பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ
விமர்சனம் வழங்கியவர்: ஜெயலட்சுமி கார்த்திக்
கதை #பூ_பூக்கும்_ஓசை
ரைட்டர் பிரவீணா தங்கராஜ்.
பூ பூக்கும் ஓசை..
டைட்டிலை பார்த்ததும் நல்ல மெல்லிய காதல் கதை போல.. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் காதல் பூக்கும் கணத்தை அப்படியே கவிதையா சொல்ல போறாங்கன்னு நெனச்சு நான் உள்ள போனா.. முதல் எபிசோட்லயே வச்சாங்க பாருங்க சும்மா ரப்ப்..ன்னு ஒரு அறை.. எனக்கு இல்ல.. ஹீரோவுக்கு.. அதுவும் ஹீரோயின்..
அடடே.. நல்லா இருக்கே அப்படின்னு தொடர்ந்து படிச்சேனா.. ஹீரோயின் பூர்ணா வீட்டுல ஒரு பிரச்சினை. அம்மா அப்பா உடைஞ்சு போய் இருக்கறப்ப மகளா அவங்களை சமாதானம் பண்ண கல்யாணத்துக்கு ஓகே சொல்றாங்க.
வீட்டுல பாக்கற பையன் மேல அவ்வளவா ஈர்ப்பு இல்லனாலும் பேரென்ஸ்காக அமைதியா இருக்காங்க.
ஹீரோவும் அவங்க ஃப்ரெண்ட்ஸ் வர்ற இடமெல்லாம் ஒரே கலகல.. ஹீரோ கிட்ட அவங்க அப்பாவோட கோபம் முதல்ல எனக்கு புரியல. ஆனா கதைகுள்ள கதையா, ஹீரோ ஏன் கலைக்கு கல்யாணம் பண்ணி வச்சார் ன்னு சொல்லும்போது புரிஞ்சுது. கலை நம்ம ஹீரோயின் தங்கச்சி.. அப்பறம் அடிக்க மாட்டாளா என்ன..🤭🤭
ஒரே பரபரப்பா வேகமா கதை போகுது. ஹீரோ, ஹீரோயினை மின்சாரம் ன்னு தெரிஞ்சே சம்சாரம் ஆக்கிக்க ஆசைப்படுறார். ஆனா வேற இடத்துல பேசி முடிச்சுட்டாங்க.. அப்பறம் எப்படி ரெண்டு பேரும் சேர்றாங்க, ஹீரோயினுக்கு ஹீரோ மேல எப்ப எப்படி காதல் வருது, எல்லாமே அழகா சொல்லி இருக்காங்க.
அப்பறம் முக்கியமான ஆளை சொல்லல பாருங்க.. நம்ம சூர்யா.. கோமாளி.. அப்படித்தான் ரைட்டர் அவரை சொல்றாங்க. பாவம் சீனியரா காலேஜ்ல பண்ணின ரகளையை ஆபிஸ்ல செய்ய நெனச்சு வாங்கிக் கட்டிக்கிட்டார்.
ஆக மொத்தம் கதைல காதல், நியாயமான கோபம், தப்புக்கும் சரியான காரணம் எல்லாம் கொடுத்து சூப்பரா எழுதி இருக்காங்க.
முடிவு தான் எதிர்பார்க்காத விதமா நீட்டா
கொடுத்து இருந்தாங்க.
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi8 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan8 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்8 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review8 months ago
-
வித்யா வெங்கடேஷ்-ரிவ்யூ- பூ பூக்கும் ஓசை8 months ago
- 137 Forums
- 1,997 Topics
- 2,257 Posts
- 2 Online
- 887 Members