Skip to content
Home » நிழல் தேடும் நிலவே…5

நிழல் தேடும் நிலவே…5

மகா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ மகா என்ற சித்தார்த்திடம் நமக்குள்ள பேச எதுவும் இல்லை சார் என்றாள் மகாலட்சுமி. மகா ப்ளீஸ் என்றவனிடம் உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா என்னால உங்க அம்மா கேட்ட சீர்வரிசை எல்லாம் செஞ்சு உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது சித்தார்த் புரிஞ்சுக்கோங்க என்னோட குடும்ப சூழ்நிலை என்னன்னு உங்களுக்கே நல்லா தெரியும் நான் தான் தப்பு பண்ணிட்டேன் என்னோட சூழ்நிலை தெரிஞ்சும் உங்கள காதலிச்சது என்னோட தப்பு தான் அதற்காக என்னை மன்னிச்சிடுங்க என்றவள் அமைதியாக தன் வேலையை பார்க்க ஒரே ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காக வெளியில வா மகா உன்கிட்ட பேசியே ஆகணும் என்று அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே வேறு வழியில்லாமல் எழுந்து அவனுடன் சென்றாள் .

சொல்லுங்க சித்தார்த் என்ன விஷயம் என்றவளிடம் மகா ப்ளீஸ் என்னால நீ இல்லாம வாழ முடியாது பேசாம நம்ம இரண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என்றான் சித்தார்த். இதை பாருங்க சித்தார்த் ஓடி வந்து உங்களை கல்யாணம் பண்ணனும்கிற எண்ணம் எனக்கு கிடையாது அப்படி ஒரு கல்யாணம் எனக்கு தேவை கிடையாது நீங்க வேற ஏதாவது பேசுங்க என்றவளிடம் பேசாமல் எங்க அம்மா கேட்ட சீதனம் எல்லாமே நானே செய்து போடுகிறேன் உங்க வீட்டில் போட்டது மாதிரி சொல்லி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்றான் சித்தார்த் .

பைத்தியமா நீங்க அதை நீங்கள் எப்படி போடுவீங்க உங்க கிட்ட தனியா எதுவும் சேவிங்ஸ் இருக்கிறதா அப்படியே இருந்தாலும் அதை என் குடும்பத்திற்கு ஏன் செலவு செய்ய வேண்டும். எதுவும் வேண்டாம் ஒருவேளை நாளைக்கு உங்க அம்மாவுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சுச்சுன்னா எங்க அப்பா அம்மாவை காரி துப்ப மாட்டாங்களா மாப்பிள்ளைக்கு அவன் காசை வாங்கி அதை அவனுக்கே சீதனமா கொடுக்கிறது .  இந்த பேச்சை இதோட விட்டுருங்க முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் என்றாள் மகாலட்சுமி .

அப்படியெல்லாம் விட முடியாது மகா எனக்கு நீ வேணும் நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்ற சித்தார்த் உங்க அப்பா ,அம்மா கிட்ட நான் வந்து பேசுறேன் என்றான். என்ன பேச போறீங்க இல்ல என்ன பேச போறீங்க உங்க அம்மா அவ்வளவு கேக்கும்போது வாயை மூடிட்டு தான் இருந்தீங்க ஏன் அப்படி கேக்குறீங்கன்னு ஒரு வார்த்தை நீங்க கேக்கலையே என்ற மகாலட்சுமியிடம் மகா அவங்க என்னோட அம்மா அவங்கள எப்படி நான் சபையில் எதிர்த்து பேச முடியும் எங்க வீட்ல போய் அவங்க கிட்ட சண்டை போட்டேன். உங்க அப்பா ,அம்மா முன்னாடி நான் அவங்களை எதிர்த்து பேசினால் அப்பவும் உன்ன தான் தப்பா பேசுவாங்க அப்போ கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கவே நடக்காது. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது என்றான் சித்தார்த் .

சித்தார்த் ப்ளீஸ் இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் கண்டிப்பா என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது புரிஞ்சுக்கோங்க என்னோட குடும்ப சூழ்நிலை அந்த மாதிரி இருக்கு என்றாள் மகாலட்சுமி. நீ என்னை மறந்துட்டியா மகா நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு உனக்கு புரியவே புரியாதா நான் சொல்றேன்ல ஒன்னும் பிரச்சனை இல்ல நகை, பணம்  தானே அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன் என்றான் சித்தார்த் . பிச்சை போடுறீங்களா என்றாள் மகாலட்சுமி. என்ன பேச்சு மகா நீ ஒரு பொக்கிஷம் மகா  உனக்காக  செலவு பண்றதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றவனிடம் சரி எப்படி செலவு பண்ணுவீங்க என்றாள் மகாலட்சுமி.

கடன் தான் வாங்கணும் என்றவனை முறைத்தவள் உங்க அம்மா ,அப்பாவுக்கு தெரியாமல் கடன் வாங்கி அப்படி நம்ம கல்யாணம் நடக்கணுமா வேண்டாம் விட்டுடுங்க என்று விட்டு கிளம்பிட அவளது கையை பிடித்தவன் அப்படி எல்லாம் என்னால உன்னை விட முடியாது மகா எனக்கும் , உனக்கும் தான் கல்யாணம் நடக்கும் அது எங்க அம்மாவால தடுக்க முடியாது. நீ எனக்கு மனைவியாக போவதை எங்க அம்மா நினைச்சாலும் மாற்றவே முடியாது.

எங்க அம்மாவுக்கு 50 பக்கம் அஞ்சு லட்ச ரூபாய் ரொக்கம் தானே வேண்டும் அதை நான் பார்த்துக்கிறேன் என்றவன் ரெடியா இரு உன் கழுத்துல நான்தான் தாலி கட்டுவேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

முட்டாள் புரிஞ்சுக்காமல் பேசுகிறான் பாரு 5 லட்ச ரூபாய் ரொக்கம், 50 பவுன் நகை, கல்யாண செலவு மொத்தமும் என்ன அவ்வளவு ஈஸியா என்று நினைத்தவள் நடக்காத கல்யாணத்தை கற்பனை பண்ணி உன்னோட நிம்மதியை கெடுத்துக்காத மகா என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு சென்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் .

அவளுக்கும் ஆசைதான் அவனை திருமணம் செய்து கொள்ள ஆனால் அவளது குடும்ப சூழ்நிலையோ அவளது ஆசையை மனதிற்குள்ளே அடக்கிக் கொண்டது. அவன் காதலை சொன்ன அன்றே அவள் பலமுறை சொன்னாள் இந்த சரிப்பட்டு வராது இந்த கல்யாணம் நமக்கு கல்யாணம் அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவன் பேசிப்பேசியே அவளது மனதை கரைத்து விட்டான். இன்றும் அவன் கொடுத்த வாக்குறுதிகளை நம்புவதா, வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள் . அவன் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் இவர்களது கல்யாணத்திற்கு பெரும் தடை பணம் மட்டுமே அவனால் எப்படி அதை ஈடு கட்ட முடியும் வாங்கும் சம்பளம் மொத்தத்தையும் அவனது அம்மாவிடம் கொடுப்பவன் தான் சித்தார்த்.அப்படி இருக்கும் பொழுது வீட்டிற்கு தெரியாமல் கடன் வாங்கினால் நாளை அந்த கடனை எப்படி அடைப்பான் என்று பலவாறு யோசித்த மகாலட்சுமி வேலையிலும் சிறு சிறு தவறுகளை செய்தாள் மேல் அதிகாரியிடம் அதற்காக திட்டும் வாங்கி விட்டாள்.

ஒரு வாரமும் நாயா பேயாக அலைந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை எத்தனை  ஆசையாக அவளை காதலித்தேன் அவளை திருமணம் செய்ய போகும் வேளையிலா எனது வேலை பறிபோக வேண்டும் என்று நொந்து கொண்டவன் வருத்தத்துடனும், வேதனையுடனும்  வீட்டிற்கு செல்ல நினைத்தான் . ஆனால் ரஞ்சனியை ஒரு முறை பார்த்து பேச நினைத்தவன் அவளைக் காணச் சென்றான்.

என்ன கார்த்திக் என்னை பார்க்க வந்திருக்க என்ற ரஞ்சனியிடம் பதில் ஏதும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தான் கார்த்திகேயன். நான் சொன்னது தானே உனக்கு எவனும் கொடுக்கவில்லை தானே உனக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க கார்த்திக் என்றாள் ரஞ்சனி. என்னால ஒரு மூட்டை தூக்கினாலும் உன்னை நல்லபடியா வாழ வைக்க முடியும் என்ற கார்த்திக்கிடம் என் புருஷன் ஒரு மூட்டை தூக்குறவன்னு சொல்லிக்க எனக்கு அசிங்கமா இருக்கும் கார்த்தி நீ படிச்சு படிப்புக்கு உண்டான வேலையை தேடிட்டு வா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லையா விட்டுடு நின்று போன கல்யாணம் நின்று போனதாகவே இருக்கட்டும் என்றாள் ரஞ்சனி.

எப்படி ரஞ்சனி உன்னால இப்படி பேச முடியுது நீயும் என்னை தானே லவ் பண்ணின என்றவனிடம் கார்த்திக் உனக்கு புரியலையா நான் பிராக்டிகலா இருக்கணும்னு ஆசைப்படுறேன். பணம் இருந்தா மட்டும் தான் இந்த உலகத்துல நம்மளால வாழ முடியும் வேலை வெட்டி இல்லாத உன்னை கல்யாணம் பண்ணி எப்படி நம்ம வாழ்க்கையை நல்லபடியா வாழ முடியாது சொல்லு . நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னு வேணும்னா கூட நான் உங்க அப்பா, அம்மா கிட்ட வந்து நிக்கனுமா இப்போதைக்கு உங்க அப்பா தான் உன் குடும்பத்தை பார்த்துவிட்டு இருக்கிறார்.  அப்போ எனக்கு ஒரு தேவைனாலும் அதை நான் அவர்கிட்ட வந்து கேட்க முடியாது நீ வேலைக்கு போயி சம்பாரிச்சால் நான் உன்கிட்ட தைரியமா கேட்பேன் உங்க அப்பா கிட்ட போய் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கு சொல்லு அதனால தான் சொல்றேன் இந்த கல்யாணத்தை நிப்பாட்டிடலாம் என்றாள் ரஞ்சனி.

நீ தான் வேலைக்கு போறீயே ரஞ்சனி எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் உன்னோட சம்பளத்தை வைத்து நம்மளால சமாளிக்க முடியாதா என்ற கார்த்திக்கை  பார்த்து சிரித்தவள் வெட்கமா இல்லையா கார்த்தி இப்படி கேட்க என்றாள் . ரஞ்சனி என்றவனிடம் பொண்டாட்டி சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடணும்னு ஆசை அதுனால தான் கம்பெனியில் பிரச்சனை பண்ணி வேலையை விட்டு நின்ன அப்படித்தானே என்றாள் ரஞ்சனி.

ரஞ்சனி என்னை பத்தி தெரிஞ்சும்  ஏன் இப்படி பேசுற என்ற கார்த்திகேயனிடம் முட்டாள் மாதிரி என் முன்னாடி வந்து நிற்காதே எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை.  முட்டாள் மாதிரி என்ன நீ ஒரு முட்டாள் தான் கார்த்திக் உனக்கு இனிமேல் எவனுமே வேலை கொடுக்க மாட்டான் அதனால சும்மா இப்படி என் பின்னாடி வந்து உன் நேரத்தை வேஸ்ட் பண்ணாத போய் மூட்டை தூக்கணும் சொன்ன இல்ல அதையாச்சும் போய் செய் அப்படியாவது உன் வீட்டுக்கு உன்னால ஏதாவது வருமானம் வரட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் ரஞ்சனி.

அவளது வார்த்தைகளில் உடைந்து விட்டான் எத்தனை ஆசை வார்த்தைகள் பேசி இருப்பாள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அது எல்லாம் பொய்யா கேவலம் பணம் தான் காதலை கூட தீர்மானிக்கணுமா ரஞ்சனி என்று நினைத்தவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றான். வீட்டிலோ  வேறு விதமாக ஒரு பிரச்சனை முளைத்திருந்தது. அதை நினைத்தவன் இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேறயா என்று நொந்து கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் கார்த்திகேயன் .

என்ன கார்த்தி இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என்ற சங்கரனிடம் என்னப்பா பண்ண சொல்றீங்க கல்யாணம் நின்னு போச்சு பத்திரிகை அடிக்க கொடுத்த இடத்தில் அடிக்க வேண்டாம் என்று சொல்லிருங்க என்றவன் என்ன நினைத்தானோ தன்னறைக்குள் நுழைந்து கதவை அடைந்து தாழிட்டான். அவனுக்கு கத்தி அழவேண்டும் போல் இருந்தது ஆசை ஆசையாக காதலித்த காதலி அவளை ஊரறிய நிச்சயம் செய்து அவள் அணிவித்த மோதிரம் தன் கையில் இருக்க திருமணமோ நின்று விட்டது அதை நினைக்க நினைக்க மனம் வேதனையில் துடித்தது எவ்வளவு கனவு கண்டிருப்பான் அவளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டதே என்று துடித்தான்.

…. தொடரும்…

4 thoughts on “நிழல் தேடும் நிலவே…5”

  1. Kalidevi

    Pavam karthik ranjani overa panra panam valrathuku thevai tha athukaga kalyanam pana poravana velai vitu eduthutu ippadi pesura. Oruthan kadhalikaga na ella selavu panren solran avala mrg panika maha ava kudumbatha yosichi nee panam iruka thimira pesuriya panam mattum life agiduma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *