கதை-நன்விழி, விமர்சனம் வழங்கியவர்-ஜெயலட்சுமி கார்த்திக்
கதை :நன்விழி
எழுதியவர் -பிரவீணா தங்கராஜ்
விமர்சனம் வழங்கியவர்-ஜெயலட்சுமி கார்த்திக்
பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதுவோர் அனைவருக்கும் பதிலாய் அழகிய கதையை கொடுத்துள்ளார் பிரவீணா தங்கராஜ்
நன்விழி.. நிறைமாத கர்ப்பிணி. அவள் தான் நாயகி. எங்க செட்ல நாயகிகளுக்கு நாங்க கொடுக்கும் முக்கியத்துவம் எல்லாரும் அறிந்தது தான்.
கர்ப்பிணிப் பொண்ணுக்கு தைரியமான்னு கேட்டிங்கன்னா.. ஆமா.. மிகப்பெரிய தைரியம் அவ கிட்ட இருந்தது. நம்ம நாட்ல பல நேரம் மக்களை பிணையா பிடிச்சு மிரட்டுறதும், அதுக்கு அரசாங்கமும் மக்களும் பயப்படுறத பாத்திருப்போம். அப்படியான ஒரு கதைக்களம் தான் இது. ஆனா அதை மட்டும் இந்த கதை பேசல. கூடவே..
ஆண் பெண் நட்பு, அவர்கள் இருவரும் பழகும் விதத்தை வச்சு சமூகம் அவங்க மேல் காட்டும் வெறுப்பு, அதை எங்க எப்படி காட்றதுன்னு கூடத் தெரியாத மக்களின் குறுகிய மனநிலை.. இது எல்லாத்தையும் ரொம்ப அழகா காட்டி இருக்காங்க வீணா.
வாழ்த்துகள் பிரவீணா டார்லிங்.
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி2 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்2 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த2 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi10 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan10 months ago
- 141 Forums
- 2,307 Topics
- 2,583 Posts
- 5 Online
- 1,056 Members