தப்பு ரஞ்சனி என்ன பேச்சு இது தனி குடித்தனம் போவதற்காகவா உன்னை கூட்டு குடும்பம் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் நீ சொந்த பந்தங்களோட இருக்கணும் நம்ம வீட்டில் தான் அந்த கொடுப்பனை இல்லை. நானும் உங்க அப்பாவும் சொந்த பந்தங்கள் இல்லாமல் தனியா இருக்கறதுனால நீ தனியாகவே வளர்ந்தாய். அக்கா , தங்கச்சி ,அண்ணன் ,தம்பி எந்த உறவும் இல்லாம வளர்ந்துட்ட. அந்த மாதிரி நாளைக்கு உன் பிள்ளை வளரணுமா சொல்லு. கார்த்தி கூட பிறந்தது ரெண்டு தங்கச்சி ஒரு தம்பி இருக்கும்போது நீ அந்த வீட்ல இருந்தா எனக்கு சந்தோசமா இருக்கும் என்றார் சங்கீதா. நீ தான் மூத்த மருமகள் பொறுப்பா குடும்பத்தை கவனிக்கணும். மாமியாரோட பாரத்தை குறைக்கணும் நீ நல்லா வாழனும் ரஞ்சனி. நீ இப்படி எல்லாம் தனித்தனம் போற என்னத்த மனசுல இருந்து தூக்கி போடு . முதல்ல இந்த வேலையை விடு ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியா மாமியாருக்கு நல்ல மருமகளா உன் புருஷனுக்கு நல்ல மனைவியா வாழ பாரு என்றார் சங்கீதா. என்னம்மா பேசுறீங்க முட்டாள்தனமா இருக்கு நீங்க பேசுறது நான் ஏன் வேலைய விடனும் நான் என்ன அந்த வீட்டுக்கு வேலைக்காரியா போகிறேனா. இல்ல நான் போய் அந்த வீட்டுக்கு வடுச்சு கொட்டுவதற்கு தான் நீ என்னை பெத்து வளர்த்தியா? நான் லவ் பண்ண பையன கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க ரொம்ப சந்தோஷம் நானும் அவனும் தனியா போயி சந்தோஷமா வாழனும் இந்த பிக்கள் , பிடுங்க எல்லாம் எனக்கு இருக்க கூடாது . மாமியார பாரு , நாத்தனாரா பாரு இந்த மாதிரி எல்லாம் என்னை போட்டு படுத்தாதீங்க . நான் வந்து கார்த்தி கூட தனியா சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன் தொல்லை பண்ணாதீங்கமா.
நான் வேலையெல்லாம் விடப்போவதில்லை ஒரு வாரம் தான் அந்த வீட்டுல இருப்பேன் மறுவாரம் தனியாக வீடு பார்த்து நான், என் புருசன் கூட தனியா போயிருவேன் என்று உறுதியாக கூறினாள் ரஞ்சனி.
தப்பு ரஞ்சனி நீ பேசுறது ரொம்ப தப்பு என்ற சங்கீதாவிடம் அம்மா போதும் ப்ளீஸ் உங்க அட்வைஸ் எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு காது வலிக்குது ஆள விடுறீங்களா நான் போய் கொஞ்ச நேரம் தூங்கணும் என்றபடி எழுந்து சென்று விட்டாள் ரஞ்சனி .
என்னங்க விடிஞ்சிடுச்சு இன்னும் என்ன தூக்கம் என்றபடி கணவனை எழுப்பினார் சந்தியா . என்ன சந்தியா நைட்டு ஒரே தலைவலி அதனால் தலைவலி மாத்திரை போட்ட தோட விளைவு என்னால இன்னும் எந்திரிக்க முடியல என்றார் சந்திரன். ஆமா இந்த மாதிரி எதனாலும் சாக்கு சொல்லுங்க என்ற சந்தியாவிடம் லட்சுமி எந்திரிச்சிட்டாளா என்றார் சந்திரன். லட்சுமி எந்திரிச்சு வேலைக்கு கிளம்பிட்டு இருக்கா சின்னவளும் காலேஜ் கிளம்பிட்டு இருக்கா நீங்க தான் இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க சரி எந்திரிச்சு இந்த காப்பிய குடிங்க என்றபடி சந்தியா தன் கணவன்
சந்திரனிடம் காப்பியை கொடுத்துவிட்டு தனது வேலையை கவனிக்க சமையல் அறைக்குள் நுழைந்தார்.
என்னம்மா அப்பாவோட என்ன சண்டை காலையிலே என்றாள் மகாலட்சுமி. ஆமா பெரிய அப்பா பொல்லாத அப்பா நீ தான் அவர மெச்சுக்கணும் வேலைக்கு போன இடத்துல ஒரு பிரச்சனை பண்ணிட்டு வேலைய தொலைச்சிட்டு வீட்ல வெட்டியா இருக்காரு. பொம்பள பிள்ளை உன்னோட வருமானத்தை நம்பி வாழ்ந்துட்டு இருக்கோம். தலைவலி தூக்கம் வரலன்னு சொல்லிட்டு கண்ட கண்ட மாத்திரையை போட்டுட்டு நைட்டு பாதிச்சாமத்துல தூங்கிட்டு பகல் முழுக்க எழுந்திருக்காமல் தூங்குறாரு . காலையில 10:00 மணி ஆனாலும் எந்திரிக்க மாட்டேங்குறாரு. அவருக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா ரெண்டு வயசுக்கு வந்த பொண்ணுங்களை பெத்துட்டு நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் . வயசுக்கு வந்த பொண்ணு உன்னை கட்டி கொடுக்காமல் உன் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து தின்னுட்டு இருக்காரு என்னத்த சொல்ல என்ற புலம்பிக்கொண்டே இருந்தார் சந்தியா.
அம்மா ப்ளீஸ் அப்பா பாவம் விட்டுறுங்க காலையிலே ஆரம்பிக்காதீங்க சரி நான் வேலைக்கு கிளம்புறேன் என்றபடி மகாலட்சுமி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
ஏய் அர்ச்சனா ரெடியா போலாமா என்றபடி அக்கா மகாலட்சுமி தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அம்மா போயிட்டு வரேன்மா என்றபடி இளையவள் அர்ச்சனாவும் தன் அக்காவுடன் ஸ்கூட்டரில் அமர்ந்து கல்லூரிக்கு கிளம்பினாள்.
தங்கையை கல்லூரியில் இறக்கி விட்டவள் நேராக தான் வேலை செய்யும் கவர்மென்ட் ஆபிசிற்குள் நுழைந்தாள் மகாலட்சுமி .
ஹாய் மகா என்றபடி வந்தான் சித்தார்த். சொல்லுங்க சித்து என்ன விஷயம் என்றாள் மகா. என்ன என்ன விஷயம் புதுசா கேட்கிற நம்ம விஷயம் தான் என்றவனிடம் இப்போ வேலை இருக்கு பர்சனல் விஷயம் எல்லாம் சாயந்திரம் பேசலாமா ப்ளீஸ் என்றபடி போய் தனது இருக்கையில் அமர்ந்து தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
எப்ப பாரு நான் ஏதாவது பேச வந்தாலே முட்டுக்கட்டை போட்டுட்டுவா சரி நம்ம வேலையை பார்ப்போம் என்ற படி சித்தார்த் தனது இருக்கையில் அமர்ந்து வேலையை கவனிக்க ஆரம்பித்தான் .
என்ன கார்த்தி சோகமா வந்து உக்காந்திருக்க இன்றைய சங்கரனிடம் ஒன்னும் இல்ல அப்பா வேலை டென்ஷன் என்றபடி தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான் கார்த்திகேயன். இந்தா கார்த்தி காபி குடி என்றபடி மகனிடம் தேநீர் கோப்பை நீட்டிய உமையாள் கணவனிடமும் தேநீர் கோப்பையை நீட்டினார். என்னடா ஏதோ யோசனையாக வர என்று கேட்ட அண்ணனிடம் ஒன்னும் இல்ல அண்ணா சும்மாதான் என்றபடி தன் அறைக்குள் நுழைந்த தமிழரசனோ காதலி சித்ரா கூறிய விஷயங்களை யோசித்துப் படி அமர்ந்திருந்தான் .
ஹாய் அண்ணா என்று வீட்டுக்குள் உற்சாகமாக வந்த கீர்த்தனா தன் அண்ணனின் அருகில் அமர்ந்து அண்ணா கல்யாணத்துக்கு எப்போ டிரஸ் எடுக்க போறோம் என்றாள் .
இப்ப என்ன அவசரம் இன்னும் அதற்கான பட்ஜெடே போட்டு முடிக்கலை உனக்கு என்னடி டிரஸ்க்கு அவசரம் என்று மகளின் குமட்டில் இடித்த உமையாள் அவளிடமும் தேநீர் கோப்பை நீட்டினார்.
அமிர்தா போன் பண்ணினாளா அம்மா என்ற கார்த்திக்கேயனிடம் இல்லப்பா டெய்லி போன் பண்ணுவா என்னன்னு தெரியல உனக்கு நிச்சயம் முடிந்ததில் இருந்து இந்த ஒரு வாரத்துல சரியாவே பேசல இரண்டு தடவ மூணு தடவ தான் போன் பண்ணா. சரி அவங்க வீட்டில் ஏதாவது வேலையா இருப்பாள் என்று கூறினார் உமையாள். சின்னவள் கேட்ட பிறகு தான் எனக்கும் தோணுது எப்ப ட்ரெஸ் எடுக்க போகலாம் என்ன எல்லாம் யோசிச்சீங்களா எங்கே எடுக்கிறது எல்லாம் யோசிச்சீங்களா என்று கேட்ட உமையாளிடம் அதெல்லாம் எங்க இருக்கலாம் என்னன்னு முடிவு பண்ணியாச்சு அதான் அடுத்த வாரம் தாலிக்கு தங்கம் உருக்கிறோம்ல அன்னைக்கே போய் பட்டு புடவை எல்லாத்தையும் எடுத்து விடுவோம் என்று கூறினார் சங்கரன்.
சொல்லுங்க சித்தார்த் என்ன பேசணும் என்ற மகாலட்சுமியிடம் என்ன பேசணும்னா நான் உன்கிட்ட எத்தன தடவ மகா சொல்றது நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் எங்க வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திட்டே இருக்காங்க நீ உன் பதிலை எப்பதான் சொல்லுவ என்றான் சித்தார்த் .
எனக்கு மட்டும் என்ன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு எதுவும் வேண்டுதலா சூழ்நிலை சரியில்ல அப்பாவுக்கு வேலை போச்சு தங்கச்சி இப்பதான் படிச்சிட்டு இருக்கான் என்னோட சம்பளத்தை வைத்து தான் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு இந்த நிலைமையில் நான் உங்களை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன்னா அவங்க என்ன பண்ணுவாங்க யோசிக்க வேண்டாமா என்றாள் மகாலட்சுமி.
இது பாரு மகா சும்மா வந்து குடும்பம் குடும்பம்னு சொல்லிட்டு இருக்காத உங்க அப்பாவுக்கு ஏதாவது ஒரு வேலை நானே ஏற்பாடு பண்ணி தரேன். அவரை வேலைக்கு போக சொல்லு சும்மா எதுக்கு வீட்ல இருக்காரு உன் தங்கச்சியும் இன்னும் ஒரு வருஷத்துல படிச்சு முடிச்சிடுவாள் .
நம்ம கல்யாணம் முடிஞ்சு நம்ம ரெண்டு பேரும் தான் சம்பாதிக்கிறோமே நம்ம பார்த்துக்கலாம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்ற சித்தார்த்திடம் நம்ம பாத்துக்கலாம்னு இப்ப சொல்லுவீங்க சித்து உங்க வீட்ல உங்க அம்மா ,அப்பா ஒத்துக்கணுமே என்னோட சம்பளத்தை என் வீட்டுல கொடுக்க அவங்க சம்மதிப்பாங்களா. இன்னும் சொல்லப்போனால் கல்யாணம்ன்னா என்ன சும்மாவா எவ்வளவு செலவு இருக்கு எல்லாத்தையும் பார்க்கணுமே என்ற மகாலட்சுமியிடம் எப்ப பார்த்தாலும் இப்படியே பேசாத மகா எப்ப பாரு நம்ம கல்யாணம் பத்தி பேசினாலே முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்க.
பேசாமல் நானே ஒருநாள் முடிவெடுத்து உங்க வீட்டுக்கு வந்து நிக்க போறேன் பாரு எங்க அப்பா அம்மாவோட என்றான் சித்தார்த். அப்படியா அவ்வளவு தைரியமா எங்க முடிஞ்சு நாளைக்கு வந்து என்னை பொண்ணு கேளுங்க பார்ப்போம் என்று மகாலட்சுமியும் ஜூசை எடுத்து குடித்தாள்.
நீ வேணும்னா பாரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் சொல்லாம கொள்ளாம வந்து பொண்ணு கேட்டு உன் வீட்டு வாசல்ல நிக்க போறேன் நீ தான் பேந்த பேந்த முளிக்க போறே என்று கூறினான் சித்தார்த். பார்க்கலாம் என்றவள் எழுந்து கொள்ள ஏன் மகா என்கூட ஒரு ஒன் ஹவர் கூட ஸ்பென்ட் பண்ண மாட்டியா எப்ப பாத்தாலும் பத்து நிமிஷம் மேல பேச மாட்டேங்குற. சேர்ந்து பேசுற அந்த பத்து நிமிஷத்துலயும் ரொமான்ஸ் ஏதாவது பேசுறியா என்று சலித்துக் கொண்டான். சித்து பிளீஸ் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் மகாலட்சுமி.
லட்சுமி என்ற சந்திரனிடம் என்னப்பா என்றாள் மகாலட்சுமி. பக்கத்துல ஒரு செக்யூரிட்டி ஏஜென்சில வேலைக்கு கேட்டு இருக்கேன் நாளைல இருந்து வேலைக்கு போலாம்னு இருக்கேன் என்றார் சந்திரன். அப்பா நீங்க ஒரு ஆபீஸ்ல மேனேஜராக வொர்க் பண்ணவரு. இப்போ செக்யூரிட்டி வேலைக்கு போறேன்னு சொல்றீங்களேப்பா ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்றாள் மகாலட்சுமி .
என்ன பண்ணுறது லட்சுமி வேலை போயிருச்சு இனி திரும்ப கிடைக்காது நான் கௌரவமான வேலைக்கு தான் போவேன் ஆபீஸ் உத்தியோகத்துக்கு தான் போவேன் அப்படின்னு இருந்தா இன்னும் எத்தனை நாளைக்கு வெட்டியா உட்கார்ந்து சாப்பிடுவது கிடைக்கிற வேலை எதுவா இருந்தா என்னம்மா உழைச்சு தான சாப்பிடுறோம் அப்பா அந்த வேலைக்கு போறேன் என்றார் சந்திரன் .
ஏய் சும்மா இருடி இப்ப வாச்சும் அவருக்கு வேலைக்கு போகணும்னு அறிவு வந்து இருக்கு அத நினைச்சு நான் சந்தோஷப்படுகிறேன் கெடுத்துவிட்டு இருக்காம போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா என்றார் சந்தியா . உங்க அம்மாவே சொல்லியாச்சு அப்புறம் என்ன மா போம்மா போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு என்றார் சந்திரன்.
….தொடரும்….
Interesting 🙂
Super da
Avar ku mudila solraru ena nu parunga atha vitu velaiku pola nu kova paduringa . Love panna intha pasangaluku udane romance ah pesinalum illana love illay ena evlo poruppugal irukum pothu athellam vara vendiya nerathula varum siddhu
Interesting. ..
Intresting