🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Completed Novels Archives - Page 25 of 78 - Praveena Thangaraj Novels
புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.

Category: Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

  • தித்திக்கும் நினைவுகள்-7

    அத்தியாயம் -7

    அடுத்த நாள் காலை போன் ரிங் அடிக்க எடுத்தாள் சாதனா. எதிர்புறம் அசோக் அழைத்து இருந்தான்.

    ”சொல்லு அசோக்”

    ”ஏய் கார்த்திக் டென் ஓ கிளாக் நேரம் கொடுத்து இருக்கார் ரெடி ஆகிடு. அப்பறமா அவரும் அதே ஹோட்டலில் தான் இருக்கார் சோ நீ அங்கே இரு” என்றான் அசோக்

    ” ஓகே ஓகே வை நான் ரெடி ஆகறேன் வை” என் துண்டித்து மணியை பார்க்க அது ஏழு காட்டியது. ஓஹ் காட் கௌதம் எழுந்து இருப்பாரோ சே முதலில் குளித்து கிளம்பி முன்ன நிற்கலாம் என்று ரெடி ஆனாள்.

    எந்த டிரஸ் ஐயோ இப்ப பார்த்து ரெட் சுடி எடுத்துக்கொண்டு வரலை கௌதமிற்கு ரெட் கலர் ரொம்ப பிடிக்குமே என்று வருந்தி தனது ப்ளூ ஜீன்ஸ் ஒயிட் குர்தி எடுத்து அணிந்தாள். வேகமாக ஒரு போனி டெய்ல் மாட்டி அதற்கேற்றவாறு சின்னதாக முத்து செட் கம்மல் ஒயிட் வாட்ச் முத்து பிரேஸ்லேட் அணிந்து ஐலைனர்-இல் பொட்டு வைத்து கதவை திறக்க ,

    ப்ளூ ஜீன் பிஸ்தா க்ரீன் ஷர்ட்டின் கை பட்டனை மாட்டியவாறு, கேசம் அலைபாய நின்றிருந்தவனை தெவிட்டாமல் பார்த்து கொண்டு இருக்க, ”டீ டிபன் ஆர்டர் தரவா இல்லை கீழே போய் சாப்பிடலாமா?” என்ற கேள்வியில் சுதாரித்தவள் ”கீழேயே போயிடலாம்” என்றாள்.

    கீழே இருந்த உணவகத்தில் டீ வந்தவுடன் இரண்டு செட் நெய் தோசை ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த நாளிதழைப் புரட்டினான்.

    டீ பருகியவாறு கால் மேல் கால் போட்டு அவன் நாளிதழை படிக்க, அவனை பார்த்தவாறே டீ சுவைத் செய்தாள்.

    ”ஸ்… ஆ…” என்றே நாக்கு சுட்டவுடன் தான் சூடாக இருக்கும் டீயை கண்டு அவனையும் பார்த்தாள். அவனோ நாளிதழை கண்ணை பதித்தே மற்றொரு கையில் இருந்த டீயை மேஜையில் வைத்து விட்டு, ஜக்கில் இருந்த நீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அவளிடம் பார்வை பதிக்காமலே நீட்டினான்.

    அவன் தன்னை பார்க்காமல் நாளிதழ் கண் பதித்த போதிலும் தன்னை கவனிக்க செய்கின்றான் என அறிந்து அந்நீரை வாங்கி குடித்தாள். இவர் எதுக்காக வந்து இருக்கார் என்றே கேட்கவில்லை கேட்போமா ? என்று யோசிக்க உணவு வர பேசாமல் உண்டனர்.

    சாதனா மொபைல் அடிக்க எடுத்தவள் ”அசோக்”

    ”நான் ஹோட்டலில் வந்துட்டு இருக்கேன் நீ எங்க இருக்க?”

    ”சாப்பிடறேன் டா கீழே தான் இருக்கேன்”

    ”ஓகே ஓகே மெயின் எண்ட்ரன்ஸ்ல வெயிட் பண்ணு பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்”

    ”சரி வா” என கட் செய்து கௌதமிடம் ”அசோக் வந்துட்டான்…அந்த கார்த்திக் இங்க தான் தங்கி இருக்கான் சோ வேலை ஈஸி”

    ”சரி நீ வேண்டுமென்றால் கிளம்பு லக்கேஜ் அப்பறம் எடுத்துக்கோ” என்றான்.

    ”பில் வரலையே”

    ”நான் கொடுத்துப்பேன் கிளம்பு” என்றான். அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போனாள்.

    மெயின் கேட் வந்து நின்ற பின் அசோக் வர சற்று தாமதம் ஆனதும் சே இந்த அசோக் வேற லேட் பண்றான். பேசாம கௌதம் மாமாவோட இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருப்பேன்.

    சற்று நேரம் எடுத்து வந்தான் அஷோக. ‘சாரி சாதனா பைக் பெட்ரோல் போட்டு வந்தேன். போகலாமா ?” என்று லிப்ட்டில் ஏறினான்.

    லிப்ட் நின்றதும் நேற்றைய இடம் போலவே வந்து விட்டோமோ என்றே எண்ணி கொண்டு வந்தாள். கௌதம் அருகே இருந்ததால் சரியாக நம்பர் பார்க்காத சாதனா எந்த அறை என்றே தெரியாமல் நேற்றைய அறைக்கே வந்து சேர்ந்தாள்.

    ‘இந்த இடம் நேற்று தங்கிய இடம் மாதிரியே இருக்கு. இங்க எல்லா அறையும் ஒரே மாதிரி இருக்குமோ? என்றே யோசிக்க கௌதம் புன்னகையோடு அவள் முன் நின்றான்.

    ”சாரி லேட் பண்ணிட்டேனா?” என்றே கேட்க

    ”இல்லை சார் ஷார்ப் டென். ஐ அம் அசோக் அண்ட் திஸ் இஸ் சாதனா” என்றே அறிமுகப்படுத்த அவளோ இமைக்க மறந்து திகைத்து இருந்தாள்.

    ”ஹாய் ஐ அம் கௌதம் கார்த்திக்” என்று கைகளை அசோக்கிற்கு தந்து அவளிடமும் நீட்டினான்.

    ”சாதனா என்ன யோசிக்கற கையை கொடு” என்றே மெல்லிய குரலில் அசோக் சொல்ல விதிர்த்து கையை கொடுத்தாள்.

    ”உட்காருங்க” என்று இருக்கைகளை காட்டினான் கௌதம்.

    ”சார் நீங்க யங் ஏஜ் என்று தெரியும் ஆனா இவ்ளோ யங் அண்ட் ஸ்மார்ட் என்று தெரியாது”

    ”தேங்க்ஸ்…. அசோக் ப்ளீஸ் கால் மீ கௌதம் ஆர் கார்த்திக். சார் வேண்டாம்”

    ”ஓகே முதலில் இன்டெர்வியூ முடிச்சிடட்டுமா?”

    ”ஓஹ் எஸ்”

    ”சாதனா கேள்வி ஆரம்பி”

    ”அசோக்… நீயே கேட்டுடறியா? ப்ளீஸ்” என்றாள். அவளின் தடுமாற்றம் கண்டு,

    ”ஏய் சாதனா என்ன இப்படி சொதப்பற?” என்று அசோக் திட்டினான்.

    ”அசோக் நோ ப்ரப்ளம் அவங்க ஏதோ குழப்பத்துல இருக்காங்க நீங்களே கேளுங்க”

    ”சார் கொஸ்டின் எல்லாம்..” என்ற போதே கௌதம் ”நேம்” என்றதும் “சாரி கார்த்திக் கேள்வி எப்பவும் இவ தான் கேட்ப்பா நான் ஜஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ் தான். ஏன் இன்னிக்கு என்று தெரியலை”

    ”நல்லா சொதப்பறோம்” என்று அசோக் வருந்தினான்,

    ”ஏய் கூல் மேன். இது என்ன அரசியல் மீட்டிங்கா யங்ஸ்டர் தானே நாமெல்லாம்… உங்களுக்கு என்ன என் ஆர்டிகள் தானே சொல்றேன் எழுதிக்கோங்க” என்றான்.

    மனதில் கௌதம் இவள் என்ன எப்படி முடிவு செய்து இருக்கா என்றே தெரிலையே… என்ன பார்த்து திகைச்சு இருக்கா… அப்போ அந்த பொண்ணு சொன்னது போல ஒழுக்கம் கெட்டவன் என்றே முடிவு செய்துவிட்டாளா? என்று வருந்தி பேச ஆரம்பித்தான்.

    ”நான் கௌதம் கார்த்திக். B.E இன்ஜீனியரிங் முடிச்சு இருக்கேன். சென்னையில் ஒர்க் பண்றேன். எனக்கு கிராமம் ரொம்பவே பிடிக்கும். பிகாஸ் நான் பதினான்கு வயது வரை இருந்தது எல்லாம் செங்கல்பட்டு மதுராந்தகம் தாண்டி இருக்கற ஒரு கிராமத்தில தான்.

    ”அங்க வயல் தோட்டம் கிணறு ஊஞ்சல் அரசமரம்” என்று சொல்லி அவளை பார்த்தான்.

    ”அரசமரம் இதெல்லாம் பார்த்து ரசிச்சு வாழ்ந்தவன். எனக்கு இப்பவும் அரசமரம் என்றால் ஒரு ஈர்ப்பு” சாதனா அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

    என்னோட பதினைந்து வயது முதல் சென்னை வாசம். அதுக்கு பிறகு கிராமமே போகலை. படிச்சு முடிச்சு இன்ஜினீயரா ஒர்க் பார்த்து இருந்தேன்.

    அப்ப தான் என் ஆச்சி அவங்க நிலம் காஞ்சிப்புரத்தில் இங்க சும்மா தரிசா இருக்கறதை  சொல்லி சொல்லி புலம்பிகிட்டே இருப்பாங்க.

    அப்போ யோசிச்சது தான் ஏன் நாமளே ஒரு விவசாய குடும்பத்தை அங்கேயே இருக்க வச்சி அவங்களை ஒர்க் பண்ண சொல்லி சம்பளம் கொடுத்தா என்ன என்று?

    சோ அதையே நடை முறை படுத்தினேன். என் நேரம் எனக்கு அப்படி இரண்டு குடும்பம் கிடைச்சது அவங்களுக்கு தேவையான வசதி பண்ணி கொடுத்து அவங்களை பராமரிக்க இருக்க வைத்தேன்.

    ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. எல்லாமே இயற்கை உரம் போட்டு வளர்த்ததில் செழுமையா வளர ஆரம்பிச்சது.

    இங்க தெரிஞ்சவங்ககிட்ட முதலில் சந்தையில் கொடுத்தேன் பிறகு அவங்களே ரெகுலரா வாங்கிட்டாங்க.

    என் நண்பர் மூலமாக உங்களுக்கு தெரிஞ்சு இப்ப பேட்டி எடுக்கறீங்க. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. பட் நீங்க எங்ஸ்டர் ஒரு மோட்டிவ் என்று சொல்லியதால் இப்போ உங்க முன்னால்…” என்று முடித்தான்.

    ”சார் செம… சாரி கார்த்திக் சூப்பர் நாங்களே கேள்வி கேட்டாலும் இவ்ளோ தெளிவா கேட்டு இருப்போமோ என்று டவுட் நீங்க கோர்வையா சொல்லிட்டீங்க”

    ”நீ சொல்லலாம் நீங்க எதுக்கு?”

    ”எனக்கு கூட ஆசை ஆனா எனக்கு நிலம் எல்லாம் இல்லை என்ன பண்ண” என்றே சிரித்தவன் சாதனா அப்பொழுதும் அமைதியாக இருப்பதை அறிந்து கௌதம் ஜூஸ் என்று நீட்டினான்.

    ”நைஸ் டாக் அண்ட் நைஸ் டூ மீட் யூ கார்த்திக்”

    ”எஸ் நைஸ் மீட்டிங்…” என்றான் அவளை பார்த்து

    ”கார்த்திக் ஸ்டில்ஸ் எடுத்துக்கவா”

    ”பிளஷ்சர்…” என்று சொல்ல அஷோக் கௌதமை புகைப்படம் எடுத்து கொண்டான்.

    ”ஓகே கார்த்திக் என் நம்பர் உங்ககிட்ட இருக்கு சேவ் பண்ணிக்குங்க நானும் சேவ் பண்ணிக்கிட்டேன் எனக்கு ஒரு பிரென்ட் கிடைச்ச பீல் இருக்கு”

    ”எஸ் எனக்கும்” என்று சொன்னான்.,

    ”ஓகே நானும் என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் அப்படியே ஒரு டூர் கிளம்பறோம் சென்னையில் மீட் பண்ணலாம். உங்க ஆர்டிகளோட இன்னும் சில நாள்ல வரும் இன்றைய விவசாயத்தில் இளைஞரின் பங்கு’ வரும்” என்று கை குலுக்கி முடித்து ”ஏய் சாதனா நீ எப்படி?” என்றான்.

    ”வந்த எனக்கு போக தெரியும் போ டா” என்றாள்.

    ”அதானே நீ தான் விஜய சாந்தியாச்சே ஊருக்கு போயிட்டு கால் பண்ணு… பை சாதனா பை கார்த்திக்” என்று கிளம்பினான். கூடவே சாதனாவும் கிளம்பினாள். அவனோடு லிப்ட் வரை வந்தவள் மாலதிக்கு கால் செய்ததாள்.

    அது மணி அடித்துக் கொண்டே இருக்க அவளை தவிர அங்கே யாருமில்லை என்று மீண்டும் போன் செய்தாள்.

    ”ஹாய் சாதனா என்ன விஷயம்” என்ற அடுத்த நொடி

    ”எருமை மாடு, பண்ணி, குரங்கு, கௌதம் மாமா உன்னை பார்த்து வழிஞ்சாரா டி?” என்று திட்டி தீர்த்தாள்

    ”ஏய் யாரு டி கௌதம்” என்றாள் குழப்பமாய்.

    ”அதான் போன வாரம் இன்டெர்வியூ எடுக்க போறதா சொல்லி இருந்தியே கார்த்திக் கௌதம் கார்த்திக்”

    ”ஆமா. அவன் வழிஞ்சான்”

    ”வாயை மூடு வந்தேன் கொலையே பண்ணிடுவேன். கௌதம் கார்த்திக் என் மாமா. என் அத்தை பையன். அவர் யாரையும் அப்படி பார்க்க மாட்டர். உண்மைய சொல்லு”

    ”ஏய் ஏய்…. உன் அத்தை பையனா? சாரி டி. நிஜத்தை சொன்னா என்னை திட்ட கூடாது”

    ”சொல்லு”

    ”ஆக்சுவலா நான் தான் அவன்கிட்ட வழிஞ்சேன். அவன் என்னை கண்டுக்கவே இல்லை. நீ போறதா சொன்னதும் என்னை பற்றி உங்கிட்ட ஏதாவது சொல்வானோ என்று நான் முந்திகிட்டேன்”

    ”இப்படி யார்கிட்டயாவது சொல்லி வச்சிருக்கியா எருமை?”

    ”இல்லை. நீ தான் போக போறதா தெரிந்தது அதான் உங்கிட்ட மட்டும்”

    ”போனை வை உன்னை சென்னைக்கு வந்து கவனிச்சுக்கறேன்” என்று பொ ந்து தள்ளினாள்.

    ”ஏய் ஏய் அதான் சாரி கேட்டுட்டேன்ல”

    ”வை டி குரங்கு” என்று போனை கட் செய்து திரும்ப கௌதம் நின்றிருந்தான். போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் ”ச..சாரி” என்றாள்.

    ”தேங்க்ஸ் சொல்லிடு. உன் பிரென்ட் அவ பேரு தெரியலை அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடு” என்றான் நடந்தவாறு,

    ”எ… எதுக்கு?”

    ”ஹ்ம் நீ உன் அத்தை பையன் கௌதம் என்று சொன்னது அவளால் தானே”

    ”புரியலை”

    ”நீ என்னை பார்த்த பிறகு கௌதம் மாமா என்று சொல்லியது இப்ப தான் இதுவரை நீ என்னை மொட்டையா தான் பேசிட்டு இருந்த” என்றதும் அவளுக்கு புரிந்தது.

    ”மன்னிச்சுடுங்க கௌதம் மா.. மாமா எனக்கு உங்களை பார்த்ததும் மீண்டும் அப்படி கூப்பிட தயக்கமா இருந்துச்சு. ரொம்ப நாள் ஆச்சா”

    ”ரொம்ப வருஷம்” என்று திருத்தினான்.

    ”எஸ் ரொம்ப வருஷம் கழிச்சு. அதுவும் இல்லாம நான் காரில் செய்த அலப்பறை………., இப்பவும் உங்களை கார்த்திக் என்ற பெயரில் மறந்து திட்டிட்டு இருந்தேன்……” என்று அசடு வழிந்தாள்.

    ”நீ தான் உன் கௌதம் மாமா அப்படி இல்லை என்று சொல்லிட்டியே. சொன்னது மட்டுமா என் கூட தங்கி அதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கியே” என்றான் கர்வமாய்.

    ”நீங்க நிஜமாவே கண்ணியமானவர் என்று எனக்கு தெரியும். அதனால் தான்”

    ”அந்த எண்ணத்திற்கும் நம்பிக்கைக்கும் தான் தேங்க்ஸ். உன் பிரென்ட்டை லெப்ட் ரைட் வாங்கிட்ட போல” என்றான் மென்னகையோடு,

    ”ஹலோ ஒட்டு கேட்டீங்களா?”

    ”சே சே நீ திரும்பி இருந்தப்ப உன்னை கூப்பிட்டேன் நீ கவனிக்கலை. சரி அருகே வந்து சொல்லலாம் என்று வந்தேன் நீ உன் தோழியை தாளிச்சுட்ட”

    ”எப்போ கூப்பிட்டீங்க?”

    ”நீ போனை காதில் வைத்து இங்க அங்க நடந்துகிட்டு இருந்தப்ப சனா சனா என்று ஏழெட்டு தடவை கூப்பிட்டேன்”

    ”நான் சாதனா”

    ”ஹ்ம் தெரியும் ஆனா எனக்கு சனா தானே?” என புருவம் உயர்த்தி முறுவலுடன் கேட்க தானாக தலையை தாழ்த்தி வெட்கம் கொண்டாள்.

    இந்த வெட்கம் தாண்டி நீ என் சனா என்று சொல்லுது. சொல்ல வைக்குது. பதினாலு வயதில் இதே வெட்கம் தான் உன்னிடம் கண்டேன் என மனதில் பேசினான்.

    ”நீங்க தான் கார்த்திக் என்று ஏன் சொல்லலை?”

    ”நீ திட்டறது என்னை தான் என்று எப்படி சொல்றது. உனக்கு என் முழு பெயர் மறந்து இருக்கும் என்று எனக்கு தெரியாது”

    ”எனக்கு கௌதம் மாமா என்று கூப்பிட்டு தான் மனசுல பதிஞ்சு இருக்கு”

    ”நீ கூப்பிட்டதே கிடையாதே?”

    ”அது அப்போ சின்ன வயசுல. இப்போ எப்படி கூப்பிடறது என்று கொஞ்சம் நெர்வ்ஸ்”

    ”ஓகே உனக்கு எப்படி கூப்பிடனும் என்று தோணுதோ அப்படியே பேசு கூப்பிடு”

    ”தேங்க்ஸ்” என்றாள் முறுவலுடன்.

    ”தென் வாட் நெக்ஸ்ட்?”

    ”ரிடர்ன் டூ சென்னை பஸ்ல வேற ப்ரோக்ராம் இல்லை”

    ”ஓகே உன் திங்க்ஸ் எடுத்துக்கோ”

    ”நீங்க?”

    ”எனக்கு நாளை வரை வேலை இருக்கு. முடிஞ்சதும் கிளம்புவேன். நீ கிளம்புமுன் சொல்லு நானே பஸ்ல ஏற்றி விடறேன்”

    ”இப்ப கிளம்பறேன் எனக்கு அங்க வேலை இருக்கு”என்றப்பின் பச் கூடவோரு நாள் இருந்திருக்கலாம் என நினைத்தாள்.

    அவளை கூட வந்து வழி அனுப்பி வைத்தான். இருவருக்குள்ளும் மழை சாரலாய் நினைவுகள் தெளித்தது.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ்.

  • தித்திக்கும் நினைவுகள்-14

    அத்தியாயம்–14

    ”சாதனா அதான் தாமரை அத்தையோட பொண்ணு” என்று கௌதம் விளக்கினான்.

    ”அவ எப்படி உங்கிட்ட சொன்னா அவகூட உனக்கு எப்படி பழக்கம்” என்றதும் வேலையை நிறுத்தியவன் மெல்ல மெல்ல மாட்டினேன் என்ற படி வேதாவை பார்த்தான்.

    ”சொல்லுடா எப்படி தெரியும்” என்றாள் அம்முதியவள்

    ”ஒரு பேட்டி என்னயுடையது ஒரு புக்ல வந்ததா காட்டினேன்ல அதை எடுத்ததே அவ தான்.

      அவ அங்க ஒர்க் பண்றதே எனக்கு அப்போ தான் தெரியும் என்னை பார்த்து ஷாக்காகி பேய் முழி முழிச்சா நானா பேட்டி முடிச்சுட்டு பேசினேன். அவ தயங்கி பேசினா அப்போ பழக்கம்” அப்பாடி எப்படியெல்லாம் பதில் சொல்றது பட் இது பொய் இல்லையே என்றும் தோன்றிட, வேதாவிற்கு தான் சப் என்று ஆகிவிட்டது.

    ஆக பையன் நிஜமாவே சும்மா தான் பார்த்திருப்பானா என்று வேதா நொடித்து கொள்ள மீண்டும் கேள்வி முன் வைத்தாள்.

    ”நீயும் அந்த பொண்ணும் ஒரே சிவப்பு நிற ஆடையை போட்டு வந்திங்க”

    ‘வேதா அதுக்கு பேரு தான் கோ-இன்சிடென்ட்…”

    ”அதுசரி அவளுக்கு ஏன் நீ புடவை எடுத்து கொடுத்த? அதுவும் என்கிட்ட இந்த நிமிடம் வரை சொல்லவே இல்லை” ஆக வேதாவுக்கு டவுட் ஆகிடுச்சே… சமாளி கௌதம்.

    ”வேதா அவ நம்ம ஜோதிக்கு சேலை தேர்ந்து எடுத்து கொடுத்தா. அதுக்கு சும்மா தேங்க்ஸ் பண்ண தான் வாங்கி கொடுத்தேன். என்ன நீ கேள்வி மேல கேள்வி கேட்கற?” என்று முறுக்கினான்.

    ”ஒன்னுமில்லை அதான் சொலிட்டேயே ஒன்னுமில்லை நானும் ஏதாச்சும் இருக்கும் என்று கேட்டா இந்த பயல் ஒன்றும் சொலிக்கறாப்பல இல்லை… இவன் அப்பன் இவன் வயசுல இரண்டு கல்யாணத்தை பண்ணிகிட்டான் மூனு பிள்ளையை பெத்தான். இவன் இன்னும் வேலை விவசாயம் கம்ப்யூட்டர்-பெட்டி என்று இருக்கான்.

    கண்ணுக்கு லட்சணமா ஒருத்தி இருக்காளே பார்க்கலாம் என்று இருக்கானா? கூட வேலை பார்க்குற பொண்ணுங்க இருந்து கூட்டாளி வரைக்கும் எல்லாம் ப்ரெண்ட்ஸ் அப்படினு சொல்லிட்டு இருக்கான்.

      சரி அந்த சிவப்பு கலர் சேலை கட்டி இருக்கறவளை கொஞ்சம் பார்த்து பார்த்து நழுவரனே என்று பார்த்தா அவளுக்கு சேலை வாங்கி கொடுத்தது தேங்க்ஸ் பண்றதுக்காம்.. இவனுக்கு ஒரு கல்யாணம் செய்து கொள்ளு பேரனை பார்த்துட்டு கண்ணு மூடலாம் என்று பார்த்தா விட மாற்றானே…. என் காலத்துக்கு பிறகு யார் இருப்பா…” என்று புலம்பி கொண்டே போனார் வேதா.

    அவனோ மனதினுள் ‘வேதா கவலைப்படாதே அவ தான் உன் பேத்தி‘ என்று முறுவலித்தான்.

    ஊரில் எல்லோருக்கும் விஷயம் தெரிந்து பாதி பேர் சந்தோஷம் அடைய மீதி பாதி பேரோ ஜாதி விட்டு ஜாதி திருமணத்தை அவலாக மென்றனர். அதுவும் இன்று சின்னதாக வரவேற்பு வைக்கவும் செய்தார்கள்.

    வளர்மதியின் வீட்டில் கூட நேசமணி குடும்பத்தில் பாதி உறவுகள் வர மறுத்து விட்டார்கள். கொஞ்சம் பேர் மட்டும் மகள் சந்தோஷம் முக்கியம் நெசமணி முடிவு சரியே என்று பேசி கொண்டார்கள்.

    அதுவும் வளர்மதியை சியாமளவும் ஜோதியும் கண்ணும் கருத்துமாக கவனிக்க கண்டு எல்லோரும் பாராட்டவே செய்தார்கள். சனா சேலையில் இருந்தாலும் கௌதம் இயல்பாகவே ஆடை அணிந்தான். ஆனாலும் கௌதம் பார்க்க ராஜ களையாக இருந்தான்.

    ஒரு சமயத்தில் மாடியில் இருந்து படிக்கட்டில் வேகமா இறங்க கௌதம் ஏற மோதி கொண்டனர். சனா விழ போக பிடித்தவன் அவளது வெற்றிடையில் அவன் கரம் பதிய துணுக்குற்று வேகமாக அவளை நிற்க வைத்து கையை விலகி கொண்டான்.

    ‘ஓஹ் காட் கௌதம் நீ தொட்ட இடம் இன்னும் குருகுருகுது… என்ன டா பண்ணி தொலைச்ச…? உன்னை பார்த்ததிலருந்து நான் நானவே இல்லை… எல்லோரையும் சட்டுனு பேசி வாயடைத்து விடுவேன் ஆனா உன்னை பார்த்தா எனக்கு பேசவே திக்குது… அதுலயும் இப்படி இருந்தா எப்படி டா லவ் சொல்லுவேன்…‘ என்று அவள் நினைக்க

    ‘ஐயோ சனா செம ஃபீலிங்க்… தனியா உன்னை சந்திக்க முடிஞ்சா லவ் சொல்லிடுவேன் பட் என்னை சுற்றி நிறைய பேர் வந்துட்டே இருக்காங்க… இதுல சாரல் மாதிரி உன் இடை பற்றியது… என் லவ் நான் சொல்லாமலே உனக்கு தெரியாதா என்ன இருந்தும் நேரிடைய சொல்லணும் எல்லோரும் எப்போ போவாங்க என்று இருக்கு என்று அவனும் எண்ணினான்.

    மேடையில் அதிகம் நிற்காமல் இருந்தான். குடும்ப சகிதம் ஐந்து புகைப்படத்திற்கு மட்டுமே தலை கட்டினான். பின்னர் வந்தவர்கள் கவனிக்க நேரம் போனது. அப்படி இருந்தும் சனாவை அவன் கண்கள் ரசிக்கவே செய்தது. அதை இன்னும் ஓர் ஜோடி கண்கள் குரோதத்துடன் கண்டன.

    புதிதாக மாற்றப்பட்ட வீட்டின் அமைப்புகளில் வண்ண நிறம் கொண்ட வீடாக மாற்றி இன்னோரு அறையும் கட்டி இருப்பதை கண்டு சனா கேட்க, கௌதம் கட்ட சொன்னான் கட்டியதாக பணியாளர்கள் சொல்லிட அது இப்பொழுது வளர்-சிவா அறையாக மாறியது.

    சியாமளா வேதவள்ளி சனா ஜோதி சிவா வளர்மதி வளர்மதியின் சொந்தம் என வீடே விழா கோலமாக காட்சி அளித்தது.

    சனா கௌதமிற்கு டீ உணவு எடுத்து செல்வதை கண்டு தாமரை அவளை தடுத்து அவள் தங்கை ஜோதிய அனுப்பிவிட்டாள்.

    அதற்கு அடுத்த நாளே தாமரை சாதனாவை அழைத்து சென்னை வந்துசேர்ந்தார். காந்தன் கூட இருந்து வந்து இருக்கலாம் என்றதற்கு சாதனா வேலை பாதிக்கும் என்றுரைக்க மவுனமானார்.

    சாதனாவை கௌதம் கண்களில் இருந்து படாமல் பார்த்து கொண்டால் போதும் என்று நினைக்க தாமரைக்கு தெரியாது கௌதம்மை விட சாதனா தான் கௌதம்மை பன்மடங்காக விரும்புகிறாளென்று.

    நாட்கள் உருண்டோட அன்று ரவீந்திரன் நினைவு நாளும் வந்தது. அமைதியாக வழிபட்டு மவுனத்துடன் அவரவர் திரும்பினார்கள். சியாமளா மட்டும் அதிகம் கண்ணீர் கண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர். இரு தினம் கழிய சியாமளா தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார்.

    தாமரையும் இதற்கு மேல் இனி அண்ணி முறையோடு பட்டும் படாமலும் இருக்க முனைந்தாள்.

    அன்று சாதனாவின் உடைகளை மடித்து வைத்து மூடும் சமயம் அவளின் உடைகளின் அடியில் ஒரு புத்தகம் இருப்பதை கண்டு அதனை எடுக்க அது அவள் பணிபுரியும் இதழின் புத்தகம் என்று தெரிய வந்தது.

    ”படிச்சிட்டு அப்படியே வச்சிட்டா போல என்ன பொண்ணு துணிக்கிடையில் வச்சி இருக்கா?” என்று டேபிளில் வைக்க அது அருகே இருந்த ஜன்னல் வழியே காற்றின் உதவியோடு புத்தகம் திறந்தது.

    சாதனா கெட்ட நேரம் அது கௌதம் இருக்கும் பக்கத்தை எடுத்து காட்டியது.

    முதலில் யாரோ ஒரு அழகிய ஆடவன் என்று நினைத்து இருந்த தாமரைக்கு அது கௌதம் சாயல் தெரிய நன்றாக புரட்டி பார்த்தாள். சந்தேகமே இல்லை கௌதமே தான் அப்படி என்றால் என்ற கோவம் பற்களை நறநறவென கடித்து கையில் இருந்த புத்தகத்தை சுக்குநூறாக கிழித்து எறிந்தாள்.

    அதே நேரம் சாதனா வர என்ன குப்பை இது என்றே உற்று நோக்க அது கௌதம் இருக்கும் புத்தகம் என்றும் அது தன் தாய் பார்த்துவிட்டதாக அறிந்து கொண்டாள்.

    உயிரே உருவியது போல பதறி அதனை கையால் எடுத்து துடித்தாள்.

    ”புத்தகத்தை தானடி கிழிச்சேன் அதுக்கு என்ன உயிர் போன மாதிரி பதறற…”

    ”நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுல என் உயிர் இருக்கு” என்றே அழுத்தமாக சொன்னாள் சனா.

    ”நீ செய்த காரியத்துக்கு நான் கோவப்படணும் நீ என்னனா இப்படி கோவப்படற” என்றதும்

    ”ஆமா உனக்கு இப்போ என்ன? தெரியுதுல நான் கௌதம் மாமாவை விரும்பறேன்” என்று அன்னையிடம் மல்லுக்கு நின்றாள்.

    ”அடிக்கழுதை யாரடி மாமா சிவாவை ஒரு முறையாவது அப்படி கூப்பிட்டு இருப்பியா? அப்படி ஆசையா கூப்பிட்டு இருந்தா அவன் வேற ஒருத்தியை விரும்பி இருப்பானா? இப்ப எவனோ ஒருத்தன் மாமாவா” என்றார் தாமரை.

    ”இங்க பாரு உனக்கு கௌதம் மாமாவை பிடிக்காது எனக்கு கௌதம் மாமா மட்டும் தான் பிடிக்கும் இது எனக்கு முன்னவே தெரியும்” என்ற போது தாமரை அவளின் கன்னத்தை பதம் பார்த்தார்.

    ”என்னை அடி கொல்லு உனக்கு உரிமை இருக்கு. என்னை பெத்தவ. ஆனா கௌதம் மாமாவை பற்றி எதையும் பேசாதே நான் மனுசியா இருக்க மாட்டேன்” என்று கண்ணீர் வழிந்தாலும் கூறி முடித்தாள்.

    ”ஓஹோ உன்னை அந்த அளவு மயக்கி வச்சி இருக்கானா? சியாமளா தான் அவன் அப்பா அப்படி மயக்கி இருந்தார் என்று பார்த்தா இப்போ அவர் பிள்ளையுமா?” என்று நொடித்தார்.

    ”அம்மா நீ கௌதம்மை இழிவா பேச பேச எனக்கு அவர் மேல இருக்கற காதல் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுவரை நான் கௌதம்மை விரும்பறது அவருக்கே தெரியாது நான் சொல்லியது இல்லை.

      பெற்றவ என்று உனக்கு மரியாதை இருக்கு அதுக்காக உன் இஷ்டத்துக்கு பேசாதே. நான் என் வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி தான் வாழ்வேன். கௌதம் மாமா ஒன்றும் என்னை மயக்கலை… நான் தான் அவரை விரும்பறேன்”

    ”என்னடி என்கிட்டயே இப்படி பேசறே. அவன் அப்பா ஒரே நேரத்தில் இரெண்டு குடும்பத்தையும் நடத்தி இருக்கார். நீயும் அது போல வாழணுமா? அப்படி ஒரு அசிங்கம் உனக்கு தேவையா?” என்று அன்னையாய் கேட்டார். தாமரைக்கு கௌதமை அறவே பிடிக்கவில்லை.

    ”எனக்கு கௌதம் இந்த நிமிஷம்  தாலி எடுத்து கட்டிக்கிட்டு அவரோட வாழ்ந்தாலும் சரி வச்சிக்கிட்டு வாழ்ந்தாலும் சரி நான் கௌதமிற்கு தான் சொந்தம் போதுமா கௌதமை அசிங்கமா பேசின…” என்று வார்த்தையின் வீரியம் தெரியாமலே பேசினாள்.

    ”அடிப்பாவி என்ன வார்த்தை பேசற… இதுக்கு தான் படிக்கச் வச்சி வேலைக்கு அனுப்பியதா?”

    ” என்னை பேச வச்சிட்ட… உன்னை யாரு போட்டோ கிழிக்க சொன்னது” என்று கிழிந்த பேப்பரை எடுத்து பொறுக்கினாள். அழுகையோடு எடுத்தாலும் அது ஒட்டாமல் போக சாதனா பேப்பரை போல நொறுங்கி போனாள்.

    சாதனாவிற்கு அந்த புகைப்படம் கிழித்ததை எண்ணி கோவத்தில் என்ன பேசுகின்றோம் ஏது பேசுகின்றோம் என்றெல்லாம் அறியாமல் பேசினாள். நல்ல வேளை கௌதம் சட்டையினை பார்க்கவில்லை. சாதனா ஆண்களை போல சட்டையினை அணிவதால் அது கௌதம் சட்டை என்று யோசிக்கவில்லை என்று சனா நினைத்தாள்.

    தனது அன்னைக்கு தெரிந்தால் அதை தீவைத்து கொளுத்தினாலும் கொளுத்துவார்கள் . அவனின் வாசம் அவளின் காதலை அதிகரிக்க செய்தது.

    தாமரைக்கு இதற்கு மேல் சாதனாவிடம் சண்டை போட திரணியில்லை … இதற்கே இப்படி பேசுகின்றாள் என்று அதிர்ந்து போனார்.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ்.

  • தித்திக்கும் நினைவுகள்-12

    அத்தியாயம் –12

    நெற்றி வேர்வை வழிய கர்சீப்பை கொண்டு நொடிக்கு ஒரு முறை துடைத்தபடி ”இந்த சாதனா இப்படி நேரத்தை கடத்துறாளே… எனக்கு டென்ஷனா இருக்கு” சிவா கூறி முடித்தான்.

    ”சிவா எனக்கு பயமா இருக்கு. அப்பா அம்மா வீட்ல நான் இன்னும் வரலை என்று தேடுவாங்க” என்று விசும்பி ”சிவா பேசாம வீட்டுக்கு போய்டலாமா?” என்றாள் வளர்மதி.

    ”சரி போ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ” என்று எரிந்து விழந்தான்

    ”இப்ப ஏன் கோவப்படற?” என்று வளர் அழுவும் நிலையில் கேட்டாள்.

    ”பின்ன என்ன வளர் நானே பயத்துல தடுமாறறேன். நீ வேற இப்படி பேசற… இந்த சாதனா வேற இன்னும் வரலை. திக்கு திக்கு என்று இருக்கு”

    ”என்னடா திட்டி முடிச்சிட்டியா” என்ற குரல் பின்னால் இருந்து வர

    ”போடி… பயந்தே போயிட்டேன்” என்றவன் அவள் அண்ணியாக வர போவதை அறியாது தோழியாக டி போட்டே விளித்தான்.

    ”சாதனா நீங்க வருவத்துக்குள் செம டென்ஷன் சிவா வேற திட்டுறான்”

    ”ஓகே அவன் கிடக்குறான். நீங்க இந்த டிரஸ் எல்லாம் பக்கத்துல இருக்கற பியூட்டி பார்லர்ல போய் மாத்திக்கிட்டு அலங்காரம் பண்ணிட்டு வாங்க” என்று தனது தோழி மாலதியிடம் வளர்மதியை அனுப்பி வைத்தாள்.

    ”டேய் நீயும் இந்த டிரஸ் மாத்திட்டு வா. நான் வெயிட் பண்றேன்” அது யூனிசெஃஸ் பியூட்டி பார்லர் என்று சொல்லிட, அவனும் அந்த கவரை வாங்கி ”இதெல்லாம் எப்ப வாங்கின” என்று ஆராய்ந்தான்.

    ”அட பாவி கல்யாணம் சிம்பிள் தான் அதுக்காக சின்னதா சேலை கூட கட்டிட்டி நிற்கலான என்ன டா? அதான் அவளுக்கு சேலையும் உனக்கு இந்த டிரஸ்சம்”

    ”தேங்க்ஸ் டி அத்தை பொண்ணு” என்று அவனின் நண்பனோடு கிளம்பினான்.

    ”ஏய் நில்லு… இனி என்னை டி போட்டு எல்லாம் கூப்பிடதே….”

    ”ஏன் நான் உன்னை எப்பவும் அப்படி தானே கூப்பிடுவேன்..” என்று அவசரமாய் கூறினான்.

    ”அது அப்போ இனி கூப்பிடாதே ஓகே வா….”

    ”என்னமோ சொல்ற சரி சாதனா…” என்று கிளம்பினான். சனாவோ மனதில் பின்ன உங்க அண்ணா கெளதம் கல்யாணம் செய்துகிட்டா உனக்கு அண்ணி ஆச்சே…. என்று நினைக்க அவளின் கெளதம் இல்லாமல் போக போனை எடுத்தாள்.

    கௌதமிற்கு கால் செய்தாள்.

    ”எங்க இருக்கீங்க நான் வந்துட்டேன் சிவா வளர் டிரஸ் மாத்த போய் இருக்காங்க”

    ”டூ மினிட்ஸ்ல வந்துடுவேன் சனா” என்றான். சொல்லியது போலவே வந்து நின்றான்.

    கண்களில் கூலிங்க் கிளாஸ் அணிந்து ரெட் கலர் டீ-ஷர்ட் அணிந்து வந்தவனை கண்டு இமைக்க மறந்தாள் சாதனா.

    ‘கௌதம் மாமா நீ மட்டும் ஆணழகன் போட்டிக்கு போடா நீ தான் வின் பண்ணுவ‘ என்றெ மனதில் சொல்லி கொண்டாள். அதே நேரம் சனா தான் வாங்கி கொடுத்த ரெட் சேலையை இன்று அணிந்து வருவாள் என்று அவனும் நினைக்கவில்லை. அவளை முதல் முறையாக சேலையில் காண்கின்றான். நல்ல வேலை கூலிங் கிளாஸ் அவன் பார்வை தடுமாற்றத்தை காட்டி கொடுக்கவில்லை.

    ”நான் உள்ள ப்ரோசீஜர் என்ன என்று பார்க்கறேன்” என்று நழுவினான். அவளும் அவனின் மீதே பார்வை பதிப்பதை எண்ணி தலையை மட்டும் ஆட்டினாள்.

    மணப்பெண் அலங்காரத்தோடு வளர்மதி வந்து நின்றாள்.

    ”என்ன வளர் சேலை பிடிச்சு இருக்கா?”

    ”ஏ ஒன் செலெக்ஷன் சாதனா. எனக்கு நிறைவா இருக்கு என்ன என் அப்பா அம்மா அண்ணா அண்ணி இருந்தா இன்னும் நிறைவா இருக்கும்” என்று கலங்கி நின்றாள்.

    ”சாதனா வேற என்ன பார்மாலிட்டீஸ் இருக்கும்? எனக்கு ஒன்னும் புரியலை.” என்றபடி சிவா வந்து கூறினான்.

    ” நீ ஒன்னும் டென்ஷன் ஆக வேண்டாம் எல்லாம் அவர் பார்த்துப்பார்” என்று சொல்லி கர்வமாய் நிமிர்ந்தாள்.

    ”யார்?” என்று சிவா குழம்பினான்.

    ”திரும்பி பார்” என்று கைகாட்ட அங்கே கௌதம் அங்கிருந்த ஆஃபிஸ் சாரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

    ”போச்சு என்ன சாதனா இவன் இங்க இருக்கான். போச்சு எல்லாம் போச்சு இனி ஒன்னும் நடக்காது இவனுக்கு யார் சொல்லி இருப்பா?”

    ”டேய் பேச்சை நிறுத்து நான் தான் சொன்னேன்”

    ”போ சாதனா என் லைப்ப ஸ்பாயில் ஆகிட்ட”

    ”அதெல்லாம் இல்லை வா இங்க” என்று கையை பற்றி சாதனா இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள்.

    ”சார் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார் அந்த அலுவலக பதிவாளர்,

    ”சார் கொஞ்ச பேர் வந்துட்டு இருக்காங்க டென் மினிட்ஸ்” என்றதும் சாதனாவிற்கு கூட பகிர் என்று ஆனது.

    வேற யாரு என்று குழம்ப கௌதம் போனில் பேசி கட் செய்து மீண்டும் யாருக்கோ அழைத்து பேசி புன்னகையோடு சாதனாவிடம் பார்வையாலே என்ன என்றே கேட்க, அதற்குள் வேதா ஜோதி மற்றும் சியாமளா வந்து கொண்டு இருப்பதை கண்டு சிவா பயந்தே போனான்.

    சாதனாவிற்கும் தான் ஆனால் அவர்கள் ஏதோ திருமணத்திற்கு போவது போல தானே வந்து இருப்பது மனதில் பட்டது.

    ”சிவா என்ன கோலம் டா இது” என்று சியாமளா அதிர்ச்சியாய் கேட்டார்

    கௌதம் முன் வந்து ”அம்மா பார்த்தா தெரியலை கல்யாணம் தான். நீங்க வேதா ஜோதி உங்க முன்னால் நடக்கணும் என்று வரவழைச்சேன். அவங்க இரண்டு பேரையும் மனதார வாழ்த்துங்கள்” என்று சொல்லியதும் இதுவரை கௌதம் பேசியதே வெறும் மொட்டையாக இன்றோ ‘அம்மா‘ என்று அழைத்ததை கண்டு மேலும் பேச்சிழந்து இருக்க , அந்த நிலையிலும்

    ”கௌதம் நீ நீ இருக்கும் போது அவனுக்கு…” என்று கேவி அழுதார்,

    ”அம்மா…. பையனுக்கு கல்யாணம் இப்படியா அழுது சீன் கிரியேட் பண்ணுவீங்க. அப்பா இறந்து ஐந்து மாசம் ஆகிடுச்சு கெட்டது நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கட்டும். இதுல என்ன தப்பு…” என்றான் இயல்பாய்.

    ”சரி அப்படியே என்றாலும் உனக்கு முடிக்காம”

    ”எனக்குனு வர்றவ இன்னும் நெருங்கி வரலை வந்த பிறகு எனக்கு கல்யாணம் பார்க்கலாம் இப்போ அழாம மனதார ஆசிர்வதிங்க ப்ளீஸ் மற்றதை வீட்ல போய் பேசிக்கலாம்” என்றதும் சற்றே குழம்பி சரி என தலையாட்டினார்கள்.

    சனாவிற்கு தான் அடப்பாவி நான் இவ்ளோ பக்கத்தில இருக்கேன் இன்னும் என்ன நெருங்கி வரணும்…. இவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி… என்று மனதில் வறுத்தாள்.

    ”ஏன் டா இவ நம்ம ஊர்ல இருக்கற…?” என்றே சியாமளா கேட்டார்.

    ”ஆமா ம்மா என்று சிவா சியாமளாவை அணைத்து கொள்ள வளர் சியாமளா கால்களையும் வேதா கால்களையும் தொட்டு வணங்க சற்றே வருத்தம் கலந்து சந்தோசத்துடன் ஆசிர்வதித்தார்கள்.

    மாலதி அருகே வந்து சனாவை அழைத்து ”என்ன டி இரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் எனக்கு தெரியாம லவ் சொல்லிட்டியா..?”

    ”ஏன் பக்கி… இன்னும் சொல்லலை…. சொல்லி இருந்தா மிட் நைட்ல கூட போன் பண்ணி உனக்கு சொல்லி இருப்பேனே..”

    ”அதானே ஜுரத்தையே கண்டுக்காம போன் பண்ணி புலம்பியவள் தானே நீ… ஏய் கௌ என்னை முறைக்குது” என்று மாலதி சொல்ல கெளதம் முன் வந்து

    ”நீங்க தானே மாலதி… எப்படி இருக்கீங்க…” என்றான் கெளதம்

    ”ம்ம் சூப்பரா இருக்கேன்… இந்த சனா தொல்லை தான் தாங்க முடியலை…. சீக்கிரம் இவளுக்கும் ஒரு கயிறு கட்டி வாயை அடைங்க” என்று சொல்ல சனா அவளை கிள்ளினாள்.

    ”எந்த கயிறு…? எல்லோ வா?” என்றவன் போன் அடிக்க அதில் கவனம் பதித்தான்.

    என்ன சனா மஞ்சள் கயிறு எல்லாம் கேட்கறார்… நிஜமாவே லவ் சொன்னியா இல்லை என்கிட்ட மறைக்கிறீயா?”

    ”நிஜமா இன்னும் என் லவ் சொல்லலை…”

    ”எனக்கு என்னவோ நீ ஏற்கனவே சொல்லிட்டேபோல தோணுது… கார்த்திக் பார்வை பாரு அப்படியே இழுக்குது… டேய் கார்த்திக் என்னை அப்படி பாரு டா இப்பவே மேரேஜ் பண்ணிக்கலாம்” என்று மாலதி புலம்ப சனா அவளை முறைக்க அவளின் முறைப்பில் மாலதி நைசாக சிவா அருகே சென்றாள்.

    ”என்ன சிவா கீர்த்தி இல்லாமல் கல்யாணம் செய்யறீங்க..?”

    ”சே சனா மாதிரி எனக்கு கீர்த்தி நல்ல ப்ரெண்ட் அவள் இப்போ போய் வெளி ஊருக்கு போயிருக்கா… கஷ்டமா இருக்கு” என்றான்.

    ”இன்னும் எதுக்கு வெயிட் பண்ணனும்” என்று சனா கௌதமிடம் கேட்டாள்.

    ”இன்னும் ஒரு குடும்பம் வரணும் என்றதும் எல்லோரும் யாராக இருக்கும் என்று குழம்பினார்கள்.

    கெளதம் எல்லோரிடமும் திகிலை கூட்டி நின்றான்.

    ”ஹலோ இதுக்கே இப்படியா கொஞ்சம் அங்க பாருங்க?” என்ற கௌதம் பேச்சில் அவன் சொல்லிய திசையில் பார்க்க, வளரின் தாய் தந்தை அண்ணன் அண்ணி என்று காரில் இருந்து புன்னகையோடு இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

    சிவா முன்பு போல பயப்படவில்லை இருந்தும் அதிர்ச்சி அடைந்தே பார்க்க வளர் ஓடி வந்து அம்மா அப்பா என்று அழுதாள்,

    ”கல்யாண பொண்ணு அழுதா மேக்கப் கலைஞ்சுடும் எல்லாம் பிறகு பேசிக்கலாம் நல்ல நேரம் முடிஞ்சிட போகுது வா மதி” என்று அவர்கள் கையை பற்றி ரிஜிஸ்ட்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.

    ”அம்மா என் மேல யாருக்கும் கோவம் இல்லையே” என்று வளர் கேட்டாள்.

    ”அதல்லாம் ஒன்னுமில்லை டா எங்களுக்கு மனபூர்வமனா திருப்தி தான்” என்று வளர் தந்தை சொல்லிட மற்றவர்கள் ஆம் என்பது போல புன்னகைக்க, வளரின் தாயோ திருஷ்டியாக நெற்றி முறித்தாள்.

    ”வாங்க சார்… லேட்டா ஆகிடுமோ என்று நினைத்தேன்”

    ”என்ன தம்பி இன்னும் சாருன்னு மாமா என்று கூப்பிடுங்க எனக்கு நீங்க சிவா மாப்பிள்ளை ரெண்டு பேருமே ஒன்னு தான்”

    ”சாதனா தேங்க்ஸ்” என்று சிவா வளர் இருவருமே சொல்லி கொள்ள,

    ”எனக்கே இது தெரியாது எனக்கு எதுக்கு தேங்க்ஸ். எல்லாம் உங்க அண்ணா ஏற்பாடு போல” என்று சாதனா சொல்லி வைக்க சிவாவிற்கு முதல் முறையாக கௌதம் மீது நல்ல அபிப்ராயம் வந்தது.

    இருக்குடும்பம் முன் மாலை மாற்றி ரிஜிஸ்ட்டர் கையெழுத்து பதிவிட்டு தாலி எடுத்து மாட்டி இனிதே சிம்பிள்ளாக அத்திருமணம் நிறைவடைந்தது.

    முதலில் யாரிடம் காலில் விழ என்று வேதவள்ளியிடம் நெருங்கும் போதே ”சிவா ஜோடியா உன் பொஞ்சாதி கூட சேர்ந்து அவங்க பெத்தவங்க காலில் முதலில் வணங்கு டா” என்றதும் அவன் ‘திரு திரு‘ என முழிக்க,

    ”அதான் வேதா சொல்லிடுச்சே கேளு” என்றான் கௌதம். இருவரும் சேர்ந்த தம்பதியாக முதலில் சேர்ந்து இருக்கும் ஜோடியோடு விழவே வேதவள்ளி சொல்கின்றார்கள் என கௌதம் அறிந்தது போல சிவாவும் அறிந்து கொண்டான்.

    அடுத்து வேதவள்ளியிடம் பாதம் வணங்கினான். அடுத்து சியாமா பாதம் வணங்கியவன் கௌதம் காலில் விழணுமா இல்லை எப்படி என்று திணற, கௌதமே ”ஹாப்பி மேரிட் லைப்” என்று கை குலுக்கினான்.

    ”தேங்க்ஸ்….” என்று சிவா கூறியதே சாதனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

    ”டேய் இங்க ஒரு பெரிய மனுசி இருக்கேன் சிவா என் காலிலும்” என்று சாதனா கௌதம் அருகே வந்து நின்றாள்

    ”ஆமா நீ யாரு…?” என்றான் சிவா.

    ”டேய் டேய் இப்பவே என்னை தெரியலையா… நீ நடத்து அப்பறம் ஏதாவது பிரெண்டுனு சொல்லிக்கிட்டு வருவல அப்போ கவனிக்கிறேன்” என்று சாதனா முறுக்கி கொண்டாள்.

    ”ஏய் ரொம்ப தேங்க்ஸ் சாதனா நீ தான் எனக்கு மாறல் சப்போர்ட்” என்று சொன்னதும் சிரித்தாள்.

    ”அப்படி வா வழிக்கு” என்று குரூப்பாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

    அவளை போலவே கௌதமும் புகைப்படம் எடுத்தான். சாதனா அசந்த நேரம் மற்றவர்களும் கவனமின்றி இருந்த அந்நொடி சாதனா-அவனோடு அருகே இருந்த அந்த சமயம் செல்ஃபீ எடுக்க அவளும் அவனும் மட்டுமே இருந்தார்கள்.

    அவன் அதிர்ஷ்டம் போட்டோ க்ளிக் செய்யும் போது சனா போனை பார்த்து திரும்ப கிடைத்த கேப்பில் அவளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து திரும்பினான். கௌதம் தன்னோடு செல்ஃபீ எடுக்கின்றானா என்ற ஐயமிட்டு மீண்டும் திரும்ப அவனோ ஏதோ தீவிரமாக யாரின் எண்ணை தேடி கொண்டு இருந்தான்.

    அதன் பின் அப்படியே பெரிய உயர் தர உணவகத்துக்கு சென்று பேமிலி டேபிளில் சாப்பிட அமர்ந்தார்கள். அதையும் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்தார்கள்.

    ”சார் நீங்க சொன்ன ஹோமில் உணவு எல்லாம் கொடுத்து விட்டோம்” என்று ஹோட்டலில் ஒரு ஆள் வந்து சொல்லியதும்

    ”தேங்க்ஸ் பார் டெலிவரிங்க” என்று கை கொடுத்து சென்றிட, சிவா புரியாத பார்வையை கௌதம்மிடம் வீசினான்.

    ”என்ன ஹோம்… என்ன டெலிவரி…? என்றே சாதனா கேள்வி கேட்டாள்

    ”கல்யாண சாப்பாடு போட வேண்டாமா? அதான் ஒரு ஹோமிற்கு லஞ்ச் அனுப்புவதா கேட்டு எத்தனை பேருக்கு என்று விசாரித்து நேரத்துக்கு ஹோட்டலில் இருந்தே பார்சல் அனுப்பிட சொல்லிட்டேன். அவங்க அனுப்பி விட்டாங்களாம். எனக்கு ஹோம்ல இருந்து ஆல்ரெடி மெசேஜ் வந்துடுச்சு. இவங்க இப்போ வந்து சொல்லிட்டு போறாங்க” என்று உண்பதில் கவனம் செலுத்தினான்.

    ”என்ன கௌதம் எவ்ளோ பெரிய விஷயம் நீங்க சாதாரணமா சொல்லிட்டு சாப்பிடறீங்க” என்று வளர்மதியின் அன்னன் கமல் கேட்டான்,

    ”வாட்.? ஓஹ் இப்ப நடந்தத சொல்லிறீங்களா? சார் இது எல்லாம் பெரிய இஸ்ஸுவே இல்லை. எப்படியும் கல்யாணம் பந்தல் மேளம் தாளம் அப்படி இப்படி என்று செலவு ஆகி இருக்கும் அதோட கம்பேர் பண்ணி இருந்தா இது கொஞ்சம் தான். அப்பா இறந்ததால் கிராண்டடா செய்ய முடியலை கொஞ்சம் வருத்தம் இருக்கு. பட் சிவா-வளர் பயந்ததால் சீக்கிரம் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க எனக்கு இரண்டு குடும்பத்துக்கு தெரியாம கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை அதனால் தான் உங்ககிட்ட பெர்மிஸ்ஸின் வாங்க உங்க வீடு வந்ததே… சிவா லவ் பற்றி பேசியதே”

    ”இருந்தாலும் கிரேட் தான்” என்று கமல் சாப்பிட்டார்கள்.

    வேதவள்ளிக்கு முதலில் கொஞ்சம் மனவருத்தம். தனது பேரனின் திருமணம் முடியாமல் சிவாவிற்கு என்றதும். கௌதம் எந்த விஷயத்தையும் யாரின் மனம் புண்படாமல் முடிவு எடுக்கவே விரும்புவான். அதனால் இந்த கல்யாணத்தில் இரு குடும்பமும் சேர்ந்து வந்தது பெரிதாக தோன்றவில்லை . ஆனால் பேரன் நடவடிக்கை அவருக்கு சற்றே வித்தியாசமாக இருந்தது. ஏன் அவசரமாக செய்தான். இதே திருமணத்தை இருவீட்டார் சம்மதத்தோடு கொஞ்ச காலங்களில் பின்னரே கூட செய்யலாமே? ஏன் அவசரமாக செய்தான் என்று யோசிக்க குறுக்கும் நெடுக்குமாக சாதனா சிவப்பு நிற சேலையிலும் கௌதம் சிவப்பு நிற டீஷர்டிலும் இருப்பதை கண்டு ஏதோ புரிவதாக பட்டது.

    ஜோதி வேறு அவர்களின் எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வதாக

    ”அண்ணி இது அன்னிக்கு கடையில எனக்கு வாங்கும் போது அண்ணா உங்களுக்கு வாங்கி கொடுத்த சேலை தானே” என்றதும் கௌதம்மை பார்த்து சற்றே சேலைக்கு போட்டியாக வெட்கம் சிவக்க தலையை ஆட்டிவிட வேதாவிற்கு சந்தேகம் தீர்ந்தது. பேரன் ஒருத்திக்கு சேலை வாங்கி தந்து இருக்கின்றான். அதுவும் என்னிடம் சொல்லவில்லை.

    சாதனாவை மேலும் கீழும் நன்கு ஆராய்ந்து பார்வை செலுத்தினால் அம்முதியவள். பேரன் சும்மா கூட வாங்கி கொடுக்கலாம் எதற்கும் நானாக கேட்டு குழப்ப வேண்டாம் கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வர தானே செய்யும் அப்பொழுது பார்க்கலாம் என்று விட்டு பிடித்தார். அவரின் மனம் தற்போது நிறைந்து விட்டது.

    கௌதம் சேலையை பார்த்து எதுவும் சொல்லவில்லையே ஒரு வேலை மறந்து இருப்பானோ? நானா எப்படி கேட்பது நீங்க வாங்கி கொடுத்த சேலை நல்லா இருக்கா என்று கேட்பதென யோசித்தவள் அவன் தினமும் அவளது வாட்சப் ஸ்டேட்டஸிற்கு கமெண்ட் செய்வது நினைவு வர தன்னை வீட்டில் ஒரு முறை தனியாக செல்பீ எடுத்த புகைப்படத்தை பதிவில் ஏற்றி கீழே ”நான் சேலை கட்டி இருக்கேனாக்கும்” என்று ஸ்மைலி போட்டு வைத்து விட்டு கௌதம் அதை பார்த்துவிட்டதாக காட்டியதா என்று ஆவலாக பார்த்தாள்.

    பத்து நிமிட கழித்து அவன் அவளை பார்க்க அவளும் அவனை பார்த்து என்ன என்று கேட்க, வாட்ஸப்பில் ”சேலை கட்டி இருக்கறது பார்த்தாலே தெரியுது” என்று அனுப்பினான்.

    ”நீங்க வாங்கி கொடுத்தது” என்று அவளும் அனுப்பினாள்.

    ”ஐ நோ” என்றான். இவன் இப்படி கல்லுளிமங்கன் மாதிரி பதில் அனுப்பறானே? என்று அவளாகவே,

    ”எப்படி இருக்கு?”

    ”ரொம்ப ரொம்ப அழகா இருக்க சனா” என்று அனுப்பினான். அதன் பிறகே முகம் மெங்கும் ஆயிரம் வால்ட் பல்பு போல அவள் முகம் மேலும் பிரகாசம் ஆனது சனாவிற்கு.

    -நினைவுகள் தொடரும் 

    -பிரவீணா தங்கராஜ்.

  • தித்திக்கும் நினைவுகள்-11

    அத்தியாயம்-11

    ஜோதி பரீட்சை முடியவும் வேதவள்ளி உடல் நிலை சற்று தேறியதும் இருவரையும் கௌதமே காரில் அழைத்து ஊருக்கு சென்றான்.

    சியாமளா முதலில் பயந்தாலும் பின்னர் ஜோதி வேதவள்ளி பேச்சில் வேதவள்ளிக்கு எவ்வித கோவமும் இல்லை என்று தோன்றி பேச முனைந்தார்.

    சிவா வந்தவுடன் அறிமுகம் செய்து பேச வேதவள்ளி கண்டு தயக்கத்துடன் ”வாங்க அத்தை” என்றான்.

    ”நீ ஒன்னும் என்னை அத்தை என்று கூப்பிடாதே” என்றதும் சியாமளா சிவா இருவருமே கொஞ்சம் பயப்பட ஜோதி சற்றே சிரிப்புடன் சிவாவை நோக்க அடுத்த நொடி,

    ”நீயும் என்னை ஆச்சி என்று கூப்பிடு. நீயும் என்னை மதினி என்று எல்லாம் கூப்பிடாதே அம்மா என்று கூப்பிடு” என்றதும் சியாமளவிற்கு அழுகையே வந்து விட்டது. அப்படி என்றால் என்னை மேகலை அக்கா போல தன்னை மகள் ஸ்தானத்தில் அல்லவா இப்பொழுது பார்க்கின்றார்கள் என்று மகிழ்ந்தாள்.

    வேதவள்ளிக்கு மாடி படி வசதியாக போக வர இயலாத காரணத்தால் கீழே அறையிலே தங்கிட எப்பொழுதும் போல மாடியில் கௌதம் தனி ஆட்சி புரிந்தான்.

    அடுத்த நாள் சாதனா மட்டும் வந்து இருக்க ஜோதிக்கு அளவில்லா ஆனந்தம் வந்தது. கல்லூரி கதை முழுதும் பகிர்ந்தாள். அதை சிவா கூட பக்கத்தில் இருந்தே கேட்டுக் கொண்டான். தனது தங்கை பேச்சிலும் சற்று மாறுபாடு இருக்கின்றது. முன்பு இருந்த அச்சம் இல்லை. தெளிவாக தனக்கு தேவைகளை கேட்டு பெறுகின்றாள். முன்பு போல உங்க இஷ்டம் என்று விழி பிதுங்கி அறியாத மடமை போல இல்லை.

    சாப்பிட அமரும் போது தான் சனா கௌதமை பார்த்ததே. உன்ன பார்க்க தான் டா வந்தேன் என்ற காதலோடு இருந்தாள். அவனும் சாப்பிடும் பொழுது அவளை கவனிக்கவே செய்தான். வேதா அதனை கவனிக்கவே செய்தார்.

    கௌதம் ஒரு பெண்ணை பார்க்கின்றான் அதுவும் சாதாரணமான பார்வை அல்ல காதல் பொதிந்து இருப்பதாக பட பிறகு அவனிடம் கேட்க வேண்டும் என்று இருக்க, சாப்பிட்டு முடித்த கையேடு சிவா வந்து சாதனா காதில் ஏதோ கூற ”அப்பறம் போகலாம் டா” என்றாள். அவனோ கையை பிடித்து இழுத்து சென்றான்.

    இதுவரை அவளை காதலோடு பார்த்து இருந்தவன் ஏதோ பெரும் தவறை செய்தவன் போல விதிர்த்தான். சாதனா ஒவ்வொரு முறையும் சிவாவோடு பழகும் போதும் அவனுள் பெரும் வலியும் உண்டானது. சே சிவா சாதனா இருவரின் நெருக்கம் மறந்து இவ்வளவு நாள் இருந்துவிட்டேன். சாதனா சிவாவை மணக்க இருக்கும் போது நான் அவளை…. சே முதலில் அவளிடம் என்னை அறியாமல் பழகுவதை குறைக்கணும் அதற்கு முதலில் அவள் என் கண் அருகே இருக்க கூடாது.

    வேதவள்ளியிடம் தனக்கு ஆபிஸ் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நீங்கள் திரும்ப வருவதற்கு முன் கால் செய்யுங்கள் வந்து அழைத்து செல்கின்றேன் என்று நொடியும் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான். வேதாவிற்கு என்ன இவன் வந்ததும் இப்பொழுது செல்கின்றான். அப்படி என்றால் அந்த பெண் மீது சாதாரணமாக தான் பார்த்திருப்பானோ?! தேவையில்லாமல் மனக்கோட்டை அல்லவா கட்டிவிட்டேன் என்று நினைத்தார்.

    சாதனா சிவா வீட்டுக்கு வந்து சேரும்போது அங்கு கௌதம் இல்லை என்பதை அறிந்து சாதனா தவித்தாள். உன்னை பார்க்க தானடா வந்தேன் இப்படி ஓடிவிட்டாயே?! என்று மனதோடு புலம்பினாள்.

    அவனுக்கு குறுந்செய்தி அனுப்பி ஏன் கிளம்பிடீங்க? என்றாள் அதற்கு பதிலில்லை ஏதாவது பிரச்சனையா? என்றாள் அதற்கும் பதில்இல்லை. அவன் பார்க்கவில்லை போல என்று இருக்க வாட்சாப்பிலே பார்த்துவிட்டதாக இரு ப்ளூ டிக் காட்டியது. வேலை டென்ஷன் இருக்குமோ என்று போனில் கேட்டுவிடலாம் என்று அழைக்க அவன் எடுக்கவில்லை.

    மீண்டும் மீண்டும் முயன்றாள். அவன் அதை கட் செய்தான். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அழைக்க இம்முறை அட்டன் செய்தான்.

    ”எதுக்கு இப்போ தொடர்ந்து கால் செய்யற?” என்றான் அதில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிந்தது.

    ”என்னாச்சு உடம்புக்கு சரியில்லையா? உடனே கிளம்பிடீங்க” என்றாள்.

    ”உங்கிட்ட சொல்லிட்டு போகணும் என்று இல்லையே. அது என் விருப்பம், நீ என்ன எல்லாம் சொல்லிட்டே வா செய்யற?” என்று கடுமையுடன் பேசினான்.

    ”ஏன் இப்படி…” என்று பேசும் போதே அணைத்து இருந்தான். மீண்டும் அழைத்தால் சுவிட்ச் ஆப் செய்ய எண்ணினான். ஆனால் அவளோ குழப்பத்துடன் இப்போ கௌதம்மை தொந்தரவு பண்ண வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

    அவனுக்கோ இனி இது தான் சரி அவள் பேச முயன்றால் கடினமாக பேசிட வேண்டும். மெசேஜ் அனுப்பினால் திரும்ப பதில் அனுப்ப க்கூடாது. அது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே என்று நினைத்தான். அது எவ்வளவு பெரிய வலி கொடுக்கும் என்று ஒரு முறை அவனே அறியும் வரை…

    வேதவள்ளி ஜோதி விடுமுறை முடிந்து கிளம்பும் அன்றும் கௌதம் வர முடியலை சிவாவோடு வர சொல்லிவிட்டான். சிவா இருவரையும் அழைத்து வந்து வாசலிலே விட்டுவிட்டு சென்றான். போகும் போது ஜோதியிடம் நல்லா படி… நல்ல பேர் எடு” என்று சொல்லி பணமும் கொடுத்துவிட்டு கிளம்பினான். ஜோதி மிகவும் மகிழ்ந்தாள்.

    இப்பொழுது எல்லாம் சாதனா மெசேஜ் செய்தால் கௌதம் ரிப்ளை பண்ணுவதில்லை. ஆனால் சாதனா போடும் ஸ்டேடஸ் தினமும் பார்ப்பான் அவளும் அதனாலே நாய்க்குட்டியோடு எடுக்கும் புகைப்படம் முதல் ப்ரெண்ட்ஸ் கூட எடுக்கும் புகைப்படம் வரை எல்லாம் தினமும் ஒன்றாக வைப்பாள்.

    அன்று கௌதம் ஜோதியோடு வெளியே ஆடை வாங்க சென்ற போது முன்பு போலவே சாதனாவை கண்டு அவனை அறியாமலே முகத்தில் புன்முறுவல் வந்தது.

    ஜோதி தான் ”ஹாய் அண்ணி வாங்க எனக்கு டிரஸ் எடுக்க வந்தேன் ப்ளீஸ் நீங்க செலக்ட் பண்ணுங்க” என்றாள்.

    ”ஜோதி நீயே செலக்ட் பண்ணு இல்லைனா உன் அண்ணன் தான் பக்கத்துல இருக்காறே அவர் பண்ணட்டும்” என்றதும்

    ”அண்ணி சுடி என்றால் ஓகே ஆச்சி எனக்கு சேலை எடுத்து தர சொல்லி இருக்காங்க அதனால் கொஞ்சம் கண்பியூஸ் ப்ளீஸ்” என்று சொல்லிட வேறு வழியின்றி கொஞ்ச நேரம் கௌதம் அருகே இருப்பதே வரமாக இருக்க அவளும் சரி என ஒப்புக்கொண்டாள்.

    கடையிலே கொஞ்ச நேரம் அது இது என்று எடுத்து போட்டு களைத்து பின்னர் சிவப்பு நிற சேலை ஒன்றை கல் பதித்து இருக்க தேர்வு செய்தாள்.

    கௌதமிற்கு சிவப்பு எப்பொழுதும் பிடித்தம் என்பதால் அவனை பார்க்க அவனோ அதே அமைதியாக இருந்தான்.

    ”அண்ணி இது உங்க கலருக்கு தான் எடுப்பாக இருக்கும் எனக்கு டல்லா காட்டும் என்று சொல்லிட மீண்டும் தேடுதல் படலம் ஆனது. சாண்டல் நிற ஜரிகை புடவை தேர்ந்து எடுத்தாள்.

    ”அண்ணி இது சூப்பர் என்று சொன்னதும் பில் போட வந்தார்கள். பில் போடும் போது தான் கவனித்தாள். அந்த சிவப்பு நிற சேலையை யாரோ வாங்கி விட்டார்கள் என்று.

    சே நான் இன்னிக்கு கார்டு எடுத்துட்டு வரலை இல்லை என்றால் நானே வாங்கி இருப்பேன் என்று ஏக்கத்தோடு சிவப்பை பார்த்து வெளியில் இருக்கும் ஐஸ் க்ரீம் இருக்கும் பக்கம் ஜோதி சாதனா வந்து விட கௌதம் சிவப்பு சாண்டல் இரண்டும் பில் போட்டு வந்து ஜோதியிடம் கொடுத்து காதில் பேசினான்.

    ”வாவ் அண்ணா சூப்பர்” என்று கூறிவிட்டு சாதனாவிடம்

    ”அண்ணி இது உங்களுக்கு” என்று நீட்டிட, என்ன என்று பார்க்க அதே சிவப்பு நிற புடவை

    ”ஜோதி எனக்கு இதெல்லாம் வேண்டாம் ஜஸ்ட் உன் கூட இருந்தேன் அதுக்காக எதுக்கு?” என்று தவிர்த்தாள்.

    கௌதமோ ‘‘விடு குட்டிம்மா அவங்க சேலை கட்டுற பழக்கம் இல்லை போல” என்று அவளின் குர்தா மீது பார்வை பதித்து சொன்னான்,

    ”ஜோதி நான் சேலை கட்டி உங்க அண்ணா பார்க்கலை … அதுக்காக என்னவேண்டும் என்றாலும் பேசுவாறா? நீ பார்த்து இருக்கல” என்றே நொடித்துக் கொள்ளவும்

    ”அப்போ வாங்கிக்க சொல்லு குட்டிம்மா” என்று கௌதம் சொல்லிட, அவன் வாங்கி தரும் முதல் பரிசு என்றதாலே அவளும் வேறு பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

    அன்று போனதும் மெசேஜ் செய்து பார்த்தாள் அவன் பதில் அனுப்பவில்லை. ‘ஹ்ம் போடா நீ பதில் அணுப்பலனா என்ன என்று இருந்தும் அவனின் போட்டோ எடுத்து திட்டியபடி கொஞ்சிக் கொண்டாள்.

    நாட்கள் வெகுவாக ஓடின. உங்களை நேரில் பார்த்துப் பேசணும்” என்று அனுப்பினாள். பதில் இன்றி போக கால் செய்தாள். இவனும் அவளின் குரல் கேட்க ஆசை கொண்டு அட்டன் செய்தான்.

    ”என்ன? என்ன பேசணும்” என்று கோபமாகவே கேட்டான்.

    ”போனில் வேண்டாம் நேர்ல…” என்றே இழுத்தாள்.,

    ”போனில் சொல்லு எனக்கு நேரமில்லை” என்று அவளை தவிர்க்க பார்த்தான்.

    ”ப்ளீஸ் நேர்ல தான் சொல்ல முடியும் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன். ஜஸ்ட் 15 மினிட்ஸ்” அவனுக்கும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு ”சரி” என்றான்.

    குறிப்பிட்ட காபி ஷாப்பில் வர சொல்லி துண்டித்தான். அவள் வருவதற்கு முன்னே வந்துக் காத்திருந்தான்.

    தூரத்தில் ஸுகூட்டி விட்டுவிட்டு துப்பட்டாவை சரி செய்தவாறு ஷாப்பில் நுழையும் சாதனாவை ரசிக்கவே செய்தான். அடுத்த நொடி ஓஹ் காட் அவளிடம் இந்த மனம் ஏன் அலை பாய்கின்றதோ என்று அவனே நினைத்து கட்டுப்படுத்தினான். சிவா விரும்பியிருந்தால்….

    ”சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்றிங்களா இந்த ட்ராபிக்…” என்று பேச்சை துவங்கினாள்.

    ”இட்ஸ் ஓகே என்ன சொல்லணும் சொல்லிடு எனக்கு வேலை இருக்கு” என்ற போதே ஆர்டர் கேட்க, இருவருமே கூல் காபி ஆர்டர் தந்துவிட்டு அமைதியானார்கள்.

    அவளாகவே பேசட்டும் என்று காத்திருந்தான். ”என்ன விஷயமா இருக்கும் என்று கேட்க மாட்டிங்களா?” என்றாள்.

    ”அத சொல்ல தானே கூப்பிட்டு இருக்க சொல்லு” என்றான். அவள் தனது இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு,

    ”சிவா இப்பவே கல்யாணம் செய்யணும் என்று சொல்லறான்” கௌதம் முதலில் அதிர்ச்சியாய் இருந்தான் பின் சுதாரித்து மனதை இரும்பாக வைத்து கொண்டு,

    ”அதுக்கு நான் என்ன செய்யணும் அவங்க அம்மாகிட்டயும் உன் வீட்லயும் பேச சொல்லு” என்றான்.

    வருத்தமும் கோவமும் கலந்து, முதலில் அதற்கு அர்த்தம் புரியாது குழம்பி பின்னர் அதன் அர்த்தம் புரிந்து மனதினுள் ‘ஒஹ் அதான் சார் இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்கியா?’ என தனக்குள் சிரித்துக் கொண்டு,

    ”கொஞ்சம் என்னை பார்த்து பேசறீங்களா?” என்று துடுக்காக கூற கௌதம் அவளை பார்த்து முறைத்தான்

    ”நான் நேரிடையா விஷயத்தை சொல்றேன். அவன் ஒரு பெண்ணை விரும்பறான்” காதலை பற்றி என்ன நினைக்கறானோ ஏற்று கொள்வானா?

    ”இப்ப என்ன அந்த பெண்ணை விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ண சொல்லனுமா?”

    ”அய்யோ அய்யோ” என்று தலையில் அடித்து கொண்டு ”நான் சிவாவை விரும்பலை. அவனும் என்னை விரும்பலை. அவன் ஒரு பொண்ணை விரும்பறான். பேரு வளர்மதி அதே ஊர் தான். அவளும் இந்த சிவாவை விரும்பறா. அவளுக்கு தீவிரமா மாப்பிள்ளை பார்க்கறாங்க. சிவா என்கிட்ட ஹெல்ப் கேட்டான். ஊருக்கு வந்தப்ப என்னை அவகிட்ட போய் காட்டினான். நல்ல பொண்ணு அழகா இருக்கா” வேகமாக சொல்லி முடித்தாள்.

    ”ஏன் அவங்க அம்மா அப்பாகிட்ட பொண்ணு கேட்டு போக வேண்டியது தானே”

    ”சான்ஸ்சே இல்லை அவங்களுக்கும் இவனுக்கும் ஏற்கனவே நிலதகராறு இருந்துச்சு. அப்பறம் அவங்க வேற ஜாதி… கட்டி கொடுக்க மாட்டாங்க” என்றாள்.

    ”நான் என்ன பண்ணனும்”

    ”ஏற்கனவே உங்ககிட்ட நான் எதுவும் சொல்லலை என்று கோவம். பேச வேற மாற்றிங்க” கௌதம் கோவம் எங்கோ மாயமாய் போனது.

    அவள் சிவாவை விரும்பலை என்றதுமே போனது தான் ஆனாலும் அவள் பேச மாற்றிங்க என்று வருந்த செய்வது அவனுக்கு சாரலை அள்ளி தெளித்தது போல இருந்தது.

    ”நீங்களும் சேர்ந்து அவனுக்கு ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும். அவன் கேட்கலை… மாமா இறந்து கொஞ்ச நாளில் பண்றதால ஒரு வருத்தமும் இருக்கு அவனுக்கு. அதனாலயும் யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறதா சொல்லிட்டு இருக்கான். நீங்க அண்ணா முறைக்கு… அவ”

    ”அவனுக்கு என்னை பிடிக்காது” என்று அமைதியாக இருந்தவன்.

    ”ஆனாலும் யாருக்கும் தெரியாம பண்ணறது… ஓகே நீ அவன் சொன்னது மாதிரியே செய். எனக்கு தெரிந்தது என்று காட்டிக்காதே. நான் வருவேன்” என்று கூறினான்.

    ”தேங்க்ஸ்…”

    ”எப்போ மேரேஜ் தேதி சொல்லி இருக்கான்”

    ”18 இல்லை 27 சொல்லிட்டு இருந்தான்”

    ”27 ஓகே அதுவே சொல்லிடு”

    ”சரி நான் சிவாகிட்ட சொல்லிடறேன் அவனை வளரயும் இங்க வர சொல்லிடறேன்”

    ”ஓகே அப்பறம்” என்றான்.

    ”உங்களுக்கு வேலை இருக்கறதா சொன்னிங்க அதனால வேற எதுவும் இல்லை” என்று சாதனா அவன் நிலையை கருத்தில் கொண்டு கூறினாள்.

    ”அது அப்பறம் பார்த்துக்கறேன்” என்று சிரித்து ”இப்ப வேலை இல்லை” என்று வந்த கூல் காபியை மெல்லவே பருகி முடித்து குடித்தனர்.

       ‘அட லூசு பயலே சிவா என்னை விருப்பறான் இந்நாள் வரை என்கிட்ட பேசாம இருந்தியா… விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய்… ஒரு பொண்ணு உன்கூட தனியா தங்கி இருக்கேன் அப்போவே புரிலை…‘ என்று சனா மனதில் சொல்ல அவளின் மனசாட்சியே ‘ஒய் நீயே அப்போ லவ் இல்லை அது இது என்று சொல்லிட்டு என்னை ஏமாற்றின… இப்போ கெளதம் மாமா மேல திட்டற.‘ என்றே அவளை சாட்டியது.

    ”இனிமே பேசுவீங்களா? மெசேஜ் பண்ணுவீங்களா?” என்று ஆசையாய் கேட்க, மென்னகையை கொண்டே ”ஹ்ம்” என்றான். அதில் வசீகரப்பட்டாள்….. பின்னர் பேசாமலே கால் மணி நேரம் பார்வையால் பேச வெய்ட்டர் வந்து பில் சொல்லி கிளம்பும் சூழ்நிலையில் கிளம்பினார்கள்.

    அவள் ஒரு பக்கம் செல்ல அவனும் ஒரு பக்கம் என்று விடை பெற்றார்கள்.

    *இருவரும் ஒரே பாதையில் செல்லும் நாள் விரைவில் ஏற்படுமா?

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ்

  • தித்திக்கும் நினைவுகள்-10

    அத்தியாயம்–10

    சட்டென்று கண்ணாடியை கழற்றியவன் ”நிஷா அது…” என்று எழுந்தவன் ”இரு பேசிட்டு வர்றேன்” என்று சாதனா பக்கம் நடந்தான்

    சுந்தரோ ”டேய் தெரிந்த பெண்ணா?” என்றான். அவனின் கையை பற்றி ,

    ”ஆமா டா மாமா பொண்ணு” என்று கையை பிரித்து அவளிடம் வந்து நின்றான்.

    ”ஹாய் சாதனா…”

    ”ஹாய் கார்த்திக்… நீங்க எங்க இங்க?” என்று பதில் அசோக்கிடம் இருந்து வந்தது.

    ”எல்லாம் சாப்பிட தான்” என்றான்.

    ”உங்களை மீட் பண்ணனும் என்று இருந்தேன். உங்க கட்டுரை பார்த்திங்களா?”

    ”ஓ பார்த்தேன். இன்பாக்ட் அதுக்கு தான் ட்ரீட்”

    ”ஹலோ அது வந்து ஒரு மாதத்துக்கு மேல இருக்குமே?” என்றான் அசோக்.

    ”பட் என் ப்ரெண்ட்ஸுக்கு இப்போ தானே தெரிஞ்சுது. அதுவும் ஆபிஸ்ல ஒருத்தர் பார்த்து இவங்ககிட்ட காட்டியதால்”

    ”என்ன டா மாமா பொண்ணு கூட பேச போறேன் என்று வந்துட்டு இங்க பையனோட பேசற?” என்றான் சத்யா கௌதம்தோளில் தட்டியவாறு.

    ”ஹாய் இது என் பிரென்ட் சத்யா இது சுந்தர் இது ரேஷ்மி இது நிஷாந்தினி” என்றதும் எல்லோரும் கோரஸாக ”ஹலோ” என்றனர்.

    ”யாரு மாமா பொண்ணு கீர்த்தியா?” என்று விழித்தான் அஷோக்

    ”சாதனா…” என்று அவளையே இமைக்க மறந்து பார்த்தான்.

    ”சாதனா சொல்லவே இல்லை” என்றான் அசோக்.

    ”அன்னைக்கு இவரை தான் பேட்டி எடுக்கிறோம் என்று தெரியாது ஷாக் ஆகிட்டேன்” என்றாள் அதே முறைப்போடு,

    ”ஏய் அதுக்கு அப்பறம் கூட சொல்லலை” என்றான் அசோக்.

    ”அசோக் நீங்க உங்க பிரென்ட் கூட ட்ரிப் போயிட்டீங்க அவசரம் என்று” சொல்லியதும் ”ஓஹ் ஆமாம்”என்று சொன்னாலும் அதுக்கு பிறகு ஏன் சொல்லவில்லை என்று குழம்பி அப்பறம் கேட்டுக்கலாம் என்று விட்டுவிட்டான்.

    ”கௌதம் சாதனாவை தெரியும் இது கீர்த்தி” என்று அறிமுகப்படுத்தினான் அஷோக்.

    ”மாலதி வரலையா?” என்றதும் மேலும் சாதனா அவனை கூடுதலாக முறைத்தாள்.

    ”இல்லை அவளுக்கு உடம்பு சரியில்லை” என்றாள் கீர்த்தி.

    ”ஆமா கௌதம் உங்களுக்கு முறை பையனா? இப்படி முறைச்சுக்கிட்டு இருந்திங்க” என்று நிஷாந்தினி கேட்க, அதே முறைப்போடு அவனை பார்த்து ”அத்தை பையன்” என்றாள்.

    நிஷாந்தினி தனது தோளில் கையை ஊன்றி பேசுவதை தனது தோளில் சாய்ந்து இருந்ததையும் பார்த்து தான் அவள் முறைக்கின்றாள் என்று அறிந்து மெல்ல நிஷாந்தினியை கையை எடுத்து ”நீங்கலாம் சாப்பிடுங்க பேசிட்டு வர்றேன்” என்றான்.

    மற்றொரு சேரில் சாதனா அவனும் அமர்ந்து ஜூஸ் பருகியவாறு இருந்தனர்.

    ”என்ன கோவம் என் மேல?” என்றான் கௌதம்.

    ”அதெல்லாம் இல்லை” என்று கோபமாக தான் கூறினாள் சாதனா.

    ”பொய் நீ என்னை முறைச்சிகிட்டு தான் இருக்க இப்ப கூட” என்று சுட்டிக்காட்டினான்

    ”இல்லை” என்று வீம்பாய் மறுத்தாள்.

    ”அங்க இருக்கற எல்லோரும் எனக்கு ப்ரெண்ட்ஸ் மட்டுமே நிஷாந்தினி உட்பட புரியுதா” என்றான் கௌதம்.

    அப்பொழுதும் அவள் முறைக்க, ”உனக்கு அசோக் மாதிரி” என்றதும் சிறு அமைதிக்கு பின் கௌதமை முறைப்பதை நிறுத்தி விட்டு காதலோடு கண்ணை கலக்க, பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டது.

    ”டேய் வெய்ட்டர் வந்தாச்சு பில் கொடுக்க வா டா” என்றதும் புன்னகையோடு ”சரி நான் கிளம்பறேன் சனா” என்றான். இரு குழு நபர்களும் கைகளை அசைத்து பை என்றே சென்றார்கள்.

    ”ஏன் சாதனா கார்த்திக் உன் மாமா பையன் என்று சொல்லவே இல்லை” என்று அஷோக் விடாது கேட்டான்.

    ”சொல்லணும் என்று தோணலை மாலதிக்கு தெரியும்” என்று சொல்லிட அமைதியாக அவன் கீர்த்தியை ட்ரோப் செய்தான். சாதனா அவள் ஸ்கூட்டியில் பறந்தாள்.

    அங்கு கௌதம் காரில் அவனது நண்பர்கள் பட்டாளம் அவனை விடுவதாக இல்லை.

    ”டேய் மச்சான் என்னடா பார்வை எல்லாம் பலமா இருக்கு” என்றான் சுந்தர்.

    ”அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று மழுப்பி சிரித்தான் கௌதம்.

    ”எதெல்லாம் டா” என்றான் சத்யா. தான் மாட்டி கொண்டது நன்கு உணர மென்னகை புரிந்தான்.

    ” டேய் இது வரை எல்லா பொண்ணுங்களையும் திரும்பி பார்த்து இருக்கானா டா இன்னிக்கு என்ன என்றால் எழுந்து போய்… இடையில் சுந்தர் ”ஏய் என் கையை விடுவித்து கொண்டு போனான்”

    ”ஆமாம் அவனா எழுந்து போய் அவளை பார்த்து பேசறான். ஆனா அந்த பொண்ணு இவனை முறைக்கிறா? சார் அதையும் ரசிச்சு பார்க்கறார்” நிஷாந்தினி எடுத்து கொடுத்தாள்.

    ”ஏய் அவள் நீ கௌதம் மேல கையை வச்சி பேசிட்டு இருந்ததை தான் பார்த்து முறைச்சா” என்று சரியான பாயிண்ட் எடுத்து விட்டாள் ரேஷ்மி.

    ”அதுகூட ஓகே ரேசு இவன் அதுக்கு நைஸா என் கையை தள்ளி விட்டுட்டு போய் சாப்பிடுங்க என்று சமாளிச்சான் பாரு எனக்கு கன்பார்ம் ஆகிடுச்சு” என்று நிஷாந்தினி சொல்லிட,

    ”ஹலோ ஹலோ ரொம்ப ஓட்டாதீங்க இப்ப தான் ரொம்ப வருஷம் கழிச்சு அவளை என் அப்பா டெத்ல பார்த்தேன். எனக்கு என்னமோ மனசுக்கு பண்ணுது ஒத்துக்கறேன் ஆனா அவளுக்கு என்ன என்று தெரியாம எப்படி லவ்னு ஓட்டறிங்க?” என்று நண்பர்களின் எண்ணவோட்டத்தை நிறுத்தினான்.

    ”டேய் ஒரு பொண்ணுக்கு தெரியும் அவ உன்னை விரும்பறா. நான் உன் தோளில் சாய்ந்ததுக்கும் கை போட்டதுக்கு என்னமா முறைக்கற நான் இன்னிக்கு பஸ்பம் ஆகி இருப்பேன். நிச்சயமா இது லவ் தான். நானும் ரேஷ்மியும் எவ்ளோ நாள் பழக்கறோம் இப்படி எங்களுக்கு தோணுதா இது லவ் இருந்தா தான் டா புகைச்சல் வரும்” என்றதும் கௌதம் மனம் துள்ளியது. இதற்கு முன்பிருந்தே இதயம் அவளிடம் சரணடைகின்றதே அவன் இதயத்திற்கு தெரியாத. இன்று அவளுக்குள்ளும் அந்த அழகிய உணர்வு ‘இருக்கும்‘ என்ற தோழிகளின் வார்த்தையில் மிதமிஞ்சிய ஆனந்தம் கொண்டான்.

    ”மச்சான் போன் பண்ணி இப்பவே கேளு டா” என்றான் சத்யா.

    ”அவ நம்பர் என்கிட்ட இல்லை. அவ பிரென்ட் அசோக் நம்பர் தான் இருக்கு”

    ”ஏன் டா”

    ”போகட்டும் எனக்கு ஒரு சின்ன கிளாரிபாக்ஷன் இருக்கு அது தெரியாம மனசை குழப்ப மாட்டேன்”

    ”டேய் அவன் தெளிவா இருக்கான் விடுங்க டா. இன்னோர் நாள் ட்ரீட் இருக்கு பட் கொஞ்ச நாள் ஆகும் போல” என்றாள் நிஷாந்தினி.

    ”மச்சான் நீ ஜெயிச்சாலும் தோற்றாலும் எங்களுக்கு ஒரே ட்ரீட் அது வேணும் டா” என்றான் கையை முழம் போட்டவாறு.

    ”அடேய் …” என்று சிரிப்புடன் கடந்தனர்.

    கௌதம் மனதில் சிவா மனதில் ஏதேனும் ஆசை இருக்குமா? அவன் தான் சனா பின்னால் கையை பற்றி கொண்டு அழைத்து செல்வது தனியாக பேசுவது என்று இருக்கான். சனா அவனிடம் கொஞ்சம் இடைவெளி கொண்டு இருப்பது புரிகின்றது. அதே போல என் மனம் போலவே அவளும் என்னை விரும்புகின்றாள் அவளின் பார்வையே அதற்கு சாட்சி… சிவா மனசில் மட்டும் என்ன இருக்கு? என்று புரிலை… அவன் மனம் கோணமல் எப்படி இதை கையாள போகின்றேன்…. தாமரை அத்தை வேறு என்னை பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது… என்று யோசிக்க மனமோ சனாக்கு உன்னை புடிச்சு இருக்கு அத மட்டும் யோசி… என்று சொல்ல அவனாயும் அறியாமல் புன்னகை உதிர்த்தது.

    ”மாலதி இன்னிக்கு கௌதம் பார்த்தேன் பேசினேன்…” என்று மறுபக்கம் சாதனா மாலதியிடம் ஆர்ப்பாட்டத்தோடு கூறினாள்.

    ”ஹ்ம் லவ் சொல்லிட்டியா….” என்றாள் ஜுரதோடு மாலதி

    ”இல்லை…” என்று குரல் குறைந்தது.

    ”சரி போன் பேசினியா?”

    ”இல்லையே….”

    ”அடிபவி எதை செய்யனுமோ அதை செய்யலை… எனக்கு உடம்பு சரியில்லை ஒரு வார்த்தை கேட்டியா… போன் செய்து தேவையில்லாததை பேசற வை டி போனை” என்று கட் செய்து தூங்க இங்கு சனா ‘யெஸ் மாலதி சொன்னது போல போன் செய்வோம் என்று கௌதமிற்கு கால் செய்தாள்.

    அன்றைய மாலை பொழுதில் சாதனா தானாகவே கௌதமிற்கு கால் செய்தாள். நம்பரில் இருந்து வருவதை கண்டு கடைசி நம்பர் பார்த்து எடுத்தவன்.

    ”ஹலோ” என்றதும்

    ”நான் சனா பேசறேன்” என்ற குரலில் மகிழ்ச்சியில் திளைத்தவன்.

    ”வாட் எ சர்பிரைஸ். என்ன விஷயம்” என்றான்.

    ”ஜோதிகிட்ட பேசலாம் என்று…” இழுக்க,

    ”அவள் இன்னிக்கு அவ ப்ரெண்ட்ஸ்சோட மூவி பார்க்க போய் இருக்கா கொஞ்சம் லேட் ஆகும் வந்ததும் பேச சொல்லவா” என்றான்.

    ”ம் சரி” என்று சொல்லியதும் கட் செய்தான். ‘அடப்பாவி ஆசையா போன் செய்தா கட் செய்துட்ட என்று திட்டி கொண்டு இருக்க, அவனோ வேகமாக அந்த நம்பர் இதுக்கு முன் வந்த நம்பர் போல இருக்கே என்று கால் பதிவில் பார்க்க அது ஒரு மாதத்திற்கு முன் சரியாக சொன்னால் காஞ்சிபுரம் சென்று வந்த ஒரு வாரத்தில் இருக்க அவன் மனம் குத்தாட்டம் போட்டது.

    அவனுக்கு அவள் போன் செய்து இருக்கின்றாள் ஏனோ அதன் பின் பேச முயலவில்லை என்பது புரிய, குறுந்செய்தியில்,

    ”நம்பர் தெரிஞ்சே என் கூடபேசாம இருந்தியா?” என்று அனுப்பினான்.

    ”சாரி தவறு தான் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துச்சு” என்று அவளும் அனுப்ப, எதுக்கு பயம் என்னிடம் என்று எண்ணியவன் அதை போனில் கேட்க கால் செய்தான்.

    ஒரே ரிங்கில் எடுத்தவளிடம் ”என்ன பயம் என்கிட்ட? சிவாகிட்ட பேசும் போதெல்லாம் பயப்படற மாதிரி தெரியலையே? பின்ன என்கூட ஏன்?” என்று அவள் மனதில் சிவா எந்த இடம் தான் எந்த இடம் என்று அறிய ஆவலுடன் கேட்க, அவளோ அடேய் மடையா அவன் என் பிரெண்ட் மாதிரி நீ அப்படியா என்று மனதில் சொல்லி கொண்டவள் அதை அவனிடமே கூட கூறி இருக்கலாம்.

    ஆனால் அவளோ ”நான் உங்களையும் சிவாவையும் வேற வேற பார்க்கலை இரண்டு பேருமே அத்தை மகனா தான் பார்க்கின்றேன். என் அம்மாவுக்கு தான் வேறுபாடு எனக்கும் இல்லை சியாமளா அத்தைக்கும் இல்லை” என்று முடிக்க, பேச்சு வேறு திசைக்கு போனது.

    ”அத்தை திட்டுவாங்க என்று பயமா?” என்றான் கௌதம்

    ”அதுவும் தான்” என்றவள் அவனிடம் சரளமாக பேசினாள்.

    ”அன்னைக்கு ஹோட்டலில் என்னோட தங்கியதை அத்தைகிட்ட சொல்லலையா?” என்று கேட்டான். 

    ”இல்லை யார்கிட்டயும் சொல்லலை. அம்மா கண்டிப்பா தப்பா தான் பேசுவாங்க. அவங்களை பற்றி தான் தெரியுமே. நீங்க ஆச்சிகிட்ட” என தயங்கினாள்.

    ”சொல்லலை. தப்பா எல்லாம் நினைக்க மாட்டாங்க ஆனா வேண்டாம் என்று தோணுச்சு”

    ”ஜோதி வந்துட்டா நான் உனக்கு அவள் நம்பர் சென்ட் பண்றேன்” என்று பேசி வைக்க, நம்பர் சென்ட் பண்ணியதும் அவளுக்கு அழைத்தாள்.

    ”ஏய் ஜோதி இது யார் நம்பர்?”

    ”அண்ணி இது அண்ணா எனக்கு வாங்கி கொடுத்த சாம்சங் போன்” என மகிழ்ந்தாள்.

    ”சிவா என்கிட்ட சொல்லவே இல்லை” என்று சாதானா கேட்டாள்

    ”அண்ணி கௌதம் அண்ணா வாங்கி கொடுத்தாங்க”

    ”ஓஹோ. பரீட்சை எப்படி பண்ணி இருக்க?”

    ”சூப்பரா எழுதி இருக்கேன். அண்ணி ஊருக்கு வருவீர்களா லீவுக்கு போவேன்”

    ”ஹ்ம் ட்ரை பண்றேன் ஜோதி”

    ”ட்ரை எல்லாம் இல்லை நீங்க வர்றீங்க” என்ற பேச்சில் கௌதம் அவள் ஊருக்கு போனால் தானும் போக வேண்டும் என்று முடிவே செய்து இருந்தான்.

    அங்கு சனாவோ கௌதம்மிடம் இன்று ஹோட்டல் சந்திப்பு போன் பேச்சு இரண்டிலும் மனம் நிறைந்தவளாக அவள் கப்போர்ட் திறந்து அவன் பேட்டி வந்த புத்தகத்தை எடுத்து புரட்டினாள். அதில் அன்று அணிந்த பிஸ்தா க்ரீன் சட்டை கொண்ட புகைப்படம் இருக்க அதனை ஆயிரம் முறை எடுத்து பார்த்து ரசித்தாள்.

    அது மட்டுமா முதல் முறையாக அவன் காரில் இருந்து இறங்கி கழற்றி கொடுத்த சட்டையினை எடுத்து கன்னத்தில் வைத்து பின்னர் அதற்கு முத்தமும் வழங்கினாள்.

    நாட்களில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை எனினும் இனிமைக்கு பஞ்சமின்றி கௌதம்முடன் பேசிட குறுஞ்செய்தி அனுப்பிட என்று பேசி மனதில் புத்துணர்வை எழுப்பியது.

    நினைவுகள் தொடரும். 

    பிரவீணா தங்கராஜ். 

  • தித்திக்கும் நினைவுகள்-9

    அத்தியாயம்–9

    பைக்கில் கௌதம் மற்றும் ஜோதி போய் கொண்டு இருக்கும் போது அவர்களை குறுக்கே வந்து நின்றது ஒரு ஸுகூட்டி.

    சடேன் பிரேக் போட்டு நிறுத்தி கோவமாக திட்ட வாயை திறந்தான் கௌதம் அந்த நேரம் முகத்தை பார்க்க அவன் சனா நின்றிருந்தாள்.

    ”ஹாய் அண்ணி நீங்களா? நல்ல வேளை அண்ணா திட்டறதுக்குள் தப்பிச்சீங்க” என்றதும் அவனை பார்க்க சாதனா உடனே ஜோதியை பார்த்து,

    ”உன்னை பார்த்ததும் தான் வண்டியை குறுக்கே நிறுத்தினேன். ஆமா எங்க இந்த பக்கம்” என்றாள்.

    ”அண்ணி சின்னதா ஷாப்பிங்” என்றதும் ஜோதியை பார்த்தவள் அவளின் நடை உடை பேச்சு வித்தியாசம் உணர்ந்தாள்.

    ”ஓஹ் உங்க அண்ணா பர்ஸ் காலி பண்றியா?”

    ”போங்க அண்ணி” என்றாள் ஜோதி

    ”ஜோதி அண்ணி வரும் வரை அண்ணா உனக்கு செலவு பண்ண என்னவாம் அவளுக்கு” என்று கௌதம் கேட்க இவன் யாரை அண்ணி என்று சொல்கின்றான் என்று தவித்தவள் பேச்சினில் திகைத்தாள்

    ”எப்போ வந்த ஜோதி வீட்டுக்கு வரவே இல்லை” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

    ”அண்ணி நான் இங்க தான் அண்ணா வீட்ல இருந்து காலேஜ் போறேன் சிவா அண்ணா சொல்லவில்லை யா?”

    ”இல்லை” அவனுக்கு காதல் கதை சொல்றதுக்கே நேரமில்லை என்று மனதினுள் எண்ணினாள்.

    ”அண்ணி இங்க தானே உங்க வீடு?” என்று ஜோதி கேட்டாள்.

    ”அடிப்பாவி தெரிஞ்சும் வரமா இருந்து இருக்க?” என்று சனா சண்டை பிடிக்க நின்றாள்.

    ”அச்சச்சோ அதெல்லாம் இல்லை இப்ப தான் யோசிச்சேன் ஆனா எனக்கு உங்க வீட்டுக்கு வழியெல்லாம் தெரியாது” என்று சமாளித்தாள்.

    ”சரி அப்போ இப்ப வாங்க” என்று ஆவலாக கௌதமை பார்க்க ஜோதியும் அண்ணாவை தான் பார்த்தாள்.

    ”குட்டிம்மா போகலாமா வேண்டாமா டா?” என்றான் குறும்போடு. சனாவை அளவிட்டு அவளின் செல்ல கோபத்தை ரசித்தபடி இருந்தான்.

    ”அண்ணா போகலாம் ப்ளீஸ்” என்றாள் ஜோதி. சனாவும் கண்களால் இறைஞ்சினாள்.

    அவளின் ஸ்கூட்டியை பின் தொடர்ந்தான். இரு தெரு தள்ளி அவள் வீட்டுனுள் நுழைந்து அவனை வரவேற்க துவங்கினாள்.

    ”வாங்க…. வா ஜோதி” என்று அங்கிருந்த அவளது துப்பட்டாவை எடுத்து அறையில் வைத்து சோபாவில் இருக்கு அவளின் id கார்டு எடுத்து ஹாங்கரில் மாட்டினாள்.

    ”உட்காருங்க….” என்று அவனுக்கு கையை காட்டி ”ஜோதி உட்காரு இதோ வந்துடறேன்” என்று கிட்சேனுள் நுழைந்தவள். தனக்கு காபி டீ போடா தெரியாது என்று அறிந்து தலையில் அடித்து கொண்டு பிரிட்ஜில் இருக்கும் appy ஜூஸ் எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி தட்டில் எடுத்து வந்து நீட்டினாள்.

    ”டீ கிடைக்கும் என்று பார்த்தேன்” என்று அவள் கையில் குடிக்கும் நோக்கத்தோடு சொன்னான்.

    ”ஐயோ அண்ணா அண்ணிக்கு சுட தண்ணி கூட வைக்க தெரியாது” என்று போட்டு கொடுத்ததும் சாதனா முகம் கருத்து விட்டது.

    ”அண்ணி அண்ணாவுக்கு எல்லாம் சமைக்க தெரியும் தோசை உப்புமா சிக்கன் குழம்பு மீன் ப்ரை …” இன்னும் சொல்லிக் கொண்டே போனாள்.

    ”குட்டிம்மா யாருக்காவது ஒருத்தருக்கு சமைக்க தெரிஞ்சா போதும் டா” என்றதும் சாதனா கருத்த முகம் சட்டென ஒளி பெற அவனை பார்த்தது.

    ”யாரு… ஜோதியா வந்து இருக்கறது. யார் கூட வந்த என்று மாடி படி வளைவில் கேட்டுக்கொண்டே வந்த தாமரைக்கு

    ”அண்ணா கூட அத்தை” என்றாள் ஜோதி.

    ”சிவா” என்று கௌதம் முன் வர அவனை கண்டதும் ”இவன் தான் அண்ணனா?” என்ற அலுப்பு தெளிவாக ஜோதிக்கு புரிந்தது.

    ”அம்மா ஜோதி சென்னையில் தான் இருக்கலாம். இங்க தான் படிக்கறா?” என்று சாதனா கூறினாள்

    ”தெரியும் தெரியும் சிவா சொன்னான். ஏன் ஜோதி சென்னையில் படிக்கணும் என்றதும் அத்தை வீட்டுக்கு வர வேண்டியது தானே. ஏன் கண்டவங்க வீட்ல போய் படிக்கணும்” என்ற பேச்சில் சுருக்கென நிமிர்ந்தான் கௌதம்

    ”அது என் அண்ணா வீடு” என்ற ஜோதி பதிலில் சாந்தம் ஆனான்.

    ”ஜோதி நீ கிளம்பு ஏதோ எக்ஸாம் படிக்கணும் என்று சொன்னளே…” என்று சாதனா கண்களில் போ என்பது போல சொல்ல அவளுக்கு தனது அண்ணா இங்கு இந்த பேச்சை கேட்டு இருக்க பிடிக்காமல் ”அண்ணா கிளம்பலாம்” என்றாள்.

    வெளியே வந்து அவனுக்கு மரியாதையை தர விருப்பம் இன்றி ”ஜோதி போய் போன் செய்” என்றதும் ”சரி அத்தை” என கிளம்பினாள்.

    ”ப்ளீஸ் அம்மா பேசியதை மனசுல வச்சிக்காதீங்க” என்ற அவளின் பேச்சினை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜோதி ஏறியதும் கை அசைத்து வழி அனுப்பியவள். ‘சே இந்த அம்மா நல்லா போயிக்கிட்டு இருந்ததை ஸ்பாயில் பண்ணிட்டாங்க‘ என்று கலங்கினாள். அவரா ஏதோ சொன்னார். வீட்ல ஒருத்தருக்கு சமைக்க தெரிஞ்சா போதும் என்று அப்படினா என்ன அர்த்தம்? அது எனக்கான பேச்சு தானா?

    அடுத்த நாள் மாலதியிடமும் சொல்லி குறைபட்டாள். அவன் ஏதோ நல்லவிதமாக பேச தனது தாய் தான் இடைக்காக பேசி சொதப்பியதும்… இன்னும் தான் அவனிடம் போனில் பேச முடியாமல் தவிர்ப்பதும்….

    ”ஏய் எதுவும் இந்த கீர்த்திகிட்ட சொல்லிடாதே டி. அப்பறம் அவ சிவாகிட்ட சொல்லிடுவா” என்று சொல்லியும் விட்டாள்.

    ”ஆமா உனக்கே இது என்ன என்று புரியலை இதுல அவகிட்ட வேற என்னனு சொல்ல. முதலில் நீ விரும்பறியா?”

    மவுனமாக இருந்தவள் ”நீ சொன்னது உண்மை மாலதி நான் எப்போ இருந்து விரும்பறேன்னு தெரியலை. கௌதம் மாமா வராததால் போகாம இருந்தேனே அப்போ இருந்தேவா இல்லை அவரை ரவீந்தர் மாமா இறந்தப்ப பார்த்த அந்த நாளில் இருந்தா இல்லை அதன் பிறகா என்று புரியலை பட் மனசுக்குள் வந்துட்டார்”

    ”ரொம்ப தான் மரியாதை பலமா இருக்கு கார்த்திக் உனக்கு இது ஓவர் டா” என்று சொல்லியவளை முறைத்து பார்க்க மாலதி அங்கு இல்லை. இவளுக்கு பயந்து அவளது கேபினுக்கு சென்று இருந்தாள்.

    அங்கு கௌதமிற்கு ஜோதியிடம் இருந்து சனா எண்ணை வாங்க விருப்பம் இல்லை. அவளாக இரண்டு முறை பார்த்து இருக்கின்றான். ஏன் அவனோடு தங்கியே இருக்கின்றாள். அப்பொழுது கொடுக்கவில்லை. இப்பொழுதும் எண்ணை பரிமாறி கொள்ளவில்லை. அன்று காஞ்சீபுரத்தில் இருந்து அவள் பஸ்ஸில் அனுப்பிய பிறகு போய் சேர்ந்தது விட்டதாக சொல்லுவாள் என்று ஆவலாக இருந்தான். ஆனால் அவளிடம் இருந்து அழைப்பும் குறுஞ்செய்தியும் வரவில்லை என்ற போதே அவள் சிவாவிடம் சொல்லி இருப்பாள். சிவா அதற்கு இவளை திட்டி இனி கௌதம்மிடம் பேசாதே என்று சொல்லி இருப்பான் என்று எண்ணி இருந்தான்.

    தவறியும் அவளுக்கு அவன் எண் தெரியாது என்று நினைக்கவில்லை. ஏன் என்றால் அசோக்கிடம் அவன் எண் இருக்கு என்பதால்…

    இப்படியே சில நாட்கள் செல்ல மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

    அந்த ஹோட்டலில் அங்கே டேபிளில் மீன் சிக்கன் மட்டன் இறா எல்லாம் குடும்பமாக வகை வகையாக சமைக்கப்பட்டு ருசிப்பார்க்க எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றார் வெய்ட்டர். உணவு உண்ணுவதில் மும்முரமாக இருந்தார்கள் கௌதம் மற்றும் அவன் நண்பர்களான நிஷாந்தினி, சத்யா, சுந்தர், ரேஷ்மி சாப்பிட்டு கொண்டே அரட்டையில் மூழ்கினார்கள்.

    அப்பொழுது, ”கௌதம் உடனே பார்க்காதா உனக்கு ரைட் சைடுல மூணு பேரு உட்கார்ந்து இருக்காங்க அதுல ஒரு பொண்ணு உன்னையே முறைச்சு பார்க்கறா” என்று நிஷாந்தினி சொன்னாள்.

    ”முறைக்கறாளா? இருக்காதே எப்பவும் அவனை யாராவது பொண்ணுங்க சைட் தானே அடிப்பாங்க” என்றான் சத்யா.

    ”அதான் டா வித்தியாசமா இருக்கு அதனால தான் சொன்னேன்” என்று நிஷாந்தினி சொல்லி முடிக்க தனது கூலிங் கிளாஸ் அணிந்து அவள் சொன்ன பக்கம் பார்க்க அங்கே முறைத்து கொண்டு இருந்தது சாட்சாத் சாதனா தான்.-நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ். 

  • தித்திக்கும் நினைவுகள்-8

    அத்தியாயம்-8

    பாதி தூரம் சென்றதும் தான் ‘சே கௌதம் மாமா நம்பர் வாங்கிக்கவே இல்லையே அஷோக்கிட்ட கேட்கலாமா? வேண்டாம் ஏற்கனவே நான் ஷாக்காகி இருந்தப்ப என்னை ஒரு மாதிரி லுக் விட்டான். இப்போ நம்பர் கேட்டேன் அவன் ஏடாகூடமா நினைப்பான். சென்னை போய் மாலதிகிட்ட வாங்கிக்கலாம் ஆபிஸ்ல இருக்கும்.

    தனது பேக்கை கட்டிலில் வைத்து விட்டு இன்றே மாலதி வீட்டிற்கு போய் நம்பர் வாங்கலாமா? வேண்டாம் சாதனா மனசுக்கு ஒரு பட்டிமன்றம் வைத்து பிறகு கொஞ்சம் பிரேக் கொடு வெயிட் பண்ணியே வாங்கு என்றதும் சரி என்று தோன்றியது.

    ”என்ன நீ தனியா பேசிகிட்டு இருக்க? குளிச்சியா? இல்லையா? போ போய் இந்த டிரஸ்சை மாற்று” என்றதும் எழுந்து குளிக்கச் சென்றாள்.

    எனக்கு பதில் இந்த அம்மாவை ரிப்போர்ட்டர் வேலைக்கு அனுப்பனும் எப்ப பாரு கேள்வி கேட்டு முறைச்சுக்கிட்டு… என்று அன்றைய நாள் முடிய.

    ஆபிஸ் வந்ததும் வராததும் நேராக இரண்டு முறை மாலதி கேபினுக்கு சென்று திரும்பினாள். எருமை சீக்கிரம் வர்றாளா பாரு… என்று திட்டிக்கொண்டு இருக்க இவள் முனங்குவதை வரும்போதே பார்த்துவிட்டு,

    ”ஏய் ஏன் டி இப்படி வந்ததும் திட்ட வந்துட்ட? அதான் மன்னிப்பு கேட்டேனே” என்று மாலதி பாவமாய் கூறினாள்.

    ”நான் மன்னிக்கறேன் எனக்கு முதலில் கௌதம் நம்பர் வேணும்”

    ”அய்… உங்க அத்தை பையன் நம்பர் உனக்கு தெரியாதா?”

    ”விளையாடாதே நானே ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்தேன்” என்று அவனை சந்தித்த நிகழ்வை சொல்லி முடிக்க,

    ”சோ மேடம் லவ் பண்றிங்களா?”

    ”அதெல்லாம் இல்லை… எனக்கு அவரை பிடிக்கும்”

    ”எனக்கு மட்டும் இப்படி ஒருத்தன் இருந்தான் விட மாட்டேன் உனக்கு தோணலயா?”

    ”பச் மாலதி அதெல்லாம் தோணுதோ இல்லையோ என் மாமா எனக்கு அந்த வயசுல இருந்தே பிடிக்கும். என்னை அவர் ஒரு முறை துரத்திக்கிட்டு வந்தார் அப்போ வேதவள்ளி அவரோட ஆச்சி அவர் கையை புடிச்சுகிட்டு என் மேகலை இறந்த இந்த வீட்ல இனி என் பேரன் வர மாட்டான். நீங்களே இந்த வீட்ல இருந்து வாழுங்க. என் பேரனை நானே வளர்த்துப்பேன் என்று சொல்லிட்டு கூட்டிட்டு போனாங்க.

    அப்போ சும்மா சொல்லறாங்க என்று இருந்தேன் அப்பறம் நிஜமாவே என் மாமா இல்லை. ரெண்டு வருஷம் போய் போய் பார்த்து சிவாவை கேட்டேன். அவன் இனி என் அண்ணா இல்லை இனி அவன் இங்க வரமாட்டன் என்று சொன்னான்.

    அதோட எனக்கும் அங்க போக பிடிக்கலை. சிவா ஜோதி மட்டும் எங்க வீட்டுக்கு வருவாங்க. சம் டைம் சிவா அப்பறம் ரவீந்தர் மாமா வீட்டுக்கு வருவாங்க. அவர் கௌதம் மாமாவை பார்க்க போயிட்டு கவலையா வருவார். அப்போ சிவா கூட கௌதம் பேச மாட்டார் போல அதனால் சிவா நான் அவனை பார்க்க வரமாட்டேன் என சொல்லிட்டு இருப்பார். மாமா சிவாவை எங்க வீட்ல விட்டுட்டு கௌதம் மாமாவை பார்க்க போவார். எப்போ போனாலும் திரும்ப வரும் போது சோகமா இருப்பார்.

    அவன் எல்லாரையும் மறந்துட்டான் பேச மாட்றான்…என்றே சதா அழுவார் அதனால் என்னையும் மறந்து விட்டார் என்று நினைத்து இருந்தேன் . ஆனா அவருக்கு என்னை நல்லா நினைவு இருக்கு.“

    ”இப்போ மனசில் காதல் இருக்கா இல்லையா? அத சொல்லு?”

    ”இது காதல் இல்லை அபக்ஷன்” என்றாள் சாதனா.

    ‘ஓகே இவ இப்ப இப்படி தான் சொல்லுவா அவளுக்கே தெரியாம சேவகம் செய்தவ… அவனோட தனியா தங்க செய்து இருக்கா? இவளுக்கே அது காதல் என்று புரியலை. ஓகே இப்ப நம்பர் கொடுப்போம் அது காதலா மாறி அவளே சொல்லுவா. என்னையும் கீர்த்தியும் விட்ட இங்க யாருகிட்ட சொல்லிட போற‘ என்றே

    ”இந்தா இது தான் உன் கௌதம் மாமா நம்பர்” என்று பத்து இலக்கம் கொண்ட என்னை நீட்டினாள்.

    ”தேங்க்ஸ் மாலதி” என்று பெற்றுக் கொண்டு மாலதியை கட்டி அணைத்து சிறு பிள்ளையாய் ஓடினாள்.

    ‘ஜஸ்ட் நம்பர் கொடுத்ததிற்கே கட்டி பிடி வைத்தியம் பண்றா கொஞ்ச நாளில் வந்து ஐ லவ் கௌதம் என்று என் முன்ன நிற்க போற அப்போ இருக்கு‘ என்றாள் மனதினுள் ஆருடம் பார்த்தாள்.

    கௌதம் எண்ணை கௌதம் மாமா என்றே சேவ் செய்ய அடுத்த நொடி (வாட்ஸப்பில்) புலனத்தில் அவன் முகம் கருப்பு நிறகாரில் சாண்டல் சட்டை அணிந்து அவன் காரில் சாய்வாக நிற்கும் புகைப்படம். வாவ் செமயா இருக்கு பிச்சர். மனதில் சொல்லி கொண்டவள் அவனுக்கு மெசேஜ் typing செய்து சென்ட் செய்யாமல் அதனை அழித்து முடித்தாள். இப்படியே இரு தினம் செய்துக் கொண்டு இருந்தாள்.

    ஒரு முறை கால் செய்தாள். அடுத்த நொடி என்ன பேச என்று புரியாமல் நிற்க அவன் நம்பர் எப்படி கிடைச்சது என்று கேட்டால் என யோசிக்க அழைப்பதையே விட்டுவிட்டாள்.

    ஒரு வாரம் போன பிறகு மாலதி சாதனாவிடம் கேட்க செய்தாள்.

    ”உங்க மாமா என்ன சொல்றார் பேசினியா?”என்றதும் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

    ”ஏன்?”

    ”எப்படி பேச என்ன பேச?” என்றவளை முறைத்து ”இதுக்கு தான் என்கிட்ட அப்படி ஆசையா நம்பர் கேட்டு வாங்கிட்டு போனியா? கால் பண்ணு தானா பேசிடுவ” என்றாள்.

    ”பயமா இருக்கு” என்றாள் சாதனா

    ”யாருக்கு உனக்கா அடிப்பாவி பொய் பேசாதே கால் பண்ணு” என்ற அதட்டலில் அவளின் தைரியத்தில் கால் செய்தாள்.

    ”ரிங்க் போகுது மாலதி ஐயோ என்ன பேச” என்று புலம்ப மாலதி தலையில் அடித்துக் கொண்டாள். நேரம் ஆகின்றதே தவிர அவன் எடுப்பதாய் இல்லை என்ற பொழுது,

    ”ஹலோ கௌதம் ஹியர்” என்ற ஆண்மை ததும்பும் குரலில் பேச அந்தப் பக்கம் ரெஸ்பான்ஸே இல்லை என்ற முடிவுடன் கௌதம் போனை கட் செய்ய ”ஹலோ என்ற சாதனா குரல் கொடுக்க செல் அணைக்கப்பட்டு இருந்தது. கௌதமிற்கு அந்த நம்பர் கடைசி எண்ணை பார்த்தான் டபுள் த்ரீ என்று முடிய கால் செய்யலாமா? என்று நினைத்தவன் வேண்டாம் என விட்டுவிட்டான்.

    ”என்ன லைன் போகலையா? மீண்டும் கால் பண்ணு” என்றதும்

    ”இல்லை மாலதி அவர் எடுத்து ஹலோ சொன்னார் நான் பேசுவதற்குள் கட் ஆகிடுச்சு இனி நான் கால் பண்ண மாட்டேன். நீ சொன்னது போல இது லவ் என்றால் தானா இன்னோர் வாய்ப்பு வரும் அதுவரை காத்திருப்பேன்” என்றே கலங்கியவளை மாலதி ஆறுதல் மட்டுமே செய்தாள். காதல் வந்ததும் அவளை கேலி செய்ய காத்திருந்தவள் சாதனாவின் கவலையில் ஓகே இன்னோர் வாய்ப்பு வந்தா விடாதே” என்றாள்.

    மாலதிக்கும் சாதனாவை தூண்டிவிட மனமில்லை. காதல் வலியினை தருவது என்று புரியாதவள் இல்லையே.

    இதற்கிடையில் ஜோதி ஊருக்கு சென்று இருந்தாள். அவளை பார்த்த சியாமளா கண்களால் நம்பவே முடியவில்லை. முன்பு இருந்த ஜோதிக்கு நேர் எதிராக இருந்தாள். சிவா கூட அதிசயப்பட்டான். அவனுக்கும் சாதனா போல தன் தங்கை இருக்க வேண்டும் என ஆசை தான் ஆனால் சாதனாவிடம் பேசுவது போல ஜோதியிடம் அவன் பேசியதில்லை.

    ஜோதிக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டிய நேரம் வர சியாமளவிடம் கேட்டாள். அப்பொழுது சிவா ”ஏன் அவள் புது அண்ணாவை கேட்க வேண்டியது தானே” என்றான் இடக்காக,

    ”அண்ணா நான் கௌதம் அண்ணாகிட்ட கேட்டால் கொடுத்துடுவார் நான் தான் கேட்கலை” ஏன்றாள் ஜோதி.

    ”ஏன் கேட்கலை. அவன்கிட்ட போய் கேளு எப்படியும் கொடுக்க மாட்டான். அப்போ தான் கூட பிறந்த அண்ணாவுக்கும் அவனுக்கும் வித்தியாசம் புரியும் உனக்கு” என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னான்.

    சியாமளா ”நான் அவனிடம் பணம் வாங்கி உனக்கு அனுப்பறேன்” என்றதும் சரி என்று இருந்தாள். அதற்கு இரண்டு நாளில் கிளம்பி விட்டாள். பணம் வாங்காமலே.

    அடுத்த நாள் காலேஜ் போன பிறகே நினைவு வர அவள் வகுப்பு ஆசிரியரிடம் போய் நின்றாள்.

    ”மேம் என் செமஸ்டர் பீஸ் நான்…” என்று தடுமாறினாள்,

    ”உன் அண்ணன் கௌதம் கட்டிட்டார் ஏன் உனக்கு தெரியாதா? நீ தான் முதலில் பீஸ் கட்டியது” என்றதும் உறைந்து நின்றாள்.

    வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சியாமளாவிடம் தெரிவித்தாள். ”நீ சொன்னியா பீஸ் கட்டணும் என்று” அன்னை கேட்டதற்கு,

    ”இல்லைம்மா அண்ணாவுக்கு எதுவும் தெரியாது. நான் தான் முதலில் பீஸ் கட்டி இருக்கேனு மேம் சொன்னாங்க”

    ”சரி நீ வேற தொந்தரவு கொடுக்காத. நான் சிவாகிட்ட சொல்லிடறேன்” என்று அவனிடமும் சொன்னாள்.சிவாவிற்கு ஆச்சரியம் தான். தான் சிறு வயதில் அவனை பார்க்க தந்தையோடு செல்லும் போதெல்லாம் அவன் தந்தையை உதாசீனம் படுத்துவதை கண்டவன் தன்னிடமும் கௌதம் பேச முயலாதது சிவாவிற்கு பிடிக்காமல் தான் அவனும் தந்தையோடு போக மறுத்தான். ஆனால் ஜோதியிடம் நிஜமாகவே பிரியம் காட்டுகின்றான் என்பதில் மகிழ்ந்தான். 

    -நினைவுகள் தொடரும் 

    -பிரவீணா தங்கராஜ். 

  • தித்திக்கும் நினைவுகள்-6

    அத்தியாயம்-6

    கண்களை மெல்ல திறந்தவள் ஏதோ நிழல் போல படிந்திருப்பதை கண்டு மேலும் நன்றாக கண்களை திறந்து பார்க்க தன்னை சுற்றி ஒரு வலை இருப்பதை கண்டு அதை மேலே எடுத்துவிட்டு முகம் அலம்பி ப்ரெஷ் செய்து நிற்க, சூடான ஏலக்காய் டீ தயாரித்து ஆவி பறக்க கௌதம் எடுத்து வந்தான்.

    ”ஐயோ அண்ணா ஏன் நீங்க எடுத்துட்டு வந்து இருக்கிங்க நானே வருவேனே” என்று ஜோதி கூறினாள்.

    ”இது இந்த செல்ல தங்கச்சிக்கு இந்த கௌதம் அண்ணாவே தயாரித்த ஏலக்காய் டீ” என நீட்டினான். ,

    ”அண்ணா உங்களுக்கு டீ போடா தெரியுமா?” வியப்புடன் கேட்க,

    ”எல்லாம் தெரியும். ஸ்பெஷலி நான்வெஜ்”

    ”அண்ணா நம்பவே முடியலை. நீங்க நிமிர்ந்து நின்று பார்த்தப்ப பயம் தான் வந்துச்சு அப்படி ஒரு ஆளுமையோட இருந்திங்க முகம் எல்லாம் இறுகி கண்கள் சிவந்து கோவமான முகம்” என்றாள்

    ”இப்போ…?” என்றான் தலை சாய்த்து.

    ”சான்ஸ்சே இல்லை உங்களை கட்டிக்க போற அண்ணி கொடுத்து வச்சவங்க” அவள் அண்ணி என்றதும் அவன் மனம் சனாவை தான் எண்ணியது.

    ”அது என்ன வலை அண்ணா?”

    ”கொசு வலை டா குட்டிம்மா. ரூம் பிடிச்சிருக்கா?” என்று தோளில் கைப்போட்டு பேசியபடி ஹாலுக்கு வந்தான்.

    ”ரூம்மா அது செமயா இருக்கு அதுவும் அங்கிருக்கற பையின்ட்டிங் சூப்பர் அண்ணா”

    ”சரி வா ஹாலுக்கு போகலாம் அப்பறம் ஆச்சி பார்க்கலாம்”

    ”ஆச்சி?”

    ”உனக்கு அத்தை என்று சொல்லி இருப்பாங்களே” என்றான்.

    ”பயமா இருக்கு திட்டுவாங்களா?”

    ”நான் இருக்கேன் அப்பறம் பயம் ஏன் குட்டிம்மா”

    இருவரும் பக்கத்துக்கு அறைக்கு சென்று கதவை திறந்தான்.

    நெற்றியில் விபூதி அணிந்து நூல் சேலை அணிந்து ஒரு மூதாட்டி படுத்திருக்க கண்டாள்,

    ”என்ன வேதா இன்னுமா தூக்கம்?” என்றான்

    ”அடேய் நீ எப்போ வந்த காலையிலா இராத்திரிலயா?” என்றார் மூதாட்டி

    ”பேரன் வந்ததே தெரிலை இதுல பேத்தி வந்தது எப்படி தெரியும்?”

    ”நீ ஜோதியை அழைச்சுட்டு வருவதா சொன்னாலே எங்க டா அவ?”

    ”வேதா உன்னை பார்த்து ஜோதிக்கு பயம்” என பின்னால் இருந்த ஜோதியை முன்னுக்கு இழுத்தான்.

    ”என்னை பார்த்தா? ஏன் இங்க வா” என்றதும் ஜோதி அருகே வர அவளை கண்கள் சுருக்கி மேலும் கீழும் பார்த்து,

    ”அடேய் நீ சொன்னது போல தான் இருக்கா? நான் இவ வயசுல இப்படி தான் இருந்தேன். என் சாயலில் பெத்து இருக்கான் உன் அப்பன். என்னடா கண்ணு என்னை பார்க்க பயமா? இங்க பாரு உன் அண்ணனை என்னை பேரை வச்சி கூப்பிடறான்” ஜோதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தை திட்டுவார்கள் என்று இருக்க அவர்களோ தன்னை ஆசையாக வரவேற்கின்றார்களே என்று.

    ”ஏன் டி ம்மா என்கூட பேச கூடாது என்று இருக்கியா என்ன?”

    ”அத்தை… அப்படி இல்லை”

    ”நீ என்னை ஆச்சி என்றே கூப்பிடு. என்னை கண்டு பயப்படாதே சரியா”

    ”ஹ்ம் ” என்றாள்.

    ”சரி வேதா நீ இதுவரை பேசியதே போதும் ரொம்ப பேச வேண்டாம். அப்பறம் மூச்சு வாங்கும். நான் குட்டிம்மா கூட போய் டிரஸ் எல்லாம் வாங்கணும் போய் ரெடி ஆகு” என்றதும்

    ”எனக்கு எதுக்கு அண்ணா?” என்று தவிர்த்தாள்.

    ”அண்ணா வாங்கி தருவது எல்லாம் என் குட்டிம்மாவுக்கு தான். சரி நீ வீட்டுக்கு போன் செய்து பேசிக்கோ” என்று நகர்ந்தான்.

    காலையில் சாப்பிட்டு கிளம்பி மதியம் முடியும் வரை அவளுக்கு தேவையான ஆடைகளை எடுத்து அங்கே தைக்க கொடுத்ததும் சில சுடிதார்களை ரெடிமேட் ஆடையாகவும் எடுத்தான். அண்ணா போதும் என்பதை அவன் கேட்பதாகவே இல்லை.

    அருகே இருக்கும் ஒரு உயர் தர ஹோட்டலில் சாப்பாடை முடித்து விட்டு நகை கடைக்குள் நுழைந்தான்.

    ”அண்ணா இங்க எதுக்கு?” என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன்.

    ”குட்டிம்மா நீ இப்படி ஜிமிக்கி கம்மல் போட்டு கொண்டு காலேஜ்க்கு போன நல்லா இருக்காது. லைட் வெயிட் கம்மல் தான் பெஸ்ட் அதுவும் இல்லாம இப்படி பெரிய செயின் எல்லாம் போட்டுட்டு போனா பட்டிக்காடு என்று கேலி செய்தாலும் செய்வாங்க” என்று சொல்லிட

    தனக்கு அதிகமாக செலவு செய்வதை எண்ணி தயங்கினாள்.

    ”இங்க பாரு அண்ணா இவ்ளோ நாள் யாருக்கும் எதுவும் வாங்கி கொடுத்ததில்லை. முதல் முறையா என் தங்கச்சிக்கு என்று வாங்கி தர்றேன் ப்ளீஸ் டா” என்றதும் ஆச்சி திட்டுவாரோ என்ற பயப்பட்டாள்

    ”நானாவது பரவாயில்லை வேதா வந்திருந்தாங்க உன் கல்யாணத்துக்கும் சேர்த்து இப்பவே வாங்கு என்று என்னை விரட்டி இருப்பாங்க” என்றதும் சிரிக்க அவனின் சிரிப்பில் நிஜமாகவே பயம் களைந்தாள்.

    ஒரு வழியாக எல்லா ஆடைகளையும் வாங்கி காரில் வர இரவானது. இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடலாம் என்று கௌதம் சொல்ல வேண்டாம் அண்ணா வீட்ல போய் சாப்பிட்டுக்கலாமென சொல்லி விட்டாள்.

    வீட்டுக்கு வந்ததும் அவன் கையாலே தோசை வார்த்து அவளுக்கு நீட்டினான்.

    ”அண்ணா நிஜமா வர்ற அண்ணி கொடுத்து வச்சவங்க நீங்களே சமைச்சு அண்ணிக்கு ஊட்டி விடுவீங்க போல” என்றதும் அவனுக்கு சனா நினைவே தாக்கியது. இது என்ன ஜோதி அண்ணி என்று கூறும் போதெல்லாம் எனக்கு சனா நியாபகம் வருது. இரவில் அதை பற்றியே சிந்திக்கலானான்.

    காலையில் அலுவலகம் செல்லும் போது ஜோதியையும் அவனே அழைத்து சென்று கல்லூரியில் விட்டுவிட்டு மாலை “ஆட்டோவில் வந்துடு குட்டிம்மா” என்றான்.

    இப்படியாக ஜோதி கல்லூரிக்கு செல்லவும் மாலை வேதவள்ளியோடு அரட்டையும் படிப்பும் சியாமளவிடம் போனில் பேசியும் இரவு கௌதமோடு சாப்பிட்டு வாயாடி பொழுதைப் போக்கினாள்.

    ஒரு பக்கம் கிராமத்தில் வீட்டினை ஆல்டர் செய்ய அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்படியாக செல்ல அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பெரும் புள்ளியானா ஒரு சாமியார் இறக்க அதனை நேரில் போட்டோ கட்டுரை எடுக்க சாதனா சென்றாள்.

    அவளுக்கு உதவியாக அசோக் என்பவனும் சென்றிருந்தனர். அசோக் அங்கே தனது நண்பன் இருப்பதாக சொல்லி அங்கே தங்குவதாக சாதனாவை ஒரு தங்கும் வசதி கொண்ட ஹோட்டலில் இறக்கி விட்டு கிளம்பிவிட்டான்.

    அவன் சென்ற கொஞ்ச நேரத்திலே ஒரே கலவரம். அந்த சாமியார் மரணம் இயற்கையா? கொலையா? என்று அங்கே கோஷ்டி மோதலில் இருந்தது.

    ”மேம் இங்க ரூம் கிடைக்கும் என்று நம்பி என் பிரென்ட் கிளம்பிட்டான். இப்போ வெளியே வேற ஒரே கலவரம். ப்ளீஸ் இங்க தங்க எப்படியாவது ரூம் அரேஞ்சு பண்ணி தாங்க” என்று சாதனா கெஞ்சினாள்.

    ”இங்க பாருங்க மிஸ் இங்க ரூம் இருந்தது எல்லாம் ஜஸ்ட் அரை மணி நேரம் முன் தான் புக் ஆச்சு. இப்போ ஒரு ரூம் கூட காலியா இல்லை. எனக்கு உங்க நிலைமை புரியுது. பட் நான் என்ன செய்ய நான் ஜஸ்ட் ரிசப்ஷனிஸ்ட் என்னால என்ன செய்ய முடியும்” என்றாள் ரிசப்ஷன் பணிப்பெண்.

    இருவரின் உரையாடலை கலைக்கும் விதமாக ‘சாதனா” என்ற குரல் கேட்க அது கௌதம் குரலாயிற்றே… என்றே திரும்ப நிமிர்த்த நடையோடு அவளை நெருங்கிருந்தான்.

    ‘கௌதம் மாமா…‘ என்ற குரல் அவளுக்கே கேட்காது சொல்லி முடிக்க

    ”நீ எங்க இங்க”

    ”அது என் ஜாப் விஷயமா”

    ”ஓஹ் ஒன் செகண்ட் ரூம் கன்பார்ம் ஆகிடுச்சா என்று பார்த்துக்கறேன்” என்று ரிசப்ஷனிஸ்ட் பெண்ணிடம் ”ஆன்லைன் புக் பண்ணியது நேம் கௌதம்” என்றே சொல்லிட ”வெயிட் சார்” என்றே அவள் கணினியை பார்க்க ”சார் இந்தாங்க உங்க ரூம் கீ” என்று நீட்டினாள்.

    ”தேங்க்ஸ் என்றே பெற்று கொள்ள திரும்ப ”சார் நீங்க ரெண்டு பேரும் ரிலேட்டிவ் வா?” என்றதற்கு கௌதம் சாதனாவை பார்க்க சாதனாவே ”ஆமாம்” என்றாள்.

    ”மேம் நீங்க சார் கூடவே தங்கிக்கலாமே? வெளிய வேற ஒரே பிரச்சனை. நைட் வேற நீங்க வெளிய போறது சேப் இல்லை” என்றதும் என்ன என்பது போல சாதனாவை பார்த்தான்.,

    ”அது வந்து இங்க ரூம் புக் பண்ண வந்தேன். எல்லா ரூமும் ஆட்கள் இருக்காங்க ப்ரீ இல்லை என்றார்கள் வெளிய வேற ஒரே கலாட்டா அதான் ரூம் எப்படியாவது கேட்டுட்டு இருந்தேன். நீங்க எனக்கு தெரிஞ்சவர் என்றதும் அவங்க உங்க கூட தங்க சொல்லறாங்க” என்று தயங்கி கூறினாள்.

    இரண்டு நொடி யோசித்தவன் ”உனக்கு ஆட்சபனை இல்லை என்றால் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை சாதனா” என்றதும் அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இருந்தும் வேறு வழி இல்லை என்ற பட்சத்தில் ”ஓகே நோ ப்ராப்ளம்” என்றதும் அங்கிருந்த பெண்மணியிடம் ஒரு நன்றி தெரிவித்து அவனோடு நடந்தாள்.

    அவனின் அருகே நடக்கும் போது தலையை நிமிர கூட மறந்து வைத்தாள்.

    அறைக்கு வந்த பிறகு உள்ளே ஒரு அறை இருப்பதை கண்டு நீ ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பாடு ஆர்டர் தந்துடறேன். நீ சாப்பிட்டியா?” என்றான்.

    ”இ…இல்லை” என்றாள் தயக்கத்துடன்.

    ”ஓகே நான் ஆர்டர் தந்துடறேன்” என்று போனில் கீழே இருக்கும் உணவகத்துக்கு போன் செய்து ஆர்டர் தந்துவிட்டு முகம் அலம்பினான். நல்ல வேளை அறையில் ஒரு பாத்ரூமும் ஹாலில் ஒரு பாத்ரூமும் இருக்க செய்தது. உணவு வந்ததும் அவள் தயங்கி வர,

    ”உட்கார்” என அவள் அமர ஒரு இருக்கையை இழுத்து போட்டான்.

    அவளுக்கு அவனே பரிமாறினான். ”இந்த அசோக் போன் கூட சுவிட்ச் ஆப் இருக்கு . ஒழுங்கா அவன் பிரென்ட் வீட்டுக்கு போனானா என்று தெரியவில்லை”

    ”நீ ஏன் அவன் கூட போகலை” என்று கேட்டான்.

    ”அவன் ப்ரெண்ட் பேச்சுலர். அதனால தான் அவன் மட்டும் கிளம்பிட்டான். என்னை இங்க இறக்கி விட்டுட்டு தான் கிளம்பினான். எனக்கு தான் ரூம் கிடைக்கலை” என்று சாப்பிட்டு முடிக்க,

    ”தேங்க்ஸ்”

    ”எதுக்கு?”

    ”தங்க …அனுமதிச்சதுக்கு”

    ”நீ என் ச… என் ரிலேட்டிவ் இது கூட செய்ய மாட்டேனா? நான் ரிலேட்டிவ் தானே? என்றே கேள்வி எழுப்ப, தலை குனிந்தபடி ”ம்” என்றாள்.

    ”தேங்க காட் நீ அந்த ரிசப்ஷனிஸ்ட் முன்ன உன் அம்மா மாதிரி கண்டவங்க தெரியாது என்றே சொல்லிடுவனு நினைச்சேன் நாட் பேட். என் கூட என்னை நம்பி தங்கவே செய்யற” என்றான்.

    எப்படி நான் ஒரு ஆடவனோடு தங்க ஒப்புக் கொண்டேன். கௌதம் என்பதாலா? ஆம் இதில் என்ன ஐயம் என்றது மனசாட்சி.

    ”நான் நீங்க என்பதால் தான் தங்க யோசிக்கலை . இல்லை என்றால் எப்படி யாவது ரிசப்ஷன் ரூம்ல சேரில் இருந்தே கூட இரவை ஓட்டி இருப்பேன்” என்று அவனோடு மட்டும் தான் என்பதை தெளிவாக்கினாள்

    ”தென் இந்த ஊருக்கு எதுக்கு வந்த?”

    ”இங்க இறந்தார்ல சாமியார் அவரை போட்டோ வித் கவர் ஸ்டோரி அது ரெடி ஆகிடுச்சு. பட் ரொம்ப நாளா கார்த்திக் என்று ஒருத்தன் பேட்டி எடுக்க இருந்தோம் அவன் இங்க நாளைக்கு நேரம் ஒதுக்கி தந்து இருக்கான். சென்னை தான் ஆனாலும் இங்க வந்து இருக்கான் அதனால இங்கயே பேட்டி முடிச்சுட்டு வர சொல்லிட்டாங்க. என் பேட் லக் ரூமே கிடைக்கலை”

    பேட் லக்கா எனக்கு குட் லக் என்றே மனதில் எண்ணியவன்.

    ”என்ன பேரு சொன்ன?”

    ”கார்த்திக். யங்கஸ்ட் மேன் சாப்ட்வெர் இன்ஜினீயர். ஆனாலும் இங்க காஞ்சிபுரத்துல இடம் வாங்கி ஆள் வச்சு விவசாயம் பண்றான். சோ மற்ற இளைஞருக்கு ஒரு ரோல் மாடல் என்ற விதமா ஒரு சின்ன கட்டுரை”

    ”ஓஹ் ஐ சீ. எப்போ மீட் பண்ண போற?”

    ”தெரியலை நாளைக்கு அசோக்கிட்ட சொல்றேன் என்று சொல்லி இருக்கான்”

    ”அவன் இவன் என்று சொல்ற சின்ன பையனா?”

    ”இல்லை கல்யாணம் செய்யற ஏஜ். இருபத்தி ஏழு என்று நினைக்கறேன். என் பிரென்ட் மாலதி அவகிட்ட அவன் வழிஞ்சு பேசியதா சொன்னாள். அதான் மரியாதை கொடுக்க தோணலை”

    முகம் இறுகி போனான் கௌதம். அவனுக்கு கால் வர,

    ”ஓகே சாதனா நீ ரூமில் போய் தூங்கு இந்த வாட்டர் பாட்டில் எடுத்துக்கோ. லாக் பண்ணிக்கோ. குட் நைட்” என்றே போனை ஆன் செய்தான்.

    தலையை ஓகே என்று செய்து உள்ளே நுழைந்ததும் அறை கதவைச் சாற்றினாள்.

    ‘சே இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம் இந்த கால் வந்து கெடுத்துடுச்சு. பேசிய வரை அந்த யூஸ்லேஸ் கார்த்திக் பற்றி பேச்சா போயிடுச்சு‘ என்றே கவலை கொண்டாலும் இன்று அவளுக்கு மறக்க முடியாத நாளாகவும் இருந்தது.

    யாரிந்த மாலதி சே நல்லா ஸ்பாயில் பண்ணி வச்சி இருக்காளே?ஆனாலும் என் சனா என்னோடு தங்க தயங்காமல் வந்தாளே அதுவே அவனுக்கு சந்தோசம் தந்தது. சனா அவனோடு தங்குகிறாள் என்றால் அவள் என் மீது எப்பேர்பட்ட நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் என துள்ளினான்.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ் 

  • தித்திக்கும் நினைவுகள்-5

    அத்தியாயம் -5

    ஜோதியினை ஐந்து வயதில் பார்த்த குழந்தை முகம் இன்று கல்லூரி அடியெடுக்கும் வயதில் பார்க்கின்றான் அதுவும் சிறு வயது வேதவள்ளி ஆச்சியின் சாயலில்… இருக்காதா பின்னே அத்தை முகம் சாயலில் பிறந்து இருக்கும் ஜோதி. வேதாவின் பழைய போட்டோவில் கண்டது போலவே பாவாடை தாவணியில் பார்த்தால்…

    எப்பொழுதும் உணவு மேலயே வந்து விடுவதால் கீழே செல்லும் வேலையே வருவதில்லை என்பதால் இம்முறை கீழே போய் சுற்றி பார்க்கலாம் என்று வந்தான்.

    ஹாலில் நுழைந்து பார்த்தபொழுது அங்கே தனது தந்தை குடும்பம் சகிதம் எடுத்த புகைப்படம் அவனை வரவேற்றது.

    தன்னோடு அவர் அப்படி எடுக்கவில்லை என்று தோன்றும் வேளை தான் அவரிடம் பதினைந்து வயதில் இருந்து பேசுவதில்லை என்ற உண்மை மனம் எடுத்துரைக்க இது அவர் தவறில்லை என்று நகர்ந்து அறையை கவனித்தான்.

    அங்கே தாமரை சிவா சாதனா ஜோதி எல்லோரும் பேசிக் கொண்டு இருக்க இவன் வந்ததும் சிவா நிமிர்ந்து பார்க்க முயலவில்லை. சாதனா மட்டும் கண்களை சுழற்றி செய்வது அறியாது திகைப்பது புரிய தாமரை முகத்தை நொடித்து கொள்ள, ஜோதி மட்டுமே ”அண்ணா வாங்க உட்காருங்க” என்று அன்புடன் அழைத்தாள்.

    ”இல்லை டா குட்டிம்மா வீடு ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறேன் நீ பேசு” என்று நகர கிட்சேன் சில இடங்களில் கீறல் இருக்க கண்டவன் பின்வாசலை பார்க்க அங்கு கிணத்தின் அருகே இருக்கும் கல் பக்கத்தில் சியாமளா அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்ப்பதை அறிந்து சப்தமில்லாமல் வெளியேறினான்.

    அவன் வயலினை தாண்டி இருக்கும் அரசமரத்தடிக்கு செல்ல போவதை அறிந்து ஜோதி அவனோடு சேர்ந்தாள். அப்படியே சாதனாவையும் இழுத்து வந்தாள்.

    ”ஜோதி நீ உன் அண்ணாவோடு போ” என்றதற்கு

    ”அண்ணி நீங்களும் இங்க வந்ததேயில்லை . வாங்க” என்று அழைத்துச் சென்றாள்.

    ஜோதி அங்கிருக்கு கால்வாய் நீரில் கால் பதித்து விளையாட, சாதனா தொட்டியில் இருக்கும் நீரை அவள் மீது தெளித்து விளையாடினாலும் அவள் கண்கள் கௌதமை அடிக்கடி பார்க்க மறக்கவில்லை.

    அவனோ அரசமரத்தடியில் கீழே முட்டி போட்டு எதையோ தேட அவன் தேடி வந்ததையும் கண்டான் .

    சட்டென புன்னகைக்க அவன் எதை கண்டு புன்னகை செய்கின்றான் என அவள் எண்ண அவனோ அவளை பார்த்து அந்த இடத்தையும் பார்த்து ‘சனா‘ என்று கூறிக் கொண்டான். அவன் எழுந்து அந்தப் பக்கம் நகர ஜோதி கவனிக்கவில்லை என்றதும் அம்மரத்தடியில் கீழே குனிந்து சாதனா பார்க்க ‘சனா‘ என்ற வார்த்தை கண்டு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க கௌதமை பார்க்க அவனும் அதே நேரம் அவளை கண்களால் இதயத்தில் நுழையும் போது பின்னால் இருந்து சிவா சாதனா கைப்பற்றினான்.

    ”வா உனக்கு இப்ப அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று மொட்டையாக கூறி இழுத்துச் சென்றான்.

    அவள் திரும்பி திரும்பி செல்வதை கண்டு வேறு எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தான் கௌதம்.

    ஜோதியும் பின் தொடர்ந்தாள். சாதனா சிவா மட்டும் அரை மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தனர். சாதனா சிவா முகம் மலர்ந்து பேசிக் கொண்டு வருவதை கண்டவன் 16 நாட்கள் முடிந்ததும் திரும்பிட வேண்டும் பிறகு வரவே கூடாது என்று நினைத்தான்.

    பதினாறாம் நாளும் வந்தவுடன் தந்தை புகைப்படத்தை வைத்து கும்பிட்டு கிளம்பிவிட்டான். சிறு வயது ‘சனா‘ வேண்டுமானால் அவனுக்கு சொந்தமாக இருக்கலாம். இப்பொழுது இருக்கும் சாதனா சிவாவிற்காக வாழும் பெண் என தவறாக நினைத்து மறக்க துவங்கினான். மறக்க முடியுமா?

    போன் மணி அடித்தது. ஜோதி தான் எடுத்தது.

    ”ஹலோ ஜோதி?”

    ”ஆ கௌதம் அண்ணா?”

    ”ஆமா டா. உனக்கு காலேஜ் சீட் வாங்கிட்டேன். நீ பி.பி.ஏ பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு சோ எப்ப வர்ற?”

    ”அண்ணா நிஜமா?”

    ”ஹ்ம்”

    ”ஆனா அண்ணா. காலேஜ் இங்கயே இல்லையா? அங்க என்றால் எப்படி?”

    ”என் அன்பு தங்கச்சி இந்த கௌதம் அண்ணா வீட்ல தங்கி படிக்கப் போறா”

    ”அண்ணா சிவா அண்ணா…. ?”

    ”நீ உன் அம்மாகிட்ட கொடு” என்றான். அவனின் உன் அம்மா என்ற சாடுதல் அவள் அறியவில்லை.

    ”அம்மா கௌதம் அண்ணா பேசறாங்க” என்று கொடுக்க அந்தப் பக்கம் என்ன பேசியிருப்பானோ ”சரிப்பா” என்று அமைதியாக போனை வைத்தாள் சியாமளா.

    ”ஜோதி நீ அங்க போய் படிக்க போற கௌதம் அண்ணாவுக்கு தொந்தரவு கொடுக்காதே… அப்பறம் வேதவள்ளி அத்தை ஏதாவது சொன்ன பெருசாக எடுத்துக்காதே” என்று தலையை வருடி விட்டாள்.

    ”போய் உன் டிரஸ் எடுத்து வை அண்ணா வந்துகிட்டு இருக்கானாம்” என்றதும் வேகமாக ட்ரெஸ் எடுத்து வைக்க முயன்றாள்.

    வீட்டிற்கு வந்ததும் சிவா விஷயம் அறிந்து ”ஏன் இங்க இருக்கற காலேஜ் போனா என்ன? அவன் வீட்டுக்கு எல்லாம் என் தங்கைச்சி போக வேண்டாம்” என்று சீறினான்.

    ”அண்ணா நான் படிக்கணும் என்று தான் சொன்னேன் சென்னை போய் படிக்கிறேன் என்று சொல்லவே இல்லை. கௌதம் அண்ணா ஏற்பாடு” என்று பயந்தாள்.
    சிவாவோ அவளை முறைத்து சியமளாவிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான்.

    சிவா அண்ணா பக்கம் பேசுவதா? கௌதம் அண்ணா பக்கம் பேசுவதா? தன்னால் இந்த சண்டை பேசாமல் படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்தாள் ஜோதி.

    கௌதம் வந்து நின்ற சமயம் ஓரளவு அவன் யூகித்து இருந்த ஒன்றே.

    ”ஜோதி கிளம்பளாமா?” என்றான் கௌதம்.

    ”அண்ணா நான் இங்கிருக்கற காலேஜ்ல படிக்கிறேன் இல்லை என்றால் எனக்கு படிப்பு வேண்டாம்” என்று சொல்லி முடிக்க,

    ”நீ என்னை அண்ணா என்று கூப்பிடறது உண்மை தானே. இந்த அண்ணா உன் கெடுதலுக்கு எதுவும் செய்ய மாட்டேன். என்னை என் அப்பாவோடு தான் வாழ விடலை இப்போ தங்கையை நினைக்கற உன்கூட கூட வாழ விடமாட்டாங்களா?” என்றதும் சியாமளா சிவா பேச்சினை எல்லாம் மறந்து,

    ”ஜோதி நீ அண்ணாவோடு போ” என்ற சியாமளா குரலில் விழித்து நிற்க,

    ”ஜோதி வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு வா” என்று சிவா அறையினை காட்டி நிறுத்தினான்.

    ”அண்ணா நான்…” என்றதும் சிவா கோவத்தில் வேகமாக வெளியேறி கிளம்பி விட்டான்.

    கட்டு பணம் ஒன்றை டேபிளில் வைத்து நாளைக்கு வீட்டை ஆல்டர் பண்ண ஆளுங்க வர்றாங்க முடிஞ்ச அளவு வீட்டிலே சப்பாடு டீ செஞ்சு கொடுத்துடுங்க” என்று சொல்லி பதிலை கேட்கச் செய்யாமல் கௌதம் அமைதியாக காரில் லக்கேஜ் ஏற்றி காரில் உட்கார்ந்தான். ஜோதி கிளம்பி சியாமளாவை பார்த்து தலை அசைத்தாள்.

    கௌதம் காரினை ஒட்டியபடி

    ”என்ன ஜோதி உன் ஆசையை என்கிட்ட சொன்னது தப்பா போச்சு என்று பீல் பண்றியா?”

    ”இல்லை அண்ணா ஆனா சிவா அண்ணா மனசை கஷ்டப்படுத்துறேனே என்று தோணுது”

    ”ஏன் ஜோதி அப்போ உன் கௌதம் அண்ணா மட்டும் கஷ்ட படலாமா?”

    ”அண்ணா… அப்படி இல்லை”

    ”லுக் ஜோதி நீ இவ்ளோ நாள் உன் சிவா அண்ணா கூட தானே வாழ்ந்த இப்போ த்ரீ இயர்ஸ் இந்த அண்ணா கூட இருக்கலாமே? அதுவும் இல்லாம நீ இங்க இருக்கற காலேஜ்ல படிப்பதை விட சென்னையில் படி உனக்கே வித்தியாசம் தெரியும்” என்று பேச்சை முடித்தான்.

    அவளுக்கும் பேச முடியவில்லை. அங்கு வேதவள்ளி அத்தை வேறு எப்படி நடந்து கொள்வார்களோ? என்ற திகில் கொஞ்சம் இருக்கவே செய்தது.

    வீட்டிற்கு வரும் போதே இருட்டி விட்டது. உணவு வரும் போதே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டதால் இறங்கியதும் ”குட்டிம்மா நீ போய் இந்த அறையில் தூங்கு மற்றதை காலையில் பார்க்கலாம்” என்றதும் சின்ன இருட்டில் அங்கிருந்த கட்டிலில் போய் உறங்கினாள். நீர் அருந்த வந்தவன் அவளின் கட்டிலில் இருக்கும் கொசு வலையை முழுதும் இறக்கி விட்டு சென்றான்.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ். 

  • தித்திக்கும் நினைவுகள்-4

    அத்தியாயம்-4

    சற்று தொலைவுக்கு சென்ற பின்னரே ”டேய் நில்லுடா என்ன கூப்பிட கூப்பிட மதிக்கமா போற” என கையை இழுத்தாள்

    ”பின்ன… பாரு சாதனா திடீர்னு வந்து அவன் எப்படி சொல்லலாம்” என்றான் சிவா

    ”டேய் உனக்கு என்ன பிரச்சனை?”

    ”உனக்கு தெரியாத ஜோதி கல்யாணம் முடிஞ்சா தானே எனக்கு கல்யாணம் பண்ண முடியும்”

    ”ஓஹோ அதானே பார்த்தேன்… டேய் உன் சுயநலத்துக்காக அவ படிப்பை ஸ்பாயில் பண்ற”

    ”உனக்கு தெரியாத நம்ம கல்யாண பேச்சை… இங்க கூட அத்தை பேசறாங்க. ஜோதி கல்யாணம் பண்ணிக்கிட்டா நான்…”

    ”டேய் டேய் போதும் நிறுத்து. அதுக்காக இப்படியா? எது நடந்தாலும் நான் உனக்கு துணையா இருப்பேன்”

    ”நிஜமா எது நடந்தாலும் இருப்பியா?”

    ”ஹ்ம் கண்டிப்பா. ஆனா ஜோதி படிப்பை தடை சொல்லாத”

    ”அவன் யாரு…?”

    ”ப்ளீஸ் அவன் இவன் என்று சொல்லாத எனக்கு பிடிக்கலை”

    ”என்ன திடீர் என்று மாறற நீ கூட அவனுக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு போற எனக்கு பிடிக்கலை. எனக்குன்னு பச்சை தண்ணி எடுத்து வந்து கொடுத்திருக்கியா?” என்றான் கோபமாக

    ”அய்யா சாமி நான் மாறலை. உன்னை விட பெரியவங்க. ஏன் நீ கூட முன்ன சின்ன வயசுல அண்ணா என்று தானே கூப்பிட்ட?”

    ”அது சின்ன வயசுல அதுக்குப் பிறகு நடந்ததை நான் மறக்கலை”

    ”ஓ காட் இப்ப நீ மறுபடியும் ஆரம்பிக்காத வா ஜோதி அழுதுகிட்டு இருக்கா வந்து சமாதானம் பண்ணு” என இருவரும் நடந்து வர கௌதமிற்கு சொல்ல இயலாத சினமும் வருத்தமும் வந்தது. அது ஏன் என அவன் உணர முயலவில்லை.

    ஒரு வழியாக ஜோதி படிக்க ஒப்புதல் அளித்து விட்டான். அந்நாளில் இருந்து ஜோதி ஒரு புது பறவை போல பறந்தாள்.

    கௌதமிற்கு உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு பேசியப்படி இருந்தாள் ஜோதி. தற்போது சாதனா உணவு எடுத்து வருவதில்லை. முதலில் அவன் அதை உணரவில்லை பின்னரே சாதனா தனக்கு கொண்டு வருவதில்லை என உணர்ந்தான்.

    காலையில் வந்த பாட்டிகளில் ஒருவர் சாதனாவை வேறு பொஞ்சாதியா என்று கேட்டது நினைவு வந்தது. அதற்கு தான் ஏன் இல்லை என்று கூறாமல் கல்யாணம் ஆகவில்லை என்று மட்டுமே சொன்னேன்.

    அது மட்டுமா அன்று சட்டையினை கழற்றி உரிமையாக அவளிடம் உரிமை என்பானேன் மனைவி போல கொடுத்து விட்டு சென்றேனே… அதுவும் ஏன். அவளும் தான் மறுத்து விடாது அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

    இன்னோரு மனமோ அவனிடம் ‘டேய் கௌதம் தாமரை அத்தை சிவாவுக்கு தான் சாதனா என்று சொன்னது நினைவு இல்லையா? அது மட்டுமா சிவா கோவித்துக் கொண்டு சென்ற போது பின்னாடியே சென்று அவனை சமாதானம் செய்தாள். அதனால் அவளை உன் மனதில் இருந்து தூக்கி எரிந்து விடு… என்றது மனம். அவனோ எப்பொழுது அவள் என் மனதில் வந்து அமர்ந்தாள் என்ற கேள்விக்கு தெரியலை என்று பதிலை தந்து கயிற்று கட்டிலில் படுத்து சிறுவயது நினைவை நினைக்க துவங்கினான்.

    அப்பொழுது கௌதமிற்கு பதினான்கு வயது இருக்கும் சிவாவிற்கு பனிரெண்டு வயது, சாதனாவிற்கு பத்து வயது, ஜோதிக்கு ஐந்து வயது இருக்கும். சியாமளா மேகலை இருவருமே தங்கள் குழந்தைகளை வேறுபடுத்தி பார்த்தது இல்லை அதனால் குழந்தைகளும் அப்படி எண்ணாமல் சிவா, ஜோதி இருவருமே கௌதமை அண்ணா என்றே அழைத்து இருந்தார்கள். சாதனா கௌதமை கௌதம் மாமா என்றே அழைப்பாள்.

    பெரும்பாலும் கௌதம் சிவாவிடம் விட்டு கொடுப்பான். அதே போல ஜோதி சிறு குழந்தை என்று ஆசையாக தூக்கி கொஞ்சுவான். சாதனாவும் குண்டு குண்டு கன்னம் கொண்டு அவனை கௌதம் மாமா என்று அழைக்கும் போது அவளையும் ரசிப்பான்.

    சாதனாவிற்கு தன்னிடம் சண்டை போடும் சிவாவை விட தனக்கு விட்டு கொடுக்கும் கௌதம் மாமாவை ரொம்பவே பிடிக்கும்.

    மிதிவண்டி ஓட்டி கீழே விழுந்த பொழுது தனது பாவாடை சட்டையினால் அவனின் ரத்தத்தினை துடைத்து விட்டு சிரிப்பாள். அவனை பிடிக்கும் என்பதால் அவன் கடித்து கொடுத்த மாம்பழம் கூட சங்கோஜமின்றி உண்பாள்.

    அவனுக்கும் அவளின் கொலுசொலி சப்தத்தில் பாவாடை தரையில் பிறழ நடக்கும் விதமும் ரசிப்பான்.

    அன்று சிறு தூறலில் அங்கிருந்த பெரிய அரச மரத்தடியில் சாதனா என்பதை சனா என்று எழுதிக் கொண்டு இருந்தான். அதை பார்த்த சாதனா,

    ”ஐயோ கௌதம் மாமா உங்களுக்கு என் நேம் சரியாவே எழுத தெரியலை. சா க்கு பக்கத்துல கால் போடணும் அப்பறம் தா நடுவுல வரணும் என்று சொல்லி முடிக்க, அவனோ

    ”இல்லை sathana நான் இங்கிலிஷ் லெட்டர்ல பஸ்ட் டூ லெட்டர் தென் லாஸ்ட் டூ லெட்டர் சேர்த்து உன்னை sana ‘சனா‘ என்று கூப்பிட இப்படி எழுதி இருக்கேன்” என்றான்.

    ”அப்போ என் பேர் சனா என்று கூப்பிடுவாங்களா?”

    ”சே சே எல்லோரும் அப்படி கூப்பிடமாட்டாங்க நான் மட்டும் தான் ‘என் சனாவை‘ அப்படி கூப்பிடுவேன்” என்றான்.(அப்பவே வா)

    ”வாவ் சூப்பர்” என்று கை தட்டி சிரிக்க,

    ”நான் உன்னை இப்படி கூப்பிட எனக்கு நீ கிஸ் தரவே இல்லையே” என்று கன்னத்தை நீட்டி கேட்டான். குண்டு கன்னம் குட்டி பாப்பா என்ற எண்ணத்தில்.

    ” கௌதம் மாமா நான் சின்ன பொண்ணு பெரியவங்க தான் குட்டி பாப்பாவுக்கு கிஸ் தருவாங்க. அது மாதிரி நீங்க தான் தரணும்” என்று ஜோதிக்கு எல்லோரும் முத்தமிடுவதை எண்ணி அவள் சொல்ல,

    ”ஓகே அப்போ நான் தர்றேன்” என்று சாதனா கன்னத்தில் முத்தமிட்டான்.

    ”கௌதம் மாமா இந்த பக்கம்” என்று மற்றொரு கன்னத்தையும் சேர்த்தே முத்தம் வாங்கினாள். ”இப்பாவது நீ தருவியா?” என்று கேட்க,

    ”நோ நோ பாப்பாவுக்கு தான் எல்லோரும் முத்தம் கொடுப்பாங்க பாப்பா யாருக்கும் தர மாட்டாள்” என்று ஜோதியை பற்றி எண்ணி சொல்லி ஓடினாள். கௌதம் அவளை துரத்திக் கொண்டு ஓட அவளும் ஓடினாள்.

    அதே நேரம் வேதவள்ளி தனது தம்பி ரவீந்தரிடம் தனது மகள் மேகலை இறந்ததற்கு காரணம் சியாமளா தான். எந்த பெண் தனது கணவனை முழுதாக விட்டு கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழ்வாள். அதனால் தான் மேகலை சின்ன வயதில் இறப்பதற்கு காரணம் என்றும் இப்படி இந்த வீட்டில் என் பேரனும் வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை என்று கௌதமை அழைத்து சென்று தானே வளர்ப்பதாக சொல்லி பேரனை அழைத்துச் சென்றார்.

    ரவீந்தரும் அக்கா தனியாக இருப்பதை விட தனது மகன் கூட இருப்பது நல்லது என்றே விட்டுவிட்டார் .

    கௌதமிடம் சியாமளா ரவீந்தர் பற்றி சொன்னதும் அவனுக்கு பிடிக்கவில்லை. யோசிக்கும் திறன் அவ்வயதுக்கும் இல்லை. மகனை பார்க்க வரும் போதெல்லாம் சிவாவையும் அழைத்து வருவார். கொஞ்ச நாளில் வேதவள்ளி தனது தம்பியை மன்னித்து ஏற்றுக் கொள்ள இவனுக்கோ எண்ணமே மனதில் உழன்றது. கௌதமிற்கு சிவாவிடமும் வெறுப்பு வளர்ந்தது. தான் தனது தந்தையோடு இல்லாமல் இவனையே விரும்புகின்றாரே என்பதே அதற்கு காரணம்.விடுமுறைக்கு அவனை வேதவள்ளி ரவீந்தரிடம் அனுப்புவதில்லை. அதனால் மாதம் ஒரு முறை அவரே வந்து பார்த்து விட்டு செல்வார்.

    வளர வளர அவனுக்கு படிப்பிலும் புது மனிதரிலும் நட்பிலும் சாதனா என்பவளை மறந்தே போனான் . ஆனால் அது மறக்கவில்லை புதைந்து உள்ளது என்பதே அவளை பார்த்ததும் அது புரிந்தது.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ்