Skip to content

Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது

1 Posts
1 Users
0 Reactions
245 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 462
Topic starter  

 நீயின்றி வாழ்வேது எனது பார்வையில்.

விசாகன் படிப்பை நிறைவு செய்து தண்ணீர் வியாபாரம் செய்கிறான். அவன் அப்பா வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து அவருக்கு அபர்ணா என்ற பெண் குழந்தை இருப்பது தெரிந்து அப்பாவை அடித்து அதற்கு மருத்துவமும் பார்க்கிறான். அவன் அப்பாவின் சொந்தத்தில் வைஷாலியை திருமணம் செய்ய முடிவு செய்து திருமணம் நடக்கும் நிலையில் அவன் அப்பா இரண்டாவதாக வாழும் பெண் இறந்துவிடுவதால் பெண் அபர்ணாவை அனாதையாக விட மனமில்லாமல் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான்

. தன் அப்பாவின் மகள் என்று சொல்லாமல் இருப்பதால் விசாகன் மீது சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அபர்ணா பற்றிய உண்மைகள் அவன் குடும்பம் மற்றும் வைஷாலியின் அண்ணன் விவேக்கிற்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் திருமணம் நடந்து இருவரும் புரிதலுடன் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். விசாகன் தம்பி சுகிர்தன் கிறித்தவ பெண் ஜெனிபரை விரும்புகிறான். சுகிர்தன் அப்பாவை திட்டிவிட மனமுடைந்து விபத்தில் சிக்கியவர் இறந்துவிடுகிறார். அபர்ணா பற்றிய உண்மைகள் தெரியாதவர்கள் விசாகன் அப்பாவை பற்றி சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். இருவரின் புரிதலும் அருமை. வைஷாலி உண்மையை ஏற்றுக் கொள்கிறாளா இருவரின் வாழ்க்கை சுமூகமாக சென்றதா?

சுயநலமான சுகிர்தன் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். நல்ல யதார்த்தமான நடையில் விறுவிறுப்பாக தந்திருக்கிறார். உண்மைக் கதையை தழுவியது என்று சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். நல்ல நடையில் அழகாக தந்திருக்கும் எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.


   
ReplyQuote
Topic Tags