வெற்றி எளிதல்ல- மங்கையர் மலர் இதழ்
*வெற்றி எளிதல்ல* இந்த கவிதை தான் முதன் முதல்ல பத்திரிக்கையில் வந்தது. அதுவும் எப்படி வந்துச்சுன்னா... நான் முதல் வருடம் எழுதி போட்டது மூன்றாம் வருடம் படிச்சி முடிச்சி போனப்பிறகு, எனக்கு பொண்ணு பார்த்துட்டு போன ஒரு வாரத்தில் வந்தது. பொண்ணு தைரியமான தன்னம்பிக்கையான பொண்ணுன்னு எங்க அத்தை(மாமியார்) என்னுடைய துணையிடம் சொல்லி காட்டியதாக கொசுறு தகவல். 😁
கவிதை படம் இதில் இருக்கு. சரியா தெரியலைன்னா கீழேயுள்ள லிங்க்ல போய் பாருங்க. கவிதை மற்றும் புகைப்படம் தெளிவாக தந்துள்ளேன்.
வெற்றி எளிதல்ல

காற்றுக்கு ஒலி சுமையானால்
இசை கிடைப்பதில்லை
கல்லுக்கு உளி சுமையானால்
சிற்பம் கிடைப்பதில்லை
மண்ணுக்கு ஏர் சுமையானால்
விளைச்சல் கிடைப்பதில்லை
மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்
நீர்துளி கிடைப்பதில்லை
தாளுக்கு மை சுமையானால்
கவிகள் பிறப்பதில்லை
தாய்க்கு சேய் சுமையானால்
தாய்மைக்கு அழகு இல்லை
வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்
வெற்றி கிடைப்பதில்லை.
-- பிரவீணா தங்கராஜ் .
*செப் 2008-இல் "மங்கையர் மலரில் " பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .
என்னுடைய கல்லூரி மலரிலும் பிரசுரிக்கப்பட்டது. மேலும், ஊர்த்திருவிழாவில் கும்பாபிஷேக மலர் ஒன்றிலும் பிரசுரமானது.


Leave a reply
-
பால் நிலவு - *நிலவோடு காதல் 100* (கவிதை தொகுப்பு)
1 year ago
-
நான் விரும்பும் என் முகம் -கவிதை தொகுப்பு புத்தகம்
1 year ago
-
தமிழ் மகளே - தேன்மழை (கவிதை தொகுப்பு புத்தகம்)
1 year ago
-
கல்வி -மங்கையர் மலர் இதழ்
1 year ago
-
சிசுவின் கதறல்- ஹைக்கூ -மங்கையர் மலர் இதழ்
1 year ago
- 57 Forums
- 1,689 Topics
- 2,270 Posts
- 27 Online
- 2,303 Members
