேஷனா இருந்தா கூட சான்ஸ் இருக்கு .

இப்ப இருக்க சிட்டுவேஷன்ல ரெண்டு பக்கமுமே முழு மனசோட ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும் .

அவ்வளவு தான் தியா .

நான் அம்மா கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன் .

அதுக்கப்புறம் நீ உங்க வீட்ல பேசு .நான் மாமா கிட்டயும் பேசிறேன் .

பேசிட்டு உனக்கு ஒரு முடிவு சொல்கிறேன் .நல்ல முடிவாகவே சொல்றேன் .

நீ இதுல கடைசி வரைக்கும் பின் வாங்காம இருந்தா போதும் .

சரி  நேரம் ஆகுது கிளம்பு என்று விட்டு நகர்ந்தான் உதயா.

போகும் உதயாவை பார்த்து அண்ணா என்று அழைத்தாள்.

உங்களுக்கு என்று விட்டு நிறுத்தினாள் .

எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல தியா .

ஆனா ,இங்க உங்க அப்பாவை பத்தி பேச வேணாம்னு நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம் உங்க அப்பாவையோ இல்ல ஒன்னையோ பழி வாங்கணுன்ற நோக்கம் கிடையாது .

நீங்க சொன்னதுதான் .இது உங்களுடைய சுயநலமா கூட வச்சுக்கலாம் .

உங்க மாமாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க என்னால புரிஞ்சுக்க முடியும் .

என்னோட அப்பாவை பழி வாங்கணும் நீங்க இங்க நினைக்கல.

எனக்கு சொன்னது தான் .

“உங்க மாமாவை  இந்த சூழ்நிலையால நான் மிஸ் பண்ணிட்டேன் நினைச்சிட கூடாது நீங்க யோசிக்கிறீங்க “.

நான் புரிஞ்சுக்கிறேன் என்று விட்டு அவனுக்கு முன்பாகவே பஸ் ஸ்டாண்ட் நோக்கி தியா செல்ல.

போகும் தியாவை பார்த்து உதயா சிரித்துக் கொண்டான்.

என் குடும்பத்திற்கும் ,என் மாமாவிற்கும் ஏற்றவள் தான்.

உன்னை விட்டு விட எனக்கு மனம் இல்லை. உன்னைப் போன்ற ஒருத்தி தான் என் மாமாவின் வாழ்க்கையில் வரவேண்டும் .

இத்தனை காலம் எங்களுக்காக என்று வாழ்ந்து விட்டார் .

இனியாவது அவருக்காக என்று அவர் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணி விட்டு அவனும் வீட்டிற்கு வண்டியை விட்டான்.

உதயா வீட்டிற்கு செல்லும் பொழுது நந்தா வீட்டில் இல்லை தேவி மட்டும் இருக்க .

அம்மா மாமா எங்க .

காலேஜ்ல வேலை செய்றவங்களோட வெளியே ஒரு வேலை இருக்குன்னு போயிருக்கான் .

அவன் வர கொஞ்ச நேரம் ஆகும்னு சொன்னான் .

ஏன்டா வந்த உடனே கேக்குற என்று கேட்க.

ஒரு முக்கியமான விஷயம் பேசணும் .

அப்படியா சரிடா அவன் வந்து பிறகு பேசிக்கலாம் என்றவுடன் ..”இல்லம்மா அவர் இல்லாத நேரத்தில் தான் பேசணும்” .

“தனது மகனை குறுகுறுவென பார்த்துவிட்டு உன் மாமாவுக்கு தெரியாம ஒரு முக்கியமான விஷயமா ?”

சிரித்துக் கொண்டே தன் தாயின் தோளில் தலையை சாய்த்துக் கொண்டவன் .

அம்மா உன் தம்பியோட வாழ்க்கை பத்தி .

“அவன் வாழ்க்கை பற்றி என்னடா பேசப்போற ?”

அவன்  வாழ்க்கை பற்றிய கவலையே எனக்கு அவன்  கல்யாணம் பண்ணிக்கலன்னு தான் .

நமக்காக அவன் வாழ்க்கையை இழந்துருவானோனு ஒரு பயம் உள்ளுக்குள்ள அரிச்சிகிட்டே இருக்கு அதுவும் இப்போ என்று விட்டு அமைதியாக விட்டார் .

அவரது கையை தன் கைக்குள் வைத்துக் கொண்ட உதயா அத பத்தி பேச தான் வந்திருக்கேன் என்று சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு லேட்டா தானே வருவாரு என்றான்.

ஆமாண்டா படவா .

ஏன் ,சுத்தி சுத்தி பார்க்கிற .

“அவன் வாழ்க்கை பற்றி அவனுக்கு தெரியாம என்ன ரகசியம் பேச போற.”

தியா என்றவுடன்..

தன் மகனின் கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு தன் மகனை முறைத்தார்.

என்னடா பேசுற .

“உன் மனசு தொட்டு சொல்லு நீ தியா  இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்னு ஆசைப்பட்டாயா இல்லையா ?”

தியா யாருன்னு தெரியாது .அதுக்கு முன்னாடி ஆசைப்பட்டேன்.

உன் மாமா அந்த பொண்ண பத்தியே பேசுறானே உன் மாமாவுக்கு அந்த பொண்ண புடிச்சி இருக்குன்னு சொல்றதை விட.

அந்த மாதிரி ஒரு பொண்ணு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்கும்னு எண்ணம் இருக்கு .
அவன் மனசுல .

அவன் தியாவை  வேணான்னு சொல்ல இருந்த ஒரு காரணம் வயசு தான் .எனக்கு தெரிஞ்சு தடையா இருந்துச்சு .

ரெண்டு பேருக்குமான வயசு வித்தியாசம் .ஆனா இப்போ இருக்க சூழ்நிலையில் இது நடக்காது .

உன் மாமா ஒத்துக்க மாட்டான்.

ஏம்மா நடக்காது. உனக்கு புடிக்கலையா ?

டேய் எனக்கு புடிக்கலைன்னு கிடையாது. எனக்கு புடிக்காம போக அவ என்ன பண்ணா.

இதுல அதிகமா பாதிக்கப்பட்டது அவ தானடா .

“அந்த பொண்ணு உன் தம்பியை லவ் பண்ணா” .

அதுதான் ஏற்கனவே சொல்லிட்டியேடா ?

அப்புறம் என்ன .

இப்பவும் விரும்பினாள் .

என்னடா சொல்ற என்று எழுந்து நிற்க .

உட்காருமா .இப்பவும் விரும்புற தான்.நான் இப்பதான் அவகிட்ட பேசிட்டு வந்தேன் .

நீ சரின்னு சொன்னா அவ அவங்க வீட்ல பேச ரெடி .

அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா .

உன் மாமனும் ஒத்துக்க மாட்டான்.

அம்மா எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு .

“மாமா இப்ப இருக்க சூழ்நிலையில வேற பொண்ண காமிச்சாலும் கல்யாணம் பண்ணிப்பாரா ?”

அவருக்கு ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி இருக்க தானே செய்யும்.

வயசு வித்தியாசத்தில் மட்டும் தியாவை  மாமா தூக்கி போட்டு இருந்தா கூட கொஞ்ச நாள்ல மறந்துருவாரு .

ஆனா, தனக்கு இவளை மாதிரி ஒரு மனைவி வேணும் அப்படின்னு யோசிச்சு இருந்த மனசுல.

இந்த சுழ்நிலையால  வேணாம்னு ஒதுக்கிராருன்னா அவரோட மனசு ஒத்துக்குமா .இல்ல வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி பாருன்னு நினைக்கிறியா ?

எனக்கு மாமாவோட வாழ்க்கை முக்கியம். இனி நீ தான் முடிவு பண்ணனும் .

அவங்க வீட்ல பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது தியாயோட பொறுப்பு .

தியா  சம்மதிக்க வைத்து விடுவா.

மாமாவை சம்மதிக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு .

எனக்கு அந்த வீட்டுக்கு வரதால எந்த பிரச்சனையும் இல்லை .

எனக்கு பிடிக்காதோ இல்ல .. எனக்காகன்னு நீயும் சரி ,மாமாவும் சரி யோசிக்க வேணாம் .

எனக்கு புடிச்சிருக்கு .தியாவை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் கிடையாது.

அதனால, நீ மாமா கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிற.

உன்னால மட்டும் தான் சம்மதிக்க வைக்க முடியும்.

மாமா உனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார் .அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் .

இதுக்கு மேல உன்னோட கடமை ,உன்னோட விருப்பம் என்று விட்டு தன் தாயை பார்த்துக் கொண்டிருக்க .

என்னடா மச்சான் அம்மாவும் ,மகனும் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே நந்தா உள்ளே வர .

“உன்னோட கல்யாண விஷயமா தான் மாமா “என்று விட்டு சிரித்துக் கொண்டே எழுந்து நின்றான்.

தேவி அதிர்ச்சியாக தனது மகனை பார்க்க .

நந்தா சிரித்துக் கொண்டே அதற்கு என்னடா மச்சான் இப்ப அவசரம் என்று விளையாட்டாக  நந்தா கேட்க .

ஆமாண்டா இன்னும் அவசர என்னன்னு கேட்டுட்டே இரு .வருஷம் ஓடிக்கிட்டே இருக்கு .

நீயும் அப்ப பண்ணிக்கிறேன் இப்ப பண்ணிக்கிறேன்னு ஏமாத்திட்டே இரு .

இனியும் உன்ன விடரதா இல்லை .உனக்கு நான் ஒரு பொண்ணு பாத்துட்டேன் .

“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்” .

“அக்கா என்ன விளையாடுறியா? “ஒரு மாசத்துலனு சொல்ற பொண்ணு பாத்துட்டேன்ற.

நீதான சொன்ன .

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு .

சொன்னேன் தான். ஆனா ,

இப்போ நீ சொன்ன காரணமும் முடிஞ்சிருச்சு நந்தா .அவ்ளோதான் என்னால சொல்ல முடியும் .

உன் மச்சான் கிட்ட சொல்லணும்னு சொன்ன.. உன்னையும் மீறி உன் மச்சான் கிட்ட உண்மையை சொல்லியாச்சு .

ஒன்னு புரிஞ்சிக்கோ நாம்  அதிலிருந்து வெளியே வந்துட்டோம் என்று தன் மகனைப் பார்க்க அவன் கண்ணை சிமிட்டி சிரிக்க .

இனி உன்கிட்ட தான் இருக்கு .இல்ல நான் இனியும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் .

உங்களுக்காக நான் உங்க பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பேன்னு இருந்தா .

“நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ .நாங்க எங்க வாழ்க்கை பார்த்துக்குறோம்”.

“நானும் ,உதயாவும் எங்க  வாழ்க்கையை  பார்த்திட்டு கிளம்புறோம்* என்றவுடன் ..அக்கா என்று வேகமாக கத்தினான் நந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *