Skip to content
64 / 100 SEO Score

The leader-19

அத்தியாயம்-19

 

மிஸ்டர் எக்ஸிடம் ஆதாரத்தை கேட்டவளுக்கு சத்ரியன் வினோத் பேசியதை கேட்டு, ஆடிவிட்டாள்.

 

அவளை அசைத்திடவே மிஸ்டர் எக்ஸிடமிருந்து அழைப்பு வந்தது. கைகள் நடுங்க அதை ஏற்றாள்.

 

“என்னம்மா நீ கேட்ட ஆதாரம் இது போதுமா? சத்ரியனே அவன் வாயால உங்கப்பாவை கார் அடித்து ஏத்த சொல்லியிருக்கான். கேட்டியா… பார்த்தியா?” என்றான் ஏளனமாக. இப்ப நம்பறியா? என்ற மமதையான பேச்சு.

 

‘நீதி நேர்மை கடமை கண்ணியம் என்று வாழ்ந்தவர் தந்தை திவாகர். அப்படியிருக்க சத்ரியனுக்காக வாதாட மறுத்திருக்கின்றார்.

அப்படி மறுத்திருக்கும் பட்சத்தில் சத்ரியன் தன் ஆள் பலம் ஆதிகார பலத்தால் தந்தையை பணிய வைக்க முயன்று இருப்பது இந்த காணொளி எடுத்து சொல்லிவிட்டது. தன்னை வைத்தோ அல்லது தந்தையோ ஏதோவொரு இக்கட்டால் சத்ரியனை தந்தை காப்பாற்றியிருக்க வேண்டும்.

 

சத்ரியனை காப்பாற்றிதற்காக தந்தைக்கு அவன் பணத்தை வாரி வழங்கியிருக்கின்றான். அப்படியிருந்தும் தந்தையை ஏதோவொரு அதிருப்திக்காக, சொன்னது போலவே ரோட்டில் விபத்துக்குள்ளாகி தந்தையை மரணித்திட வைத்து தன்னை அனாதை ஆக்கியுள்ளான் என்று புரிந்தது.

 

மிஸ்டர் எக்ஸோ “ஏஐ வீடியோ என்றோ இல்லை நானா ஏதாவது உருவாக்கி தந்த வீடியோனு நினைச்சிடாதம்மா. அது சத்ரியனோட இடத்துல எடுக்கப்பட்ட வீடியோ தான். அந்த பழைய வீடியோவை எடுக்கறதுக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வந்துடுச்சு.

 

பார்த்துக்கோ… உங்கப்பா காப்பாற்றி விட்டப்பிறகும் அவனுக்கு வெறி அடங்கலை. முதலில் கேஸ் வாதாடாம மறுத்ததுக்கு தான் இந்த தண்டனை. அவன் சொல்லுகாகு முதலிலேயே சம்மதிச்சிடணும். அதை மீறி யாரும் மறுத்துட்டு பிறகு பணிந்தா கூட அவங்க கதி அவ்ளோ தான்.

இருந்தாலும் சத்ரியன் கொடுத்த தண்டனை ரொம்ப அதிகம். இப்ப நீயில்ல தனிமரமா இருக்க” என்று உச்சுக்கொட்டி பேசியதும் உடைந்துவிட்டாள்.

 

அந்த காணொளியில் சத்ரியன் காட்டிய முகபாவனைகள் எல்லாம் தந்தையை வெட்டி வீழ்த்தும் திடமிருக்க மிஸ்டர் எக்ஸ் கூறியதை எல்லாம் நினைவுப்படுத்தி முடித்தாள்.

 

“இந்த வீடியோவை போலீஸுக்கு காட்டி சத்ரியனை உள்ள தள்ளறேன்” என்று ஆவேசமாக உரைத்தாள்.‌

 

“ஏன் ஷ்ரத்தா.. ப்ரில்லியண்டா பேசறேன்னு பார்த்தா முட்டாளா பேசற. போலீஸ் இந்த வீடியோவை பார்த்து ஆக்ஷன் எடுத்த  நானே இதை சொந்த செலவுல கொரியர் பண்ணிருக்க மாட்டேன். இல்லை நேர்ல தந்திருக்க மாட்டேன்

 

போலீஸ் எல்லாம் அவனுக்கு கீழ தான் இருக்காங்க. நீ எந்தப்பக்கம் இந்த விஷயத்தை கொண்டு போனாலும் ஒரே நொடியில புஸ்வானமா மாத்திடுவான். அவனுக்கு இருக்கற அதிகார பலம் அப்படி.

 

உன்னையும் சத்ரியனிடம் கோர்த்துவிட்டுட்டு போயிடுவாங்க போலீஸ். உங்கப்பா இறப்பை விபத்துனு சத்ரியனோட கைத்தடிகளால் பேச வச்சி பூசி மொழுகியதை நீ அனுபவம் ரீதியா நேர்ல பார்த்திருப்பல? சத்ரியனை எந்த ஆதாரமும் போலீஸோ கோர்ட்டோ எந்த விதத்திலயும் தண்டனையோ சாகடிக்கவோ முடியாது. மறைந்து இருந்து வாலியை வீழ்த்திய கதை போல தான் செய்து முடிக்கணும்.” என்று முடித்தான் எக்ஸ்.

 

கண்ணீரை துடைத்து, “சத்ரியனை கொல்ல என்ன பிளான் வச்சியிருக்க?” என்றாள் நேரிடையாக.

 

மிஸ்டர் எக்ஸோ பாராட்டும் விதமாக, “இந்தளவு வேகம் இருக்கு. வாவ்.. அந்தளவு கோபம் இருக்கா மிஸ் ஷ்ரத்தா.

சாரி… உனக்கு இருந்தது ஒரே உறவு உங்கப்பா மட்டும் தான். அதனால இந்த வேகம் இருக்கறது நல்லது தான். ஆனா பிளான்னு நீ கேட்டதும் உடனே என்னால கத்தியோ துப்பாக்கியோ எடுத்து நீட்ட முடியாது. சத்ரியன் ஒருத்தரை நெருங்க விடறான்னா அதுவே பெரிய அதிசயம். இத்தனை நாள் நீ அவன் மேல கோபத்துல இருக்கறப்ப திடீரென நீயா வலிய போய் பேசி அவனிடம் நெருங்க முடியாது.

 

அவனா திரும்ப வருவான். அப்ப அவனை விரட்டாம, நீயும் நெருங்கி போ….” என்றவன் மேலும் சில விவரத்தை கூறினான். அவன் எந்த அணுகுமுறையில் வருவதை பொறுத்து பேசு. அவன் உன்னை நெருங்கவிட்டால் கொல்வதற்கான சயனைட்டை தருவதாக உரைத்தான்.

 

ஷ்ரத்தா ஆமோதிப்பாக சம்மதிக்க, இனிதான பேரம் நிகழ்ந்து முடிந்தது.

 

ஏனோ இன்று உறங்கமுடியாமல் அல்லாடினாள் ஷ்ரத்தா. வீடியோவை மீண்டும் பார்வையிட்டு கோபத்துடன் சத்ரியன் மீதான வெறுப்பு வளர்ந்தபடி அதிகாலை நேரம் கழித்து உறங்கினாள்.

 

அடுத்த நாள் கல்லூரிக்கு கூட போகவில்லை. மாறாக விடுமுறை எடுத்தபடி ஹாஸ்டலிலேயே இருந்தாள்.

 

ஒரு நாள் என்றால் அந்த விஷயம் சத்ரியன் செவிக்கு எட்டியிருக்காது. இரண்டாவது நாளாக உடல்நிலை காரணமாக வரவில்லை என்றால் அந்த தகவல் யோகேஷ் மூலமாக வினோத்திற்கு மட்டும் செய்தி சென்றுயிருக்கும்.

 

மூன்றாவது நாளாக கடக்கவும், சத்ரியனுக்கு விஷயம் சென்றது.

அதுவும் மாலை நேரம் தமிழ்நாட்டின், திரைத்துறையில் அதிக படமெடுத்த முக்கிய பிரமுகரின் பெண்ணின் திருமணத்தில் தான் வந்திருந்தான்.

 

“இப்ப வந்து சொல்லற இடியட். காலேஜிக்கு போகாததுக்கு ஏதாவது காரணமிருக்கா” என்று கேட்க யோகேஷ் திருதிருவென விழித்தான்.

 

சத்ரியன் முகம் அந்த நொடியே, கோபத்தில் சிவந்தது.

 

இதில் அந்த நொடி ‘பாஸ் ரெவி-கனிகா’ இரண்டு பேரும் வந்திருக்காங்க.’ என்று வினோத் காதில் போட, “இப்ப ரொம்ப முக்கியம் இடியட்.” என்று வினோத்தும் திட்டு வாங்கினான்.

 

நெற்றியை தேய்த்து, மடமடவென எழுந்த சத்ரியன் சினிமா பிரபலத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினான்.

 

சத்ரியன் கிளம்புவது வீடியோ கவரெஜில் தெரிய சினிமா தயாரிப்பாளரான அவரே ஓடி வந்தார்.‌

 

“சார்… என்னாச்சு… உடனே கிளம்பறிங்க” என்று வந்து சேர, “நத்திங்.. கொஞ்சம் வேலை இழுத்து வச்சிட்டாங்க” என்று கூறி புறப்பட, அந்த அவசர கதியிலும், சத்ரியனை வாசல் வரை வழியனுப்பி வைத்தார்.

 

அங்கிருந்த பல பிரபலங்கள் சத்ரியனை காண வந்திருக்க, சத்ரியன் இடையில் சென்றதும், ஏமாற்றத்தை முகத்தில் பூசியபடி நின்றனர்.‌ அப்படியிருந்தும் ரெவி கனிகா வந்தது பேசும் பொருளான செய்திக்கு திசைத்திருப்பியது.

 

அங்கிருந்து வீட்டிற்கு வந்த சத்ரியனுக்கு அடுத்து இந்த பத்தரை மணிக்கு ஷ்ரத்தாவை காணவும் முடியாதென்ற உண்மை புரிபட, எரிச்சலானது. ஒரு மனமோ ஏன்‌ முடியாது, நீ நினைத்தால் அவளை எப்பொழுது வேண்டுமாயினும் சந்திக்கலாம்.’ என்று எடுத்துரைக்க, வேகமாய் மதுவை நாடினான்.

 

‘இதுக்கு தான் அங்கிருந்து வந்தாரா’ என்பது போல யோகேஷ் பார்வையிட்டாலும் சத்ரியன் சினத்தில் அதிகப்படியாக திட்டு வாங்கியது என்னவோ அவனாக இருக்கவே மௌனமானான். சத்ரியன் சத்தமில்லாமல் யோகேஷை அழைத்து நகர, மணி மூன்று மணிக்கு சத்ரியன் நினைவில் கனவில் ஷ்ரத்தாவே வந்து தொலைத்தாள்.

 

ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தவன், இரவுக்கு மேலே அணியும் ஆடையை முடிச்சிட்டு புகைக்க வந்தான்.

 

முன்பு இது போல யாமினியால் மைக்கெல் வந்து துப்பாக்கியால் சுட வந்த திசையை பார்த்தான்.

 

இன்று அது போலவே கதவை திறந்து பார்க்க, அமைதியை பரிசளித்தது இரவு.

 

எதையும் யோசிக்காமல் புகைத்தவன், அவசரமாக கைக்கு எட்டிய உடையை அணிந்து, தனது சத்தமின்றி புறப்படும் காரை ஸ்டார்ட் செய்து, ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தான்.

 

நேரிடையாக கதவை திறந்து வந்தான். செக்கியூரிட்டி உறக்கத்தில் இருக்க, ரிஸப்ஷனிலும் யாருமில்லாமல் கேட்பாரற்று கிடந்தது.

 

இரவில் அறைக்குள் உபயோகிக்கும் செருப்பை அணிந்திருக்க, ஏதோ சத்ரியனின் நிமிர்ந்த கம்பீரமான நடைக்கு தாளமிடாமல் வந்தான்.

இல்லையேல் இந்நேரம் அவனது காலடி ஓசைக்கு இந்த ஹாஸ்டல் வளாகமே அதிர்ந்து எழுந்து நின்றியிருக்கலாம்.

 

ஷ்ரத்தா அறைக்கு வந்ததும், அவனிடம் உள்ள சாவியால் திறந்தான். எப்பொழுதும் ஒரு அறையில் இருவர் தங்குவது வழக்கம். இந்த அறையில் தான் ஷ்ரத்தா இருக்க வேண்டுமென தனியறை தந்த பொழுதே கூட தங்க யாருமில்லாது பார்த்துக் கொண்டான். அதனால் மற்றொரு சாவியை சத்ரியன் கைவசம் கொடுக்கப்பட்டது.

 

கதவை திறந்து ஆவேசமாய் வந்தவனுக்கு, எதிரே பனிச் சிற்பமாய் ஷ்ரத்தா உறங்கும் காட்சியில் புன்னகை உதிர்த்தது.

 

சத்ரியன் கைகள் அவளது அங்க வனப்பை பட்டும் படாமலும் தொட்டு ரசிக்க உதட்டில் புன்னகை பளிரிட்டது.

 

மேஜையில் புத்தகம் முழுவதும் சத்ரியன் என்ற பெயரை எழுதி அதை கிறுக்கி கிறுக்கி முட்டைப்போட்டு பேனாவால் குத்தியிருக்க வேண்டும். அந்த நோட் அப்படி தான் எடுத்துக் காட்டியது. ஆக தன் மேல் ஏதோ கோபம. ஏன் எதனால்? தன் பெயரை வைத்து இவளிடம் கோபத்தை வளர்க்க முயல்பவர் யாராக இருக்கும்? இப்படி யோசித்தவனை அதிகம் சிந்தனைக்குள் தள்ளாமல், ஷ்ரத்தாவின் முனங்கல் ஈர்த்தது.

 

‘உன்னை சும்மா விடமாட்டேன் சத்ரியன். எங்கப்பாவை கொண்ணவனை சும்மா விடமாட்டேன்.’ என்று அதையே கூறி தலையை வலது இடதெனெ அசைத்தாள்.

 

‘ஓ.. இதுவேறயா?” என்ற சத்ரியன் நகைத்தான்.‌ அவளது கையை வருடி, “ஈஸி ஈஸி.. பொறுமையா என்னை கொல்லலாம். இங்க தான் இருக்கேன். இப்ப தூங்கு ப்யூட்டி” என்றான். அந்த பேச்செல்லாம் அவள் செவிக்கு எட்டியதா இல்லையோ ஏதோ வருடலில் உறங்கிவிட்டாள்.

 

அப்படியே அங்கிருந்த இருக்கையை அவள் புறம் திருப்பி, அமர்ந்து பார்வையிட்டான். அதற்கே நான்கை தொட்டுவிட்டது.

 

ஷ்ரத்தா ஒரு ஐந்து மணிக்கு திரும்பி படுக்க முனையும் நேரம், சத்ரியன் அமர்ந்திருப்பது போல தோன்ற, “இவன் வேற, கண்ணெதிர்ல இருக்கற பீலாகுது.” என்று திரும்பிக் கொண்டாள்.

 

அவளது முனங்கல் சத்தம் கேட்டு சத்ரியன் விழித்திறக்க, இடத்தையும் அவளையும் கவனித்தான். அவளுக்கு ஒன்றுமில்லை என்ற வகையில் அறிந்ததால் அவளது புகைப்பட்ததிற்கு மட்டும் முத்தமிட்டு, ‘இரவு நேரங்களில் என் மெத்தையை அலங்கரிக்கும் பெண்களை எல்லாம் ஏறக்கட்டி, வெறிச்சிட வச்சிட்டு, இங்க என்னை கொல்ல கனவிலும் நினைவிலும் சிந்திக்கறா. உன்னை என் மஞ்சத்தில் அலங்கரிச்சு கூடவே வச்சிப்பேன். அந்த நாள் வெகு தூரமில்லை” என்றவாறு சென்றான்.

 

சில சீனியர் பெண்கள் அதிகாலை விழித்து படிக்க நினைத்தவர்கள், எழுந்திருந்தனர். யாரோ நடப்பதை கண்டு வெளியே வந்து பார்வையிட, ஷ்ரத்தா அறையிலிருந்து சத்ரியன் செல்வதை கவனித்தனர்.

 

உடனடியாக கூடவே தங்கியிருக்கும் பெண்ணை எழுப்பி அதை கூறிட, “நமக்கு எதுக்கு வம்பு. ஹாஸ்டல் மேடமே அந்த சத்ரியன் சாரிடம் அடிப்பணிந்து பேசுவாங்க. இதுல நாம குறுக்கே போக முடியாது. ஆனா பாரு.. இரண்டு நாளா அவ காலேஜிக்கே போகலை. ஹாஸ்டலிலேயே இருக்கா. அதுக்கு காரணம் இது தான் போல. அந்த சத்ரியன் பெண்டு நிமிர்த்திட்டு போறான். ம்ம்ம்.. சத்ரியன் ஹான்ட்சமா ஹாட்டா தான் இருக்கான்‌.” என்று பயத்தை தாண்டி ஷ்ரத்தாவை வைத்து கேலிக்கும் தாவினார்கள்.

 

இந்த கேலி அதிகாலை ஆறு மணிக்குள் வொய்ஃபை இல்லாமல் பரவியது.

 

ஷ்ரத்தா காலையில் எழுந்து காபி குடிக்க ஹாஸ்டல் மெஸ்ஸிற்கு வந்த நேரம் அவளையே பார்த்து கிசுகிசுத்ததை கவனித்து வேலை செய்யும் பெண்மணியை அழைத்து காரணம் கேட்டாள்.

 

அவரும் பயத்தில் உங்க அறையிலிருந்து யாரோ வந்துட்டு போனதா பேசிக்கறாங்க” என்றறிந்ததை மட்டும் கூறினாள்.

 

என்னோட ரூம்லயிருந்தா? யாராயிருக்கும்? என்ற குழப்பத்துடன் தன்னை ஏதேனும் செய்துவிட்டானா என்று யோசித்தாள். அவளை எதுவும் செய்

தது போல இல்லை என்று அவள் உடல்மொழி கூற, குழப்பத்துடன் அறைக்கே வந்து சேர்ந்தாள்.

 

-தொடரும்.

 

 

 

 

 

4 thoughts on “The leader-19”

  1. Super sis nice epi 👍👌 oru vishayam kedacha podhumey ellarum onnuku renda pesuvaanga🙄 evan vandhutu ponadhu avaluku therinjidhu avlodhan😕🧐

  2. Avaluke theriyathu chathriyan vanthu ponathu ithula pecha paru ellathukum ippadi theve illama rumour kelapurathula girls mmmm. Yaru antha x ethuku ivala vachi avan game aadanum ivalum avana kollanumnu ippadi sernthutu thukatha tholaikira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!