புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

மொதராத்திரி

1 Posts
1 Users
0 Reactions
138 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 458
Member Admin
Topic starter
 
[#4037]

மொத ராத்திரி' இந்த படத்திற்கு முகநூலில் ஏகப்பட்ட பாஸிடிவ் விமர்சனம். நாமளும் சொன்னதையே சொல்லணுமா? வேண்டாமென்று தான் நினைத்தேன். 

  ஆனால் தமிழ் நாவல் உலகம் எப்படி எஞகுபிசகான கதைகளில் சில எழுத்தாளரிடம் சிக்கி சீரழிகின்றதோ அதே போல சினிமா உலகமும் சில திரைப்படத்தில் சீரழிந்துக் கொண்டு தான் உள்ளது. 

  எப்படி அத்தி பூத்தாற்போல நாவல் உலகத்தில் நல்ல கதைகளும் எதார்த்தமும் பேசப்படுகின்றதோ. அது போல சினிமா கதைகளிலும் சில படம் அப்படி இருக்க அதை பாராட்டினால் நன்றாக தான் இருக்கும் என்று தோன்றியது. 

  இந்த படத்தில் அதிகம் பேசப்பட்ட ரிஷிகாந்த. எதார்த்தமான முகம். வசீகரித்து கவரக்கூடியவனாக, கதைக்கேற்ற உடல்மொழியும் நடிப்பும் அற்புதமாக இருந்தது. இதற்கு முன் இவரது முகம் எங்கே பார்த்தோம் என்று நினைவேட்டில் தேடிய போது, அட 'மேட் இன் கொரியா' என்ற திரைப்படத்தில் நாயகி காதலித்து ஏமாற்றிய கதாபாத்திரம்‌. பின்னர் 'கூலி'யில் மோனிகா பாடலில் வருவார். ரௌவுடியில் ஒருவர். 

   அதிலெல்லாம் கூட நன்றாக தான் இதே போல எதார்த்தம் இருந்தாலும் பேசப்படவில்லை. ஏனெனில் பேசப்பட அதில் நிறைய மற்ற ஆட்கள் இடம் பெற்றுவிட்டனர். 

   இந்த படத்தில் தான் அவரது முழு நடிப்பும் திறமையும் ஏன் அழகான முகமும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்..‌ நிறைய நல்ல கதை தேர்ந்தெடுத்தால் ஒரு சுற்று பேசப்படும் நடிகராக வலம் வரலாம். 

 பெரிதாக இவரது தாண்டி வேறொரு நபரை இங்கே பாராட்ட வேண்டும். அது நித்திஷ். கதாபாத்திரம் கூட மொக்கையா இருக்கு. அவரை ஏன் பாராட்டா வேண்டும் என்ற வினா எழுகின்றதா. அங்கு தான் ட்விஸ்ட். அவர் தான் இந்த கதையின் கதை திரைக்கதை வசனம் டேரக்டர் இவரே. ராஜா கருப்பசாமி. 

   கண்ட கண்ட கதையற்ற படங்கள் எடுக்கும்‌ டேரக்டர் மத்தியில் கதைக்கான கவனமும் தேவேக்கேற்ற நச்சென்ற வசனம், கிடைக்கும் இடத்தில் எல்லாம் சமூக கருத்தையும் பாய்ச்சியுள்ளார். 

   சேர் ரெக்கார்டிங் என்று வைத்து பிழைப்பை நடத்தும் கேரக்டர் வைத்து தீண்டாமையுமா, அவனை விரும்பும் பெண்ணின் அம்மா ஒட்டபந்தைய வீராங்கனையாக மாற வேண்டியவள். சராசரி மனைவியாக வந்து நின்ற அவலம் மூலம் பெண்ணின் மணவாழ்க்கையில் சாதனை கனவெல்லாம் அடைப்பட்டதை எளிதாகவும் கூறினார்.‌

   இந்த காலத்து காதலன் நித்திஷ். அந்த காதாபாத்திரம் அவரே நடித்தது. முதலில் வேற ஆளே இல்லையாடா' என்ற எண்ணத்தை தந்து, பிறகு இவரே சிறப்பாக இருந்தது. 

  ராஜா கருப்பசாமி நேர்காணல் எல்லாம் அறிவுசார்ந்து இருக்கின்றது. இவரிடம் நல்ல கதைகளை படங்களை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலை விதைத்துள்ளார். 

 அடுத்து அந்த நாயகி. இந்த நாயகி இதற்கு முன் நடத்த படத்தில் கூட நன்றாக தான் நடித்திருந்தார். அந்த எதிர்பார்ப்பை இதில் நிறைவுப்படுத்திவிட்டார். தேர்ந்தெடுத்த கதைகளை கவனமாய் நடித்தால் இவருக்கும் நல்ல வாய்ப்பு அமையும். 

எனக்கு இந்த படத்துல எல்லா கதாபாத்திரமும் பிடித்தது. சேரை அடுக்கும் பையன் அவனை சைட் அடித்து டீ தரும் பெண். இவங்க காதல் எந்த மாதிரி முடியும்னு சிந்திக்க வச்சது. இந்த பொண்ணு கூட ஒரு வெப் சீரிஸ் வதந்தில வந்திருக்கு. நாயகிக்கு தோழியா நிறைய படத்துல வர வாய்ப்பு அமையலாம்‌.

   அதில் பெண்ணின் அம்மா கேரக்டர்... அடப்பாவமே.. நித்திஷ் சொந்தக்கார பையன் தானே. கட்டி வைக்கலாம்ல? என்று எண்ண தேன்றியது. ஆனா... அது தான் இந்த கேரக்டரின் ரோல். 

 எல்லாமே உயிர்ப்புடன் ரசிப்புடன் இருந்தது. 

 


 
Posted : September 22, 2026 9:45 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved