Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன்.

அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று மகிழ்ச்சியுடன் அழைக்க, ஆனால் அதற்கு எதிர்மாறாக மதி அதிர்ந்து போனாள்.

அடக்கடவுளே யாருக்கும் தெரியாம இருக்கனும்னு தான் இவ்ளோ தூரம் வந்து மறஞ்சுருக்கேன்….இப்ப இவன் பாத்துட்டானே…..இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ என்று நினைத்தவாறு நிற்க, கேட்டின் தாழினை திறந்தவன்,  

“வா மதி உள்ள வா!…”என்று அவளை வரவேற்றான்.

அவனைத் தொடர்ந்து ரேணுவும்,  “அட ஆமா மதி!….மதிம்மா நல்லா இருக்கியா?…..நீ என்ன இங்க பண்ற?…..”என்று அவர் வினவ,   “அம்மா என்னம்மா வெளியேவே நிக்க வச்சு பேசிட்டு இருக்க…உள்ள கூப்டு…..”என்று சிறுபிள்ளையாய் பரபரத்தான் வருண்.ஆனால் மதியோ அந்த பரப்பரப்பில் ஒரு துளிக் கூட காட்டிக் கொள்ளாமல் காட்டிக் கொள்ளாமல் என்பதை விட அவளின் மனநிலைக்கு அவனின் அந்த அன்பு கலந்த பரபரப்பை ஏற்றுக் கொள்ள பிடிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பிக்கவே நினைத்தாள்.

ஆதலால் முகத்தில் பேருக்கு கூட புன்னகையை காட்டிராமல்,”இருக்கட்டும் வருண்….என்று வருணிடம் கூறிவிட்டு,  “ஆன்டி ப்ரியா உங்க வீட்டுல தான் கீ குடுத்ததா சொன்னா….கீ உங்க கிட்ட தானே இருக்கு?…..”என்று தான் வந்த விஷயத்திற்காக பட்டென கேட்டு விட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் ரேணுகாவிற்கு ஏதோ மதியின் மீது கோபமே வந்தது. இதுவரை அவரின் செல்வ மகன் எந்த ஒரு பெண்ணையும் இப்படி நின்று வரவேற்று அவர் பார்த்தது கிடையாது.

அதெற்கென பெண்களிடம் கதைக்காதவன் இல்லை வருண்…நன்றாக கதைப்பான்…

விடலை பருவப் பெண்களில் இருந்து நாற்பது ஐம்பதை தாண்டிய பேரிளம் பெண்கள் வரை அவனை சுற்றி சுற்றி பேசுவார்கள்.இவனும் எந்த முகச்சுழிப்புமின்றி தாராள மனதுடன் பேசவான். ஆனால் அவையாவும் அவனாக சென்று பேசியதில்லை. அவர்களாகவே வந்து இவனிடம் கதைப்பார்கள்…வருணும் பதிலுக்கு புனக்கையுடன் பதிலளிப்பான்.

ஆனால் இன்று பானுமதியுடன் அவன் கதைத்தது வழக்கத்திற்கு மாறாக இருந்தது…

இருந்தாலும் தனையனின் அந்த புன்னகை ததும்பும் முகத்திற்காக எதையும் செய்யும் நினைக்கும் சராசரியான தாயாக இருப்பதால் அவன் கதைக்கட்டும் என்று வழி விட்டுவிட,  ஆனால் மதியோ எடுத்த எடுப்பிலேயே சாவிய குடுங்க என்று கேட்கவும் தாமதிக்காமல் அவளிடம் கொடுத்து விட்டார் ரேணு…

ஆனால் புன்னகையுடன்…

“ஆமா ம்மா. ப்ரியா ஈவ்னிங் சொல்லி தான் குடுத்துட்டு போனா…ஆனா அது நீன்னு தெரியாது…..”என்றிட,   “சரி ஆன்டி வர்றேன்…..”என்று கிளம்பினாள் மதி.

ஆனால் வருணோ,  “ஹேய் மதி மதி….ஸ்டாப் ஸ்டாப்….இவ்ளோ தூரம் வந்துட்டு வீடு வரைக்கும் வராம போனா என்ன அர்த்தம்..ப்ளீஸ் உள்ள வா…….”என்று முகத்தை கொஞ்சலாக வைத்துக் கொண்டு கூறினான்.

ஆனால் மதி,  “சாரி வருண்….இன்னக்கி ஹெவி வொர்க். ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கனும்….ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட்……இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்….”என்று கூறி விட்டு செல்ல, ரேணுவோ தன் மகனை அடிப்பதற்கு ஏதாவது குச்சி இருக்கிறதா என்று தேடினார்.ஆனால் அங்கே ஏதும் தென்படாமல் போக, மதியின் தலை மறைந்ததும் அவன் முதுகில் பட்டென ஒரு அடி வைத்தார் அன்னையவர்.

“ஏன்டா பயித்தியக்கார நாயே…அவ தான் வர முடியாதுன்னு நாசூக்கா ஒதுங்க பாக்குறாள்ல….எதுக்கு அவள போய் கெஞ்சி கூப்டுற…”என்று இல்லத்திற்குள் நுழைந்தார் ரேணு.”அம்மா அவ வர முடியாதுன்னு எல்லாம் சொல்லல…அவளுக்கு ஹெவி வொர்க் போல…..சோ டயர்டா……”என்று அவன் கூறும் போதே,  “பேசாத செம காண்டுல இருக்கேன். வாய மூடிட்டு இருந்திடு…..”என்று கொந்தளித்தார் ஒரு அன்னையாக.

“அம்மா என்ன ஆச்சு?..எதுக்கு இவ்ளோ டென்ஷன் உனக்கு?….”என்று அவன் கேட்க,  “ம்ம் இருக்காத பின்னே….இதுவரைக்கும் நீ யார் கிட்டையும் கெஞ்சி நான் பாத்தது இல்ல. சரி என்ன தான் அம்மா புள்ளையா இருந்தாலும் பெர்சனல் விஷயத்துல நுழையக்கூடாதுன்னு ஒதுங்கி நின்னா அவ என்னமோ அவ்ளோ பிகு பண்ணிக்கிறா…..”என்றிட,  

“ம்மா இதெல்லாம் ஒரு விஷயமா?….அவ வேற ஏதோ டென்ஷன்ல இருக்கான்னு நினைக்கிறேன்….

அதான் வரல…

அதர்வைஸ் ஷீ இஸ் வெரி வெரி குட் கேர்ள் ம்மா….”என்று வருண் மொழிய, ரேணுகா அவனைக் கவலையாக பார்த்தார்.

“வருண் ப்ளீஸ் டா. அம்மா சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளு….இனிமே அந்த பொண்ணு பக்கம் தல வைக்காத…என்னைக்காவது நீ சொல்றதுக்கு எதிரா அம்மா ஏதாவது செஞ்சிருக்கேனா?…..இப்படி நீயா போய் பேசி அவள உள்ள வர கெஞ்சுறது அம்மாவுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கு டா….என்ற அன்னையிடம்,   “அம்மா என்ன ஆச்சு இன்னக்கி உனக்கு?…

சின்ன வயசுல இருந்து தெரிஞ்ச பொண்ணு ம்மா அவ…

அதுவும் ஒன்ஸ் அபான் ஏ டைம் நெய்பர்ஸா இருந்த பொண்ணு…

பாத்தும் ரொம்ப நாள் ஆச்சேன்னு கூப்ட்டது தப்பா உனக்கு….

அதுக்கு போய் ஏதேதோ சொல்ற…..

என்னென்னவோ பேசுற….

வாட் ஹேப்பன் மம்மி?…..”என்று வருண் சாதாரணம் போல பேசிட, ரேணுகாவால் மதி உனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக அவனிடம் கூறிட இயலவில்லை.

ஆனால் கிட்டத்தட்ட அதை கூறி விட்டவர் தன் பேச்சை தன் மகன் மீற மாட்டான் என்று நம்பிக்கையுடன்,   “சரி வா சாப்பிடலாம். மணி ஒன்பதாக போகுது. கௌரி வேற ஃபோன் பண்ணுவா…”என்றவராக அவனை உணவருந்த அழைத்துக் கொண்டு சென்று விட, ஆனால் அந்த கட்டிளங்காளை மறுநாள் ஏழு மணியளவில் தன் இருசக்கர வாகனத்திற்கு பல மாதங்களுக்கு பின் ஹோஸின் வழியாக நீரடித்த வண்ணம் பக்கத்து வீட்டின் கதவு திறந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டு நின்றிருக்க……

கதவும் திறந்தது……..

Tags:

6 thoughts on “தட்டாதே திறக்கிறேன் -2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *