🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Completed Novels Archives - Page 27 of 78 - Praveena Thangaraj Novels
புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.

Category: Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

  • ஊக்கமுடைமை-60

    ஊக்கமுடைமை

    Ookamudaimai

    Energy 60

    591

    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று

    ‘Tis energy gives men o’er that they own a true control;
    They nothing own who own not energy of soul.

    ஒருவர்‌ பெற்றிருக்கின்றார்‌ என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்‌; ஊக்கம்‌ இல்லாதவர்‌ வேறு எதைப்‌ பெற்றிருந்தாலும்‌ அதை உடையவர்‌ ஆவரோ?

    Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

    பரிமேலழகர் உரைஉடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
    விளக்கம்:
    (‘வேறு உடையது’ என்றது, முன் எய்திநின்ற பொருளை. ‘உம்’மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)மணக்குடவர் உரைஊக்கமுடைமையாவது அதனைச் செய்யுமிடத்துக் காலத்து அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத்துடைமை. பிறர் நாடு கொள்ளுங்காலத்து அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனையே அறிந்து கொள்ளக்கடவேனென்று நினைக்கும் கருத்து வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை ; அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்,
    (என்றவாறு).

    592

    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்

    The wealth of mind man owns a real worth imparts,
    Material wealth man owns endures not, utterly departs.

    ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்‌; மற்றப்‌ பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்‌ நீங்கிவிடுவதாகும்‌.

    The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

    பரிமேலழகர் உரைஉள்ளம் உடைமை உடைமை – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் – மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம்.
    விளக்கம்:
    (‘உள்ளம்’ ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்,
    (என்றவாறு) பொருள் உடையார்க்கு எல்லா முண்டா மென்பார்க்கு இது கூறப் பட்டது.

    593

    ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்

    ‘Lost is our wealth,’ they utter not this cry distressed,
    The men of firm concentred energy of soul possessed.

    ஊக்கத்தை உறுதியாகத்‌ தம்கைப்‌ பொருளாக உடையவர்‌, ஆக்கம்‌ (இழந்துவிட்ட காலத்திலும்‌) இழந்துவிட்டோம்‌ என்று கலங்கமாட்டார்‌.

    They who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”

    பரிமேலழகர் உரைஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும் யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்; ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
    விளக்கம்:
    (‘ஆக்கம்’ ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து – கையகத்தாய பொருள்: “கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்’ (நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ளமிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார், (எ – று). இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.

    594

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை

    The man of energy of soul inflexible,
    Good fortune seeks him out and comes a friend to dwell.

    சோர்வு இல்லாத ஊக்கம்‌ உடையவனிடத்தில்‌ ஆக்கமானது தானே அவன்‌ உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச்‌ சேரும்‌.

    Wealth will find its own way to the man of unfailing energy.

    பரிமேலழகர் உரைஅசைவு இலா ஊக்கம் உடையான் உழை-அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.
    விளக்கம்:
    (அசைவு இன்மை – இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத் தானே சென்று சாரும் என்பார், ‘அதர் வினாய்ச் செல்லும்’ என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) அசைவில்லாத ஊக்கமுடையான் மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும், (எ-று). நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.

    595

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு

    With rising flood the rising lotus flower its stem unwinds;
    The dignity of men is measured by their minds.

    நீர்ப்பூக்களின்‌ தாளின்‌ நீளம்‌ அவை நின்ற நீரின்‌ அளவினவாகும்‌; மக்களின்‌ ஊக்கத்தின்‌ அளவினதாகும்‌ வாழ்க்கையின்‌ உயர்வு.

    The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

    பரிமேலழகர் உரைவெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
    விளக்கம்:
    (‘மலர்’ ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட ‘வெள்ளத்து அனைய’ என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் – பொருள் படைகளான் மிகுதல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி, அதுபோல, மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்,
    (என்றவாறு). இஃது ஊக்கம் இதனானே உண்டா மென்றது.

    596

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

    Whate’er you ponder, let your aim be loftly still,
    Fate cannot hinder always, thwart you as it will.

    எண்ணுவதெல்லாம்‌ உயர்வைப்‌ பற்றியே எண்ணவேண்டும்‌; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும்‌ அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

    In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (byfate), it will have the nature of not being thrust from him.

    பரிமேலழகர் உரைஉள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்-அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து-அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.
    விளக்கம்:
    (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் ‘உள்ளத்து அனையது உயர்வு’ என்றதனையே வற்புறுத்தியவாறு.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க ; அந்நினைவு முடியா மல் தப்பினும், முயன்று பெற்றதனோடு ஒக்கும்,
    (என்றவாறு) இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.

    597

    சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு

    The men of lofty mind quail not in ruin’s fateful hour,
    The elephant retains his dignity mind arrows’ deadly shower.

    உடம்பை மறைக்குமளவு அம்புகளால்‌ புண்பட்டும்‌, யானை தன்‌ பெருமையை நிலைநிறுத்தும்‌; அதுபோல்‌, ஊக்கம்‌ உடையவர்‌ அழிவு வந்தவிடத்திலும்‌ தளரமாட்டார்‌.

    The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

    பரிமேலழகர் உரைகளிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும்-களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்-அது போல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
    விளக்கம்:
    (புதை – அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. ‘பட்டால்’ என்பது ‘பட்டு’ எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்; மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறு போல,
    (என்றவாறு). இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.

    598

    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு

    The soulless man can never gain
    Th’ ennobling sense of power with men.

    ஊக்கம்‌ இல்லாதவர்‌, இவ்வுலகில்‌ யாம்‌ வண்மை உடையேம்‌ ‘ என்று தம்மைத்‌ தாம்‌ எண்ணி மகிழும்‌ மகிழ்ச்சியை அடையமாட்டார்‌.

    Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality”.

    பரிமேலழகர் உரைஉள்ளம் இல்லாதவர்-ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்-இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெற்றார்.
    விளக்கம்:
    (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், ‘செருக்கு எய்தார்’ என்றார். கொடை வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உள்ள மிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென் னுங் களிப்பினைப் பெறார்,
    (என்றவாறு). இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள் வரவு இல்லையாம்; ஆதலான், அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

    599

    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்

    Huge bulk of elephant with pointed tusk all armed,
    When tiger threatens shrinks away alarmed!

    யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும்‌ ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால்‌ அதற்கு அஞ்சும்‌.

    Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

    பரிமேலழகர் உரைபரியத கூர்ங்கோட்டது ஆயினும் – எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் – யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
    விளக்கம்:
    (பேருடம் பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) யானை பெரிய உடம்பின் தாய், கூரிய கோட்டையும் உடைத் தாயினும், புலி பொருமாயின் அஞ்சும்,
    (என்றவாறு). இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.

    600

    உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு

    Firmness of soul in man is real excellance;
    Others are trees, their human form a mere pretence.

    ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்‌ இல்லாதவர்‌ மரங்களே: (வடிவால்‌) மக்களைப்‌ போல்‌ இருத்தலே வேறுபாடு.

  • மடியின்மை-61

    மடியின்மை

    Madiyinmai

    Unsluggishness 61

    601

    குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    Of household dignity the lustre beaming bright,
    Flickers and dies when sluggish foulness dims its light.

    ஒருவனுக்குத்‌ தன்‌ குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப்‌ படிய ஒளி மங்கிக்‌ கெட்டுவிடும்‌.

    By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.

    பரிமேலழகர் உரைகுடி என்னும் குன்றா
    விளக்கம்:
    -தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்-ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப் போம்.
    விளக்கம்:
    (உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் ‘குன்றா
    விளக்கம்:
    ‘ என்றும், தாமத குணத்தான் வருதலின் ‘மடியை’ மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ்விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் ‘மாசு ஊர மாய்ந்து கெடும்’ என்றும் கூறினார். கெடுதல் – பெயர் வழக்கமும் இல்லை யாதல்.)மணக்குடவர் உரைமடியின்மையாவது சோம்பலில்லாது செய்யுங்காரியம். உயர்வு நினைத்தா லும் அதனைச் செய்து முடிக்குங்கால், சோம்பாமை வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடி யென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும்,
    (என்றவாறு). முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

    602

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    Let indolence, the death of effort, die,
    If you’d uphold your household’s dignity.

    தம்‌ குடியைச்‌ சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர்‌ சோம்பலைச்‌ சோம்பலாகக்‌ கொண்டு முயற்சியுடையவராய்‌ நடக்கவேண்டும்‌.

    Let those, who desire that their family may be illustrious, put away allidleness from their conduct.

    பரிமேலழகர் உரைகுடியைக் குடியாக வேண்டுபவர் – தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் – மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
    விளக்கம்:
    (‘முயற்சியோடு’ என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றார் போல, மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். ‘அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும், ‘என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) மடி செய்தலை மடித்து ஒழுகுக ; தங்குடியை உயர்குடியாக வேண்டுபவர்,
    (என்றவாறு). இது சோம்பாமை வேண்டுமென்றது.

    603

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து

    Who fosters indolence within his breast, the silly elf!
    The house from which he springs shall perish ere himself.

    அழிக்கும்‌ இயல்புடைய சோம்பலைத்‌ தன்னிடம்‌ கொண்டு நடக்கும்‌ அறிவில்லாதவன்‌ பிறந்த குடி, அவனுக்கு முன்‌ அழிந்துவிடும்‌.

    The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive lazinesswill perish, even before he is dead.

    பரிமேலழகர் உரைமடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி – விடத் தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் – அவன் தன்னினும் முந்துற அழியும்.
    விளக்கம்:
    (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின், ‘பேதை’ என்றும், அவனால் புறம் தரப்படுவதாகலின் ‘குடி தன்னினும் முந்துற அழியும்’ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து, ஒழுகாநின்ற அறிவிலி பிறந்த குடி தனக்கு முன்பே கெடும்,
    (என்றவாறு). சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப் பட்டது.

    604

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    His family decays, and faults unheeded thrive,
    Who, sunk in sloth, for noble objects doth not strive.

    சோம்பலில்‌ அகப்பட்டுச்‌ சிறந்த முயற்சி இல்லாதவராய்‌ வாழ்கின்றவர்க்குக்‌ குடியின்‌ பெருமை அழிந்து குற்றம்‌ பெருகும்‌.

    Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way tolaziness, and put forth no dignified exertions.

    பரிமேலழகர் உரைமடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு – மடியின் கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் – குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
    விளக்கம்:
    (‘மடிந்து’ எனத் திரிந்து நின்ற வினையெச்சம் ‘இலவர்’ என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு, (எ – று ) இது பிறரால் இகழப்படுவ ரென்றது.

    605

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    Delay, oblivion, sloth, and sleep: these four
    Are pleasure-boat to bear the doomed to ruin’s shore.

    காலம்‌ நீட்டித்தல்‌, மறதி, சோம்பல்‌, அளவு மீறிய தூக்கம்‌ ஆகிய இந்‌ நான்கும்‌ கெடுகின்ற இயல்புடையவர்‌ விரும்பி ஏறும்‌ மரக்கலமாம்‌.

    Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desiredby those destined to destruction.

    பரிமேலழகர் உரைமடி நெடுநீர் மறவி துயில் நான்கும் – மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன் – இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
    விளக்கம்:
    (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது. நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு – நாள் உலத்தல், இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், ‘நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்,’ என்னும் உவமைக்குறிப்பு ‘காமக்கலன்’ என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்த தனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக் கலம்,
    (என்றவாறு). காமக்கல் னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போல் வென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

    606

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    Though lords of earth unearned possessions gain,
    The slothful ones no yield of good obtain.

    நாட்டை ஆளும்‌ தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும்‌, சோம்பல்‌ உடையவர்‌ சிறந்த பயனை அடைய முடியாது.

    It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the wholeearth, to derive any great benefit from it.

    பரிமேலழகர் உரைபடி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் – நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது – மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
    விளக்கம்:
    (‘உம்மை’ எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் – பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு ‘நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்’ என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பூமியையுடைய வேந்தர் பல்பொருளினாலும் அமைந்த விடத் தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை, (எ-று). இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.

    607

    இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    Who hug their sloth, nor noble works attempt,
    Shall bear reproofs and words of just contempt.

    சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய்‌ வாழ்கின்றவர்‌, பிறர்‌ இடித்துக்‌ கூறி இகழ்கின்ற சொல்லைக்‌ கேட்கும்‌ நிலைமை அடைவர்‌.

    Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subjectthemselves to rebukes and reproaches.

    பரிமேலழகர் உரைமடிந்து புரிந்து மாண்ட உஞற்று இலவர் – மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் – தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
    விளக்கம்:
    (‘இடி என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான், ‘நட்டார்’ என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின், ‘கேட்பர்’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட் பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்,
    (என்றவாறு).

    608

    மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்

    If sloth a dwelling find mid noble family,
    Bondsmen to them that hate them shall they be.

    சோம்பல்‌ நல்ல குடியில்‌ பிறந்தவனிடம்‌ வந்து பொருந்தினால்‌, அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்‌.

    If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

    பரிமேலழகர் உரைமடி குடிமைக்கண் தங்கின் – மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் – அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்;
    விளக்கம்:
    (மடியினது தன்மை – காரியக் கேடு. குடிமை – குடி செய்தல் தன்மை, அஃது அதனை உடைய அரசன் மேற்றதல், ‘தன் ஒன்னார்க்கு’ என்றதனான் அறிக. அடியனாம் தன்மை – தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) குடிப்பிறந்தார் மாட்டே மடிமை தங்குமாயின், அது தன் பகை வர்க்கு அடிமையாக்கிவிடும்,
    (என்றவாறு). இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.

    609

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    Who changes slothful habits saves
    Himself from all that household rule depraves.

    ஒருவன்‌ சோம்பலை ஆளுந்‌ தன்மையை மாற்றி விட்டால்‌ அவனுடைய குடியிலும்‌ ஆண்மையிலும்‌ வந்த குற்றம்‌ தீர்ந்து விடும்‌.

    When a man puts away idleness, the reproach which has come upon himself and his family willdisappear.

    பரிமேலழகர் உரைஒருவன் மடி ஆண்மை மாற்ற – ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் – அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
    விளக்கம்:
    (மடியாளுந்தன்மை – மடியுடைமைக்கு ஏது வாய தாமத குணம். ‘குடியாண்மை’ என்பது உம்மைத் தொகை. ‘அவற்றின் கண் வந்த குற்றம்’ என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒரு வன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்,
    (என்றவாறு). குற்றம் – குடிக்கு வேண்டுவன செய்யாமையால் வருங் குற்றம்.

    610

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    The king whose life from sluggishness is rid,
    Shall rule o’er all by foot of mighty god bestrid.

    அடியால்‌ உலகத்தை அளந்த கடவுள்‌ தாவிய பரப்பு எல்லாவற்றையும்‌ சோம்பல்‌ இல்லாத அரசன்‌ ஒருசேர அடைவான்‌.

  • ஆள்வினையுடைமை-62

    ஆள்வினையுடைமை

    Aalvinaiyudaimai

    Manly Effort 62

    611

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    Say not, ‘Tis hard’, in weak, desponding hour,
    For strenuous effort gives prevailing power.

    இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல்‌ இருக்க வேண்டும்‌; அதைச்‌ செய்வதற்குத்‌ தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்‌.

    Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labour will give the greatness(of mind) which is necessary (to do it).

    பரிமேலழகர் உரைஎன்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும்-அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
    விளக்கம்:
    (‘சிறுமை நோக்கி’ என்பது ‘பெருமை தரும்’ என்றதனானும், ‘வினை முடித்தல்’ என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே, அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)மணக்குடவர் உரைஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யுங் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இல்லாதிருந்தாலும் அது முடியுமாறு முயல வேண்டுத் லின், அதன்பின் இது கூறப்பட்டது (இ-ள்.) ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்; முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்,
    (என்றவாறு). இது வினை செய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

    612

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

    In action be thou, ‘ware of act’s defeat;
    The world leaves those who work leave incomplete!

    தொழிலாகிய குறையைச்‌ செய்யாமல்‌ கைவிட்டவரை உலகம்‌ கைவிடும்‌; ஆகையால்‌ தொழிலில்‌ முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்‌.

    Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

    பரிமேலழகர் உரைவினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.
    விளக்கம்:
    (குறை-இன்றியமையாப் பொருள். அது ”பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே” [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு ‘வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று’ என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) வினை செய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க; வினைக் குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று,
    (என்றவாறு). இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.

    613

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    In strenuous effort doth reside
    The power of helping others: noble pride!

    பிறர்க்கு உதவி செய்தல்‌ என்னும்‌ மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில்‌ நிலைத்திருக்கின்றது.

    The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

    பரிமேலழகர் உரைதாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று-முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு-எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.
    விளக்கம்:
    (பொருள் கை கூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர் மாட்டு இல்லை என்பார் ‘தங்கிற்றே’ என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது; பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்,
    (என்றவாறு). இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.

    614

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    Beneficent intent in men by whom no strenuous work is wrought,
    Like battle-axe in sexless being’s hand availeth nought.

    முயற்சி இல்லாதவன்‌ உதவி செய்பவனாக இருத்தல்‌, பேடி தன்‌ கையால்‌ வாளை எடுத்து ஆளும்‌ தன்மைபோல்‌ நிறைவேறாமல்‌ போகும்‌.

    The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who hasa sword in its hand.

    பரிமேலழகர் உரைதாளாண்மை இல்லாதான் வேளாண்மை-முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும்-படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
    விளக்கம்:
    (‘ஆள்’ என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடைனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். ‘வாளாண்மை’ என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது..)மணக்குடவர் உரை(இதன் பொருள்) முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டா லஞ் சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்,
    (என்றவாறு). இஃது அறம் செய்யமாட்டானென்றது.

    615

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
    He wipes away his kinsmen’s grief and stands the pillar of their might.

    தன்‌ இன்பத்தை விரும்பாதவனாய்‌ மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன்‌, தன்‌ சுற்றத்தாரின்‌ துன்பத்தைப்‌ போக்கித்‌ தாங்குகின்ற தூண்‌ ஆவான்‌.

    He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

    பரிமேலழகர் உரைஇன்பம் விழையான் வினை விழைவான்-தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்-தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
    விளக்கம்:
    (இஃது ஏகதேச உருவகம். ‘ஊன்றும்’ என்றது அப்பொருட்டாதல், ”மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு” [நாலடி. 387] என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம்; எனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன்கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவ தொரு தூணாம்,
    (என்றவாறு). ஆதலால், வருத்தம் பாராது முயல வேண்டு மென்பது.

    616

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    Effort brings fortune’s sure increase,
    Its absence brings to nothingness.

    முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.

    Labour will produce wealth; idleness will bring poverty.

    பரிமேலழகர் உரைமுயற்சி திருவினை ஆக்கும்-அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்-அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும்.
    விளக்கம்:
    (‘செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை – அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே பகை வரான் அழிவர் என்பது கருத்து.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) முயற்சி செல்வத்தை உண்டாக்கும்; முயலாமை வறுமையை உண்டாக்கும்,
    (என்றவாறு). இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

    617

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்

    In sluggishness is seen misfortune’s lurid form, the wise declare;
    Where man unslothful toils, she of the lotus flower is there!

    ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்‌; சோம்பல்‌ இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌.

    They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (thegoddess of prosperity) dwells with the labour of the industrious.

    பரிமேலழகர் உரைமா முகடி மடி உளாள்-கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப-திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
    விளக்கம்:
    (பாவத்தின் கருமை அதன் பயனாக முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார் மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்,
    (என்றவாறு). இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

    618

    பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி

    ‘Tis no reproach unpropitious fate should ban;
    But not to do man’s work is foul disgrace to man!

    நன்மை விளைக்கும்‌ ஊழ்‌ இல்லாதிருத்தல்‌ யார்க்கும்‌ பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

    Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

    பரிமேலழகர் உரைபொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
    விளக்கம்:
    (அறிய வேண்டுவன- வலி முதலாயின. ‘தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,’ என்பாரை நோக்கி, ‘உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது’ என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..)மணக்குடவர் உரை(இதன் பொருள்) யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது; அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது,
    (என்றவாறு). அறிவு – காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்கு , இது கூறப்பட்டது.

    619

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    Though fate-divine should make your labour vain;
    Effort its labour’s sure reward will gain.

    ஊழின்‌ காரணத்தால்‌ ஒரு செயல்‌ முடியாமல்‌ போகுமாயினும்‌, முயற்சி தன்‌ உடம்பு வருந்திய வருத்தத்தின்‌ கூலியையாவது கொடுக்கும்‌.

    Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

    பரிமேலழகர் உரைதெய்வத்தான் ஆகாது எனினும்-முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்-முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி அளவு தரும், பாழாகாது.
    விளக்கம்:
    (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும என்பது உம்மையால் பெற்றாம். இரு வழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும், ஒருவினையின் கண்ணே முயல்வனாயின், முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்,
    (என்றவாறு) இது புண்ணியமில்லையாயினும், பயன் கொடுக்கும் என்றது.

    620

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்

    Who strive with undismayed, unfaltering mind,
    At length shall leave opposing fate behind.

    சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.

  • இடுக்கணழியாமை-63

    இடுக்கணழியாமை

    Idukkan Aliyaamai

    Hopefulness in Trouble 63

    621

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்

    Smile, with patient, hopeful heart, in troublous hour;
    Meet and so vanquish grief; nothing hath equal power.

    துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.

    If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

    பரிமேலழகர் உரைபிறிதில்லையாகலான்.
    விளக்கம்:
    (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான் ‘அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்’ ஆகலின், ‘அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்’ என்றார்.)மணக்குடவர் உரைஇடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங் காலத்தினை முடிவு செய்தவன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக ; அத்துன்பத்தை மேன் மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை,
    (என்றவாறு). இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.

    622

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    Though sorrow, like a flood, comes rolling on,
    When wise men’s mind regards it,- it is gone.

    வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌ துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.

    A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

    பரிமேலழகர் உரைவெள்ளத்து அனைய இடும்பை-வெள்ளம்போலக் கரையில வாய இடும்பைகள் எல்லாம், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்-அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
    விளக்கம்:
    (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், ‘அறிவுடையான்’ என்றும், அவ் வுபாயத்தது எண்மை தோன்ற ‘உள்ளத்தின் உள்ள’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) வெள்ளம் போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பய னென்று நினைக்கக் கெடும்,
    (என்றவாறு). இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடு மென்றது.

    623

    இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்

    Who griefs confront with meek, ungrieving heart,
    From them griefs, put to grief, depart.

    துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.

    They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

    பரிமேலழகர் உரைஇடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.
    விளக்கம்:
    (வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்’ என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர், (எ – று ) இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப் பட்டன.

    624

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

    Like bullock struggle on through each obstructed way;
    From such an one will troubles, troubled, roll away.

    தடைப்பட்ட இடங்களில்‌ எல்லாம்‌ (வண்டியை இழுத்துச்‌ செல்லும்‌) எருதுபோல்‌ விடாமுயற்சி உடையவன்‌ உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்‌.

    Troubles will vanish (1.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

    பரிமேலழகர் உரைமடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்-விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து-வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
    விளக்கம்:
    (‘மடுத்தவாய் எல்லாம்’ என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. ”பகடு மருங்கு ஒன்றியும் மூக்கு ஊன்றியும் தான் தகவழ்ந்தும்’ [சீவக. முத்தி. 186] அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார். ‘பகடு அன்னான்’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடு போலத் தளர்வின் றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து, (எ – று. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடு மென்றது.

    625

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    When griefs press on, but fail to crush the patient heart,
    Then griefs defeated, put to grief, depart.

    விடாமல்‌ மேன்மேலும்‌ துன்பம்‌ வந்தபோதிலும்‌ கலங்காமலிருக்கும்‌ ஆற்றலுடையவன்‌ அடைந்த துன்பமே துன்பப்பட்டுப்‌ போகும்‌.

    The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).

    பரிமேலழகர் உரைஅடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
    விளக்கம்:
    (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மன்னழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும்,
    (என்றவாறு) இது மன்னழிவில்லாதவன் உற்ற துன்பம் மேன்மேல் வரினுங் கெடு மென்றது.

    626

    அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்

    Who boasted not of wealth, nor gave it all their heart,
    Will not bemoan the loss, when prosperous days depart.

    செல்வம்‌ வந்தபோது இதைப்‌ பெற்றோமே என்று பற்றுக்‌ கொண்டு காத்தறியாதவர்‌, வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?

    Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to(undue desire) to keep their wealth.

    பரிமேலழகர் உரைஅற்றேம் என்று அல்லற்படுபவோ – வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் – செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?
    விளக்கம்:
    (பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்; அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன் றென்று தெரியாதவர்,
    (என்றவாறு). இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

    627

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதாம் மேல்

    “Man’s frame is sorrow’s target’, the noble mind reflects,
    Nor meets with troubled mind the sorrows it expects.

    மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.

    The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

    பரிமேலழகர் உரைஉடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
    விளக்கம்:
    (ஏகதேச உருவகம். ‘உடம்பு’ சாதிப் பெயர். ‘கலக்கம்’ என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. ‘கையாறு’ என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன் பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினார்,
    (என்றவாறு). இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதா ரைக் கூறிற்று.

    628

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்

    He seeks not joy, to sorrow man is born, he knows;
    Such man will walk unharmed by touch of human woes.

    இன்பமானதை விரும்பாதவனாய்த்‌ துன்பம்‌ இயற்கையானது என்று தெளிந்திருப்பவன்‌ துன்பம்‌ வந்தபோது துன்ப முறுவது இல்லை.

    That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

    பரிமேலழகர் உரைஇன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான்.
    விளக்கம்:
    (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் ‘துன்பம் உறுதல் இலன்’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறு தலை இயல்பாகக் கொள்ளும் வன், துன்ப முறுதல் இல்லை,
    (என்றவாறு). இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல் வேண்டு மென்றது.

    629

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்

    Mid joys he yields not heart to joys’ control.
    Mid sorrows, sorrow cannot touch his soul.

    இன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்த இன்பத்தை விரும்பிப்‌ போற்றாதவன்‌, துன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்தத்‌ துன்பத்தை அடைவதும்‌ இல்லை.

    He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

    பரிமேலழகர் உரைஇன்பத்துள் இன்பம் விழையாதான்-வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்-துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
    விளக்கம்:
    (துன்பம்-முயற்சியான் வரும் இடுக்கண், இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந் துன்பம் நுகரு மிடத்து வருத்தமுறுதலிலன்,
    (என்றவாறு). இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

    630

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    Who pain as pleasure takes, he shall acquire
    The bliss to which his foes in vain aspire.

    ஒருவன்‌ துன்பத்தையே தனக்கு இன்பமாகக்‌ கருதிக்‌ கொள்வானானால்‌ அவனுடைய பகைவரும்‌ விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்‌.

  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

    அத்தியாயம்-10

       பைரவி வரவும், துகிரா அமுல்யா இருவரும் அவரை வரவேற்க, “புது ஸ்கூல் எப்படி இருந்தது டா செல்லம்” என்று தாடை பிடித்து கொஞ்ச, துகிராவோ இதை பற்றி மகளிடம் கேட்கவில்லையே. பச் வரும் பொழுது அவர் அவரோட பீலிங்கை கேட்கவும் குழந்தையை மறந்துட்டேன்.

       “நாட் பேட் பாட்டி” என்றவளை கையோடு பைரவி அழைத்து செல்ல, கூடவே நடந்தாள்.
      ஹாலில் இஷான் மகளை நாட, துகிராவோ மகளோடு ஒட்டுண்ணியாக வர கோபமாய் திரும்ப அமர்ந்துவிட்டான்

      துகிராவோ குழந்தை பேச பேச அவளுக்கு சென்னாமசாலா ஊட்டி விட்டாள். அமுல்யாவோ இரண்டு புது நண்பர்கள் கிடைத்ததும், மதியம் சாப்பிட்டதும், மேம் வந்து பேசி சிரித்து பாடம் நடத்தி, தன்னை அறிமுகப்படுத்தியது முதல் எல்லாம் கூறினாள்.
      கிள்ளை மொழி கதையில் இஷான் தன்னை‌ மறந்தான்.

      அமுல்யா இரவு வரை ஹாலில் அட்டூழியம் செய்து உறங்க செல்ல துகிராவும் சென்றாள்.

    இஷான் அவனுமே தனியறைக்கு சென்றான்.‌

    பைரவி ரிஷியை அழைத்தபடி பிரதன்யா அறைக்கு வந்தார். “நீ சொன்ன ஐடியா சரியா வரும்னு தோன்றுது. துகிராவை இஷான் கல்யாணம் செய்ய வைக்கலாம். அதுக்கு நாம இஷானிடமோ இல்லை துகிராவிடமோ முட்டி மோத வேண்டாம். அமுல்யா… அமுல்யாவிடம் துகிராவையே இஷான் கல்யாணம் பண்ணினா உன் கூடவே இருப்பானு சொல்லி, அமுல்யா வாயால துகிராவிடம் என் அப்பாவை கல்யாணம் செய்யறியா அம்மானு கேட்க வைக்கணும்.
      அதே போல இஷானிடம் அப்பா துகிரா அம்மாவையே கல்யாணம் பண்ணிடுங்க. எனக்கு அம்மாவை நிரந்தரமா கூடவே இருப்பாங்க’ன்னு சொல்ல வைக்கணும்.” என்றார்.‌

      ரிஷியோ, “அம்மா…  அமுல்யா இன்னமும் என்னிடம் சரியா பழகலை. நான் சொல்லறதை எப்படி கேட்பா?” என்றவன் பார்வை பிரதன்யாவை காணவும், பைரவியும் மகளை காண, “விளையாடறிங்களா? அண்ணாவுக்கு தெரிந்தது என்னை திட்டி தீர்த்துடுவார்.
      அதோட துகிரா அண்ணி உன்னிடம் நல்லா பழகின குழந்தையிடம் இப்படி சொல்லி என் வாழ்க்கையை பாழாக்கிட்டனு சொல்லலாம். அதோட அமுல்யா நான் சொல்வதை எப்படி கேட்பா” என்று சலித்தாள்.

       “முடியும் பிரதன்யா குழந்தை என்னிடமோ ரிஷியிடமோ இன்னமும் நல்லா பேசி பழகலை. துகிரா இல்லாதப்ப உன் கூட தான் தூங்கினா. நம்ம அண்ணனுக்காக கொஞ்சம் யோசி. அமுல்யாவை இங்கயிருந்து அழைச்சிட்டு போய் தனியா பேசு. எனக்கென்னவோ சித்தின்னு கூப்பிட மறுத்து அம்மானு தான் சொல்வேன்னு பிடிவாதம் பிடிக்கற குழந்தைக்கு, நாம சொல்ல வருவது புரியும்.” என்றதும் பிரதன்யா லேசாக சிந்தித்தாள்.

       “சரி நான் என்ன செய்ய?” என்று அன்னை பைரவியிடம் கேட்டாள்.

      பைரவியோ “குழந்தையை தனியா கூட்டிட்டு போய் கொஞ்சம் பேசி பழகு. அப்படி பேசும் போது துகிராவை இஷான் அண்ணா மேரேஜ் பண்ணினா அமுல்யா அம்மாவா துகிராவும் இங்கயே இதே வீட்ல இருப்பான்னு ஏத்தி விடு. சார்லஸை அங்கிள்னு சொன்னதா உங்க அண்ணா சொன்னார்.
      அப்பானு அமுல்யாவே நம்ம இஷானை சொன்னதா வந்ததிலருந்து சொல்லிட்டே இருந்தான்.
      இப்ப இந்த எண்ணத்தை நாசுக்கா விதைக்கறது மட்டும் இல்லை. அவளை வச்சி இரண்டு பேரிடமும் தனியா பேச வைக்க ஏற்பாடு செய்யணும். குழந்தை நம்மிடம் பேசி பழகி நம்ம திட்டத்தை புரிந்து, நமக்கு சாதகமா நடப்பது லேட்டாகலாம். ஆனா துகிரா சார்லஸ் கல்யாணம் தடையாகும்.
       அந்த குழந்தை வைத்து பேச்சை கிளறி விட்டா போதும். அடுத்தடுத்து நாம பார்த்துக்கலாம். குழந்தையை இந்த விஷயத்தில் அடம்பிடிக்க வைக்கணும்.” என்று கூற பிரதன்யா மெதுவாக தலையாட்டினாள்.

       “சரி தூங்குங்க.” என்று பைரவி செல்ல ரிஷியும் சென்றான். பிரதன்யாவோ அண்ணனுக்காக அண்ணன் மகளிடம் நயமாக பேசிட முடிவெடுத்தாள்.
    ‌
       அடுத்த நாள் காலையில் அமுல்யா எழுப்பி துகிராவே குளிப்பாட்டி ஸ்கூலுக்கு அனுப்ப தயார்படுத்தினாள்.
      “மிச்சம் வைக்காம சாப்பிடணும். நிறைய தண்ணி குடிக்க..” என்று வர, “என்ன இஷான் இன்னிக்கு ஆபிஸ் போகலையா?” என்ற பைரவியின் பேச்சில் நானே விடறதா பேச்சு போச்சே. சரி எத்தனை நாளைக்கு அவரா கொண்டு போய் விடுவார்.’ என்று எதுவும் கூறாமல் வந்தாள்.

      நேற்று போலவே பின்னிருக்கையில் துகிரா ஏற, “அமுலு.. முன்னாடி வந்து உட்காரு.” என்றான் இஷான்.

      துகிராவை பார்த்து அமுல்யா முழிக்க, “போ” என்று அனுப்பினாள். அமுல்யா முன்னிருக்கையில் அமர்ந்ததும் இஷானுக்கு சந்தோஷமடைந்து ஓட்டினான்.

        “அம்மா கர்ச்சீப்” என்று கொடுக்க, சட்டையில் குத்த மறந்து கையில் வைத்திருக்க, துகிரா முன்னால் எக்கி வந்து, பின் வைத்து குத்தினாள்.

      துகிரா அமுல்யாவை கையில் வாங்கி, அன்னையாக மாறிய தருணத்திலிருந்து, சேலை கட்டியிருக்க, அவள் வளைவு நெளிவு இஷானின் கவனத்தை ஈர்த்தது.

      “இதெல்லாம் வீட்ல பின் பண்ணியிருக்கலாம்ல” என்று  எரிச்சலாய் மொழிய, “உங்க கண் எதிர்ல தானே அம்மா.. கர்ச்சீப் பின் பண்ணலைன்னு குழந்தை நீட்டறா.” என்று கூறி திரும்பினாள்.
      அந்த ஒரு நொடி இஷானின் கண்கள் அவளது மேனியில் பட்டும் படாமலும் ஊர்ந்து சென்றதில், அவனது முகசுழிப்பை அறிந்து பின்னால் நகர்ந்து சேலையை சரிப்படுத்தினாள்.

      இதுவும் இஷானுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது. என்னவோ அவன் வேண்டுமென்றே பார்க்க இவள் மறைக்க என்று மாறியதாக சூழ்நிலை மாறியதாக எண்ணிவிட்டாளே?!

      எதுவென்றாலும் இனி குழந்தை எதிரில் நிதானமாக நடக்க முடிவெடுத்தவனாய் நிதானித்தான்.

    பள்ளிக்கூடம் வந்ததும் கார் ஓரமாய் நிறுத்தி, மகளது இரு கன்னத்திலும் முத்தம் வைத்து, சாக்லேட் ஒன்றை நீட்டினான்.

    அமுல்யாவோ தந்தையின் செய்கையில் பயமும் ஆனந்தமும் சேர்ந்தாலும், இஷானை கண்டு புன்னகைக்க தாமதப்படுத்தி, ‘நன்றியை தெரிவித்தாள்.

    துகிரா தான் கேட் வரை சென்று வழியனுப்பினாள்.
      “அம்மா… அப்பாவிடம் தாடி குத்துதுனு சொல்லிடறிங்களா. எனக்கு அவரிடம் பேச பயமா இருக்கு. முத்தமிட்டதும் சுருக்குனு இருக்கு” என்றாள்.

    “தாடியா… குத்துதா? நான் அவரிடம் சொல்லணுமா?” என்று அடுக்கி, சம்மதமாய் தலையாட்டினாள்‌.
      
       அமுல்யாவை விட்டுவிட்டு யோசனையோடு நடந்தாள். இஷான் காரில் ஏறி அமர்ந்துவிட்டு, இஷானின் முதல் சந்திப்பில் அவன் இவளது உதட்டில் முத்தமிட்ட பொழுது துகிராவுக்குமே, உதட்டில் சுருக்கென்று குத்தியதை நினைவில் வந்தது.

      பெண்ணவள் காரில் இருக்க, உடலெங்கும் மேனி சிலிர்த்து அடங்கியது.
      அன்றைய முத்தம் எண்ணி பார்க்க இன்றும் சிலிர்க்குமா? இத்தனைக்கும் அருவருப்பு நேர வேண்டும். ஏனோ கூச்சமாக வந்து தொலைத்தது. பருவ வயதென்றதால் கண்ட தீண்டலும் முத்தமும் இப்படி நினைத்து உடல் ஏங்குகின்றதோ?! இப்படி தான் தன்னை தானே கடிந்துக்கொண்டாள்.

      “ஈவினிங் நீ வராத. நானே என்‌ பொண்ணை கூப்பிட்டு வந்துடுவேன். தயவு செய்து அப்பா பொண்ணு உறவுல நுழையாத” என்றான்.
     
      ஏதேதோ தறிக்கெட்டு போன மனதில் தீயை பற்ற வைத்தவனாக நெருப்பை போல வாறியிறைக்க, துகிராவோ, “உங்க பொண்ணு உங்களிடம் ஒரு மெஸேஜை பாஸ் பண்ண சொன்னா” என்று பட்டும் படாமலும் உரைத்தாள்.
    ‌
    காரை நிறுத்தி ‘என்ன?’ என்று திரும்ப, இஷானின் முகத்தையும் உதட்டையும் அவன் பார்வையும் பார்வையிட்டு துகிரா திணறினாள்.

      “என்ன சொன்னா? அமுலு என்ன சொன்னா?” என்று உலுக்க, “ப்ளிஸ்.. என்னிடம் தள்ளி நின்னு பேசுங்க. பயமுறுத்தாதிங்க.” என்றதும் கையை உலுக்குவதை நிறுத்தினான்.

    “அமுலு என்ன சொன்னா? ஏய்… என் பொண்ணு நேத்து அப்பானு சொன்னா. இன்னிக்கு எனக்கு மெஸேஜ் பாஸ் பண்ண சொல்லிருக்கா. க்ரைம் நாவல் போல இழுக்காம நேரா சொல்லி தொலையேன்.” என்று கடிய, தயக்கமாய், அவன் விழிகளை கண்டு மெதுவாக உதட்டருகே பார்வை சென்று, எச்சிலை விழுங்கி, “மீ..மீசை தாடி கு..குத்துது”..னு என்று விழுங்க, நான் அன்று முத்தமிட்டதுக்கு இன்று மீசை குத்துதுனு சொல்லறா என்று இவனும் தடுமாற, துகிராவோ “பாப்பா ஸ்கின் மிருதுவானது. உங்க முத்தத்தில மீசை குத்தி வலிக்க தான் செய்யும். அவ இதை சொல்ல சொன்னா” என்றதும் இஷானுக்கு நிம்மதி படர்ந்தது‌.
     
    ஆக அன்றைய நிகழ்வில் அவள் கூற வரவில்லை. மகளுக்கு தான் இந்த புதர் தாடியும் மீசையும் குத்திருக்க சொல்லி சென்றதாக முடிவெடுத்தான்.

      “நல்லது… ஈவினிங் நீ வராத. குழந்தை என்னோட வரட்டும். தனியா வர்றோம்.” என்று கட்டளையிட்டு காரை வீட்டிற்கு செலுத்தினான்.‌
      நான் இல்லாம எப்படி? அம்மு வரமாட்டா, என்று எண்ணியதை அவனிடம் உரைக்கவில்லை.
     
      மாலை கிளம்பும் நேரம், துகிரா அறைக்குள் இருந்தாள். எப்படியும் பள்ளிக்கு சென்று இஷான் போன் செய்து அவசரமாய் காரில் வரக்கூறலாம் என்று நினைத்தாள்.
     
      இஷான் புறப்படுவதை மட்டும் கவனித்தாள்.
       பைரவியோ நீ போகலையாம்மா?” என்று கேட்க, “அமுல்யா அப்பா என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டார்” என்று முடித்துக் கொண்டாள்.

       பள்ளியில் அமுல்யா துகிராவுக்கென காத்திருக்க, இஷான் க்ளின் சேவில் நறுக்கி வைத்த மீசையோடு வந்து சிரிக்க, அமுல்யாவோ, தந்தையை கண்டு வாயடைத்து வந்தாள். அவனுக்கு பின்னால் துகிராவை தேட, “துகிராவை கூட வரவேண்டாம்னு சொல்லிட்டேன். அப்பா பொண்ணு ஆயிரம் பேசலாம். நடுவுல அவ எதுக்கு.” என்று மகளை அள்ளிக்கொண்டான்.‌

    தன் உயரம் வரை தூக்கி புஜத்தில் இருத்தி மகளை காண, அமுல்யாவுமே இஷானின் முகமாற்றத்தில் வாயடைத்து போனாள்.

       “அம்மா… அம்மா நிஜமா வரலையா?” என்று தேடினாள்.

      “அப்பா வந்திருக்கேனே. என்னிடம் பேசு. ஐஸ்க்ரீம் கடைக்கு போகலாமா? சாக்லேட் வாங்கலாமா? இல்லை ஷாப்பிங் போலாம். உனக்கு டாய்ஸ் பிடிக்குமா?” என்று கேட்டு வைத்தான்.

      “அம்மா நான் நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா பதறிடுவாங்க. நான் வீட்டுக்கு போகணும்.” என்றாள்.

      ”அப்பாவோட எங்கயும் போக விருப்பமில்லையா? அப்பாவுக்காக யோசிக்க மாட்டியா?” என்று கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்து, ”அம்மா சொன்னதும் சேவ் பண்ணிட்டிங்களா? தேங்க்யூ. நீங்க கிஸ் பண்ணினப்ப குத்துச்சு. டேடி” என்றாள்.

      துகிராவை போலவே பேச்சை மாற்றும் யுக்தியை அமுல்யா
    அழகாக நடைமுறைப்படுந்த, “தாடி எடுத்துட்டேன்… உங்க அம்மா துகிராவுக்காக இல்லை. என் பொண்ணு சொன்ன ஒரே காரணத்திற்காக.” என்று ஜம்பமாய் கூறி காரை செலுத்தினான்.
    இப்பொழுது பேச ஆரம்பித்த முதல் நாள்.  
     
       ஷாப்பிங் மால் அழைத்து செல்ல, ”அமுலுக்கு என்ன பொம்மை பிடிக்கும்?” என்று கேட்க, துகிராம்மாவுக்கு எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். நீங்க அவங்களிடம் போன் பண்ணி கேளுங்க” என்றாள்.‌

    இஷானோ நெற்றியை கீறி, “அமுலும்மா… நீங்களே சொல்லுங்கடா” என்று மண்டியிட, பொம்மைகள் இருந்த இடத்திற்கு வரிசையாக நடந்தாள்‌ ஸ்பைடர்மேன் பொம்மையை எடுத்து பார்வையிட, “எடுத்துக்கோ… என்ன வேண்டுமென்றாலும் எடுத்துக்கோ” என்று ஆனந்தமாய் உரைத்தான். சாக்லேட் பொம்மை, பலூன், பறக்கும் பேட்டரி விமானம் என்று அள்ளியவள், இஷானை பார்த்து “போதும். இல்லைன்னா அம்மா உதைப்பாங்க.” என்றாள்.

    “அவ என்ன உதைப்பது. நீ ஆசைப்பட்டதை வாங்கு.” என்றான்.‌

      அமுல்யாவோ அதிகமாக எடுத்துவிட்டதாக தோன்ற, “போதும் அப்பா” என்றாள்.

    “நீ அப்பானு சொல்லிட்டே இருந்தா கூட எனக்கு போதாது.” என்று ஃபில் போட போனான்.‌

      வீட்டுக்கு வரவும், நேரம் கடக்க, துகிரா வாசலுக்கே ஓடிவந்தாள்.
      ஷாப்பிங் சென்று வந்ததை  பொருட்கள் தெரிவிக்க, “நான் நேரமாகவும் பயந்துட்டேன். ஒரு வார்த்தை சொல்லலாம் இல்லையா?” என்று இஷானை காண அவன் தாடி இல்லாமல் நறுக்கி வைத்த மீசையில் பேரழகனாக காட்சியளித்தான். அதுவும் இவளை மிரட்டிய செவ்வுதடு, பளிச்சிட்டது.

    “என் பொண்ணு என்னோட தானே வர்றா? உன்னிடம் எதுக்கு சொல்லணும். நீ அவளை இத்தனை நாள் அம்மா அப்பா இல்லாத குழந்தைன்னு பார்த்துக்கிட்ட. ஜஸ்ட் அவ்ளோ தான். உன் அளவுக்கோல் எதுவரையோ அதுவரை டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணு.” என்று அம்பை பாய்ந்து கொன்று சென்றான்.‌

    – தொடரும்.
    -பிரவீணா தங்கராஜ்.










  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

    அத்தியாயம்-16

    துகிரா சார்லஸுடன் பேச தோட்டத்தில் வீற்றிருந்தார்கள். “மெர்ஸி என்னை மன்னிக்க மாட்டா” என்று துகிரா ஆரம்பித்தாள்.

      சார்லஸ் சத்தமாய் சிரித்து, “மெர்ஸி என்றாலே கருணை துகிரா. மன்னிப்பா.” என்று கூறியவன், “அப்ப… இஷானை மணக்க உனக்கு சம்மதமா?” என்று கேட்டுவிட, மறுப்பாய் தலையசைத்து, “அமுல்யாவுக்கு நிரந்தர அம்மாவா கூடவேயிருக்கற வாய்ப்பு அமைந்தா மறுக்க மாட்டேன். ஏன்னா… அம்மு என் உயிர்.
       சப்போஸ் இந்த வீட்ல ஒன் ஆஃப் தி கேர்டேக்கர் மாதிரி என்னை இருக்க கூறினாலும் இருந்துப்பேன்.” என்று கூறினாள்.

      “நைஸ்… இதை தான் எதிர்பார்த்தேன். ஆனா கேர்டேக்கர் எல்லாம் வேண்டாம். இஷானோட முடிவு பொறுத்து அவர் மேரேஜ் பண்ணினா பண்ணிக்கோ. அது தான் கௌரவம். நிரந்தரமா அமுல்யா உனக்கு பொண்ணாவா” என்று கூறியவன், “ஓகே… மார்னிங் பிரேக்பஸ்ட் முடிச்சிட்டு கிளம்பறேன். மெர்ஸியிடம் இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். எதுனாலும் நானே பக்குவமா சொல்லறேன். நீ ஏதாவது சொன்னா, அவ ஏதாவது பேசிடுவா.” என்று கூற, துகிரா காரில் அலுவலகத்திற்கு செல்லும் இஷானை வெறித்தாள்.
     
      இத்தனை நாள் அலுவலகமாவது மண்ணாவது என்று அமுல்யா கூடவே ஒட்டிக்கொண்டு திரிந்தான். இன்று அலுவலகம் செல்வதால், அவனது முடிவு வேறாக தான் இருக்குமென்று முடிவெடுத்து மெர்ஸியிடம் எதற்கு இந்த பேச்சை பேசி கஷ்டப்படுத்த வேண்டாமென நினைத்தாள்‌.

       காலை உணவை முடித்து அமுல்யாவிடம் சொல்லிவிட்டு பைரவியிடமும், “எந்த முடிவெடுத்தாலும் சொல்லுங்க. வர்றேன் அம்மா” என்று புறப்பட்டான்.

      வாசல்வரை சென்றவன் நின்று நிதானமாக துகிராவை பார்க்க, அமுல்யாவோடு அவள் நின்ற கோலம், நெஞ்சில் நிறைத்தவனாக, புன்னகை தூவி சென்றான்.

      “அம்மா… இனி என் கூடவே இருப்பிங்க தானோ?” என்றதும் ஆமென்றாள்.

      “இஷான் அப்பாவோட கல்யாணம் பண்ணிப்பிங்க தானே?” என்று கேட்க, அதற்கு மட்டும் பதில் பேசவில்லை.

      அமுல்யா முகம் வாடிவிட, பைரவியோ இதற்கு மேல் இருவரிடம் எப்படி பேச, அதுதான் தெளிவாக பேசிவிட்டாயிற்றே.
      ஒருவேளை துகிரா தங்களோடு ஒரே வீட்டில் இருந்து அமுல்யாவை வளர்க்க முடிவெடுத்து விட்டானா? என்ற கலக்கம் உண்டானது. இஷானிடம் நேரிடையாக எதுவும் கேட்கவும் முடியாத பயத்தில் இருந்தனர்.
      துகிராவோ என் மகளை விட்டு இனி செல்ல மாட்டேன். என் வாழ்க்கை எப்படி அமையுமோ அது படி பார்ப்போம் என்று இஷான் வீட்டில் நடமாடினாள்.

    ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்….

        பைரவியோ மனம் தாளாமல் “வயசு பொண்ணு எந்த உரிமையும் இல்லாம இரண்டு ஆம்பளை பசங்க இருக்கற வீட்ல தங்கறது சரியில்லை இஷான்.” என்று பொரிந்திட, “அவளே சும்மாயிருக்கா. உங்களுக்கு என்ன?” என்றான் சுயநலமாக. அவன் அம்மாவிடம் பிடிக்கொடுத்து பேசினால் தான் அவளை மணக்க அல்லவா திட்டம் போடுவது.

    “அவளுக்கு அப்பா அம்மா அக்கானு யாருமில்லை இஷான். அதனால் அக்கா குழந்தை எக்கேடு கெட்டா உனக்கென்ன? உன் வேலையை பாருன்னு சுயநலமா சொல்ல ஒருத்தரும் இல்லையே.
      அக்கா குழந்தைக்காக தன் வாழ்க்கை எப்படி போகும்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா‌.
        ஒரு பொண்ணை நானும் பெத்துவச்சியிருக்கேன் இஷான். அவளுக்கு இதே மாதிரி நடந்தா என்ன செய்வதுன்னு யோசித்தா என்ன முடிவெடுப்பேனோ, அதை தான் துகிரா விஷயத்தில் முடிவெடுத்து, உன்னிடம் பேசறேன்.” என்றார் பைரவி. நீ சுயநலமாக எண்ணினாலும் நான் அவளுக்காக பேசுகின்றேன் என்ற ரீதியில்.

      “ப்ளிஸ்… துர்கா இடத்துல வேற எவளையும் என்னால நினைச்சு பார்க்க முடியாது.” என்றான்.

        பைரவியோ, “உன் மக அம்மாவா துகிராவை தானே நினைச்சி பார்க்கறா.” என்றார்.

      “ஏன்மா… அவ தான் இந்த வீட்ல ஒரு ஆளா இருந்து கவனிக்கட்டும். இப்ப என்ன இருக்க கூடாதுன்னா சொன்னேன். பக்கத்து ரூம்ல எல்லா வசதியும் இருக்கு. காலத்துக்கு இருக்க சொல்லுங்க. அமுல்யாவை பார்த்துக்கிட்டு” என்று தோளைக் குலுக்கினான்.‌

      “நல்லாயிருக்குடா நியாயம். எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது. அவளுக்கு சின்ன வயசு. அவளை ரொம்ப அதிகமா காதலிக்கிறவன் இருக்கான். அவ இளமையை உன் பொண்ணுக்கு ஆயாவா இருந்து எதுக்கு வேஸ்ட் பண்ணணும்.
      அவ சுயநலமா அன்னைக்கே சார்லஸோட அனுப்பி வச்சியிருக்கலாமே. அவங்க வீட்ல அப்பா அம்மா அவ பிரெண்ட் மெர்ஸி துகிராவை தங்க தட்ல தாங்க தயாரா இருக்காங்க.
      உன் குழந்தையை பார்த்துக்கிட்டு அவ இளமை ஏன் கழியணும்.” என்றார்.

    “அதுக்கு… நான் அவளை கல்யாணம் செய்துக்கணுமா? அவன் ஓரு படிச்ச  லூசு. காதலை தியாகம் செய்துட்டு போறான். காதல்னா எந்த நேரத்திலும் பிடிச்சவளை யாருக்காகவும் விட்டுதர கூடாது.” என்று கூறினான்.

    “அப்ப அவளை கேரளாவுக்கு திரும்ப அனுப்பு. உன்‌ மக அமுல்யாவிடம் யாரோ ஒரு சார்லஸ் கூட அவளுக்காக அவன் காதலை தூக்கி எறிந்துட்டு போனான். ஆனா பெத்த அப்பா என்னால உன் துகிரா அம்மாவை ஏற்க முடியாது. என் ஈகோ இடம் கொடுக்காதுனு அவளிடம் புரியவை. ” என்று கூற, இஷான் பேச்சிழந்து நின்றான்.‌

      மாடியில் துகிரா எல்லாவற்றையும் கேட்டு நின்றவளுக்கு, அப்பொழுதும் என்ன முடிவெடுப்பதென்ற தெளிவு வரவில்லை.
      அவளால் அமுல்யாவை தாண்டி சார்லஸை மணக்க செல்வது பிடிக்காது. அதே நேரம் கீழே தன்னால் ஏற்படும் குழப்பத்திற்கு தீர்வும் கூற முடியவில்லை. அமுல்யாவின் அப்பாவே எந்த முடிவென்றாலும் எடுக்கட்டும் என்று எண்ண, இஷானோ தன்னை காணும் அமுல்யாவை நெருங்கினான்.‌

    “அம்மு… உனக்கு அம்மா கண்டிப்பா வேண்டுமா டா? அப்பாவே அம்மாவா இருக்கறேன்னே” என்று கேட்க, “இல்லைப்பா… நீங்க இல்லாம கூட நான் இதுவரை வளர்ந்துட்டேன். துகிரா அம்மா இல்லாம நான் ஒரு நாளும் இருந்ததில்லை‌. எனக்கு அம்மா வேண்டும் அப்பா. அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோப்பா‌. ப்ளிஸ்ப்பா.” என்று இஷானின் தாடைபிடித்து கெஞ்ச, இஷான் கண்கள் கலங்கி தவித்து, “சரி… உங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கறேன். உனக்காக மட்டும் தான்.” என்று பைரவியிடம் திரும்பி, “என் அமுலுக்காக மட்டும் தான். அந்த பொண்ணிடம் கல்யாணத்தை பற்றி கேட்டுட்டு சொல்லுங்க. ஆனா இந்த பத்திரிக்கை, ஊரை கூட்டி விமர்சனம் இதெல்லாம் வேண்டாம்… ம்ம்ம முதல்ல அந்த பொண்ணு ஓகே சொல்லறாளா பாருங்க” என்று அமுல்யாவிடம் “அப்பா உனக்காக சம்மதிச்சிட்டேன். உனக்காக.” என்று அணைத்து அழுதான்.

      துகிராவுக்கு மேலே கண்ணீர் வந்தது, இனி பைரவி அத்தை தன்னிடம் கேட்பார்களோ? என்று பயந்தாள்.
      ஆனால் அமுல்யாவுக்காக அவள் அம்மா என்ற அழைப்பிற்காக எதையும் ஏற்க தானே முடிவெடுத்து இந்த வீட்டில் வந்தது.

      பைரவியோ அறைக்கு வர, சிலையாக நின்ற துகிராவிடம், “கீழே பேசியதை கேட்டியா?” என்றதும் கண்ணீரை சட்டென துடைத்து ஆமோதிப்பாய் நின்றாள்.

      “உனக்கு சம்மதமா? அமுல்யாவுக்கு அம்மாவா, இஷானுக்கு மனைவியாக போறது?” என்று கேட்டாளர்.

      துகிராவோ “நான் இப்பவும் அமுல்யாவுக்கு அம்மா தான். அமுல்யா பிறந்தது முதல் என் கையில அவளை வாங்கியதிலருந்தே.. நான் அம்மா தான்.” என்றாள்.

    “இஷானை மேரேஜ் பண்ணிக்க சம்மதமாமா? இல்லை… சார்லஸை விரும்பி அவர் தான் வேண்டுமின்னாலும் நீ போகலாம். ஏன்னா… இப்ப சம்மதிச்சிட்டு அப்பறம் அந்த நெருடலும் இருக்கக்கூடாது‌ பாரு. அமுல்யாவுக்கு ஆரம்பத்திலயே அம்மாவா நீ இல்லையென்றதை கூட தாங்கிக்க வைப்போம்‌” என்று கூற, துகிரா பைரவியை பார்த்து, “நான் சார்லஸை விரும்பலை. சார்லஸ் தான் என்னை விரும்பினார். அவரே அமுல்யாவுக்காக விட்டுக்கொடுத்துட்டு போயிட்டார். நான் என் பிரெண்ட் மெர்ஸிக்காக அவ அண்ணாவோட பிரப்போஸை மதிச்சேன். அதுக்கூட அமுல்யாவுக்கு அப்பாவா இருப்பார் என்ற ரீசனுக்காக. அமுல்யாவுக்கு அவ அப்பாவை தவிர யாரும் அப்பாவா வரமுடியாது. அமுல்யா அப்பாவை கல்யாணம் செய்துக்கறேன். அவர் சொன்னது போல… ஊர்கூட்டி, விழாவா எதுவும் வேண்டாம். ஏதாவது கோவில்ல… இல்லை ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டா போதும்.” என்று முடித்துகொண்டாள்.

      பைரவி துகிராவை கட்டியணைத்து சென்றார். அவர் அமுல்யாவிடமும் கீழே உள்ளவர்களிடமும் இஷான்-துகிரா இருவரும் திருமணத்திற்கு சம்மதித்ததை உரைத்திருக்க, அமுல்யா ஓடிவந்தாள்.
      ஏற்கனவே தந்தை தனக்காக துகிரா அம்மாவை கல்யாணம் செய்ய சம்மதித்ததில் ஆனந்தமாக இருந்தவள், துகிராவும் சம்மதித்திருக்க, “லவ் யூ அம்மா” என்று கன்னத்தை எச்சிப்படுத்தி முத்தங்களை பொழிந்தாள்.

      துகிராவோ, கண்ணீரை மறைத்து, மகளின் சந்தோஷத்தை ரசித்தாள்.

       பைரவி உடனடியாக சார்லஸிற்கு போனில் அழைத்து, நடந்ததை தெரிவித்தார்.
    சார்லஸோ, “ஆண்டவரே… ஸ்தேத்திரம். ரொம்ப சந்தோஷம் அம்மா. அம்மா… இந்த விஷயம் மெர்ஸிக்கு இப்ப தெரிய வேண்டாம். துகிரா மேரேஜ் முடிந்ததும் சொல்ல சொல்லுங்க. பிகாஸ்… பிரெண்ட் மேலயும், அண்ணகாரன் என் மேலயுமா மெர்ஸிக்கு பாசம் அதிகம்.
       நடுவுல ஏதாவது பேசி ஏதாவது தடை ஏற்படுத்த போறா. கல்யாணம் விமர்சையா வைப்பிங்களா?” என்று கேட்டான்.‌

    “இல்லை தம்பி… இரண்டு பேருமே சிம்பிளா கோவிலில் இல்லை ரெஜிஸ்டர் ஆபிஸ்ல முடிச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க.
      என் பையன் இஷான், இது தேவையா என்ற எண்ணத்தில இருக்கான்.  துகிராவுக்கு அமுல்யாவை விட மனமில்லாம சம்மதிச்சிட்டா‌” என்றதும், சார்லஸோ இடைப்புகுந்து, “அம்மா… துகிரா என்னை விரும்பலாம் செய்யலை‌. மெர்ஸியோட போர்ஸாலயும் அமுல்யாவுக்காகவும் தான் சம்மதிச்சா. அதனால் அவளுக்கு என்னை மறக்கறது ரொம்ப ஈஸி. இதையும் இஷானிடம் சொல்லிடுங்க. நான் கல்யாணத்துக்கு வரமுடியாது. ஆனா என்னைக்கு மேரேஜ்னு சொல்லுங்க. இங்க சர்ச்ல ப்ரே பண்ணிப்பேன்.” என்று கோரிக்கை வைத்தான்.

      பைரவி பேசி முடித்து அடுத்தடுத்த காரியத்தை ரிஷி மூலமாக விரைவுப்படுத்தினார்.

      கோவிலிலும் ரெஜிஸ்டர் ஆபிஸிலும் திருமணத்தை முடித்திட எண்ணி, எந்த கோவிலில் திருமண செய்யலாமென்று பிரதன்யா பைரவி கலந்தாலோசித்தார்கள்.

      அமுல்யாவின் அப்பா இஷானும், அம்மா துகிராவும் இணையும் திருமண நாளும் வந்தது.

      இஷான் மனமேயின்றி ரெஜிஸ்டர் ஆபிஸில் கையெழுத்து போட்டான். துகிராவோ அவளுமே கடைமைக்காக போட்டுவிட்டாள்.

        வெள்ளை சட்டை ப்ளு பேண்ட் அலுவலக்ததில் மீட்டிங் செல்ல தயாரானவன் போல இருந்தான்.
      துகிராவோ யாரோ தூரத்து கல்யாணத்திற்கு  சிம்பிளான பார்டர் அணிந்த பெண்ணாக வந்திருந்தாள்.
     
       “மாலை இருந்தா மாத்திக்கோங்க” என்று கூற, இஷானோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.” என்று நகர்வதில் குறியாக இருந்தான்.
     
      அவனுக்குள் இதயம் வலித்தது. துர்காவை இதே அலுவலகத்தில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தவன். அப்பொழுது தம்பி தங்கைகள் வயதில் சிறியவர்கள். அம்மாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் துர்காவை மணந்தான். துர்கா அன்று ஆகாய வண்ணப்புடவை அணிந்திருந்தாள்.

       இன்றோ… “அப்பா.” என்று மகள் கூப்பிட, திரும்பியவன் பார்வையில் துர்கா உருவத்தில் இருந்த துகிராவும், அமுல்யா பிங்க் நிற கவுன் அணிந்திருக்க, துகிராவும் இளஞ்சிவப்பு சேலை அணிந்திருந்தாள். துர்காவை போலவே தோற்றம் இருந்தாலும், இஷானை கண்டு துர்கா உதிர்க்கும் புன்னகை தனித்துவமானது. 
      இங்கே துகிரா இஷானை நிமிர்ந்து பார்ப்பதும் இல்லை. அதோடு அவனை கண்டால், புன்னகை என்ன விலை என்ற ரீதியில் நிற்பாள்.

    இருவரும் ரெஜிஸ்டர் அலுவலகம் முடித்து, கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
       ரிஷி, பிரதன்யா பைரவி கூடவே அமுல்யா தவிர்த்து யாரும் இல்லைமல், ஏதோ திருமண நாளிற்கு அர்ச்சனை செய்ய வந்தவன் போல, நிற்க, ரிஷி தான், ஏற்கனவே திருமணம் செய்வதற்கு கேட்டு முடித்திருந்தான்.‌

       ஐயரும் கொஞ்சம் போல சிலரும் கோவிலுக்கும் வந்திருக்க, தட்டில் பூ, மாலை, பழம், தாலி என்று சாமி காலடியில் வைத்து எடுத்து வந்தனர்.
      மாலை அணிவித்திட கூற, இஷானோ துகிரா கழுத்தில் அவசரமாய் வினாடிக்குள் அணிவித்து திரும்ப, துகிராவோ மெதுவாக விழிநிமிற்றி இஷானை கண்டு மாலை அணிவித்தாள்.

       இரண்டாம் முறை சற்று மெதுவாக மாலை போட, அவளும் அதே நேரத்தை எடுத்துக்கொண்டாள். மூன்றாம் முறை தான் நிதானமாக துகிராவை கண்டான்.
      எப்பவும் விட பிரதன்யா சற்று அலங்காரம் செய்திருக்க வேண்டும். அதோடு நீண்ட சிகையில் அலங்கரித்த மல்லிப்பூ, கருவிழியால் கடத்திடும் அழகில் இருந்தாள்.

      துகிராவுக்கு இஷான் முதல் முதலில் பார்த்த நினைவெல்லாம் வந்து சென்றது. முரட்டுத்தனமாக முத்தம் கொய்த நிமிடத்தில் நெஞ்சுக்கூடு வேகமெடுத்தது.

      அவள் உணரும் நொடிக்குள் தாலியை அணிவிக்க அவன் கரங்கள் முன்னே வர, இஷானும், பார்வைகளை கடத்தி தடுமாறினான்.

       இஷான் உடனோ சுதாரித்து அமுல்யாவை தூக்கி கொண்டான். துகிரா கீழே விழுந்து இறைவனை வேண்டி பைரவியிடம் ஆசி வாங்கினாள்.
    “என்னம்மா… முதல்ல ஜோடியா யாரிடமாவது ஆசி வாங்கலாமே” என்று திரும்ப, அவர்களை தவிர யாருண்டு.
      “பரவாயில்லை அத்தை வாழ்த்த மனசு தான் முக்கியம்.” என்றாள் துகிரா.

      பிரதன்யாவோ “ஹாப்பி மேரீட் லைப் அண்ணி” என்று கட்டிப்பிடிக்க, ரிஷியும் “ஹார்டி கங்கிராஜுலேஷன் அண்ணி” என்று கை கொடுத்து வாழ்த்தினார்கள்.

      அண்ணனுக்கு வாழ்த்தவே அஞ்சி நடுங்க, அத்தை சித்தாவை பார்த்த குழந்தை அமுல்யாவோ, “ஹாப்பி மேரீட் லைஃப் மம்மி.” என்று கன்னத்து முத்தம் தந்தாள்‌. துகிராவும் “தேங்க்யூ டா அம்மு” என்று கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
     
       தந்தை இஷானுக்கும் முத்தம் வைத்து “ஹாப்பி மேரீட் டேடி” என்றாள்.

    அவனும் துகிரா போலவே “தேங்க்யூ அமுலு” என்றவன் அமுல்யா கன்னத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டப்பிறகே துகிராவின் உதட்டு சாயம் அமுல்யா கன்னத்தில் ஒட்டியிருப்பதை கவனித்தான்.
      அமுல்யாவுக்கு முத்தமிட்டோமே என்று உதட்டை கைக்குட்டையால் துடைத்து பார்க்க வெள்ளை கர்ச்சீப் இளஞ்சிவப்பு உதட்டு சாயம் துடைக்கப்பட்டிருந்தது.

    இஷானோ வெடுக்கென துகிராவை காண, அவளோ மற்றவர் பார்த்துவிட்டார்களா என்று இஷானின் அன்னை தங்கை தம்பியை பார்க்க, கோவிலில் இருந்த   மற்றவர்களுக்கு பணத்தை வழங்குவதை கண்டு, இஷானை மீண்டும் பார்வையிட, அவனோ கர்ச்சீப்பை மறைத்து பேண்டில் திணித்தான்.‌

      -தொடரும்.
    -பிரவீணா தங்கராஜ்.

  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-15

    அத்தியாயம்-15

      சார்லஸ் தான் ரிஷியை அடிக்க விடாமல் இஷானின் கையை பிடித்து நிறுத்தினான்.‌

      “அவங்க சொல்லறது உங்களால் தாங்கிக்க முடியலை. அம்மா தங்கையை அடிக்க முடியாது, அந்த கோபத்தை தம்பி கிடைக்கவும் கை ஒங்கறிங்களே.” என்றதும், இஷானோ, “அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியுதா?” என்றான்‌ காட்டமாக.
    சார்லஸோ “உங்களுக்கு அவங்க அம்மானா கரெக்டா தான் பேசறாங்க சார்.” என்றான் புன்னகையுடன்.

      இஷான் புருவம் சுருக்க, “ஒரு அம்மாவுக்கு மத்தவங்களை பத்தி கவலையில்லை சார். அவங்க பையனுக்கு நல்லது நடக்கணும். அது மட்டும் தான் குறிக்கோள். உங்க ஓய்ஃப் குழந்தையோட இறந்தது உங்களுக்கு தெரிந்து வாழ்க்கையை சலிப்போட வாழ்ந்திருப்பிங்களா? அதை பார்த்து ஒரு கல்யாணம் பண்ண சொல்லி இவங்க கட்டாயப்படுத்தியிருப்பாங்க.
       உங்க கேரக்டரே சொல்லும் பிடிவாதம் முரட்டு ஆளுனு. மேரேஜும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு இருந்திருப்பிங்க. இப்ப.. உங்க குழந்தை உயிரோட இருக்கானு தெரியவும், புயல்‌ மாதிரி வந்து அவளை தூக்கிட்டு வந்துட்டிங்க.

      உங்க குழந்தையை வளர்த்த துகிராவை பத்தி யோசித்திங்களா? அவ உங்க மனைவியோட சாடையில் இருக்கா. துகிராவை பார்க்கும் போது இங்க அவங்க இருந்த போது ஒரு நேரம் இல்லைன்னாலும் ஒரு நேரம் உங்க பார்வை உங்க மனைவின்னு பார்த்திருக்காது?” என்று கேட்க, துகிரா சிலை போல நின்றாள்.

    “ஸ்டாப்பிட்… இங்க இருக்கற எல்லாருமே பைத்திய மாதிரி பேசாதிங்க. துர்கா வேற துகிரா வேறனு என் மனசுக்கு தெரியும்.” என்றான்.
      “சார்.. இரண்டு பேரும் வேற வேறனு தெரியும். ஆனா ஒரு நேரமாவது அவங்க உங்க மனைவின்னு தோன்றி உங்க இயல்பான வாழ்க்கையில் ஒரு செகண்ட் பார்க்கலைன்னு சொல்லுங்க” என்றான்.

      இஷானோ பிடிவாதமாக, “இல்லை” என்றான்.‌
      “ஓகே சார்.. நீங்க அப்படியிருக்கலாம். ஆனா… உங்கம்மா அப்படி யோசிக்க முடியாதே. நீங்களும் துகிராவும் அமுல்யாவோட சேர்ந்து நடந்து வந்தா, அவங்க மனசுல உங்களை முழு குடும்பஸ்தனா தான் பார்க்க தோனும். அவங்க அதை தான் இப்ப சொல்லறாங்க. இதுல தப்பில்லை.” என்றான் தோளைக்குலுக்கி சார்லஸ்.

       இஷானோ “என்ன சார் நீங்க விரும்பிய பொண்ணை கழட்டி விட பிளான் போட்டிருக்கிங்களா? அதான் என்னோட கோர்த்து விடறிங்களா?” என்றான்.

      சார்லஸோ லேசாய் சிரித்து, வேதனையோடு துகிராவை பார்த்து, “இந்த நிமிஷம், அமுல்யா மட்டும் துகிராவை அம்மானு சொந்தம் கொண்டாடாம, இஷான் அப்பா மட்டும் போதும்னு முடிவெடுத்தா, திரும்பி போறப்ப, துகிராவை கூட்டிட்டு தான் போவேன் சார். ஏன்னா துகிராவை எனக்கு பிடிக்கும்.
       ஒரு விதவையா, ஒரு குழந்தைக்கு அம்மாவா தான் அவளோட அறிமுகம். அப்பவே விரும்பினவன். இப்ப கல்யாணமாகத பொண்ணுனு தெரிந்தும் விட்டு போக நான் மடையன் இல்லை. ஆனா மனசாட்சி உள்ளவன்.
      எனக்கு அமுல்யாவை குழந்தையிலருந்து தெரியும். குட்டியா  துகிரா கையில வச்சிட்டு எங்க வீட்ல, என் சிஸ்டர் மெர்ஸியை பார்க்க வந்ததிலருந்து, அப்ப எல்லாம் பச் எவ்ளோ கியூட்டான குழந்தை அப்பா இல்லாம வளருதேனு பாவமா இருந்தது. அப்பாவுக்கு அப்பாவா அம்மாவா துகிரா பார்த்து பார்த்து வளர்த்தப்ப, ‘என்ன பொண்ணுயா, தனியாளா வளர்க்குறா’ என்ற ஆர்வம் எழுந்தது. 

    இங்க வருவதுக்கு முன்ன, ஒரு பத்து மாசம் இருக்குமா துகிரா? நான் மெர்ஸியிடம் உங்களை காதலிப்பதா சொல்ல, அவ உன்னிடம் அதை தெரிவித்து, உன் கருத்தை கேட்டு, நடுவுல என் பேரண்ட்ஸ் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கறவளை கல்யாணம் பண்ணப் போறியானு கேட்டு சண்டை பிடிச்சு, ஒருவழியா அவங்களை கன்வின்ஸ் செய்து, துகிராவும் டைம் கேட்டு, ஏழு மாதம் முன்ன அமுல்யாவிடம் பேசி பழகி, ‘இவரை நான் மேரேஜ் பண்ணினா உனக்கு அப்பா கிடைப்பார்’னு நீ அவளிடம் கேட்டு, அவ இரண்டு மாசம் முன்ன சம்மதிச்சு, எல்லாம் ஸ்மூத்தா போனது.

      புயலா இவர் வந்து குழந்தையை தூக்கிட்டு போனதும், நானும் மெர்ஸியும் இங்க வந்தப்பிறகு தான் துகிராவுக்கு கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு தெரிய வந்தது. நல்ல தோழி.. மெர்ஸி.” என்றவன் இஷானிடம் திரும்பி “துகிரா கல்யாணமாகாத பொண்ணு, அமுல்யா அவ அக்கா பொண்ணுனு தெரிய வந்து எங்க வீட்ல மார்னிங் குயிக்கா மேரேஜ் நடத்த எவ்ளோ ஆர்வம் எங்கம்மாவுக்கு.” என்றவன் துகிராவை பார்த்து, “சாரி துகிரா… அந்த இடத்தில் நான் எதுவும் பேசலை. பிகாஸ் ஒரு அம்மாவா எங்கம்மா பேசியது சரி. இதோ பைரவி அம்மா இஷானுக்காக பேசறாங்களே அது போல. 

      பட் இப்ப நான் பேசலைன்னா… ஏதோ தப்பா போயிடுமோனு தோன்றுது.
    பார்றேன்… நான் லவ் பண்ணறது உன்னை. ஆனா உன்னை இவருக்கு மேரேஜ் பண்ண இவங்க பேசறாங்க. அதுக்கு சப்போர்ட் பண்ணறேன்.” என்றவன் குரல் வேதனையை அடக்கி, “உன்னை கல்யாணம் செய்தா அமுல்யாவுக்கு நல்ல அப்பாவா இருப்பேன்னு தான் முடிவெடுத்தேன். ஆனா உன்னோட உயிர் அமுல்யாவா இருக்கும் போது, அவ எதிர்பார்க்கிற அப்பா தான் அவளுக்கு வேணும். நான் இல்லை. அவளுக்கு அம்மாவா நீ தான் இருக்கணும்னா… நீ இஷானை மேரேஜ் பண்ணறது தான் பெஸ்ட் துகிரா” என்றவன் கண்கள் கலங்கி நின்றது.

      “அங்கிள்” என்று படியில் அமுல்யா வேகமாய் வந்து சார்லஸை கட்டிப்பிடித்து, “தேங்க்ஸ் அங்கிள்.” என்றாள்.

       அமுல்யாவை கட்டிப்பிடித்து கண்ணீரை கைக்குட்டையால் துடைத்தவன், இஷானை பார்த்து, “உங்க பொண்ணோட மனசை ஒரு தடவையாவது ஜெயித்து, ஆத்மார்த்தமா அப்பானு கூப்பிட வைக்க ரொம்ப ட்ரை பண்ணினேன். துகிராவிடம் சார்லஸ் அப்பானு சொன்னவ, என்னை அப்பானு கடைசி வரை சொல்லலை. இப்ப ஆத்மார்த்தமா அங்கிள்னு கட்டிப்பிடிச்சிருக்கா. நான் அன்பால ஜெயிச்சிட்டேன் சார். உங்க பொண்ணிடம் நீங்க தோற்காதிங்க. அவ ஆசைப்பட்டதை செய்ய பாருங்க” என்றவன், அமுல்யாவின் உச்சியில் முத்தமிட்டு, தன்னோடு இறுக்கி கொண்டான்.‌

      அதன்பின் அவ்விடம் நூலகம் போல அமைதியில் கழிய, “தம்பி சாப்பிட வாங்க. நேரமாச்சு. நீங்க பிரயாண களைப்போட வந்திருப்பிங்க. இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க. ரிஷி உன்‌ ரூம்ல அழைச்சிட்டு போ” என்று கூற, “வாங்கண்ணா.” என்று அழைத்து சென்றான்.‌

    “இதான் பாத்ரூம், உள்ள புது சோப் யூஸ் பண்ணிக்கோங்க.” என்றதற்கு கையில் மினி ஹமாம் சோப்பை காட்டினான் சார்லஸ்.

    “சரிங்கண்ணா… குளிச்சிட்டு வாங்க” என்று கூற ரிஷியை நிறுத்தி, “போன தடவை என்னை வில்லன் மாதிரி லுக் விட்ட. இப்ப என்ன மரியாதையா வாங்க அண்ணானு?” என்று கேட்க, “நீங்க துகிரா அண்ணியை விரும்பியவர். மனோதத்துவ டாக்டர். அமுல்யா மனசை புரிந்துக்கொண்டு அழகா உங்க காதலை விட்டு தந்து இஷான் அண்ணாவுக்காக பேசினிங்க. ரியலி… இதுப்போல பேச, சப்போர்ட் பண்ண ஒரு மனசு வேண்டும். அது உங்களுக்கு இருக்கு. அப்ப மரியாதை தரணும் தானே” என்று வியாக்கானம் பேசினான்.

    “நான் சொன்னதால உங்க அண்ணா கேட்பாருனு நினைக்க? உங்க அம்மா சொல்லியே கேட்கலை. ம்ம்ம் ஆனா உங்க அண்ணா இஷான் அமுல்யாவுக்காக என்ன வேண்டுமின்னாலும் செய்வார்னு தோன்றுது.
       துகிரா எனக்கானவ இல்லைனு புரியுது. இந்த இடத்துல நான் துகிராவிடம் தனியா பேசி புரிய வைக்கிறதை காட்டிலும் அந்த இடத்துல பேசணும்னு மனசுக்கு பட்டுச்சு. பேசிட்டேன்…. என் காதலை… அங்கயே விட்டுட முடிவெடுத்தாச்சு. 

     என்ன… எங்க வீட்டுக்கு போனா மெர்ஸி என்னை கழுத்தை நெறிக்காத குறையா கேள்வி கேட்பா. அவளுக்கு பதில் சொல்லணும். எங்கப்பா அம்மாவும் எப்படி எடுத்துப்பாங்களோ? ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.” என்று சிலுவை போட, ரிஷியோ “உங்க மனசுக்கு நல்லதே நடக்கும் அண்ணா” என்றுரைத்தான்.

      சார்லஸ் குளித்து வெளியே வர, “அண்ணா… பூரி பிடிக்குமோ தோசை பிடிக்குமா?” என்று பிரதன்யா கேட்க, “ஆக அண்ணானு சொல்லி என்னை பயங்கர தியாகியா மாத்தறிங்க?” என்றவன் துகிராவும் உங்கண்ணாவும் சாப்பிடலை?” என்று கேட்டான்.

    அண்ணி அவங்களுக்கு கொடுத்த ரூம்ல இருக்காங்க. அண்ணா அவர் ரூம்ல போய் லாக் பண்ணிக்கிட்டார்.

       அமுல்யா அம்மாவோட சாப்பிட்டா, என்னோட படுத்துக்கறேன்னு சொன்னா. அம்மாவும் துகிரா யோசிக்கட்டும்னு சொல்லிட்டாங்க அண்ணா.” என்றாள் பிரதன்யா.

      “ம்ம்… நல்லது. தனியா யோசிக்க வைக்கிறது. இப்ப வரை எதுவும் பேசாம போனா… மேபீ அமுல்யா பத்தி யோசிக்கறாங்கனு அர்த்தம். அவங்களை பத்தி மட்டும் யோசித்தா இந்நேரம் மறுத்து பேச்சு வந்திருக்கும்‌‌. எனக்கென்னவோ பாஸிடிவ் பதில் கிடைக்கலாம்.” என்று பூரியை விழுங்கினான்.

      “உங்களுக்கு இப்ப லவ் பெயிலியர். சாப்பிட முடியுதா?” என்று கேட்க, சார்லஸோ, “அட ஒரு கைப்பிடி அன்னம் கிடைக்காம மனுஷங்க எப்படி தவிச்சாங்க. சாப்பாட்டில் வருத்தம் காட்டி என்னம்மா பிரயோஜனம். நான் ஒரு டாக்டர் சாப்பாட்டு தான் உயிர் வாழணும். ரியாலிட்டி தெரிந்தவன்.” என்று பேசினாலும், மாடியில் கண் பதித்தான்.

    பைரவியும் வந்து “நன்றி தம்பி. இந்த விஷயத்தை எப்படி சொல்லறது, எப்படி சம்மதிக்க வைக்கன்னு தெரியாம இருந்தோம். இப்ப தான் சொல்லியாச்சு. அடுத்து சம்மதிச்சா பூரண சந்தோஷம் கிடைக்கும். இருந்தாலும் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.” என்று வாழ்த்தினார்.

      இரவு உணவை துகிரா இஷானை தவிர்த்து இங்கிருந்தவர் சாப்பிட்டனர்.
      ரிஷி அறையிலேயே சார்லஸ் படுத்துறங்க இடம் ஒதுக்கப்பட்டது.
      மெர்ஸி போன் போட, அமுல்யாவுக்கு இப்ப பரவாயில்லை.” என்று மட்டும் தெரிவித்தான்.
      காதலித்தவளை இஷானையே கல்யாணம் செய்ய அட்வைஸ் தந்துவிட்டு வரப்போவதை சொன்னால் மெர்ஸி இப்பொழுதே பொரிந்து தள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

      ரிஷியோ, கிசுகிசுப்பாய் அஞ்சனாவிடம் தொலைப்பேசியில் பேச, சார்லஸோ “என்ன தம்பி லவ்வா?” என்று கேட்டான்‌.

      “ஆமா. அண்ணா… ஆக்சுவலி அஞ்சனாவோட அண்ணன் பையன் கிஷோர் மூலமாக தான் அமுல்யா துகிரா அண்ணி இருப்பதே தெரியும்” என்ற விஷயத்தை உரைத்தான்.

      “அடப்பாவி… உன் லவ்வு மூலமா என் லவ் புட்டுக்குச்சு பார்த்தியா‌. ம்ம்ம்… விதி எப்படில்லாம் விளையாடுது.‌ ஆமா உங்கண்ணா லவ்வுக்கு ஒத்துக்கொள்வானா?” என்று கேட்டு பேச, “இஷான் அண்ணாவும் துகிரா.. சே.. துர்கா அண்ணியும் லவ் மேரேஜ் தானே. அதோட அமுல்யா இருப்பது அஞ்சனா மூலமா தான் தெரியும். அதனால என்  லவ் சக்சஸ் ஆகும்னு கனவு காணறேன்‌. ஏன்னா அம்மா இப்பவரை அதட்டலை.” என்று பல்லை காட்டி சிரிக்க, சார்லஸோ “உன் காதலாவது வாழ வாழ்த்துகள்டா” என்று கூறி கொட்டாவி விட்டு உறங்கினான்.

      இந்த வீட்டில் மேல் மாடியில் இருக்கும் இஷானுக்கும், துகிராவுக்கும் உறக்கம் வரவில்லை. அமுல்யா பேசியதும், சார்லஸ் அறிவுரையும் நெஞ்சை குத்தி கிழிக்க, துடித்தவளாக துகிரா துடித்தாள்.
      இஷானுக்கு தனியாக எண்ணங்கள் எங்கெங்கோ ஊர்வலம் சென்றது. அது நல்லதற்கா அல்லது தீயதற்கா இனி தான் அறிய முடியும்.

       -தொடரும்.
    -பிரவீணா தங்கராஜ்.

  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

    அத்தியாயம்-27

       தன் செய்கையில், மன்னிப்பு கேட்டும் விலகி சென்ற துகிராவை எண்ணி இஷான் கலங்கிவிட்டான்.
      ‘சீ இவ்வளவு தான் துர்கா அக்கா மீது நீ வைத்த காதலா?’ என்று எண்ணி தவிர்ப்பதாக இஷான் நினைக்க, துகிரா மயங்கி சரிந்தாள்.

        “அப்பா… அம்மா விழுந்துட்டாங்க” என்று அழைக்க, துகிரா சரிந்திருக்க, மடியில் வைத்து எழுப்ப முயன்றான்.

      உதடு தந்தியடிக்க, உடல் உதறியது, துகிராவை உடனே மருத்துவமனைக்கு அழைத்திட, காரில் ஏற்றியிருக்க, சற்று நேரத்திலேயே, “காரை நிறுத்துங்க” என்று கூறி வாந்தி எடுத்து முடித்திருந்தாள். நேற்றிரவு சாப்பிட்ட பரோட்டா ஜீரணமாகாமல் வாந்தி எடுத்து முடித்ததும் முகத்தில் வேர்வை அரும்பியது. அவள் காலையில் விழுங்கிய மாத்திரையும் அப்படியே வந்திருக்க, இஷானோ தண்ணீரை நீட்டினான்.

    முகம் அலம்பி, இஷானை பார்வையிட, “வாமிட் வருதுன்னு தான் என்னிடமிருந்து பதில் பேசாம ஓடினியா?” என்று கேட்க, துகிராவோ திருட்டு முழியில் காரில் ஏற, இஷானுக்கு லேசான சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

      “அம்மா ஓகேவா?” என்று அமுல்யா இன்னமும் பதட்டமாய் கேட்டு முடிக்க, “ஓகேடா.” என்று கூற, “டேடி நம்ம ரூமுக்கே போயிடலாம். மம்மி முகமே டல்லாயிடுச்சு. பாருங்க நீங்க நிறைய பேசியும் அவங்க கொஞ்சமா பேசறாங்க” என்று அவள் கவனித்ததை வைத்து கூறினாள்.

      “ரூமுக்கே போயிடலாம்.” என்று அமுல்யாவிடம் ஆமோதிப்பாய் கூறியவன், துகிராவுக்கு சாக்லெட் எடுத்து நீட்டினான்.‌

      இஷானின் புன்னகையை துகிராவும் கண்டதால் வாங்கிக்கொண்டாள். இனிப்பு சுவைக்கவும், அமுல்யாவோ “டேடி… அந்த சாக்கி எனக்குன்னு சொன்னிங்க. இப்ப மம்மிக்கு கொடுத்திட்டிங்க?” என்று இடையில் கேட்க இஷானோ “பஸ்ட் டைம் உங்க மம்மிக்கு சாக்கி தந்துயிருக்கேன். அவளே சாப்பிடட்டும். உனக்கு பெரிய கேன்டி” என்று குழந்தையை சமாளிக்க கூற, துகிராவோ, “அம்மாவுக்கு இந்த சாக்கி போதும். நாம ஷேர் பண்ணிக்கலாம்” என்று பிரித்து தந்தாள்.
     
    இஷானோ துகிராவை கண்ணெடுக்காமல் பார்வையிட, “ஏதாவது ஹோட்டல்ல நிறுத்துங்க சாப்பிட்டுட்டு டெப்ளெட் போட்டுட்டு ரூமுக்கு போகலாம்.” என்றதும் ஹோட்டலுக்கு வந்தார்கள். துகிராவுக்கு இஷான் மன்னிப்பு கேட்டதும் அவன் உதடு லேசாக முறுவலில் திளைத்ததும் அத்தனை ஆறுதல். ஒருவேளை அமுல்யா இல்லாமல், பொதுயிடமாகவும் இவளது உடல்நலமும் நல்விதமாக இருந்தால், இவளே இன்னமும் சுமூகமாக பேசியிருப்பாளோ என்னவோ!?

       மினி மீல்ஸ் துகிரா ஆர்டர் செய்ய, இஷான் ஒருபக்கம் பிரியாணி வாங்கி மகளோடு பங்கிட்டு உணவருந்தினார்கள்.
     
      இம்முறையும் மாத்திரை விழுங்க சென்ற துகிராவை தடுத்து, ஹாட் வாட்டர் கேட்டு, அதில் மாத்திரையை போட கூறினான்.
      துகிராவும் அவ்வாறே செய்தாள். “ஊர்சுத்தி பார்க்கறதா இருந்தா போகலாம். என்னால எதுவும் தடையாக வேண்டாம்” என்றாள் துகிரா. மகளுக்காக தானே இங்கே அழைத்து வந்தான். டிக்கெட் எடுக்கும் முன், பைரவி தன்னையும் கூட போக கண்டிக்கும் முன் குழந்தை விடுமுறைக்காக தானே எண்ணினான்.

      “நீயும் என் பேமிலி தானே? ரெஸ்ட் எடு. லீவு இருபது நாள். இன்னியோட மூன்று நாள் தான் போயிருக்கு. மீதி நாட்கள் வரை இங்க தான் சுத்தப்போறோம்.” என்றான் கனிவாக.

      அறைக்கு வந்து சேர, வீட்டிலிருந்து கொண்டு வந்த வீடியோ கேம் பிளேயரை டிவியில் மாட்டிவிட்டு அமுல்யா விளையாட, துகிராவோ  உடைமாற்றி முகமலம்பி மாத்திரை விழுங்கியதால் உறங்கினாள்.

      இஷானோ, நீண்ட வருடங்களுக்கு பிறகு, நிம்மதியாக உணர்ந்தான்.
      
       அவன் இங்கு வந்தப்பொழுது கூட, மனதில் துகிராவுடன் முன்பு பழகியதற்கு மன்னிப்பு கேட்டு, நட்போடு பழக, அடியெடுத்து வைக்க நினைத்ததே! ஆனால் அவளையே ஆக்கிரமித்து மேலும் தவறிழைத்தவனாக இஷான் துடித்து போனான். இறைவனோ ‘நட்பெல்லாம் உங்களுக்குள் வேண்டாம், கணவன் மனைவி பந்தமே சரியா உறவென்று’ இரவு மன்மதன அம்பை எய்து, இருவரின் காதலை மனம்விட்டு பேச வைத்தும் வேடிக்கை பார்த்து விட்டார். 
     
       இஷான் எண்ணியது போல துகிரா தன்னை வெறுக்கவில்லை என்றதிலேயே நிம்மதியடைந்தான். அதிலும் தன்னிலை உரைத்ததும் புரிந்துக்கொண்டாள் என்ற இதம், அவனுக்குள் புது மனிதனாக பாவிக்க வைத்தது. அதோடு அவளுக்கும் தன்னை பிடித்திருப்பதை அவன் அறிந்தான்.

       துகிராவும் போர்வை போர்த்தி உறங்க, இஷானும் மெத்தையில் படுத்துக் கொண்டு துகிராவையே பார்வையிட்டான்.

      துகிரா இமை திறக்காமல், ‘இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தா தூக்கம் வராது.” என்று எழுந்துக் கொள்ள, “எஸ்… உன்னையே பார்த்துட்டே இருந்தா தூக்கமே வராது.” என்றான் இஷான். அவன் குரலில் தேன் குழைத்து கூறியது போன்ற உணர்வில் துகிரா வெளியே பால்கனி பக்கம் வந்து சேர்ந்தாள்.

       இஷானும் பின்னாடியே வர, ”நான் இந்த வாழ்க்கையையே எதிர்பார்க்கல. அக்கா வாழ்க்கையை நிறுத்தி, அந்த வாழ்வில் நான் நுழைந்ததா தான் இப்பவும் தோனுது. எனக்கான வாழ்க்கையை நான்…” என்றவள் உதட்டை தன் வலது கரத்தால் தடையிட்டவன், “உனக்கான வாழ்க்கையை தான் நீ இனி வாழ போற. அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்.” என்றான் இஷான்.‌

      “எங்க.. ஐ லவ் யூ துகிரானு சொல்லுங்க பார்க்கலாம்‌” என்று கையை கட்டி கேட்டாள்.

      இஷானோ ‘இப்படி கேட்டா எப்படி?’ என்று பார்வையில் திணறினான்.‌

       “உங்களுக்கு நேத்து நடந்த நிகழ்ச்சியில் தப்பு பண்ணிட்டோம்னு பதட்டத்தில் மன்னிப்பு கேட்கறிங்க. அதோட இதுவும் காதல்ல நிகழ்கின்றதா, பூசி மொழுக பார்க்காதிங்க. நீங்க என்னை தூக்கிட்டு வர்றப்ப, துர்கா அக்காவா நினைச்சிங்க என்பது உண்மை. கடைசி நிமிடத்துல துகிராவா போச்சேனு துடிச்சிங்க” என்று அழுதவளை சமாதானம் செய்ய இயலாது துவண்டான்.

      ”நான் உங்களை குற்றம் சுமத்த விரும்பலை. ஒரே உருவத்துல உரிமையா பெட்ல இருந்ததும் உங்க மனசு தடுமாறியிருக்கலாம். துர்கானு கனவுல வாழ்ந்த நீங்க, சட்டுனு துகிரானு நினைக்க கஷ்டமாயிருக்கும். ஆனா நேத்துலயிருந்து உங்க மனசுல துர்கா அக்காவை விட இந்த துகிரா ஆட்சி செய்யறா. எனக்கு அதுவும் தெளிவா தெரியுது.
      இந்த மாற்றமே பெரிய விஷயம் தான்.” என்று மூக்குறிந்து கூற, இஷான் மெதுவாக தலையாட்டி அவள் பேச்சை ஆமோதித்தான்.

    அவள் கூறியது நூறு சதம் உண்மையே. அதற்காக தாலி கட்டிவிட்டு துகிராவை தள்ளி நிறுத்தி, அவள் வாழ்க்கையில் அமுல்யாவுக்கு அம்மாவாக மட்டுமே வாழும் தியாக சுடராக பாவிக்கவும் மனமில்லை.
      அவனவன் மனைவி இறந்தால் அடுத்து புதுமாப்பிள்ளையாக மாறுகின்றான். இங்கே ஆறு வருடங்கள் தவவாழ்க்கையை தான் வாழ்ந்தான் இஷான். எந்த பெண்ணிடமும் தன் மோகத்தை தீர்க்கவும் சென்றதில்லை‌யே..!
     
       இதற்கிடையே காபி பருகினார்கள் குழந்தையை அழைத்து மெதுவாக வாக்கிங் சென்றார்கள். அழகான குடும்பம் சற்று துகிரா இஷான் தங்கள் பேச்சை புரிதலோடு ஆரம்பிக்க முயன்றார்கள்.

      இரவு ”அம்மா.. நான் இன்னிக்கு இந்த பெட்ல படுக்கவா?” என்று கேட்க, துகிராவோ திணறி போய் மறுக்க பார்க்க, இஷானோ ”அம்மா பயப்படுவா. வேண்டாம்னு சொல்வா பாரு.” என்று இஷான் கமுக்கமாய் சிரிக்க, துகிராவோ முட்டைக்கண்ணில் அவனை  முறைத்துவிட்டு, “அதெல்லாம் வேண்டாம். இங்கயே படு” என்று அதட்டினாள்.

    “டேடி… நீங்க சொல்லுங்க‌. மம்மி இப்படி தான்.” என்று தந்தையிடம் சலுகை கேட்டு நின்றாள்.

      இஷானோ “நீ பஸ்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் போறிங்க. தனியா படுக்கலாம். பக்கா‌” என்று பகளை ஏற்றிவிட, அமுல்யாவோ குத்தாட்டம் போட்டு அங்கே சென்று படுத்தாள்.

      “அம்மு… நைட்டு அழுவ. மரியாதையா இங்கயே படு” என்று துகிரா மிரட்ட, “நோ மம்மி. நீ என்னோடவே இருக்கன்னு தெரிந்தாலே நான் அழமாட்டேன். அன்னிக்கு கூட பிரதன்யா அத்தை கூட தூங்கினேன் நினைவிருக்கா.” என்றாள். துகிரா எப்படி மறப்பாள் அன்று முதலிரவு நாட்களென்று பைரவி அத்தை பால் டம்ளரை கையில் கொடுத்து அனுப்பினார்களே!

      இன்று இஷானின் பார்வை பேச்சு சிரிப்பு என்று மாறியிருக்க, திகிலாக தான் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், அமுல்யாவை அதிகமாக வற்புறுத்த இயலாது. அதோடு நேற்று நடந்துமுடிந்த  கலவரம் நினைவு வந்தது. இஷானுக்கு தன் பெண்மை தேவை என்றால் மறுக்கும் பேதையும் இல்லை.

    இரவு உணவை விழுங்கி, கொஞ்சம் அப்பா மகள் கதை பேசினார்கள். துகிராவும் அதில் கலந்துக் கொண்டாள். இதில் வீடியோ காலில் வேறு இஷான் துகிரா அருகே, அமர்ந்து பேச, துகிராவோ பைரவி அத்தை பார்க்க வேண்டுமென்றே இப்படி செய்வதை அறிந்து அமுல்யா தேடி அவள் நுழுவ, இஷானோ “அம்மா… இன்னிக்கு எடுத்த செல்ஃபி எல்லாம் அனுப்பறேன்‌ பாருங்க” என்று இலைமறை செய்தியாக உரைத்தான். அவர்கள் அதை சரியாக காதில் வாங்கினார்களோ இல்லையோ, அனுப்பிய புகைப்படம் எல்லாம் மூன்று பேர் சேர்ந்திருந்தவை மட்டுமே. 

    பைரவியோ “உங்கண்ணா முகமும், அந்த துகிரா முகமும் பாரு. ஏதோ சோகத்தை முகத்தில் அப்பி வச்ச மாதிரி‌” என்று குறைப்பட்டார். எல்லாவற்றையும் புகைப்படமே விளக்கி விடுமா என்ன? இன்று எடுத்தவை எல்லாம், இஷான் குற்றவுணர்விலும், துகிரா உஞல் அசதியிலும் இருந்த புகைப்படமே.

        துகிராவுக்கு ஜுரமும் மட்டுப்பட்டுயிருந்தது. இரவு அவ்வளவு சொல்லியும் அமுல்யா தனியாக படுத்துறங்க செல்ல, துகிராவோ, மாத்திரை விழுங்கி படுக்க சென்றாள்.

    நேரங்கள் நகர, துகிராவை அணைத்திருந்தது இஷான் கைகள்.

      “துகிரா… துகிரா.. ஏதோ.. ஒரு வார்த்தை கேட்டியே… அதை சொல்லு.. இப்ப சொல்லறேன்.” என்று ஆரம்பிக்க, “அவளோ நெளிந்தபடி, “எனக்கு மறந்துடுச்சு” என்றாள்.

      “எனக்கு மறக்கலை டி.” என்று கூற, “சரி. கையை எடுங்க. அமுல்யா எந்திரிச்சிடுவா. எனக்கு பயமாயிருக்கு” என்றாள். அவன் ஆசையும் பேச்சும் புரிந்தப்பின்னும்.

      “அவ தூங்கினா நடுவுல எந்திரிக்க மாட்டா. நீ இந்த ரூம்ல இல்லைனா  எந்திரிக்கலாம். அவளை விட்டு தனியா போக கூடாதுன்னு என்னோட உன்னை கல்யாணம் செய்து வைக்க, இல்லாத அடம் பிடிச்சாளே” என்று துகிரா உதட்டை தீண்ட, இஷானின் கைகள் தன் அங்கத்தில் ஊர்ந்து சென்று, பெண்மையை விழித்திட செய்தது.

      மெதுவாக இஷான் பக்கம் துகிராவை திருப்பி தன் முத்தத்தின் பல விதத்தை, வித்தையாக பரிமாற, அன்பை நிறைக்க முயன்றான்.‌ இனி வாழ்க்கை இல்லறத்தையும் நல்கியாக வேண்டியது தானே!?

      வன்மையும் மென்மையும் போட்டி போட்டு இஷான் துகிராவை மையலிட்ட பொழுது, “துகிரா.. ஐ லவ்யூ.” என்று செவிமடல் சூடேற, காதல் யுத்தம் செய்தவனாக மனதை நிறைத்தான்.‌

      நேற்றைய அழுகை எல்லாம் மாறி, இஷானின் செல்ல கடிகளை கூட, சுகமாய் ஏற்றவளாக துகிரா ஆனந்தப்பட்டாள்.

        ஆனந்தங்கள் கட்டுக்குள் உண்டு என்பது போல யுத்தங்கள் இனிதாய் முடிவடைந்தப் பின்னும் இஷான் துகிராவை அணைத்துக் கொண்டு துயில் கொண்டான்.

      அடுத்தடுத்த நாட்கள் இங்கிருந்த  விடுமுறை நாட்கள் எல்லாம் பகலில் அமுல்யாவுக்கு ஊட்டியை சுற்றி காண்பித்தும், இரவில் துகிராவோடு இரண்டாம் தேன்நிலவை கொண்டாடினான் இஷான். துகிராவுக்கும் முதல் தேன்நிலவாக அமைந்தது ஊட்டியில்…

       சென்னை திரும்பி வந்தப்பொழுது, பிரதன்யாவுக்கு கைப்பையும், உடையும், சாக்லேட்டும், வளையலும் என்று அள்ளிக் கொண்டு வந்திருக்க, ரிஷியின் காதலி அஞ்சனாவுக்கும், பிரதன்யாவுக்கு வாங்கியது போலவே துகிரா தரவும், “அண்ணி தேங்க்யூ.” என்றாள் பிரதன்யா. 

    ரிஷியோ “எதுவும் எனக்கில்லையா அண்ணி” என்று தேட, இஷானோ “அரியர் வச்சதை க்ளியர் பண்ணு, அஞ்சனாவையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்று வாறினான் இஷான்.

      “துகிரா… அம்மாவுக்கு மூட்டு வலி தைலம் வாங்கினியே, எதுல வச்ச?” என்று இஷான் உரிமையாக கூப்பிட, “அமுல்யா அது அவளோட கிஃப்ட்னு அவ தான் அவ பாட்டிக்கு தருவேன்னு சொல்லிருந்தா. அவ பையில இருக்கும்” என்றாள்.

      பைரவியோ இஷானும் துகிராவும் இயல்பாய் பேசியதை கவனித்து துகிராவிடம், “என்ன மேஜிக் இது?” என்று கேட்க, “நீங்க தானே மஞ்ச கயிறு மேஜிக் நடக்கும்னு பிளான் போட்டது. அந்த மேஜிக் வொர்க்கவுட் ஆகிடுச்சு.” என்று வெட்கம் கொண்டாள்.
      இதற்கு மேல் பைரவிக்கு வேறென்ன வேண்டும். ரிஷி திருமணம் முடிய, அடுத்து பிரதன்யாவுக்கு நல்ல வரன் தேட வேண்டும், எப்படியும் இனி எல்லாம் சுபமாக அமையுமென்று பைரவிக்கு தோன்ற இறைவனுக்கு நன்றி நவில்ந்தார்.

      அமுல்யா கேட்ட குட்டி மெத்தை சரியாக வந்திறங்கவும், அமுல்யாவோ “சித்தா, அத்தை இங்க பாருங்க. எனக்கு தனி பெட்.” என்று குதூகலிக்க, “அண்ணி அண்ணா… ஊட்டிக்கு போயிட்டு வந்தப்ப தான் அமுல்யா பிறந்தா. இப்ப ஒரு அமுதனை எதிர்பார்க்கலாமா?!” என்று கேட்டு துகிராவை வெட்கம் கொள்ள வைத்தாள் பிரதன்யா.

     ”கொழுந்தனார் மேரேஜ் முடியவும், நாத்தனாரை வீட்டை விட்டு துரத்தணும்.” என்று துகிராவோ சமாளித்து ஓடினாள்.

        இஷான் துகிரா அறைக்கு வந்து சேர, அமுல்யா இன்னமும் பிரதன்யாவிடம் தன் பொருட்களை கடைப்பரப்பி விளக்க ஆரம்பித்திருந்தாள். 

      துகிராவின் கையை பிடித்து, முத்தமிட்ட இஷானோ, “இங்க வீட்ல எல்லாரும் ஹாப்பி. நீ ஹாப்பியா?” என்று கேட்டான்.‌

      “அப்பா அம்மா அக்கானு குடும்பத்தை இழந்து அமுல்யாவோட தனியா அனாதையா நின்றவ நான்.
    கண்ணுக்கு அழகா கணவன்,  நாத்தனார், கொழுந்தனார், மாமியார்னு இத்தனை சொந்தம் அமைந்திடுச்சு. இதுக்கு மேல என்ன வேண்டும்.” என்றாள் ஆனந்தமாய் அவன் நெஞ்சில் சாய்ந்தபடி.

      “இதுக்கு மேல ஒரு பையன் வேண்டும். ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணு ஆல்ரெடி இருக்கா. பையன் மட்டும்… அதுவும்… உடனே வேண்டாம்… உன் பிரெண்ட் மெர்ஸி கல்யாணம் மூன்று மாசம் இருக்கா? அதுக்குள்ள..‌. ரெடி பண்ணுவோம்” என்று கூற, துகிராவோ, “ஆசை தான்” என்று இஷானின் நெஞ்சில் இடிக்க, “ஆசையில்ல… பேராசை… கண்ணாடி நெஞ்சம் தாள்ளாடதே… உன்னை பார்த்து.” என்று துகிரா இடைவளைத்து இதயம் நுழைந்த கள்வனாய் கணவனாய் இஷான் அன்பெனும் கடலில் மையலிட்டான்.

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.  

    இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. 

    -சுபம்.
    -பிரவீணா தங்கராஜ்



  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

    அத்தியாயம்-25 

         ஹோட்டல் அறைக்குள் வந்ததும் அமுல்யா தான் மெத்தையில் ஏறி துள்ளி குதித்தாள். இஷான் துகிரா இருவருமே ரிஸப்ஷன் பெண் கூறியதை கேட்டு மௌனமானார்கள்.
      
    துகிராவோ ‘இங்க பஸ்ட் நைட்டே நடக்கலை. இதுல செகண்ட் ஹனிமூன். ஸப்பா… இந்த ரிஸப்ஷன் பொண்ணுக்கு யார் தான் பேச ஸ்கிரிப்ட் எழுதி தருவாங்களோ?’ என்று நிதானிக்க, இஷானோ, ‘எனக்கு இங்க எதுவும் சரியாப்படலை.’ என்பதாக துகிராவை காண, அவளோ மகளை முத்தமிட்டு மேகத்தை காட்டி பேச, இஷான் காணவும் துகிரா பார்வையை இவன் புறம் திரும்ப, “அப்பா… அங்க பாருங்க க்ளவுட் அழகாயிருக்கு” என்று ஆர்ப்பரிக்கவும், இஷான் “நீ பாரு அப்பா நீங்களாம் ரெடியாகறதுக்குள் குட்டி தூக்கம் போடறேன்” என்று மெத்தையில் தன் பாரத்தை களைய முற்பட்டான்.‌

       ஹீட்டர் போட்டுவிட்டு அலுப்பு தீர துகிரா குளித்து முடித்தாள். அதற்குள் அமுல்யாவோ அந்த அறையில் ஒவ்வொரு இடத்திலும் சென்று இடத்தை பார்வையிட்டாள். மெத்தையில் குழந்தைக்கென்று தனி மெத்தை வேறு இருக்க, “அப்பா இந்த பெட் குட்டியா ரொம்ப அழகாயிருக்கு. நம்ம வீட்டுக்கு போனதும் எனக்கு இதுபோல குட்டி பெட் வேண்டும்.” சுட்டிக் காட்டினாள். அது ஒருத்தர் மட்டும் உறங்க தோதுவான சிங்கிள் பெட்.

      மகள் கொஞ்சி கேட்க “வாங்கலாம்” என்றவன் வெளியே பார்வையிட்டு முடிக்க, ஊட்டியின் செழுமையில் மனதை தொலைத்தான். அவனுக்கு துர்காவோடு வந்த நாட்கள் எல்லாம் காட்சியாய் வந்து சென்றது. 

      துகிராவோ “அம்மு போ குளிச்சிட்டா சாப்பிட போகலாம்.” என்று கூற, அமுல்யாவோ குளிக்க ஓடினாள்.

      துகிரா இஷான் மட்டும் இருக்க, இஷான் பால்கனி இடத்திலேயே வேடிக்கை பார்க்க, துகிராவோ தலைவாறி அலங்காரம் செய்வதில் நேரம் சென்றது.

    “மம்மி டவல்” என்றதும், துகிரா தரவும் அமுல்யாவோ “ம்மமி குளிருது.” என்று நடுங்க, வேகமாய் உடைமாற்றி விட்டாள். ஸ்வெட்டர் எல்லாம் அணிவித்து முடிக்க, இஷான் குளிக்க சென்றான்.

      அமுல்யாவுக்கு தலைவாறும் போது, இஷான் டவலை இடையில் அணிந்து, தலையை துவட்டியபடி வர, துகிரா சங்கோஜமாய் அமுல்யாவுக்கு தலைவாறி லிப்ஸ்டிக் போட்டு விட, இஷானோ எப்பவும் போல சற்று நேரம் கழித்தே துகிரா என்றது நினைவு வர உடனடியாக வேறு அறைக்கு ஓடவும் முடியாமல் விழிக்க, “நம்ம பால்கனிக்கு போகலாம்” என்று துகிரா மகளை அழைத்து வந்தாள்.

      இஷான் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுப்கோப்பாக வைக்க வேண்டிய அவசியமின்றி, சாதாரணமாகவே உடல் கச்சிதமாக இருக்கும். அதிலும் தண்ணீர் துளிகள் உடலில் ஆங்காங்கே முத்து போல இருக்க, சற்று கவர்ச்சியாக இருந்து தொலைத்தான்.

        அம்மாவும் பொண்ணும் சாப்பிட வெளியே செல்ல தயாராகி இருந்தனர்.

      இஷான் டீஷர்ட் ஜீன் சகிதம் வந்தவன், அருகேயிருந்த  ஹோட்டலில் உணவு உண்ண குடும்பமாய் சென்றார்கள்.

    இஷான் மகளை தன்னோடு அமர வைக்க, இஷானுக்கு எதிரே துகிரா அமர்ந்தாள்.

         பூரி-கிழங்கு, மசாலா தோசை என்று ஆர்டர் தந்துவிட்டதால் மகளிடம் பேசினான்.
      நிறைய பேசினாலும் எதிரே இருப்பவளை பார்த்து தொலைக்கும் கட்டாயம் வந்து சேர, துகிரா பாராத பொழுது கவனித்தான்.

      துர்காவுக்கும் இவளுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லாமல், பிரம்மன் தன் உயிரை பறிக்க அனுப்பியதில் இஷான் பார்வை சென்றாலும் சில நேரத்திலேயே, கண், காது, மூக்கு, வாய் என்று அங்கங்களை ஆராய துவங்கியது.

      அமுல்யாவுக்கு பூரி வரவும், இஷான் மகளுக்கு ஊட்டிவிட, நேரம் கழிந்தது‌.

       துகிரா பார்வையும் அம்முவை அழகாக பார்த்துக் கொள்ளும் இஷான் மீது பதிந்தது. ‘குழந்தையை எல்லாம் நல்லா பார்த்துக்கறார். வீட்ல எல்லாரிடமும் நல்லா பழகறார். என்னிடம் தான் முகத்தை தூக்கி வச்சிக்கறார்.’ என்று அவனையே பார்க்க, தோசை வந்து ஆறவும், “தட்டை பார்த்து சாப்பிடறியா?” என்று கடிந்தான். இவ்வளவு நேரம் கள்ளத்தனமாய் அவனது பார்வையை மறந்து தொலைத்தான்.

      துகிராவுக்கு அசிங்கமாகி போனதால் எவ்விதமான பதிலையும், வழங்காமல் சாப்பிடுவதில் கண்பதித்தாள்.

      இஷான் இங்கு வந்து விட்டதையும், ஊர்சுற்றி பார்க்க செல்ல போவதையும், பைரவியிடம் தெரிவிக்க போன் பேசிமுடித்தான்.‌

      முதல் சுற்றாக ஊட்டியின் தாவரவியல் பூங்காவிற்கு, மகளை அழைத்து சென்றான்.‌ ஊட்டியின் மிகப்பிரபலமான இடம். இங்கு வராமல் யாரும் இருக்க இயலாது. பலதரப்பட்ட மலர்களை கண்காட்சியில் காணலாம்.

    அந்த மலர்களை எல்லாம் தோற்கும் விதமாக அமுல்யா அங்குமிங்கும் ஓடி பூக்களை ரசித்து, தந்தையிடமும் தாயிடமும உற்சாகமாய் விவரிக்க, அதல்லாம் புகைப்படமாக கேமிராவில் பதிவு செய்தாள் துகிரா.
     
      ‘நான் அப்பா கூட எடுக்கறேன்’ என்று துகிரா போனில் இஷானும் அமுல்யாவின் புகைப்படமாக பதிய, அதே போல இஷான் போன் கேமிராவில் துகிரா அமுல்யா புகைப்படமாக சேர்ந்தது.

       ”டேடி மம்மி சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம்” என்று அமுல்யா பிடிவாதத்தில் சில புகைப்படங்கள் மூவருமாக எடுத்தனர்.
       அங்கே ஒன்றரை மணி நேரம் செலவாக, ஊட்டி பொம்மை ரயில், மியூசியம், ரோஜா தோட்டம் என்று இஷான் மகளை தூக்கி நடக்க சில நேரம் மகள் கையை பற்றி செல்ல, துகிரா இவர்களை பின் தொடர்ந்தாள். 
      இருவரின் சந்தோஷத்தில் அமுல்யா அழைத்தால் கலந்துக்கொள்வாள். இஷான் முகம் காட்டினால் தள்ளி செல்வாள். நேரத்திற்கு தகுந்தது போல இஷான் முகமாற்றத்தை கொண்டு நடந்துக்கொள்வதில் துகிரா தேர்ந்தெடுத்த மனைவியாக திகழ்ந்தாள்.

        மதியமானதும் ஹோட்டலில வந்து சாப்பிட எண்ணினார்கள். மூவரும் கை அலம்பி அமர துகிராவோ ஸ்வெட்டரை போட்டபடி, அமுல்யாவிடம், அமர, ‘நான் என் பொண்ணு பக்கத்துல” என்ற குரலில் துகிரா எழுந்து விட்டாள்.

      இஷானுக்கே அந்த நேரம் கஷ்டமானது. துகிராவை தாலி கட்டி அவமரியாதையாக நடத்துவதாக தேன்றியது. ஆனால் நெருங்க விட்டால்,  தானே பாவப்பட்ட ஜீவனாக மாறலாமென்றதும் அவன் அறிவான்.

       சூப் ஆர்டர் செய்து அமுல்யாவுக்கு ஊதி தந்தான் இஷான்‌. துகிராவோ மகள் உதட்டிற்கு வெளியே சிந்துவதை டிசு பேப்பரால் துடைத்தாள்.
       அந்த நேரம் ஒரு பெண் வெயிட்டர் வந்து, “ஹலோ மேம் எப்படியிருக்கிங்க. என்னை நினைவிருக்கா?” என்று கேட்க துகிராவோ இல்லையன்று மறுத்தாள்.

      “மேம் நீங்க லாஸ்ட் டைம் ‘ஆரோபவன்’ சாப்பிட்ட பொழுது புட் மாறி கொண்டு வந்ததுக்கு பிரச்சனை ஆச்சே. அப்ப எனக்கு நீங்க தானே சப்போர்ட் செய்து ஓனரிடம் பேசினிங்க” என்று நினைவுகூர்ந்து கூற துகிராவோ விழித்தபடி இருந்தாள்.

      “சிஸ்டர்.. எனக்கு நினைவியிருக்கு. சிக்கன் பிரியாணி கேட்ட எங்களுக்கு கார்ன் ப்ரைட் ரைஸ் கொடுத்துட்டு. கார்ன் ப்ரைட் ரைஸ் கேட்ட ஐயர் பொண்ணுக்கு சிக்கன் ப்ரியாணி நீட்டவும், அந்த பொண்ணு அய்யோ அம்மானு கூப்பாடு போட்டு இதுக்கு தான் சைவம் அசைவம் கலந்திருக்கற ஹோட்டலுக்கு வரமாட்டேன்னு அவங்க கணவரிடம் சண்டைப்போட, என் ஓய்ஃப் பிறகு உங்களுக்காக காம்பர்மைஸ் பண்ணினாங்க” என்று விவரித்தான்.

       “எஸ் சார்… அந்த ஹோட்டல் விட இப்ப இங்க சம்பளம் அதிகம். அதோட அந்த ஹோட்டல் சார் தான் இங்க ரெகமண்ட் பண்ணியது. உங்க குழந்தையா மேடம் சோ கியூட். செகண்ட் ஹனிமூனா மேம். கங்கிராட்ஸ்” என்று இஷானை துகிராவை மாறிமாறி பார்த்து பேசி வாழ்த்து சொல்லி செல்ல, துகிராவோ, “ஏன் பார்க்கறவங்க எல்லாம் ஹனிமூனானு கேட்டு தொலைக்கறாங்க? சே” என்று முனங்கினாள்.

      இஷானோ எவ்விதமான வினையாற்றாது சாப்பிட்டு அப்பெண்ணுக்கு டிப்ஸ் வைத்து சிறுபுன்னகையை உதிர்த்து சென்றான்.

       வெளியே வந்ததும் “துர்கானு நினைச்சு அந்த பொண்ணு..” என்று இஷான் விளக்க முனைய, “தெரியுது… நான் எங்க ஊட்டிக்கு வந்தேன். எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் விட்டுடுங்க.” என்றவள், ”என் லைப்பைல என்‌ கேரக்டர் எல்லாமே இல்லாம துர்காவாவே மாத்திடுங்க. என் சுயத்தை தொலைச்சிட்டு வாழறேன்” என்று சலிப்பாக பேசினாள்.

      இஷான் டிக்கெட்டில் துர்கா என்ற பெயரை வைத்த கோபத்தையும், இங்கே இப்பொழுது இந்த பெண் துர்கா என்றே பேச  கிடைத்த சந்தர்ப்பத்தில் இஷானை சாடினாள்.

      பொம்மை ரயிலில் பயணம் முடித்து மாலை நேரம் ஹோட்டல் திரும்பினார்கள்.

       இரவு உணவை ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து அறைக்கே வரவழைத்து சாப்பிடும் முடிவில் இருந்தனர்.

      அமுல்யா அவளது அப்பா போனில் எடுத்த புகைப்படத்தை பிரதன்யா அத்தைக்கு அனுப்பி, பாட்டிக்கும் சித்தாவுக்கும் காட்ட கூறினாள். அதோடு வீடியோ காலில் பேசி பால்கனி வியூவை காட்டி, குளிராக உள்ளதென கூறினாள். இஷான் மெத்தையில் நன்றாக சாய்ந்துக்கொண்டு மகளின் ஆட்டத்தை பார்த்து ரசித்தான்.
      அறைக்குள் பால்கனிக்குள், தனி மெத்தையை காட்டி, இங்க குட்டி பெட் இருக்கு அத்தை. அப்பாவிடம் இதே போல கேட்டியிருக்கேன். அப்பா வாங்கித்தர்றேன்னு சொன்னாரே” என்று மெத்தையில் குதித்தபடி பேசினாள்.

         உணவு வந்ததும் பாட்டி இங்க பாருங்க மண்பானை பரோட்டா. ரூமுக்கே கொண்டு வந்துட்டாங்க” என்று வீடியோவை அப்படியே காட்டினாள்.

      துகிராவோ “நான் சர்வ் பண்ணிக்கறேன்”னு என்று அமுல்யாவுக்கு ஊட்டிவிடும் வேலையில் இருந்தாள்.‌
      “எங்க போனாலும் உங்க அம்மாவுக்கு உன்னை பார்த்துக்கறதே வேலை.” என்று பைரவி இஷானுக்கு கொட்டு வைக்கவும் தவறவில்லை‌.
      
       “அம்மு பெட்ல சிந்தாம சாப்பிடணும் ஒரு இடமா உட்காரு” என்று அதட்டவும் செய்தாள்.

      “ஓகே அத்தை பைபை. பாட்டி உம்மா. சித்தா அரியருக்கு படிங்க” என்று அமுல்யாவும் சித்தாவுக்கு கொட்டு வைத்து போனை அணைத்தாள்.

      எட்டு முப்பதிற்கே அமுல்யாவுக்கு ஊட்டிவிட்டு அதே தட்டில் துகிரா  சாப்பிட்டாள். இஷானும் சாப்பிட்டுவிட்டு, போன் கோமிராவில் எடுத்த புகைப்படத்தில் துகிரா அமுலு மட்டும் இருக்க, “நானும் அமுலுவும் இருக்கற போட்டோஸ் எல்லாம் இருந்தா, எனக்கு செண்ட் பண்ணிவிடு” என்று மொட்டையாக கூற துகிரா அனுப்பிக் கொண்டிருந்தாள்.

       ஒன்பது ஒன்பதே காலிற்கு அமுல்யா அலைச்சலில் உறங்கியிருக்க, துகிராவும் படுத்துக் கொண்டாள்.

    இஷான் ஒன்பது நாற்பதிற்கு உறங்க வந்தான்.
      அவன் நேரமோ என்னவோ, அவன் வந்து சேரும் பொழுது அமுல்யா மெத்தையின் ஒரத்திற்கு சென்றிருக்க துகிரா நடுவில் படுத்துறங்கியிருக்க, இஷான் துகிரா அருகில் படுத்தான்.

       பத்து ஐந்து வரை போனில், அமுல்யாவோடு துகிரா இருந்த புகைப்படத்தை கண்டவனுக்குள், துர்கா அமுல்யா போலவே மனதில் நினைத்தான். துர்கா இருந்தா இப்படி தான் இங்க வந்திருப்போம்.  செகண்ட் ஹனிமூனா இருந்திருக்கும். துர்கா என்னிடம் ‘கைகாலை வச்சிட்டு சும்மாயிரு இஷான்னு சிணுங்கியிருப்பா.’ என்று இறந்தவளோடு வாழும் விதமாக கனவு கண்டான்.‌

      பத்து இருபதிற்கு, கண்கள் சுழல போர்த்தி படுத்திருந்தான்.
       “அமுலு” என்று கைகள் மகளை தேட, துகிராவின் இடையில் கை வைத்தான்.

      இமை மூடியவனுக்குள், “அம்மு… அந்தபக்கம் படுத்திருக்காளா?” என்று விழிதிறந்து பார்வையிட, துகிராவும், அரை உறக்கத்தில், “என்ன அம்மு” என்று திரும்ப, இஷான் கண்கள் நெருக்கத்தில் காட்சியளித்தது.

       சுற்றிலும் இருட்டு, அறையை பிரகாசிக்க சின்ன வெளிச்சம் அதில் துகிராவின் பால் முகம் தெரிய, இஷானின் கைகள் மெதுமெதுவாக துகிரா பின்னந்தலைக்கு சென்று அவளை தன் முகத்தருகே நெருக்கியது.

        துகிரா இடையிலிருந்து ஊர்ந்த இஷான் கையால் பேச்சிழந்து விழியை உருட்ட, அடுத்து இஷான் அவன் முகத்தருகே தன் உதடு செல்லவும், இஷான் செய்ய போகும் விபரீதம் உணர, இஷான் துகிராவின் இதழை கொய்திருந்தான். தன் கையால் இஷான் நெஞ்சில் கை வைத்து தள்ள நினைக்க, இஷானின் முத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மூளையை மழுங்கடிக்க வைத்து, மனமானது அவன் வசம், அவளை இழந்துக் கொண்டிருந்தது.

      இஷான் முத்தங்கள் விடுபடாமல் தன் கையால் பெண்ணவள் மேனியில் அணைப்பை இறுக்கி, தன்னோடு ஒன்ற வைத்தான். எந்த நொடி, தன் கட்டுப்பாட்டை இழந்தானோ துகிராவை பூப்போல தூக்கி, தனியாக இருந்த மெத்தையில் பெண்ணவளை கிடத்தினான்.

      துகிராவுக்கு இஷானின் உருவம், அவன் ஆசை, வேட்கை, இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், தன்னை ஆள்வதில் முனைகின்றான் என்று அறிய, அவன் விருப்பத்தை தடையிடாமல், அவளுமே மதிமயங்கினாள். இஷான் தொட்டு தூக்கி தானே தன்னை ஏந்தியது.

        முகமெங்கும் முத்தங்களை விதைத்து துகிராவை மதிமயக்கத்தில் தள்ளிவிட்டவன், அவனுமே மன்மதனின் அம்பால் மதியிழந்து கிடக்க, அங்கே கரையை கடந்தது அலைகள்.

       “துர்கா” என்று மோகத்தில் முதல் மனைலி பெயரை உச்சரித்து முன்னேறி, துகிரா கழுத்தில் கூச்சத்தை தர, துகிரா ‘துர்கா’ என்ற பெயரில் மூளையும் விழிகளும் விழித்துவிட்டது.

      அக்கா துர்கா என்ற எண்ணி  தன்னை நாடியதாக புரிய, “வேண்டாம் ப்ளிஸ்” என்று துகிரா உச்சரிக்குமுன், அவள் இரண்டு கைகளையும் தலைக்கு மேலை துக்கி பேசவிடாமல் முத்தத்தால் வாயை மூடினான்.‌

      துர்காவோ துகிராவோ இஷான் அதை உணராது வேட்கையில் இருப்பதை அறிந்த துகிராவுக்கு, கண்ணில் கரை புரண்ட கண்ணீரோடு வலியை பொறுத்து இஷானை ஏற்க முடிவெடுத்தாள்.
     
       இஷான் அவனது வேகத்தில், துகிரா கண்ணில் வழியும் கண்ணீரை தாமதமாகவே கண்டான்.  அதன்பின் அவன் மூளையும் விழித்துக் கொள்ளும் நேரம் சரியாக தான் ஆள்வது துகிரா என புத்திக்கு புரிந்தது.  “துகிரா” என்று உணர்ந்திட, வலியை பொறுத்து உதடு கடித்தவளின் நிலை புத்திக்கு செல்லும் முன் அனைத்தும் நிகழ்ந்தது.

      இஷான் துர்கா என்று ஆரம்பித்த பொழுது, திரும்பிய துகிரா பார்வை, இஷான் இப்பொழுது உதிர்த்த “துகிரா” என்ற வார்த்தையில் அவனை கண்டாள். கடைசியாக என் பெயரை உச்சரித்து விட்டாயே!? என்ற நிம்மதியில் அவளுக்கு மூச்சு வாங்கியது.

      இஷானோ தவறு செய்தவனாக எழுந்தவன் நேராக குளியலறை சென்றுவிட்டான்.

       ஏதேனும் பேசி அமுல்யாவின் தூக்கம் தடைப்படுமென்ற காரணமா, அல்லது இப்பொழுது நடந்த நிகழ்வுக்கு தான் மட்டுமே காரணமென்று புரிந்ததாலோ, அமைதியாக வந்து படுத்துவிட்டான். இஷானின் இயல்பே அவன் தவறுக்கு அமைதி காப்பவன் தானே. இதே இந்த தவறுக்கு துகிரா மட்டும் காரணமென்றால் தாம்தூமென்று வானுக்கும் பூமிக்கும் குதித்திருப்பான்.

       துகிராவுக்கு முதல் கூடல் நிகழ்ந்த காரணத்தாலும், தற்போது எழுந்து இஷானோடு பேசவோ எவ்வித நிலையும், தன்னால் இயலாதென்று அசையவில்லை.
      அவள் மனம், எப்படியோ முடிக்கும் பொழுதாவது தன் பெயரான ‘துகிரா’ என்று விளித்து விட்டானே என்று போலியாக சமாதானம் செய்துக் கொண்டது.

       துகிரா உடல் அசதியில் உறங்கிட, இஷானுக்கு தான் உறக்கம் சுத்தமாக பறிப்போனது.

      ஒன்று அல்லது ஒன்றரை ஆனப்பொழுது கண் அசந்தான். அதுவரை பால்கனியில் பனியில் ஈரத்தலையுடன் வீற்றிருந்தான்.

      அதென்னவோ ஊட்டி குளிரோ, அல்லது எழுந்துக்க வேண்டிய அவசியமில்லாத காரணமோ, போர்வை போர்த்திருக்க, மணி எட்டாகியும் மூவரும் எழுந்துக்கவில்லை‌. ஊட்டி குளிரால் அமுல்யா மட்டும் பாத்ரூம் சென்று வந்தாள்.
      அப்பொழுது தான் அன்னை தனி பெட்டில் படுத்துறங்குவதையும், தந்தை பால்கனியில் அமர்ந்தபடி உறங்குவதையும் கவனித்தாள்.

    “அப்பா.. அம்மா ஏன் தனியா தூங்கறாங்க நீங்க ஏன் இங்க இருக்கிங்க” என்று இஷானை எழுப்ப, மகளிடம் கூறுவதற்கு தயங்கி, “அம்மாவுக்கு குட்டி பெட்ல படுத்து பார்க்க நினைச்சிருக்கலாம். உனக்கு எது வாங்கினாலும் உங்கம்மா தான் செக் பண்ணி நல்லதா கெட்டதா பார்ப்பாளே. அப்பா நேச்சர் வியூ ரசிக்க இங்க உட்கார்ந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்று காரணம் உரைக்க, “ஓ… ஓகே” என்று மீண்டும் படுத்துக்கொண்டாள்.
     
      இஷான் எழுந்து துகிராவை காண, அவளோ இன்னமும் அசதியில் விழித்திறக்காமல் படுத்திருப்பதை யூகித்தான்.
    ‘ஆறு வருடம் பெண் வாசம் மறந்தவனுக்கு நேற்று அதிகப்படியாக தான் துகிராவிடம் முரட்டுதனமாய் நடந்துக் கொண்டோமோ?!’ என்ற எண்ணம்.
      பாவம் துகிரா.. அவளை அணுகிய பொழுது துர்கா என்று விழித்தது இஷான் நினைவில் வந்து செல்ல, தலையிலடித்தான்.

      அவள் எழுந்துக்கொள்ள நேரத்தை கவனிக்க, நேரம் கழித்து விழித்திறந்தாள்.

    -தொடரும்.
    பிரவீணா தங்கராஜ்.
    ‌


     
      
    ‌

  • கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22

    அத்தியாயம்-22

      இஷானின் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமெனும் விபத்து நிகழ்ந்தாலும், கண்விழித்தால் ராட்சஸன் அவதாரம் எடுப்பானென்று துகிரா அஞ்சிவிட்டாள். அதுவும் சார்லஸ் மெர்ஸி வந்து தங்கி உறங்க சென்ற இந்த நேரத்திலா சண்டை வெடிக்குமோயென பயந்துவிட்டாள்.
     
       ஆனால் இஷான் அரையுறக்கத்தில் ‘குட்நைட்’ என்று உலறிவிட்டு இமை மூடி உறங்கியப்பின் தான் துகிராவுக்கு மூச்சே சீரானது. இஷானுக்கு மகள் அமுல்யா சில நேரம் தந்தை கன்னத்தில் இப்படி முத்தமிடுவதை எண்ணி, அவளாக இருக்குமென விட்டிருக்கலாம். இல்லையேல் தூக்கத்தில் கவனிக்க தவறியிருக்கலாம்.

      இஷான் உறக்கத்திலிருப்பதால் தப்பித்தோமென அவசரமாய் அவளது இடத்தில் வந்து சுருண்டு படுத்துக் கொண்டாள்.
      கண்கள் இறுக, ‘கடவுளே… இன்னும் என்னலாம் நான் அனுபவிக்கணும்னு தெரியலை. ஒரு நிமிஷத்துல உயிர் போய் உயிர் வந்துடுச்சு. இனி அம்மு அவர் கூட இருக்கறப்ப அம்முவை கொஞ்சவே கூடாது. இது எனக்கு பெரிய பாடம், அனுபவம்’ என்று எடுத்துக் கொண்டாள்.
    இன்றைய நாளில் ரிஷிக்கு பெண் பார்க்க சென்றது ஒருவிதமான பாஸிடிவ் பீல் தந்தது. அதுபோலவே வீட்டுக்கு வந்ததும் தோழி மெர்ஸியோடு கதையளந்ததில் பழைய உற்சாகத்தை உணர்ந்தாள் துகிரா. அக்காவோடு இருந்த பொழுது எல்லாம் எப்படி உணர்ந்தாலோ அப்படி தான் இன்றும் ஆனந்தமாய் உணர, அடுத்த வினாடி அக்கா அப்பா அம்மாவை இழந்த வலியும் நினைக்க, கண்ணீர் எட்டிப் பார்த்தது.
        
        இஷானோ துகிரா வரும் போதே முழித்திருந்தவன் அவள் அருகே வந்து அமுலுக்கு முத்தமிடவும் உறங்குவதாக நடிக்க ஆரம்பித்தான்.
      ஆனால் அந்த நடிப்பில் துகிரா முத்தம் வந்து விழவும், தடுமாறி போனான். துகிராவின் கண்கள் மருண்டு விழிக்க, அவளாக ஆசையாக தரவில்லை என்றறிந்து, உறக்கத்தில் உலருபவனாக காட்டி கொண்டான். அதனால் துகிராவுக்கும் தனக்கும் இந்த முத்ததிலாவது சங்கடங்கள் தவிர்க்கட்டுமென்ற எண்ணம்.
       அதுபோலவே துகிரா முதலில் பயந்தவள் இஷான் உறங்குவதாக தெரிய சங்கடம் களைந்து நிம்மதியாக உறங்க, மெதுவாக இமை திறந்தான்.
        துகிரா அழவும் ‘சே இந்த பொண்ணு பாவம். என்னிடம் வந்து மாட்டிக்கிட்டா’ என்றவன் பட்டும் படாமலும் பட்டாம்பூச்சி மோதிய விதமாக கன்னத்தில் விழுந்த முத்தத்தை நினைத்தான். அவன் எண்ணத்தில் முதல் தடவை முரட்டு யுத்தமாக நிகழ்ந்த முத்தத்திற்கும் இதற்கும் வித்தியாசங்களை கண்டறிந்தவன், முத்தத்திலும் பலவிதமான வித்தியாசத்தை துகிராவோடு நிகழ்த்தலாமென்ற எண்ணத்தில் பதறினான்.
     
      ஒரே உருவத்துல இருந்தா இதான் பிரச்சனை. துர்கா துகிரா என்றதில் குழம்பி சூடாகுகிறேன்’ என்று மறுபக்கம் திரும்பி படுத்தான். அவனுக்கு மனைவி உருவத்தில் மச்சினி இருக்க, மச்சினிச்சியை விரட்டினான்.
      ஆனால் மச்சினிச்சியையே தாலி கட்டி மனைவியாக மாறியப்பின் இருதலை கொள்ளி நிலையில் துவள்கின்றான்.
     
       மூவரின் உறக்கத்தை அதிகாலை கதிரவன் விரட்ட வந்தான்.
      அமுல்யாவை சீருடை அணிவித்து பள்ளிக்கு தயார்படுத்த, மெர்ஸி அதையெல்லாம் வேடிக்கை பார்த்தாள்.

       பைரவி தான் மெர்ஸி சார்லஸை கவனித்தார்கள். பிரதன்யா ரிஷி கூட கல்லூரி கிளம்ப, இஷானுக்கு தேவையானதும் துகிரா தான் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள்.

      ஆளாளுக்கு கிளம்பி வெளியேறியதும் பைரவி நட்பு ரீதியாக சிரித்து அறைக்கு சென்றுவிட்டார். சிநேகிதிகள் பேசட்டும். நான் இடைஞ்சலாக இருக்க போகின்றேன் என்று அறையில் கிடந்தார். சார்லஸ் மட்டும் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான்.

    மெர்ஸியோ “என்ன மேடம் குழந்தையும் புருஷனையும் வழியனுப்பியாச்சா?” என்று கேலி செய்ய, “என் குழந்தையை ரெடி பண்ணி அனுப்பினேன். அவர் அவரா தானே கிளம்பினார்.” என்று யோசனையாய் கேட்டாள் துகிரா.

      “அடிப்பாவி அவருக்காக நீ என்னயென்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியாதா? உன் அம்முவும் புருஷனும் மாடில இருந்து நடந்து வர்றப்பவே காபி பால் இரண்டும் ஆத்தி மேஜையில் வச்சிட்ட, அம்மு பால் எடுத்தா, நீ காபி பக்கத்துல நியூஸ் பேப்பர் வச்ச, பேப்பர் எதுக்கு? அவருக்கு தானே.
       அடுத்து குளிச்சிட்டு வந்தார். பிரெக்பஸ்ட் தட்டுல வச்சிட்ட, அம்முக்கு தான் ஊட்டிட்டு இருந்தனு பார்த்தா, உன் கணவருக்கு குழம்பு தேவைப்படற நேரத்துல தானா மேடம் தள்ளி வச்சிங்க. அவரும் ஊத்தி சாப்பிடறார்.
      ரொம்ப நேரமா அல்வா திறக்கலை என்றதும் அதை திறந்து அவர் முன்ன நகர்த்திட்ட, இது போதாதுனு தண்ணி காலி என்றதும் அதையும் ஊத்தி பக்கத்துல வச்ச, நான் கவனிக்கலைன்னு நினைக்காத.
       அதுமட்டுமா? உன் பொண்ணு ஷூ துடைச்சி நீட்ட வைக்கும் போது இஷானோட டிரஸ் கலரை பார்த்து நீயா அந்த கலர் ஸூவை சுத்தம் பண்ணி பாலீஷ் பண்ணி வச்ச, அவரும் ஷூ போடறப்ப, இரண்டு செகண்டுக்கும் குறைவா, உன்னை பார்த்துட்டு, ஷூவை போட்டார். எல்லாம் பார்த்தேன்.

      இந்த பார்வை பரிபாஷையா? இல்லை சொல்லாமலே பார்த்து பார்த்து செய்யறியா? சம்திங் நல்லா இருக்கு பார்க்க. ஆனா பேசி பழகு. பேசினா தான் கெமிஸ்ட்ரி வரும்.” என்று கூற, “போ மெர்ஸி. எனக்கு இந்த வாழ்க்கையே போதும் சும்மா இரு.
       சார்லஸை எழுப்ப பாரு. ரொம்ப நேரமா வெறும் வயிற்றோட இருக்கப் போறார்.” என்று பேச்சை மாற்றினாள் துகிரா. இல்லையென்றால் மெர்ஸி கூடுதலாக பேச பேச துகிராவுக்கே ஆசை உள்ளுக்குள் துளிர்விடுமே. ஏற்கனவே இஷான் போன்றவனை பார்த்து மனம் தடுமாறுகின்றது. 

       அடுத்தடுத்த பரபரப்பான நேரத்தில் சார்லஸ் எழுந்ததும் கிளம்ப ஆயத்தமானான்.
      “இரண்டு நாள் இருக்கலாமே மெர்ஸி” என்று கூற, “வேலைக்கு லீவு சொல்லிட்டு வந்தேன் டி. கல்யாணத்துக்கு லீவு எடுக்கணும். இப்ப தேவையில்லாம எடுத்தா அப்பறம் லீவு தரமாட்டாங்க. ஆமா… நீ வேலையை விட்டுட்ட, நெக்ஸ்ட் என்ன ஐடியா?” என்று கேட்டாள்.
    உணவு மேஜையில் பைரவி இருக்கும் பொழுது மெர்ஸி கேட்டாள்.

      “ஏதாவது வொர்க் ஃப்ரம் ஹோம்  வேலையா பார்க்கணும் மெர்ஸி.” என்று கூற பைரவியோ, “அதுக்கு தேவையிருக்காதே துகிரா” என்றார். தோழிகள் பேச்சில் இடைப்புகுந்தார்.

      “இல்லை அத்தை… ஏதாவது கொஞ்சமாவது பணம் ஈட்டணும். இல்லைன்னா என்னைக்காவது வேலைக்கு போகணும்னா சோம்பேறித்தனமாகிடும்.” என்று கூறவும் பைரவியோ, “என்னக்காவது உன் புருஷன் வெளியே போன்னு சொல்லிடுவான்னு நினைக்கறியா?” என்று கேட்டதும் துகிரா நிதானமாய் இல்லையென்று மறுத்தாள்.

      “பினான்சியல் சப்போர்டுக்கு லைஃப் பார்ட்னரை ஏடிஎம் கார்ட் போல சார்ந்திருப்பது சிலரா இருக்கலாம் அத்தை. அதுக்கு பயந்து வேலை தேடறேன்னு நினைக்க வேண்டாம்.

    வேலைக்கு போறது என்னோட செல்ஃப் கான்பிடன்ஸுக்கு. நான் இன்னமும் என்ன செய்யலாம்னு யோசிக்கக்கூடயில்லை. உங்களுக்கு நான் வேலை பார்த்தா இந்த வீட்டை விட்டு எப்ப வேண்டுமென்றாலும் போயிடுவேன்னு பயம் இருந்தா, அந்த பயம் வேண்டாம். நான் உங்க பிள்ளையை விட்டு, என் குழந்தையை விட்டு எங்கயும் போகமாட்டேன்.” என்று முடித்தாள்.

      “தேங்க்ஸ்… முதல் முறையா, அமுல்யாவுக்காக மட்டும் இருப்பேன் என்ற வார்த்தையை தவிர்த்து என் பிள்ளைக்காகவும் இருப்பேன்னு சொல்லிட்ட. என் பிள்ளையை என்னைக்காவது உன் புருஷன் என்ற வார்த்தையா மாத்தி சொல்லி என் நெஞ்சை குளிர்விப்ப” என்று அவரும் உரைத்திட, மெர்ஸியோ, “கவலையேபட வேண்டாம் அம்மா. அவ சொல்வா.” என்று நம்பிக்கை தந்தாள்‌.

       துகிராவோ இஷான் என்னை அமுல்யா அம்மாவா அக்சப்ட் பண்ணினாலே போதும்’ என்று பேராசை படாமல் புன்னகை பூத்தாள். ஆனால் உள்ளுக்குள் லேசான ஆசை இருந்தது என்னவோ உண்மை.

       மதியம் உணவருந்தி மாலையில் இஷான் அமுல்யா வந்தப்பின் சார்லஸ்-மெர்ஸி கிளம்பினார்கள்.‌

      துகிரா மாலையில் அமுல்யாவோடு பாடம் சொல்லிக் கொண்டிருக்க, இஷான் மகளை கொஞ்சியபடி, உடைமாற்றினான்.‌

      அதென்னவோ இஷானுக்கு துகிரா இருக்கும் பொழுது உடைமாற்றுவதில் கூட அசௌகரியம் அடைந்ததில்லை.
      ஆனால் துர்கா என்று மறந்து ஷர்ட் பட்டனை கழட்டுவான். துகிரா என்றது நினைவு வர, அணிய வேண்டிய ஷர்ட் எடுத்து குளியலறை புகுந்திடுவான். அவனுக்கு துர்கா துகிரா என்ற வேறுபாட்டில் சிக்கி தவிக்கின்றான்.

        அமுல்யா நான்காம் வாய்ப்பாடு தெரியாமல் முழிக்க “என்னடா… போர் டேபிள்ஸ் தெரியலையா. அதை படிங்க முதல்ல” என்று குழந்தையை டேபிள் படிக்க சொல்லிவிட்டு இஷானின் உடையை துவைக்க போட எடுத்தாள்.

        “உன்‌ பிரெண்ட் பஸ் ஏறிட்டாங்களா” என்று இஷான் வினவ, ஆமென்று தலையாட்டினாள் துகிரா.
     
      இஷான் தனக்கு கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு நகர்ந்திட, துகிராவோ அவன் சென்ற திசையையே வெறித்தாள்.

       “மம்மி… டேடியை பார்த்தது போதும்‌. 6*4 என்ன?” என்று கேட்டாள் அமுல்யா.

      “ஆஹ்.. 6+4=10 அம்மு.” என்றதும், “அய்யோ மம்மி அடிக்ஸன் கேட்கலை, மல்டிபிளிக்கேஷன் கேட்டேன்.” என்றதும் துகிராவோ தலையில் கைவைத்து, “6*4=24” என்று கூற, அமுல்யா நோட்டில் எழுதினாள்.

    இஷானை கண்டால் துகிராவின் மனதிற்குள் பூக்கள் பூக்கின்றன,  பட்டாம்பூச்சி பறக்கின்றன, இதயப்பகுதியில் சில்லென்ற பனிக்கூழ் பரவசத்தை தருகின்றது.
      முதன் முதலில் அக்கா கணவர் ‘மாமா’ என்ற அர்த்தத்தில் எட்டி நிறுத்தி அவன் செய்த காரியத்தின் வீரியம் கண்டு, இஷான் அருகே நிற்பதற்கே நடுங்கினாள்.
     
       இப்பொழுது எல்லாம் இஷானை காணும் நேரம் அவன் கட்டிய தாலி அவள் நெஞ்சில் உரசி உரசி, ‘உனக்கானவன்’ என்ற ஏக்கத்தை விதைத்தது.
      இஷான் சாதாரணமாகவே பெண்களை வசியம் செய்யும் முக அழகை கொண்ட ஜித்தன்‌. அதிலும் முரட்டு முத்தத்தை விதைத்து சென்றதில், காதலென்ற எழுத்தை கூட மூளைக்குள் ஏற்றாத துகிராவுக்கு, அவன் முத்தமிட்ட காட்சி மூளையிலும் மனதிலும் ஒன்றாக ஆழமாக பதிவாகி தொலைத்திருக்க, சார்லஸை இவள் மணக்க முடிவான போது, அந்த முத்த யுத்தம் அசிங்கமாக தோன்றியது.
      அக்கா கணவரிடம் பெற்ற முத்தமாக… இன்றோ தாலி கட்டியவனிடம் முதல் தடவை பெறப்பட்ட, முரட்டு முத்தத்தில் இதழ் கொய்யப்பட்ட நாட்களாக, அவளது மனம் நினைத்தது. தாலி கட்டியப்பின் உண்டான ஒருவிதமான உரிமை, காதல் உண்டா இல்லையா என்ற விஷயத்தில் ஆராயாமல், இஷானை கணவனாகவே மனம் பூஜித்தது.

      தாம்பத்தியம் இல்லாமல் கூட தன்னால் இஷானின் குழந்தையை முன்பு போலவே தன் குழந்தையாகவே பாவித்து வாழ்ந்து முடிக்க முடியும்’ என்று தெளிவுப் பிறக்க, இதுபோல சில நேரம் இஷானை தன்னை மறந்து சில நாட்களாக ரசிக்கின்றாள். ஒரே அறையில், அதிகப்டச நேரம் உறங்கும் தருணத்திலும், கணவன் மனைவி என்ற பந்தத்திலும் காணும் போது வந்த உரிமை நிகழ்வாக இருக்கும்‌.
      இதற்கு எந்த நேரத்தில் இஷான் கொதிக்கலனாக மாறப் போகின்றானென்ற பயம் உள்ளுக்குள் தகித்தாலும், அவளொன்றும் உரிமையற்ற ஒருவன் மீது நேசம் வைக்கவில்லை என்ற நிம்மதியில் தேற்றிக்கொண்டாள்.

       நேசம் பிறந்ததிலிருந்து துர்கா அக்காவின் கணவர் என்ற முறையை மறந்தாள். இஷான் துகிராவின் கணவன். 

    -தொடரும்.
    -பிரவீணா தங்கராஜ்.