Skip to content
Home » காவலனே என் கணவனே 1

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1

உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?”

உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை எடுத்து வாயில் போட்டு தண்ணீரை குடித்தார்…“ப்ரஸ் மீடியான்னு பதில் சொல்ல முடியலை.. பத்தாதுக்கு மனித உரிமை கமிஷன்கிட்ட வேற திமிரா பேசிட்டு வந்து இருக்க.. நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” என கமிஷனர் எதிர்ப்புறம் கத்த,

யாருக்கு வந்த விருந்தோ என எதிர்ப்புறம் ஆதித்யன் ஏ.சி.பி ஆதித்யன் நின்று இருந்தான்.. அவனின் இந்த அலட்சிய பாவனை கமிஷனரை இன்னும் கோவம் படுத்தியது.. பண்றதை மும் பண்ணிட்டு எப்புடி நிற்கிறான் பாரு என திட்டினார்.. இன்று அவன் செய்த வேலை அப்புடிபட்டது..

இன்று அதிகாலை வேளை காக்கை குருவி என எந்த பறவையும் தன் கூட்டிலிருந்து கூட இன்னும் வெளிவரவில்லை.. இருந்தும் இந்த நேரத்தில் சென்னை நெடுஞ்சாலை ரோடு பரபரப்பாக இருந்தது… இரண்டு மூன்று ஆம்புலன்ஸ்.. நான்கு ஐந்து போலீஸ் வேன் அந்த இடத்தில் நின்றது.. கமிஷனரிலிருந்து கான்ஸ்டேபிள் வரை அங்கு தான் இருந்தனர்..

இத்தனை பரபரப்பு நடக்கும் இடத்தில் பத்திரிகை மீடியா இல்லாமல் இருக்குமா.. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நியூஸ் சேனலும் பத்திரிகையும் அங்கு தான் குவிந்து இருந்தது..

பேரிகாட் வைத்து யாரும் பத்திரிகைகார்களும் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் உள் நுழைந்து விடாதபடி படுத்தபடி நின்று இருந்தனர் காவலர்கள்..

வலது கையில் சுடப்பட்டு அதில் வெளியேறும் இரத்தத்தை கர்ச்சீப் கொண்டு அடக்கிய படியும், மார்புக்கு மேல் பகுதியில் சுட்டபட்ட காயத்தோடும் இருந்த இரு காவலர்களை ஆம்புலன்சில் ஏற்றபட ஒரு ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பியது.. மற்றோரு ஆம்புலன்சிலோ முகத்தை வெண்ணி நிற துணியால் மூடியபடி ஒரு ஆண் சடலத்தை ஏற்றினர்..

மூன்று நாட்களுக்கு முன்பு ஹர்ஷினி என்ற 8 வயது சிறுமியும் அவளின் தம்பி ஹர்ஷன் 6 வயது சிறுவனும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த கேஸில் குற்றவாளிகளாக கருதப்பட்ட இரண்டு குற்றவாளிகளை, அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் ஏ.சி.பி ஆதித்யன் நேற்று இரவு கைது செய்தார்..

இந்த நிலையில் இன்று அதிகாலை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த ஆதித்யன் தலைமையிலான குழு கொண்டு போகும் வழியில் அவர்கள் இருவரில் ஒருவன் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அதை தடுக்க வந்த இரு காவலர்களை அவர்களின் துப்பாக்கியை எடுத்து சுட்டு அவர்களை தாக்கியதால், வேறு வழியிது தற்காப்புக்காக அவனை ஏ.சி.பி ஆதித்யன் சுட்டதில் அவன் இறந்து போனதாக தகவல் என செய்தி வாசிக்கப்பட்டது..

தப்பிக்க பார்த்தான் சுட்டேன் என்பது கட்டுக்கதை என்பது.. கமிஷனரிலிருந்து கடைக்கோடி மக்கள் வரை தெரியும்.. ஆதித்யனின் அருதபழைய டயலாக் இது.. அவன் ஏ.சி.பியாக பதவியேற்ற இந்த நாலு வருடத்தில் இதுவரை மூன்று என்கவுண்டர் இது நாலாவது.. நான்கிலும் அவன் சொன்னது இதை ஒன்றை தான்..

காலையில் எழுந்துக்கும் போதே நல்ல செய்தி..

மூணு நாளாக இந்த குழந்தைகளை நினைச்சு மனசு பாரமா இருந்துச்சு இப்ப தான் நிம்மதியா இருக்குது..

அந்த படுபாவி பயலுக்கு அப்புடி தான் வேணும்..

இவனை சுட்டு இருக்க கூடாது.. கல்லால் அடிச்சு சாவடிச்சு இருக்கனும்..

அந்த இன்னோருத்தனையும் ஏன் விட்டாங்க..

ஆதித்யன் கிட்ட இந்த கேஸ் குடுக்கும் போதே நினைச்சேன் இப்புடி தான் நடக்கும்னு என செய்தி பார்த்த பொதுமக்கள் ஒவ்வோருத்தரும் ஒவ்வோன்றாக பேசினர்.. இறந்தவனை நினைத்து யாருக்கும் கவலை இல்லை.. அவனை இன்னும் வதைத்து கொன்று இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்து..

இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி சென்ற இரு குழந்தைகளும் வீடு திரும்பவில்லை.. பதறிவிட்டனர் பெற்றோர்கள்.. அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கு சென்று குழந்தை காணவில்லை என தகவல் கொடுக்க.. அவர்களும் உயிரை கொடுத்து தேடினர்..

முன் மாலை பொழுது காணமல் போன குழந்தைகள் மறுநாள் மாலையில் சடலமாக தான் கிடைத்தனர்.. பெற்றோர்கள் மட்டுமல்ல பார்த்த மக்கள் போலீஸ்கார்கள் கூட கலங்கி விட்டனர்.. அந்த பிஞ்சுகளின் உயிரற்ற சடலத்தை பார்த்த பின்பு,குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்க..

கேஸ் ஆதித்யன் கைக்கு வந்து சேர்ந்தது.. அவன் கைக்கு வந்த பின்பு ஜெட் வேகத்தில் விசாரணை தொடங்கியது.. குழந்தைகளின் பெற்றோர், பள்ளி, பள்ளியிலிருந்து அழைத்து வரும் வாகனம், அக்கம் பக்கமென விசாரணை தொடர்ந்தது.‌. பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த போதே குற்றவாளி யாராக இருந்தாலும் என்கவுண்டர் தான் என்ற முடிவுக்கு வந்து விட்டான் ஆதித்யன்.. பெண் குழந்தை மட்டுமல்ல ஆண் குழந்தைக்கும் பாலியல் சித்ரவதை நடந்து இருக்கின்றது.. மிகவும் அடித்து துன்புறுத்தி கொன்று இருக்கின்றனர் பாவிகள்..

விசாரணை முடிவில் பெற்றோரிடம் முன்பு டிரைவராக வேலை பார்த்தவன் தான் குற்றவாளி என கண்டுபிடித்து விட்டான் ஆதித்யன்.. அவன் ஏதோ பணவிஷயத்தில் தப்பு செய்து இருக்க.. அவனை திட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டு இருக்கிறார் குழந்தையின் தந்தை.. தெருவில் வைத்து திட்டியதால் அவமானகி விட்டதாம்.. எங்கும் வேலை கிடைக்கவில்லையாம்.. அதனால் குழந்தையை கடத்தி பணம் வாங்கலாம் என நினைத்து கடத்தி இருக்க.. எடுத்த போதை பொருள் புத்தியை இழக்க செய்ய பெண் குழந்தையை சீண்ட தடுக்க வந்த தம்பியையும் விட்டு வைக்கவில்லை கொடூரன்கள்.. கேட்ட ஆதித்யனுக்கு வந்த ஆத்திரத்தில் அடி நைய புடைத்து விட்டான்..

ஆதித்யன் அவர்களை ஏதும் செய்து விடுவானோ என்று அவனை பற்றி நன்கு அறிந்த கமிஷனர் இரவோடு இரவாக அவனை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் செய்ய சொல்ல, விடுவானா அவன்.. அவன் தான் ஏற்கெனவே முடிவு செய்து விட்டானே.. அவர்களை கொல்வது என, அவனுக்கு ஏற்ற போல குழு வேறு அமைந்து இருந்தது..ஒருவனை மாஜிஸ்திரேட் வீட்டுக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் வைத்து சுட்டு விட்டான்..

ஏன் சார் ஒருத்தனை மட்டும் விட்டு வைச்சுட்டோம் அவனையும் போட்டு இருக்கலாமே எஸ்.ஜ.விக்னேஷ் கேட்க,

நம்மளையும் கொன்னுருவாங்களோங்கிற பயத்தோடயே இவன் இருக்கனும்.. தினம் தினம் பயந்தே சாகனும்யா.. அதனால் தான் என்ற ஆதித்யன்..ஏய் நாங்க சொல்லி கொடுத்தது போல் அவன் தப்பிக்க பார்த்தான் அதனால் போலீஸ்காரங்க சுட்டாங்கன்னு தான் நீ சொல்லனும்.. மாத்தி சொன்ன அப்புறம் என்ற ஆதி திரும்பி இறந்த கிடந்தவனை பார்த்து விட்டு இவன் புறம் திரும்ப, நீங்க சொன்ன போலவே செய்றேன் சார் செய்றேன் சார் என்றான்..

ம்.. அது மட்டுமில்லை  செஞ்சு தப்பை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போயிரும்.. ஜாமினில்ல வெளிய வரும்னு நினைக்கவே கூடாது.. அப்புடி நீ வெளிய வந்த அடுத்த செகண்ட் நீ இருக்க மாட்ட என அவனை மிரட்ட அவனோ குலை நடுங்கி இருந்தான்.. கண்முன்னே நண்பனை சுட்டு இருக்கிறானே.. அடுத்த நாம் தானோ என்கிற பயம்..

சார் அவன் தப்பு செய்தான் என்றே இருக்கட்டும் அதற்காக இப்புடியா நாயை சுட்டது போல சுடறது.. சட்டத்தை இவர் கையில் எடுத்துக் கிட்டா கோர்ட் எதுக்கு..  இது காந்தி மண்.. ஒரு உயிர்க்கு இன்னோரு உயிரை எடுப்பேன் சொல்றது நியாயமா.. மனித உரிமை அமைப்புகள் வேறு ஆதித்யனுக்கு எதிராக கொடி பிடித்தது.. அவர் மேல்ல ஆக்சன் எடுங்க என கமிஷனர் மகாலிங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது..

ஏனெனில் கமிஷனர் மகாலிங்கத்துக்கு ஆதித்யன் மீது எப்போதும் ஒரு பிரமிப்பு பிரியம் எல்லாம்.. அதுக்கு அவனின் நன்னடத்தை.. நேர்மை எல்லாம் ஒரு காரணம்.. அது அவர்களுக்கு தெரியும் என்பதால், சார் நீங்க ரொம்ப ஆதிக்கு இடம் கொடுக்கிறீங்க.. அதனால் தான் ஆதித்யன் அப்புடி நடந்துக்கிறார்.. இந்த தடவை கண்டிப்பா  அவன் மீது துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பா எடுக்கனும் கமிஷனர் சார் என மனித உரிமை உறுப்பினர்கள் அவரை உலுக்க.. அவர் ஆதித்யனை ஒரு வழியாக்க வேண்டும் என நினைத்து கண்டிக்க, அவனோ கண்டுகொள்ளவே இல்லையே

எப்புடி நிற்கிறான் பாரு கமிஷனருக்கு கோவம் வந்தது.. “பிடிச்ச அக்கியூஸ்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க சொன்னா,அவனை என்கவுண்டர் பண்ணி இருக்க,இல்ல சார் வேணும்னு பண்ணலை அவன் தப்பிக்க பார்த்தான் அதான் சுட்டேன்ங்கிற கதை எல்லாம் வேண்டாம் ஆதித்யன்,நீ ப்ளான் பண்ணி தான் இந்த என்கவுண்டர் பண்ணுனன்னு தெரியும்”,

“அதான் உங்களுக்கே தெரிஞ்சு இருக்கில்ல சார்,அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டடு இருக்கீங்க.. இந்த மாதிரி எச்சையை என்கவுண்டர் பண்ணாம என்ன பண்ண சொல்றீங்க,அவனை பாதுகாப்பா போலீஸ் பந்தோட கோர்ட்க்கு அழைச்சு போய் கூட்டிட்டு வந்து சாப்பாடு வாங்கி கொடுத்து முறை வாசல்ல பண்ணனுமா சார், பச்சை குழந்தைகளை சீரழிச்சு இருக்கான்,அவனை இன்னும் டார்ச்சர் பண்ணாமா கொன்னுட்டேன்னு நானே வருத்ததில் இருக்கேன், நீங்க வேற ஏன் சார்” என சலித்தவன்“

நான் வேணும்னு தான் என்கவுண்டர் பண்ணுனேன்,டைம் வேஸ்ட் பண்ணாமா சீக்கிரம் சஸ்பென்ட் ஆர்டர் கொடுங்க சார்,கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க ஒரு வாரம் இரண்டு வாரம்ன்னு இல்லாம ஒரு  மாசத்துக்கு தாங்க.. ஆறு மாசமா லீவ்வே போடலை என்ற ஆதித்யனின் அலட்சிய பேச்சு  கமிஷனருக்கு தான் இவன் அடங்கவே மாட்டான் போல என்று இருந்தது..

“உனக்கான பனிஷ்மென்ட் சஸ்பென்ட் இல்ல” என்றார் கமிஷனர்.

.“அப்ப டிஸ்மிஸ்ஸா?” ஆதி கோவமாக கேட்க..

“இல்ல ட்ரான்ஸ்பர்” என்றார் மகாலிங்கம்..

“ட்ரான்ஸ்பரா தானே” அலட்சியமானான் ஆதித்யன்.. அவனுக்கு இடம் மாறுதல் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.. இதுவா பனிஷ்மென்ட் கேலியாக கமிஷனரை பார்க்க.

.“கோவை மாவட்த்துக்கு” என்றாரே பார்க்கலாம் இப்ப ஆதித்யன் முகம் தான் மாறியது.. கமிஷனர் கேலியாக சிரித்தார்..“

இல்ல நான் அங்க போக மாட்டேன்”..

“ஏன் உன் சொந்த ஊர் தானே அது.. அங்க தானே உன் அப்ப அம்மா சொந்தம் எல்லாம் இருக்கு..‌ அங்க போக என்ன தயக்கம்..  அவன் அவன் சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்கான்.. உனக்கு கிடைச்சு இருக்கும்மா அந்த சான்ஸ்..

எனக்கு வேணாம்.. வேணும்ங்கிற யாருக்காவது கொடுங்க என்றான்.. மகாலிங்கம் சிரித்தார்.. அவருக்கு தான் அவன் அங்கு செல்ல தயங்கும் காரணம் தெரியுமே,“

சார் வேற பக்கம் ட்ரான்ஸ்பர் கொடுங்க.. இல்லன்னா ஆறு மாதத்திற்கு கூட சஸ்பென்ட் பண்ணுங்க கவலையே இல்ல.. ஆனா அங்க மட்டும் வேண்டாம் “என்றான்..

சிரித்த கமிஷனர்.. “எதுக்குமே யாருக்குமே பயப்படாத ஏ.சி.பி ஆதித்யனுக்கு சொந்த ஊர்ன்னா அவ்ளோ பயமா.. இல்லை அங்க இருக்கவங்கன்னா பயமா” என்றவரை முறைத்தான் ஆதி..“

யோவ் சின்ன புள்ள போல பண்ணாத.. நீ கோயம்புத்தூர் தான் போகனும்…. அங்க மினிஸ்டர் மருமகள் தற்கொலை கேஸை விசாரிக்க போற ஸ்பெஷல் ஆபிசர் நீ தான்..இது என் டிசிசன் இல்ல.. கவர்மென்ட் டிசிசன்.. அதனால் நீ கண்டிப்பா போய் தான் ஆகனும் என்றார்..ஆதித்யனுக்கு அங்கு போவது பிடிக்கவில்லை.. அப்பா அம்மாவை பார்க்கலாம் தான்.. அதோடு சேர்த்து சிலரையும் பார்க்க வேண்டி வருமே.. கடுப்பாக இருந்தது.. அதே நேரம் சின்ன ஒரு இதமும் இதயத்தில் வந்து ஒட்டி கொண்டது..

14 thoughts on “காவலனே என் கணவனே 1”

  1. Interesting ..
    Aadhiyanoda athiradi aatathai paka aavala iruku ..
    Adhoda antha idamana kaaranamum seekram therinja nalla irukum 😍😍😍😍

  2. ஆரம்பமே அட்டகாச அதிரடி போலீஸ். … குழந்தைகளை நாசம் பண்ணவனுக்கு சரியா தண்டனை…
    இவனுக்கு சொந்த ஊருக்கு போக ஏன் பயபடனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *