உந்தன் மொழிகளென்று
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
237
Views
அதிகாலையில் உறக்க கலகத்தில் ஆரதழுவும்
உந்தன் கைகளுக்குள் எந்தன் மேனிவாசம்
இன்றென்ன அடுதலென எட்டிப்பார்க்கும்
உந்தனார்வதில் எந்தன் விழியில் சினத்தையும்
குளித்து முடித்து சாரல் மழையாக துவட்டும்
உந்தன் கேசத்தை துவட்டும் எந்தன் தாய்மையும்
அதே பட்டு கேசத்தை நின்வாரும் போது
எந்தன் களைத்து விடும் குழந்தை மனதையும்
உனக்கு பிடித்த அந்த வெண்நிற சட்டையில்
என்னையறியாது கொட்டிய குழம்பால்
ஏற்பட்ட சண்டைகளையும் ...
நீ தேடும் அந்த சாம்பல்நிறகைக்குட்டை
நேரம்போக்காமல் எடுத்துக் கொடுக்கும் கனத்தையும்
அலைபேசியோடு அகம் பேசியதையும்
கனபொழுதில் பதிந்த அழுத்த முத்தத்தையும்
எடுத்து பெட்டிகளில் நிரப்பிக்கொள் .
மொழிதெரியாத நாட்டில் செல்லுமுனக்கு தெரியும்
இதெல்லாம் தான் உந்தன் மொழிகளென்று...
-- பிரவீணா தங்கராஜ் .
ReplyQuote
Forum Jump:
Forum Information
- 129 Forums
- 1,918 Topics
- 2,178 Posts
- 0 Online
- 870 Members
Our newest member: StephenElapy
Latest Post: அந்த வானம் எந்தன் வசம்-30
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed