வெற்றி எளிதல்ல
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
காற்றுக்கு ஒலி சுமையானால்
இசை கிடைப்பதில்லை
கல்லுக்கு உளி சுமையானால்
சிற்பம் கிடைப்பதில்லை
மண்ணுக்கு ஏர் சுமையானால்
விளைச்சல் கிடைப்பதில்லை
மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்
நீர்துளி கிடைப்பதில்லை
தாளுக்கு மை சுமையானால்
கவிகள் பிறப்பதில்லை
தாய்க்கு சேய் சுமையானால்
தாய்மைக்கு அழகு இல்லை
வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்
வெற்றி கிடைப்பதில்லை.
— பிரவீணா தங்கராஜ் .
*செப் 2008-இல் “மங்கையர் மலரில் ” பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .
என்னுடைய கல்லூரி மலரிலும் பிரசுரிக்கப்பட்டது. மேலும், ஊர்த்திருவிழாவில் கும்பாபிஷேக மலர் ஒன்றிலும் பிரசுரமானது.
Super👏