இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.
அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.
மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.
ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர்.
மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.
காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.
காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர்ந்து தனி வீடு எடுத்து தங்கி படிப்பதால் அவர்கள் இருவரும் அங்கே மாட்டிக் கொண்டிருந்தனர். ஒற்றை பிள்ளையும் டெல்லியில் பெரியப்பா வீட்டில் மாட்டிக் கொண்டான்.
144 தடை உத்தரவு போட்டு வீட்டில் முடக்கப்பட்டிருந்தனர்.
சிவகுமாருக்கு குடும்பம் பெரியது. ஆனால் உறவுகள் மேலோட்டமாய் பழகுவார்கள். காயத்ரியின் குடும்பம் ஒரு அண்ணன் மட்டும். தங்கைக்கு ஒன்று என்றால் துடித்திடுவார்.
இன்றைய நாட்களில் கடவுளிடம் வரும் அதிகப்படியான பிரார்த்தனை என்னவென்றால் உலகை உலுக்கும் கிரிமி அழிந்து, நாடு தினசரி சூழலாக மாற வேண்டும். மரண எண்ணிக்கை குறைந்து மக்கள் உயிர் பேண வேண்டும் என்பதே… அப்படி தான் அந்த குடும்பமும் சிவக்குமாரின் உடல்நிலையை எண்ணி வருந்தி பிரார்த்தனை செய்தது.
காயத்ரி குணமடைந்து வீட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டாள். வீட்டிற்கு சென்றாலும் இரண்டு வாரம் எங்கும் செல்லக் கூடாதென அறிவுறுத்தியிருந்தனர்.
வீட்டுக்கு வந்தப் பின்னும் அப்படியொன்றும் உணவு இறங்கவில்லை. நார்மல் வாழ்க்கை ஸ்தம்பித்தே இருந்தது.
நான்கு நாட்கள் ஆன நிலையில் சிவகுமார் இறந்ததாக கூறி அறிவிப்பு வந்தது. காயத்ரியின் தங்கை மாதவி மட்டும் கூட வந்து அமர காயத்ரியின் தேம்பல்கள் நிறுத்த முடியவில்லை.
கடைசியாக ஹாஸ்பிடலுக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சென்ற நேரம் முகத்தை பார்த்தது.
தன்னை போல திரும்பி வருவாரென நம்பிக்கையோடு காத்திருந்த காயத்ரிக்கு சிவகுமாரின் இறப்பு செய்தி அதிர்ச்சி அளித்தது. அதுவும் மகன் இருந்தும் தகன காரியம் செய்ய முடியாது. தகனம் கூட பரவாயில்லை தன்னோடு உடலும் மனமும் ஒரு சேர ஆத்மார்த்த தம்பதியாராய் ஐம்பது வருடம் வாழ்ந்தவர். கடைசியாக ஒரு நொடி கூட காண முடியவில்லையே என்ற எண்ணமே உயிரை உருவி எடுத்தது காயத்ரிக்கு.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு பக்கம் “என்னால அப்பாவுக்கு கொள்ளி கூட போட முடியலையே மா.” என்றான் மகன்.
“அம்மா அழாத மா.” என்றாள் சின்ன மகள். பெரியவளோ, “அய்யோ அப்பாவை கடைசியா பார்க்காமலே இங்க வந்தோமே. இனி எப்பவும் பார்க்க முடியாதா…” என்ற ஒப்பாரி போன் மூலமாக தான் கேட்க வைத்தது.
வீடு நிசப்தமாக யாருமின்றி தனியாக மயானமாக காடசியளித்தது. தனி வீட்டில் மாதவியின் அருகாமையில் காயத்ரி அழுதழுது கரைந்தார்.
இதோ மூன்று மாதம் கழித்து வெளியே வந்து மக்களோடு காய்கறி வாங்க வர, பக்கத்து தெருவில் சாலையை ஹாட் ஸ்பாட் என்ற பேனரை கட்டி தெருவை முடக்கினார்கள்.
காயத்ரி தன்நிலை யாருக்கும் வேண்டாமென யாரென அறியாத உயிருக்கு இறைவனை வேண்டினாள் கண்ணீரோடு.
இன்னமும் முடியவில்லையே… எங்கோ ஆம்புலன்ஸ் ஒலியும். யாரோவொருவரின் கண்ணீரும் ஒரு உயிருக்காக பல மனங்கள் துடித்து கொண்டிருக்கின்றது.
கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது.
கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள். தன் நயன விழியிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து வீட்டின் பின் பக்க கிணற்றில் ஏறி நின்றாள் ஜானவி.
முடிவாக இறந்திட முடிவெடுத்து விட்டாயா? என்று ஓர் குரல் அவள் மூளையிடமிருந்து கேட்டது.
‘ஆமா… அப்பா பார்க்கற ஒயின் ஷாப் ஒனரை கட்டிக்கிட்டு வாழறதும் ஒன்று தான் சாவறதும் ஒன்று தான்’ என்றது மனம்.
‘ஓ… அப்படின்னா சரி. நீ தானே தப்பு செய்த. அப்ப நீயே சாவு’ என்று மூளை கூற மனம் திடுக்கிட்டு விழித்தது.
‘நான் என்ன தப்பு செய்தேன். அவன் தான் தப்பானவன். எத்தனை பேர் வாழ்வு அந்த ஒயின் ஷாப்ல போகுதோ. அவன் என் வாழ்வை முடிவெடுப்பதா என்று யோசித்தவள்’ சட்டென குதித்தாள் கிணற்றுக்குள் அல்ல கிணற்றுக்கு வெளியே.
என் இருபத்தி ஒன்று வயது வரை என் வாழ்வை நான் தான் வாழ்ந்தேன். இனியும் என் வாழ்க்கையை நான் தான் வாழணும். யாரோ ஒரு முகம் தெரியாதவன் அதுவும் ஒயின் ஷாப் ஆளு, பொண்ணு பார்க்க வர்றான்னு நான் சாகணுமா. இல்லை..’ என்று தன் மூளை சொல்லியதன் தாக்கம் கால்களை அலம்பி சேரை கழுவி வேகமாக வீட்டுக்கு சென்றாள்.
இழுத்து போர்த்தி நாளைக்கு தந்தையிடம் மீண்டும் மறுத்து பேசி முடிவெடுக்கணும் என்று உறங்கினாள்.
அதிகாலையில் ஜானவி பல் தேய்க்க அக்கம் பக்கத்தில் சிலர் ஓடுவது கண்ணில்பட்டது.
ஜானவி தாயார் மகேஸ்வரி முற்றம் தெளித்தவர் ஓடியவரில் ஒருவரை நிறுத்தி என்ன ஏதென விசாரிக்க “நம்ம சங்கவி தூக்கு மாட்டி செத்துடுச்சாம்” என்றதும் முற்றம் தெளித்த வாளியை ‘தொப்’பென்று போட்டார்.
ஜானவிக்கும் தூக்கிவாறி போட்டது.
அவள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை கூடபயின்ற தோழி தான் சங்கவி.
முகமலம்பியவள் தாயோடு செல்ல ஆரம்பித்தாள். மகேஸ்வரியோ வாளியை ஒரமாக வைத்து விட்டு மகளை அழைத்து கணவரிடம் கூறி சேர்ந்து புறப்பட்டனர்.
சிவகாசி பக்கத்திலிருக்கும் ஒர் கிராமம் அது. கிராமம் என்றாலே நல்லது பொல்லது என்றால் ஒன்று கூடிடுவார்கள்.
அதுவும் ஒரே தெரு என்றால் கேட்கவே வேண்டாம் அன்று முழுக்க பழகியதன் பொருட்டு சடலம் எடுக்கும் வரை வாசமிப்பது அங்கு தான்.
மகேஸ்வரி மற்றும் ஜானவி வந்து வாசலில் நுழையவும் சங்கவியின் தாய் ஆனந்தியோ, “எம்மாடி பார்த்தியா உன் கூட்டாளிய. இப்படியா முடிவெடுப்பா.
ஒரு வார்த்தை கல்யாணம் வேண்டாம்னா யோசித்து இருப்பேனே. இப்படி பாவி மக பொசுக்குனு வாழ்க்கையை முடிச்சிப்பானு கனா கண்டேனா. அய்யோ.. ஒத்த பிள்ளையா பெத்து நாங்களே பிள்ளைய சாகடிச்சிட்டோமே.’ என்று ஒப்பாரி வைத்தார்.
“என்னாச்சு அக்கா… நேத்து கூட பார்த்தேன் நல்லா தானே வாயாடிட்டு வம்பு இழுத்து சந்தோஷமா இருந்தா.” என்று கேட்க ஆனந்தி கதறுவதற்கும் புலம்பலுக்கும் வழிவிட்டது அக்கேள்வி.
“இந்தா… இந்த மனுஷன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேனு இவனை மாதிரியே ஒரு குடிகாரனை பார்த்து வச்சிருக்கான். சங்கவி நேத்து முழுக்க சொல்லுச்சு அப்பா எனக்கு இப்படி மாப்பிள்ளை வேண்டாம்னு. கேட்டுச்சா இது.
இந்த உலகத்துல எவன் நல்லவனா இருக்கான். ஏதோவொரு கெட்ட பழக்கம் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு. இல்லை கல்யாணம் ஆனப்பிறகு சொல்லி திருத்திக்கோனு நேத்தே பூவச்சிட்டு போக வச்சான். இந்தா.. இப்ப பொணமா இருக்கறது என் பிள்ளை தானே. எல்லாம் இந்தாளை சொல்லணும்.
கட்டிக்க போற பிள்ளைக்கு பிடிக்கணும். அது சொல்லறாப்பள மாப்பிள்ளையை பாரு. ஏதோ வேலை செய்து பொழப்பு நடத்தினா கூட பரவாயில்லை இந்த குடிபழக்கம் கொண்டவன் வேண்டானு தானே சொல்லிச்சு.
திட்டி முட்டி பூ வச்சி சம்மந்தம் பேசி. இப்ப என் மக இந்த முடிவெடுத்துட்டாளே…” என்று கணவன் முருகனை இத்தோடு கணக்கு வழக்கில்லாமல் திட்டி முடித்தாள் ஆனந்தி.
மகளின் வார்த்தையை விளையாட்டாய் தட்டிக்கழித்து தற்போது இறந்து போன சங்கவி காலை பிடித்து அழுது புலம்பியவரை வருவோர் போவோர் திட்டி முடிக்காது அகலவில்லை.
இதேயிடம் இன்று நானும் இருந்திருக்க வேண்டியது. என்னை தடுத்தது எது? சங்கவியை தடுக்காமல் விட்டது எது?
சங்கவிக்கு ஒரு குடிகாரனை மாப்பிள்ளையாக பார்த்தார் அவள் அப்பா முருகன். தனக்கு ஒயின்ஷாப் ஓனரை மாப்பிள்ளையாக பார்த்தார் தந்தை இளங்கோ.
இரண்டு தந்தைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. பணத்தின் தரத்தில் ஏற்றம் இறக்கம் மட்டும் இருந்தது.
தனக்கும் சங்கவிக்கும் வித்தியாசம் இல்லை. தானுமே நேற்று தற்கொலையை தேடி கிணற்று மதிலில் நின்றவள் தானே. ஆனால் எண்ணங்கள் சரியான நேரத்தில் தடுத்தது எது? என்று ஆராய்ந்தபடி சங்கவியின் உடலை கண்டு அழுது யோசனைக்குள் சென்றாள்.
அந்த நேரம் தான் முருகனின் அண்ணன் ‘அந்த’ வார்த்தையை உதிர்த்தார்.
என் தம்பியையே குறை சொல்லாதே தாயி. கல்யாணம் வேண்டாம்னா இந்த காலத்து பிள்ளைக்கு சொல்ல தெரியாது. எனக்கு சுடிதாரு தான் வேண்டும். தாவானி வேண்டாம்னு போன பண்டிகைக்கு எதிர்த்து நின்று பேசின சங்கவிக்கு தன்னோட வாழ்க்கையை பற்றி எதிர்த்து ஒரு குரல் உறுதியா சொல்லியிருக்கலாம்ல. அப்படி சொல்லியிருந்தா ஒரு முட்டுக்கட்டையோட என் தம்பி முடிப்பானா.
படிச்சிருந்தா இதான் வேண்டும்னு எத்தனை பிள்ளைகள் முரட்டு பிடிவாதம் பிடிக்குது. ஏன் நல்லதுக்கு பிடிவாதம் பிடிக்க உன்ற மகளுக்கு சொல்லித்தரணுமோ. சும்மா படிக்காத பிள்ளை ஏனோ தானோனு யோசிக்காம முடிவெடுத்ததற்கு என் தம்பியை குறை சொல்லாதே.” என்று அங்கே ஒர் வாக்குவாதம் ஆரம்பமானது.
‘படிச்சிருந்தா…’ இந்த வார்த்தை ஜானவி மனதில் ஏதோவொரு இடத்தில் வெளிச்சமூட்டியது.
தான் தந்தையிடம் திருமணத்தை வேண்டாமென கூறிக்கொண்டிருக்க அவர் கூறிய வார்த்தை “பொட்ட கழுதையை காலேஜில(இளங்கலை) போய் படிச்சிட்டு வந்து ஏகத்தாளமா பேசற. இதுல மேற்படிப்பு (முதுகலை) வேறயா.
நான் பார்த்த மாப்பிள்ளை ஒயின் ஷாப் ஓனரு. இந்த காலத்துல குபேரன் பணமா அதுல தான் அதிகமா கொட்டுது. இதுல அரசாங்கம் பார் வேற. பிறவுயென்ன உன் மகளை தங்கம் வைரம் போட்டு மினுக்கிட்டு ஊரை வலம் வரச்சொல்லு.” என்று இளங்கோ கூறியது.
அதை மீறி தான் ஜானவி முடிவாக, “நீ பார்க்கற அந்த ஒயின் ஷாப் ஆள் வந்தா கட்டிக்க மாட்டேன் பா. கல்யாணத்தப்ப மேடையில மாலையை விசிறியெறிவேன். செய்ய மாட்டேனு நினைக்காதே பா. பிடிக்கலைனு சொல்லிட்டேன். நீ வற்புறுத்தினா அப்படி தான் பண்ணுவேன். வேற மாப்பிள்ளையே இல்லையா உனக்கு. கௌரவமா சம்பாதிக்கறவங்க உன் கண்ணுலப்படலை. அதை மீறி பண்ணினா. நான் என்ன முடிவெடுப்பேனு எனக்கே தெரியாது.” என்று நேற்று இளங்கோவோடு தான் கத்திய வாதங்களை எண்ணி பார்த்தவள் ஆண்கள் இருக்கும் இடத்தில் தந்தையை நோக்க, அவருமே ஜானவியை தான் கண்டு தலை குனிந்தார்.
இளங்கோ மகேஸ்வரியை அழைத்து மகளை வீட்டுக்கு அழைத்து போக சொல்ல மகேஸ்வரி வந்து தனியாக அழைத்து “வீட்டுக்கு போகலாம்” என்றார்.
“என் பிரெண்ட் மா. காலேஜ்ல என்னோட படிக்கணும்னு ஆசைப்பட்டவள். அவளோட சூழ்நிலை காரணமா பத்தாவது படிச்சிட்டு பட்டாசுக்கு மருந்து சுத்த போயிட்டா. அவளை படிக்க வச்சிருந்தா என்னோட காலேஜிலும் சேர்ந்து தற்கொலையை பண்ணறதுக்கு முன்ன ஒரு முறை என்னைய மாதிரி யோசித்து இருப்பா. தற்கொலை பண்ணாம திரும்பி இருப்பா. படிக்கவும் விடலை. பிடிச்சமாதிரி மாப்பிள்ளையும் பார்க்கலை. விடுங்க… அவளை எடுக்கற வரை இங்க இருக்கேன்.” என்று தாயை மீறி சென்றாள்.
மகேஸ்வரிக்கு திக்கென்றானது. மகள் தற்கொலை பற்றி யோசித்தாளாயென்று.
மதியமே உடலை தகனம் செலுத்த ஏற்பாடு செய்து பூக்களின் வழிபாதையில் சங்கவியை கூட்டி சென்றனர்.
வீட்டிற்கு வந்து குளித்து முடித்து தலை விரித்து முழங்காலிட்டு தன் தோழியின் மரணத்தை மறக்க இயலாது தவித்தாள்.
என்ன முட்டாள் தனாமா முடிவெடுத்துட்டா. சுடிதாரு வேண்டும்னு அன்னிக்கு அடம்பிடிச்சி இருந்தவ மாப்பிள்ளை வேண்டாம்னு அடம் பிடிக்க என்னவாம். பேசற சமூகம் வெறும் பார்வையாளரா தானே இன்னிக்கு பார்த்துட்டு போனாங்க. இதே அவள் ஒரு முறை யோசித்து தற்கொலை செய்யாம இருந்தா என்னவாம்.’ என்று நேற்று தானும் அந்த நிகழ்வை நோக்கி சென்று திரும்பி வந்ததை உணராது திட்டினாள். என்ன திட்டி என்ன புரோஜனம். திரும்பி வர முடியுமா? என்று கோபமாக இருந்தாள்.
ரோட்டில் யாரோ ஒரு பெண் தலையிலடித்து “யோவ் எதுக்கு யா குடிச்சிட்டு விழுந்து கெடக்க. வீட்டுக்கு வாயா.” என்று அழும் சத்தம் கேட்டது.
இதை கண்ட ஜானவிக்கு கோபம் அதிகரித்தது. “இந்த ஒயின் ஷாப் கடையால எத்தனை பெண்களோட வாழ்வு போகுது. என்னவோ இவனுங்களை திருத்த நாம பிறந்தவங்க மாதிரி. ஆண்கள் குடிச்சா கூட பெண் அடங்கி போயி காலில் விழணும். எனக்கு வர்ற கோபத்துக்கு நெஞ்சுல நாளு மிதி மிதித்து கல்லை தூக்கி தலையில போட்டு சாகடிச்சிடுவேன்.
அப்படி அதிகமா சாவு வந்தா தெரியும் அவனவன் குடிக்க பயந்து வீட்ல ஒழுங்கா இருப்பான். அடங்கி ஒடுங்கி இருக்கணும்னு கட்டுப்பாட்டு போட்டே இவனுங்க தொல்லை தாங்க முடியலை. இதுல எவனும் நல்லவன் இல்லைனு உதாரணம் வேற. ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தா என்ன என்று நிலமை மாறி போய் இருக்கு.
இந்த லட்சணத்துல எனக்கு ஒயின் ஷாப் ஒனரு மாப்பிள்ளை.
நேத்தே என் வாழ்க்கையை முடிக்க போனேன். சின்னதா ஒரு யோசனை நான் ஏன் சாகணும்னு. நான் யோசித்தேன். சங்கவியும் படிச்சிருந்தா ஒரு முறை யோசித்து இருப்பா. படிக்கலைனா கூட தெளிவான முடிவெடுக்க திடமான ஒரு சப்போர்டா யாராவது இருக்கணும். எனக்கு யாருமில்லைனாலும் படிப்பு இருக்கு” என்று கத்த ஆரம்பித்தாள்.
“நாளைக்கு போறேன்.. இந்தவூர் கலெக்டருக்கு மனு கொடுக்க, ஒயின்ஷாப் எடுக்க சொல்லி. அதுவும் எனக்கு பார்த்தவனுக்கு எதிரா.” என்று நாற்காலியில் திடமாக உட்கார்ந்து பதில் உரைத்தாள்.
“கண்ணு… எதுவும் செய்யாதே. நீ நேற்று பேசியது மனசுல உரைக்கலை. ஆனா இன்னிக்கு நடந்ததும் நடக்கறதும் அப்பாவுக்கு புரியுது டா. நான் இனி அந்த ஒயின் ஷாப் ஆளை கட்டிக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்.
சங்கவி இடத்துல இன்னிக்கு நீ ஒர் கணம் வந்து போயிட்ட தாயி. நீ என் குலசாமி. ஏதோ வருமானம் அதிகமா வர்ற வியாபாரமாச்சேனு யோசிச்சேனே தவிர. மற்ற குடும்பத்தை யோசிக்கலை.
நீ சொன்ன மாதிரி எத்தனை பேர் வாழ்க்கையில சாபத்துல இந்த வியாபாரம் நடக்குது. அதனால திருமணத்தை நானே நிறுத்திடறேன். அதுவும் காரணத்தை கூறியே நிறுத்தறேன். நீ போய் தூங்கு ஆத்தா. நீ கேட்ட மாதிரி படி டா” என்றார் இளங்கோ.
ஜானவிக்கு இருக்கும் கோபத்தில் பாதி குறைந்தது.
மீதி கோபத்தை காட்ட மனு எழுதி கையெழுத்து வாங்கி, அந்தவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அடுத்த நாள் கிளம்பினாள்.
வராண்டாவில் கையில் மனுவை வைத்து அதே சீற்றத்துடன் இருந்தவளை ப்யூன் அழைக்க உள்ளே நுழைந்தாள்.
அலைபாயும் கேசம் கொண்டு கண்ணில் கூர்மையோடு விஸ்வா உட்கார கூறினான்.
“சார் எங்கவூரில் இருக்கற ஒயின் ஷாப் மூடணும். அதுக்கு பலரோட கையெழுத்து வாங்கி வந்துயிருக்கேன்.” என்று இன்னமும் குடிப்போதையால் தங்கள் ஊரில் எத்தனை அவலம் நேர்ந்ததை அடுக்கி கூறி மனுவை நீட்டினாள்.
விஸ்வா அதனை வாங்கி படித்து முடித்து, “விரைவில் இதுக்கு முடிவெடுக்கறேன் மிஸ் ஜானவி.” என்றான்.
“தேங்க்ஸ் சார்” என்று எழுந்தவள் “என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும். ஓ.. அதுல பெயரை பார்த்திங்களா?” என்றாள்.
“நோ நோ. நேற்று நைட் நீங்க உங்க வீட்ல தற்கொலை முயற்சி பண்ண கிணற்றுல ஏறினிங்களே. அப்பறம் திடீரென ஞானோதயம் வந்து இறங்கி வீட்டுக்கு போனிங்க. அப்ப பார்த்து என் பிரென்ட்கிட்ட கேட்டேன்.
அப்ப காரணமும் சொன்னான். என்னவோ இதே ஊருல டீச்சரா வேலை செய்வது கனவாமே. நைஸ்” என்றதும் திருதிருவென முழித்தாள்.
“என்ன வருங்காலத்து மேல கமபிளைன்.” என்றான் விஸ்வா. அதிலே எல்லாம் தெரிந்தவனாக இருக்க நக்கலாக பதில் தந்தாள்.
“ம்ம்… வருங்காலம் நிறைய பேரோட இறந்த காலமா மாற்றம் பண்ணறதால. நிகழ்காலத்துலயே சுதாரிக்க செய்துட்டேன். இனி வருங்காலமா அந்த ஒயின் ஷாப்பும் வேண்டாம் ஒயின் ஷாப் ஆளும் வேண்டாம்னு.” என்று துடுக்காக மொழிந்து செல்ல முற்பட்டாள்.
அவள் கூடவே வெளியே வந்து, “இது என்னோட பிரேக் டைம் அதனால பெர்சனல் பேசலாம். உங்க வருங்காலத்த என்னிடம் கொடுக்க முடியுமா. பத்திரமா இங்க வர்ற மனுக்கள் மாதிரி சேமித்து நடவடிக்கை எடுப்பேன். இது ஜஸ்ட் நேற்றும், இன்றும் உங்களை பார்த்த அபெக்ஷன் தான். ஆனா திருமணத்துல கொண்டு போக ஆசைப்படறேன். மனுவா கொடுக்காம நேரில் சொல்லிட்டேன். நிராகரிப்பதும் ஏற்பதும் ஜானவியென்ற டீச்சர் கையில தான் பதில்.” என்று கூற அதே நேரம் மகேஸ்வரி மூலமாக தனியாக இங்கு வந்த மகளின் வருகையறிந்து இளங்கோ வந்து கேட்டு முடித்தார்.
மகள் திருதிருவென முழிக்க விஸ்வாவை கண்டார்.
பிறகு “அப்பா” என்று ஜானவி இளங்கோ அருகே சென்று பதில் சொல்லா நிலையில் இருந்தாள்.
“இந்தவூருக்கு நீங்க வந்தப்பவே உங்க நல்ல குணம் கேள்விப்பட்டேன் தம்பி. இன்னிக்கு நீங்க மகளிடம் பேசியதில்… உங்க விருப்பம் புரியுது. எதுக்கோ மகளிடம் கேட்டுட்டு பதில் சொல்லறேன். ஒரு முறை கேட்காம முடிவெடுத்து என் மக கிணறு வரை ஏறியிருக்கா. ஆமா தம்பி நேற்று பெய்த மழையில என் மகளோட காலடி தடம் இருந்தது. அதனால எந்த முடிவும் அவளோட கலந்தாலோசித்து தான் இனி எடுக்கப்போறேன். ஏன்னா இது அவ வாழ்க்கை. நிச்சயம் நான் முன்ன பார்த்தது மாதிரி மறுப்பு தெரிவிக்க மாட்டானு நம்பறேன்.” என்றதும் ஜானவி தந்தையறியாது சின்னதாய் வெட்கம் படரவிட வணக்கம் வைத்து திரும்பினார்கள்.
குழந்தைகள் வந்ததும் அவர்களை கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.
குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.
மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.
குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.
உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் “என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா” என்பார்.
“என்னப்பா… எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி மவுஸ் தான் அந்த பொம்மை எங்க?” என்று அசோஷியேட் ஆள் ஒருவன் கேட்டான்.
முகமூடி அணிந்த சக பொம்மை உடை அணிந்தவனோ, “சார் மிக்கி மவுஸ் பொம்மையோட மூக்கு பகுதி லைட்டா நூல் விட்டு இருக்கு. அதனால அதை அவசரமா ஸ்ட்ரிச் பண்ணிட்டு இருக்கான் துரை.” என்று பவ்யமாய் கூறினான் குப்ஃபி(goofy) உடை அணிந்தவன்.
“இதெல்லாம் முன்னவே பார்த்து வரமாட்டிங்களா. கொஞ்சம் சீக்கிரம் வரச்சொல்லுப்பா” என்று ‘பப்பே’ சிஸ்டம் சரியாய் இருக்கின்றதா என்று பார்க்க சென்றார்.
“இங்க ஏசியென்றதால் கொஞ்சம் பரவாயில்லை. இல்லை தைக்கறதுக்குள்ள ஒரு வழியாகியிருப்பேன்” என்று கூறவும் லோகு சிரித்தபடி கைப்போட்டு வந்தனர்.
மிக்கி(micky) அண்ட்(and) குப்ஃபி(goofy) தோளில் கை போட்டு வர குழந்தைகள் ஆசையாய் ஆர்வமாய் ஓடி வந்தார்கள்.
பல போட்டோக்கள் பல குழந்தைகள் என்று நேரம் ஓடியது. அதுவும் மிக்கி அண்ட் மினி என்று சேர்ந்து எடுக்க உள்ளுக்குள் இருக்கும் இரு ஆண்களுக்குமே சிரிப்பு தான். புதிதாக ஸ்மர்பட், டிஸப்பிள் பீ, ப்யூட்டி கேர்ள் சிண்ட்ரெல்லா என்று இருக்க அவர்களை சுற்றி பெண் குழந்தைகள் கூட்டம் அலை மோதியது.
வருவோர் அனைவரையும் கை குலுக்கி, கட்டி அணைத்து, புகைப்படம் எடுத்து என்று பெரியவர்களுமே மகிழ்ந்தார்கள். உடனுக்குடன் முகநூலில் ஸ்டேடஸ் என்றும் வைத்து முடித்தனர்.
துரைக்கும் லோகுவுக்கும் உள்ள அழுவறேன் வெளியே சிரிக்கறேன் என்பதாக உள்ளே வேகுது வெளிய சிரிக்கிறேன்னு என்று பாடுவதாய் தோன்றும்.
சீப் கெஸ்ட் வந்ததும் குழுந்தைகள் போட்டிகளுக்கு சென்று குழுமினார்கள்.
அதனால் பொம்மை ஆடை அணிந்த மனிதர்களுக்கு கொஞ்ச நேரம் கிடைக்க துரையோ அவசரமாய் இயற்கை உபாதை செல்ல நேரம் பார்த்தான்.
லோகுவோடு கூறிவிட்டு உடையை கழட்டி கொடுத்து சென்றான்.
இடைப்பட்ட நேரத்திலும் மிக்கியை தேடி வந்து ஏமாற்றம் அடைந்தனர் சிலர்.
அதே நேரம் சீப் கெஸ்டாக வந்தவரின் பையனுக்கு இயற்கை உபாதை வர பாத்ரூம் அழைத்து வந்தனர்.
“கனிஷ் தனியா போயிடுவியா” என்று அவன் அப்பா பரதன் டிவி புகழ் பெற்ற குழந்தை சீரியலில் வருபவர். அவரோ கனீஷை பாத்ரூம் அனுப்பி விட்டு போனில் பேச சென்றார்.
குழந்தைக்கு பாத்ரூம் சென்று விட்டு சற்று நேரம் ஆகவும் உள்ளே வந்தார் கனிஷ் தந்தை பரதன்.
அந்த நேரம் துரை குழந்தைக்கு பேண்ட் ஜிப்பை போட்டு விட்டு கொண்டிருந்தான்.
“ஏய் ஏய். குழந்தையை என்ன பண்ணற?” என்று அவசரமாக பரதன் வந்தான்.
“சார் சார் பயப்படாதிங்க. குழந்தை பாத்ரூம் போயிட்டு பேண்ட் ஜிப் போட முயற்சி பண்ணினான். போட முடியலை. ரொம்ப நேரம் திணறவும் போட்டு விட்டேன்” என்றான் துரை.
“ஏய் சீ கையை எடு. யார் நீ இங்க என்ன பண்ணற. டாய்லேட் க்ளீன் பண்ணறவனா?” என்று பேச துரைக்கு அசிங்கமாகி போனது.
பலரும் தன்னிடம் போட்டோ எடுக்க ஆவலாய் வெளியே காத்திருக்கின்றார்கள். என்ன அந்த உயிரற்ற பொம்மை உடையை அணிந்தால் மட்டுமே. மற்ற நேரம் ஏன் தன்னை ஒரு விதமாக பார்த்து முகம் சுழிக்கின்றனரோ. தான் அணிந்த உடை மிக்கி மவுஸாக இருக்க, நேரில் பார்க்க வெள்ளிதிரை புகழ் யோகி ராமு போல காட்சி தரும் தன்னை கண்டு அப்படி தான் ஒதுங்குகின்றனரோ? என்று வலித்தது.
எதுவும் பேசாமல் அமைதியாய் வெளியேறி தனது மிக்கி மவுஸ் ஆடையை உடுத்தி கொண்டு முகமாஸ்கை அணிந்தான்.
அவன் அழுகின்றானா, வேதனைபடுகின்றானா, என்பது அந்த பொம்மை கவசத்துக்கு மட்டுமே தெரியும்.
லோகுவோடு சேர்ந்து மற்ற பொம்மை உடையணிந்த மனிதரோடு சேர்ந்து விட மீண்டும் குழந்தையோடும் புகைப்படமாகவும் நேரம் ஓடியது.
சில பெண்கள் தோளில் கைப்போட்டு போட்டோ எடுக்க வானத்தில் ஜிவ்வென்றும் பறந்தார்கள். துரைக்கு தெரியும் பொம்மை முகமூடியை எடுத்தால் இவர்களும் கழுத்து சங்கிலி பறிப்பவனாக தங்களை பார்ப்பார்கள் என்று. அவனுக்கு உலக மக்களை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
போட்டி முடிவு அறிவித்து விட்டு சாப்பிட சென்று திரும்புகையில், சீப் கெஸ்ட் பாதை கடந்து செல்ல கனிஷ் தந்தை பரதனிடம் “டேடி டேடி கார்டூன் மனிதரிடம் போட்டோ எடுக்கணும்” என்று கொஞ்சி கெஞ்ச பரதன் போட்டோ எடுக்க சென்றான்.
“டேய் அப்பாவோட போட்டோ எடுக்க அத்தனை பேர் இருக்காங்க நீ என்ன..” என்றாலும் பரதனுக்கும் ஆசையிருந்தது.
கனீஷை அழைத்து சென்று “ஹாய்” என்று கூற மாற்றி மாற்றி பொம்மை உடை அணிந்த மனிதர்கள் கையை குலுக்கினான்.
பரதனும் கை குலுக்கி அனைவரோடு மகனும் தானும் போட்டோ எடுக்க ப்ரியப்படுவதாக கூறினான்.
அதே போல எடுத்தனர். அந்நேரம் கனிஷை பரதன் கைவளைவில் தூக்கி வைத்தார். அக்கணம் கனிஷால் பரதனின் பேனா கீழே விழுந்ததை பரதன் கவனிக்கவில்லை.
போட்டோ எடுத்து சாப்பிட கிளம்பும் நேரம் “சார் சார்.” என்று துரை அழைக்க அவன் குரல் பரதன் செவியை எட்டாமல் போகவும், மிக்கியின் முகமாஸ்கை தலை வழியாய் கழட்டி அழைத்தான்.
பரதன் நின்று திரும்பினான் கொஞ்சம் அதிர்ந்தான்.
“சார் உங்க பேனாவை மிஸ் பண்ணிட்டிங்க” என்று பாத்ரூமில் பரதன் திட்டிய அதே நபர்.
பரதன் தயங்கி அங்கேயே நிற்க லோகுவோ “டேய் நீ போய் கொடு டா” என்று ஊக்கினான்.
“என்ன சார். ரியல் பேஸை பார்த்ததும் இவனோடலாம் போட்டோவா என்று ஜர்க் ஆகிட்டிங்களா. நான் முகமூடியை கழட்டாம தான் கொடுக்க பார்த்தேன். ஆனா உங்களுக்கு கேட்கலை. அதனால கழட்ட வேண்டியதா போச்சு. சாரி சார்” என்றதும் பரதன் சூழ்நிலை உணர்ந்து பேச முயன்றான்.
“சாரி தம்பி அது திடீரென பையனோட கொஞ்சம் பார்க்க பயமுறுத்தற மாதிரி நீ இருந்ததும் அப்படி பேசிட்டேன்.” என்று பரதன் பேசிட, “பரவாயில்லை சார் நீங்களாவது உடனே சாரி கேட்கறிங்க. சிலர் அப்பவும் அலட்சியமா தான் பார்ப்பாங்க.
எங்களுக்கு என்ன ஆசையா சார். முகத்தை யோகி ராமு மாதிரி இருக்க? அதுவா தாய் தகப்பனால அமையுது. அதை மாத்தி வைக்க முடியுமா. அப்பா அம்மா மாதிரி அமைவது வரம் சார்.
இப்ப உதாரணம் சொன்னேனே யோகி ராமு சார் அவர் கூட முன்ன இப்படி பீல் பண்ணிருக்கலாம். ஆனா இப்ப காமெடி படத்துலயும் காமெடி ரோலுலையும் அவர் தான் டாப்பு சார். அவர் கூட எங்களை மாதிரி பீல் பண்ணியதா ஒரு பேட்டில சொல்லிருக்கார். அதெல்லாம் எங்களுக்கு ஒரு அனுபவ பாடம் சார். ஒரு நாள் அது மாதிரி ஏதாவது வாய்ப்பு வரும். அப்படியே வரலைனா கூட தினசரி என்னோட நின்னு போட்டோ எடுக்கற குழந்தைகளோட மகிழ்ச்சி தான் எங்களுக்கு அவார்டு.
உள்ள புழுக்கமா இருக்கும். எங்கயாவது எரும்பு கடிச்ச மாதிரி வலிக்கும், சொறியணும்னு தோணும். ஆனா எதையும் செய்ய முடியாது. ஆனா சின்னதா கைகாலை ஆட்டி கை குலுக்கினா குழந்தைகள் முகமும் பார்க்கற உங்களை போன்றோரும் ஒரு ஆனந்தம் அடைவீங்களே அதுல இருக்கு சார் எங்க வாழ்க்கை.” என்றான்.
பரதனை பரிசு கொடுக்க அழைக்க பரதன் துரையை பார்த்தவாறே மேடைக்கு சென்றான்.
பரிசு கொடுத்து முடித்து, நன்றியுரை ஆற்றி காரில் ஏற, சென்ற கணம் மீண்டும் பொம்மை உடையணிந்த மனிதருக்கு கனீஷ் கையசைத்து மகிழ்ந்தான். “டேடி எனக்கு மிக்கிமவுஸை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்.
“எனக்குமே” என்ற பரதனின் பேச்சில் அவன் மனம் துரையின் மனமா அல்லது மற்றவரின் காட்சிக்கு மகிழ்ச்சி தரும் பொம்மை முகமா? என்று ஆராயவில்லை. இரண்டுமே என்றது.
ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, “அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை.” என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.
“ப்ரியா” என்ற அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க, “என் போன்” என்றதும் அதை கொடுக்க சென்றாள்.
அந்த நேரம் ரகி விழி திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது ஷாக்ஸ் அணிந்த காலில் மெல்ல நடந்து வந்தாள்.
அந்த இடத்தில் யாருமே இல்லை என்பதை அறிந்து தன்னை பூட்டி வைத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.
ஜன்னல் வழியே பகலவன் கதிர்கள் ஒளியை தர இதுவரை ஒளியை காணாத அவள் கண்கள் கூசியது.
ஒவ்வொர் அடியாக எடுத்து வைத்தாள் அவளின் நடை எந்திரம் போல மெதுவாக இருந்தது.
கண்கள் நாலப்பக்கமும் தூழாவியது. இங்கே தன்னை தவிர யாருமில்லையென்ற எண்ணம் எழுவும், குளிர்சாதன பெட்டியில் கை சென்றது. அங்கே அந்த நீரும் இருந்தது.
கண்ணாடியில் குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்து முடித்தாள்.
இது சாதரண நீர் அல்ல. நீரை போலவே நிறமற்றது. சற்றே துவர்ப்பு கலந்த சுவையாக இருந்தது.
இதுவரை அந்த சுவை சுவைத்திருக்காத ரகி அதன் பின் மீண்டும் யாருமில்லையென்றதும் தன்னை பாதுகாப்பாக வைத்திருந்த அறைக்கே சென்றாள். அங்கே தான் ரெட் என்ற அவளின் எந்திரமும் இருந்தது.
இம்முறை ரகி எழவில்லை. ஆனால் காதில் அனைத்தையும் பதிவு செய்யும் அவள் ப்ரியா போனில் பேசியதை கேட்டப்படி விழி மூடினாள்.
“அந்த தண்ணீர் ரகிக்கு கொஞ்சமா கொடு. அவளுக்கு ஒத்துக் கொண்டால் நல்லது.” என்ற குரல் கேட்டது. ப்ரியா ஸ்பீக்கரில் போட்டு இருந்து தனது புத்தகத்தை எடுத்து வைத்தாள். மேலும் விஜய் “பார்த்து ப்ரியா ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எட்டி வை. விளைவு தெரியும் தானே. போன முறை ஜீவிக்கு கொடுத்து என்னாச்சு தெரியும்ல அளவுக்கு அதிகமா வளர்ந்து…” என்றவனின் பேச்சை இடைவெட்டினாள் ப்ரியா.
“அய்யா அறிவுஜீவி எனக்கும் தெரியும் நானும் பட்டுட்டேன். உங்களை மாதிரி பாடம் கற்றுக்கிட்டேன்.” என்று ப்ரியா கூறவும் விஜய் அணைத்து இருந்தான்.
ரகி படுத்திருந்தவள் அந்த கண்ணாடியில் இருந்தவை முழுவதும் குடிச்சிட்டேன். அப்போ எனக்கு என்னாகும். அளவுக்கு அதிகமா வளர்ந்திடுவேனா? என்றவளின் சிந்தனையில் சிறுமூளை பெருமூளையிடம் விசாரணைக்கு சென்றது.
அவள் உடலில் மாற்றம் பெற எழுந்தாள். அவள் எழுந்ததை அவளறிவாளா? அது நேரம் கடக்க அறிவாளோ?
தன் கைகள் நீண்டு கொண்டிருக்க, கால்கள் அதுப்போலவே தடிக்க, உயரமானாள்.
சுவர் தலையில் இடிக்க நேரிடும் என்பதை அறிந்தவள் வேகமாக வெளியே ஓடினாள்.
ரகி மாடிக்கு விரைந்தாள் அங்கே பக்கத்து பக்கத்தில் கட்டிடங்கள் நெருங்கி இருக்கவும் தன் வளர்ச்சியை அதனோடு ஒப்பிட்டு பார்த்தாள்.
அச்சோ… நான் இத்தனை உயரம் வளர்ந்துவிட்டேன். எனக்கு என்ன ஆனது?
சுற்றிமுற்றி பார்த்தாள் ரகி. யாரும் தன்னை விசித்திரமாக பார்க்கவில்லை. தன்னை கண்டு அஞ்சவும் இல்லை. ஏதோ புத்துணர்வும் விளையாடும் மனமும் எட்டி பார்த்தது.
படியில் தாண்டுவதை போல மாடியில் இருந்து ரோட்டில் கால் பதித்தாள்.
அவள் கால் தடம் வைத்தயிடத்தில் மனிதர்கள் எறும்பு போல இருந்தார்கள். அவர்களை மிதிக்கவில்லை என்றதும் அந்த மானிடன் நன்றி கூறி சிரிக்க, ரகியுமே இணைந்து சிரித்தாள்.
இந்த அனுபவம் விசித்திரமாக இருந்நது. சில நாட்கள் முன் ஜீவி போட்டு பார்த்த திரைப்படத்தில் வந்தது போல தான் வளர்ந்துவிட்டோமே என்ற துள்ளல் மகிழ்ச்சி ரகியிடம் அதிகமாகவே இருந்தது.
துள்ளி குதிக்க எண்ணினாள். நான்கு தெரு சந்திக்கும் ரோட்டில் நின்றவள் குதிக்க, தூரத்தில் அவளுக்கு பிடித்த, ஒயிட் நூடுல்ஸ் விற்றுக் கொண்டிருந்தது.
அதனால் அந்தப்பக்கம் நடந்து சென்றாள். இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த ஸ்டீட்புட் வந்தடைந்தவள் அங்கே நின்று குனிந்து கையை நீட்ட, தானாக அந்த கடைக்காரர் தட்டில் வைத்து கொடுத்தார். ரகியின் கையில் சீரகமிட்டாய் அளவு ஒயிட் நூடுல்ஸ் தெரியவும் அதனை ஒரே வாயில் போட்டாள்.
ஒர் பாத்திரத்தில் இருந்தவையை அப்படியே போட்டு நீட்ட இம்முறை அது அனைத்தும் ரகியின் வயிற்றில் விழுந்தது.
தனது உயரத்திற்கு இன்னமும் பல இடங்கள் அவளை கட்டி இழுத்தது.
அவளும் தூரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சென்றாள்.
இம்முறை ரோட்டில் அவ்வளவு எளிதாக நடைபயில இயலவில்லை. எங்கு திரும்பினும் கூட்டம். கால்களை பார்த்து பார்த்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள். கீழே மனிதர்கள் “ரகி… ரகி…” என்று அலறுவது எங்கோ கேட்பதாகப்பட்டது.
தன்னருகே இருக்கும் உயரமான கட்டிடத்தினை தொட்டு பிடித்துக் கொண்டே சென்றாள்.
அவள் எங்கு செல்கின்றாளென அவளே அறியவில்லை. பாதை கிடைக்கும் பக்கம் காலடி வைத்தாள்.
அதுவே தானாக ஒர் மாற்று பாதையை காட்டியது. நின்று பார்த்தவள் மனம் குத்தாட்டம் போட்டது. எதிரே கடற்கரை, சில்லென்ற காற்று, மனிதர்கள் ஒரளவு கூட்டமின்றி நடக்க எளிதானது.
தன்னிரு கையை தன் பாக்கெட்டில் வைத்து, ஸ்டைலாக நடந்தாள். அவளுக்கு இப்படி மண்ணில் காலை புதைத்து மணல் பறக்க விளையாடி மகிழ பிடித்திருந்தது. “இதே ஜீவி இப்படியல்ல” என்ற குரல் மீண்டும் கேட்டது.
ஜீவி பிடிக்காத பெயர் எனக்கு முன் உருவாக்கம் பெற்றவள். அதனாலே ஒப்பிட்டு பார்த்து கடுப்பாக்குவாள் ப்ரியா.
இன்று ஜீவியில்லை. நான் மட்டுமே… எனது உயரம் ஜீவியை விட அதிகம். ஜீவியை விட பலம். அடுத்த முறை ஜீவியோடு தன் உயரத்தை ஒப்பிட்டு வேண்டும்.
விஜய் கூறுவது போல ரகி சற்றே புது கம்பியூட்டர் தான். அனைத்தையும் அழிக்காமல் பதிவு செய்து சரியான நேரத்திற்கு வாதிடும்.
பிழையை சரிச்செய்ய இயலாது புது அப்டேட்டாக மாற்றிடும். நாம் தான் அவளின் அப்டேட்டிற்கு வளைந்து செல்ல வேண்டும்.
ரகி ஆட்சி செய்ய ஆரம்பித்தாள். ப்ரியாவுக்கு எப்பொழுதும் திட்டு உண்டு ஜீவியை கடுப்பாக்குவார்கள்.
மணலில் விளையாடிய ரகி நினைவுகள் எதிரே இருந்த ஐஸ்க்ரிம் கடையை குறி வைத்தது.
இம்முறை “ஐஸ்க்ரிம்” என்று ரகி ஓட, “ரகி எழுந்திரு. ஐஸ்க்ரிம் எல்லாம் நோ. இங்க மேஜிக் வாட்டர் இருக்கு. குடி.” என்ற குரல் அதள பாதாளத்தில் கேட்டது.
தன் காதில் கேட்ட குரலை புறம்தள்ளி மணலில் பெரிய வீட்டை கட்டி முடிக்க விரும்பினாள். கையில் தூழாவி ஈரமணலை எடுத்து கட்டி முடிக்கவும் சிற்சில நீரால் கரைந்தது. கோபம் கொண்டு எழுந்து நிற்க ப்ரியா அங்கே சிலை போல காட்சியளித்தாள்.
நாம சிலையை இல்லை கட்டி பிடிச்சோம் இது என்ன ப்ரியா நிற்குது என்றே ரகி யோசிக்க, ரகி கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாக மாறியிருந்தாள். அந்த இடமோ கடற்கரையாக இல்லாமல் அவளின் படுக்கும் அறையாக காட்சியளித்தது.
“எத்தனை முறை ரகி எழுப்பறது. ஜீவி எல்லாம் எழுந்து குளிச்சிட்டு ஆன்லைன் பத்து மணி கிளாஸ்க்கு தயாராகிட்டா.. நீ ஒன்பதரைக்கு கிளாஸை வைச்சிட்டு ஒன்பது மணி வரை தூங்கிட்டு இருக்க. எழுந்திரு…” என்று அரற்றினாள்.
கண்களை இன்னமும் கசக்கிக்கொண்டு “அம்மா… அப்போ நான் வளரவில்லையா..?” என்று ரகி கேட்டாள்.
“ரகி பாப்பா தான் அக்காவோட பாதி உயரத்துக்கு வளர்ந்துட்டு இருக்காளே.” என்று ப்ரியா கூறினாள்.
“இல்லை மா. நான் பில்டிங் உயரத்துக்கு. எனக்கு பெர்த்டேவுக்கு ஒரு கடையில பொம்மை வாங்கினியே அந்த கடை அளவுக்கு வளர்ந்தேன். அன்னிக்கு ஈவினிங் பீச் கூட்பிட்டு போனியே அங்க போனேன்.” என்று கனவை நினைவுப்படுத்தி விவரித்தாள்.
“இந்த படத்தை பார்த்து அடுத்த நாள் கனவு கண்டு ஏன் டி இப்படி பண்ணற…
நேற்று முன்ன பேய் படம் பார்த்து பேய் வந்துச்சுனு சொன்ன.
அதுக்கு முன்ன டாய் ஸ்டோரி பார்த்து என் பொம்மை என் கூட பேசிச்சு சொன்ன.
அதுக்கு முன்ன நைட்டு போன்ல டோரா கார்டூன் பார்த்துட்டே தூங்கி டோரா வீட்டுக்கு மலை கடல் காடு தாண்டி போனேன் சொன்ன. இப்ப ‘ஹனி ஐ பிளோ அப் த கிட்ஸா’…?” என்று எழுப்பியபடி குளிப்பாட்டினாள்.
“ம்மா… ப்ரிட்ஜில இருந்த மேஜிக் வாட்டரை குடிச்சிட்டேன். நான் பிக்கா வளர்ந்தேன்.” என்று முகம் தேய்க்க விடாது திருப்பி கொண்டாள் ரகி.
“என்னது மேஜிக் வாட்டரா…? அது இளநீர் டி. உனக்கு இளநீர் சொன்னா குடிக்க மாட்டனு அப்பா மேஜிக் வாட்டருனு சொன்னா நீ குடிக்கிறனு அப்படி சொன்னது.”
“இல்ல அது மேஜிக் வாட்டர். நான் குடிச்சி பிக்கா வளர்ந்தேன்.” என்று இருந்த நீரை மக்கில் எடுத்து ப்ரியா மீது தெளித்தாள்.
“ரகி நான் குளிச்சிட்டேன் டி. என் மேல தண்ணீர் ஊத்தாத.” என்று ப்ரியா அதட்டவும்
“அப்போ ஒத்துக்கோ… அது மேஜிக் வாட்டர். நான் வளர்ந்தேன். அக்காவை விட, உன்னைவிட, அப்பாவை விட, அந்த பில்டிங் விட பிக்கா.” என்று கூறி ஆமோதிக்க வைக்க,
“சரி நீ வளர்ந்த.. பிக்கா… அந்த ஸ்கை இடிக்கிற அளவுக்கு போதுமா.” என்று சம்மதித்து விட்டாள்.
‘உன்னை சொல்லக் கூடாது உங்கப்பாவை சொல்லணும். எப்பபாரு படத்தை பார்த்து அடுத்த நாள் அந்த கேரக்டரை வைத்து உன்னை உசுப்பேத்தி விடறதுக்கு.’ என்று முனங்கியபடி ஆன்லைன் வகுப்புக்கு அமர வைத்தாள்.
தொடுத்திரையில் ஆன்லைன் வகுப்பு ஆரம்பிக்கவும், மேம் நான் மேஜிக் வாட்டர் குடிச்சி பிக்கா வளர்ந்தேன். உங்களுக்கு தெரியுமா.?” என்று ஆன்லைன் வகுப்பில் ரகி கதை அளந்து கொண்டிருந்தாள்.
போச்சு கூட பதினெந்து பிள்ளைகள் அங்க கிளாஸ்ல இருக்கும். எல்லாம் குழம்பிட்டு சுத்துமே… என்றபடி ”மேம் அவ ட்ரீம்ல வந்ததை பேசறா.. டோண்ட் மிஸ்டேக்” என்று கூறவும் யா ரகி அம்மா ஐ அன்டர்ஸ்டேண்ட்” என்றதும் என்னை போல் ஒருவள் என்று சிரித்து கொண்டேன்.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
hi யாருக்கெல்லாம் இன்றைக்கு ஒரு படம் பார்த்தா அதுல வர்ற கேரக்டரை ஒரு வாரம் மனசுலயே தங்கி அவங்க மாதிரியே ரியாக்ட் பண்ணற பழக்கம் இருக்கு…. என் மகளுக்கு இருக்கு. தெறி படம் அப்பா மகள் அவங்களா கேரக்டரை பிரிச்சுப்பாங்க. டெடி படம்னா ஆர்யா தான் அப்பா டெடி தான் நானு இப்படி என் மக அவளா பிரித்து பா. நாம கூட நாவல் படிச்சா சில நேரம் அந்த நாயகி கதாபாத்திரம் நாமளா எண்ணிப்போம். இது ஒரு வகை. பட் பீலிங் சம்திங் நல்லா இருக்கும். இது எழுதி ஒரு மாதம் மேல ஆகுது. ஆனா கவர் பிக் கொடுக்க மாட்டேனு ஒரே அலப்பறை. காபி ரைட்ஸ் வேண்டுமாம். நான் பெற்ற மகள் நான் கட்டிக்க கணவர். போட்டோ தர மாட்டறாங்களே… நான் அந்த சைட்ல இருந்து சுட்டுட்டேன். 😌 போட்டோவில இருப்பது என் பெரிய பொண்ணு. இப்ப வளர்ந்துட்டா. பட் சின்ன பொண்ணோட சேட்டைக்கு இந்த பிக் மேட்ச் ஆச்சு. அதான் சிறுகதையா போட்டுட்டேன்.
இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளை மருத்துவமனை அனுப்ப முடிவு செய்தது. அவளுக்கென யாரும் வரவில்லை என்றதும் கவலையிருக்க தான் செய்தன. இருந்தாலும் இந்த இரு பெரிய பேருந்துகள் மோதி நிறைய பேர் இறந்து இருக்க, அவள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான். என்ன நினைவு ஆற்றல் தான் சுத்தமாக இல்லை.
சரி போனால் போகட்டும் என்று தான் அவளும் கிளம்பினாள். மனதில் சிறு பாரத்துடன். அப்பொழுது தான் ஒரு பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து தாய் இறந்து விட, அக்குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில் ஆசிரமம் அனுப்ப எண்ணினர் அமருத்துவ நிர்வாகம்.
உடனே நினைவு இழந்த அவள் எனக்கு இந்த குழந்தை தாருங்கள் நல்ல முறையில் வளர்க்கிறேன். இங்கேயே ஒரு சின்ன வேலை கொடுத்தால் கூட போதும் என்றாள்.
மருத்துவ பெண் என்ன நினைத்தாளோ சரி என இசைத்திட, நினைவு இழந்த அவள் அக்குழந்தையின் தளிர் கரத்தில் முத்தமிட்டு எனக்கு ‘உறவாக வந்தவள் நீ’ என்று கொஞ்சினாள். அது அவளை பார்த்து அழகா சிரித்தது.
இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது.
“ஏன்டி… கோழியை அடைச்சி வச்சியா… மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு… இந்த பூவை பறிச்சி சாமிக்கு போட்டியா இல்லையா? ” என்று வெத்தலையை இடித்துக் கொண்டு கிழவி கருப்பாயி விடாது கேள்வி கேட்டு முடித்தார்.
“வச்சாச்சி போய் திண்ணையை இடிக்காம உள்ள போய் உட்காரு ஆத்தா.
எப்ப பாரு… வெத்தலையை இடிச்சிட்டு அதை செய்தியா இதை செய்தியானு தொன தொனனு.” சலித்தவாறு தோட்டத்தில் வைத்திருந்த நீரில் முகம் அலம்பி தன் வாழைத்தண்டு காலில் நனைத்து விளக்கேற்ற சென்றாள் நீலா.
திண்ணையில் அமர்ந்து கண்கள் சுருக்கி நீண்ட நேரம் கம்பு தோசையை உண்டு விட்டு நீரை பருகி முடித்தாள்.
“நீலா…. இந்த தட்டை கொண்டு போடி” என்று கத்தவும் நீலா இடையில் கையை வைத்து நின்றாள்.
“கிழவி… நீ நீலா…லா இழுக்கறதுலயே என் பெயர் பெரிசானு எனக்கே சந்தேகம் வருது இத்துனுன்டு பெயர் நீலா கூப்பிட என்னவாம். இழுக்கற… ” என்று தட்டை எடுத்து கொண்டை தோட்டம் பக்கம் சென்றாள்.
நெடுநேரம் வரவேயில்லை. அரவம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
“அங்க என்ன குசுகுசுனு…” என்று கேட்ட அடுத்த நொடி
“பாம்பு சத்தம் கிளவி.” என்று தட்டை கழுவி ஈரத்தோடு வந்து நின்றாள்.
சற்று நேரம் கழியவும் ”ஏலேய் அங்க கோழி அதிகமா கத்துது. பாம்பு வந்திகிடக்கிறப்பள தெரியுது விரசா வந்து என்னானு பாரு” என்றதும் நீலாவின் தந்தை மற்றும் சிலர் கம்பு டார்ச் லைட் எடுத்து கொண்டு தேடுதலில் புறப்பட்டனர்.
இங்கு நீலாவோ கையை பிசைந்தபடி, கிழவி ஊரையே கூட்டிடுச்சு. அவன் மாட்டப்போறான்.” என்று பயந்து வெளிறினாள்.
ஆனால் இவள் பயந்ததற்கு பதிலாக எல்லோரும் சேர்ந்து விஷம் கொண்ட நாகத்தை அடித்து கம்பில் சுற்றியபடி வந்துக் கொண்டிருந்தனர்.
பாம்பை கம்பில் சுற்றி வந்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.
நீலாவை கடக்கும் பொழுது கண் சிமிட்டி செல்லவும், அவளால் வெட்கம் கொள்ள இயலவில்லை. பாம்பை கண்டு பயந்திருந்தாள்.
அனைவரும் அதனை ஊருக்கு அந்தப்பக்கம் தள்ளி வைத்து கொளுத்தி கொண்டிருந்தனர்.
“இங்க பாரு டி. சும்மா கிணற்று பக்கம் தோட்டத்துபக்கம்னு காதல் கிளிகளா சுத்த கூடாது. உங்கப்பனிடம் நாளைக்கு அந்த பையனை பற்றி சொல்லி வைக்கிறேன். கட்டிக்கிறியானு கேட்டா உங்க இஷ்டம்பா என்று தலையை ஆட்டி வை.” என்று கருப்பாயி கூறி முடித்தாள்.
“கிழவி… அது வந்து…” என்று தயங்கினாள்.
“போதும் டி அந்த ஸ் ஸ் அரவம் அப்பவே கேட்டுச்சு. அவனிடம் பேசினா என் காதுல விழும்னு நீ போட்ட சத்தம். போ.. உன் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு தான் கண்ணை மூடுவேன்” என்று கூறவும் கருப்பாயியை கட்டி முடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் நீலா.
சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, “ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?” என்று கேட்டே விட்டார்.
சுனிலிற்கு ‘போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு ஆடுவாளே. நான் வேற பங்ஷனுக்கு வரலைனு சொல்லிட்டேன். அதுக்கும் சேர்த்து சண்டைக்கு போவா’ என்று முனங்கினான். அவன் முனங்கி முடிக்கும் முன் யமுனா ஆரம்பித்தாள்.
”இங்க பாருங்க அத்த. உடை என்பது நமக்கு எது கம்பர்டெபிளோ அதை தான் உடுத்தணும். என்ன பார்க்கறவங்க என்னை பார்த்து முகம் சுளிக்காத வகையில இருந்தா போதும்.
உங்க பையன் கடைசி நிமிஷத்துல எனக்கு மீட்டிங் இருக்கு. வரமுடியாது பொண்ணை நீயே கூட்டிட்டு போனு சொல்லிட்டார். எனக்கு ஸ்கூட்டில இதான் கம்பர்டெபிள். இப்படி தான் உடுத்துவேன்.” என்று பொட்டிலடித்தாற் போல கூறி முடித்தாள்.
பாக்கியம் சத்தமேயில்லாமல் “என்னய்யா இது நீ போகலையா. குழந்தை ஆசையா டான்ஸ் ஆடுது. பார்க்கலைனா எப்படி?” என்று கேட்டார்.
“அம்மா இன்னிக்கு சடனா மீட்டிங் போட்டுட்டாங்க. எங்க டீம் செய்த பிராஜக்டை நான் தான் கணினிதிரையில எக்ஸ்பிளைன் பண்ணணும். என்னோட டிக்கெட்ல நீ வேண்டுமின்னா யமுனா கூட போ மா. ஒரு குழந்தைக்கு இரண்டு டிக்கெட் தான்” என்று அன்னையிடம் திணித்தான் சுனில்.
“உன் பொண்டாட்டி அழைச்சிட்டு போவாளா டா.?” என்று கேட்டு விட்டு அறைப் பக்கம் பார்த்தார்.
இன்னமும் தன் மகள் அபூர்வாவை ரெடி பண்ணும் மும்முரத்தில் யமுனா இருந்தாள்.
“அம்மா பட்டு பட்டுனு பேசுவாளே தவிர நீ கூப்பிட்டா எல்லா இடத்திற்கும் அழைச்சிட்டு போவா மா.” என்று சுனில் அன்னையிடம் கூறினான். அதோடு தொடர்ச்சியாய் “யமுனா என் டிக்கெட்ல அம்மாவை அழைச்சிட்டு போ” என்று உரக்க கூறிட, “அத்தைய கிளம்ப சொல்லுங்க.” என்று மட்டும் பதில் கொடுத்தாள்.
யமுனாவை சோதிக்காமல் பத்தே நிமிடத்தில் சின்னதாய் பார்டர் வைத்த புடவையை கட்டி கொண்டு வந்தார் பாக்கியம்.
***
இதே போன்ற மற்றொரு வீட்டில்… அதே வசனம் அதே சூழ்நிலை.
சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் துர்கா. இதனை எட்டி நின்று பார்த்த சங்கரியோ, “ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பையனோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?” என்று கேட்டார்.
மாதேஷ் எட்டி பார்க்க, துர்காவோ “சரிங்க அத்த இரண்டு நிமிடத்தில மாத்திட்டறேன்” என்றாள்.
“என்ன இருந்தாலும் சொல்லு துர்கா மாதிரி ஒரு பொண்ணு அமைவாளா? நான் சொன்னா சரி சரினு கேட்டுக்கறா.” என்று துர்காவை தன் பையனிடம் புகழ்ந்தார் சங்கரி.
“மா… நீயுன்னு இல்லை. இதோ எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் இன்னிக்கு கம்பெனில பருப்பு மூட்டு குடோன்ல லாரி வர்றதில கணக்கு பார்த்து அடிக்க வைக்க என்ன உடனடியா கூப்பிட்டாங்க. நான் ஆண்டுவிழாவுக்கு வரமுடியலைனு துர்காவிடம் சொன்னேன். என்னை புரிஞ்சி சரிங்கனு சொல்லிட்டா. என்னயிருந்தாலும் அடுத்தவங்க நிலைமையை புரிஞ்சி அதுக்கேற்ற மாதிரி அனுசரித்து போறதில துர்கா எப்பவும் முதல் இடத்துல பிடிப்பா மா” என்று தாயிடம் மனைவியை பெருமை பேசினான்.
துர்காவோ மென்னகை விடுத்து தன் மகன் ஆதித்யாவிற்கு ஆடையை அணிவித்து கை பட்டனை போட்டு விட்டாள்.
சேலை உடுத்தி ஸ்கூட்டி என்றால் சற்று தடுக்குமே என்ற உதித்த பொழுதும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று சங்கரியோடு கிளம்பினாள்.
***
இரண்டு குடும்பமும் ஒன்றாக ஆண்டுவிழாவில் சந்தித்தது.
பாக்கியமோ வந்தவரை தான் பார்த்தார். பெரும்பாலும் ஜோடியாக குழந்தையின் பெற்றோர் வந்திருந்தனர்.
அதனை கண்டு யமுனாவை நோக்கினார்.
முதலில் சுனில் வரவில்லையென்ற கோபம் இருந்தாலும் பாக்கியம் வந்ததில் அந்த சினம் கொஞ்சம் தணிந்தது.
பாக்கியமோ வந்த தம்பதியரில் பெண்களை கண்டு இந்தனை அலங்காரம், நம்ம மருமக மட்டும் ஏதோ ஆபிஸ் உத்தியோகத்துக்கு போறமாதிரி வந்திருக்காளே என்ற ஆதங்கம் இருந்தது.
அதுவும் தன் அருகே இருந்த பெண் ‘ஆதித்யா சட்டையில படாம தண்ணி குடி’ என்றவளின் மீது பதிந்தது.
சேலை கட்டி பாந்தமாய் இருந்தாள். அவளும் மாமியாரோடு வந்திருப்பாள் போல.
ஆதித்யா மற்றும் அபூர்வா இருவரும் முதல் வகுப்பு ஆனால் வேறு வேறு செக்ஷன் என்றதால், அவளின் அம்மாவிடம் அந்தளவு பரீட்சையம் இல்லை.
நாகரீகமாக மிதமான புன்னகையில் சேரில் அமர்ந்து ஆண்டுவிழாவை இரசிக்க செய்தனர்.
மூன்று மணி வரை விழா என்பதால் நான்கு மணிக்கு துவங்கினார்கள். அரங்கத்தில் முதலில் வகுப்பு வாரியாக ஆடல், பாடல், நகைச்சுவை பேச்சு, நாடகம், என்று சென்று கொண்டிருந்தது.
துர்கா மற்றும் யமுனா ஸ்நாக்ஸ் வாங்க எழுந்து சென்றனர். அவர்கள் சென்றதும் சங்கரி பாக்கியம் பேச ஆரம்பித்தனர்.
முதியவரின் பேச்சு வட்டமடித்து சேலை பற்றி வந்தது.
“எங்க என் மருமகளிடம் சொன்னேன். எனக்கு இது தான் ஸ்கூட்டி ஒட்ட வசதினு ஒரே போடா சொல்லிட்டா. பையனும் வேலைக்கு போகவும் சண்டை எதுக்குனு நான் வந்துட்டேன்.” என்றார் பாக்கியம்.
“என் மருமக பரவாயில்லை. அவளும் முதல்ல அப்படி தான் சுடிதாரை எடுத்தா. நான் சொன்னதும் மதிப்பு கொடுத்து சேலை உடுத்திக்கிட்டா.” என்று புகழ்ந்தார் சங்கரி.
ஸ்நாக்ஸ் வாங்கிய இடத்திலோ கசகசவென் இருந்த முகம் சுளித்து நின்றாள் துர்கா.
“ரொம்ப கசகசனு இருக்கா. இங்க வந்து நில்லுங்க பேன் காற்றுல கொஞ்சம் பெட்டரா இருக்கும்” என்றாள் துர்கா.
யமுனாவோ “என்ன செய்யங்க பெரியவங்களுக்காக கணவருக்காக நம்ம விருப்பத்தை மாற்றிக்க முடியாம தான் சேலை கட்டினேன். என்ன செய்ய எல்லாயிடத்துலயும் பேன் இல்லை. என் நேரம் நான் உட்கார்ந்த இடமும்பேன் இல்லை. இங்கயும் பேன் இல்லை” என்பது போல கூறினாள்.
இருவரும் தங்கள் மூத்தோருக்காக வாங்கிய டீ சமோசா என்று கொடுத்துவிட்டு தங்கள் குழந்தைகள் ஆடும் நேரத்திற்கு காத்திருந்தார்கள்.
அந்த நேரமும் வந்தது. ஆதித்யா ஆடும் பொழுதும் அபூர்வா ஆடும் பொழுதும் போனில் இரு தாயாருமே புகைப்படமும் வீடியோவாகவும் எடுத்தனர்.
மனநிறைவாய் துர்கா மற்றும் சங்கரி ஆதித்யாவை அணைத்து கிளம்பியிருந்தனர்.
துர்கா ஸ்கூட்டியை நிதானமாகவே ஒட்டினாள். ஆனால் எதிரே காற்று பலமாக வீசியது. சேலை ஒருபக்கம் தன் மானத்தை காட்டி விட, சங்கடமாய் நெளிந்தாள்.
இருந்தாலும் தற்போது அதனை சரிபடுத்த கையை எடுக்கயியலாத நிலை. ஆதித்யா மற்றும் சங்கரி வெயிட்டை பேலன்ஸ் செய்ய வேண்டுமே. அதனால் பரவாயில்லையென சிக்னல் வந்ததும் சரிச்செய்ய நேரம் கிடைக்குமென எண்ணினாள்.
ஆனால் சிக்னல் வரும் முன் அங்கு கட்டிடம் கட்ட இருந்த சிமெண்ட் மூட்டையின் காலி கவர் பறந்து வந்து இருசக்கர வாகணத்தின் முன் டயரில் சுற்றியது. எதிர்பாராத இந்த நிகழ்வில் துர்கா பேலன்ஸ் செய்ய முனைய, அந்த நேரம் சேலையால் காலை கீழே வைக்க இயலாது தடுத்தது.
வண்டி ஆட்டம் காண, சங்கரி ஆதித்யா ஒருபக்கம் சாய்ந்தனர். துர்காவோ பக்கத்தில் கல்லில் மோதி விழுந்தாள்.
அதே நேரம் யமுனா பாக்கியம் இருவரும் அபூர்வாவை அணைத்து புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்த நேரம், அருகேயிருந்த மருத்துவ ஆம்புலன்ஸில் துர்காவை ஏற்றி சென்றனர்.
என்னானது ஏதானது என்று யமுனாவிற்கு புரிபடவில்லை. சற்று நேரத்திற்கு முன் சந்தித்தவர்களாயிற்றே என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் ஆம்புலன்ஸில் துர்காவை ஏற்றி கூடவே சங்கரி அம்மா கையில் ஆதித்யாவோடு செல்வோரை நின்று கேட்க இயலாத நிலை.
பக்கத்தில் இருந்த போலிஸிடம் என்னவென விசாரித்தார் பாக்கியம்.
“அதுவா மா. முன் வீல்ல சிமெண்ட் கவர் மாட்டிக்கிச்சு. அந்த பொண்ணு சேலை கட்டியதால சட்டுனு பேலன்ஸ் பண்ண முடியாம மோதிடுது. பைக் சாய்ந்து கல்லுல மோதிடுச்சு. எத்தனை முறை தான் கட்டிடத்துல இருந்து அப்படியே சிமெண்ட் கவரை தூக்கி எறியாதிங்கனு சொல்லறது. கேட்டா ஒழுங்கா வச்சது தான் அப்படியே பறந்துடுச்சு. காத்து பலமா அடிக்குதுனு கதை விடுவான்” என்று பதிலை கூறி “வண்டி நிற்காதே கிளம்பு கிள்மபு டிராப்பிக் ஆகுது பாரு” என்று அதட்ட கூட்டம் கலைந்தது.
வீட்டுக்கு வரும் முன் பாக்கியமோ நெஞ்சில் கைவைத்து ஸ்கூட்டியில் வரும் ஒவ்வொரு பெண்மணியையும் கண்டார்.
சுடிதார் அணிந்த பெண்கள் சட்டென வைக்க தோதாக உடை அமைந்து. ஆனால் சேலை சற்றே தடுக்க செய்ய, முன் எச்சரிக்கையாய் தான் வைப்பது கண்ணில் பட்டது.
பாக்கியமோ பெண் பிள்ளை இப்படி உடை போடக்கூடாது என்று என்றும் உரையாற்றி பேசுவார் ஆனால் இன்றோ அமைதியானார்.
ஆனால் அபூர்வாவையே பார்க்க, “இங்க பாருங்க அத்த கையில்லாத டிரஸ் போடறேன்னு அவளை திட்டாதிங்க. நான் தான் எடுத்தேன். இந்த காலத்துல வெயில், டிவி போன் என்று எல்லாம் வெட்பமயமா இருக்கு. அதனால நம்ம வீட்டுக்குள்ள குழந்தை ப்ரீயா உடுத்துட்டுமேனு நினைச்சேன். அதுவும் குறிப்பிட்டளவு வளர்ற வரை தானே” என்றாள் யமுனா.
“புரியுது மா. நான் நம்மிடம் பக்கத்துல இருந்து பேசினாளே அந்த பொண்ணை நினைச்சேன். முதல்ல சுடிதார் தான் அதுவும் எடுத்துச்சாம் அவங்க அத்தை சேலை கட்ட சொல்ல சரிங்கத்தனு கட்டிக்கிட்டு வந்துச்சாம்.
எதிர்த்து பேசாத பிள்ளைனு பெருமையா சொன்னாங்க. இப்ப என்ன நிலையோ மனசு சங்கடமா இருக்கு.” என்றார் பாக்கியம்.
“அத்தை அந்த பொண்ணு கேன்டீன்லயும் கசகசனு இருக்குனு தான் சொல்லுச்சு.
நாம போடுகிற உடை நமக்கும் நாம போகிற இடத்துக்கும் செட்டாகுதானு முதல்ல யோசிக்கணும். நான் அவரோட போனா சேலை கட்டணும்னு இருந்தேன். ஏன்னா அவர் வண்டி ஓட்டுவார் நான் பின்னாடி இருப்பேன். சோ எனக்கு கஷ்டமில்லை. ஆனா அவர் வரலை. நானா ஓட்டணும் அதனால சேலையை தவிர்த்தேன்.
சேலை சில நேரம் சதி பண்ணிடும் அத்தை. எல்லா நேரமும் காலை கீழே சரியா வைக்க முடியாது. இப்படி நம்மை இம்சைப்படுத்திடும். நான் உங்களிடம் எதிர்த்து பேசினாலும் என்னோட சேப்டியும், என்னோட இருக்கற அபூர்வா மற்றும் உங்க சேப்டி முக்கியமா யோசித்தேன்.
அவங்க மற்றவர்களுக்காக யோசித்து அவங்க இப்ப கஷ்டப்படறாங்க. மற்றவர்களுக்காக யோசிக்கலாம். ஆனா அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாம இருக்கணும்.
கவலைப்படாதிங்க அத்த நீங்க உடைமாற்ற போனப்ப, அந்த பொண்ணு கூட்டிட்டு போன ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு கேட்டேன். இப்ப பரவாயில்லையாம். உயிருக்கு எதுவும் ஆபதில்லையாம். என்ன கையில பிராக்சர். கொஞ்ச நாள் வேலை செய்யாம பத்திரமா பார்த்துக்கணும். அவங்க அத்தை பார்த்துப்பாங்க” என்று அபூர்வாவை சாப்பிட அழைத்தாள் யமுனா.
விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.
ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ ‘நாம நேர்ல மீட் பண்ணலாமா’னு கேட்டு விட்டாள்.
விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.
‘என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே’ என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.
“வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க.” என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.
சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக “ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க” என்று கேட்டாள்.
போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
பரவசமாக அதனை படித்து விட்டு “ஆமா அபி தனியா தான் வந்திருக்கேன்” என்று அனுப்பினான்.
“ஓ… ஓகே.. நான் பதினைந்து நிமிடத்துல வருவேன். சிக்னலில் மாட்டிட்டு இருக்கேன்” என்று அனுப்பினாள் அபிராமி.
விழியன் அதிகளவு உற்சாகமாக தலையை கோதினான். போனில் கேமிரா எடுத்து தன் முகத்தை கண்டு தேவையேயில்லாத செல்பி ஒன்றிலும் தான் தினமும் பார்க்கும் தன் முகத்தினை இங்கு வந்து பலமுறை பார்த்து விட்டான்.
அழகானவனாக அது காட்சிப்படுத்தியது. விழியனுக்கு அபிராமி வந்ததும் அவளின் கண்ணுக்கு தான் ஈர்ப்பு கொடுக்கும் விதமாக தன் காதலை சொன்னால் மறுப்பு கொடுக்க இயலாத வகையிலும் தான் இருக்க பெரும் வேண்டுதலை முன் வைத்தான்.
அபிராமி கவிதைகளை போல அவளின் பேச்சும் அவளின் பதில்களும், அவனை அத்தனை பித்தம் கொள்ள வைத்திருந்தது. கூடுதலாக அவனின் பெயரை போலவே ‘அபி’ என்றதால் அவள் தான் தன் இணையான காதலி என்று முடிவே செய்தான்.
அவளிடம் காதலை கூறி இன்றே அவன் வீட்டில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு ஆவலில் இருக்கின்றான்.
அபிஷேக் அபிராமியின் பழக்கம் ஒரு கவிதை போட்டியில் வாக்குவாதத்தில் மட்டும் ஆரம்பித்து சண்டை முற்றி நான் இப்படி தான் என்று முட்டிக் கொண்டு மன்னிப்பும் கேட்காமல் விழியனை விழி பிதுங்க வைத்து பிறகு கவிதை ஒன்றில் மறைமுகமாக சூரியன் சந்திரனாக கவிதை வடிவில் சந்திரன் சூரியனிடம் மன்னிப்பு கேட்டு புதிதாய் ஈர்த்தவள்.
அதன் பின் விழியனே ‘நீங்க என்னிடம் தானே மன்னிப்பு கேட்டு அந்த கவிதை எழுதியது’ என்று வெளிப்படையாய் கேட்டு ‘அப்படின்னு நீங்க வச்சிக்கலாம். நான் ஆமானு சொன்னதாவே வச்சிக்கோங்க.’ என்று சமாதானம் அடைந்து நட்பானவர்கள். அதன் பின்னும் அந்த பொது குழுவில் எப்பொழுது கட்டுரைக்கு இருவரும் மோதி தான் எழுதினார்கள்.
கொஞ்ச நாளாய் விழியன் அபிராமி பேசும் கட்டுரை வாதத்திற்கும், கவிதைக்கும் மாற்று கருத்து எதுவும் அளிக்கவில்லை. மாறாக லைக் பட்டன் அழுத்துவதற்கு பதிலாக லவ் பட்டனை அனுப்பினான்.
அபிராமி இதனை அறிந்தாலோ இல்லையோ விழியனால் இதற்கு மேல் பொத்தி வைக்க மனமின்றி குறுஞ்செய்தியில் தன் போன் எண்ணை பரிமாறினான்.
ஆனால் அபிராமி உடனடியாக அதற்கு பதிலாக தன் எண்ணை பதிவு செய்யவில்லை. மாறாக அவன் அனுப்பியதை கண்டுக் கொள்ளாதவள் போன்று இருந்தாள்.
இதோ சில தினமாக அபிராமி பேசாமல் தவிர்த்து பின்னர் அது இயலாது போக ஒரு முடிவோடு சந்தித்திடலாமென போன் எண்ணை பகிர்ந்து இன்று காண நேரம் ஒதுக்கி வைத்து விட்டாள்.
விழியன் பின்னந்தலையை கோதி கழுத்தில் தடவி அங்கிருக்கும் பெண்களை சாவதனமாக பார்த்தான்.
அந்த நேரம் சில பெண்கள் அவனை தான் நோட்டமிட்டனர். அழகான பெண்கள் தன்னை நோக்குவதில் சற்றே மிரண்டான். இது என்னடா அபி வர்றப்ப நான் இவங்களை பார்த்தேன். அம்புட்டு தான் சைட் அடிக்கிறியாடானு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டு போனாலும் போகலாம். அவ தான் கட் பண்ணறதுல கேடி.
கொஞ்சம் அதிகப்படியா பேசினா உடனே கத்தரிச்சிடறா’ என்றவன் போன வாரம் அவன் பேச அவள் நாசுக்காய் கத்தரித்து பேச்சை முடிப்பதை கண்டான்.
இன்னமும் காணோமே என்று போன் செய்து விட்டு காதில் வைத்தான்.
“ஹலோ விழியன் வந்துட்டேன். ப்ளிஸ் காத்திருங்க” என்ற குரலில் இவன் பேச விடாமல் கத்தரித்து விட்டாள்.
“அம்மாடி ஹார்ட் பீட் எகுறுதே….” என்று கண்ணாடி கோப்பையில் நிரம்பியிருந்த நீரை பருகினான்.
எதிரே ஒரு பூசி மொழுகியே குண்டு பெண் இவனை கண்டு சிரிப்பை மறைக்கவும் போனை எடுத்து தலையை நுழைத்து கொண்டான்.
முகநூலில் அபிராமி என்று அவள் பதிவிட்ட கவிதை கட்டுரை என்று அனைத்தும் மீண்டும் எண்ணிக்கை பாராது படித்தான்.
உதட்டில் முறுவல் தெரிக்க விழி நிமிர்த்திட, அந்த குண்டு பெண் வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“ஹலோ இங்க என் லவ்வர் வர்றாங்க.” என்று பதறினான்.
“என்னது?” என்று விழியை பெரிதாக்கினாள் குண்டு பெண்.
“ஆமாங்க என் லவ்வர்” என்றவன் எங்கே அபிராமி வந்து இவன் வார்த்தையை கேட்டுவிடுவாளோ என்று பயந்தான். காதலியிடம் காதலை அறிவிக்காமலே லவ்வர் என்று யாரோ ஒரு பெண்ணிடம் கதை அளக்கின்றோமே என்ற எண்ணம் வேறு பதட்டமாக்கியது.
“விழியன்… மீட் பண்ணறதா தானே பேச்சு. உங்க லவ்வரையும் கூப்பிட்டு இருக்கிங்களா?” என்று கேட்டதும் விழியன் உலகம் இருட்டானது போன்ற நிலை உருவாகியது.
“நீ…நீங்க அபி… அபிராமி.?” என்று கேட்டான்.
“ஆமா… அப்பவே வந்துட்டேன் உங்களோட குறும்பு தனத்தை இரசிக்க தனியா உட்கார்ந்து இருபது நிமிடமா ரசித்தேன்.” என்று மனதில் பட்டதை கூறினாள்.
“ஓ… அபிராமி… நீங்க… நைஸ் மீட்டிங் யூ” என்று தண்ணீரை பருகினான்.
அவன் தன்னை கண்டு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளானென அறிந்து கொண்டாள் அபிராமி.
அதை வெளிக்கட்டிக் கொள்ளாமல் உங்களை பார்க்கணுனு ஒரு வாரமா தோன்றியது. அதனால தான் உங்க போனுக்கு பேசாம நேர்ல மீட் பண்ணலாமானு வந்துட்டேன்.” என்றாள்.
“ம்ம்… தேங்க்ஸ் உங்க கவிதை ரொம்ப அருமையா இருக்கும். உங்களை மீட் பண்ணணும்னு நினைச்சேன்.” என்றான்.
அதற்கா மீட் பண்ண துடிச்ச என்று அபிஷேக் என்னும் கவிதை உலகில் சஞ்சரிக்கும் விழியனை ஏளனப்படுத்தியது.
“உங்க ஒரிஜினல் பெயர் என்ன விழியன்.” என்று சகஜமாக அபிராமி நட்பாய் கேட்டாள்.
“அபிஷேக். அபியென்ற பெயர்ல எழுத வந்தேன். நீங்க ஏற்கனவே அபி என்று எழுதவும் விழியன்னு புனைப்பெயர் வச்சிட்டேன்.” என்றான்.
நடுவே ஆர்டர் கொடுக்க வந்த வெயிட்டரிடம் இருவரும் மாதுளை ஜூஸ் லெமன் ஜூஸ் என்று ஆர்டர் தந்துவிட்டு பேச ஆரம்பித்தனர். சரியாக கூறவேண்டுமென்றால் அபிராமி மட்டும் பேசினாள்.
“சோ… நீங்களும் அபி தான்.” என்று பேச “ம்ம்” என்றான்.
“உங்க லவ்வரும் வர்றதா சொன்னிங்க. இன்னும் வரலையா?” என்று கேட்டாள்.
அவனோ தலை குனிந்து நின்றான்.
“சோ… என்னோட கவிதை கட்டுரையில ஈர்ப்பாகி என்னோட பதிலுக்கு பதில் பேசி அதுல பிடிச்சி லவ்வுனு தோன்றவும் மீட் பண்ணி நேர்ல லவ் சொல்ல ஆசைப்பட்டிருக்கிங்க.” என்றாள்.
இல்லையென்று கூற வந்தவன் அவள் எப்பொழுதும் கனித்து பேசும் விதமாக உணரவும் ஆம் என்றான்.
“நீங்க இல்லைனு சொன்னா தான் ஆச்சரியம். ஏன்னா காதல் இந்த காலத்துல இண்டர்டென்ட்ல தான் கடை விரித்து கிடக்குது.
நம்ம தாத்தா பாட்டி காலத்துல அத்தை மாமா பசங்களை தான் பார்ப்போம். அதனால அவங்க மேல காதல் வந்திருக்கும்
அடுத்த தலைமுறை காலேஜ்ல ஆரம்பிப்பாங்க. ஆனா காதல் என்றாலே தப்புனும் ஜாதி மதம் பிரிச்சிட, ஒரு தலையா காதலிச்சு சொல்லாமலேயே மனசுல பூட்டி வச்சிப்பாங்க. அதுக்கு அடுத்த தலைமுறை காதலை சொல்வாங்க விட்டுட்டும் போவாங்க. டெலிபோன் காதல் லெட்டர் காதல் எல்லாம் தெரிந்தவங்களை காதலிச்சாங்க. இப்ப அதை தாண்டி இன்டர்ரெட்ல தெரியாதவங்களை பல்வேறு சோஷியல் நெட்வொர்க் மூலமா முகநூல், டிவிட்டர், இன்ஸ்டால காதலிக்கறோம்.
இது தான் இப்ப உங்களுக்கு பாதிச்சிருக்கு. என்னோட இன்ஸ்டா கவிதை முகநூல் ‘வாக்குவாதங்கள் விவாதிக்கலாம் குழு’ல கட்டுரையில உங்களோட மோதவும் என்னோட எழுத்துல பேசி பழகி கருத்து எதிர்மறையா இருந்தாலும் ஈர்த்துடுச்சோ.” என்றாள்.
சிரிக்கும் பொழுது கன்னத்துல குழி விழுந்தது. ஆனால் அவளின் பூசிய முகத்தில் அவன் அதில் ரசிப்பை தான் உடல்வாகில் ஆடியிருந்தான்.
நிச்சயம் அவளின் எடைக்கு சரியான அளவுக்கு கொஞ்சம் கூடுதல். ஆனால் ‘அபி’ என்ற பெயரும் வசீகரிப்பு எழுத்தும் அவனுக்கு சிக்கென்ற பெண்ணை அவன் வயது எதிர்ப்பார்த்து ஏமாந்தது அவன் பார்வையில் பேசும் தடுமாற்றத்திலும் கண்டு விட்டாள் அபிராமி.
“டோண்ட் ஓர்ரி அபிஷேக் பயப்பட வேண்டாம். நான் ஸ்போட்டிவா தான் எடுத்துக்கிட்டேன். ஜஸ்ட் உங்களை பார்த்து பேசிட்டா அந்த காதல் முற்றிலும் உங்களுக்கு போயிடும் பாருங்க. இதே நான் போன்ல அவாய்ட் பண்ணினா நீங்க பீல் பண்ணிட்டு இருக்கலாம். அதனால தான். இப்ப நீங்க என்னை பார்த்து தயங்கினாலும் வீட்டுக்கு போவதற்குள்ள அப்பாடி தப்பிச்சிட்டோம்னு ரிலாக்ஸ் ஆகிடுவிங்க பாருங்க” என்று கூறவும் அபிஷேக்கால் பதிலுக்கு மறுக்க இயலாது தயங்கினான்.
“ஜூஸை குடிங்க” என்றதும் லெமன் ஜூஸை கலக்கினான்.
மாதுளை அருந்தியவள் சுற்றி கூட்டத்தை கண்டாள். ஆங்காங்கே காதலர்கள் கூட்டம்.
மாதுளை அருந்தி முடித்து பில் பே செய்ய பர்ஸை எடுக்க,”இல்லை நான் பே பண்ணறேன் அபி” என்றான்.
அபிராமியோ ஒரு நிமிடம் அவனின் அழைப்பில் திகைத்து சிரித்து “ஓகே அபி” என்றாள்.
“ம்ம்… இந்தாங்க. இது உங்களுக்கு இந்த தோழியோட பரிசு” என்று நீட்டினாள்.
அபிஷேக்கும் அபிராமிக்காக வாங்கினான். ஆனால் அதில் காதல் என்று கொட்டி கிறுக்கி வைத்திருக்க கொடுக்க இயலாது தவிர்த்த நிலையில் நின்றான்.
அப்பறம் இந்த அதிர்ச்சியில இருந்து மீண்டு, எப்பவும் போல விவாத குழுவுல பேசுங்கப்பா. எனக்குன்னு வர்ற ராஜக்குமாரன் எனக்காக வருவான். அவன் எப்படியிருந்தாலும் என்னை மணக்கறப்ப என் கண்ணுக்கு தேவக்குமாரனா தான் தெரிவான். அதனால இந்த பீல் பண்ணி அப்சட் ஆகாம எப்பவும் போல சோஷியல் மீடியால இன்ஸ்டாலையும் கவிதை அனுப்பினா படிங்க அபிஷேக்கா இல்லாம விழியனா.” என்று கூறி வாசல் வரை வந்தனர்.
அபிஷேக் தலையாட்டினான். அபிராமி ஸ்கூட்டி எடுத்து புறப்பட்டதும் அபிஷேக் என்பவனை விழியன் என்னும் மனசாட்சி காறி துப்பியது.
அழகை பார்த்து தான் காதலிப்பியா டா. நீ எல்லாம் புரட்சி பேசற விவாதக்குழுவுல இருக்காதே. ‘முகநூலில் முகமூடி அணிந்த போலி மனிதன் நீ.’ என்று எடுத்தியம்ப பைக்கை உதைத்து புறப்பட்டான்.
அபிராமி வீட்டுக்கு வந்து நேராக கண்ணாடி பிம்பத்தில் தன்னை கண்டாள்.
கண்ணாடி அவளின் முழுஉருவத்தை காட்டவில்லை. அதனால் சற்று இடைவெளி விட்டு நின்றாள். தன்னருகே அபிஷேக்கை நிறுத்தி பார்த்தாள். சோ சேட் அவனுக்கு நீ மேட்ச் இல்லை. உனக்கும் அவன் மேட்ச் இல்லை அபி. விழியனுக்கு நல்ல பேர் அமையட்டும்.’ என்று நாளை விவாதக்குழுவில் என்ன தலைப்பு அதற்கு என்ன எழுத தன் சிந்தனை தூண்டுகின்றதென யோசனைக்கு சென்று தன் உடல் வாகை மறந்தாள்.
அதன் பின் விழியன் தனது இன்ஸ்டா முகநூல் கணக்கு இரண்டிலும் ஆக்டிவாக இல்லை என்று அபிராமி அறிந்து கொண்டாள்.
கொஞ்சம் வலித்ததாலும் அபிஷேக் செய்ததில் தவறாக தோன்றவில்லை. விருப்பு வெறுப்பு என்பது அவனின் தனிப்பட்ட கருத்து. இதில் தன்னால் என்று வருந்தவும் அவள் தயாராகயில்லை. அவளின் தாய் தந்தை வைத்து தானே தன்னுடல் அமைப்பு அமையும். இதில் பெல்லி இடை என்பது அவளுக்கு சாத்தியப்படாதவொன்று.
ஆறுமாத காலம் கடந்து அன்று அபிராமியை பெண் பார்க்க வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டாட்கள்.
அபிராமி இதுவரை பெயரை கூட கேட்காமல் மணப்பெண் அலங்காரத்தில் வந்து நின்று விட்டாள். அவளும் காபி தட்டை வைத்து போனமுறை போல தன் உடல்வாகை காரணம் காட்டி தானாக தட்டி கழிப்பார்கள் என்று பெயருக்கு வந்தவரை உபசரிக்க, “இது தான் மாப்பிள்ளை விழியன் என்றனர். அபிராமி திகைத்து நிமிர அங்கு அபிஷேக் அல்ல. வேறு யாரோ ஒருவன் புன்னகை ததும்ப காபியை எடுத்து அவளை பார்த்து முறுவளித்தான்.
‘இதென்னடா வம்பா இருக்கு. விழியன் என்று பெயரா?’ என்று தலைகவிழ்ந்து கொண்டாள்.
உடனடியாக மாப்பிள்ளை அவர்கள் அம்மா காதில் கிசுகிசுக்க ‘போச்சு காபி தட்டை கொடுத்ததும் அவரோட அம்மா காதை துளையிடறார். பிடிக்கலை என்றதை கூறயென்ன தவிப்போ’ என்று தோன்றியது.
ஆனால் மாறாக மாப்பிள்ளைக்கு பொண்ணை பிடிச்சிருக்காம். இரண்டு நிமிஷம் பேசணும்னு சொல்லறார். நீங்க சம்மதிச்சா பூ வச்சிட்டு பேச டைம் கொடுக்கலாம்” என்று விழியனின் தாய் பல்லவி கூறவும் அபிராமி தந்தை தட்டு மாற்ற தயாரானார்.
அதற்கு பின் சில மணித்துளியில் விழியன் அபிராமி மாடியில் தனியாக நின்றனர்.
“எனக்கு லவ் மேரேஜ் ரொம்ப பிடிக்கும்ங்க. ஆனா பாருங்க காலேஜ்ல காதலிக்க முடியலை. அதனால கல்யாணம் பண்ணப்போற பொண்ணை காதலிச்சிக்கலாம்னு விட்டுட்டேன்.” என்றான். அபிராமியோ என்னை போன்றோர் எல்லாம் திருமணம் முடிந்து அதன்பின் தான் காதலிக்கும் கொடுப்பினை அமையும் என்ற எண்ணம் எழந்தது. அடுத்த நொடி இவனுக்கென்ன குறைச்சல் காதலிக்க ஏன் என்னை தேர்ந்தெடுத்தான் என்பது போல பார்த்தாள்.
“ஆமாங்க… அப்படி தான் அரேன்ஜ் மேரேஜ் பண்ண முடிவெடுத்தேன். பட் அன்பார்சினெட்லி நான் லவ் மேரேஜ் பண்ண போறேன்.” என்றான் விழியன்.
அபிராமிக்கு ஒன்றும் விலங்காமல் போக, “ரெயின்போ மால்ல காபிஷாப்புக்கு ஒருநாள் போனேன். அங்க ஒரு பொண்ணு ‘ஹலோ விழியன் வந்துட்டேன். ப்ளிஸ் காத்திருங்க’ என் பெயருல ஹனி டிப் வாய்ஸ்ல பேசினா. அந்த குரலில் திரும்பி பாரத்தேன். டெடிபியர் மாதிரி குண்டானா ஒரு பொம்மை அங்க உட்கார்ந்து ஒருத்தனை ரசிச்சா. என்ன ஏதென அவளை ஆர்ய்ந்தேன்.” என்றதும் அபிராமிக்கு தூக்கி வாறி போட்டது.
“அப்பறம் எப்படி என்னை பிடிச்சிதுனு தட்டை மாத்தினிங்க.?” என்று கேட்டாள்.
இந்த விழியன் விழியனாவே உங்களை ஆராய்ந்து உங்க பேச்சில உங்களை தேட ஆரமபிச்சான். எஸ் நீங்க போன ஸ்கூட்டியை தேடி ஆர்டிஓ போய் அட்ரஸ் வாங்கி உங்களை தொலைவில இருந்து பார்த்து உங்க செயல் குணம் ஈர்க்க லவ் பண்ணியதை அரேன்ஜா மாற்ற அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா என் ஆசையையும் எங்க பேச்சையும் புரிந்து எனக்காக இங்க வந்துட்டாங்க.
“என்ன அபிராமி குழம்பறிங்களா… ஒருத்தன் லவ் என்றதும் தெளிவா யோசித்து அவன் வருந்தக்கூடாது. அதுக்கு நாம எப்படி இருக்கோம்னு புரிஞ்சி நடந்திங்க. யாரோ ஒருத்தனை புரிஞ்ச நீங்க சரியான துணை கிடைச்சா எந்தளவு விருற்புவிங்கனு புரிந்தது. அபிராமி உனக்கான காதல் நானா மாறி உள்ளத்துல நிரம்ப காத்திருக்கேன். என்னை பிடிச்சிருக்கா” என்றான்.
“விழியன்…. என்னால நம்ப முடியலை. யாரையோ பார்த்து அவாய்ட் பண்ணினா முதல்லயே பண்ணிட்டா காயம் உருவாகாதுனு மீட் செய்தேன். அது உங்களை சந்திக்க தான் கடவுள் அமைத்த சந்தர்ப்பமா மாறும்னு கனவுலயும் நினைக்கலை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் காதலிச்சி அந்த காதல் கரம் பிடிக்குமானு தெரியலை. ஆனா காதல் தோல்வியில தான் என் காதல் மொட்டு விட்டிருக்குனு நினைக்கிறப்ப என்னால என்னால பேச முடியலை. நான் (fat)பேட் குறைக்க எல்லாம் முடியாது.” என்று விளக்கினாள்.
“அபிராமி அபிராமி” என்று குணா கமலாக கூறிவிட்டு “அதெல்லாம் தூக்க முடியலைனா பரவாயில்லை. என் கார்ல ஏத்திப்பேன்.” என்று கூற அபிராமியின் பூசிய உடல்வாகில் அப்படியொன்றும் விழியனின் உண்மைக் காதலின் பார்வையில் பூசிய உடல் வாகு என்பதோடு விழி விரித்து ஆனந்தமானாள்.
எக்காலத்திலும் இன்னாருக்கு இவள்(ன்) என்று நாம் பிறக்கும் சில மணித்துளிகளிலேயே ஆண்டவன் இயற்றிடுவான். அப்படியிருக்க காதல் என்று நடுவே எது வந்த போதிலும் உண்மை காதல் எதுவென்று ஒரு நொடி நம்மை உணர்த்தி விட்டு செல்ல செம்புயல் பெயர் நீர் போல வந்திடும். அப்படி அபிராமிக்கு வந்த விழியன் இவன்.
காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி.
சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது.
அது குளத்தை சுத்தப்படுத்தும் பணி. நூறு நாள் வேலைக்காக வந்து சேர்ந்திருக்கின்றாள் ரேவதி. குழந்தையை மேட்டில் ஒரமாய் அமர வைத்துவிட்டு சேலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகினாள்.
குழந்தை மணற்மேட்டில் மண்ணை துழாவி கையில் உருட்டி வாயில் வைத்து முடித்தான்.
“ரேவதி உன் பையன் மண்ணு திண்ணுதே பாரு” என்றார் கூட பணிப்புரியும் சுந்தரி.
“அடவிடுங்கக்கா.. வீடும் மண்வீடு தான். அங்கயும் மண்ணை திண்ணுது. எத்தனை முறை தான் எடுத்துவிடறது. சாப்பிடுற சாப்பாட்டுலயே கல்லு கடக்கு. நம்ம வாழ்க்கையில கல்லும் மண்ணும் இருக்கறது தானே.” என்று மண்வெட்டி கொண்டு தூர்வாறினாள்.
“ஏன் ரேவதி வூட்ல உன் புருஷன் இல்லை. யாரிடமாவது விட்டுட்டு வரலாம்ல. கைக்குழந்தையை போற வேலைக்கு எல்லாம் இழுத்துட்டு வர்ற. ஒரு நேரம் போல ஒரு நேரம் கெட்டது நடந்திடப்போகுது.” என்றதும் ரேவதி குழந்தையை பார்த்து விட்டு, “முடியலக்கா… என் வூட்டுக்கார் ஒரு வேலை வெட்டி பார்த்தா நான் ஏன் இப்படி வேகாத வெயில்ல குழந்தையை வச்சிட்டு அலையுறேன். இரண்டும் பொட்ட பிள்ளைனை ஆண் வாரிசு வேண்டுமின்னு இதோ இவனை பெத்துக்கிட்டோம். என் பொண்ணு ஆறாவது படிக்குது. இன்னொன்னு நாலாவது படிக்குது.
அதுங்களுக்கு வயிறை நிறைக்கவே முடியலை. இதுல இந்த குழந்தைக்கு பால் கொடுக்க எனக்கு சுரக்கணுமே.
அந்தாளு கொண்டு வந்து தர்ற பணம் பத்தையே. ஏதோ மேல் நோகாத வேலைக்கு போகுது. அது கொண்டு வர்றது வச்சி நாக்கு தான் வழிக்கணும். என்னை நம்பி மூனு குழந்தையாச்சே.
ஏதோ நாலு இடத்துல வேலை பார்த்தா தான் முனு வேளை கஞ்சி குடிக்க முடியும்.
இதுல குழந்தையை எங்கவுடறது. பால் குடி குடிக்கறவனை.” என்று நேரத்தை பேசி கடத்தினார்கள்.
இடையில் டீயும் சமோசாவும் வரும். அதில் டீயை வாங்கி ஆவிப்பறக்க குடித்திடுவாள். சில நேரம் மதிய உணவை கூட மறந்து விட்டு டீயை மட்டும் தொண்டையை நனைத்து கொள்வாள்.
தாய் தந்தையும் பெரிய வசதி இல்லை என்பதாலும் கணவன் வீட்டிலும் அப்படியொன்னும் வசதி இல்லாததால் உழைக்கும் கரமாய் தவிக்க வேண்டியது எழுதப்படாத விதியானது.
குறிப்பிட்ட நேரம் பணி செய்து பணத்தை வாங்கிடவும் குழந்தை உடல் எல்லாம் மண் பூசி ஒட்டியிருந்தது.
வீட்டுக்கு வந்ததும் குழந்தையை குளிக்க வைத்து தானும் குளித்து சோறையே மூன்று மணிக்கு தான் ரசமும் ஊறுகாயும் வயிற்றுக்கு இறக்கினாள்.
இதில் நான்கு மணிக்கு புழுதி பறக்க இருமகளும் ஒடிவந்து சேர இரண்டு ரூபாய் சமோசா பத்து ரூபாய்க்கு வாங்கியதை எடுத்து கொடுத்தாள்.
“அம்மா… வழிபடும் கரங்கள் தான் சிறந்ததுனு எங்க மிஸ் சொன்னாங்க. அப்படியா மா?” என்று மகள் கேட்க, “வழிபடும் கரங்கள்னா?” என்று கேட்டு பாத்திரத்தை அலசினாள் ரேவதி.
சாமியை தினமும் வணங்கி அவருக்கு பூ பழம் அர்ச்சனை செய்து கும்பிடறவங்க மா.” என்று மகள் எடுத்துரைக்க, ரேவதிக்கு தன் கைகள் திறந்து பார்த்தாள்.
மண்ணை எடுத்து தலையில் சுமந்து குளத்யின் வரப்பில் கொட்டி சீர்செய்ததில் கையெல்லாம் சிவந்திருந்தது.
இதில் வெள்ளி கிழமை வழிபடவும் நேரமில்லாது, கொசுக்கடிக்கும் முன் பாத்திரம் விளக்கி கொண்டிருக்கின்றாள்
அவள் எப்படி கூறுவது, வழிபடும் கரங்களை விட உழைக்கும் கரங்களாக தன் கைகள் இருப்பதை.
தனக்கான நாள் விடியும் என்ற எண்ணத்தில் முகம் கழுவி குழந்தையை படிக்க கூறினாள்.
சாமி கூம்பிடறோமோ. உழைக்கிறோமோ.. தன் மகளின் கையில் புத்தகமும் வாசிப்பும் இருந்தாலே போதுமென்றது மனம்.
இரவும் பத்துமணிக்கு வந்து சேர்ந்த கண்ணப்பனை மூக்கு முட்ட முறைத்தாள். ஏதோ சம்பாதிக்கின்றான்.நேரத்திற்கு வந்தாலாவது பரவாயில்லை. நேரம் கழித்து வந்து தன்னை அல்லல் படுத்துவதிலே இருக்கின்றானே என்ற கடுப்பு அவளுக்கு.
அவனோ “எம்புள்ள முறைக்கிற.. குழந்தையை பெத்துட்டு சம்பாதிக்கலைனு தெரியுது. எனக்கு என்ன கம்பியூட்டரு உத்தியோகமா.
உன் தலையெழுத்து என் சம்பாத்தியம் போதலை. நீயும் சம்பாதிக்கணும்.” என்று உடை மாற்றி வரவும் திரும்பி படுத்து கொண்டாள்.
முன்னேற வேண்டுமென்ற துடிப்பு கொஞ்சமும் இல்லை. இது தான் நம் தலையெழுத்து என்று சாக்கு சொல்லிவிட்டு கிடப்பவனை கண்டு திட்டவும் முடியாது. கண்ணப்பனுக்கு வயது முப்பத்தெட்டு போனமுறை இலவசமாக உடல் பரிசோதனை செய்தப் போது சுகர் ஏறிகடப்பதை தெரிவித்தனர். அதிலிருந்து பணம் ஈட்டாவிட்டாலும் குடும்ப தலைவன் ஒருவன் இருப்பதையே அவள் விரும்பினாள்.
மற்றபடி கண்ணப்பனை பணம் சம்பாதிக்க அவளுமே வற்புறுத்தி எடுக்கவில்லை. யார் தலையில் வறுமை என்று எழுதியிருக்க அதை யாராலும் மாற்ற இயலாது. வாழ்க்கையை இலவசத்தின் மூலமாக அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. எங்கு வேலையோ ஓடவேண்டும். நூறு நாளும் வேலை என்றாலும் சரி (365) முந்நூற்றி அறுபத்தி ஐந்து நாள் வேலையென்றாலும் சரி உழைக்க வேண்டிய நிர்பந்தம் ரேவதிக்கு.
நாளைக்கு ஏதோ மழையால் சிதைந்த ரோட்டை சரிப்படுத்த கூப்பிட்டு இருக்கின்றனர். ஜல்லி கல்லின் கணத்தை தலையில் சுமக்க தயாரானாள்.
அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது.
அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது.
அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள்.
”என்ன அங்கயே நிற்கற, இங்க வா” என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது.
அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில் அவளின் அனுமதியின்றி கட்டி அணைத்தான். அவனை இதுவரை இரண்டு முறை பார்த்து இருக்கின்றாள்.
சில நாட்களாக போனில் பேசியிருகின்றாள். ஆனாலும் அவனின் பண்போ, குணநலனோ அறிந்திராத பேதை இவளுக்கு, இவனின் அணைப்பு பஸ்ஸில் தெரியாதவன் சீண்டும் ஒவ்வாமை தான் முன்னே வந்தது.
அவள் குமட்டி கொண்டு விடுபட, அவனோ என்னாயே தள்ளி விடறியா என்றே மலரிதழில் வலிக்க வலிக்க முத்தமிட்டான்.
அவள் எவனோ ஒருவன் எச்சி என்ற அருவருப்பு கூடவே வர தன் ஒட்டு மொத்த பலத்தை கொண்டு அவனை தள்ளி நிறுத்தினாள்.
இது போதுமே… ஆண்மகன் என்ற அகம்பாவத்தை கிளர்த்து விட, பெண்ணவளினை மென்மையாக பதவிசமாக கையாளும் முதலிரவில் வேங்கையென சீறிப் பாய்ந்தான்.
மான் வேட்டையாடும் புலியும், இரையை பிறாண்டி உண்ணும் கழுகும், சிந்தையில் வந்து போக, பேயறைந்தது போல நின்றாள் ப்ரியா.
கையை கட்டிக் கொண்டு அவளை ரவிவர்மன் ஓவியம் காண்பதை போல இரசித்தான் ப்ரஜன்.
சற்று நேரம் அசையாத சிலைப் போல நின்ற ப்ரியா. ப்ரனின் பார்வை கழுகோ, புலியோ இல்லாது வருடும் பார்வையால் நோக்கவும், சுதாரித்து இடங்களையும், அதன் தன்மையும் அவனையும் கண்டு தான் நினைத்து பார்த்தவையா இப்படி பயங்கரமாக உள்ளதென தன்னையே தலையில் தட்டி கொண்டாள்.
“என்ன ஓவர் சினிமாட்டிக்கா இருக்க ரியா. அலங்காரம் பார்த்து பயந்துட்டியா இல்லை… வெட்கமா? முகத்தை பார்த்தா வெட்கம் மாதிரி தெரியலை. வில்லனை பார்க்கற ரேஞ்சுக்கு பயந்து இருக்கு உன் கோலிக் குண்டு கண்ணு.” என்று ப்ரஜன் சாத்துக்குடி பழத்தை சர்க்கஸ் போல தூக்கி போட்டு பிடித்து, விளையாடினான்.
போனில் பேசிய அதே டோனில் இயல்பாய் பேசி முடித்தான்.
“பால்…” என்று நீட்ட, அவனோ அதை எடுத்து அங்கிருந்த மேஜையில் வைத்து உட்கார சொன்னான்.
“என்ன ஏதாவது சொல்லணுமா?” என்றான். ப்ரியாவின் திணறலை அறிந்து கேட்டான்.
“அம்மா காலில் விழ சொன்னாங்க…” என்று கையை பிசைந்தபடி அவனை பார்க்க,
“நான் உன் காலில் விழணும்னு சொன்னாங்களா?” என்று யோசிப்பது போன்ற பாவனையில் கேட்டு முடித்தான்.
“அய்யயோ அப்படியில்லை. என்னை தான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க.” என்று ப்ரியா வேகமாய் பதிலுரைத்தாள்.
“என்ன ரியா இது. வேறயென்ன சொன்னாங்க.” என்று கேட்டதும் நெளிந்தாள்.
இருக்காதா பின்னே திருமணமென்று பேசி முடித்த கொஞ்ச மாதத்தில் காலில் விழு, அவனுக்கு அடிபணிந்திடு என்றால் எப்படி? என்று யோசித்தவளால் அவனிடம் கூறயியலாது நெளிய தானே முடியும்.
“எனக்கு இந்த காலில் விழறது என்னவோ பிடிக்கலை.” என்று இருகுரல் ஒன்றாக ஒலித்து முடிக்கவும் இருவரும் பார்வையை ஒரு நேர்கோர்ட்டில் சந்தித்தார்கள்.
ரியா தயங்க, ப்ரஜன் தான் ஆரம்பித்தான்.
“இங்க பாரு ரியா. இந்த அறை எதுக்காக அலங்கரித்து வைத்தார்களோ? சத்தியமா நான் அதுக்கு உபயோகப்படுத்த போவதில்லை. என்ன பார்க்கற? ரியா உனக்கு என் குணமே தெரியாம கட்டிலில் குழந்தையா எப்படி மாற முடியும். பெரியவங்க தான் புரியாம நடக்கறாங்க. நாம புரிதலோடு ஆரம்பிப்போமே.” என்றதும் ப்ரியாவுக்கு மூச்சு சீரானது.
” தேங்க் காட்…. ஆக்சுவலி நான் இதை எப்படி சொல்லறதுன்னு தெரியலைங்க. எனக்குமே ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருந்தது. ஆனா பாருங்க எங்க அத்தை பொண்ணு. அமுதா இருக்காளே… இங்க வருவதற்குள் ஓவரா பேசி… அட்வைஸ் எல்லாம் பண்ணி பயமுறுத்திட்டா. உங்களுக்கு புரிந்ததே அது போதும். நீங்க உண்மையா தானே பேசறீங்க” என்று கேட்டாள்.
“ஹலோ என்னை பார்த்தா எப்படி தெரியுது. ரூம்ல நுழைந்ததும் வில்லன் மாதிரி நீ மறுத்தாலும் உன்னை அடைந்து, அடுத்த மாதமே அம்மாவாக்கி ஆண்மகன்னு உலகத்துக்கு நிருபிக்கணுமா?” என்றதும் ரியா அவனை பார்த்து தான் இங்கு வந்ததும் எண்ணி பார்த்த விதத்தை மீண்டும் நினைவுப்படுத்தி நகைத்தாள்.
“நீ சிரிக்கறதை பார்த்தா அப்படி காட்சிகளை நினைத்து பார்த்து இருக்க. அப்படி தானே.?” என்று கேட்டான் ப்ரஜன்.
“அய்யோ சாரி… எனக்கு இங்க வருவதற்கு முன்ன கேட்ட அட்வைஸ் அப்படி. உங்க காலில் விழணும். பாலை ஷேர் பண்ணி எச்சியா இருந்தாலும் குடிச்சிடணும். நீங்க தொட்டா….” என்று தலையை குனிந்து கொண்டு “அதை மறுக்காம ஓத்துழைக்கணும் இப்படி தான் சொல்லி இன்னிக்கே நடக்கணும் அப்படி எல்லாம் பயமுறுத்திட்டாங்க.” என்று பயந்தாலும் சொல்லிவிட்டாள்.
ரியாவால் ப்ரஜன் பேச்சு, செய்கை, பார்வை என்று ஆராய்ந்த பொழுது அவனிடம் இந்தளவு பேச முடிந்தது.
“உட்காரு ரியா” என்று மெத்தையில் தோதுவாக அமர்ந்ததும், “நாமயென்று இல்லை. இந்த திருமணமான ஜோடிகளில் 50சதவீதம் இப்படி சுத்தி இருக்கறவங்களாளே ஒரு கட்டாயத்தில் தான் தாம்பத்தியம் நடக்குது. மீதி 40சதவீதம் எதிர்பாலினத்தின் மீது இருக்கற ஆர்வத்தில் தெரிந்தவளா புரிந்தவளா, பிடிச்சிருக்கா, இது எதையும் யோசிக்காம இருவருமே அவர்களை தேட ஆரம்பித்துவிடறாங்க.
திருமணமாகி இரண்டு வருடம் அலுப்பு தீர மெய்யில் தேடி அதற்கு பிறகு தான் மனதை தேடறாங்க. அப்போ பாதி பேர் வாழ்க்கை மனதை புரிந்துக் கொள்ளாமலே கேரக்டர் தெரியாம ஒரு குழந்தை கையில் வந்த பிறகு, நான் ஏமாந்துட்டேன் நீ ஏமாந்துட்டனு இப்படி மாற்றி மாற்றி பேசறாங்க.
நாம அப்படி வேண்டாம். பேசுவோம். பழகுவோம்… நமக்கு தானா ஒரு நாள் அமையும் மனதின் புரிதல் கடந்து நம்மை நாமளே கொஞ்சமா புரிய துவங்கிறப்ப நாமளே நம்மை இழுந்து தாம்பத்தியம் ஆரம்பிப்போம்.
இப்ப மற்றவர்களுக்காக சாஸ்திரம், சடங்குனு நமக்கு கொடுத்த தனிமையில் நம்மை பற்றி பேசுவோம்.” என்று ப்ரஜன் பேசவும் நிம்மதி பெரு மூச்சை வெளியிட்டாள் ப்ரியா.
“பரவாயில்லை… ப்ரியா ப்ரஜன் இப்படி முதல் எழுத்தோட ஆரம்பம் ஒன்று போல இருக்கு. எண்ணங்கள் முரணாக இருக்கும் என்று பயந்தேன். ஆனா பாருங்க. இந்த முதலிரவு முதல் நாளில் இந்த கருத்து ஒத்துப் போகுது.
எனக்குமே இப்படி திருமணமென்ற புது பந்தத்தில் உடனே என்னை காட்சி பொருளா காட்டி ஒப்படைக்க மனமில்லை. கொஞ்சம் சங்கடமா இருந்தது. என்னதான் திருமணயென்ற ஒரு இதமான பந்தத்தில் இணைந்தாலும் காதல், ஆசை புரிந்து நடக்கணும், உங்களை அறிந்துக்கணும், ஏன் எதிர்பாலின ஈர்ப்பு இப்படி எல்லாம் அறிந்துக்க ஆசையென்றாலும் உடனே இப்படி மாற முடியாது இல்லையா.
நேற்று வரை முட்டிக்கு மேல தெரியற மாதிரி உடை உடுத்த கூட தடை விதித்தாங்க. இன்னிக்கு இங்க… எப்படி சொல்ல தெரியலை….
ஒரு கயிறு போதுமா? உடலை துகிலுரித்து காட்டிக் கொள்ள…? எனக்கும் உடன்பாடில்லை.” என்று தன் பேச்சுரிமையை அழகாக ப்ரியா எடுத்து சொல்லவும் இருவரும் மனதால் நெருக்கம் கொண்டனர்.
“எக்ஸாட்லி ரியா. இதை ஏற்றுக்கவும் ஒரு பக்குவம் வேண்டும். சில பெண்கள் ஆண்கள் இதுக்கான நேரம் கொடுத்தா, என்னவோ அவன் ஆண்மகனா? அப்படியென்ற சந்தேகம் தான் பட்டுக்கறாங்க. அதனாலயாவது ஆண் சூழ்நிலைக்கு வாழ முடிவு பண்ணுற கொடுமையும் இருக்கு.” என்று ப்ரஜன் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.
அவர்களுக்குள் பட்டாம்பூச்சியாக காதல் மெல்லிய இழையாக பறக்க ஆரம்பித்தது.