Skip to content
முகப்பு இல்லா பனுவல...
 
Notifications
Clear all

முகப்பு இல்லா பனுவல்

1 Posts
1 Users
0 Reactions
99 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Estimable Member
Joined: 9 months ago
Posts: 77
Topic starter  

 

முகப்பு இல்லா பனுவல்

இப்படி ஒரு கதை செலக்ட் செய்ததுக்கே 👏👏👏👏👏 இது மாதிரியான செய்திகளை கடக்கும் போதே நமக்கு மனம் கனக்கும் ஆனால் அதை கடந்து வந்தவர்கள் மனம் எத்தனையாய் பாடுபடும்.

பணத்திற்காக பெற்ற தகப்பனே விலைபொருளாக மகளை விற்கும் காட்சி தான் ஆரம்பம். அதிலிருந்து அவளுக்கு என்ன ஆச்சுனு என்ன ஆனானு அவளை காணும் வரை கொஞ்சம் பதைபதைப்பு இருந்தது உண்மை.

கதிர் மாதவி இருவரோட பயணங்கள் தான் வேறு தவிர அவர்கள் முயற்சிகள் அருமை 👏👏👏 கண்டிப்பாக பாரட்டனும். மாதவி அவளோட கடந்த வாழ்வை சொல்லும் போதே விலைமகள்களின் வாழ்வை பிரதிபலிக்கிறது. கதிர் அம்மாவோட ஆசையுடன் தன் தமக்கையை கண்டறிய போலீஸ் வேலை வேண்டும் என்று கடின உழைப்புடன் இலக்கை அடைந்தது நைஸ்.

இந்திரன் பண்ணது தவறுதான் அதற்கு பதிலாக தேவராஜன் செய்தது மட்டும் சரியா அந்த போர்ஷன் எனக்கு பிடிக்கவே இல்லை. அதற்கான காரணம் சோனாவா வந்து நிக்கும் போது சரியா இருந்தாலும் இப்படி வேண்டாமோதான் தோணிச்சு.

அதோட காமாட்சி மாதவி ரெண்டு பேரும் கடந்த வாழ்வு ரொம்ப கொடுமையானது அவங்களுக்கு கொஞ்சம் கூட டைம் கொடுக்காமல் செய்தே ஆகனும்னு கட்டாயபடுத்தின போல இருந்தது. எண்ணம் சரியாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். அப்பதான் அவங்க உணர்வுகளை இன்னும் உணர்ந்துருக்கலாம்.

ஆப்டரால் ஒரு குப்பையை கூட நாம தனித்தனியா மட்கும் மட்காத குப்பைனு போடாத பட்சத்தில் இப்படியான தவறுகள் நடக்கத்தான் செய்யும். தனிமனித ஒழுக்கம் மட்டுமே வாழ்வை செம்மைப்படுத்தும் 👏👏👏👏👏 அருமையான கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சது. வாழ்த்துக்கள்


   
ReplyQuote