Skip to content
Home » பிரியமானவளின் நேசன் 3

பிரியமானவளின் நேசன் 3

நேசன் 3

நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும் குற்றவுணர்வுடனும் முகப்பறையின் நீள அகலங்களை நடந்தே அளந்துக் கொண்டிருந்தான்.

அவனது செயல் அபத்தமானது என்று அவனுக்கு புரிந்தும் மனம் தான் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. பொழிலனும் அலர்விழியும் முன்பே உறங்கச் சென்றிருந்தனர்.


காலை ஆறு மணி அளவில் பிரியவாகினி வந்து நின்றாள். அவளின் ஹேசல் விழிகள் இரவு விழித்திருந்ததால் செங்குருதி நிறமாய் சிவப்பேறியிருந்தது. முகப்பறையிலுள்ள நீள் மெத்திருக்கையில் எப்போது உறங்கினான் என்று தெரியாத நேசன் இவளின் வருகையின் அரவம் உணர்ந்து எழுந்தவன் அவளது விழிகளை பார்த்து திகைத்தான்.


“என்ன பிரச்சனை நேசன் உங்களுக்கு? அவள் உங்களை என்ன செய்தாள்? சொல்லுங்க. ஐந்தறிவு ஜீவன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிருச்சா? கேட்க யாரும் இல்லைனு நினைச்சிட்டீங்களா? நான் இருக்கேன்” வந்ததும் பட்டாசாய் படபடவென வெடித்தாள்.


“நீ இருக்கியா? உனக்கு கொஞ்சமாது சென்ஸ் இருக்கா பிரியா? எஸ்டடே பார்ட்டி நமக்கான பார்ட்டி. என்னோட ப்ரெண்ட்ஸ் ஆபிஸ் கொலிக்ஸ்னு எல்லாரும் இருக்கும் இடத்தில் ஒரு தெரு நாய கூட்டிட்டு வந்து அதை கொஞ்சிகிட்டு நிற்க. அதை துரத்தி விடாமல் என்னையும் தூக்கி கொஞ்ச சொல்றியா? ப்புல்ஷிட்” வந்ததும் பட்டாசாய் வெடித்தவளின் மேல் கோவம் அதிகமாக இவனும் பட்டாசாய் வெடித்தான்.


“என்ன பேசுரீங்க? உங்களிடம் இதை எதிர்பாக்கல்லைங்க. அவள் தெரு நாய் இல்லை. அண்ட் அவளுக்கு நேம் இருக்கு. ஷீ இஸ் சாஷா. அப்படியே தெருநாய் உள்ளே வந்தா தான் என்ன? அவங்களும் ஓர் உயிர் தானே? மனுஷங்களை நம்பி தானே இருக்காங்க?” ஆதங்கமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.


“இதலாம் என்கிட்ட நீ சொல்லாத பிரியா. என் முன்னாடியே நாயை போய் கிஸ்…ச்சீ” என்று விழிகளை அழுந்த மூடி திறந்தவன்


“நீ என் வீட்டில் இருக்கனும்னா என் இஷ்டப்படி தான் இருக்கனும். நாயை போய் தொடுர… கிஸ் பண்ற… ஓ காட்.. ச்சை… ஹேண்ட் வாஷ் பண்ணியா இல்லையா அதோட முடி எவ்வளவு அலர்ஜி தெரியுமா? ரேபிஸ் அட்டாக் வந்தா என்ன செய்வ?” என்று அருவெருப்புடனும் கோவத்துடனும் மொழிந்தவனை வினோதமாக பார்த்தாள் பிரியவாகினி.


“உங்களுக்கு ஏதாவது … கழண்டுடுச்சா என்ன?” என்று ஆட்காட்டி விரலை தலையின் பக்கவாட்டில் சுற்றி காண்பித்து வினவினாள்.


“பிரியா நான் உன் ஹஸ்பண்ட்னு நினைவில் வச்சிக்கோ” உக்கிரமாய் பதிலளித்தான் நேசன்.


“நானும் உங்களுக்கு ஒய்ப்ஃன்றதை நீங்க அக்செப்ட் பண்ணிகோங்க. இதென்ன வைல்ட் லைப்ஃபா? என் எல்லைக்குள் நீ வாழனும்னா எனக்கு கீழே பயந்து நடுங்கி அடங்கி வாழனும்னு சொல்ல. உங்க இஷ்ட படி ஸ்லேவ் லைப் வாழ நான் வரல. காட் இட்” உனக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று அதிரடியாய் மொழிந்தவள் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள். பின் நின்று திரும்பி


“ஒன் மோர் திங்க். நான் ரொம்ப சாப்ட் நேச்சர். பட் எதிர்ல இருக்கவங்க நடந்துக்கிறது பொறுத்து ரக்டாவும் நடந்துப்பேன். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்.” என்று விறுவிறுவென்று ஏறி அறைக்கு சென்று விட்டாள்.


அந்த நேரத்தில் நடைப்பயிற்சி செல்ல எழுந்து வந்த பொழிலன் இவர்களது சம்பாஷணைகளை கேட்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவராய்

“அலர் சுகர் எக்ஸ்ட்ராவா போட்டு சூடா ஒரு காபி” என்று மெத்திருக்கையில் வந்து அமர்ந்தார்.


“குளு குளுனு இருக்குதோ? இதுக்கு தான் இவளை தேடித் தேடி கல்யாணம் பண்ணி வச்சிங்களா? உங்களுக்கு பேச முடிலனு அவள பேச விட்டு வேடிக்கை பாக்ரீங்களா?”


“பின்னே என்னடா? நீ பண்ணது ரொம்ப தப்பு. எப்பவோ என்னவோ நடந்ததுக்கு இந்த குதி குதிக்கிற. ஒன்னும் அறியாத அப்பாவி ஜீவனை மிதிக்கிற. ஒருத்தராது உனக்கு கடிவாளம் போட்டா தான் நீ அடங்குவ”


“டாட்..”


“டேய் சும்மா கத்தாம மருமகபுள்ளய போய் கவனி போ. ஏங்க சுகர் தூக்கலா காபி .. இந்தாங்க” என்ற அலர்விழியை பார்த்து பெருமூச்சு விட்டவன் மாடியேறினான்.


முன்தினம் சாஷாவை எட்டி உதைத்ததில் அவளுக்கு காயம் அதிகம் இல்லையெனினும் வெகுவாக பயந்திருந்தாள். நான்கு வயதே பூர்த்தியானவள் இதுவரை இப்படியான ஒன்றை எதிர்க்கொள்ளாததில் மனதளவில் ரொம்ப பயந்திருந்தாள்.


‘வீல்’ என்று கத்திகொண்டே சுவரோரம் ஒடுங்கியவளை ரோஜாவின் சீறும் குரலே பிரியவாகினியை நடப்புக்கு கொண்டு வர
“சாஷா” என்று பதறியவள் ஓடிப்போய் அவளை தூக்கி நேசனை ஒரு பார்வையும் தன் பெற்றவர்களை ஒரு பார்வையும் பார்த்து விறுவிறுவென கிளம்பிவிட்டிருந்தாள் மருத்துவமனை நோக்கி.


சேந்தனும் தமிழினியும் செய்வதறியாது நின்றனர். பொழிலனும் அலர்விழியும் அவர்களுக்கு ஆறுதல் மொழிந்து சாப்பிட வைத்தனர்.


மருத்துவமனைக்கு செல்லும் வரையிலும் ஒரு வித நடுக்கத்துடனே வலியில் முனகிக் கொண்டு சாஷா பிரியவாகினியின் மடியில் அமர்ந்திருந்தாள்.

மருத்துவமனை வந்ததும் மழலை போல் கைகளில் தூக்கி கொண்டு சிறிது பதற்றத்துடன் வரவேற்பில் அமர்ந்திருந்த செவிலியிடம் அவர்களது தகவலை அளித்து பதிந்து விட்டு வரிசை எண் சீட்டை வாங்கி மருத்துவரை காண காத்திருந்தனர். ரோஜாவோ மகிழுந்திலேயே இருந்துக் கொண்டாள்.


அது ஒரு பிரபலமான கால்நடை மருத்துவமனை. உள்ளே எத்தகைய சூழலில் வந்தாலும் எந்த ஒரு நான்கு கால் ஜீவனும் வெளியே செல்லும் போது மகிழ்ச்சியுடனே செல்லும்.

அதற்கு காரணம் அந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் மருத்துவர் மீரா கார்த்திக் என்று சொன்னால் மிகையாகாது. அத்தனை கனிவானவர் அனைத்து உயிர்கள் மேலேயும் அன்பு செலுத்துபவர். மருத்துவரின் அறைக்கு வெளியே மீரா கார்த்திக் எனும் பெயர் பலகை அன்புடன் வரவேற்க காத்திருந்தது. அவர்கள் முறை வந்ததும் எழுந்து சென்றாள் பிரியவாகினி.


“அடடே வாங்க வாகினி. எப்படி இருக்கீங்க? டியூட்டி முடிஞ்சி கிளம்பலாம்னு இருந்தேன். உங்களை கேமரால பாக்கவும் தான் வெயிட் பண்ணேன்” அன்புடன் வரவேற்றார் மருத்துவர் மீராகார்த்திக்.


“தேங்க்யூ டாக்டர்”


“சாஷாக்கு என்ன ஆச்சு?வேக்ஸின் போட டேட் இன்னும் இருக்கே. ரோஜா எப்படி இருக்கா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? எனி பிராப்ளம்?” என்று தன்மையுடன் வினவினார்.


“அது… டாக்டர்… அது… இவள்க்கு கொஞ்..சம் அடிப் பட்டுருக்கு.. ரொம்ப.. பயந்து போய்.. இருக்கா” திக்கி திணறி பேசினாள். சாஷாவை தூக்கி படுக்க வைத்தவர்


“ஹெலோ சாஷா.. ஹேண்ட் சேக்.. என்ன ஆச்சு சாஷாக்கு? ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்கீங்க? காம் பண்ணுங்க காம் பண்ணுங்க. ஐ அம் தயர் ஃபார் யூ” என்று கனிவுடன் சாஷாவிடம் உரையாடி பரிசோதித்தவர்


“சாஷா பயந்த மாதிரி இல்லையே வாகினி. நீங்க தான் பயந்து போய் இருகீங்க. ரிலாக்ஸ். நான் எங்கே பெயின் இருக்குனு செக் பண்ரேன்” என்று பதிலளித்தபடி சாஷாவின் கண்களை உற்று நோக்கினார். பின் காது, கால்கள், வயறு, நெஞ்சு பகுதியில் கை வைத்து அழுத்தி பார்த்தார். வயிற்றின் மேல் பகுதியில் மட்டும் லேசான வலி இருந்ததால் முனகினாள்.


“உட்காருங்க வாகினி. பயப்பட ஒன்னுமே இல்லை. பெயின் டேப்ளட்டும் ஆன்டிபயாடிக் டேப்ளட்டும் மூனு நாளைக்கு எழுதி தரேன். கொடுங்க அதுவே போதும். சரியாகலனா ஒரு ஸ்கேன் எடுத்து பாத்திடலாம். நத்திங் டூ ஒர்ரி” என்று ஆறுதலாக பேசினார்.


“தேங்க்யூ டாக்டர்…”


“சரியா புட் சாப்பிடுரது இல்லையா? ரொம்ப டயர்டா தெரிராளே”


“ஆமா என்னை பாக்க முடிலனு புட் ஸ்கிப் பண்ணிருக்கா. வரும் வழியெல்லாம் நடுங்கிட்டே வந்தா. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்”


“அடடே புதுப்பொண்ணு இப்படி டென்ஷன் ஆகலாமா? அதுசரி இந்நேரம் நீ உன் ஹஸ்பண்ட் கூடதானே இருக்கனும் சாஷா கூட என்ன பண்ற?”


“டாக்டர் சாஷாவை அட்டாக் பண்ணதே அவர் தான்” கோவமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.


“ஓகே கூல் வாகினி. சாஷாக்கு ஒன்னும் இல்லை. சடர்னா அட்டாக் பண்ணதால கொஞ்சம் பயந்துருக்கா. அவ்வளவு தான். அண்ட் நீயும் அடிக்கடி வந்து பாத்துட்டு போ. இவ்வளவு நாள் கூடவே இருந்துட்டு இப்ப பிரிஞ்சதும் கொஞ்சம் பீல் ஆகிருப்பா. இல்லைனா உன்கூடவே கூட்டிட்டு போ. ஆமா ரோஜா எப்படி இருக்கானு சொல்லவே இல்லையே?”


“பொடிசு நல்லா இருக்கா டாக்டர்”


“அது சரி எங்களுக்கு ட்ரீட் இல்லையா? அவசரமா ஊரில் போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டீங்க”


“சாரி டாக்டர். கல்யாண பரபரப்பில் மறந்துட்டேன். அவசியம் வீட்டுக்கு ஒருநாள் வாங்க” என்று சிறிது நேரம் பேசிவிட்டு சாஷாவுடன் விடைபெற்றாள் பிரியவாகினி. இரவெல்லாம் விழித்திருந்து பார்த்துக் கொண்டவள் காலையில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள்.


மாடியேறியவன் நேரே சென்றது அவனுடைய அறைக்கு பக்கவாட்டில் இருக்கும் சுவற்றின் அருகே தான். அங்கு சென்று சிறிது நேரம் கழித்து வரும் போது நேசனின் அறை கதவை திறந்து பிரியவாகினி வெளியே வந்தாள்.

‘இங்கு இவர் என்ன செய்கிறார்’ என்று எண்ணினாலும் அவனின் அருகில் வந்து பேசிட அவனை நோக்கி நடந்தாள். உடனே ஓடிவந்த நேசன் ” இந்த பக்கம் போக வேண்டாம். வா உள்ளே போகலாம்” என்று அறைக்கு இழுத்து சென்றான்.


“கையை விடுங்க. எதுக்கு இவ்வளவு அழுத்தமா பிடிச்சு இழுத்துட்டு வரீங்க? நானே வரேன்” என்று கைகளை உருவினாள்.


“இல்லை.. அது.. ஓகே.. சாரி..” பதற்றத்தில் வாய் தந்தி அடித்தது.

“ஏன் இப்படி ஸ்ட்ரேன்ஜ்லியா நடந்துகிறீங்க?”


கண்களை அழுந்த மூடி திறந்தவன்

“இப்ப எதுவும் பேச வேண்டாம் பிரியா. நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன். ஈவ்னிங் பேசலாம்” என்று படுக்கையில் விழுந்தவன் உறங்கி போனான்.


பிரியவாகினி கீழே இறங்கி அலர்விழியிடம் ஏன் இப்படி நேசன் நடந்துக் கொள்கிறானென கேட்டு பார்த்தாள். அவரோ அவனே பதில் சொல்வான் என்று சொல்ல குழப்ப மனநிலையிலே அறைக்கு வந்தாள்.


மாலை நேரத்தில் முகப்பறையில் கேட்ட சலசலப்பில் இருவரும் எழுந்து கீழே வந்தனர்.


“நேத்து எங்க பையன் நடந்ததுக்கு நாங்க மன்னிப்பு கேட்டுகிறோம் சம்மந்தி” என்று கைகளை கூப்பினார் பொழிலன்.


“சம்மந்தி என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு கையை எடுங்க” என்று பதறிய சேந்தன் கைகளை பிரித்து விட்டார்.


“மறு வீட்டுக்கு அழைப்பு வைக்கலாம் என்று தான் வந்தோம்” தமிழினி


“அவங்களை நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க காபி குடிங்க” என்று அலர்விழி காபிதட்டை நீட்டினார். அதற்குள் கீழிறங்கிய நேசனும் பிரியாவும் மெத்திருக்கையில் அமர்ந்தனர்.


“டாடி நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோமே. இன்னைக்கே வரனுமா?” பிரியவாகினி.


“இன்னும் கோவமா இருக்கியா இஷாம்மா?” சேந்தன் வினவினார்.


பிரியவாகினி நேசனை திரும்பி பார்க்க அவனே பதிலளித்தான்.
“இன்னைக்கே வரோம் மாமா” என்று அவளையும் அழைத்து கொண்டு அறைக்கு வந்தவன் எதுவும் பேசாமல் இரு நாட்கள் தங்குவதற்கு மட்டும் தேவையானவற்றை எடுத்து வைத்து சேந்தன் தமிழினியுடன் கிளம்பினார்கள்.


புதுமண தம்பதிகளுக்கு பல உபசரிப்புகளுக்கு பின் தனிமை கிடைத்தது. பிரியவாகினி அவளின் அறையில் இருக்க தோட்டத்தில் நின்றிருந்த நேசனோ வலியில் அலறினான். என்னவென்று ஓடி வந்து பார்த்த பிரியவாகினி அவனது வலது காலின் பாதத்தில் செங்குருதி சொட்டிக் கொண்டிருந்ததை பார்த்து திகைத்தாள்.


பிரியமானவள் வருவாள்…

3 thoughts on “பிரியமானவளின் நேசன் 3”

  1. Kalidevi

    yen nesan ku pets na pidikala athula etho vishayam iruku polaye avanga amma kitta ketalum avane solvan solranga ethukaga ivlo tension aguran . ipo ena pana ethuku blood varuthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *