Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 31

மீண்டும் மலரும் உறவுகள் 31

கண்ணனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

தான் இப்போது இதை நினைப்பது சரி இல்லை என்பதை உணர்ந்த கண்ணன் தலையை உலுக்கி விட்டு மலரை பார்க்க செய்தார் .

மலர் அமைதியாக கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தவுடன் ,மாமா என்று மலர் அருகில் வர கண்ணன் எழுந்து  வெளியே சென்று விட்டார் .

போகும் கண்ணனின் கையை பிடித்த மலர் . உனக்கும் ,உன் மகளுக்கும் அப்போ நான் வேண்டாம் .

இந்த வீட்டில் நான் ஜடமாக இருக்கேன் . உங்க ரெண்டு பேத்துக்கும் பாரமா இருக்கேன் இல்ல.

நீங்க மாட்டுக்கும், வரீங்க ,போறீங்க நான் என்ன பண்றேன், எப்படி இருக்கேன்  எதுவுமே தேவையில்லை உங்களுக்கு .

அப்புறம் எதுக்கு மாமா இந்த வீட்ல நான் இருந்துட்டு என்ற அடுத்த நொடி கண்ணனின் ஐந்து விரல்களும் மலரின் தாடையை பதம் பார்த்திருந்தது .

தியா தனது தாயின் பேச்சைக் கேட்டு வெளியில் வேகமாக வந்தவள் .தனது தந்தை தன் தாயை அடிப்பதை பார்த்தவுடன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு தான் இருந்தாள்.

நீயா எதையாவது யோசிச்சு, நீயா அதுக்கு பதிலும் கண்டுபிடிச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது டி .

“உன் மகள் எனக்கு தண்டனை என்ற பெயரில் சாகடிக்கிறாள் . நீ ஒரு பக்கம் பேசி சாகடிக்காத சரியா ?”.

நீ எப்படி இந்த நேரத்தில் எது  பேசினாலும் தப்பா போயிரும்னு நினைக்கிறையோ அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

அதுக்காக, உன்னை நான் வெறுத்துட்டேன் ,உன்னை விட்டு விலகனும்னு நினைக்கிறேன் இந்த மாதிரி எல்லாம் யோசிக்காத.

இதையே   நான் சொல்லியிருந்தா என்ன பண்ணி இருப்பேன்னு யோசிச்சுக்கோ டி.

“ஆனா, என்ன எந்த அளவுக்கு சாக அடிக்க முடியுமோ ,அம்மாவும் ,மகளும்  நல்ல சாகடிக்கிறீங்க சரியா ?”

“நான் எப்போ செஞ்ச பாவமோ ? என்ன இப்போ சுத்தி வருது” என்று கத்தினர்.

அப்போது, தியா கைதட்டி சிரித்துக்கொண்டே நீங்க தேவி ஆண்டிகும் ,உங்க ரத்தத்துக்கும் செஞ்ச பாவம்தான் இப்ப உங்களை சுத்தி வருகிறது என்றாள்.

தியா என்று கண்ணன் வேகமாக கத்தினார்.

இப்ப எதுக்கு இவ்வளவு வேகமா கத்துறீங்க. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தான் செய்யும்.

நீங்க பாவம்தான் செஞ்சிருக்கீங்க. ஒரு பச்சிளம் குழந்தையை விட்டுட்டு அதுவும் கேவலமா சொல்லிட்டு பேசிட்டு வந்து இருக்கீங்க .

அந்த பாவம் உங்களை ஏழு ஏழு ஜென்மத்துக்கும் உங்களை தொடரும் என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள் .

கண்ணன் மலரை பார்த்து விட்டு அமைதியாக உட்கார்ந்தார். மலர் எதுவும் பேசாமல் அமைதியாக கண்ணனுக்கு சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தார்.

கண்ணன் வேகமாக மலரின் மடியில் படுத்து  கொண்டு அவரது கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு நான் செஞ்சது தப்பா ? சரியானு நான் பேச விரும்பல மலர் .

அது உனக்கும் புரியும் .இனி நான் அதை பத்தி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை .

யோசிச்சாலும் ,தப்பு உன் மக சொல்ற மாதிரி அந்த உறவு வேணும்னு நான் போய் இனி நிக்கவும் மாட்டேன் .

அது உனக்கும் தெரியும் அவ சொல்ற அந்த ரத்தம் எனக்கு வேண்டும்னு நான் போய் கேக்க மாட்டேன் மலர்.

இதைவிட கேவலமான செயல் வெற எதுவும் இருக்காது. அப்போ அது என் புள்ளையே இல்லனு சொல்லிட்டு இப்போ போய் உறவாடுறது தப்பு.

அதுவும் இத்தனை வருசம் வளர்த்தவங்க கிட்ட இருந்து பிள்ளையை பிடிங்கினா எவ்ளோ வலி இருக்கும்னு எனக்கு தெரியும்.

ஆனா,இதுககான தீர்வு என் கிட்ட இல்ல டி.நான் எதையும் வேனுமுனு செய்யல. அப்போ இருந்த சூழ்நிலை அப்படி.

அதுக்காக ,நான் செஞ்சது சரினு சொல்ல மாட்டேன்.அந்த நேரம் என் புத்தி மழுகிடுச்சு.

இனி அந்த உறவு என் வாழ்க்கையில கிடையாது. இனி என்னோட மொத்த வாழ்க்கையும் நீயும் ,கண்ணம்மாவும் மட்டும் தான்.

அதை முதல்ல, நீங்க ரெண்டு பேரும் புரிந்து கொள்ளுங்கள். நான் செஞ்சது சரின்னு சொல்ல மாட்டேன்.

ஆனால் ,அதை விட்டு வெளியே வருவது தான் இனி நம்ப வாழ்க்கைக்கு   நல்லதுன்னு நினைக்கிறேன் .

இதுக்காக நான் சுயநலமா யோசிக்கிறேன்னு நீயும் , அவளும் நினைச்சாலும் பரவாயில்ல.

நான் சுயநலவாதியாகவே இருந்துட்டு போறேன். எனக்கு என்னோட வாழ்க்கை முக்கியம்னு தோணுது.

ஒரு வாரம் ஆகுது டி. உன்கிட்டயும் என்கிட்டயும் தியா எப்பயும் போல பேசி.

அவ இல்லாம நமக்கு வாழ்க்கை இருக்கா .அவளால நம்ம ரெண்டு பேர் கிட்டையும் பேசாம இருந்திட முடியுமா ?.

நான் செஞ்சதுக்கு நீயும் ,அவளும்  என்னடி பண்ணுவீங்க .நீங்க ரெண்டு பேரும் எதுக்காக இப்போ வலியை சுமந்துட்டு நிக்கணும் என்றார் .

மலர் அழ செய்தார்.  உள்ளே இருந்து தியாவும் இதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. தன் தந்தைக்கு இது தேவைதான் என்று யோசிக்க செய்தாலே தவிர ,இதைப்பற்றி மேற்கொண்டு அவள் யோசிக்கவில்லை.

அவர் பேசிய பேச்சுக்கும், அவர் செய்த செயலுக்கும் ஆன தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு அமைதியாக தான் இருக்க செய்தாள் .

அதன் பிறகு ,அங்கு இதைப் பற்றி மேற்கொண்டு யாரும் பேசவில்லை.

தியா எப்போதும் போல் மலரிடமும் பேச செய்தாள். கண்ணனும் பேச செய்தார்.

ஆனால் ,மூவரும் ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து முன்பு போல் பேசி சிரித்து சில ,பல கதைகள் பேசவில்லை.

இப்படியே நாட்கள் சென்றது. தினமும் காலேஜில் நந்தாவும் தியாவை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் .

படிப்பை தவிர ,வேறு எதிலும் அவள் பெரிதாக கவனத்தை செலுத்தவில்லை. படிப்பாள் .

நண்பர்களிடம் ,எப்போதும் போல் லேசாக உறவாட செய்தாள்.

ஆனால், முன்பு போல் துள்ளல் குணமும் சரி ,கண்களை எட்டிய சிரிப்பும் சரி அதன் பிறகு அவன் பார்க்கவில்லை.

நன்றாக இருந்த பெண்ணின் மனதை கெடுத்து விட்டோமே, அப்படி ஒரு சூழ்நிலையை என்ன தான் அவளுடைய அப்பா ஏற்படுத்தி இருந்தாலும் ,அந்த நேரத்தில் நான் கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் .

நானும் என்னுடைய நிதானத்தை இழந்துவிட்டேன் என்று வருந்த செய்தான்.

நாட்கள் உருண்டு ஓடி இருந்தது .ஒரு நாள் அவள் கல்லூரி விட்டு வெளியில் வரும் வேளையில் உதயா பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தான்.

தூரத்தில் வரும் போது தியா அங்கு உதயாவை பார்த்து விட்டாள். இவர் என்ன நிக்கிறார்.

ஒருவேளை நந்தா சாருக்காக இருக்கும் என்று எண்ணிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் .

இவள் வந்து நின்ற அடுத்த நொடி உதயா அவளது அருகில் வந்து நின்றான் .

“தியா நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் .அருகில் உள்ள பார்க்குக்கு வருகிறாயா?”என்றான்.

அன்று இவங்க அம்மாவும் இதே போல் தான் சொன்னார்கள் ,வந்து நின்றார்கள் என்று மனதிற்குள் எண்ணினாள்.

“என்ன அன்று  அம்மா இன்று மகனா ?”என்று யோசித்து விட்டு அவனையே பார்த்தாள்.

உதயா அவளை கண்களாலே வா என்று கெஞ்சி விட்டு அவன் சென்று விட்டான்.

தியா ஒரு சில நிமிடம் நின்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அப்பொழுது ,இரண்டு அடி எடுத்து வைத்த உதயா தான் உங்க அம்மாவிடம் ஏதாவது சொல்லி விட்டு வா என்று விட்டு பார்க் நோக்கி சென்றான் .

தியா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் .தன்னைப் பற்றியும் ,தன் அம்மாவைப் பற்றியும் அம்மாவும் மகனும் இந்த அளவுக்கு யோசிக்கிறார்களே.

ஆனால் ,நாங்கள்  இவர்களுக்கு செய்தது, என்னவோ அத்தனையும் அநியாயமே என்று எண்ணி வருத்தம் கொண்டாள் .

பின்பு ,உதயா செல்லும் இடத்தை நோக்கி நகர்ந்தாள்.
அவனின் அருகில் போய் நின்று விட்டு
“சொல்லுங்கண்ணா என்று கேட்டு விட்டு ,நான் உங்களை அண்ணா என்று சொல்லலாமா? “என்று கேட்டாள்.

ஹம் சொல்லலாம் என்று சிரிப்புடன் சொல்லி விட்டு நீ தப்பா நினைக்கவில்லை என்றால், நான் உன்னை பாப்பா, தங்கச்சி என்று கூப்பிடலாமா?என்று கேட்டான்.

சரி ,சொல்லுங்க அண்ணா .ரொம்ப லேட் ஆன அம்மா பயப்படுவாங்க என்றாள்.

உதயா சிரித்துக் கொண்டான் .”அம்மாவுக்கு பயமா? இல்ல பாசமா”.

” ரெண்டுமே இருக்கு “என்று அவளும் சிரிக்க செய்தாள் .

சரி தியா நான் சுத்தி வளைத்து பேச விரும்பல .

நான் இங்க அன்னைக்கு நடந்த விஷயத்தை பத்தி பேசி விரும்பல.

உங்க அப்பாவை பற்றியோ ,இல்ல  உங்க  குடும்பத்தை பற்றியும்  நான் பேச விரும்பல.

“அவனது கண்ணை உற்று  பார்த்தாள் தியா. ஏன் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?”.

இப்பொழுது ,உதயா அவளது கண்ணை ஒரு சில நிமிடம்  உற்றுப் பார்த்துவிட்டு “நந்தா என்னோட மாமாவை பத்தி பேசணும்” என்றான் .

“நந்தா சாரை பற்றி என்ன பேச வேண்டும் .அதுவும் என்கிட்ட பேச என்ன ?இருக்கு”.

” நான் அவர் லைஃப்ல தலையிடவே இல்லையே” என்று விட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள்”.

” உதயா அவளது செய்கையை உணர்ந்து சிரித்துவிட்டு “கரெக்ட் சரி தான்  நான் சொல்ல வந்தத சரியா புரிஞ்சிக்கிட்ட .

இப்ப எல்லாம் ,”நீ அவரோட லைஃப்ல தலையிடவே  இல்லை “தான் அதான் ஏன், என்று தான் எனக்கு புரியல.

“நான் அவரோட லைஃப்ல குறுக்க வந்தா தான அது தப்பு அண்ணா”.

நான் அமைதியா இருகிறதுல  ஒன்னும் தப்பு இல்லையே என்றாள்.

“உன்ன அவருடைய லைப்ல வராத என்று சொன்னாரா “.

இல்லையே அண்ணா.

அண்ணா” ஒரு விஷயம் நீங்க வெளிப்படையா பேசுறீங்களா? நானும் வெளிப்படையா பேசுறேன்” என்றாள் .

வெளிப்படையா பேச தான் தியா நானும் வந்து இருக்கேன் .உண்மைய சொல்லு நல்லா யோசிச்சுக்கோ .

நீ மாமா கிட்ட உன்னோட பர்த்டேக்கு முன்னாடி, அதாவது இந்த சம்பவங்கள் எல்லாம் நடப்பதற்கு முன்னால் உன்னுடைய விருப்பத்தை சொன்ன தான என்று கேட்டான்.

  அதிர்ச்சியுடன் தியா உதயாவை பார்த்தாள்.

மாமா என் கிட்ட சொல்லிட்டாங்க தியா .உன்கிட்ட அன்னைக்கு என்ன சொன்னார் என்றும் சொல்லிட்டாரு .

“அப்புறம் எதுக்கு அண்ணா அத பத்தி திரும்ப பேச வந்து இருக்கீங்க “

“உனக்கு அவர புடிச்சிருக்கு என்று எனக்கு  தெரியும் “..

“புடிச்சு இருந்துச்சு “இப்போ இல்லை

“உன் மனச தொட்டு சொல்லு ,புடிச்சி இருந்துச்சா ,புடிச்சிருக்கா”

புடிச்சி இருக்கு ,  நீங்க என்ன சொல்ல வரீங்க அண்ணா .

“இது இனிமே ஒத்து வராது ,அது உங்களுக்கும் தெரியும்”.

“அப்புறம் இதை பற்றி  மேற்கொண்டு பேச என்ன இருக்கு.”

“இது ஒத்து வராது என்று நீயாவே முடிவு பண்ணிட்டியா ?”

“அவரை உன்னோட மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டியா ?”

“உன்னால தூக்கி எறிய முடியுமா ?”

“அதுவும் தினமும் பார்த்துட்டு இருக்கிற அவரை” என்று பல கேள்விகளை அடுக்கடுக்காக அவளது முன்பு வைத்தான் .

உதயாவையே பார்த்துக் கொண்டு நின்றாள் தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *