முத்தமிட்டு சுவடுபதி ஆலியே- டீஸர்
*முத்தமிட்டு சுவடுபதி ஆலியே*
டீஸர்:
பேபி பிங்க் சுடிதார் அணிந்த அகமேந்தி "ஹாப்பி நியூ இயர்" என்று கையை நீட்ட அவனோ "ஹாப்பி நியூஇயர்" என்று அவளை அணைக்க செய்தான்.
"சீ... யார் நீ... சீப்பா பிகேவ் பண்ணற..." என்று தள்ளிவிட
"ஏய் விஷ் தானே பண்ணேன் ரொம்ப பண்ணற," என்று தருணேஷ் கூறவும்
"அகமேந்தி இது இங்க சாதாரணம் தான் ஓவர் ரியாக்ட் பண்ணாதே. எல்லாரும் நம்மளை பார்க்கறாங்க." என்று தேஜஸ்வனி கூறவும் அகமேந்தி தன்னை அணைத்தவனை உறுத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
கூடவே தேஜஸ்வனி அவள் நடையிடுக்கு ஒடினாள்.
வெளியே வந்தவள் உடனே ஒரு ஆட்டோ பிடிக்க தேஜஸவனி அவள் சென்றதை எண்ணி தன் வலது காலை தரையில் உதைத்து பார்க்கிங்கில் இருக்கும் ஸ்கூட்டி எடுத்து புறப்பட்டாள்.
அகமேந்தி திட்டியவனோ, எஸ்எஸ் பிரைவேட்லிமிட்டட் ஒர்க் பண்ணறேன். மன்திலி லாக்ஸ்ல சேலரி வாங்கறேன். நான் ஒரு பெண்ணை அணைத்தது தவறா டா. அதுவும் நியூஇயர்ல...."
"பெங்களுருக்கு புதுசா இருக்கும் விடுடா" என்றான் நண்பன்.
இங்கோ தனது இருப்பிடம் வந்த அகமேந்தி செருப்பை தான் எப்பொழுதும் கழட்டும் இடம் வந்து சரியாய் வைத்தவள் முகம் அலம்பி சோபாவில் அமர்ந்தாள்.
"மணி பத்து கூட ஆகவில்லை... அதுக்குள்ள வந்துட்ட.. அகமேந்தி இது நம்ம மதுரை இல்லை. பெங்களுர். இங்க எஸ்எஸ் பிரைவேட்லிமிட்டட் ஒர்க் பண்ண வந்துட்டு இந்த ஹக் கூட சிணுங்கிட்டு வர்ற. அங்க ஒர்க் பண்ணறவங்க ஒரே அறையில் ஸ்டே பண்ணுவாங்க தெரியுமா. நீ முப்பொழுதும் கற்பனையே அதர்வா மூவி பார்த்தியா அது மாதிரி." என்று தேஜஸ்வனி உரைக்கவும்.
"எங்க ஒர்க் பண்ணினாலும் நான் ஒர்க் பண்ண மட்டும் தான் வந்தேன். இப்படி கேளிக்கையில் அத்துமீற வர்றப்ப சும்மா இருந்து அந்த செய்கையை ஆமோதிக்கில்லை. குட் நைட் அண்ட் ஹாப்பி நியூ இயர்" என்று போர்வை போர்த்தி உறங்க போனாள் நாயகி அகமேந்தி.
தேஜஸ்வனி ஜன்னலை வெறித்தாள். மக்கள் கூட்டம் வண்டியில் ராக்கேட் வேகத்தில் செல்வது கண்ணில் பட, அகமேந்தியை பார்த்து போனில் தன் தோழமையோடு உரையாட ஆரம்பித்தாள்.
மணி பன்னிரெண்டு அடிக்க ஹாப்பி நியூ இயர் என்ற இளைஞர் இளைஞிகளின் குரல்கள் அளவில்லாமல் கத்தி ஆர்பரித்தது.
.
.
.
.
.
.
தன் காதை தேய்த்து அங்கிருந்த சிறிய கோப்பையில் இருந்த மதுவை தன் தொண்டையில் இறக்கி கண் மூடி நின்றான் அவன். அவன் கண்ணில் அகமேந்தி தெரிய மனதுக்குள்ளே 'ஹாப்பி நியூ இயர் டியர்' என்றான் நாயகன் சைதன்யன்.
நன்றி
பிரவீணா தங்கராஜ்
நாளை முதல் தினபதிவு வரும். உங்க கருத்தை வழங்கி உற்சாகமூட்டவும்.
Leave a reply
-
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-26
8 months ago
-
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-22
8 months ago
-
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9
8 months ago
-
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2
8 months ago
-
முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-1
8 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 51 Online
- 2,307 Members
