Selvarani selvarani review for ஏறெடுத்து பாருடா முகிலனே.
விமர்சனம் வழங்கியவர்: selvarani amma
பிரவீணா தங்கராஜின்
ஏறெடுத்து பாருடா முகிலனே.
நுவலி பெயர் இப்போது தான் கேள்விப்படுகிறேன். நுணல் தான் பொருத்தம் அவளுக்கு!
கிராமத்து வாழ்க்கையும் விவசாயமும் நம்மை ரசிக்க வைக்கிறது. நகரத்து வாழ்விலிருந்து கிராம வாழ்வை நோக்கி செல்பவனை ஷிவானி தன் காதலால் பிடித்து வைக்க நினைக்கிறாள். உண்மை காதல் அவனுக்கு கிராமத்தில் தான் கிடைக்கிறது.
கதையில் வரும் சிலஅற்புதமான விஷயங்கள் 'அட' என சொல்ல வைக்கிறது. ஒரே கடையில் எல்லாம் வாங்கி வரும் நமக்கு, சிறு கடைகளின் வியாபாரம் பற்றி நினைவுக்கே வந்தது இல்லை. நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பது தானே நியாயம்.
கணினிக்கு தான் ஏ சி, மனிதருக்கு இல்லை!
மதுராவின் மீதான பிரியத்துக்கு சொன்ன விளக்கம் அருமை. அந்த ஆரஞ்சு கோடு உண்மைதான். எல்லா அன்புமே காதலில்லை. மது பாப்பா எல்லா உறவுகளையும் அடைந்து விட்டாள்.
எனக்கு அந்த மண் இல்லா விவசாயம் பற்றி வீடியோ இருந்தா போடுங்க.
-----
நன்றிஅம்மா
குறிப்பு :வீடியோ அனுப்பிட்டேன்.
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi6 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan6 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்6 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ6 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review6 months ago
- 109 Forums
- 1,755 Topics
- 2,013 Posts
- 5 Online
- 848 Members