நூடுல்ஸ் வித் எக் தோசை
செய்முறை:
எப்பவும் குழந்தைகள் இந்த ‘தோசையம்மா தோசை’ பாட்டு வரில வர்ற மாதிரி ஒரே ஒரு தோசையை தான் சாப்பிடுவாங்க. அப்படி ஒரு தோசையில இருந்து இரண்டா சாப்பிட வைக்க அம்மாக்கள் மெனக்கெடுக்கணும்.
ஒரு சாதா தோசை சாப்பிட்டா, நூடுல்ஸ் வித் எக் தோசை செய்து தருவேன் என்று டீலிங் பேசி பாருங்க. நூடுல்ஸ்ஸா ஆஹ் சாப்பிடறேன்னு தலையாட்டுவாங்க. அப்ப முதல்ல சாதா தோசை சாப்பிட வச்சிட்ட பிறகு, தோசையில் முட்டையை உடைத்து விட்டு ,வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இதனுடன் வேகவைத்த நூடுல்ஸ் அலங்கரிச்சு ரோல் செய்து கொடுத்தா எக்ஸ்ட்ரா ஒரு தோசை சாப்பிடுவாங்க.
குறிப்பு: முதல்லயே இந்த தோசை கொடுத்துட்டா சாதா தோசை சாப்பிட மாட்டாங்க. அதனால் டீல் பேசி முதல்ல அந்த தோசையை சாப்பிட வச்சிட்டு இதை செய்து கொடுங்க. எக்ஸ்ட்ரா சீஸ் தூவி கொடுக்கலாம்.