🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Completed Novels Archives - Page 26 of 78 - Praveena Thangaraj Novels
புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.

Category: Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

  • தித்திக்கும் நினைவுகள்-3

    அத்தியாயம் -3

    அதிகாலை ஜன்னல் வழியே சூரியன் தனது கதிர்களை கௌதம் முகத்தில் செலுத்த, கிளிகள் கிசுகிசுக்க அச்சத்ததில் எழுந்தவன் இருக்கும் இடத்தினை நினைவு வந்து திரும்ப டேபிளில் சூடாக டீ ஆவி பறக்க இருந்தது.

       பல் விலக்கி அதனை ருசித்தான். ஜன்னல் வழியாக கீழே இருக்கும் மரங்களை பார்க்க, கதவின் ஓரத்தில் சாதனா வந்து நின்றாள்.

    அவளே “டம்ளர் எடுக்க வந்தேன்” என்று காரணம் கூறினாள்.

    ”டிபன் எடுத்து கொண்டு வரவா?” என்று அவனின் பதிலுக்கு காத்திருந்தாள்.

    ”ம்” என்று சொல்லிவிட்டு அவள் எடுத்து வந்த நாளிதழ் புரட்டினான்.

    இதற்கு முன் யாருக்காவது இப்படி சேவகம் செய் சாதனா என்று சொல்லி இருந்தால் பத்திரக்காளி அவதாரம் எடுத்து இருப்பாள். ஆனால் இன்று அவள் சேவகம் செய்வது கௌதமிற்காக… அவள் கௌதம் அதனால் மட்டுமே. அது அவளுக்குக்கே தெரியவில்லை…

    சூடாக இட்லி தக்காளி சட்னி தண்ணீர் எடுத்து வந்து தர வாங்கி உண்டான். அவள் கொடுத்துவிட்டு செல்லாமல் அங்கயே நிற்க,

    ”என்ன ஏதாவது பேசனுமா?” என்றான்.

    ”ஆமாம்…. அ… அது… நான் காரில் வரும் போது மாமா இறந்தது தெரியாது. இங்க வந்தப் பிறகு தான் தெரியும். நான் என் ஃப்ரெண்ட் கீர்த்தி இரண்டு பேரும் ஒரு கட்டுரைக்காக கிராமம் போகணும் என்று இருந்தோம்.

    இந்த சிவா என்கிட்ட சொன்னா இங்க வரமாட்டேனு அவனா முடிவு செய்து அவகிட்ட சொல்லி இங்க வர வைக்க செய்திருக்கான். மாமா இறப்புக்கு என்று சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்” என்று சொல்லி முடிக்க,

    ”எனக்கு நீ காரில் ஏறி பேசும் போதே புரிஞ்சுடுச்சு” என்று அவளை பார்த்து சாப்பிட்டான்,

    ”அதுவும் இல்லாம நீங்க தான் கௌ…மா… அது சிவாவோட அண்ணா என்றும் தெரியாது” பெயரை குறிப்பிட தோன்றாமல் தடுமாறி பேசிட, அவன் பார்வை அவளை கூர்ந்து நோக்கியது.

    ”என்ன படிச்சி இருக்க? என்ன பண்ற?” என்றான்.

    ”பி.ஏ இங்கிலீஷ் லிட்., ஜெர்னலிஸ்‌ட்-ஆ ஒர்க் பண்றேன்”

    ”குட்” என்றே கை அலம்பி நீரை பருகினான். அவள் தட்டை எடுத்து கிளம்பிய பின்னரும் அவளையே பற்றியே யோசித்தான்.

    உனக்கு நான் கௌதம் என்றோ கௌதம் மாமா என்றோ மறந்துடுச்சு சிவா அண்ணா தான் நினைவு இருக்கா சனா…. என்றே மனம் ஒடிந்தான்.

    கீழே ஜோதி ”அம்மா வேதா ஆச்சி வந்து இருக்காங்களா என்று கேட்காறாங்க கௌதம் அண்ணாவையும் பார்க்கணுமாம்” என்றதும் தான் சியாமளா நினைவு வந்தவளாக

    ”வேதவள்ளி மதினி வரவில்லையே ஏன்?” என்று அப்பொழுது தான் தோன்றியது தனது தம்பி இறப்பிற்கு கூட ஏன் வரவில்லை அவ்வளவு வெறுப்பா? இருக்காதே எப்பொழுதும் மாதம் ஒரு முறை சந்திப்பரே அப்பொழுது தவறை மறந்து தம்பி தானே என்ற நல்ல முறையில் தானே பேசிவிட்டு வருவார்கள் பின் ஏன்? “சாதனா கௌதம் வந்து பேசுவானா?” என்றதற்கு ”கூப்பிட்டு வர்றேன் அத்தை” என்று கிளம்பினாள்.

    வேகமாக மாடி வந்தவள் அவன் பார்வையில் நிதானம் அடைந்து ”உங்களை பார்க்க ஊரில் இருக்கறவங்க வந்து இருக்காங்க. அவங்களால் மாடி ஏற முடியாது படி கொஞ்சம் பெருசு” என்றாள் சாதனா.

    ”வர்றேன்” என எழுந்து நடக்க, ”வேதவள்ளி ஆச்சி ஏன் வரலை. மாமா மேல் இன்னும் கோவமா?” என்று கேட்டாள்

    ”அவங்களுக்கு இப்ப தான் ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சு இருக்கு ஹஸ்பிடலில் இருக்காங்க டாக்டர் டிராவல் பண்ண கூடாது என்று ஆர்டர். அவங்களுக்கு அவங்க தம்பி மேல கோவம் எல்லாம் இல்லை எனக்கு தான்…”

    ”உங்களுக்கு இன்னும் மாமா மேல கோவம் இருக்கா?”

    ”இருந்தது இப்ப இல்லை” என்று ஜோடியாக கீழே இறங்கினார்கள்.

    அங்கிருந்த முதியவர்கள் அவனை சுற்றி சூழ்ந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி

    ”ஐயா இது தான் உன் பொஞ்சாதியா?” என்றதும் சாதனா தாய் தாமரையோ சட்டென

    ” சிவாவுக்கு சாதனா தவிர கண்டவங்களுக்கு இல்லை” என்ற முனங்கல் அவன் காதில் அழுத்தமாகவே விழுந்தன.

    ”எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை பாட்டி” என்றான் நிதானமாக.

    ”வேதவள்ளி ஏன் உனக்கு பொண்ணு பார்க்கலை” என்று ஒரு கிழவியும்

    ”ஏன் வேதவள்ளி வரலை” என்று ஒரு கிழவியும் கேட்க, சாதனா மெல்ல அவர்களிடம் இருந்து நழுவி செல்வதை கண்டு அவனுக்குள் ஏனோ வண்டாய் குடைந்தது.

    ”அது வந்து வேதவள்ளி ஆச்சிக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்து இரண்டு நாள் தான் ஆகுது. இப்போ டாக்டர் விடமாட்டாங்க. அவங்க தொலைவா பயணம் செய்ய கூடாது அப்படி செய்தா அவங்க உயிருக்கு ஆபத்து” என்று தெள்ள தெளிவாக கூறி முடித்தான்.

    ”ஏன் ஐயா இந்த பிள்ளை வயசுக்கு வந்தப்பவாது வரலாமில்லை” என்று கேட்டதும் யாரை குறிப்பிடுகின்றார்கள் என அறிந்து பார்க்க பாவாடை தாவணி அணிந்து மிரண்ட விழிகளோடு தன்னை மறைந்து இருந்து பார்க்கும் அவளை கண்டான்.

    யாராக இருக்கும் என்று யோசித்தவனின் பார்வையில் சியாமளா ”ஜோதி தங்கச்சி” என்று முன் நிறுத்தினார்.

    ”இங்க வா” என்றான்.

    ”நான் யாருனு தெரியுதா?” கேட்க,

    ”அண்ணா… கௌதம் அண்ணா…” என்று சொன்ன நொடி அவளை தன் நெஞ்சில் சாய்த்து தலையில் முத்தமிட்டான்.

    சிறிது நேரம் பேசி பாட்டிகள் எல்லோரும் சென்றிட ஜோதியை தனது கை வளைவில்லே இருத்திக் கொண்டான்.

    ”உனக்கு என்னை நியாபகம் இருக்கா?” என்றான்.

    ”இல்லை ” என்றாள் தலையை ஆட்டினாள் ஜோதி.

    ”சாரி ஜோதி” என்று மன்னிப்பு வேண்ட அவன் எதற்கு மன்னிப்பு கேட்கின்றான் என்று முழித்து இருந்தவளை

    ”என்ன படிக்கற?”

    ”ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். காலேஜ் போகணும்…..”

    ” ஓஹ் எந்த காலேஜ் சேர போற, எந்த குரூப் எடுக்க போற?” என்றதும் முகத்தை வாட்டமாக வைத்து

    ”நான் படிக்க வேண்டாம் என்று சிவா அண்ணா சொல்லிட்டார். கல்யாணம் செய்யணுமாம்” என்று நிறுத்தினாள்

    ”யாருக்கு உனக்கா?” என்ற 

     அதிர்ந்தான்.

    ”ஹ்ம்”

    ”உனக்கு என்ன விருப்பம்?”

    ”படிக்கணும்… அட்லீஸ்ட் சிங்கிள் டிகிரி ஆவது முடிக்கணும் அண்ணா” என்றதும்

    ”என்ன சொன்ன?”

    ”அ.. அண்ணா”

    ”குட் நீ இனி என்னை அண்ணா என்று தான் கூப்பிடனும். நீ விருப்பப்படற மாதிரியே டிகிரி முடி. இப்ப கல்யாணம் வேண்டாம் சரியா?”

    ”சிவா அண்ணா?”

    ”நான் பார்த்துக்கறேன்”

    ”நிஜமா அண்ணா?”

    ”நிஜம்” என்றதும் புது துள்ளலோடு இருக்க, ஹாலில் நுழைந்தான்.

    சியாமளாவோ ”மதனி உடம்பு இப்ப எப்படி இருக்கு கௌதம்? எனக்கு அவங்க நிலைமை தெரியாது”

    ”பரவாயில்லை. நான் யாரிடமும் சொல்லவில்லை” என்றான் அவன்

    ”இப்போ?”

    ”நல்லா இருக்காங்க? ஆனா ட்ராவல் பண்ண கூடாது”

    ”என் மேல உனக்கு இன்னும் கோவம் இருக்கும்”

    ”அதை விடுங்க ஜோதி மேல் கொண்டு படிக்க போகட்டும். இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று சொல்லி முடிக்க இதுவரை அறையில் இருந்து தாயும் கௌதமும் பேசியதை கேட்டு இருந்த சிவா,

    ”அம்மா ஜோதி என் தங்கை அவளுக்கு என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் மத்தவங்களை அவங்க வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க” என்றதும்

    ”டேய் சிவா அவன் உன் அண்ணாடா”

    ”யாருக்கு யாரு அண்ணன். எனக்கு ஒரு தங்கை மட்டும் தான்” என்றான் சிவா.

    ”ஜோதி மேல படிப்பா இது நடக்கும்” என்று அவனுக்கு மேலே பிடிவாதமாக கௌதம் மாடி ஏறி அவனுக்கு கொடுத்த அறையில் சென்றான்.

    ”இவன் யாரு தீடிர் என்று வந்து சட்டம் போடுறது” என்ற குரல் கோவத்தில் ஒலித்தது. ”எல்லாம் இவளை சொல்லணும்” என்று ஜோதியை முறைத்தான்.

    ”சிவா வாயை மூடு” என்றதும் அவனின் தாய் அதட்டுவதை எண்ணி வேகமாக வயலுக்கு கோவத்தோடு கிளம்பினான்.

    பின்னாடியே சாதனா ”சிவா சிவா…” என்று ஓடி செல்வதை ஜன்னல் வழியே கௌதம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

    -நினைவுகள் தொடரும். 

    -பிரவீணா தங்கராஜ்.

  • தித்திக்கும் நினைவுகள்-2

    அத்தியாயம் -2

    அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிதானமாக சாய்ந்துக் கொண்டான்.

    இன்று காலையில் குடித்த டீ அதன் பின் தந்தை இறந்த செய்தி அறிந்து சாப்பிடாமல் இருந்து இப்பொழுதும் எதுவும் சாப்பிட தோன்றாமல் கண்களை மூடி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டான்.

    ரவீந்தர் தனது அக்கா வேதவள்ளி வளர்த்து ஆளாக்கிய மனிதர். தாய் தந்தை விட அக்கா மேல் அதிகம் பாசம் கொண்டவர். பெற்றோர்கள் மறைவுக்கு பிறகு அக்கா-மாமாவோடு வளர்ந்தவர். வேதவள்ளியின் கணவன் ரங்கன் மேகலை பிறந்த சில வருடங்களில் மறைய, தன் மகள் மேகலையோடு தம்பி ரவீந்தர் கூடவே வேதவள்ளி வளர்த்து ஆளாக்கியது.

    மேகலையை வேறு யாருக்கும் மணம் முடிக்க பிடிக்காமல் தனது சொந்த தம்பிக்கே கட்டி வைத்தாள் வேதவள்ளி. திருமணம் முடிந்து இரண்டு வருடம் இன்பமாய் கழிய கௌதம் பிறந்தான்.

    அதன் பின் ரவீந்தர் வேலை விஷயமாக சென்னை வர அங்கே சந்தித்த சியாமளாவை காதல் செய்து கரம் பிடித்தார். இவ்விஷயம் மேகலைக்கும் யாருக்கும் தெரியாது பார்த்துக் கொண்டார்.

    அதே போல தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளை இருக்கும் விஷயம் சியாமளாவிற்கும் தெரியாது பார்த்துக் கொண்டார். இரண்டாம் மனைவி சியாமளாவிற்கு சிவா பிறந்து சில மாதங்களில் விஷயம் இருவீட்டாருக்கும் தெரிந்தது.

    மேகலை மேலே கொண்டது அக்கா மேல் கொண்ட பாசத்தால் செய்த திருமணம் என்றும், சியாமளா மேல் கொண்டது தனக்கே உண்டான காதலில் நடந்த திருமணம் என்றே ரவீந்தர் சொல்ல இருவருமே தவித்தனர்.

    வேதவள்ளி கோவம் கொண்டு சென்னைக்கே தனியாளாக வந்துவிட்டார்.

    சியாமளா மற்றும் மேகலை இரு பெண்களும் தனது கணவனை இழக்க மனமின்றி இருந்தனர். இருவரும் ஆளுக்கு ஒரு பிள்ளையை கொண்டாலும் இருவரிடமும் பாசம் காட்டினார்கள்.

    சியாமளா அண்ணன் காந்தன் எவ்வளவு சொல்லியும் சியாமளா அவரின் மீது புகார் செய்யாது இருக்க மேகலைக்கு(முதல் மனைவி) சியாமளா(இரண்டாம் மனைவி)மேல் ஒரு பாசம் உண்டானது.

    என்னதான் அவளை ஏற்றுக் கொண்டாலும் மேகலைக்கு உடல் மனம் இரண்டும் பாதிப்பு அடைய சியாமளாவை அழைத்து ஒரே வீட்டில் வசிக்க துவங்கினாள்.

    இதனால் கோவம் கொண்டு காந்தன் தாமரையை திருமணம் செய்யும் போது சியாமளாவை கூப்பிடவில்லை. தாமரை தனது சிநேகிதியே என்றாலும் அண்ணன் கூப்பிடாமல் போக மறுத்துவிட்டாள்.

    கொஞ்ச நாளில் காந்தனுக்கு(சியாமளா அண்ணாவிற்கு) சாதனா பிறக்க, சியாமளா வயிற்றில் பிள்ளை உண்டாக மீண்டும் குடும்பம் ஒன்றானது.

    மேகலை படுத்த படுக்கையில் கிடந்தாள். சியாமளா இம்முறை பெண் பிள்ளையை பெற்றெடுதாள். ஜோதி பிறந்து துரு துரு அழகோடு ஐந்து வருடம் ஆனா போது மேகலை மரணம் அடைந்தாள்.

    தனது மகள் சிறு வயதில் இறந்ததற்கு காரணம் சியாமளா என்றே எண்ணினார் வேத வள்ளி. அவள் மட்டும் தனது மகள் வாழ்கையில் வராமல் இருந்தால் மேகலை திடகாத்திரமாக இருந்திருப்பாள் என்று நம்பினார்.

     மேகலை இறந்து சில மாதங்களில் வேதவள்ளி ரவீந்தரிடம் சண்டையிட்டு கௌதமை தாமே வளர்ப்பதாக கூறி சாதனவை விளயாட்டில் விரட்டி வந்த பதினான்கு வயது சிறுவனான கௌதமை அப்பொழுதே அழைத்து சென்றார்.

    சென்னை வந்த பிறகு ரவீந்தர் பற்றி சொல்லி இனி அங்கே போகக் கூடாது என்றும் சொல்லியே வளர்க்க செய்தார். கௌதமை பார்க்க வரும் போது சிவாவையும் அழைத்து வருவது கௌதமிற்கு தந்தையை பிடிக்காது போயின.

    தந்தை தன்னை விட அப்பாவின் இரண்டாம் மனைவி பிள்ளைகள் மீது அதிகம் பாசம் வைத்து இருக்கின்றார் என்று அறிந்து கௌதம் விலகினான்.

    தனது தந்தையிடம் அப்பொழுது இருந்தே பேச மறுத்தான். அடிக்கடி தந்தை தன்னை பார்க்க வந்தாலும் எடுத்தெறிந்து விடுவான். இதோ இப்பொழுது வரை அவரிடம் பேசாமலே இருந்து விட்டான்.

    இன்று சடலமாக பார்க்கும் வரை கூட அவனின் மனதில் கோவம் இருந்தது. ஆனால் இறந்த பின் மேகலை அருகே சமாதி கட்ட சொல்லி அவர் எழுதியதை வைத்து ஓரளவு மனம் இலகுவானது.

    கடைசியாக சாதனா விரட்டி கொண்டு தான் அவளிடம் விளையாடியது நினைவு வர தானாக முறுவலும் வந்தன.

    அன்று பார்த்த சாதனா வா இது இப்படி வளர்ந்து ஆளே அடையாளம் அறியாத அளவுக்கு என்றே எண்ணி வியக்க தான் முடிந்தது.

    தன்னை போலவே அவளுக்கும் என்னை நினைவு இருக்கின்றதா? பார்த்து பல வருடம் ஆனது தனக்கே நினைவு இப்பொழுது தான் தோன்றும் பொழுது அவள் தன்னை விட அன்று சிறுவயது என்பதால் நினைவு இருக்குமா என்பதே அரிது தான்.

       ”அத்தை ப்ளீஸ் சாப்பிடுங்க இரண்டு நாளா சாப்பிடாம இருந்தா மாமா திரும்ப வந்திடுவாங்களா?” என்ற சாதனா குரலில் கலைந்தவன் அருகே இருக்கும் ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். அங்கே சியாமளா கிணற்றின் அருகே அமர்ந்து இருக்க சாதனா தட்டில் சாததுடன் வற்புறுத்திக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

    ”எல்லா உயிரும் ஒரு நாள் போவது தான் அத்தை” என்று சாதனா சொல்லிற்கு ,

    ”இப்போ என் உயிர் போனாலும் தேவலை சாதனா. அவர் இல்லாத வாழ்க்கை என்னால நினைக்க முடியலை”

    ”என்ன பேச்சு அத்தை இது உங்களை நம்பி சிவா ஜோதி இருக்காங்க நீங்களும் மாமா மாதிரி தவிக்க விட போறீங்களா? நீங்க சாப்பிடாம ஜோதியும் சாப்பிடமா இருக்கா” என்றாள் சாதனா.

    ”என்னை வற்புறுத்ததே சாதனா விட்டுடு…”

    ”நீங்களே சாப்பிடாம இப்படி செய்தாள் உங்க பெரிய பையன் எப்படி சாப்பிடபோறார்….?” என்று சரியாக மடக்கினாள்.

    ”சாதனா… கௌ..தம்… கௌதம் சாபிட்டானா…? ஐயோ ரொம்ப வருஷம் கழிச்சு வந்து இருக்கான் என்னால பச்சை தண்ணீர் கூட கொடுக்க முடியலை” என்று அழுது இருக்க,

    ”நீங்க இந்த ரெண்டு இட்லி சாப்பிட்டீங்க நானே போய் உங்க பையனுக்கு எடுத்துட்டு போறேன்” என்று சமாதானம் செய்தாள்

    ”நீ முதலில் கௌதமிற்கு கொடு நான் சாப்பிடறேன்” என்று அவளை விரட்டினார் சியாமளா.

    ”நீங்க சாப்பிடுங்க கண்டிப்பா அவரும் சாப்பிடுவார்” என்றதும் சாதனா ஊட்டி விட சியாமளா உண்ண துவங்கினார். இடையில்

    ”சாதனா அக்காவிற்கு நான் துரோகம் பண்ணலை எனக்கு அவர் திருமணமானவர் என்று தெரிந்தால் மேகலை அக்கா வாழ்கையில் குறுக்கே வந்து இருக்கவே மாட்டேன். பிள்ளை பிறந்து முடிந்த பின் தெரிந்து என்ன பிரோஜனம்…? அக்கா அதுக்கு பிறகு ஒரே வீட்டில் இருந்தோம் ஆனா அவரோட அவ்வளவா பேசலை… பேசாமல் இருந்தே மேகலை அக்கா அவருக்கு தண்டனை கொடுத்தாங்க…. ஆனா என்னிடம் அக்கா பேசி மன்னிச்சுட்டாங்க அவங்க சிவா கௌதம் இரண்டும் பேரையும் ஒரே மாதிரி தான் பார்த்துகிட்டாங்க… எனக்கும் கௌதம் என்றால் என் முதல் பிள்ளை போல தான் பார்த்துக்கிட்டேன்.

    மேகலை அக்கா இறந்ததும் கௌதம் என்னை விட்டு போயிட்டான். அதுக்கு பிறகு வரவே இல்லை… நீ கூட ரொம்ப வருஷம் பிறகு தானே இங்க வந்து இருக்க? அத்தை மேல ஏதாவது கோவமா? சொல்லு சாதனா அத்தை இப்படி ஒருத்தங்களுக்கு துரோகம் செய்தேனு… ”

    ”சே சே அதெல்லாம் இல்லை அத்தை… அப்படி எல்லாம் நினைக்கலை… நீங்க தண்ணீர் குடிங்க ஏற்கனவே இரண்டு முறை மயங்கிட்டீங்க என்று அம்மா சொன்னாங்க” என்று திசைதிருப்பினாள்.

    ”கௌதம் என்னை இன்னும் மன்னிக்கலை”

    ”முடிஞ்சதை விடுங்க அத்தை. நான் ஜோதியை சாப்பிட வைக்கறேன்”

    ”கௌதம்…”

    ”ம்‌ம்‌ம்… அவரையும் தான்” என்று சாதனா சென்றதும் முழங்காலிட்டு முகத்தை பொத்தி சியாமளா அழுவது கௌதமிற்கு பாவமாக தான் தோன்றியது.

    தன் தந்தை செய்த தவறால் பாவம் இவர்கள் என்ன செய்வார்கள் என்று பொறுமினான். ஆனால் எல்லாம் மாற்றிட முடியாது.

    ‘டொக் டொக்‘ கதவு தட்டும் சப்தம் எழ, ”கதவு திறந்து தான் இருக்கு” என்றான்.

    தட்டில் இட்லி கொஞ்சம் சட்னி குடிக்க நீர் என்று சாதனா அவன் முன் நின்று இருந்தாள்.

    ”உங்களுக்கு சாப்பாடு…. நீ… நீங்க சாப்பிடலை…” என்றாள் திணறலோடு, கையை அங்கிருந்த டேபிளில் காண்பித்து வைக்குமாறு நீட்டினான். ஒரு வார்த்தை பேசாமல்…

    ”நீங்க சாப்பிடாம விட்டுட்டா…” என்று அவள் கூறியதும் வாய் திறந்தான். அதுவும் சினதோடு…

    ”ஒன்றும் சாக மாட்டேன் வச்சிட்டு போ” என்றான். வேறு வழியின்றி டேபிளில் வைத்துவிட்டு அமைதியாக வெளியேறினாள். இப்படி பேசினாலும் சாதனா அமைதியாக தான் போனாள். ஆனால் பேசியவனோ சே இப்போ தான் பார்த்தேன் அதுக்குள் இவளிடம் எதுக்கு இப்படி பேசிட்டேன்… என்னை அறியாமை எல்லோர் மேலயும் கோவம் காட்டுகின்றேன்.

    பின்னர் கௌதமிற்கு சியாமளா பேசியதே ஓடின. பிள்ளை பிறந்த பிறகு தெரிந்து என்ன பயன்? உண்மை தான் ரவீந்தர் செய்த செயலால்… என கோவப்பட்டவன். இனி இறந்தவர் மீது கோவம் இருந்து என்ன பயன் என்றே அதையும் மறக்க முயன்றான்.

    அங்கிருந்த தட்டினை எடுத்து உண்ண துவங்கினான். அவனுக்கு அதிக பசி இருந்தது சாப்பிட்டான். சாதனாவும் நீண்ட நாட்களாக இங்கே வரவில்லை என்று சியாமளா பேசியதில் தெரிந்துக் கொண்டான். ஆனால் அதற்கு தான் காரணம் என்று அறியாமலே… எதனால் என்று யோசித்தான்.

    போனில் வேதவள்ளியோடு பேசிக் கொண்டு இருக்க கதவு தட்டும் சப்தம் கேட்க திரும்பினான். அங்கே சாதனா நின்று இருந்தாள். என்ன என்பது போல பார்வை பார்க்க,

    ”த… தட்டு எடுத்துட்டு போக வந்தேன்” என்றதும்

    ”சரி ஆச்சி நாளைக்கு போன் பண்ணறேன்” என்ற துண்டித்தான். மீண்டும் எடுத்துக் கொள் என்பது போல செய்கை கைகளில் நீட்டி,

    அவன் கொஞ்சம் இறுக்கம் தளர்த்தி இருப்பதாக தோன்றியது. ஆனாலும் அவனை பார்க்க உறுத்தல் இருந்தன. காரில் கீர்த்தியோடு பேசிய பேச்சை வைத்து தன்னை தவறாக நினைத்திருப்பான் என்பதே… அவனோ அவளோடு பேச தோன்றாமல் அவளையே கண் கொட்டாமல் பார்த்து இருந்தான். கீழே செல்லும் வரை அவளையே பார்த்தான்.

    இவளுக்கு என் நினைவு இருக்கா இல்லையா…? சே என்றே வருந்தினான். அதற்கு தான் காரணம் தேடாமல்….

    உறங்க போராடி தான் ஒரு வழியாக அவ்வீடு உறக்கம் தழுவியது. அழுது அழுது வீங்கிய கண்கள் தானாக உறக்கம் வர வழி வகுத்தது.

    நினைவுகள் தொடரும்

    பிரவீணா தங்கராஜ்.

  • தெரிந்துவினையாடல்-52

    தெரிந்துவினையாடல்

    Therinthu Vilayaadal

    Selection and Employment 52

    511

    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

    Who good and evil scanning, ever makes the good his joy;
    Such man of virtuous mood should king employ.

    நன்மையும்‌ தீமையுமாகிய இரண்டையும்‌ ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன்‌ (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்‌.

    He should be employed (by a king), whose nature leads him to choose the good, after havingweighed both the evil and the good in any undertaking.

    பரிமேலழகர் உரைநன்மையும் தீமையும் நாடி-அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து; நலம் புரிந்த தன்மையான்-அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்; ஆளப்படும். பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
    விளக்கம்:
    [தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்த வழி, அதன் கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. ‘புரிந்த’ என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.]மணக்குடவர் உரைதெரிந்து வினையாடலாவது வினை செய்வாரால் செய்யப்படும் வினையும் பல்வாதலின், அவரால் செய்யப்படும் வினைகளை யறிந்து அவரை விட்டுச் செய்வித்தல். (இதன் பொருள்) நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து, தீமை யைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின் தன்மையுடையவன் வினை செய்வனாகச் செய்யப்படும்,
    (என்றவாறு)

    512

    வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை

    Who swells the revenues, spreads plenty o’er the land,
    Seeks out what hinders progress, his the workman’s hand.

    பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.

    Let him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase wealth andconsiderately prevent the accidents (which would destroy it).

    பரிமேலழகர் உரைவாரி பெருக்கி – பொருள்வரு வாயில்களை விரியச் செய்து; வளம் படுத்து – அப் பொருளால் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான் – அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினை செய்க – அரசனுக்கு வினை செய்க.
    விளக்கம்:
    [வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் ”இயற்றலும்” (குறள். 385) என்புழி உரைத்தனவும்; உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன; ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செல்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத் துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக, (எ – று ). பொருள் வருதற்கிடமாவது நில முதலான விடம்; அதனைப் பெருக்குதல் – பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.

    513

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு

    A loyal love with wisdom, clearness, mind from avarice free;
    Who hath these four good gifts should ever trusted be.

    அன்பு, அறிவு, ஐயமில்லாமல்‌ தெளியும்‌ ஆற்றல்‌, அவா இல்லாமை ஆகிய இந்‌ நான்கு பண்புகளையும்‌ நிலையாக உடையவனைத்‌ தெளியலாம்‌.

    Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, aclear mind and freedom from covetousness.

    பரிமேலழகர் உரைஅன்பு – அரசன் மாட்டு அன்பும்; அறிவு – அவனுக்கு ஆவன அறியும் அறிவும்; தோற்றம்-அவை செய்தற்கண் கலங்காமையும்; அவா இன்மை – அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு – இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
    விளக்கம்:
    [இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏது ஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அன்புடைமையும், அறிவுடைமையும், ஒரு பொருளை ஆராய்ந்து துணிவுடைமையும், அவாவின்மையு மென்னும் இந் நான்கு குணங்களையும் நிலை பெற வுடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு,
    (என்றவாறு)

    514

    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    Even when tests of every kind are multiplied,
    Full many a man proves otherwise, by action tried!

    எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ (செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.

    Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

    பரிமேலழகர் உரைஎனை வகையான் தேறியக் கண்ணும்-எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் – அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
    விளக்கம்:
    [கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், ‘வேறாகும் மாந்தர் பலர்’ என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும், அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர், ( ) இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.

    515

    அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

    No specious fav’rite should the king’s commission bear,
    But he that knows, and work performs with patient care.

    (செய்யும்‌ வழிகளை) அறிந்து இடையூறுகளைத்‌ தாங்கிச்‌ செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல்‌, மற்றவனைச்‌ சிறந்தவன்‌ என்று கருதி ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவக்கூடாது.

    (A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

    பரிமேலழகர் உரைஅறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் – செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானை யல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று – வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.
    விளக்கம்:
    [‘செய்கிற்பாற்கு’ என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) செய்யும் உபாயங்களை யறிந்து, செயலானும் இடையூறுகளானும் வருந் துன்பங்களைப் பொறுத்து, முடிவு செய்யவல்லானையல்லது வினைதான் இவன் நம்மாட்டன்புடைய னென்று பிறனொருவனை யேவும் இயல்புடைத்தன்று.

    516

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்

    Let king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’
    Of hour befitting both assured, let every work proceed.

    செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்‌ தன்மையையும்‌ ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்‌.

    Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires todo), and the time which is suitable to it.

    பரிமேலழகர் உரைசெய்வானை நாடி-முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி-பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தொடு எய்த உணர்ந்து செயல்-பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
    விளக்கம்:
    [செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல் பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) வினை செய்வானையும் ஆராய்ந்து, அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து, அது முடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்லினை அவன் செய்வானாக அமைக்கவேண்டும்,
    (என்றவாறு).

    517

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்

    ‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;
    Then leave the matter wholly in his servant’s hand.

    இந்தத்‌ தொழிலை இக்‌ கருவியால்‌ இன்னவன்‌ முடிப்பான்‌ என்று ஆராய்ந்த பிறகு அத்‌ தொழிலை அவனிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

    After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.

    பரிமேலழகர் உரைஇதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து – இவ் வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல் – மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]
    விளக்கம்:
    [கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவ னென்று ஆராய்ந்து, பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக,
    (என்றவாறு). இது பெரும்பான்மையுஞ் சேனாபதியை நோக்கிக் கூறிற்று.

    518

    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்

    As each man’s special aptitude is known,
    Bid each man make that special work his own.

    ஒருவன்‌ ஒரு தொழிலைச்‌ செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத்‌ தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்‌.

    Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

    பரிமேலழகர் உரைவினைக்கு உரிமை நாடிய பின்றை-ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்;அவனை அதற்கு உரியனாகச் செயல்-பின் அவனை அதற்குரியனாமாறு உயரச் செய்க.
    விளக்கம்:
    [உயரச் செய்தலாவது: அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக ,
    (என்றவாறு). இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது கூறிற்று.

    519

    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு

    Fortune deserts the king who ill can bear,
    Informal friendly ways of men his tolls who share.

    மேற்கொண்ட தொழிலில்‌ எப்போதும்‌ முயற்சி உடையவனின்‌ உறவைத்‌ தவறாக நினைக்கும்‌ தலைவனை விட்டுச்‌ செல்வம்‌ நீங்கும்‌.

    Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

    பரிமேலழகர் உரைவினைக்கண் வினை உடையான் கேண்மை-எப்பொழுதும் தன் வினையின் கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் – அது பொறாதார் சொற் கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு தீங்கும்.
    விளக்கம்:
    [கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாம் நில்லாது கேளிர் செய்யும் உரிமை எல்லாம் செய்தொழுகுதல் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும் திறம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்,
    (என்றவாறு).

    520

    நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு

    Let king search out his servants’ deeds each day;
    When these do right, the world goes rightly on its way.

    தொழில்‌ செய்கின்றவன்‌ கோணாதிருக்கும்‌ வரையில்‌ உலகம்‌ கெடாது; ஆகையால்‌ மன்னன்‌ நாள்தோறும்‌ அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்‌.

  • சுற்றந்தழால்-53

    சுற்றந்தழால்

    Suttram Thallal

    Cherishing one’s Kindred 53

    521

    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள

    When wealth is fled, old kindness still to show,
    Is kindly grace that only kinsmen know.

    ஒருவன்‌ வறியவனான காலத்திலும்‌ அவனுக்கும்‌ தமக்கும்‌ இருந்த பழைய உறவைப்‌ பாராட்டிப்‌ பேசும்‌ பண்புகள்‌ சுற்றத்தாரிடம்‌ உண்டு.

    Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed(kindness).

    பரிமேலழகர் உரைபற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் – ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார்கண்ணே உள-சுற்றத்தார் மாட்டே உள ஆவன.
    விளக்கம்:
    [சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப் படாமை விளக்கி நின்றது. பழைமை: பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.]மணக்குடவர் உரைசுற்றந்தழாலாவது அரசன் தன்கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத் தல். மேல் அமாத்தியர்மாட்டு அரசன் ஒழுகுந் திறங் கூறினாராதலின், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்)பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடா தொழுகுதல், சுற்றத்தார்மாட்டே யுள்வாம், (எ – று ) இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.

    522

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்

    The gift of kin’s unfailing love bestows
    Much gain of good, like flower that fadeless blows.

    அன்பு நீங்காத சுற்றம்‌ ஒருவனுக்குக்‌ கிடைத்தால்‌, அது மேன்மேலும்‌ வளர்ச்சி குறையாத ஆக்கம்‌ பலவற்றையும்‌ அவனுக்குக்‌ கொடுக்கும்‌.

    If (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth.

    பரிமேலழகர் உரைவிருப்பு அறாச் சுற்றம் இயையின் – அன்பும் அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்-அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
    விளக்கம்:
    [உட்பகையின் நீக்குதற்கு ‘விருப்பு அறாச் சுற்றம்’ என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு ‘அருப்பு அறா ஆக்கம்’ என்றும் விசேடித்தார். தொடை நோக்கி விகாரமாயிற்று. ‘இயையின், என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர், பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேன் கிளைக்கும் என்பது கருத்து.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகுமாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்,
    (என்றவாறு).

    523

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று

    His joy of life who mingles not with kinsmen gathered round,
    Is lake where streams pour in, with no encircling bound.

    சுற்றத்தாரோடு மனம்‌ கலந்து பழகும்‌ தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல்‌ நீர்‌ நிறைந்தாற்‌ போன்றது.

    The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.

    பரிமேலழகர் உரைஅளவளாவு இல்லாதான் வாழ்க்கை – அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்தற்று – குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
    விளக்கம்:
    [சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், ‘அளவளாவு’ என்பது ஆகு பெயர். ‘வாழ்க்கை’ எனறதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை, ‘நிறைதல்’ என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை , குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்,
    (என்றவாறு). இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.

    524

    சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்

    The profit gained by wealth’s increase,
    Is living compassed round by relatives in peace.

    சுற்றத்தாரால்‌ சுற்றப்படும்படியாக அவர்களைத்‌ தழுவி அன்பாக வாழ்தல்‌ ஒருவன்‌ செல்வத்தைப்‌ பெற்றதனால்‌ பெற்ற பயனாகும்‌.

    To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.

    பரிமேலழகர் உரைசெல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் – செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தால்தான் சுற்றப்பட ஒழுகல் – தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
    விளக்கம்:
    [‘பெற்ற’ என்பதனுள் அகரமும் ‘அதனான்’ என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) சுற்றத்தாராலே சூழப்பட்ட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்ற வதனால் உண்டான பயன்,
    (என்றவாறு) இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.

    525

    கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தால் சுற்றப் படும்

    Who knows the use of pleasant words, and liberal gifts can give,
    Connections, heaps of them, surrounding him shall live.

    பொருள்‌ கொடுத்தலும்‌ இன்சொல்‌ கூறுதலுமாகிய இரண்டும்‌ செய்ய வல்லவனானால்‌, ஒருவன்‌ தொடர்ந்த பல சுற்றத்தால்‌ சூழப்படுவான்‌.

    He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

    பரிமேலழகர் உரைகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் – தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.
    விளக்கம்:
    [இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, ‘ஆற்றின்’ என்றார். தம்மில் தொடர்தலாவது-சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வ னாயின், தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப் படுவன்,
    (என்றவாறு). இஃது ஒழுகுந் திறங் கூறிற்று.

    526

    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத்து இல்

    Than one who gifts bestows and wrath restrains,
    Through the wide world none larger following gains.

    பெரிய கொடையாளியாகவும்‌ சினமற்றவனாகவும்‌ ஒருவன்‌ இருந்தால்‌ அவனைப்போல்‌ சுற்றத்தாரை உடையவர்‌ உலகத்தில்‌ யாரும்‌ இல்லை.

    No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, anddoes not give way to anger.

    பரிமேலழகர் உரைபெருங்கொடையான் வெகுளி பேணான் – ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் – அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.
    விளக்கம்:
    [மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல், விரும்பாமை: ‘இஃது அரசற்கு வேண்டுவதொன்று,’ என்று அளவிறந்து செய்யாமை.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின், அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை,
    (என்றவாறு). இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின், துணையுடையானா மென்றது.

    527

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள

    The crows conceal not, call their friends to come, then eat;
    Increase of good such worthy ones shall meet.

    காக்கை (தனக்குக்‌ கிடைத்ததை) மறைத்துவைக்காமல்‌ சுற்றத்தைக்‌ கூவி அழைத்து உண்ணும்‌; ஆக்கமும்‌ அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

    The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eatit; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

    பரிமேலழகர் உரைகாக்கை கரவா கரைந்து உண்ணும் – காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணா நிற்கும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள – சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
    விளக்கம்:
    [அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்ச உம்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும்.’ அப்பெற்றித்தாய இயல்பு’ என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்ற மெல்லாவற்றையும் அழைத்து உண்ணும்; அது போல், செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது,
    (என்றவாறு). இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறங் கூறின்.

    528

    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்

    Where king regards not all alike, but each in his degree,
    “Neath such discerning rule many dwell happily.

    அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச்‌ சுற்றமாக வாழ்கின்றவர்‌ பலர்‌ ஆவர்‌.

    Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that helooks on each man according to his merit.

    பரிமேலழகர் உரைபொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அது நோக்கி வாழ்வார் பலர் – அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
    விளக்கம்:
    [உயர்ந்தார் நீக்குதல் நோக்கியபோது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின், அப்பார்வை நோக்கி, அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்,
    (என்றவாறு). இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

    529

    தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்

    Who once were his, and then forsook him, as before
    Will come around, when cause of disagreement is no more.

    முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.

    Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (tohim), when the cause of disagreement is not to be found in him.

    பரிமேலழகர் உரைதமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் – முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும் – அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
    விளக்கம்:
    [‘அமராமைக் காரணம் இன்றி’ என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. ‘ஆக்கம்’ வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்து கொள்ள வேண்டா; பழைய இயல்பாய் நிற்கும் என்பார், ‘வரும்’ என்றார்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல், அவர் மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும், (எ – று ) இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக்கொள்ளுமாறு கூறிற்று.

    530

    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந்து எண்ணிக் கொளல்

    Who causeless went away, then to return, for any cause, ask leave;
    The king should sift their motives well, consider, and receive!

    தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

  • பொச்சாவாமை-54

    பொச்சாவாமை

    Pocchaavaamai

    Unforgetfulness 54

    531

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

    ‘Tis greater ill, it rapture of o’erweening gladness to the soul
    Bring self-forgetfulness than if transcendent wrath control.

    பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

    More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

    பரிமேலழகர் உரைசிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது-அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
    விளக்கம்:
    [மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.]மணக்குடவர் உரைபொச்சாவாமையாவது மறவியின்றி யொழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யுமிடங்களினும், அறம் பொருளின்பங்கள் செய்ய வேண்டுமிடங்களிலும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும். (இதன் பொருள்) மிகுத்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும் ; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு,
    (என்றவாறு). தனக்குச் சிறந்த உவகை தன் மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

    532

    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

    Perpetual, poverty is death to wisdom of the wise;
    When man forgets himself his glory dies!

    நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.

    Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

    பரிமேலழகர் உரைபுகழைப் பொச்சாப்புக் கொல்லும் – ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு – அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.
    விளக்கம்:
    [நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்; அதுபோல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) மறவியாகின்றது புகழைக் கொல்லும் ; நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல்,
    (என்றவாறு). இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

    533

    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
    எப்பால்நூ லோர்க்கும் துணிவு

    ‘To self-oblivious men no praise’; this rule
    Decisive wisdom sums of every school.

    மறதியால்‌ சோர்ந்து நடப்பவர்க்குப்‌ புகழுடன்‌ வாழும்‌ தன்மையில்லை; அஃது உலகத்தில்‌ எப்படிப்பட்ட நூலோர்க்கும்‌ ஒப்பமுடிந்த முடிபாகும்‌.

    Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

    பரிமேலழகர் உரைபொச்சாப்பார்க்கும் புகழ்மை இல்லை-பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு-அவ்வின்மை இந்நீதி நூலுடை யார்க்கேயன்றி உலகத்து எவ்வகைபட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
    விளக்கம்:
    [அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, ‘எப்பால் நூலோர்க்கும் துணிவு’ என்றார்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு,
    (என்றவாறு) இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

    534

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு

    ‘To cowards is no fort’s defence’; e’en so
    The self-oblivious men no blessing know.

    உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.

    Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so thethoughtless has no good (whatever advantages he may possess).

    பரிமேலழகர் உரைஅரண் அச்சம் உடையார்க்கு இல்லை – காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை – அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
    விளக்கம்:
    [நன்மைக்கு ஏதுவாகலின் ‘நன்கு’ என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை; அதுபோல், பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை ,
    (என்றவாறு). இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.

    535

    முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
    பின்னூறு இரங்கி விடும்

    To him who nought foresees, recks not of anything,
    The after woe shall sure repentance bring.

    வரும்‌ இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல்‌ மறந்து சோர்ந்தவன்‌, பின்பு அவை வந்துற்றபோது தன்‌ பிழையை நினைந்து இரங்குவான்‌.

    The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwardsrepent for his fault.

    பரிமேலழகர் உரைமுன்னுறக் காவாது இழுக்கியான் – தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் – பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
    விளக்கம்:
    [காக்கப்படும் துன்பங்களாவன; சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ‘ஊற்றின்கண்’ என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், ‘இரங்கிவிடும்’ என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) தன்னாற் காக்கப்படுந் துன்பங்களை அவை வருதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின், அப் பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்,
    (என்றவாறு).

    536

    இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்பது இல்

    Towards all unswerving, ever watchfulness of soul retain,
    Where this is found there is no greater gain.

    யாரிடத்திலும்‌ எக்காலத்திலும்‌ மறந்தும்‌ சோர்ந்திருக்காத தன்மை தவறாமல்‌ பொருந்தியிருக்குமானால்‌, அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும்‌ இல்லை.

    There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; andtowards all persons.

    பரிமேலழகர் உரைஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் – அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர் மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அஃது ஒப்பது இல் – அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
    விளக்கம்:
    [வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், ‘யார் மாட்டும்’ என்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் ‘என்றும்’ என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்ப வேண்டுதலின் ‘வழுக்காமை’ என்றும் கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்:நேர்படுதல்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) யாவர்மாட்டும் எல்லா நாளும் தப்புச் செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின், அதனை யொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை, (எ-று). இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

    537

    அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
    கருவியால் போற்றிச் செயின்

    Though things are arduous deemed, there’s nought may not be won,
    When work with mind’s unslumbering energy and thought is done.

    மறவாமை என்னும்‌ கருவிகொண்டு (கடமைகளைப்‌) போற்றிச்‌ செய்தால்‌, செய்வதற்கு அரியவை என்று ஒருவனால்‌ முடியாத செயல்கள்‌ இல்லை.

    There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinchingendeavour.

    பரிமேலழகர் உரைஅரிய என்று ஆகாத இல்லை – இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் – மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
    விளக்கம்:
    [‘பொச்சாவாத’ என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் ‘கருவி’ என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை ; மறவாமை யாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்,
    (என்றவாறு) இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.

    538

    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

    Let things that merit praise thy watchful soul employ;
    Who these despise attain through sevenfold births no joy.

    சான்றோர்‌ புகழ்ந்து சொல்லிய செயல்களைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌; அவ்வாறு செய்யாமல்‌ மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும்‌ நன்மை இல்லை.

    Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects andfails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

    பரிமேலழகர் உரைபுகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் – நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்-அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
    விளக்கம்:
    [அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள், சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், ‘எழுமையும் இல்’ என்றார். ‘எழுமை’ ஆகு பெயர். இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) உயாந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய் தல் வேண்டும்; இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்,
    (என்றவாறு). இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.

    539

    இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

    Think on the men whom scornful mind hath brought to nought,
    When exultation overwhelms thy wildered thought.

    தாம்‌ தம்‌ மகிழ்ச்சியால்‌ செருக்குக்‌ கொண்டு கடமையை மறந்திருக்கும்‌ போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால்‌ முற்காலத்தில்‌ அழிந்தவரை நினைக்கவேண்டும்‌.

    Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

    பரிமேலழகர் உரைதம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து-அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க,
    விளக்கம்:
    [காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் ‘தம் மகிழ்ச்சியின்’ என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், ‘மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து’ என்றும், கூறினார். கெட்டாரை உள்ளவே, ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து ‘எண்ணுக’ என்று பாடம் ஓதுவாரும் உளர்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க ; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது,
    (என்றவாறு) இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.

    540

    உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்

    ‘Tis easy what thou hast in mind to gain,
    If what thou hast in mind thy mind retain.

    ஒருவன்‌ எண்ணியதை விடாமல்‌ எண்ணி, (சோர்வில்லாமல்‌) இருக்கப்‌ பெற்றால்‌, அவன்‌ கருதியதை அடைதல்‌ எளிதாகும்‌.

  • செங்கோன்மை-55

    செங்கோன்மை

    Senkoanmai

    The Right Sceptre 55

    541

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை

    Search out, to no one favour show; with heart that justice loves
    Consult, then act; this is the rule that right approves.

    யாரிடத்திலும்‌ (குற்றம்‌ இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்‌ செய்யாமல்‌ நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்‌.

    To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire toact with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,constitute rectitude.

    பரிமேலழகர் உரைஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து; செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
    விளக்கம்:
    [நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை ‘இறை’ என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார், ‘யார் மாட்டும்’ என்றும் கூறினார். இறைமை ‘இறை’ எனவும், செய்வது ‘செய்வஃது’ எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.]மணக்குடவர் உரைசெங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்த லுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலாற் கோல் என்றார் ; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று. மேல் அமாத்தியர்மாட்டுஞ் சுற்றத்தார் மாட்டுந் தன்மாட்டுஞ் செய் யுந் திறங் கூறினார் உலகத்தார்மாட்டுஞ் செய்யுந்திறங் கூறுகின்றாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது (இதன் பொருள்) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, நட்டோரென்று கண் ணோடாது, தலைமையைப் பொருந்தி, யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண் டத்தை நூல்முகத்தாலாராய்ந்து, அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும்,
    (என்றவாறு). யார்மாட்டும் என்றது தன் சுற்றமாயினு மென்றது.

    542

    வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல்நோக்கி வாழுங் குடி

    All earth looks up to heav’n whence raindrops fall;
    All subjects look to king that ruleth all.

    உலகத்தில்‌ உள்ள உயிர்கள்‌ எல்லாம்‌ மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல்‌ குடிகள்‌ எல்லாம்‌ அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்‌.

    When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

    பரிமேலழகர் உரைஉலகு எல்லாம் வான் நோக்கி வாழும் – உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் – குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
    விளக்கம்:
    [நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை ‘வான்’ என்றும், கோலின் ஆய ஏமத்தைக் ‘கோல்’ என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி பின்புறாநிற்பர்; அது போல, குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கி பின்புறாநிற்பர், (எ-று).

    543

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்

    Learning and virtue of the sages spring,
    From all-controlling sceptre of the king.

    அந்தணர்‌ போற்றும்‌ மறைநூலுக்கும்‌ அறத்திற்கும்‌ அடிப்படையாய்‌ நின்று உலகத்தைக்‌ காப்பது அரசனுடைய செங்கோலாகும்‌.

    The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues thereindescribed.

    பரிமேலழகர் உரைஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
    விளக்கம்:
    [அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி ‘அந்தணர் நூல்’ என்றார். ”மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்” (மணி. 22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு ‘அறன்’ என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் – அநாதியாயினும், செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ‘ஆதி’ என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் ‘நின்றது’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை,
    (என்றவாறு).

    544

    குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு

    Whose heart embraces subjects all, lord over mighty land
    Who rules, the world his feet embracing stands.

    குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.

    The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

    பரிமேலழகர் உரைகுடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு – பொருந்தி, விடார் உலகத்தார்.
    விளக்கம்:
    [அணைத்தல் – இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை ‘மாநில மன்னன்’ என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், ‘அடிதழீஇ நிற்கும் உலகு’ என்றும் கூறினார்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு,
    (என்றவாறு). இது முறைமை செய்யும் அரசன்கண்ண தாம் உலகு என்றது.

    545

    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு

    Where king, who righteous laws regards, the sceptre wields,
    There fall the showers, there rich abundance crowns the fields.

    நீதிமுறைப்படி செங்கோல்‌ செலுத்தும்‌ அரசனுடைய நாட்டில்‌ பருவ மழையும்‌ நிறைந்த விளைவும்‌ ஒரு சேர ஏற்படுவனவாகும்‌.

    Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptrewith justice.

    பரிமேலழகர் உரைபெயலும் விளையுளும் தொக்கு-பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி; இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட-நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
    விளக்கம்:
    [‘உளி’ என்பது மூன்றவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) மழை பெய்தாலும் விளைதலுங்கூடி , நூல் சொன்ன இயல்பி னானே முறையை நடத்தவல்ல அரசனது நாட்டகத்தினவாம்,
    (என்றவாறு). இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டாமென்றது.

    546

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்

    Not lance gives kings the victory,
    But sceptre swayed with equity.

    ஒருவனுக்கு வெற்றி பெற்றுத்‌ தருவது வேல்‌ அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்‌; அச்செங்கோலும்‌ கோணாதிருக்குமாயின்‌.

    It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.

    பரிமேலழகர் உரைமன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் – மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின் – அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்,
    விளக்கம்:
    [கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார், ‘வேல் அன்று’ என்றார்; ”மாண்ட. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறநா 55) என்றார் பிறரும். ‘கோடான்’ என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்,
    (என்றவாறு). இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

    547

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்

    The king all the whole realm of earth protects;
    And justice guards the king who right respects.

    உலகத்தை எல்லாம்‌ அரசன்‌ காப்பாற்றுவான்‌; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின்‌ அரசனை அந்த முறையே காப்பாற்றும்‌.

    The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

    பரிமேலழகர் உரைவையகம் எல்லாம் இறை காக்கும் – வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் – அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின் – அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
    விளக்கம்:
    [முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை செய்தான் கண்ணும் (சிலப். 20;53 – 55), தன்கை குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 – 53) காண்க. ‘முட்டாது’ என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும், அவ்வரசனை அவன் றான் செய்யும் முறை காக்கும்; அதனைத் தப்பாமற் செய்யின்,
    (என்றவாறு). இது தனக்குக் காவலாம் என்றது.

    548

    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்

    Hard of access, nought searching out, with partial hand
    The king who rules, shall sink and perish from the land.

    எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

    The king who gives not facile audience (to those who approach him), and who does not examine andpass judgment (on their complaints), will perish in disgrace.

    பரிமேலழகர் உரைஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் – முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்; தண்பதத்தான் தானே கெடும் – தாழ்ந்த பதத்திலே நின்றுதானே கெடும்.
    விளக்கம்:
    [‘எண்பதத்தான்’ என்னும் முற்று வினை எச்சமும், ‘ஓரா’ என்னும் வினை எச்சமும், ‘செய்யா’ என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம் : பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்’ (நான்மணிக் 85) ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அர சன், தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும,
    (என்றவாறு). எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங் காலம்.

    549

    குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்

    Abroad to guard, at home to punish, brings
    No just reproach; ‘tis work assigned to kings.

    குடிகளைப்‌ பிறர்‌ வருத்தாமல்‌ காத்துத்‌, தானும்‌ வருத்தாமல்‌ காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத்‌ தக்க தண்டனையால்‌ ஒழித்தல்‌, அரசனுடைய தொழில்‌; பழி அன்று.

    In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punishcrime is not a fault in a king, but a duty.

    பரிமேலழகர் உரைகுடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் – குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில் – வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
    விளக்கம்:
    [துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, ”அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்” என்றார்.]மணக்குடவர் உரை(இதன் பொருள்) குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காக, குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்,
    (என்றவாறு)

    550

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்

    By punishment of death the cruel to restrain,
    Is as when farmer frees from weeds the tender grain.

    கொடியவர்‌ சிலரைக்‌ கொலைத்தண்டனையால்‌ அரசன்‌ ஒறுத்தல்‌ பயிரைக்‌ காப்பாற்றக்‌ களையைக்‌ களைவதற்கு நிகரான செயலாகும்‌.

  • கொடுங்கோன்மை-56

    கொடுங்கோன்மை

    Kodungkoanmai

    The Cruel Sceptre 56

    551

    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து

    Than one who plies the murderer’s trade, more cruel is the king
    Who all injustice works, his subjects harassing.

    குடிகளை வருத்தும்‌ தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச்‌ செய்து நடக்கும்‌ அரசன்‌ கொலைத்‌ தொழிலைக்‌ கொண்டவரைவிடக்‌ கொடியவன்‌.

    The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruelthan the man who leads the life of a murderer.

    பரிமேலழகர் உரைகொலை மேற்கொண்டாரின் கொடிது – பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து – பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
    விளக்கம்:
    (அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. ‘வேந்து’ என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். ‘அலை கொலையினும் கொடிது’ என்பதாயிற்று.)மணக்குடவர் உரைகொடுங்கோன்மையாவது கொடுங்கோன்மையால் வருங் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும், அருள் செய்யாமையும், பிறர் நலியாமற்காவாமை யும், முறைகெடச் செய்தலும், குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும் அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலுமெனப் பலவகைப்படும். இது கூறிய செங்கோன்மையின் மாறுபட்டுவருதலின், அதன்பின்கூறப்பட்டது. (இதன் பொருள்) கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத் தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று)

    552

    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு

    As ‘Give’ the robber cries with lance uplift,
    So kings with sceptred hand implore a gift.

    ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன்‌ குடிகளைப்‌ பொருள்‌ கேட்டல்‌, போகும்‌ வழியில்‌ தனியே வேல்‌ ஏந்தி நின்ற கள்வன்‌ ‘கொடு’ என்று கேட்பதைப்‌ போன்றது.

    The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber whostands with a weapon in hand and says “give up your wealth”.

    பரிமேலழகர் உரைவேலொடு நின்றான் – ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-ஆறு செல்வானை ‘நின் கைப்பொருள் தா’ என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு – ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
    விளக்கம்:
    (‘வேலொடு நின்றான்’ என்றதனால் பிறரொடு நில்லாமையும், ‘இரவு’ என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். ‘தாராக்கால் ஒறுப்பல்’ என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென் றல் போலும்; முறைசெய்தலை மேற்கொண்டுநின்றவன் குடிகள் மாட்டு இரத் தல்,
    (என்றவாறு). கோலொடு நிற்றல் – செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கட மைக்கு மேல் வேண்டுகோளாகக கொள்ளினும், அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

    553

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்

    Who makes no daily search for wrongs, nor justly rules, that king
    Doth day by day his realm to ruin bring.

    நாள்தோறும தன்‌ ஆட்சியில்‌ விளையும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்‌, நாள்தோறும்‌ ( மெல்ல மெல்லத்‌ ) தன்‌ நாட்டை இழந்து வருவான்‌.

    The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, willdaily fall to ruin.

    பரிமேலழகர் உரைநாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் – தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் – நாள்தோறும் நாடு இழக்கும்.
    விளக்கம்:
    (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. ‘மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்’, என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத்தக முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும்,
    (என்றவாறு) இது நாடு கெடுமென்றது.

    554

    கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு

    Whose rod from right deflects, who counsel doth refuse,
    At once his wealth and people utterly shall lose.

    ( ஆட்சிமுறை கெட்டுக்‌ ) கொடுங்கோலனாகி ஆராயாமல்‌ எதையும்‌ செய்யும்‌ அரசன்‌, பொருளையும்‌ குடிகளையும்‌ ஒரு சேர இழந்து விடுவான்‌.

    The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once bothhis wealth and his subjects.

    பரிமேலழகர் உரைசூழாது கோல் கோடிச் செய்யும் அரசு – மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் – அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
    விளக்கம்:
    (‘கோடல்’ என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பொருளையும் பொருள் தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்,
    (என்றவாறு) இஃது ஆராயாது செய்வதனால் வருங் குற்றங் கூறிற்று.

    555

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் பட

    His people’s tears of sorrow past endurance, are not they
    Sharp instruments to wear the monarch’s wealth away?

    ( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத்‌ தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால்‌ பலர்‌ துன்பப்பட்டுத்‌ துன்பம்‌ பொறுக்க முடியாமல்‌ அழுத கண்ணீர்‌ அன்றோ?

    Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from theirking), become a saw to waste away his wealth ?

    பரிமேலழகர் உரைஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
    விளக்கம்:
    (அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் – ‘செல்வமாகிய மரத்தை’ என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு, அதற்கு ஆற்றாது, அழுத கண்ணீரன்றோ ? செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்,
    (என்றவாறு). இஃது அவ்வரசன் கெடுமென்றது.

    556

    மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி

    To rulers’ rule stability is sceptre right;
    When this is not, quenched is the rulers’ light.

    அரசர்க்குக்‌ புகழ்‌ நிலைபெறக்‌ காரணம்‌ செங்கோல்‌ முறையாகும்‌. அஃது இல்லையானால்‌ அரசர்க்குப்‌ புகழ்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.

    Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have noendurance.

    பரிமேலழகர் உரைமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் – அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா.
    விளக்கம்:
    (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் “இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக” (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) –மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை ; அஃதில்லையா யாயின், அரசாக்கு ஒளி நிலையாதாம்,
    (என்றவாறு). முறை செய்யாமையால் அவன் நிலை பெறுதல் அருமையெனக் குற்றங் கூறு வார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

    557

    துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு

    Wi As lack of rain to thirsty lands beneath,
    Is lack of grace in kings to all that breathe.

    மழைத்துளி இல்லாதிருத்தல்‌ உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில்‌ வாழும்‌ குடிமக்களுக்கு அரசனுடைய அருள்‌ இல்லாத ஆட்சி.

    As is the world without rain, so live a people whose king is without kindness.

    பரிமேலழகர் உரைதுளி இன்மை ஞாலத்திற்கு எற்று – மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு – அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
    விளக்கம்:
    (சிறப்புப்பற்றி, ‘துளி’ என்பது மழைமேல் நின்றது: “உயிர்” என்பது குடிகள்மேல் நின்றது. மேல் “வான் நோக்கி வாழும்” என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது அத்தன்மைத்து ; அரசன் அருளிலனாதல் அவன் கீழ் வாழும் மக்கட்கு,
    (என்றவாறு). இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

    558

    இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்

    To poverty it adds a sharper sting,
    To live beneath the sway of unjust king.

    முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ கீழ்‌ இருக்கப்பெற்றால்‌, பொருள்‌ இல்லாத வறுமை நிலையைவிடச்‌ செல்வநிலை துன்பமானதாகும்‌

    Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king withoutjustice.

    பரிமேலழகர் உரைமுறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் – முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது – யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
    விளக்கம்:
    (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) நல்குரவினும் செல்வம் துன்பமாகும்; முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின்கீழே குடியிருக்கின்,
    (என்றவாறு). இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

    559

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்

    Where king from right deflecting, makes unrighteous gain,
    The seasons change, the clouds pour down no rain.

    அரசன்‌ முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால்‌, அந்த நாட்டில்‌ பருவமழை தவறி மேகம்‌ மழை பெய்யாமல்‌ போகும்‌.

    If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

    பரிமேலழகர் உரைமன்னவன் முறை கோடிச் செய்யின் – மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது – அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
    விளக்கம்:
    (இரண்டிடத்தும் ‘கோடல்’ என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) முறைமைகோட மன்னவன் செய்வனாயின், பழை துளிவிடு தலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்,
    (என்றவாறு).

    560

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்

    O Where guardian guardeth not, udder of kine grows dry,
    And Brahmans’ sacred lore will all forgotten lie.

    நாட்டைக்‌ காக்கும்‌ தலைவன்‌ முறைப்படி காக்காவிட்டால்‌ அந்நாட்டில்‌ பசுக்கள்‌ பால்‌ தருதலாகிய பயன்‌ குன்றும்‌; அந்தணரும்‌ அறநூல்களை மறப்பர்‌.

  • வெருவந்தசெய்யாமை-57

    வெருவந்தசெய்யாமை

    Veruvandhaseiyaamai

    Absence of ‘Terrorism’ 57

    561

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

    Who punishes, investigation made in due degree,
    So as to stay advance of crime, a king is he.

    செய்த குற்றத்தைத்‌ தக்கவாறு ஆராய்ந்து மீண்டும்‌ அக்‌ குற்றம்‌ செய்யாதபடி குற்றத்திற்குப்‌ பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்‌ ஆவான்‌.

    He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice),suitably punishes it, so that it may not be again committed.

    பரிமேலழகர் உரைதக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
    விளக்கம்:
    [‘தக்காங்கு’, ‘ஒத்தாங்கு’ என்பன ஒரு சொல். தகுதி என்பது நடுவுநிலைமையாதல் “தகுதி என ஒன்றும் நன்றே” (குறள். 111) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.]மணக்குடவர் உரைவெருவந்த செய்யாரையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல். தான் முறைசெய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவுங் கொடுங் கோலோடு ஒக்குமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமைக் காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்,
    (என்றவாறு).

    562

    கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    For length of days with still increasing joys on Heav’n who call,
    Should raise the rod with brow severe, but let it gently fall.

    ஆக்கம்‌ நெடுங்காலம்‌ நீங்காமலிருக்க விரும்புகின்றவர்‌ (தண்டிக்கத்‌ தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல்‌ காட்டி, அளவு மீறாமல்‌ முறை செய்ய வேண்டும்‌.

    Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquireswith strictness, and then punish with mildness.

    பரிமேலழகர் உரைகடிதுஓச்சி-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
    விளக்கம்:
    (கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. ‘ஓச்சுதல்’, ‘எறிதல்’ என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) கடி தாகச் செய்வாரைப்போன்று மெல்லிதாகச் செய்க, நெடி தாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்,
    (என்றவாறு). இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

    563

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    Where subjects dread of cruel wrongs endure,
    Ruin to unjust king is swift and sure.

    குடிகள்‌ அஞ்சும்படியான கொடுமைகளைச்‌ செய்து ஆளும்‌ கொடுங்கோல்‌ அரசனானால்‌, அவன்‌ திண்ணமாக விரைவில்‌ கெடுவான்‌.

    The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come toruin.

    பரிமேலழகர் உரைவெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
    விளக்கம்:
    (வெங்கோலன்’ என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. ‘ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்’ என்பன ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலை யுடையனாயின், அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்,
    (என்றவாறு)

    564

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    ‘Ah! cruel is our king’, where subjects sadly say,
    His age shall dwindle, swift his joy of life decay.

    ‘நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌.

    The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

    பரிமேலழகர் உரைஇறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்-குடிகளான் ‘நம் இறைவன் கடியன்’ என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
    விளக்கம்:
    (நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை ‘இன்னாச் சொல்’ என்றார். ‘உறை’ என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது; அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன், தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்,
    (என்றவாறு) இது நாடும் தான் உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவ னென்றது.

    565

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து

    Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
    His ample wealth shall waste, blasted by demon’s glance.

    எளிதில்‌ காணமுடியாத அருமையும்‌, இனிமையற்ற முகமும்‌ உடையவனது பெரிய செல்வம்‌, பேய்‌ கண்டு காத்திருப்பதைப்‌ போன்ற தன்மையுடையது.

    The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is likethat which has been obtained by a devil.

    பரிமேலழகர் உரைஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
    விளக்கம்:
    (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதுபற்றிப் ‘பேய் கண்டன்னது உடைத்து’ என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவர் னது பெரிய செல்வம் பேயைக்கண்ட தொக்க அச்சந்தருதலுடைத்து, (எ-று). இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேராதென்றது.

    566

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    The tyrant, harsh in speach and hard of eye,
    His ample joy, swift fading, soon shall die.

    கடுஞ்சொல்‌ உடையவனாய்க்‌ கண்ணோட்டம்‌ இல்லாதவனாய்‌ உள்ளவனுடைய பெரிய செல்வம்‌ நீட்டித்தல்‌ இல்லாமல்‌ அப்பொழுதே கெடும்‌.

    The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, willinstantly perish instead of abiding long, with him.

    பரிமேலழகர் உரைகடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
    விளக்கம்:
    (“வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு” எனப்பட்ட விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். ‘கண்’ ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றாயினும் என்பார், ‘நெடுஞ்செல்வம்’ என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் , கண்ணோட்டமும் இலனாயின், அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்,
    (என்றவாறு). இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.

    567

    கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    Harsh words and punishments severe beyond the right,
    Are file that wears away the monarch’s conquering might.

    கடுமையான சொல்லும்‌ முறைகடந்த தண்டனையும்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான வலிமையைத்‌ தேய்க்கும்‌ அரம்‌ ஆகும்‌.

    Severe words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying(his enemies).

    பரிமேலழகர் உரைகடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
    விளக்கம்:
    (கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்,
    (என்றவாறு). இது வலியைக் கெடுக்கும் என்றது.

    568

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகும் திரு

    Who leaves the work to those around, and thinks of it no more;
    If he in wrathful mood reprove, his prosperous days are o’er!

    அமைச்சர்‌ முதலான தன்‌ இனத்தாரிடம்‌ கலந்து எண்ணாத அரசன்‌, சினத்தின்‌ வழியில்‌ சென்று சீறி நிற்பானானால்‌, அவனுடைய செல்வம்‌ சுருங்கும்‌.

    The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commitsthem to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

    பரிமேலழகர் உரைஇனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்-காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்-அப் பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்-அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
    விளக்கம்:
    (அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை ‘இனம்’ என்றும், தான் பின் பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே, அப்பிழைப்புத் தீருமாறும் அப் பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, ‘திருச் சிறுகும்’ என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடிய சொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின், அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்,
    (என்றவாறு) ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின், அவன் செல்வம் குறையும் மென்றவாறு. இனம் – மந்திரி புரோகிதர்.

    569

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    Who builds no fort whence he may foe defy,
    In time of war shall fear and swiftly die.

    முன்னமே தக்கவாறு அரண்‌ செய்துகொள்ளாத அரசன்‌ போர்‌ வந்த காலத்தில்‌ (தற்காப்பு இல்லாமல்‌) அஞ்சி விரைவில்‌ அழிவான்‌.

    The king who has not provided himself with a place of defence, will in times of war be seized withfear and quickly perish.

    பரிமேலழகர் உரைசெரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் – அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
    விளக்கம்:
    (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந் தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிது கெடும்,
    (என்றவாறு). இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

    570

    கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
    இல்லை நிலக்குப் பொறை

    Tyrants with fools their counsels share:
    Earth can no heavier burthen bear!

    கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத்‌ தனக்கு அரணாகச்‌ சேர்த்துக்கொள்ளும்‌; அது தவிர நிலத்திற்குச்‌ சுமை வேறு இல்லை.

  • கண்ணோட்டம்-58

    கண்ணோட்டம்

    Kannoattam

    Benignity 58

    571

    கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு

    Since true benignity, that grace exceeding great, resides
    In kingly souls, world in happy state abides.

    கண்ணோட்டம்‌ என்று சொல்லப்படுகின்ற மிகச்‌ சிறந்த அழகு இருக்கும்‌ காரணத்தால்தான்‌, இந்த உலகம்‌ அழியாமல்‌ இருக்கின்றது.

    The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

    பரிமேலழகர் உரைகண்ணோட்டம் என்னும் கழி பெருங் காரிகை உண்மையான்- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு-இவ்வுலகம் உண்டாகாநின்றது.
    விளக்கம்:
    (‘கழிபெருங்காரிகை’ என்புழி ஒரு பொருட் பன்மொழி. இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், ‘உண்மையான்’ என நிலைபேறும் கூறினார். இன்மை வெகு வந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, ‘இவ்வுலகுண்டு’ என்றார்.)மணக்குடவர் உரைகண்ணோட்டமாவது கண்ணாற் காணப்பட்டாரை யருள் செய்தல். குற்றஞ்செய்தாரை ஒறுக்குங்கால் உலகத்தாரிசைய ஒறுக்கவேண்டுமென்றாராயி னும் அவ்வாறு செய்தவரைத் தமது கண்முன்னாகக் கண்டால் அதனைப் பொறுத் தலும் வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. இது பெரும்பான்மை யும் முன்பு கண்டு பழகினார் மேற்று. (இதன் பொருள்) கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன் மாட்டு உண்டான படி யினாலே, இவ்வுலகநடை யாகின்றது,
    (என்றவாறு). இஃது அஃ தில்லையாயின், உலகங் கெடும்; ஆதலால், கண்ணோடவேண்டு மென்றது.

    572

    கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை

    The world goes on its wonted way, since grace benign is there;
    All other men are burthen for the earth to bear.

    கண்ணோட்டத்தினால்‌ உலகியல்‌ நடைபெறுகின்றது; கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌ உயிரோடு இருந்தால்‌ நிலத்திற்குச்‌ சுமையே தவிர, வேறு பயனில்லை.

    The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no(kindliness) is a burden to the earth.

    பரிமேலழகர் உரைஉலகியல் கண்ணோட்டத்து உள்ளது-உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாராமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
    விளக்கம்:
    (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, ‘நிலக்குப்பொறை’ என்றார். ‘அதற்கு’ என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணது ; ஆதலால், அஃதில் லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம்,
    (என்றவாறு). இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.

    573

    பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    Where not accordant with the song, what use of sounding chords?
    What gain of eye that no benignant light affords?

    பாடலோடு பொருந்துதல்‌ இல்லையானால்‌ இசை என்ன பயனுடையதாகும்‌? அதுபோல்‌, கண்ணோட்டம்‌ இல்லாவிட்டால்‌ கண்‌ என்ன பயனுடையதாகும்‌?

    Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess nokindliness.

    பரிமேலழகர் உரைபண் என்னால் பாடற்கு இயைபு இன்றேல்-பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்! கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-அது போலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
    விளக்கம்:
    (‘பண்’ ‘கண்’ என்பன சாதிப்பெயர். பண்களாவன: பாலைவாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: மாழின்கண் வார்தல் முதலிய எட்டும்; பண்ணல் முதலிய எட்டும்; மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும்; பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் ‘கண்’ என்பதனைக் ‘கண்ணகல் ஞாலம்” (திரிகடுகம் 1) என்புழிப்போலக் கொள்க.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பண் என்ன பயனுடைத்தாம்; பாடலோடு பொருந்தாதாயின் அதுபோல, கண் என்ன பயனுடைத்தாம்; கண்ணோட்டமில்லாத காலத்து, (எறு). இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.

    574

    உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    The seeming eye of face gives no expressive light,
    When not with duly meted kindness bright.

    தக்க அளவிற்குக்‌ கண்ணோட்டம்‌ இல்லாத கண்கள்‌ முகத்தில்‌ உள்ளவைபோல்‌ தோன்றுதல்‌ அல்லாமல்‌ வேறு என்ன பயன்‌ செய்யும்‌?

    Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulatedkindness?

    பரிமேலழகர் உரைமுகத்து உளபோல் எவன் செய்யும்-கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்-அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
    விளக்கம்:
    (‘தோன்றல்’, ‘அல்லது’ என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு ‘அளவினான்’ என்றார். ‘ஒரு பயனையும் செய்யா’ என்பது குறிப்பெச்சம்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண் கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
    (என்றவாறு). அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.

    575

    கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும

    Benignity is eyes’ adorning grace;
    Without it eyes are wounds disfiguring face.

    ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம்‌ என்னும்‌ பண்பே; அஃது இல்லையானால்‌ புண்‌ என்று உணரப்படும்‌.

    Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to bemerely two sores.

    பரிமேலழகர் உரைகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் – அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையாரால் புண் என்று அறியப்படும்.
    விளக்கம்:
    (வேறு அணிகலம் இன்மையின் ‘கண்ணிற்கு அணிகலம்’ என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, ‘புண் என்று உணரப்படும்’ என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டம் முடைமை; அஃ தில்லையாயின், அவை புண்ணென்றறியப்படும்,
    (என்றவாறு). இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.

    576

    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்

    Whose eyes ‘neath brow infixed diffuse no ray
    Of grace; like tree in earth infixed are they.

    கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும்‌ கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌, (கண்‌ இருந்தும்‌ காணாத) மரத்தினைப்‌ போன்றவர்‌.

    They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

    பரிமேலழகர் உரைகண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் – ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணொடு இயைந்த மரத்து அனையர் – இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
    விளக்கம்:
    (‘ஓடாதவர்’ என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது, மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய்” (புறத்திரட்டு 1555 முத்தொள்.) என்பதனானும் அறிக.மணக்குடவர் உரை(இதன் பொருள்) சுதைமண்ணோடு கூடச் செய்த மாப்பாவையோடு ஒப்பார்; ஒருவன் கண்ணோடு தங்கண் கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

    577

    கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்

    Eyeless are they whose eyes with no benignant lustre shine;
    Who’ve eyes can never lack the light of grace benign.

    கண்ணோட்டம்‌ இல்லாத மக்கள்‌ கண்‌ இல்லாதவரே ஆவர்‌. கண்‌ உடைய மக்கள்‌ கண்ணோட்டம்‌ இல்லாதிருத்தலும்‌ இல்லை.

    Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

    பரிமேலழகர் உரைகண்ணோட்டம் இல்லவர் கண் இலர்-கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
    விளக்கம்:
    (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, ‘கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்’ எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். ‘உம்மை’ இறந்தது தழீஇய எச்சஉம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே; கண்ணுடையார் கண் ணோட்டமிலராதலும் இல்லை,
    (என்றவாறு).

    578

    கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
    உரிமை உடைத்திவ் வுலகு

    Who can benignant smile, yet leave no work undone;
    By them as very own may all the earth be won.

    தம்‌ தம்‌ கடமையாகிய தொழில்‌ கெடாமல்‌ கண்ணோட்டம்‌ உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம்‌ உரிமை உடையது.

    The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs,(administration of justice).

    பரிமேலழகர் உரைகருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு-முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
    விளக்கம்:
    (தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைதல், மேல் “ஓர்ந்து கண்ணோடாது” (குறள் 541) என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், கண்ணோட வல்லார்க்கு’ என்றும், அவ் வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், ‘உரிமை உடைத்து’ என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோடவல்லவர்க்கு , இவ் வுலகம் உரிமையாதலை உடையது,
    (என்றவாறு) இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோட வேண்டுமென்று கூறிற்று.

    579

    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை

    To smile on those that vex, with kindly face,
    Enduring long, is most excelling grace.

    தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும்‌ கண்ணோட்டம்‌ செய்து, (அவர்‌ செய்த குற்றத்தைப்‌) பொறுத்துக்‌ காக்கும்‌ பண்பே சிறந்தது.

    Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of alldispositions.

    பரிமேலழகர் உரைஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
    விளக்கம்:
    (‘பண்பினார்’ என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம். ‘ஒறுத்தாற்றும்’, ‘பொறுத்தாற்றும்’ என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோ டிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்,
    (என்றவாறு).

    580

    பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்

    They drink with smiling grace, though poison interfused they see,
    Who seek the praise of all-esteemed courtesy.

    யாவராலும்‌ விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர்‌, பழகியவர்‌ தமக்கு நஞ்சு இடக்கண்டும்‌ அதை உண்டு அமைவர்‌.

  • ஒற்றாடல்-59

    ஒற்றாடல்

    Ottradal

    Detectives 59

    581

    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்

    These two: the code renowned and spies,
    In these let king confide as eyes.

    ஒற்றரும்‌ புகழ்‌ அமைந்த நீதிநூலும்‌ ஆகிய இவ்விருவகைக்‌ கருவிகளையும்‌ அரசன்‌ தன்னுடைய கண்களாகத்‌ தெளிய வேண்டும்‌.

    Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

    பரிமேலழகர் உரைஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க-அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
    விளக்கம்:
    (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்து கொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை ‘ஒற்று’ என்றார், வேந்தனை ‘வேந்து’ என்றார்போல. ‘தெற்றென்க’ என்பது ‘தெற்று’ என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது ‘தெற்றென’ என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)மணக்குடவர் உரைஒற்றாடலாவது ஒற்றரையாளவேண்டு மென்பதும், அவ்வொற்றர் திறனும் கூறுதல். பெரியாரைத் துணைக்கோடல் முதலாகக் கண்ணோட்டம் ஈறாகத் தன் வாசலிலிருந்து செய்ய வேண்டுவன் கூறினார். அது செய்யுங்கால் அவரவர் செய்தியை ஒற்றரான் ஒற்றியறிய வேண்டுதலானும், இனிப் பிறர் நாடு கொள்ளுங் கால் செய்யவேண்டுவன கூறுகின்றாராதலின் அந்நாட்டியல்பறிந்து வினை செய்ய வேண்டுதலானும், இவ்வதிகாரம் வேண்டப்பட்டது. (இதன் பொருள்) ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளிவறிந்த மன்ன வனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக,
    (என்றவாறு). அரசர்க்குக் கல்வி இன்றியமையாதது போல ஒற்றும் இன்றியமையாத தென்றவாறு. இஃது ஒற்று வேண்டுமென்றது.

    582

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்

    Each day, of every subject every deed,
    ‘Tis duty of the king to learn with speed.

    எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவை எல்லாவற்றையும்‌ எக்காலத்திலும்‌(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல்‌ அரசனுக்குரிய தொழிலாகும்‌.

    It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

    பரிமேலழகர் உரைஎல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல்- எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில்-அரசனுக்கு உரிய தொழில்.
    விளக்கம்:
    (‘எல்லார்க்கும்’ என்றது மூன்று திறத்தாரையும். நான்காது ஏழாவதன் பொருட்கண் வந்தது. ‘நிகழ்வன எல்லாம்’ என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் ‘வல்லறிதல்’ என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆகலின், அதனையே உபசார வழக்கால் ‘தொழில்’ என்றும் கூறினார். ‘ஒற்றான்’ என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தஞ்சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப்பற்றி நிகழ்பவையெல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்தறிதல் வேந்தனது தொழில்,
    (என்றவாறு).

    583

    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்தது இல்

    By spies who spies, not weighing things they bring,
    Nothing can victory give to that unwary king.

    ஒற்றரால்‌ (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின்‌ பயனை ஆராய்ந்துணராத அரசன்‌ வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.

    There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

    பரிமேலழகர் உரைஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்-ஒற்றினானே எல்லார் கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல்-வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
    விளக்கம்:
    (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின், ‘கொற்றம் கொளக் கிடந்தது இல்’ என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான், அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை,
    (என்றவாறு). இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

    584

    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்வது ஒற்று

    His officers, his friends, his enemies,
    All these who watch are trusty spies.

    தம்முடைய தொழிலைச்‌ செய்கின்றவர்‌, தம்‌ சுற்றத்தார்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ எல்லாரையும்‌ ஆராய்வதே ஒற்றரின்‌ தொழிலாகும்‌.

    He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.

    பரிமேலழகர் உரைதம்வினை செய்வார், சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது-தம் காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே. ஒற்று-ஒற்றனாவான்.
    விளக்கம்:
    (‘தம்’ என்றது, அரசனோடு உளப்படுத்தி அவனுக்குக் காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்து நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும் அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும் எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், ‘அனைவரையும் ஆராய்வது ஒற்று’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும், தமக்குச் சுற்றமாயிருப்பாரும், தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந் தறிவான் ஒற்றனாவன்,
    (என்றவாறு). இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

    585

    கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று

    Of unsuspected mien and all-unfearing eyes,
    Who let no secret out, are trusty spies.

    ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல்‌ எவ்விடத்திலும்‌ மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல்‌, இருக்கவல்லவனே ஒற்றன்‌ ஆவன்‌.

    A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds ofothers), who fears no man’s face, and who never reveals (his purpose).

    பரிமேலழகர் உரைகடாஅ உருவொடு-ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது-அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
    விளக்கம்:
    (‘கடா’ என்பது ‘கடுக்கும்’ என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) வினாவப்படாத வடிவோடேகூடி, கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்த பொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்க வல்லவன் ஒற்ற னாவன்,
    (என்றவாறு).

    586

    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று

    As monk or devotee, through every hindrance making way,
    A spy, whate’er men do, must watchful mind display.

    துறந்தவரின்‌ வடிவத்தை உடையவராய்‌, அரிய இடங்களிலெல்லாம்‌ சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்‌) என்ன செய்தாலும்‌ சோர்ந்துவிடாதவரே ஒற்றர்‌ ஆவார்‌.

    He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes),examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.

    பரிமேலழகர் உரைதுறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து-முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்யுகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று -ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
    விளக்கம்:
    (விரத ஒழுக்கம்-தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்கை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் ‘படிவம்’ என்றதனை வேடமாக்கி, ‘துறந்தார் வேடத்தாராகி’ என்று உரைப்பாரும் உளர்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) தவஞ் செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்து போய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து, அவ்விடத்து அகப்பட்டால் அவ்விடத்துள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன்னுள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன்,
    (என்றவாறு).

    587

    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பாடு இல்லதே ஒற்று

    A spy must search each hidden matter out,
    And full report must render, free from doubt.

    மறைந்த செய்திகளையும்‌ கேட்டறியவல்லவனாய்‌ அறிந்த செய்திகளை ஐயப்படாமல்‌ துணியவல்லவனாய்‌ உள்ளவனே ஒற்றன்‌ ஆவான்‌.

    A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

    பரிமேலழகர் உரைமறைந்தவை கேட்க வற்று ஆகி-ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று-கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
    விளக்கம்:
    (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து, அத் தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்க வேண்டுதலின், ‘கேட்க வற்று ஆகி’ என்றும், கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின்,’ஐயப்பாடு இல்லதே’ என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந் தவற்றைத் தீர அறிய வல்லவனே ஒற்றனாவான்,
    (என்றவாறு). இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

    588

    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்

    Spying by spies, the things they tell
    To test by other spies is well.

    ஓர்‌ ஒற்றன்‌ மறைந்து கேட்டுத்‌ தெரிவித்த செய்தியையும்‌ மற்றோர்‌ ஒற்றனால்‌ கேட்டுவரச்‌ செய்து ஒப்புமை கண்டபின்‌ உண்மை என்று கொள்ள வேண்டும்‌.

    Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

    பரிமேலழகர் உரைஒற்று ஒற்றித் தந்த பொருளையும் – ஓரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியத்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் – பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
    விளக்கம்:
    (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லு தல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க,
    (என்றவாறு).

    589

    ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்

    One spy must not another see: contrive it so;
    And things by three confirmed as truth you know.

    ஓர்‌ ஒற்றனை மற்றோர்‌ ஒற்றன்‌ அறியாதபடி ஆளவேண்டும்‌; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர்‌ மூவரின்‌ சொல்‌ ஒத்திருந்தால்‌ அவை உண்மை எனத்‌ தெளியப்படும்‌.

    Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the informationof three agrees together, let him receive it.

    பரிமேலழகர் உரைஒற்று ஒற்று உணராமை ஆள்க – ஒற்றரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் – அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
    விளக்கம்:
    (‘ஆயின்’ என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக் கூறுவர் ஆகலின், ‘உணராமை ஆள்க’ என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப்படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் ‘தேறப்படும்’ என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம் பெற்றாம்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) ஒற்றரை விடுங்கால், ஒருவரையொருவர் அறியாமல் விடுக; மூவர் சொல் உடன் கூடின், அது தெளியப்படுமாதலால்,
    (என்றவாறு). இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.

    590

    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
    புறப்படுத்தான் ஆகும் மறை

    Reward not trusty spy in others’ sight,
    Or all the mystery will come to light.

    ஒற்றனிடத்தில்‌ செய்யும்‌ சிறப்பைப்‌ பிறர்‌ அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால்‌ மறைப்பொருளைத்‌ தானே வெளிப்படுத்தியவன்‌ ஆவான்‌.