Skip to content

The leader-18

64 / 100 SEO Score

The leader-18

அத்தியாயம்-18

ஷ்ரத்தா கையிலிருந்து நழுவிய போனை எடுத்து, ”மிஸ்டர் அவன் என்னை விரும்பலை. நீங்க தப்பா புரிந்துக்கறிங்க. அவனிடம் உனகெல்லாம் பணம் தந்து வர்ற அழகிகள் தான் உன் அறையை அலங்கரிக்க வருவாங்க. குடும்ப பொண்ணுங்க வரமாட்டாங்கனு சொன்னது உறுத்தியிருக்கும். அது அவனோட ஈகோவை நான் சீண்டிட்ட மாதிரி பீல் பண்ணி, என்னை அவன் வலைக்குள் சாய்க்க பார்க்கறான். மத்தபடி விரும்பறது எல்லாம் உங்க இமாஜினேஷன். அவன் மண்டையில லஸ்ட் மட்டும் தான் கொட்டி கிடக்கு” என்றாள்.

இம்முறையும் மறுபக்கம் அமைதி கொண்டது. “ஹலோ இருக்கிங்களா? மிஸ்டர் டைமண்ட்…” என்று அழைத்தாள்.

எதிரே இருப்பவன் பெயரும் தெரியாது எதுவும் தெரியாது. அதனால் ஷ்ரத்தாவாகவே மிஸ்டர் டைமண்ட் என்று விளித்தாள்.

மடமடவென என்ன சிந்தனைக்குள் முழ்கி வந்தானோ அந்த எதிராளி.

“உண்மை தான்… உன்னிடம் சின்ன பொண்ணுனு நாசூக்கா பேசறதுல அர்த்தமில்லை. நீ ரொம்ப தெளிவா தான் இருக்க. அப்ப நானும் தெளிவாவே சொல்ல நினைக்கறேன். அவனை நீ சீண்டி விட்டதால உன்னை அடைய துடிக்கலாம். மேம்போக்கா ஒரு பொண்ணு பேசினா அவளை கழுத்தறுத்து எறிய சத்ரியனால முடியும். ஆனா நீ லாயர் திவாகரோட பொண்ணு. அதுவும் அழகான பொண்ணு.. சின்ன பொண்ணு. இந்த பிளஸ் பாயிண்ட் தான் அவனை உன்னை நெருங்க வைக்குது. நீ சீண்டின பேச்சுக்கு உன்னை அடைய நினைக்கறான்.” என்றதும், ஷ்ரத்தா, “அதை தான் விரும்பறதா சொல்லறிங்களா?” என்று எகத்தாளமாய் கேட்டாள்.

விரும்புவதாக சொன்னால் அது காதல் வட்டத்தில் விழும் வார்த்தை அல்லவா?! அப்படியென்றால் அது புனிதமான உணர்வை தருமே. சத்ரியன் போன்றவர்கள் அத்தகைய வகையில் சேர்த்தி இல்லை என்பது ஷ்ரத்தா எண்ணம்‌.

“எஸ்… அதை விரும்பறதா சொன்னேன். உன் மேல ஸ்பெஷல் போதை இருக்கு. அவன் அதை தேடி தான் வர்றான். எனக்கு தேவை நீ அதை பயன்படுத்தி அவனை வீழ்த்தணும். அவனை கொல்லணும். உன்னால அதுக்கு உதவ முடியுமா?” என்றான்.

“ஒரு உயிரை கொல்வது பாவம் சார்.” என்றாள் தன்னை மறந்து.

“சத்ரியன் உங்கப்பாவை கொன்றதற்கான ஆதாரம் வரும் அப்ப பதிலுக்கு பழித்தீர்க்க நீயா தயாராகுவியா?” என்றான்.

ஷ்ரத்தா நகம் கடித்தபடி பேசியவள், “எங்கப்பாவை கொன்றவங்களை நான் பழிவாங்குவேன். அது யாராயிருந்தாலும். அது சத்ரியனா இருந்து எனக்கு தெரிய வந்தா… நீங்க சொன்ன மாதிரி கொல்ல தயங்கமாட்டேன்.” என்றாள்.

அந்த நேரம் ஷ்ரத்தா பேச்சில் தீயாக தெறித்தது. அவளுக்கு தேவை தந்தை மரணத்திற்கான காரணம் மற்றும் யார் கொன்றார் என்ற விஷயம் மட்டுமே.

“தேங்க்ஸ்…. இப்பொழுதைக்கு இந்த போன் உன்னிடம் இருக்கட்டும். அப்பறம் இதை நீ யூஸ் பண்ணறது யாருக்கும் தெரிய வேண்டாம்‌. ரூம்ல கூட மறைச்சி வச்சிட்டு போ. நான் சத்ரியனுக்கு எதிரான ஆதாரத்தை உனக்கு காட்டிட்டு மீண்டும் தொடர்பு கொண்டு பேசறேன்.” என்று கூற, “உங்க பெயர்?” என்றாள் ஷ்ரத்தா.

“சத்ரியன் இறந்துட்டதா தெரிய வரும் போது என் பெயர் தானா தெரியும். ஏன் உன் எதிரில் வந்து நிற்பேன்.” என்றான்.

“அப்ப.. பெயர் சொல்ல மாட்டிங்க? அப்பறம் எப்படி என் நலம் விரும்பியா இருப்பிங்க? நீங்க டைமண்ட் பிரசண்ட் பண்ணியதால டைமண்ட் மேன்னு சொல்லவும் முடியாது. ஏன்னா… சத்ரியனை கொல்ல நீங்க என்னிடம் பேசுவதுக்கும் அறிமுகமாவதற்குமான விலையா தான் எனக்கு தேணுது. இட்ஸ் ஓகே.. உங்களை எக்ஸ்னே சேவ் பண்ணிக்கறேன். அப்படியே அழைச்சிக்கறேன். யார் கண்டா… அந்த சத்ரியனே நீங்களா கூட இருக்கலாம். என்னை நோட்டமிட்டு கவனிக்கறவரா. எனக்கு நூல் விட்டு பார்த்து.” என்று பேசி முடித்து அணைத்தாள்.

போனை கீழே வைத்துவிட்டு, கண்ணாடியில் பிம்பத்தை பார்த்தாள். தந்தையுடன் இருக்கும் போது இந்த முகத்தில் இத்தனை தெளிவு இருந்தாலும் அதில் இரக்கம் அன்பு அமைதி அடக்கம் இருப்பதை ஷ்ரத்தா கண்டிருக்கின்றாள். தந்தை இறந்தப்பின் இந்த முகத்தில் பயமும் உதறலும் இருந்து தற்போது அந்த பயமும் இல்லாமல் ஏதோவொரு வெறி, வாழ்வதே சுமையாக, அலட்சியம், பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஆக்ரோஷமுகமாக தெரிய மெத்தையில் வீழ்ந்தாள்.

சத்ரியனை தன் தந்தையை காப்பாற்றியிருக்க, அவனே தந்தையை கொல்வானா? ஆனா இந்த மிஸ்டர் எக்ஸ் சத்ரியன் தான் அப்பாவை கொன்றதா சொல்லறாரே? முதல்ல ஆதாரம் வரட்டும். அப்படி சத்ரியன் தான் அப்பாவோட இறப்புக்கு காரணம்னு தொரிந்தா நான் அவனை கொல்லாம விடமாட்டேன்.’ என்றவள் தொண்டை குழி அடைத்தது.

ஒரு உயிரை கொல்லும் அளவிற்கு வல்லமை உண்டா? என்று தற்போது அச்சமும் உண்டானது.

தந்தை புகைப்படத்தை காணவும் புகைப்படத்தில் இருந்த திவாகரோ ‘ஷ்ரத்தா சாப்பிட்டியாம்மா காலேஜ் போயிட்டு வந்துட்டியா? பாடம் நடத்துவதெல்லாம் புரியுதா? எழுதற வேலை இருக்கா? யாரிடம்மா போன்ல பேசற. தெரியாதவங்க கூட பேசாதடா. படிப்பு தான் முக்கியம்.’ என்று அறிவுறுத்துவது போல புத்தகத்தை எடுத்து எழுத துவங்கினாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு, தன் வன்ம எண்ணத்தை தகர்த்தி, பாடத்தில் கவனம் செலுத்த அன்றைய பொழுது கழிந்தது.

இப்படியே சில நாட்கள் கழிய, சத்ரியன் நேரில் வராததால் யோகேஷ் மட்டும் அடிக்கடி கண்ணில் சிக்க, பெரிதாக மாற்றமின்றி படிப்பில் கவனம் செலுத்தினாள்.

ஷ்ரத்தா என்னவோ ஹாஸ்டல் விட்டால் கல்லூரி, கல்லூரி கேன்டீனில் பேச்சு, கனிமொழி மனிஷாவிடமான நட்பு, படிப்பு இதற்கான வட்டத்தில் சுழன்றுக் கொண்டிருந்தாள்.

அவள் வரும் பொழுது போகும் பொழுது மட்டும் முன்பிருந்த இயல்பான சூழ்நிலை இல்லை.
ஏதோ ஷ்ரத்தா வந்தாலே சீனியர் முதற்கொண்டு, கல்லூரி பேராசியர் அங்கிருப்பவர்கள் என்று மரியாதை தந்து விலகி மதிப்பு தர, அந்த நேரம் எல்லாம், எங்கிருந்தாலும் சத்ரியன் பவர் இப்படி செய்ய வைக்கின்றதை யூகித்து கொண்டாள்.

ஏதோ சத்ரியன் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கோபம் கூட பொங்கியது.
ஜான் முற்றிலும் ஷ்ரத்தாவை தவிர்த்தவனாக கண்ணில் படாமல் இருந்தான்.

இப்படி செல்லும் தருணம், அன்று தன் சொந்த வீட்டில் உள்ள பக்கத்து வீட்டு பெண்மணி அழைத்தார்.

தேர்தல் வருவதால் வோட் லிஸ்ட் கேட்டதாகவும், ஷ்ரத்தா பெயரை கூறியதால் இணைத்துக் கொண்டு சென்றியிருக்க, தற்போது வாக்காளர் அடையாள அட்டையை ரெஜிஸ்டர் செய்திட அறிவுறுத்தினார்.

அதன் பின் ஷ்ரத்தா தனக்கு பிடித்த சினிமாதுறை நாயகன், அரசியலில் காலடி எடுத்தா வைக்க, அந்த வயதிற்கே உரித்தான ஆர்வத்துடன் அவருக்கு ஓட்டு போடுவதற்காக ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகளையும் மேற்கொண்டாள். அதற்காக சில இடத்தில் அலைச்சல் மேற்கொள்ள, வரிசையில் காத்திருந்தாள்.

அதுவொரு அரசாங்க இசேவை மையம். பிரைவேட் இடமாக அல்லது பேங்க் அலுவலகத்தில் செல்ல தான் முதலில் நினைத்தாள். ஆனால் தானாக எங்காவது சென்று வர விரும்பியவள், இங்கு வந்து சேர்ந்தாள். பொழுதை கழிக்க, புதுமுகத்தை பார்க்க, முக்கியமாக தன்னை மறந்து இயல்பான மனிதர்களோடு பழக விரும்பினாள்.

வரிசையில் டோக்கன் கொடுக்கப்பட்டு வீற்றிருந்தவள் அருகே அவளது வயதை விட சற்று கூடுதலாக குழந்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணும், அன்னை வயதில் ஒரு முதிய பெண்மணியும் இருந்தார்கள்.
எல்லாம் ஏதோ வாக்காளர் அடையாள அட்டையில் பிழை பார்த்திட வந்தவர்களே.

குழந்தை விளையாடுவதை, அங்கு வந்த அன்றாட மக்களை நிதானமாக கவனித்தாள்.

ஒவ்வொரு மனிதர்கள் ஒவ்வொரு விதமாக தான் இருந்தார்கள். அதுவும் அரசாங்கத்திற்கு வேலை செய்யும் ஆட்களோ அதிகப்படியாக சாதாரண மக்களை கடிந்து கொண்டனர். இது கூட மாத்தலையா? என்னம்மா ஒரு தரம் சொன்னா புரியாது? என்ற ஏகப்பட்ட வார்த்தைகள், அஷ்டகோணலான முகங்கள் என்று பேனிற்கு கீழாக அமர்ந்து கணினியை நோண்டி மக்களின் தேவைகளை கேட்டு சரிப்படுத்திட முனைந்தனர்.

அப்பொழுது தான் ஷ்ரத்தாவுக்கு வேர்த்து வழிய, ‘நம்ம வீட்ல கூட பேன் இருக்கும். ஆனா இந்தளவு ஸ்லோவா காற்று வீசாது’ என்று நகைத்தாள்.

அந்தநேரம் தான் தான் செல்லுமிடமெல்லாம் ஹாஸ்டலில் கல்லூரியில் ஏசி இருப்பதையும் அதை அனுபவித்தவளுக்கு இன்று அதை மிஸ் செய்ததாக கவனித்தாள்.

கல்லூரியில் ஹாஸ்டலில் ஏசி இருக்குமா? என்று சிந்தித்தவளுக்கு மற்ற கல்லூரியில் எப்படியோ அவளது கல்லூரியில் இருக்கும். ஆனால் ஹாஷ்டலில் ஏசி இருக்காது என்று தான் ஷ்ரத்தா கேள்விப்பட்டது.
அதிலும் தான் இருக்கும் ஹாஸ்டலில் எந்த அறையிலும் இல்லை. தனக்கான அறையில் மட்டும் உள்ளதென்றால்? நிச்சயம் வேறு யாராக இருக்க முடியும் அவனாக தான் இருக்கும்.’ என்று நினைக்க யோகேஷ் அவ்விடத்தில் வந்து சேர்ந்தான்.

‘இவன் எங்க இங்க?’ என்று முழிக்க, அவசரமாய் அந்த அரசாங்க பெண்மணி, “மேம் நீங்க வாங்க” என்று க்யூவில் அவளுக்கு முன் பத்து இருபது பேர் இருக்க, அப்பெண்மணி ஷ்ரத்தாவை அழைத்து வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான தகவலை பெற்று கொண்டார். அதை கணினியில் ஏற்று கொண்டு, குறிப்பிட நாளில் வந்துவிடுமென கூறினார்.‌
தன்னை ஏன் கூப்பிட்டு முதலிடம் வழங்கி அனுப்பியதற்கு தனியாக காரணம் இல்லை. அங்கே சத்ரியனின் கைத்தடி யோகேஷ் வந்து சேர்ந்துவிட்டானே.

அப்படியிருக்க சொல்லாமல் புரிய வேண்டாமா? அவளுக்கான வேலைகள் தங்குதடையின்றி சொடக்கிடும் நேரத்தில் செய்யப்படுமென.

“ஏதாவது வேண்டுமின்னா இப்படி கஷ்டப்பட வேண்டாம்னு பாஸ் சொல்ல சொன்னார். நீங்களா சொல்லியிருந்தா மத்த ப்ரஸூஜர் செய்ய இருக்கற இடம் தேடி ஆட்கள் வருவாங்க” என்றான்.

“ஏன்டா… நான் வர்றதே நாலு மனுஷங்களை பார்க்க தான். அது பொறுக்காதா அவனுக்கு.” என்று கடிந்திட, யோகேஷ் ஏன்டா என்றதை காட்டிலும், சத்ரியனையே அவனென்று விளிப்பதில் வாயை பிளந்து நின்றான்.

“இவனை எல்லாம் தண்ணீ தெளிச்சி விட்டாச்சா” என்று முனங்கிக் கொண்டு நடந்தாள்.

அந்த அறையே ஷ்ரத்தாவை வேடிக்கை பார்க்க, “ஸப்பா.. இந்த மாதிரி இருக்கற பார்வை தான் எரிச்சலாகுது.” என்று ஆட்டோவில் ஏறினாள்.

ஹாஸ்டலுக்கு வந்து சேர, அப்டேட் எல்லாம் சத்ரியனுக்கு வந்து சேர்ந்தது.

ஷ்ரத்தா சோம்பல் முறித்து, மறைத்து வைத்து செல்லும், மிஸ்டர் எக்ஸ் தந்த போனை எடுத்தாள். அதில் ஒரு வீடியோ வந்திருக்க எடுத்து பார்வையிட்டாள்.
சத்ரியன் ஏதோவொரு பாரில் இருப்பதாக காட்ட, எதிரே வினோத் இருந்தான்.

“பாஸ்.. திவாகர் உங்க கேஸை வாதாட மாட்டேன்னு சொல்லிட்டார்” என்று பணிவுடன் கூற, “வாட்… அந்த மிடில் கிளாஸ் லாயருக்கு அவரோட பீஸை சொன்னியா இல்லையா?” என்று சத்ரியன் கர்ஜிப்பது கேட்டது.

“பாஸ் அவர் நீதி நேர்மைனு பார்க்கற மனுஷன். நம்மளோட இல்லீகலான தொழில், நம்மளை பத்தியும் தெரிந்தவர். அன்டர்க்ரவுண்ட் கிங்குக்கு டானா இருக்கறவனுக்கு எல்லாம் அவர் வாதாட மாட்டாராம்.” என்று எடுத்துரைக்க, “என் பெயரை சொன்னியா?” என்று கேட்டான் சத்ரியன். அதில் எரிமலையை கக்கும் கனல் பார்வையில் தென்பட்டது.

“அதெல்லாம் தெரிந்து வச்சியிருக்கார் பாஸ். ஆனாலும் அவரோட கொள்கைக்கு முக்கியத்துவம் தர்றவராம். உங்க கேஸ் எடுக்க முடியாதுனு சொல்லறார்” என்று கூற, சத்ரியன் அக்னி பார்வையில் வினோத்தை பார்வையிடவும், வினோத் தலைக்குனிய, “அப்ப அவனோட பொண்டாட்டி புள்ளையை துப்பாக்கி முனையில் நிறுத்து மேன். தானா நம்ம வழிக்கு வருவான்” என்றதற்கு, வினோத்தோ ”லாயர் திவாகரோட மனைவி இல்லை பாஸ் இறந்துட்டாங்க. பொ…” என்றதும், “யூ இடியட்… யாராவது ஒருத்தர் இருந்தாலும் தூக்கு. அப்படி யாருமில்லைன்னா… அவனையே கார் ஏத்து தூக்குங்க. அனாதை பிணமா போய் தொலையட்டும். எனக்கு வாதாடாத அவன் உயிர் இருந்தா என்ன செத்தா என்ன?” என்று ஆக்ரோஷத்தின் உச்சத்தில் கேட்டது.

“மறுபடியும் பேசி பார்க்கறேன் பாஸ். அவருக்கு ஒரு பொ..பொண்ணு இருக்கு ஸ்கூல் முடிச்சிருக்கா.” என்று வினோத் திவாகரோடு பேசி பார்ப்பதாக எடுத்துரைக்க, ஒரு முழு மதுவையும் சத்ரியன் எடுத்து தொண்டையில் சரித்தபடி, “ரொம்ப கெஞ்சாத.. பிடி தரலைன்னா அந்த பொண்ணை தூக்கி மும்பைல வித்துடறதா சொல்லு. இல்லை.. துண்டு துண்டா வெட்டி தெருவுக்கு தெரு நாயுக்கு கறியா போட்டுவிடுவதா மிரட்டு.” என்று கூறிட, ஷ்ரத்தா இதயம் படபடத்தது.

அவளால் இந்த காணொளியை கண்டு மூச்சு பேச்சு இல்லாமல் சில நிமிடம் ஸ்தம்பித்தாள்.

யாரோ சத்ரியனும் வினோத் சாரும் பேசுவதை வீடியோவாக கத்தரித்து தந்துள்ளார்கள். யாராது? அப்படியென்றால் தகவல் பேசப்பட்டவையை வைத்து பார்த்தால் சத்ரியன் தந்தையை மிரட்டி கொன்றிருப்பானோ? என்று ஷ்ரத்தா அதிர்ந்தாள்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!