அத்தியாயம்-10
ஆரவமுதன் என்றதும் தனியாக வந்து, “அமுதன்” என்று ஆரம்பித்ததும், மறுபுறம் அவனோ, “யானையை காப்பாத்தினப்ப அங்க கேமிரா இருந்திருக்கு. அந்த வீடியோவை நியூஸா டெலிகாஸ்ட் ஆகியிருக்கு” என்றதும், சுரபி மென்குரலில், “இப்ப தான் பார்த்தேன் அப்பா அம்மா கூட பார்த்தாங்க” என்றாள்.
ஆராவமுதன் நெற்றியை கீறியபடி, “ம்ம்.. நான் நம்ம நைட் ஸ்டே செய்த இடத்துல கேமிரா ஏதும் இருந்துதான்னு விசாரித்தேன். டோண்ட் வொர்ரி… அப்படி எதுவும் இல்லை. அதை சொல்ல தான் போன் பண்ணினேன். சிசிடிவி மூன்று இடத்துல வச்சி இருந்தங்கலாம். அதில ஒன்னு ரிப்பேர், இன்னொன்னு வீடியோ இருந்த இடத்துல நாம போகலை. நீ வீடியோ என்றதும் பயந்து இருக்கலாம் என்ற காரணத்தால் கால் பண்னினேன்.” என்றதும் சுரபி நிம்மதியடைந்தாள்.
“தேங்க்ஸ்…. எனக்கு யானையை காப்பாற்றிய வீடியோ பார்த்தும் சட்டுனு தோணுச்சு. நீயே என் பயத்தை நிவர்த்தி பண்ணிட்ட. பட் ஜஸ்ட் மிஸ்ல?!” என்று பேசவும் ஆராவமுதன் உதட்டில் சிறு புன்னகை.
“ம்ம்ம்.. எப்படியிருக்க? கை,கால்ல இருந்த சிராய்ப்பு ஆறிடுச்சா. ஆன்ட்டி எப்படியிருக்காங்க?” என்றான் குழைவான குரலில் ஆராவமுதன்.
சுரபியோ “ம்ம் குட்… கொஞ்சம் பெட்டர். அம்மாவும் நல்ல முன்னேற்றம். நீ போன் பண்ணும் போது போன்ல உன் பெயரை அப்பா அம்மா கவனிச்சிருக்கலாம். நம்பர் சேவ் பண்ணியதை வச்சி விசாரிக்கலாம்” என்று கூறியவள் தாய் தந்தையை எட்டி பார்த்தாள்.
அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதை கண்டாள்.
“அதெல்லாம் நீ சமாளிப்ப.. ஐ நோ… ம்ம் நிவாஸ் பற்றி உங்கப்பாவிடம் சொன்னியா?” என்றான்.
“அவனை இப்ப தான் வீட்டை விட்டு துரத்தியது. நீ அனுப்பிய போட்டோஸ் எல்லாம் காட்டி காரணம் கேட்டேன். விரும்பறாதா சென்னான். இடியட்… இத்தனை நாள் இந்த ஆசையில் தான் சுத்தியிருக்கான்.” என்று திட்ட உள்ளுக்குள் ஆராவமுதன் ஆனந்தப்பட்டுக் கொண்டான்.
“அதோட கிட்னாப் பண்ணியது நீ தான்னு கேட்டு விரட்டியாச்சு, சோகமா போனான்.” என்று கூறவும், “சரி… நான் சென்னை வந்துட்டேன். மீட் பண்ணலாமா?” என்று கேட்டுவிட்டான்.
சுரபியிடம் மௌனம் ஆக்கிரமிக்க, ஆராவமுதன் “சுரபி” என்றதும் குரலை செருமி “அதெல்லாமா சரிவராது… ஆல்ரெடி மீடியா ஏகப்பட்ட குவெஸ்டின் கேட்குது. என்னால ரிப்ளை பண்ண முடியாம வீட்டுக்குள்ள இருக்கேன். இப்ப போய்..” என்று முடியாதென்பதை மறுத்து கூறினாள்.
“இங்க பாரு… மீடியா கண்ணுலபடாம நான் பார்த்துக்கறேன். நீ வர்றியா அதை மட்டும் சொல்லு” என்றான்.
“அது.. அமுதன்..” என்று தயக்கமாய் கூற, “முடியாது, மாட்டேன் இப்படி ஏதாவது பேசி என் மூடை ஸ்பாயில் பண்ணாத. பிளேஸ், லொகேஷன், டைம் இதெல்லாம் உனக்கு நிதானமா செண்ட் பண்ணறேன். டைமுக்கு வந்துடு.” என்று அணைத்துவிட்டான்.
சுரபியோ ‘இவன் வேற… இத்தனை நாள் இருக்கானா இல்லையானு கூட தெரியாது. இப்ப மாநாட்டிற்கு பிறகு சந்திச்சதுல இருந்து ஓவரா உரிமை எடுத்து பேசறான். ஒரு தடவை சநேர்ல ந்திச்சு பேசிட்டா சரியாகிடும்.’ என்றவள் சிந்திக்கும் முன் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரிட்டு நேரத்தை குறிப்பிட்டு வந்தது.
தற்போது வெளியே சென்று தாய் தந்தை ஏதேனும் கேட்டால் பதில் தர வேண்டும் என்று மெதுவாக வந்தாள்.
போனை காட்டி “ஆராவமுதன் அப்பா” என்றாள் மொட்டையாக.
“அப்படியாம்மா” என்று கூறியவர் என்ன ஏதென கேட்கவில்லை. எப்படியும் மகள் அவளாக கூற வேண்டியதை கூறுவாளென்ற நம்பிக்கை.
தாய் உள்ளம் அவ்வாறே நினைத்து தவிர்க்குமா? நம்பிக்கை மலையளவு இருந்தாலும் பெண்ணை பெற்றெடுத்த பெண் மனமல்லவா.?!
“அந்த தம்பி ஏன் கால் பண்ணினார்?” என்று கேட்டார் பல்லவி.
“ஒ..ஒன்னுமில்லைம்மா… யானை காப்பாத்தினதா வீடியோ வந்ததே அதை பார்த்துட்டு கால் பண்ணினார். இன்னமும் இந்த மீடியா நம்மளை பிடிச்சிட்டு தொங்குதுன்னு சொன்னார். அப்படியே உங்களோட ஹெல்த் இப்ப பரவாயில்லையானு நலம் விசாரிச்சார்.” என்று அடுக்கவும், பல்லவிக்கு சிறு நிம்மதி.
“வேற ஏதுமில்லையே?” என்று கேட்டிட, “இல்லைம்மா.” என்று கூறியவள் தந்தையிடம், “அப்பா நிவாஸை கட்சி விட்டு தூக்கியதை தொண்டர்களிடம் தெளிவுப்படுத்துங்க.” என்றாள்.
“ஆகட்டும்மா” என்று முடித்து கொண்டார்.
இதற்கு மேல் சுரபி அங்கு தலையை கொடுத்து விழிக்க, மனமின்றி தனியறை சென்றாள்.
பல்லவியோ “அந்த தம்பியை பத்தாவது படிக்கறப்ப இவ காதலிச்சி அவரிடம் சொன்னதா சொல்லி, அரசியல் சண்டையோட அதை வேற பேசி அவமானப்படுத்தினார் இலக்கியன் அண்ணன்.
இப்ப வளர்ந்து ஆளாகி அதே தம்பியோட பேசி பழகறா. இதெல்லாம் சரியா வருமாங்க? ஒரு நேரமில்லை என்றாலும் ஒரு நேரம் இவளை நினைச்சா பக்குன்னு இருக்கு. இதுவரை கல்யாண பேச்சை எடுக்க விடலை. இனியாவது ஒரு கல்யாணத்தை பண்ணுங்க. நான் உயிரோட இருக்கறப்பவே ஆசைத்தீர பார்த்துப்பேன்.” என்று கூறவும் நட்ராஜ் ஆமோதிப்பாய் நின்றார்.
இங்கு ஆராவமுதனோ தன் தந்தை இலக்கியனோடு “லொகேஷன் ஷேர் பண்ணி டைமும் அனுப்பிட்டேன். வரமாட்டேன்னு சுரபி சொல்லலை. இப்பவரை அவ என்னை விரும்பறாப்பா. நான் என்ன சொன்னாலும் கேட்பா அப்பா. நீங்க தான் பயப்படறிங்க.” என்று சர்வசாதாரணமாக உரைத்தான்.
“முன்ன இருந்த சுரபியை நீ இன்சல்ட் பண்ணியதும் அவ சூறாவளியா அரசியல்ல குதிச்சா. இப்ப இருக்கற சுரபி சூறாவளி டைப், இந்த முறை நீ அவளை ஏதாவது காரியத்துக்கு பழகறேன்னு தெரிந்தா உன்னை உண்டில்லைனு பண்ணிடுவா அமுதா.
எனக்கு சுரபி பேசறது பழகிடுச்சு. இனி நீ அரசியல்ல வரப்போற. அடுத்த முதல்வர் நீ தான், ஜாக்கிரதை.” என்று தட்டிக் கொடுத்தார்.
ஆராவமுதனோ மனதிற்குள், ‘கட்டம் போட்டு இறங்கியிருக்கேன். அவ பேச்சுல இத்தனை காலம் பேசியதை தாண்டி, நான் செயலில் இறங்கியதை இந்த உலகம் பார்த்திருக்கு. இனியும் பார்க்கும்.’ என்று இறுமாப்புடன் திரிந்தான்.
நிவாஸ் பார்வை சுரபியை காதலாக தழுவுவதை கண்டவன், உடனடியாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டான்.
இத்தனை காலம் சுரபிக்கு எங்கு எது பேசவேண்டுமென நோட்ஸ் எடுத்து கொடுத்தவன், சுரபியின் பலத்தை பெற்றவர்களை கத்தரித்தாலே, அவள் ஆட்டம் காணுவாளென்று நினைத்தான்.
இந்த நிவாஸோ, ‘காதலிச்சது தப்பா? ஏன் காதலிக்க கூடாதா? என்னை விட பொறுப்பா பார்த்துக்க முடியுமா?” என்று சக தொண்டனான சிநேகிதனிடம் புலம்பினான்.
“அந்த கிட்னாப்ல உனக்கு சம்பந்தம் இருக்கா?” என்று கேட்க, “நீ வேற, என் ஆதங்கத்தை சொன்னா என்னையே சந்தேகப்படற,” என்று கோபமாய் மொழிந்து கடந்தான்.
அது நடந்து இரண்டு நாள் கழிந்திருந்தது.
நிவாஸை கட்சியிலிருந்து விலக்குவது பற்றி நட்ராஜ் பேசி நோட்டிஸ் போர்ட் ஒட்டவும், கட்சியிலிருந்த சிலர் தங்கள் அதிருப்தியை காட்டினார்கள்.
சிலர் காரணம் கேட்டு குடைச்சல் தர, பொதுவான மீட்டிங்கில், ரகளையோடு களைக்கட்டியது.
சுரபியோ “என்னை கொலை செய்யும் நோக்கத்தோட கிட்னாப் பண்ண நினைச்சது மூன்று பேர். அந்த மூன்று பேர் வேறயாருமில்லை. நம்ம கட்சி தொண்டர்கள் கருணாகரன், சுந்தர், லாரன்ஸ் நிலசரிவுல இறந்தாங்களே அவங்க தான்.
எப்பவும் எந்த மாநாட்டுக்கு போனாலும் மாநாடு முடிந்து என்னை கார்ல ஏற்றி அதுக்கு பிறகு நிவாஸ் போவார். ஆனா ஏன் அன்னைக்கு மட்டும் நான் விமானத்துல ஏறினேனா இல்லையானு கவனிக்காம அவர் சென்னை வந்தார்.
ஏன்னா.. அங்கிருந்தா அவர் கிட்னாப் செய்தவர் யாரு என்னனு போலீஸ் தேட நிவாஸுக்கு பதில் சொல்லணும். இதே சென்னை வந்துட்டா, ஒரே வார்த்தையில் கிட்னாபிற்கும் தனக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிடலாம். நிவாஸ் மேல சந்தேகம் வந்திருக்கு… அதன் காரணமா கட்சியில இருக்க தகுதியில்லைன்னு முடிவு பண்ணறேன்.” என்று கூற, அங்கிருந்த கட்சி தொண்டர்கள் ‘எப்பவும் சுரபியோட வருகையிலிருந்து திரும்ப செல்வது வரை நிவாஸ் தானே பார்ப்பார். அன்று புயல் மழை என்றிருக்க, விமான நிலையத்தில் ஏற்றிவிட்டு அல்லவா சென்றிருக்க வேண்டுமென்று பலருக்கும் தோன்ற ஆரம்பிக்க கிசுகிசு பேச்சால் அவர்களுக்குள் அமைதி காத்தனர்.
அதோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் நிவாஸ் பின்னுக்கு தள்ளப்பட்டான்.
நிவாஸோ பெரிய கும்பிடு போட்டு, தானாகவே கட்சியிலிருந்து விலகுவதாக கூறினான். அவ்விடத்திலிருந்து செல்லும் போது, “நாசூக்கா என் காதலை துண்டாக்கிட்ட. என்னை கூடவே வச்சிக்க முடியுதுன்னு கட்சி விட்டு தூக்கிட்ட. பேஷ் சுரபி. அப்பறம் எனக்கே இந்த நிலையில் தள்ளிட்ட ஓகே. எதிர்கட்சி ஆட்களோட சகவாசம் இருந்தா நீயும் என்னை போல அடுத்த நிமிடம் தூக்கி ஏறியப்படுவா. ” என்று புறப்பட்டான். சுரபி அவன் பேச்சை செவிக்கு ஏற்றவில்லை.
கட்சி தொண்டர்கள் மாநாடு முடிய, நட்ராஜ் அதன் பின் நிவாஸ் பார்த்துக்கொள்ளும் இடத்தில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை சென்றது.
சுரபி தன் இருப்பிடம் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அந்த நேரம் ஆராவமுதன் போனில் அழைத்தான்.
“சொல்லு அமுதா” என்றாள்
“ஹேய்… சுரபி.. சாரி… கொஞ்சம் லேட்டாகுது. பட் கண்டிப்பா வந்துடுவேன் வெயிட் பண்ணு” என்று கூறினான்.
‘எங்கே என்ன என்று சிந்திக்க, இன்று அவனை சந்திக்க சம்மதம் அளித்தவை நினைவு வந்தது.
அவசரமாய் தேதி நேரத்தை கவனித்தவள், “சுப்பையா அண்ணா… வண்டியை சோழா ஹோட்டலுக்கு பக்கம் விடுங்க” என்றாள்.
ஏன் எதுக்கு என்ற கேள்வியின்றி கார் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு பறந்தது.
‘நல்லவேளை மறந்திருப்பேன். அப்பறம் என்னைக்காவது பார்த்தா நினைவு வச்சி ஊசியேற்றும் விதமாக தாக்குவான்.’ என்று நினைத்திருக்க, ‘அவன் எதுக்கு கூப்பிடறான்? என்ன பேசணும்? மீடியா பார்த்துச்சு கொத்திட்டு போகும். தேவையில்லாம ஏழரையை இழுத்து வைக்கறேன்.’ என்று அங்கங்கே பார்வையிட்டு வந்தாள்.
ஹோட்டல் வந்தடையும் நேரம், காரிலிருந்து இறங்க முறப்பட்டாள்.
ஆனால் ஆராவமுதனோ, மீண்டும் போனில் அழைத்து, “சுரபி 786 நம்பர்ல நாம பேச ரூமை புக் பண்ணிருக்கேன். காரை அப்படியே லிப்டில் கொண்டு வந்து மாடில ஷிப்ட் பண்ணிட பேசிட்டேன். சோ… காரிலேயே வந்துடு. லிப்ட்ல மட்டும் இறங்கி ரூம் நம்பருக்கு வந்துடு.” என்று கூற, தனக்கு பாதுகாப்பு என்று அவளுமே சம்மதித்தாள். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ளுக்குள் காரும் லிப்டில் ஏற்றிக் கொண்டு மேலே எழும்பியது.
ஆராவமுதன் உரைத்தது போலவே லிப்டில் கார் ஏறிட, மேல் தளத்திற்கு சென்றது. அங்கே கதவு திறந்து சுரபி மட்டும் இறங்கி கொண்டாள்.
“சுப்பையாண்ணா அப்பர்ல கார் பார்க்கிங் பண்ணிடுங்க. நான் போன் பண்ணறேன். இங்க வந்தே பிக்கப் பண்ணிடுங்க” என்று கூற, சரியென்றார்.
மேல் தளமான மொட்டை மாடியிலும் விளையாட்டு மைதானமாகவும், நீச்சல் குளமாகவும், கார் பார்க்கிங் இடமாக அழகாய் அமைத்திருந்தனர்.
இங்கே அதே முறை என்பதால், கார் ஹோட்டல் அறைக்கு அருகே வரை பயமின்றி வந்தாள். சுரபிக்கு பயமெல்லாம் தங்கள் கட்சி ஆட்களும், எதிர்கட்சி ஆட்களுமே. இன்று சொன்னாலும், சொல்லாவிட்டாலும், கட்சி என்றாலே சலிப்புண்டாகும் அளவிற்கு மாற்றியது. சில நேரம் வெற்றி, பல நேரம் தோல்வி என்று புரிந்தது.
அதிலும் ஆராவமுதனோடு மீண்டும் கிசுகிசு துவங்கினால் அவள் எந்நிலைக்கு ஆளாகுவாளோ? தாய் தந்தை கேட்டால் பழைய நட்பின் தொடர்ச்சி என்று சொல்லலாம். அப்படியும் வினா துளைத்தால் அதைப்பற்றி இந்த நிமிடம் சிந்திக்காமல் நடந்தாள். ஆனால் கட்சி ஆட்களிடம் என்னவென உரைப்பது?
போனில் நம்பரை பார்த்து ரூம் நம்பரை இடது பக்கம் பார்வையிட, வலது பக்கம் விசுக்கென அவளை அறைக்குள் இழுத்தது ஆராவமுதன் கரம்.
“அமுதன்” என்று அலறாத குறையாக நின்றவளிடம், “ஹாய்… வாட்சப்ல அந்த நம்பர் செண்ட் பண்ணினேன். பட் இந்த நம்பர் தான் புக் பண்ணியது.” என்று அவளை வீழ்த்தும் புன்னகை வீசினான்.
“அதுக்காக இப்படியா… கை உடைஞ்சிருக்கும்” என்று அவனிடமிருந்து அவள் கரத்தை உருவமுயன்றாள்.
“எதுக்கு என்னை சந்திக்கணும்னு சொன்னிங்க. சீக்கிரமா சொல்லுங்க. யாராவது பார்த்து திரும்ப மீடியாவுல சர்ச்சையில் சிக்க பிடிக்கலை.” என்று கூற அவள் முகத்தை தன் மார்பில் வைத்து அணைத்து நின்றான்.
“அமுதா” என்றவள் அவனது இதய தாளத்தை கேட்டு செவியை எடுக்க மனமின்றி நின்றாள். ஆயிரம் தந்திரம் அரசியலில் இருக்க, நாயகன் எடுத்த ஆயுதம் காதல்.
-தொடரும்.
Achoooo appo avala yemathuranaaa…. Love nu solli yemathunaaa ava yepdi thaanguvaa… Arasiyal panna ithuthaa avanukku ayiuthamaa🙄🙄😏😏😏
Amuthuan this is too bad. But intresting
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 amudhan eppdi panniyirukka vendam🤨 unmai mattum avaluku therinjidhu avlo dhan 🙄
Really surabhi didn’t feel anything odd about amudan paarpom 👍🌹
Too bad to play with feelings. Ethu therinja semaya thirupi kodupa
Appo… Surabi ya cheat panituvana? 😔
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 10)
அடப்பாவி…! அரசியல் ஆதாயத்துக்காக ஒரு பெண்ணை காதல்ங்கிற ஆயுதத்தை வைத்து தான் வீழ்த்தணுமா…? இது துரோகம் இல்லையா,…? பெத்தவங்க கிட்ட பாசத்தை காட்டியும், பெண் கிட்ட காதலையும், குரு கிட்ட வித்தையிலேயும், நாட்டை எதிரிக்கு காட்டிக் கொடுத்தும் பண்றது அத்தனையும் துரோகத்துல சேர்ந்தது தான்.
இதுக்கு அந்த நிவாஸே தேவலை போலவே…? ச்சே ! இந்த ஆராவமுதன் எந்த கேட்டகரியை சேர்ந்தவன்னே தெரியலையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Amudha illakiyan sonnathu pola ne ava feelings la vilayada pakkura unnoda arasiyal aasai kaga ne enna aaga poriyo
Ithu enga poi mudiumo
அமுதன் அரசியல் ல….வந்துட்டா பிறகு…எதிர்கட்சி ஆளை எப்படி ஏமாத்தலாம்ன்னு..நல்லா தெரிஞ்சி வச்சி இருக்கான்.நீ பொலச்சிப்ப அமுதா….ஆனா ஒரு பொண்ண காதல்ன்ற பேர்ல..ஏமாத்துறது சரி இல்ல அமுதா…its too bad… நான் இதை உன்கிட்ட எதிர் பாக்கல அமுதா…🤷♀️ Going good..👌❤️💐
Superb 👌👍💯 Interesti💯💯🔥💥💯💯🔥
amutha itha un kitta ethirpakala ippadi arasiyal kaga kadhal ah vachi nee atha adaiya ninaikura aana surabi inum una unmaiya love panra atha ethukunu kuda kekama ipo inga vanthu nikura
Interesting
Interesting